Advertisement

இணை தேடும் இதயங்கள்
                       அத்தியாயம்  –  13
 
காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி எட்டாகியிருந்தது.. கட்டிலின் அருகில் பிளாஸ்க் இருக்க அதை திறந்து பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை.. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசாட்டாலும் அவ நமக்குன்னு காப்பியெல்லாம் போட்டு வைச்சிட்டுத்தான் போயிருக்கா..
 
குளித்து வந்தவன் வேறு உடைக்குமாறி நேற்று போல இன்றும் தங்கள் ஹோட்டலுக்கு வண்டியை விட்டான்.. தந்தை கல்லாவிலும் மலரும் அப்பத்தாவும் கிச்சனிலும் இருந்தார்கள்.. நேற்று போல இல்லாமல் அவனே ஆர்டர்களை கேட்டு உள்ளே கிச்சனுக்கு சென்று வாங்கி வந்து கொடுக்க அப்பத்தாவுக்கு லேசான திருப்தி.. நம்மபய இங்கனயே இருந்திருவானா.. உள்ளே மலர் பிஸியாக இருந்தாள்..
 
சேலையை தூங்கி சொருகி அந்த பெரிய கரண்டியை வைத்து கிளறிக் கொண்டிருக்க வியர்வையில் சட்டையெல்லாம் தொப்பென நனைந்திருந்தது.. ஒரு கையால் அதை துடைத்தபடி வேலைப்பார்த்துக் கொண்டிருந்தவளிடம் இருந்து உதவி செய்வதற்காக கரண்டியை வாங்க கையை நீட்டியவனை ஆச்சர்யமாக பார்த்தவளுக்கு அவனிடம் அதை கொடுக்க விருப்பமில்லை.. இது தன் திருப்திக்காக மாமா செய்து கொடுத்தது .. இதில் இவள் யாருடைய இரக்கத்தையும் உதவியையும் எதிர்பார்க்கவில்லை.. முக்கியமாக வெற்றியின் உதவியை..மாமா, அம்மாச்சியின் உதவியை ஏற்றுக் கொண்டவளால் வெற்றியை அவ்வாறு நினைக்க முடியவில்லை..
 
தன்னே வேண்டாம் என சொன்னவனிடம் அவள் எதையும் பெற விரும்பவில்லை.. கைநீட்டியவனை கண்டு கொள்ளவேயில்லை.. சரியான கடுகு போல..!! பார்த்தா  கைக்குள்ள ஒடிச்சு வைச்சிக்கிற மாதிரி இருக்கா படு காரமோ..!! அவள் தோற்றத்தை பார்த்தவனுக்கு அவளை மீண்டும் கொலுகொலுவென பார்க்க மனம் விழைந்ததில் தன்னை அறியாமல் சிரிப்பு..! ஏண்டா வந்த வேலை என்ன..??
 
 அப்பாக்கிட்ட எப்படியாவது வெளிநாட்டுக்கு போறதுக்கு சம்மதம் கேட்பியா அதவிட்டுட்டு சாப்பாடு பரிமாறவும் குழம்பை கிண்டவும் அவ ஒல்லியா குண்டான்னு ஆராய்ச்சி பண்ணத்தான் வந்தியா தோளை உலுக்கியவன் மீண்டும் வெளியேறி தந்தையிடம் சுமுகமாக பேச்சை துவங்க நேரம்பார்த்துக் கொண்டிருந்தான்..
 
தன்னையே அடிக்கடி நோட்டமிடும் மகனை கண்டவர் முகத்தை இன்னும் விரைப்பாக வைத்திருந்தார்.. இன்று காலைதான் தன் ஊர் வாத்தியாரை பார்த்து சிலவிசயங்களை பேசிவிட்டு வந்திருந்தார்.. இந்தமுறை மகனை எப்படியும் இங்கே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தவர் தன் போக்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்..
 
 மலர் இன்று தோசையில் சில வெரைட்டிகளை செய்து அசத்தியிருந்தாள்.. சிறு பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டு கொண்டிருக்க , அதைப்பார்த்த வெற்றிக்கு அப்பா கரெக்டான வேலையைத்தான் இவளுக்கு கொடுத்திருக்காரு.. கஷ்டப்பட்டாலும் ரொம்ப இஷ்டப்பட்டுதான் செய்றா.. சாப்பாடும் ரொம்ப நல்லாவே இருக்கு.. இன்னும் டெவலப்பண்ண நமக்கு தெரிஞ்சு ரெண்டு மூனு டிப்ஸ் சொல்லலாம்.. சொன்னா அத கேட்பாளா.. வியர்வைக்கு கசகசவென இருந்த ஜடையை கொண்டையாக மாற்றியிருந்தவள் தன்னோடு வேலைப்பார்ப்பவர்களிடம் அமைதியான குரலில் ஏதோ வேலை ஏவிக் கொண்டே கை தன்பாட்டில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தது..
 
ரமலி சென்று முழுதாக ஒரு நாள் முடிந்திருந்தது.. அவள் விட்டுருந்த எல்லா வேலையையும் முடித்தவனிடம் இரண்டு முறை போன் செய்து பேசியவள் தன் தாயிடமும் போனில் பேசினாள்.. மறுநாள் காலை சரண் தோட்டத்தை பார்த்தவன் தோட்டகாரனிடம் ஏதோ ஒரு செடியை கொடுத்து அதை அவன் சொன்ன முறைப்படி வைக்கச் சொல்லிவிட்டு உள்ளே வர ரேணுகா எங்கோ கிளம்பியிருந்தார்..
 
இவனை பார்க்கவும் காப்பியை கொடுத்தவர்,” தம்பி இன்னைக்கு ரமலிக்கு பிறந்தநாள் நான் கோவிலுக்கு போய்ட்டு வந்திர்றேன்..??”
 
பிறந்தநாளா..எந்த கோவிலுக்கு போறிங்க..?”
 
வருசாவருசம் நம்ம குலதெய்வ கோவிலுக்கும் பாண்டி கோவிலுக்கும் போய்ட்டு வந்திருவேன் தம்பி.. எப்பவும் பிறந்தநாளுக்கு வெளிநாட்டுல இருப்பா இந்த வருசமாவது என்கூட இருப்பான்னு பார்த்தேன்.. இப்பவும் அவ ஊருக்கு போயிட்டா..” அவர் தன் வருத்தத்தை சொல்ல..
 
பிள்ளைங்க எவ்வளவு பெருசானாலும் அம்மாக்கள் எப்பவுமே மாறமாட்டாங்க போல தன் அம்மாவும் இப்படித்தான் இருப்பாங்களோ.. வரிவடிவமாக தன் தாயை நினைத்து பார்த்தவனுக்குள் தன்னை அறியாமல் நெஞ்சுக்குள் சிறுவலி…!!
 
ரமலி வரலைன்னா என்ன..? அவளுக்காக இன்னைக்கு நான் உங்களோட கோவிலுக்கு வர்றேன்த்த… இருங்க அஞ்சு நிமிசத்தில கிளம்பி வந்திருறேன்..?” வேகமாக மாடியேறியவனை பாசமாக பார்த்தவர் , இவங்க ரெண்டுபேரும் எப்பவும் சந்தோசமாவும நிம்மதியாவும் இருக்கனும் கடவுளிடம் வேண்டுதல் வைத்தபடி சாமி அறைக்குள் நுழைந்தார்..
 
தன் அறைக்குள் சென்று குளித்து வந்தவன் உடைமாற்றிக் கொண்டே ரமலியின் அறையை பார்க்க அவள் இல்லாவிட்டாலும் அந்த அறையெங்கிலும் அவள் வாசம் அதிலும் அவள் ஊருக்கு போன அன்று தன்னை மறந்து அவளை அணைத்திருந்ததால் அவனுக்குள் சற்று தயக்கம் வந்திருந்தது.. இரண்டு நாட்களாக வேலை விசயத்தை தவிர வேறு பேசாதவன் இப்போது வாழ்த்துச் சொல்ல போனை எடுத்திருந்தான்.. ரமலிக்கு போன் செய்ய அவளும் உற்சாக மனநிலையிலே போனை எடுத்தாள்..
 
இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தவர்கள் சரண் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தாத்தாவுக்கு பிறகு அவள் நலம்விரும்பி..!! இருவரும் அன்றைய நிகழ்வுகளை பேசிக் கொண்டிருக்க ரேணுகாவோடு கோவிலுக்கு போகும் வியசத்தை சொன்னவன் தன்னை மீறி,” நீ எப்ப வருவ.. நீயில்லாம இந்த வீடு நல்லாவே இல்ல..??”
 
மனதிற்குள் சில்லென ஒரு குளிர்காற்று வீசியதை உணர்ந்தவள், அவன் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கியவளுக்கு இப்போது தன் தாயும் இதே வார்த்தையை சொன்னது நினைவுக்கு வந்தது…நாளைக்கு இல்லனா அடுத்த நாள் வந்துருவேன் சரண்.. இரண்டு பேரின் அன்பையும் உணர்ந்தவள் ஆயிரம் பத்திரம், கவனம் சொல்லி போனை வைத்தாள்..மெலிதான விசில் ஒலியோடு கிளம்பி வர இருவரும் கோவிலுக்கு கிளம்பியிருந்தார்கள்..
 
நேற்று போல இன்றைய நாளும் கழிய வெற்றி மட்டும் ராமலிங்கத்திடம் பேசமுடியவில்லை.. அவன் தந்தை அவனை அழகாக சுற்றில் விட்டார்.. மூவரும் பம்பரமாக சுழன்று வேலைப்பார்த்துக் கொண்டிருக்க தான் மட்டும் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது ஏதோ போல இருக்க அவர்கள் சொல்லாமலே இவனும் அவர்களோடு கலந்திருந்தான்..
 
உணவின் ருசிக்காகவே அவர்கள் ஊர் ஆட்களும் தூரத்தை பார்க்காமல் இங்கேயே வந்திருக்க நாளை ஒரு பிறந்தநாள் விழாவிற்காக ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றிருந்தார்கள்..
 
 நாளை வெள்ளிக்கிழமை அவள் அம்மாச்சி சக்திக்காக மூன்று வாரம் பாண்டி கோவிலுக்கு வருவதாக வேண்டுதல் வைத்திருக்க இரண்டு வாரத்தை வெற்றிக்கரமாக முடித்திருந்தார்கள்.. நாளை மூன்றாவது வாரம் தடைபட்டால் அம்மாச்சியால் தாங்கமுடியாது என்பதை உணர்ந்தவள் ஆர்டரை வேண்டாம் என சொல்ல நினைப்பதற்குள் ராமலிங்கம் ஆர்டருக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டார்..
 
மலருக்கு சற்று டென்சனாக இருந்தது..இந்த இரண்டு வாரமாக மூவருமே விடியற்காலையில் கிளம்பி கோவிலில் சாமி கும்பிட்டு மாலை வந்துவிடுவார்கள்.. அந்த நேரம் கடைப்பெண்கள் சமையலை கவனித்துக் கொள்ள இன்று சமையல் ஆர்டரை அவர்களை நம்பி ஒப்படைத்து செல்ல மலருக்கு மனதில்லை.. ராமலிங்கம் தான் இங்கிருந்து கவனித்துக் கொள்வதாக சொல்ல அன்று சற்று சீக்கிரமாக வீட்டுக்கு கிளம்பிய மலர் வெகுநேரம் விழித்திருந்து மறுநாளுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டுதான் படுத்தாள்..
 
இவர்கள் கோவிலுக்கு போவது தெரியாத வெற்றி இவ ஏன் இவ்வளவு நேரம் தூக்கம் முழிச்சு வேலைப்பார்க்கிறா.. சும்மாவே தட்டிவிட்டா எட்டி குட்டிக்கரணம் போடுறமாதிரிதான் இருக்கா.. இவ்வளவு வேலைப்பார்த்தா உடம்புக்கு என்னாகும்..?? முற்றத்தில் படுத்துக் கொண்டு அவன் பார்வையை மலர்மேலேயே வைத்திருந்தான்.. அடுப்படியில் மட்டும் விளக்கெறிய அந்த ரோஸ்நிற நைட்டியில் ஒரு ரோஜாவைப்போல இருந்தாள்..
 
அவள் நிறமும் அந்த நைட்டியின் நிறமும் ஒன்று போல இருந்தது.. அவளை அணுஅணுவாக ரசித்தவனுக்கு அவள் முகத்தில் இருந்த வெறுமை மட்டும் பிடிக்கவில்லை.. இருபது வயசுதான இருக்கும் என்னமோ எல்லாம் துறந்த முனிவர் மாதிரி முகத்தை வைச்சிருக்கா..
 
எதுவாயிருந்தாலும் மாமா மாமான்னு அவர்கிட்டயே பேசுறா.. நாம ஏதாவது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கிறா.. ஆனா கேட்டதுக்கு பதில மத்தவங்க மூலமா சொல்லிருறா..
 
தன்னோடு வேலைப்பார்க்கும் பெண்களின் சிரிப்பு அவர்கள் அடிக்கும் லூட்டி ஞாயிறன்று டான்ஸ் கிளப் என ஆண்களோடு அவர்களின் ஆட்டமும் என பெண்களை இப்படியே பார்த்திருந்தவனுக்கு மலரின் அமைதி என்னவோ போல இருந்தது… இவ கலகலன்னு சிரிச்சா நல்லாயிருக்கும்ல.. அவளையே ரசித்தவன் தன்னை அறியாமல் உறக்கத்திற்கு செல்ல விடிந்தால் மணி ஒன்பது..
 
இவன் அடித்துபிடித்து ஹோட்டலுக்கு செல்ல அங்கு ராமலிங்கம் மட்டும்தான் இருந்தார்.. மலரையும் அப்பத்தாவையும் காணவில்லை.. மெல்ல கிச்சனுக்குள் சென்றவன் இருவரையும் பற்றி விசாரிக்க அவர்கள் கோவிலுக்கு இப்போதுதான் கிளம்பி சென்றார்கள் விளக்கு ரோட்டில்தான் நிற்பார்கள் என சொல்ல வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு ரோட்டின் அந்த பக்கம் சென்றான்.. நல்ல பச்சை நிறத்தில் கோல்டன்கலர் பார்டர் வைத்த சில்க் காட்டனில் தலைக்கு குளித்ததால் தலையை தளரபின்னி தலைநிறைய மல்லிகை பூ வைத்திருந்தாள்.. கையில் கண்ணாடி வளையல் கழுத்தில் தாலிக்கயிறோடு தன் தாயின் சங்கிலியை அணிந்திருந்தாள்.. அப்பத்தாவிடம் எந்த கோவிலுக்கு போறிங்க கேள்வியை அப்பத்தாவுக்கும் கண்ணை மனைவியிடத்திலும் வைத்திருந்தான்..
 
அப்பத்தா பதில் சொல்வதற்குள் பஸ்வந்திருக்க இருவரும் பஸ்ஸில் ஏறியிருந்தனர்.. அடச்ச நாம கொஞ்சம் சீக்கிரமா வந்திருந்தா இவங்களோட போயிருக்கலாம்.. எந்த கோயிலுக்கு போறாங்கன்னு சொல்லாமலே போறாங்களே தன்மேலேயே கடுப்பானவன் ஹோட்டலை நோக்கி வண்டியைவிட ஆர்டருக்கான சமையல் வேலை முக்கால்வாசி முடிந்திருந்தது..
 
டிபனை கொடுத்தனுப்பியிருக்க மதியசமையலுக்கான மீதி வேலையை கடைப் பெண்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் வர மாலையாகும் என தெரிந்துக் கொண்டவனுக்கு ஒரு மணிநேரத்திற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை..
 
டிபனை மட்டும் முடித்தவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு மதுரை பஸ்ஸில் ஏறியிருந்தான்.. அவனையே பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு தன் மகனால் இனி மலரை விட்டிருக்க முடியாது என்று உணர்ந்தவரின் எண்ணம் அவர் மனைவியை நினைத்தது.. அவளும் இப்படித்தானே நாம வீட்டுக்குள்ள வந்துட்டா அவ பார்வை எல்லாம் என்மேல மட்டும்தான் இருக்கும்.. பேச முடியாவிட்டாலும் கண்ணாலேயே தன் காதலை காட்டிவிடுவாள்…என்னவோ இன்று காலையில் இருந்து மனைவியையும் சக்தியையும் அதிகமாக நினைத்துக் கொண்டிருந்தார்..
 
இவர்கள் அனைவரும் அறியாதது ஒன்றிருந்தது..அது கிரிதரன்.. அவனும் இவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் என்பதை கவனிக்க தவறியிருந்தார்கள்.. இரண்டு வாரமும் இவனும் அவர்களோடு கோவிலுக்கு வந்திருந்தான்.. மலரை தூக்க நேரம்பார்த்திருக்க ராமலிங்கம் இருக்கும் போது அதை செய்யமுடியாமல் பல்லைக் கடித்தவன் இன்று அப்பத்தாவும் பேத்தியும் தனியாக வருவதை உணர்ந்தவனுக்கு சந்தோசம்..!! இன்னைக்கு எப்படியும் மலரை ஈஸியா தூக்கிரலாம் முடிவுக்கு வந்திருந்தவன் அவளை வெறித்தபடி பஸ்ஸில் பின்புறம்தான் அமர்ந்திருந்தான்.. கழுகு ஒன்று வட்டமிடுவதை தெரியாத சிறுபுறா ஒன்று தன் கவனத்தை அம்மாச்சியிடம் மட்டுமே வைத்திருந்தது..
 
சரணும் ரேணுகாவும் அவர்கள் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டவர்கள் அடுத்து ஒரு ஹோட்டலில் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்ப சரண் பாண்டி கோவிலை நோக்கி தங்கள் காரை விட்டிருந்தான்.. ரேணுகா தன் மாமனார் மாமியாரை பற்றி சொல்லிக் கொண்டு வர ரமலியின் தாத்தாவின் குணநலன்களை கேட்டவனுக்கு ரமலி அப்படியே அவரின் ஜெராக்ஸ் என்பது தெரிந்தது..
 
 ரமலி நியமித்திருந்த பாடிகாட்களில் ஒருவரின் பையனுக்கு உடல்நிலை சரியில்லாமல் அவன் விடுப்பெடுத்திருக்க ஒருவன் மட்டும்தான் அவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.. அவர்களோடு ரமலியின் இரு அத்தை பையன்களும் அவர்களை தொடர்ந்தார்கள்.. அனைவரும் பாண்டி கோவிலை நோக்கி சென்றார்கள்..
 
கோவிலில் அவ்வளவு கூட்டம் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிக கூட்டமாக இருந்தது.. ஆங்காங்கே பெண்கள் சாமியாடிக் கொண்டிருக்க கிடாய்கள் வெட்டி நிறைய இடங்களில் சமையலும் சாப்பாடும் ..!! மலரும் அப்பத்தாவும் அந்த பாண்டிமுனியை வணங்கியவர்கள் எப்போதும் போல அப்பத்தா அங்கேயே ஒரு மூலையில் அமர்ந்துவிட்டார்.. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..தன் பேரனை எப்படியும் தன்னிடம் கொண்டு வந்து ஒப்படைக்கும்படி விடாமல் வேண்டிக் கொண்டிருக்க இன்று அம்மாச்சி காலையில் இருந்து வீடு போகும்வரை விரதம்தான் பச்சை தண்ணீரைக்கூட குடிக்கமாட்டார்.. மலரும் அம்மாச்சியோடு சேர்ந்து விரதம் இருந்தாள்..
 
இருவரும் வேண்டுதலும் பலித்தது போல கூட்டம் அதிகமாக இருந்ததால் காரை சற்று தள்ளி நிறுத்திய சரண் ரேணுகாவோடு கோவிலுக்குள் நுழைந்தான்.. பெரிய ஆளுயுர மாலையை வாங்கியவர்கள் அர்ச்சனையோடு வரிசையில் நின்று கடவுளை வணங்கி வெளியில் வர மதியம் மூன்றாகியிருந்தது.. அப்பத்தாவும் காலையில் இருந்து விரதம் இருந்ததால்  சோர்ந்து போய் காணப்பட்டார்.. அவரை மெதுவாக கூட்டத்தை விட்டு தள்ளிக்கூட்டி வந்தவள் அவர் பேசமுடியாமல் ஒரு மாதிரி மயக்கம் வருவது போல இருப்பதாக சொல்லவும் அவரை தள்ளி ஒரு மரத்தடியில் அமர வைத்தவள் குடிப்பதற்காக தண்ணீரும கூல்டிரிங்க்ஸ்ம் வாங்கி வருவதாக சொல்லிச் செல்ல கிரிதரன் பின்தொடர்ந்திருந்தான்…
 
வெற்றி வந்து ஒரு மணி நேரமாகியிருந்தது.. கூட்டத்தில் தேடுகிறான் தேடுகிறான் இவர்கள் இருவரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.. இவனும் அண்ணனுக்காக கடவுளை வணங்கியவன் மீண்டும் தன் தேடலை துவங்கியிருந்தான்.. சரணோடு வந்த பாடிகாட் அந்த ஒருவனும் வரும் வழியிலேயே கார் பஞ்சராகி நின்றிருக்க கௌசிக்கும் அவன் தம்பியும் சரணை தூக்க காரை தயாராக வைத்திருந்தார்கள்..
 
தண்ணீரோடும் கூல்டிரிங்ஸோடும் வந்தவளை கிரிதரன் ஈஈஈஈஈ இளித்தபடி குறுக்காக வந்தவன்,” என்ன மலரு நல்லாயிருக்கியா? மாமன மறந்திட்ட பார்த்தியா..?” அவள் கையை பிடிக்கவர தண்ணிரை கீழே போட்டவள் அவனை தள்ளிவிட்டபடி எதிர்புறமாக ஓடத்துவங்கினாள்.. லேசாக தடுமாறியவன் அவளை துரத்த ஆரம்பிக்க காற்றாய் அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.. தன் உடலை தூக்கிக்கொண்டு அவளை விரட்ட முடியவில்லை.. இந்த வாய்ப்பை விட்டால் இனி மலர் தனக்கில்லை என்பதை அறிந்தவன் வன்மத்தோடு அவளை வேகமாக விரட்ட அவள் கூட்டத்தை நோக்கி ஓடாமல் சற்று தள்ளிவந்திருந்தாள்.
 
. ரேணுகாவை காரில் ஏறச் சொன்ன சரண் காரை ஸ்டார்ட் செய்ய தயாராக தங்கள் காருக்கு முன்னால் ஒரு பெண் ஓடுவதையும் அவளை துரத்தியபடி ஒருவன் ஓடுவதையும் கண்ட சரண் சட்டென காரை விட்டு இறங்கியிருந்தான்..
 
ரேணுகாவும்,” அந்த பொண்ணுக்கு என்னவோ பிரச்சனை போல தம்பி..??”
 
  அவரும் காரைவிட்டு இறங்க அதற்குள் சரண் கிரிதரனை நெருங்கியிருந்தான்.. சரணை காரோடு சேர்த்து மோதலாம் என காத்திருந்த கௌசிக்கும் அவன் தம்பியும் இப்போது இவன் மட்டும் தனியாக ஓடவும் என்னவென்று யோசித்தபடி பார்த்துக் கொண்டிருக்க மலரை கிரிதரன் எட்டிப்பிடிக்கும் முன் சரண் பின்னாலிருந்து கிரிதரனை ஓங்கி ஒரு உதைவிட்டிருந்தான்.. அலறலோடு அப்படியே குப்புற கீழே விழுந்தவன் வெறியோடு மீண்டும் எழ சற்று தூரம் ஓடியிருந்த மலர் பின்னால் சத்தம் கேட்கவும் ஒரு மரத்திற்கு பின்னாலிருந்து பார்த்தாள்.. அதில் சரணின் முதுகுபுறம் மட்டும் தெரிய கிரிதரனோடு அவன் சண்டையிடுவது தெரிந்தது..
 
மலர் சென்று வெகுநேரமாகியும் வராததால் அப்பத்தா மெதுவாக எழுந்து அவளை தேடிக் கொண்டு வர வெற்றி அவரை பார்த்துவிட்டான்.. அவரிடம் வேகமாக சென்றவன் அவர் தடுமாறவும் தண்ணீரை பிடித்து அவர் முகத்தில் தெளித்து தண்ணீரை புகட்ட குடிக்க மறுத்தவர் விரதத்தை பூர்த்தி செய்தே திருவேன் என அடம்பிடித்தார்.. மலரை ரொம்ப நேரமாக காணோம் என சொல்ல இருவரும் அவள் சென்ற திசையை நோக்கிச் சென்றார்கள்..
 
கௌசிக்கோ,” இவன் ஏன்டா அவனோட சண்டை போடுறான்… என்ன விசயமாயிருக்கும்..?”
 
என்னவா இருந்தா என்ன..??” இதுதான் நல்ல சான்ஸ் அவன காருல விட்டு தூக்கு..? அத்தைய அப்புறமா பார்த்துக்கலாம்.. அவ பாடிகாடெல்லாம் போட்டிருந்தா..!! இப்ப யாரையும் காணோம் இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காதுடா .. இவனாலதான் நமக்கு சொத்து கிடைக்காம போச்சு என்ன வந்தாலும் அப்புறமா பார்த்துக்கலாம் இவன முதல்ல தூக்குடா..??” காரை அவர்களை நோக்கி வேகமாக செலுத்த,
 
 அதற்குள் வெற்றியும் அப்பத்தாவும் மலரின் அடையாளங்களை சொல்லி கடையில் கேட்டுக் கொண்டு அவள் சென்ற திசையை நோக்கி முக்கால்வாசி தூரம் வந்திருக்க கிரிதரனை நைய புடைத்திருந்த  சரணை இப்போதுதான் மலர் நன்றாக பார்த்தாள்..
 
அவன் முகத்தை வீட்டில் போட்டாவில் பார்த்திருந்ததால் அவனை பார்க்கவும் கிரிதரனை மறந்தவள் ,”அத்தான்  என சரணை நோக்கி ஓடி வர.. மருமகன் சென்று நேரமானதால் ரேணுகாவும் அவனை தேடி வந்து கொண்டிருந்தார்.. சரணின் அருகில் நெருங்கியிருந்த மலர் இப்போதுதான் பார்த்தாள் ஒரு கார் வேகமாக அவர்களை நோக்கி வருவதை வெற்றியும் தூரமாகவே மலரை பார்த்துவிட்டான்.. ஏதோ சண்டை போல தெரிய மலர் அவர்களை நோக்கி ஓடவும் இவ ஏன் அங்க போறா..!!
 
இவனும் அப்பத்தாவிடம் சொல்லிக் கொண்டு மலரை நோக்கி வர அதற்குள் கௌசிக்கின் கார் அவர்களை நெருங்கியிருந்தது.. வந்த வேகத்தில் அவர்கள் மீது மோத கிரிதரன் நாலு அடி பறந்து காரின் முன்னால் விழுந்திருந்தான்.. சரணை பின்னால் இழுந்திருந்த மலர் அவனோடு சேர்ந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியிருக்க மூவரும் கீழே கிடந்தனர்..
 
 இவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த வெற்றி விபத்தை பார்க்கவும்,” மலர் என சத்தமாக கத்தியபடி அவர்களை நெருங்கியவன் மலரையும் தன் அண்ணனையும பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்திருந்தான்..
 
ரேணுகாவோ தம்பி என மருமகனிடம் வந்திருக்க அப்பத்தாவோ வெற்றியின் மலர் என்ற கத்தலில்  மயங்கியிருந்தார்…!!!!
 
                                                                       இனி……….??????

Advertisement