Advertisement

இணை தேடும் இதயங்கள்
                           அத்தியாயம்  –  15
                                            
ரமலி இது போலொரு டென்சனை தன் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.. நேற்று முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கழித்தாள்… இன்று காலை முதல் பிளைட்டில் வந்திறங்கியவள் வக்கீலிடம் விசாரிக்க அவர்கள் வீட்டிலும் இல்லை ,போனையும் எடுக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த பாடிகாட் இருவரையும் நேற்றே வேலையில் இருந்து விலக்கியிருந்தாள்..
 
 கௌசிக் சரணை மோத வந்து வேறு ஆளை மோதியதால் கௌசிக்கும் அவன் தம்பியும் ஜெயிலில் இருப்பது தெரிய இருவரின் தற்போதைய கேஸ் நிலையை அறிந்து வருவதாக வக்கீல் போலிஸ் ஸ்டேசனுக்கு கிளம்ப இவள் பாண்டி கோவிலை நோக்கி தன்காரை செலுத்தியிருந்தாள்..
 
அங்கு சென்று நேற்று நடந்த விபத்தை பற்றி விசாரிக்க அவர்களால் எந்த நியூஸும் உருப்படியாக கிடைக்கவில்லை.. அடிப்பட்டவர்களை காரில் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றார்கள் என்பது மட்டும்தான் தெரிய ஒருவேளை சரணுக்கு அதிக காயமோ… கவலைப்பட்டவள் அத்தை குடும்பத்தை பத்தி தெரிஞ்சுதானே சரணைச்சுத்தி நாம பாதுகாப்பு வளையம் போட்டிருந்தோம்.. நாம இல்லாத நேரத்தில இப்படியாயிருச்சே…!!
 
ஏதோ தோன்ற சட்டென காரை சரண் அன்று அடிப்பட்ட இடத்திற்கே விட்டாள்.. அன்று நல்ல இருட்டில் அடிப்பட்டதால் அடையாளம் தெரியாமல் பக்கத்தூரின் அருகில் காரை நிறுத்தி சரணின் போட்டோவை தன் செல்லிலிருந்து காட்டி அவனை பற்றி விசாரிக்க, அந்த விசாரித்த ஆள் கபிலன்..!
 
நேற்று இரவு சக்தி வந்தது அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.. தான் வீட்டை காட்டுவதாக அவளை அழைத்து வந்தவன் வீட்டை காட்ட காரை புயல்போல செலுத்திவந்தவள் கீரிச் என்னும் சத்தத்தோடு பிரேக் இட்டு நிறுத்தவும் வாசலில் அவன் நண்பர்களோடு அமர்ந்திருந்த வெற்றி யாரென்று பார்ப்பதற்காக எழுந்து காரின் அருகே வந்தான்..
 
சரணுக்கு நினைவு திரும்பியது எதுவும் தெரியாத ரமலி தன் காரைப்பார்க்கவும்தான் வருகிறானோ என நினைத்தவள் காரிலிருந்து வேகமாக இறங்கி அவனை நோக்கி ஓடியவள் எட்டி அவனை இறுக அணைத்திருந்தாள்.. சக்தியின் நண்பர்கள், அவனிடம் துக்கம் விசாரிக்க வந்த அந்த ஊர், பக்கத்தூர் ஆட்கள் என ஒரு ஐம்பது ,அறுபது பேர் அமர்ந்திருக்க அனைவரும் அப்படியே அதிர்ச்சி, ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நின்றனர்.. விலை உயர்ந்த வெளிநாட்டு கார் அதிலிருந்து மகாராணியை போல ஒரு பெண் அதுவும் சக்தியுடன் இவ்வளவு நெருக்கத்தில்…..!!! ,
 
சக்தியை பற்றி அவன் நண்பர்களுக்கும் அவன் அக்கம்பக்கத்தாருக்கும் நன்றாக தெரியும்.. தன்னிடம் வழிய வந்து பேசும் பெண்களிடம் கேலியாக பேசுவான்.. வார்த்தைக்கு வார்த்தை காலைவாருவானே தவிர அதில் ஆபாசாமோ, இரட்டை அர்த்த பேச்சோ இருக்காது.. வயது பெண்கள் முதல் வயதான பாட்டிவரை ஒரே மாதிரிதான் அவன் பேச்சு இருக்கும்.. இப்படி அணைத்தெல்லாம் பேசி பார்த்ததில்லை.. பாட்டிகளோடு கேலி செய்து அப்பத்தாவையும் அவர்களையும் தூக்கி விளையாடி பாட்டு பாடுவானே தவிர வயது பெண்களை தொட்டதில்லை.. ஆனால் இன்று ரமலி அவனை இறுக அணைக்கவும் சில பேருக்கு ஆச்சர்யம் என்றால் பலபேருக்கு பொறாமை என்றே சொல்லலாம்..
 
 அவனை இறுக அணைத்தவள் அவன் முகத்தை தடவிப்பார்த்து,” உங்களுக்கு ஒன்னுமில்லதானே..??”
 
தன்னை இப்படி அணைத்தவளை இவனும் ஆச்சர்யமாக, அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் நல்ல விலை உயர்ந்த சல்வார், காதில் கைகளில் பிளாட்டினம் மின்னியது.. காலையில் இருந்து அலைந்ததில் முகத்தில் லேசான சோர்வு.. நல்ல சிவந்த நிறம் தன் தோள் உயரத்திற்கு வளர்ந்து நின்றாள்.. உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, பிறந்ததில் இருந்தே செல்வத்தில் வளர்க்கப்பட்டவள் போன்ற தோற்றம்.. இப்படிப்பட்ட பெண்களை சினிமாவில்தான் பார்த்திருக்கிறான்..
 
 இப்போது நேரில் அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் அவள் மூச்சுக்காற்று தன் மேல் பட்டது ..அவள் கைவிரல் மென்மையாக அவன் முரட்டு முகத்தை தடவிப்பார்த்தது.. சுற்றிலும் ஆட்கள் இருப்பதை உணர்ந்தவன் அனிச்சைசெயல் போல அவளை விலக்க கையை அவள் தோளில் வைத்தவன் அவளை அறியாத பார்வை பார்த்து…
 
ஸாரிங்க நீங்க யாருன்னு தெரியலையே..உங்களுக்கு யாரப்பார்க்கனும்..??”
 
அதிர்ச்சியில் ஓரெட்டு பின்னால் வைத்தவள்,” என்ன சொல்றிங்க.. என்னை யாருன்னு தெரியலையா..??” ஒருவேளை நமக்கு காது கேட்கலையோ..காதில் கைவைக்க போனவள் ஒருவேளை… ஒருவேளை…!!! சரணையே பார்க்க அவள் கண்கள் அவளறியாமல் கலங்கியது..
 
அவன் கண்களையே பார்த்தபடி மீண்டும் பின்னால் போக அவன் பார்வை ஓரிடத்தில் நிலைத்திருக்க மற்றொரு இடி அவன் தலையில் விழுந்திருந்தது… அதைப் பார்த்தவன் பார்த்தபடியே நின்றிருக்க காரின் சத்தம் கேட்டு அப்பத்தா வெற்றி என குடும்பமே வெளியே வந்திருந்தது..
 
அப்பத்தா,” யாரு சக்தி இது..??”
 
 சத்தமான குரலில் கேட்க அப்போதுதான் தன்னைச்சுற்றி இவ்வளவு ஆட்கள் இருப்பதை உணர்ந்தவள் தன் கலங்கிய கண்களை மறைத்தபடி அவனை விட்டு இன்னும் இரண்டடி தள்ளி நின்றாள்… இல்லை… இல்லை தள்ளி நிற்க முற்பட்டாள்.. ஏனென்றால் அவள் ஓடி வந்ததில் அவளுடைய தாலிசெயின் வெளியில் வந்து அவனை இறுக்கி அணைத்ததில் இப்போது சக்தியின் சட்டையில் மாட்டியிருந்தது..
 
 அவனுக்கு நன்றாக நினைவிருந்தது இந்த சங்கிலியும் தாலியும் அடிப்பட்ட அன்று தான் ஆசாரியிடம் வாங்கி வந்ததென்று ..ஏனென்றால் அவனுக்கு அடிபட்ட அன்று அவனுடைய செயின் அறுந்துபோயிருக்க செயினை அந்த நகைக்டையில் ரிப்பேருக்கு கொடுத்திருந்தவன் அதில் மாட்டியிருந்த”  S டாலரை பத்திரப் படுத்துவதற்காக அவன்தான் அந்த தாலிச் செயினில் தாலியோடு மாட்டி வீட்டில் போய் எடுத்துக் கொள்ளலாம் என வைத்திருந்தான்.. அந்த டாலரோடு சேர்ந்த தாலிச் செயின்தான் இப்போது ரமலி கழுத்தில் பார்த்தது..
 
அதற்குள் சக்தியின் நண்பர்கள் சக்தி குடும்பம் என அனைவரும் அருகில் வர தன் அதிர்ச்சியை மறைத்து வேகமாக அவன் சட்டையில் மாட்டியிருந்த தாலியை மெதுவாக எடுத்துவிட்டவள் அதை சல்வாருக்குள் மறைத்து அவனைவிட்டு தள்ளி நின்றாள்.. தாலியை அவன் பார்த்துக் கொண்டிருப்பதை இவள் உணரவில்லை..
 
சக்தி நண்பர்களின் பார்வை அனைத்தும் ரமலி மேல்தான் அவள் அழகில் அப்படியே மெய் மறந்து போயிருந்தனர்.. ப்பா இப்படி ஒரு பெண்ணா..!!! வெண்ணையை குழைச்சமாதிரி இப்படி ஒரு தேகமா அவளையே பார்வையால் மொய்க்க சக்திக்கு தெரிந்த பெண்ணாயிருந்தால் நாமும் அறிமுகமாகிக் கொள்வோம்.. சக்தியையே பார்க்க அவன் இந்த உலகத்திலேயே இல்லை.. அதற்குள் அங்கு வந்திருந்த ரேணுகா ரமலியை பார்த்து ,
 
இது என்னோட பொண்ணுங்க.. அனைவரையும் சங்கடமாக பார்த்தவர் ஒரு பத்துநிமிசம் என் பொண்ணுக்கிட்ட பேசிக்கவா..??”
 
அப்பத்தாவோ,” நல்லா பேசுத்தா உன் மககிட்ட பேச எங்ககிட்ட ஏன் கேக்கனும்.. அவள் கன்னத்தை வருடியவர் ஏத்தா நீதான் என் பேரன காப்பாத்துனியா.. ??”
 
ரமலியால் வாய்திறந்து பேசமுடியவில்லை.. தலையை ஆட்ட ரேணுகா ரமலியின் கையை பிடித்தவர் இரவுதான் படுத்திருந்த அறைக்கு ரமலியை கூட்டிவந்து அறையை தாளிட்டு ரமலியை ஒரு பார்வை பார்த்தபடி,” இன்னைக்கு எத்தனை மணிக்கு டெல்லியில் இருந்து வந்த..??”
 
உங்களுக்கு ஒன்னுமில்லதானம்மா…இப்ப இந்த கேள்வி எதுக்குமா..??” அவள் இதென்ன கேள்வி என்பது போல தாயை பார்க்க தாயின் முறைப்பில்,” காலையில 9 மணிக்கு வந்தேன்மா..
 
ரமலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவைத்தவர் அவள் அப்படியே அதிர்ச்சியில் தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும் இதுவரை ஒரு அடிகூட மகளை அடித்ததில்லை.. ஏன் திட்டக்கூட மாட்டார்.. இப்ப உனக்கு தேவைன்னு வரும்போது இவரோட ஊர ஒரு அஞ்சு மணி நேரத்தில கண்டுப்பிடிச்சிட்ட .. இவருக்கு அடிப்பட்டு ஐம்பது நாளாச்சு ஏன் இந்த பையன அவங்க குடும்பத்தோட சேர்க்க நினைக்கலை..??”
 
அதிர்ச்சியில் ,”அம்மா….!!!”அம்மாக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சா
வாய மூடு என் பொண்ணுக்கிட்ட இருந்து இப்படி ஒரு சுயநலத்தை எதிர்பார்க்கலை..??”
 
 அவர் கையை பிடித்தவள் ,”அம்மா அன்னைக்கு நமக்கு இருந்த சூழ்நிலை…அதோட இவருக்கு எதுவும் நினைவில்லம்மா..?”
 
அவள் கையை உதறியவர்..ப்பச்.. சும்மா இரு ரமலி அவருக்கு நினைவில்லைன்னா என்ன.. உனக்கு நினைவிருந்திச்சு தானே..?? இன்னைக்கு மாதிரி அவர் அடிப்பட்ட இடத்தை வைச்சு கண்டுபிடிச்சிருக்கலாம்.. அதுக்கு உனக்கு நேரம் இல்லைனா இங்க இருக்கிற போலிஸ் ஸ்டேசன்ல இவரை பத்தின  தகவல சொல்லியிருக்கலாம்.. நீ ரொம்ப புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சிருந்தேன்.. நமக்கு மாதிரிதான அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும்.. உன்னோட சுயநலத்தால இப்ப அந்த தம்பி எவ்வளவு வேதனை படுறார் தெரியுமா..
 
மீண்டும் தன் கையை பிடிக்க வந்தவளை தட்டிவிட்டவர்,” நீயும் அந்த வக்கீல் அண்ணனும் சேர்ந்து இந்த மாதிரி ஏதோ செய்றிங்கன்னு எனக்கு தோனிக்கிட்டே இருந்திச்சு.. நீ பணம் கொடுத்து யாரையும் ஏற்பாடு பண்ணுவன்னு நினைச்சனே தவிர  ,இப்படி தன்னை மறந்து இருக்கிறவரை பயன்படுத்துவன்னு.. தெரியாம போச்சு அப்படியாச்சும் இந்த சொத்து நமக்கு வேணுமா..?”
 
கண் கலங்கியவள்,”  இல்லம்மா வக்கீல் அங்கிள்..??”
 
ம்பச்..வக்கீல் சொன்னா உனக்கு எங்க போச்சு அறிவு.. நேத்து அவரோட தம்பி மனைவி மட்டும் ஒருநிமிசம் இவரை பார்த்து காப்பாத்தலை இன்னேரம் அந்த கௌசிக் இவர் மேல காரவிட்டு மோதியிருப்பான்..?”
 
பல்லை கடித்தவள்,” அவனை ஜெயில்ல இருந்து வெளியில வராம என்ன செய்யனுமோ எல்லாத்தையும் செய்யாம விடமாட்டேன்மா..??”
 
போடி அதுக்கு காரணம் யாரு நீதான்.. நம்மள பலிவாங்கத்தான் அவன் இந்த தம்பியை காருல மோத வந்தான்.. எல்லாத்துக்கும் காரணம் நாமதான்.. ஒன்னு தெரியுமா நீ இவரை காப்பாத்தின அன்னைக்கு இவங்க அம்மா இறந்துட்டாங்க..
ரமலி அப்படியே அதிர்ச்சியில் தன் தாயை பார்த்தபடியே இருக்க,
மூத்த மகனா இவர் செய்ய வேண்டிதை செய்ய முடியலைன்னு அந்த தம்பி வருத்தப்பட்டத நீ பார்த்திருக்கனும்.. ஒரு தாயா இருந்தாத்தான் அந்த வேதனை தெரியும்.. உங்க அப்பாவ உனக்கு பிடிக்காதுதான்.. நீ அவரோட பேச மாட்டதான்.. ஆனா கடைசி காரியத்தை நீதான அவர் மகளா இருந்து செஞ்ச ஒரு தாயா நானும் அதைத்தான் விரும்பினேன்.. அதே மாதிரிதானே அந்த தாய்க்கும் தன் மகனை பார்க்கமுடியாம இருந்திருக்கும்..
 
அம்மா ப்ளிஸ் நான் சொல்றத கேளுங்க அப்ப சரண் கண்முழிக்காம படுத்திருந்தாரு.. அதோட அத்தை குடும்பத்துக்கு பயந்துதான் என்னால இத்தனை நாள் சரண் வீட்டை கண்டுபிடிக்க முடியாம இருந்திச்சு..
.
. நிறுத்து ரமலி இந்த கேள்வியை நீயே உன் மனசாட்சிக்கிட்ட கேளு அதுவே பொய்யின்னு சொல்லும்.. உன் அத்தை குடும்பத்துக்கு பயந்திட்டுத்தான் இத்தனைநாள் இருந்தியா அவங்க எத்தன பேர் வந்தாலும் நீ தைரியமா போராடுவன்னு எனக்கு தெரியும் ..
 
 கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்தியவர்,” கடைசியா ரெண்டே ரெண்டு கேள்விமட்டும் கேக்கிறேன் அதுக்கு எனக்கு உண்மையான பதில் சொல்லனும்..??”
 
தலைகுனிந்து நின்றிருந்தவளிடம்,” என் கண்ணப்பாரு..?? அவள் முகத்தை தன்னை பார்க்கச் செய்தவர்,” இத்தனை நாள் நீயும் இவரும் சந்தோசமா புருசன் பொண்டாட்டியா வாழ்ந்திங்களா…?”
அவள் தலை குனிய விடாமல் தன்னை பார்க்கச் செய்தவர் ,”உண்மையான பதில் மட்டும்தான் சொல்லனும்..??”
இல்லம்மா..” மறுப்பாக தலையசைக்க, கண்மூடி தன் வேதனையை விழுங்கியவர், மீண்டும் அவளை நிமிர்த்தி,” இப்பவாச்சும் அவரோட வாழ்வியா இல்லை வேற முடிவு பண்ணி வைச்சிருக்கியா..??”
 
சற்று தயங்கினாலும் நிமிர்ந்தவள்,” இல்லம்மா அப்பா மாதிரி ஆளுகள பார்த்திட்டு என்னால ஒரு ஆண நம்ப முடியாது.. எனக்கு கல்யாணமெல்லாம் செட்டாகாதுமா.. சரண் மேல நிறைய மதிப்பு வைச்சிருக்கேன்.. தாத்தாக்கு அப்புறம் நான் மதிக்கிற ஒரே ஆள் சரண் மட்டும்தான்.. அவருக்கு நினைவு திரும்பினவுடன மன்னிப்பு கேட்டு அவர் வாழ்க்கையில இருந்து விலகிடனும்னு தான் நினைச்சேன்.. நம்ம சொத்துல இருந்து அவங்க எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கட்டும் … வாங்க நான் போய் பேசுறேன்…
 
கோபத்தில் அவள் கையை பிடித்தவர் ,”போதும் ரமலி உன்னால இந்த பையனுக்கு கிடைச்சதெல்லாம் போதும்.. இதுவரைக்கும் உனக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்தது இன்னும் அவருக்கு தெரியல.. இவங்க எல்லாம் கிராமத்துகாரங்க ரொம்ப வெகுளியானவங்க.. இந்த மாதிரி சொத்துக்காக ஒரு கல்யாணம் நடந்தது தெரிஞ்சிச்சு அவங்களால தாங்க முடியாது வா நாம போயிருவோம்.. மத்தத அப்புறமா பேசிக்கலாம்.. தம்பியும் கொஞ்சம் தைரியத்துக்கு வரட்டும்..இப்ப அவர் படுற துன்பமே போதும் நீ உன்னோட புத்திசாலிசனத்தை காட்டி அவர மேலும் துன்பப்படுத்தாத.. வாய மூடிக்கிட்டு வா..” அவளை விடாமல் கைப்பிடித்து கூட்டி வந்தவர் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து,” நாங்க கிளம்புறோம்ங்க.. எங்களுக்கு முக்கியமான ஒரு வேலையிருக்கு..
 
அறையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து சக்தியின் பார்வை ரமலியை கூறு போட்டது அவன் தாலியை  பார்த்தது, அதில் அவன் தெரிந்து கொண்டதெல்லாம் மற்றவர்களுக்கு தெரியவில்லை.. ரமலியுமே அதை உணரவில்லை..
 
ரமலி எப்போதும் தைரியமானவள்.. எதற்கும் துணிந்தவள்.. எதையும் நேரிடையாக செய்துதான் பழக்கமே தவிர இதுபோல பொய் சொன்னதெல்லாம் இல்லை.. ஆனால் தாயின் ஒரு அடியிலே தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு.. அதிலும் சரணிண் தாய் இறந்தது தெரிந்து இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை . இப்போது பேச்சில்லாமல் மௌனியாகி போனாள் அவர்கள் காரில் ஏறப்போக,
 வெற்றியோ,” அண்ணா நேத்து நாம வந்த இவங்களோட கார் இங்க இருக்கே..??”
ரேணுகாவோ,” இருக்கட்டும் தம்பி… கொஞ்சநாள் இங்க இருக்கட்டும் .. அனைவரும் என்னடா இது லட்சக்கணக்குல காசக்கொட்டி வாங்கின காரை இப்படி தூக்கிக் கொடுத்திட்டு போறாங்க இன்னும் அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை..  
 
அப்பத்தாவோ,” இப்படி ஒருவாய் சாப்பிடாம கூட்டிட்டு போறிங்களே..??” என ஆதங்கத்தை ரேணுகாவிடம் கொட்டிக் கொண்டிருக்க அவரும் தன் அழுகையை மறைக்க போராடிக் கொண்டிருந்தார்.. இனி தன் மகளோட வாழ்க்கை..!!! கடவுளே நீதான் சரிபண்ணனும்.. எங்களுக்கு சொத்து எதுவுமே வேண்டாம் என் பொண்ணோட வாழ்க்கையை மட்டும் சரிசெஞ்சு குடுத்திரு.. இந்த தம்பிக்கு கல்யாணத்தை நியாபகப்படுத்து.. சக்தியையே பார்த்தவர் கண்ணை கண்ணீர் மறைத்தது..
 
அப்பத்தாவின் கையை பிடித்தவர்,” நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வரணும்ங்க..?”
 
சும்மா ஆத்தான்னு கூப்பிடுத்தா.. நானும் உனக்கு ஆத்தா மாதிரிதான்.. அதென்ன நீ கூப்பிடுறது இத்தனை நாள் என் பேரன பத்தர பார்த்துக்கிட்டதுக்கு நாங்கதான் நன்றி சொல்லனும்..பாரு இப்பன்னு பார்த்து என் பையன் வெளியில போயிட்டான்.. வந்தா எங்கள சத்தம் போட போறான்.. ஏத்தா சாப்பிடாம அவங்கள அனுப்பினங்கன்னு.. வாரோம்த்தா கண்டிப்பா ஒருநாளைக்கு வாரோம்…
 
சக்தியின் பார்வை ஒரு நொடியும் ரமலியை விட்டு அசையவில்லை… அவளை பார்த்தது பார்த்தபடிதான் இருந்தான்.. ரமலிக்கே இந்த பார்வை அச்சமூட்டியது.. தன் நெஞ்சை கிழித்து உள்ளே இருப்பதை பார்ப்பது போல ஒரு பார்வை..முன்பெப்போதும் இவன் இப்படி பார்த்ததில்லை.. ரேணுகா அவனிடமும் சொல்லிக் கொண்டு காரில ஏற காரை கிளப்ப போனவளை தடுத்தவன் முன்னால் வந்து அவள் பக்கம் குனிந்து,” வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு அட்ரஸ்தராம போறிங்க..??”
 
அவள் பர்ஸில் இருந்து தன் விசிட்டிங்கார்டை எடுத்தவள் அவன்கையில் கொடுக்க அவள் கையை அழுத்தியவன்,” சீக்கிரமா மறுபடியும் பார்ப்போம்…??” என்ன அர்த்ததில் சொன்னானோ..!!!
 
ரேணுகாவோ,” சீக்கிரமா வாங்க தம்பி அப்பா, அப்பத்தா, தம்பி, மலரு எல்லாரையும் கூட்டிட்டு வாங்க..அவனிடம் விடைபெற
 
என்ன உங்க பொண்ணு ஊமையா..? என்கிட்ட பேசமாட்டாங்களா..? நீங்க மட்டும்தான் வரச் சொல்றிங்க அவங்க வாய திறக்காம இருக்காங்க..?”
 
தம்பி ,”அவ உங்களவிடச் சின்னவ சும்மா வா போன்னு கூப்பிட்டுங்க..”
 
ரமலி வாய்திறந்து,” எ.. எல்.. எல்லாரையும் கூட்டிட்டு வாங்க..?”
 
ம்ம்ம் சீக்கிரமா வர்றோம்..?” ரேணுகா தன் கைப்பையிலிருந்து அவனுடைய போனை எடுத்துக் கொடுக்க அவனிடமிருந்து இருவரும் விடைபெற்றார்கள்.. அவர்கள் கார் தூரத்தில் சிறுபுள்ளியாக மறையும்வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தான்…
 
                                               இனி……………….?????

Advertisement