Advertisement

ணை தேடும் இதயங்கள்
                            அத்தியாயம்  –  11
 
சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..
 
வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம் தன் கர்சிப்பை எடுத்து நீட்ட அதை வாங்க தயங்கினாலும் தன்னை அறியாமல்  அவன் கை நீண்டிருந்தது.. தன் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்தவனுக்குள் அந்த கர்சிப்பில் இருந்த டியோவின் மனம் உள்சென்றது..
 
ஆங்காங்கே நின்று பள்ளி ஆசிரியர்களும் மற்ற ஊழியர்களும் அவர்களை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. இவர்களுக்கு திருமணம் ஆனவிசயம் யாருக்கும் தெரியாது..
 
 அன்று அனைவரின் எதிரிலும் கௌசிக்கை அடித்ததால் அவளை கண்டு அனைவருக்கும் பயம்… அதிலிருந்து  அனைவரும் இரண்டு மடங்கு கவனத்தோடு வேலைப்பார்த்தார்கள் என்றே சொல்லலாம்.. இப்பள்ளியில் அவர்களுக்கு சலுகைகள் அதிகம்.. சம்பளமும் மற்ற தனியார் பள்ளிகளை விட கூடுதல்.. அதை கெடுத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை..
 
ஆனால் ரமலியை இதுபோல சாதாரணமாக யாரோடும் இவ்வளவு இலகுவாக பேசிப் பார்த்ததில்லை.. எப்போதும் முகத்தில் ஒரு கம்பீரமும் யாரும் எளிதில் அணுகமுடியாத இறுக்கமும் இருக்கும்..
 
சரணோடு சேர்ந்து நடந்தவள் தன்னை சுற்றிப்பார்த்து,” இங்க நிறைய கேம்ஸ் விளையாடுறாங்க நீங்க ஏன் கபடிக்கிட்ட மட்டும் போய் சொல்லிக் கொடுத்திங்க..??” அவனும் தன்னை சுற்றி பார்க்க புட்பால், கிரிக்கெட் ,கோகோ என மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..
 
சற்று நின்று யோசித்தவன் ஆமா நாம வரும்போது எல்லார் விளையாடினதையும் தானே பார்த்தோம்.. ஆனா நம்ம கால் கபடி விளையாடுற இடத்துக்கு மட்டும்தானே போச்சு..
 
தெரியல எனக்கு அங்கதான் போகனும்னு தோனுச்சு..??” அவனும் தன்னுள் யோசனையோடுதான் வந்தான்.. தலைமுனுமுனுவென வலிக்க ஆரம்பிக்க தலையை பிடித்தவனிடம்
 
,ரொம்ப யோசிக்காதிங்க.. நினைவு சீக்கிரமே திரும்பும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. நீங்களே கண்டதையும் யோசிக்க வேண்டாம்.. 
 
ரமலிக்கு டாக்டர் அன்று சொன்னது நினைவுக்கு வந்தது.. இவரோட வாழ்க்கையில இவருக்கு ரொம்ப பிடிச்சது, ரசிச்சது, இல்ல நேசிச்சது ,அது தொழிலா இருக்கலாம், இல்ல விளையாட்டா இருக்கலாம், இல்லை அதை ஒத்த ஒரு நபராக்கூட இருக்கலாம் அதுபோல எதாவது ஒன்னப் பார்த்தா அவரை அறியாம அவர் அந்த வேலையையோ இல்ல அந்த தொழிலையோ செய்ய ஆரம்பிச்சிருவாரு.. அதுதான் அவரோட பழைய நியாபகம் திரும்புறதுக்கான முதல் அறிகுறின்னு வைச்சுக்கோங்க.. அப்படி ஏதாவது நினைவு வந்தா அதுக்கப்பறம் சீக்கிரமே அவருக்கு பழைய நினைவு வந்திரும்..
 
ரமலிக்கு ஒருவேளை இவரு கபடி கோச்சா இருந்திருப்பாரோ, இல்ல PT மாஸ்டரா, அப்படி PT மாஸ்டர்னா ஏன் மத்த விளையாட்டு பக்கம் கவனம் போகலை.. அவனைவிட அவள்தான் அவனை பற்றி அதிகம் யோசித்து வந்தாள்.. இருவரும் ஆபிஸ் ரூமிற்குள் நுழைந்தவர்கள் அவனுக்கு காப்பி கொண்டுவந்து கொடுக்க சொல்லியவள் அடுத்து ஸ்டாப்மீட்டிற்கு ஏற்பாடு செய்ய சொன்னாள்..
 
அந்த பள்ளியின் நிர்வாகத்தை பற்றி அனைத்தையும் சொன்னவள் அரைமணி நேரம் கழித்து இருவரும் அந்த ஹாலுக்குள் நுழைய அதுவரை சலசலவென பேசிக் கொண்டிருந்தவர்கள் கப்சிப் என அடங்க அவனை முதலில் அமரச் சொன்னவள் பிறகு அவன் அருகில் அமர்ந்தாள்..
 
அனைவரும் இருவரையும் வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்க முதலில் சாதாரணமாக பேச்சை துவங்கியவள் அடுத்து சரணை தன் கணவன் என அறிமுகம் செய்தாள்.. அனைவரின் முகத்திலும் ஒரு ஆச்சர்யம், வியப்பு. இந்த பொண்ணு வெளிநாட்டுலயே தங்கி படிச்ச பொண்ணு அவர பார்த்தா வேட்டி சட்டை போட்டு கிராமம் மாதிரி இருக்கு ரெண்டுபேரும் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. மனதிற்குள் ஓடினாலும் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை..
 
அம்மன் கோவிலுக்கு முன்னால் காவல்காத்து நிற்கும் ஐயனாரை போல் தெரிந்தவனை பார்த்தவர்களுக்கு எதிர் எதிர்துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்னு சொல்வாங்க.. அதான் ரெண்டுபேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கும் போல..
 
ரமலி இனிமே இவங்கதான் நம்ம ஸ்கூலோட கரஸ்பானென்ட்.. என்னோட பொறுப்பை நான் இவங்ககிட்ட ஒப்படைக்கிறேன்.. சரணுக்கே இது புதுவிசயம்தான்.. அவளிடம் மறுக்க தலையாட்ட போனவனை கண்களால் தடுத்தவள் அடுத்து ஸ்கூல என்ன மாற்றமோ  இல்ல தேவையோ நீங்க இவங்கிட்டத்தான் வரணும்.. இப்போதுதான் ரமலிக்கு குற்றவுணர்ச்சி சற்று குறைந்தாற் போல தெரிந்தது..
 
அடுத்து சரணை பேச சொன்னவள் அவனுக்கு சுதந்திரம் கொடுத்து ஆபிஸ் அறைக்குள் நுழைய சரணும் தான் சுற்றிப்பார்த்த வகையில் கண்ணுக்கு தெரிந்த மாணவர்களுக்கு தேவையென பட்ட சிலசில மாற்றங்களை சொன்னவன் விளையாட்டில் அதிக மாற்றங்களை சொன்னான்.. அனைவரோடும் எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக பேசுபவனை கண்டு அவர்களுக்கும் மகிழ்ச்சி..
 
இந்த பத்துநாட்களாக வெற்றிக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.. கோபமாக வந்தவன் வந்த நாளில் இருந்து சக்தியை பற்றி எதாவது தெரிந்ததா என தெரிந்து கொள்வதற்காக தந்தைக்கு போன் செய்ய ரிங் போனாலும் அவர் போனை அட்டென் செய்யவில்லை.. அவர் மட்டும் இல்லை சக்தியின் நண்பர்கள், அக்கம் பக்கத்தில் இருந்தவர் என தன் போனில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் போன் செய்து போன் செய்து ஓய்ந்து போய்விட்டான்.. சிலர் போனை அட்டென்ட் செய்து காதில் வைப்பவர்கள் வெற்றி என்னும் தன் பேரை கேட்கவும் கட்செய்து விடுகிறார்கள்..
 
வெற்றிக்கு தன் தந்தைமேல் இன்னும் இன்னும் கோபம்தான் அதிகரித்தது.. இதெல்லாம் இந்த அப்பாவோட வேலையாத்தானிருக்கும்.. இப்படி செஞ்சா மட்டும் நான் ஊருக்கு வந்திருவனா.. இந்த அப்பத்தா அடிக்கடி பக்கத்துவீட்டுலயிருந்து ரெண்டுநாளைக்கு ஒருதரம் போன்ல நம்மள தொல்லை பண்ணும். அதுவும் இப்ப நம்மள கண்டுக்கலையா. அவகிட்ட போன் இருக்கா இல்லையான்னு தெரியலையே.. மலரை நினைத்து பார்த்தவனுக்கு அவள் முகம் நினைவில் இல்லை ஏதோ வரிவடிவமாக அவள் மெலிந்த தேகம்தான் நினைவுக்கு வந்தது..
 
அப்பாவின்  அக்கவுண்டில் பணம் போட்டுவிட அவர் அதை தொடவே இல்லை.. எப்போதும் ஐந்தாம்தேதியே தன் சம்பளப்பணத்தின் முக்கால் வாசியை எடுத்து கொள்பவர் இப்போதும் இருபது தேதியானாலும் அதை தொடவே இல்லை.. இவனுக்கும் மனதிற்குள் உருத்த துவங்கியிருந்தது.. அண்ணனும் இல்லாம, இவங்க செலவுக்கு என்ன  பண்ணுவாங்க.. அவன் தந்தை அவனுக்கு பாடத்தை கற்றுத்தர துவங்கியிருந்தார்.. அந்த மாதமும் முடிந்து மறுமாதமும் பிறந்திருந்தது..
 
தன் போன் மணி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்த வெற்றியின் நண்பன் ராம்..ஹலோ…??”
 
யாருப்பா ராமா நான் வெற்றியோட அப்பா பேசுறேன்பா..
..
 அப்பா நல்லாயிருக்கிங்களா..
ம்ம் இருக்கேன்ப்பா..
 
ஸாரிப்பா அம்மா தவறுனத இவன் எங்களுக்கு தெரியப்படுத்தவே இல்லை.. அதான்பா வரமுடியாம போச்சு ..
 
பரவாயில்ல தம்பி அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி.. நீயென்ன நம்ம ஊருலயிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துலதான இருக்க ஊருக்கு வரும்போது இங்கன வந்திட்டு போ..”
 
கண்டிப்பா வருவேன்பா ..அப்பத்தா நல்லாயிருக்காங்களா..? என்னப்பா விசயம் வெற்றியோட போன் ஒர்க் பண்ணலையா அவன்கிட்ட தரவா..?”
 
இல்லப்பு நான் உன்கிட்டத்தான் பேசனும்.. உங்க மேலதிகாரியோட போன் நம்பர் கொஞ்சம் வேணுமேப்பு..?”
 
ஏப்பா என்ன விசயம்.? அவங்கக்கிட்ட அப்படியெல்லாம் நினைச்சநேரம் போன்ல பேச முடியாதேப்பா.. அதோட அவர் பிராஜக்ட் விசயா ஆஸ்திரேலியா போயிருக்காரு.. அந்த பிராஜக்ட்ல ஒர்க் பண்ணத்தான் நம்ம வெற்றியும் இந்த மாசக்கடைசியில போறான்..
 
அது தெரியும்ப்பா ..நீ முதல்ல எங்க ஊர் வாத்தியாரய்யாக்கிட்ட கொஞ்சம் பேசு..?” போனை அவரிடம் கொடுக்க அவர் சில விசயங்களை கேட்டபடி அவர்களின் ஈமெயில் ஐடியை குறித்துக் கொண்டு போனை மீண்டும் ராமலிங்கத்திடமே கொடுத்தார்..
 
அப்பு ராமு நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க.. உன் சினேகிதன் அயல்நாட்டுக்கெல்லாம் போக மாட்டான்.. நானும் விடமாட்டேன்.. நீயும் என்கிட்ட பேசினேன்னு எக்காரணம்கொண்டும் அவன்கிட்டயோ இல்ல மத்தவங்ககிட்டயும் சொல்லவேண்டாம் ..அப்புறம் உங்களுக்குள்ள விரிசல் வந்திரும்.. நீ முடிஞ்சா ஒரு எட்டு எங்கள பார்க்க வந்திட்டு போ … உனக்கே எல்லா விவரமும் தெரியும்.. சொல்லியபடி போனை வைக்க ராமிற்கு வயிற்றில் புளியை கரைத்தது..
 
ஆஹா நம்மகிட்டயே இப்படி போட்டு வாங்கிட்டாரே.. இது தெரியாம ஈமெயில் ஐடிய வேற கொடுத்திட்டனே.. இதால ஒருவேளை வெற்றி ஆஸ்திரேலியா போக முடியாம போச்சு அதுக்கு நானும் ஒடந்தைன்னு தெரிஞ்சிச்சு நம்மள கொன்னுருவானே.. இப்ப என்ன பண்ணுறது..?” சற்று யோசித்தவன் நாம ஒன்னுமே தெரியாதவன் மாதிரி இருந்துக்க வேண்டியதுதான்..
 

Advertisement