Advertisement

இணை தேடும் இதயங்கள்
                                அத்தியாயம்  –  17
 
அனைவரும் வரும் நாளைத்தான் ரேணுகா ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.. தன் மகளின் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் வராதா என ஏங்கி கொண்டிருந்தவர் இவர்களை பார்க்கவும் சந்தோசத்தில் கைகால் புரியவில்லை..
 அவர்களிடம் தனித்தனியாக என்ன வேண்டும் என கேட்டவர் தன் கையாலேயே தயாரிக்க போக அப்பத்தாவிற்கோ மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் சேர்ந்தே வந்தது.. 
இவ்வளவு வசதியிருந்தும் இவங்களால எப்படி இவ்வளவு அன்பாவும் பணிவாவும் இருக்க முடியிது.. சந்தோசமாக வீட்டை சுற்றிப்பார்த்தவர் ஹாலில் பெரிதாக இருந்த போட்டோவை பார்க்கவும் தன் பார்வையை கூர்மை படுத்தி கண்ணை கசக்கி மீண்டும் பார்க்க சக்தியேதான்…
 
தன் நெஞ்சில் கைவைத்தவர் தன் மகனின் கையை பிடித்து ,”ஆத்தி மாரியாத்தா இதென்டா கொடுமையா இருக்கு.. நான் பெத்த மகனே அங்க பாரு கொடுமையை..??” தன் மகனிடம் அந்த போட்டோவை காட்டவும் ராமலிங்கமும் அதை பார்த்து அதிர்ச்சியாகி எழுந்து நின்றவர்,
 சக்தி அங்க பாரு..?”
அவனோ அவர்கள் அளவுக்கு அதிர்ச்சியாகாமல் ,”நான் சந்தேகப்பட்டேன்பா..
 
அப்பத்தா,” என்னப்பு சொல்ற..?”
 
அதற்குள் ரேணுகா காப்பி கொண்டு வந்தவர் ராமலிங்கத்திடம் தட்டை நீட்டியபடி எடுத்துக்கோங்கண்ணே,.. “அனைவரின் முகமும் மாறியபடி அவர்களின் பார்வை அந்த போட்டோவில் இருப்பதை உணர்ந்தவர் அப்படியே அதிர்ச்சியாகி நிற்க,
 
அப்பத்தாவோ ரேணுகாவை பார்த்து சத்தமாக,” ஏத்தா என்பேரனுக்கு அடிப்பட்டிச்சு காப்பாத்தி நல்லா வைச்சிருந்திங்கன்னு நினைச்சா இதென்ன பெத்தவங்க , சொந்தகாரங்க இவ்வளவு பேர் இருக்கும் போது என் பேரனுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைச்சிருக்கிங்க.. நீங்க யாரு இதெல்லாம் செய்ய.?? இவ்வளவு நல்லவங்களா இருக்கிங்களேன்னு இப்பத்தான் நினைச்சேன் என் நினைப்ப பொய்யாக்கிட்டிங்களே..!! நாங்க பார்க்கத்தான் ரொம்ப அமைதியானவங்க மாதிரி தெரியும்.. எங்கூருக்கு வந்து பாருங்க அங்க தெரியும் இந்த வள்ளி யாருன்னு..??” சேலையை வரிந்துகட்டி சண்டைக்கு தயாராக,
 
ராமலிங்கம் கோபமாக மகனிடம் திரும்பியவர் ,”ஏன் சக்தி உனக்கு கல்யாணம் நடந்தது எதுவும் தெரியுமா..? தெரிஞ்சுதான் இங்க கூட்டிட்டு வந்தியா..?”
 
அவன் அந்த போட்டோவை பார்த்தபடியே,” என்னை பத்தி உங்களுக்கு தெரியாதாப்பா ..? நான் எதாவது உங்களுக்கு தெரியாம செஞ்சிருக்கேனா.. இந்த கல்யாணம் நடந்தது எனக்கு எதுவும் நியாபகம் இல்லப்பா..?”
 
கோபமாக ரேணுகாவிடம் திரும்பியவர்,” இதென்னங்க வேலை பார்த்து வைச்சிருக்கிங்க..? யாரும் கேட்க ஆளில்லாதவன்னு நினைச்சிங்களா.. என் பையன் நியாபகம் இல்லாம இருந்தா இப்படித்தான் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்விங்களா…உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன்..??”  மீசையை முறுக்கியபடி வேட்டியை மடித்துக் கொண்டு அவரும் சண்டைக்கு தயாராக ரேணுகாவிற்கு அழுகை தாங்கவில்லை.. அவர் முகத்தை மூடியபடி அழ ஆரம்பிக்க அப்பத்தாவிற்கு மனது கேட்கவில்லை.. சண்டை போட்டால் அவர்களோடு சண்டை போடவேண்டும் அதைவிட்டு இப்படி அழுதால்…????
 
ரேணுகாவோ அழுதபடியே அனைவரையும் கையெடுத்து கும்பிட்டவர்,” எல்லாரும் எங்கள மன்னிக்கனும்.. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அந்த மாதிரி எங்களுக்கு வேற வழியில்லங்க.. தன் கணவரின் இறப்பைபற்றியும், தன் நாத்தனார் மகன்களின் குணத்தை பற்றி உயில் விசயத்தையும் சொல்லி அவர்களிடம் மன்னிப்பு கேட்க,
 
சட்டென எழுந்த சக்தியோ,” என்கிட்ட சம்மதம் வாங்கித்தான் இந்த கல்யாணம் நடந்துச்சா..??”
 
அழுது கொண்டிருந்த ரேணுகாவோ, யோசித்து பார்த்தவர் தெரியலை ரமலியும் அந்த வக்கீலும் என்ன பண்ணாங்கன்னு தெரியலையே.. அவர் தயங்கி,” அது.. அது வந்து..
 
ம்ம் சொல்லுங்க..??”
தெரியல தம்பி.. 
 
உங்க பொண்ணு எங்க..? அவர் மாடியை கைக்காட்ட,” இவ்வளவு சத்தம் போடுறோம் அவ கீழ இறங்கி வரமாட்டாளா..??” வேட்டியை மடித்து கட்டியவன் நான்கு நான்கு படிகளாக தாவி மாடியேற,
 
ரேணுகாவோ கையை பிசைந்தபடி ராமலிங்கத்தையும் அப்பத்தாவையும் பார்த்து மாடியையும் பார்க்க என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்.. ராமலிங்கமோ தீவிர யோசனையில் இருந்தார்.. அவருக்கு மனம் வேதனையில் துடித்தது..  நம்ம ரெண்டு பையனுக்குமே முறையா சொந்தகாரங்களுக்கெல்லாம் சொல்லி கல்யாணம் நடக்கிற பிராப்தம் இல்ல போல .. வெற்றிக்காவது பெத்தவங்க முன்னாடி கல்யாணம் நடந்திச்சு இவனுக்கு அவன் தன்னை மறந்த நிலையிலா நடக்கனும்.. எப்படி நடந்தாலும் கல்யாணம் கல்யாணம்தானே…!!! இந்த பொண்ணுதான் நம்ம மருமகள் ரமலியின் முகத்தை போட்டோவில் பார்க்க ரேணுகா தன்னையே பார்ப்பது தெரிந்தது..
 
என்னை பார்த்து ஒன்னுமில்லம்மா.. எல்லாம் என் பையனோட முடிவுதான் .. ??”
 
மாடியேறியவன் வரிசையாக இருந்த அறைகளில் ரமலியின் அறை எது என தெரியாமல் அங்கிருந்த பெரிய ஹாலை அடுத்திருந்த இரு அறைகளை திறந்து பார்த்தவன் ரமலியை காணாமல் அந்த அறையின் மூலையில் இருந்த அறையை திறந்து பார்க்க அலுவலகத்திற்கு கிளம்பியிருந்த ரமலி போக மனதில்லாமல்  லேப்டாப்பை திறந்து வைத்தபடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.. வேகமாக அறைக்குள் நுழைந்தவன் கதவை படாரென சாத்த அந்த சத்தத்தில் சுயநினைவு பெற்றவள் சரணை பார்க்கவும் அதிர்ச்சியில் எழுந்து நின்றிருந்தாள்…
 
 அவளையே முறைத்தபடி அவளை நோக்கி வர இத்தனை நாள் இருந்த சரண் ஒருமுறைகூட கதவை தட்டாமல் வந்ததில்லை.. இதிலிருந்தே அவன் பழைய சரண் இல்லை என்பதை உணர்ந்தவள் மனதில் தைரியத்தை வளர்த்தபடி ,”வாங்க எதிரே இருந்த சோபாவை கைகாட்ட,
 
அவள் காட்டிய சோபாவில் அமராமல் அவள் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் , வாங்கவா… என்னமோ விருந்தாளிய கூப்பிடுற மாதிரி கூப்பிடுற..??”
 
அவள் கழுத்தில் இருந்த தாலியை எடுக்க கையை வைக்க அவன் கையை பற்றியவள், என்ன பண்றிங்க..?” பதறி விலகியவளை சுலபமாக தடுத்தவன் அதை வெளியே எடுத்துப் போட்டு,
 
ம்ம் சொல்லு நமக்குள்ள கல்யாணம் மட்டும்தான் நடந்திச்சா..? இல்லை புள்ளக்குட்டிங்க எதுவும் ஸ்கூலுக்கு போயிருக்கா.. ம்ம்ம் ..?”கோபமாக கழுத்தை நெறிக்க போனவன் பிறகு என்ன நினைத்தானோ சட்டென அவளை பின்புறமாக திருப்பி அவள் கழுத்தில் கைவைத்தபடி தன்னை நோக்கி இழுக்க இப்போது அவள் முதுகுபுறம் எல்லாம் சக்தியின் முன்புறம் அழுத்தியிருந்தது..
 
ஐயோ இவருக்கு பழைய நியாபகம் இன்னும் வரலை கல்யாணம் நடந்தது தெரியாதுன்னு அம்மா சொன்னாங்க இப்ப தெரிஞ்சிருச்சா..!!  அதிலும் அவனிடம் இப்படிபட்ட முரட்டுதனத்தை எதிர்பார்க்காதவள்,” ச்சு இதென்ன வேலை விடுங்க ..?” அவனிடமிருந்து விலகப்போராட திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் அதிகபட்சமாக இருவரும் கட்டிப்பிடித்தது சரண் அன்று ஹாஸ்பிட்டல் சென்ற அன்றும் ரமலி அவனை காணாமல் தேடிவந்த போது மட்டும்தான் இருவருமே தத்தம் சூழ்நிலையை மறந்ததால்தான் அதுவும் நடந்தது… அவளை சுலபமாக தன்னுள் அடக்கியவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவளை தன்னை நோக்கி இழுக்க மலர் மாலையாக அவன் மேல் விழுந்திருந்தாள்..
 
ப்ளிஸ் சரண் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க .. உங்க மேல நான் ரொம்ப ரெஸ்பெக்ட் வைச்சிருக்கேன்.. இந்த மாதிரி பிகேவ்பண்ணி நீங்களே அதை கெடுத்துக்காதிங்க..??” அவனிடமிருந்து விடுபட போராட அன்று போலவே இன்றும் அவள் தாலி அவன் சட்டையில் மாட்டியிருந்தது..
 
ஓஓஓ நீபெரிய இவ.. உன்னோட ரெஸ்பெக்ட் யாருக்கு தேவை..?? நீ பார்த்து வைச்சிருக்கிற வேலைக்கு உன்னை இன்னும் கொல்லாம வைச்சிருக்கேனேன்னு சந்தோசப்படு.. என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லித்தான் நீ கல்யாணம் பண்ணிக்க கேட்டியா..?? நீ என்னை காப்பாத்தாம அங்கயே விட்டுட்டு போயிருந்தாக்கூட வேற யாராச்சும் என்னை காப்பாத்தியிருப்பாங்க..எங்க அம்மாக்கு கொள்ளியாச்சும் வைச்சிருப்பேன்.. எனக்கு நல்லது பண்ற மாதிரி காப்பாத்தி உன் சுயநலத்துக்கு பயன் படுத்திக்கிட்டியா.. சொத்துக்காக எவ்வளவு கேவலமான வேலை பார்த்து வைச்சிருக்க..?”  அவளால் அவன் சட்டையிலிருந்து அந்த தாலியையும் எடுக்க முடியவில்லை.. அவன் குற்றச்சாட்டையும் தாங்க முடியவில்லை…
 
அவனே சட்டையிலிருந்து தாலியை எடுத்துவிட… சற்று தைரியத்தை வரவழைத்தவள் பழைய ரமலியாக மாறியிருந்தாள்.. அவனை விட்டு விலகி எதிர் சோபாவில் அமர்ந்து… ஸாரி அன்னைக்கு எனக்கு இருந்த சூழ்நிலை..முதல்ல உங்களை காப்பாத்தும் போது இதெல்லாம் நினைச்சு காப்பாத்தலை.. தப்புதான் அதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் நீங்க தரலாம்.. சொத்தப்பூராவும நீங்களே எடுத்துக்கோங்க.. நான் உங்களுக்கு டைவர்ஸ் தர்றேன்.. நீங்க எந்த பொண்ண வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்..?”
 
படபடவென கைதட்டியவன்,” என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது கேனையன் மாதிரியா..இல்ல சொத்துக்கு அலையிறவன் மாதிரியா ..உழைக்காம வர்ற ஒத்தப் பைசாக்கூட எனக்கு தேவையில்ல.. அப்புறம் எப்படியெப்படி நீயா வந்து என்னை கல்யாணம் பண்ணுவ.. அப்புறம் நீயா என்னை டைவர்ஸ் பண்ணுவ நான் என்ன சொம்பையா..? அறைஞ்சேன்னு வைச்சிக்கோ பல்லு முப்பத்திரண்டும் கொட்டிரும்.. உனக்கு வேணா கற்பு இல்லாம இருக்கலாம் ஆனா நானெல்லாம் ஒருத்திய கல்யாணம் பண்ணி கடைசிவரைக்கும் அவளோடவே குடும்பம் நடத்தனும்னு நினைக்கிறவன்.. உன்னோட இவ்வளவு நாள் குடும்பம் நடத்திட்டு இப்ப  எனக்கு எல்லா உண்மை தெரியவும் நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனுமா..??”
 
தன் நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவள்,” ஐயோ ஒரு நாள்கூட நாம கணவன் மனைவியா வாழலை …?”
 
ஹாஹாஹா இப்ப சொன்னியே அது ரொம்ப சூப்பர் .. கல்யாணம்பண்ணி நாப்பது ஐம்பது நாளாகுமாம் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழாம இருப்போமாம் அதுக்கு வேற கேனையன பாரு அவன் வேணா நீ சொல்றத எல்லாம் நம்புவான் நான் நம்ப மாட்டேன்..
 
ரமலி இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்பார்க்கவே இல்லை.. சொத்து நிறைய கொடுத்தால் பேசாமல் வாங்கி கொண்டு செல்வான் என நினைத்திருக்க இவன் என்னன்னா ஒரே கல்யாணம், கற்புன்னு எல்லாம் பேசுறான்.. சிந்தனையில் இருப்பவளை தன்னை நோக்கி இழுத்தவன்,” இவ்வளவு அழகான பொண்ண பக்கத்தில வைச்சிக்கிட்டு யாராச்சும் வாழாம இருப்பாங்களா..?” அவள் கழுத்தில் தன் முகத்தை புதைக்க இந்த நிலையிலும் அடப்பாவி என நினைக்காமல் இருக்கமுடியவில்லை..
 
அடிப்பட்டிருந்தப்போ அவ்வளவு நல்லவனா இருந்தவனா இப்ப இப்படியெல்லாம் பண்றான்.. இப்போது மட்டும் அந்த வக்கீல் அங்கிள பார்த்தேன்…!!!அவனை தள்ளிவிட்டு எழுந்தவள்,” ப்ளிஸ் சரண்.. இப்ப உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. என்னால கணவன் குடும்பம் அப்படியெல்லாம் வாழ முடியாது.. மத்தபடி நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்..?”
 
அடடடடா என்னமா என்னமோ நான் உன்னை வம்பு பண்ணி கல்யாணம் பண்ணின மாதிரி சொல்ற..? நீயா என்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஏதோ பொண்ணு பார்க்க பரவாயில்லாம இருக்க இவ்வளவு நாள் வாழ்ந்திட்டோம் இப்பவும் சேர்ந்து வாழ்வோம்னு நினைச்சா என்னன்னமோ சொல்ற. போ போய் உன்னோட பொருளை எல்லாம் பேக் பண்ணு..  எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மா படத்துக்கு முன்னாடி விழுந்து கும்பிட்டு எங்க வீட்டு மருமகளா இருக்கப்பாரு..
 
சரணிண் முடிவை கேட்டவள் இவன் என்ன இப்படி நாம நினைக்காததெல்லாம் சொல்லிட்டு இருக்கான்.. இதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை..முடியாது சரண் நீங்க நினைச்ச மாதிரியெல்லாம் என்னால வாழமுடியாது.. உங்களால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்கோங்க..??”
 
அவனோ தெனாவட்டாக,” உன்னை ஒன்னும் பண்றதா பிளான் இல்ல.. ஏனா நீ என்னோட பொண்டாட்டியா சேர்ந்து வாழந்து மறுபடி எங்கம்மா எனக்கு புள்ளையா பொறக்கனும்.. இப்ப என்ன பண்ணப்போறேன்னா நேரா போலிஸ்ஸ்டேசனுக்கு போய் இது எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மாதான்னு போலிஸ்ல புகார் கொடுக்கப் போறேன்.. என்னையும், என்குடும்பத்தையும் ஏமாத்திட்டதா சொல்லப்  போறேன் ..அவங்கள தூக்கி ஜெயில் வைக்காம இருக்கப் போறதில்ல..
 
தன் தாயை பற்றி சொல்லியதும் அவளுக்கு அதிர்ச்சியும் கோபமும் வர,” அத நீங்க கனவுல கூட செய்ய முடியாது மிஸ்டர் சரண்.. நான் தப்பு செஞ்சேன்னுதான் இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன்.. அதுக்காக நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆடுவேன்னு கனவுலகூட நினைக்காதிங்க.. எனக்கும் சட்டம் கோர்ட் எல்லாம் தெரியும் .. இந்த ரமலிய பத்தி உங்களுக்கு ஒன்னும் நியாபகம் இல்லைன்னு நினைக்கிறேன்…
 
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு தாங்கள் இருவரும் கபடி களத்தில் இருப்பதுபோல இருந்தது.. அவள் தன் புறம் வந்து நின்று அறைக்கூவல் விடுப்பது தெரிய தன்னை அறியாமல் முகத்தில் ஒரு புன்னகை..என்னடி சொன்ன மிஸ்டர் சரணா  அந்த பேரெல்லாம் வேணாம் மாமான்னு கூப்பிடு.. அதான் கிக்கா இருக்கும் அப்புறம் என்ன சொன்ன..ஹான்….உன்னைப்பத்தி எதுவும் நியாபகம் இல்லைன்னுதானே நானும் சொல்றேன்.. இவ்வளவு அழகான ஒருத்திக்கூட குடும்பம் நடத்தியிருக்கேன் அது எனக்கு நியாபகம் இல்ல பாரேன்.. எனக்கு உன்னைப்பத்தி தெரியாத மாதிரிதான் உனக்கும் என்னைப்பத்தி தெரியாது ..
 
அப்புறம் என்னை என்னன்னு நினைச்ச சுயநினைவு வந்ததும் நாம எதாவது சொத்த அவனுக்கு கொடுத்திட்டா அவன் அத வாயில கவ்விக்கிட்டு நாய் மாதிரி ஓடிருவேன்னா.. இந்த சக்தி சொன்னதையும் செய்வான் ..சொல்லாதததையும் செய்வான்.. உனக்கு வேற வழியில்ல என்கூடத்தான் கடைசிவரைக்கும் குடும்பம் நடத்தனும்.. இதுவரைக்கும் எனக்கு நியாபகம் இல்லாம நாம ஒன்னா இருந்திருக்கோம்.. இப்ப வா சந்தோசமா ஒன்னா இருப்போம்…
 
இந்த வார்த்தையை மறுபடி மறுபடி சொல்லாதிங்க நாம சேர்ந்து வாழவே ஆரம்பிக்கலை.. எனக்கு ஆம்பளைங்களே பிடிக்காது.. எங்க தாத்தாவுக்கப்பறம் நான் ரொம்ப மதிப்பு வைச்சிருந்தது உங்கமேல மட்டும்தான் .. இந்த அம்பது நாளும் நீங்க எவ்வளவு ஜென்டில்மேனா இருந்திங்க.. இப்ப ஏன் இப்படி பிகேவ் பண்றிங்க..
 
 

Advertisement