Advertisement

இணை தேடும் இதயங்கள்
                 அத்தியாயம்  –  10
 
சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றி கொள்ள அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்காக நடந்தது..
 
வக்கீலின் மனைவி எல்லா சடங்கையும் முன்னின்று நடத்த கடைசியில் சக்தியை ரமலியின் காலில் மிஞ்சியை அணிவிக்கச் சொன்னார்கள்.. நல்ல சிவந்த நிறத்தில் பச்சை நரம்போடிய அவள் காலின் மென்மையான விரல்களை பிடித்தவன் மெதுவாக மிஞ்சியை அணிவிக்க, அலைஅலையான கேசம் காற்றில் பரவ தன்காலடியில் குனிந்திருக்கும் சரணை பார்க்கும் போது ரமலிக்கு ஒருகணம் உள்ளத்திற்குள் பயவுணர்வு வந்தது..
 
அத்தை குடும்பத்திற்காக ரமலி முகத்தை சிரித்தபடி வைத்திருந்தாலும் இந்த கல்யாணம் கடைசிவரைக்கும் நீடிக்குமா..?? சரணுக்கு நினைவு திரும்பும் போது அதை எப்படி எதிர் கொள்ள போகிறோம்.. கண்டிப்பாக அவனின் மறுமுகத்தை பார்க்க நேரிடும் என்பதை உணர்ந்தவள் ஒருகணம் கண்மூடி தாத்தா பாட்டியை நினைத்து தன் மனதை பழையநிலைக்கு கொண்டு வந்தாள்..
 
அடுத்து தன்தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள் வக்கீலிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள்..
 
அதற்குள் சுயநினைவுக்கு வந்திருந்த இரு அத்தை குடும்பமும் ரகளையில் ஈடுபட, ஆளாளுக்கு கத்த அந்த இடம் ஒருநிமிடத்தில் சந்தைக்கடை போலானது.. அனைவரையும் ஒரு முறை முறைத்தவள் வக்கீலிடம் ஏதோ சொல்லிவிட்டு தாயையும் சரணையும் அழைத்துக் கொண்டு கோவிலைவிட்டு கிளம்பியவள் தன் காரில் ஏறினாள்..
 
தங்களை கோவிலுக்கு அழைத்து அவமானபடுத்திய அண்ணன் மகளை குரோதத்துடன் முறைத்தவர்கள் அவள் ஒன்றுமே பேசாமல் கிளம்பவும் வக்கீலை பிடித்துக் கொண்டார்கள்..அவரோடு சண்டையிட அவரோ ,
 
இந்தா பாருங்க அந்த பொண்ணு ஒன்னும் மைனர் இல்ல.. ரமலிக்கு வயசு 23 ஆச்சு.. அதுக்கு சுயமா முடிவெடுக்கிற உரிமை இருக்கு..அதோட அவங்க அப்பா சொன்ன கெடுநாள் இன்னைக்குத்தான் முடியிது.. இதுக்கும் மேல உங்களால ஒன்னும் பண்ண முடியாது..
 
இனி சொத்து முழுசும் அந்த பொண்ணுக்கும் அவளோட புருசனுக்கும்தான் சொந்தம் .. என்கிட்ட இந்த மாதிரி சத்தம் போடுற வேலையெல்லாம் வைச்சிக்காதிங்க.. எதுபேசறதாயிருந்தாலும் ரமலி வீட்டுல போய் அவங்கள நேரா பார்த்து பேசிக்கோங்க..மீறி என்னை பேசுறதா இருந்தா உங்கமேலதான் கோர்ட்டுல கேஸ் போடுவேன் பார்த்துக்கோங்க..” அவர்களை தன் தொனியில் மிரட்டியவர் மறுநிமிடம் அவர்களை கண்டு கொள்ளாமல் தன் குடும்பத்தினரிடம் ஏதோ பேச துவங்கினார்..
 
கோர்ட், கேஸ் எனவும் சற்று அமைதியானவர்கள் ரமலியை ஒரு கைபார்க்காமல் விடக்கூடாது என்ற முடிவோடு அவள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.. டிரைவர் அருகில் சரண் அமரப்போக அவரை தடுத்த ரேணுகா,
 
 தம்பி நீங்க ரமலி பக்கத்தில உட்காருங்க.. ரெண்டுபேரும் ஒன்னாத்தான் உட்கார்ந்து வரணும்.. அவனை பின்னால் அமரச் சொல்லி அவர் முன்னால் அமர்ந்து கொண்டார்..
 
கார் அவர்கள் வீட்டை நோக்கிச் செல்ல மெல்ல சரண் புறம் திரும்பிய ரமலி மெதுவான குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி ,”கோவில்ல பார்த்தது என்னோட ரெண்டு அத்தை குடும்பம் நம்ம கல்யாணம் அவசரமா நடந்ததுக்கு அவங்களும் ஒரு காரணம்..” தன் அப்பாவின் உயிலை பற்றி சொல்ல ஒரு நிமிடம் சீட்டில் கண்மூடி அமர்ந்திருந்தவன்,
 
 அவங்க பசங்களே பார்க்க நல்லாத்தானே இருக்காங்க..!! அவங்கள்ல இருந்து ஒரு ஆள நீங்க கட்டியிருக்கலாம்தானே..”
 
அவர்களின் பழக்கவழக்கங்களை சொன்னவள்,” எனக்கு அவங்கள பிடிக்கலை..
 
நான் ஹாஸ்பிட்டல்ல சேர்றதுக்கு முன்னாடி நாம எத்தனதரம் மீட் பண்ணியிருக்கோம்..??”
 
ஆஹா ஆரம்பிச்சிட்டானா இவனோட கேள்வி செக்ஷ்சன..!! ஐயோ அங்கிள் வேற இல்லையே? நானே உண்மையா இருக்கலாம்னு நினைச்சாக்கூட இவன் நம்மள பொய்காரியா ஆக்காம விடமாட்டான் போல, அவன் தன் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்திருக்க , “ ம்ம் ரெண்டுதரம்..?”
 
ஓஓஓ ஒருவேளை நானும் அவங்கள மாதிரி பழக்க வழக்கத்தோட இருந்திருந்தா.. அத உங்ககிட்ட இருந்து மறைச்சிருந்தா என்ன பண்ணுவிங்க…?”
 
அவன் கேள்வி அவள் மனதை துளைத்தது.. உண்மைதானே ஒருவேளை அடிபடுறதுக்கு முன்னாடி இவன் அப்படி இருந்திருந்தா என்ன பண்ணுறது.. இல்லையே இவன பார்க்கும்போது நம்ம மனசுக்கு அப்படி தோனலையே..
 
என்ன ஒன்னும் சொல்லாம இருக்கிங்க..?”
 
இல்ல.. இல்ல உங்கள பத்தி அங்கிள் கேரண்டி கொடுத்ததாலதான் நான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்..?”
 
அப்ப இந்த கல்யாணம் பரஸ்பர அன்பினாலயோ இல்ல காதலாலயோ, புரிதலாலயோ நாம பண்ணல ஒரு ஒப்பந்தம் மாதிரிதான் பண்ணியிருக்கோம்..சரிதானே..??”
 
ஆமா அவள் தலையை ஆட்ட,
 
 உங்களுக்கு உங்க சொத்து.. எனக்குன்னு நான் என்ன கேட்டிருந்தேன்..?”
உங்களுக்கா… சற்று யோசித்தவள்.. வே..வேலை கேட்டிருந்திங்க..
 
அவனுக்கு ஏனோ அவள் பதிலில் சிரிப்பு வந்திருந்தது.. இதை நம்பும்படி இல்லை.. கண்டிப்பா இவ நம்மகிட்ட என்னமோ மறைக்கிறா.. வேலைக்காக அதுவும் ஒரு பொண்ணுகிட்ட நாம இந்த அளவுக்கு நடிக்க ஒத்துக்கிட்டமா.. கண்டிப்பா இருக்காது.. என்னன்னு நாமளே பார்த்துக்கலாம் அதோடு பேச்சை முடித்தவன் அவர்கள் போகும் வழியில் தன் கவனத்தை வைக்க இப்போதுதான் ரமலிக்கு மூச்சே வந்தது..என்னமா கேள்வி கேட்கிறான்..
 
அவள் மனதோ டீ ரமலி இவன் ஒரு வேளை வக்கீலோ என்னமோ சுயநினைவு இல்லாம இருக்கப்பவே இவ்வளவு கேள்வி கேட்கிறான்.. சுயநினைவு வந்திச்சு ஜெயில்தான், களிதான்.. நம்மள நல்லா வைச்சு செய்யப்போறான்..
 
ரேணுகாவிற்கு மகளும் மருமகனும் மெல்லிய குரலில் பேசியது கேட்காவிட்டாலும் இருவரும் அன்னியோன்யமாக இருப்பதாக தோன்றியதால் உள்ளுக்குள் சந்தோசமாக வந்தார்..
 
கார் அந்த பெரிய பங்களாவின் போர்டிக்கோவிற்குள் நுழைய வேலைக்காரர்கள் ஆரத்தி தட்டோடு தயாராகவே நின்றிருந்தார்கள்..இருவரையும் அருகருகே நிற்கவைத்து ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அனுப்ப சக்தியின் மனதோ மீண்டும தான் ஒரு பொருத்தமில்லா இடத்திற்குள் நுழைவதாக தோன்ற ஆரம்பித்திருந்தது..
 
இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று ரேணுகா விளக்கை பற்றவைத்து சாமி கும்பிட சொன்னவர் அடுத்து தாத்தா பாட்டியையும் கும்பிட சொல்லி தன் கணவர் படத்தின் அருகே செல்ல ரமலியோ சக்தியின் கையை பிடித்து சோபாவிற்கு அழைத்து வந்திருந்தாள்.. அவளின் கோபம் அவள் கை அழுத்தத்திலே தெரிந்தது..
 
ரமலிம்மா… அப்பா…??” ரேணுகா இழுக்க,
 
அம்மா ..??”,என்று பல்லை கடித்தவளை பார்த்தவன்,
 இறந்தவங்க மேல ஏன் இன்னும் பகையை வளர்த்துக்கிட்டு இருக்க.. எப்படியிருந்தாலும் அவர்தானே உங்க அப்பா.. அது மாறாதுதானே.. வா ..”என்று மீண்டும் அந்த படத்தின் அருகே அவளை அழைத்து சென்றவன் இருநிமிடம் கண்ணை மூடி நிற்க ரமலி வேறெங்கோ பார்வையை செலுத்தியிருந்தாள்..
 
ரேணுகாவிற்கு மருமகனின் இந்த பொறுமையான பேச்சும், ரமலியை படத்தின் அருகே அழைத்து சென்று வணங்கியதும் அவன் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.. என்னவோ அவர் மனதிற்கு தன்  கணவனை மருமகன் தவறாக நினைக்கக்கூடாது என்றே தோன்றிற்று..
 
இருவரையும் சோபாவில் அமர சொன்னவர் கிச்சனுக்கு வேகமாக செல்ல,” அம்மா மெதுவா போங்க இப்பத்தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்கிங்க..
 
மகள் சொன்னதை காதில் வாங்காதவர் மனநிறைவோடு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார் .. அதிகாலை முகூர்த்தம் என்பதால் விடியற்காலையிலேயே கோவிலுக்கு சென்றிருந்தார்கள்.. மணி இப்போதுதான் எட்டாகியது.. மாப்பிள்ளை சாப்பிடுறிங்களா..?”
 
இல்லத்த கொஞ்சம் நேரமாகட்டும்.. சும்மா என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க.. மாப்பிள்ளையெல்லாம் வேண்டாம்..
 
அது சரிவராது மாப்பிள்ளை வேணும்னா தம்பின்னு சொல்லவா..
 
தலையாட்டியவனை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தாள் .. தன் தாயை இத்தனை வருடங்களில் இவ்வளவு உற்சாகமாக இப்போதுதான் பார்க்கிறாள்.. இவன்கிட்ட என்னமோ ஒரு மேஜிக் இருக்கு போல எல்லாரையும் பார்த்தவுடனயே அவங்க பக்கம் இழுக்கிறான்..
 
முதல்ல வக்கீல் ,இப்ப அம்மா அப்ப உன்னை மனம் கேட்ட கேள்விக்கு.. ச்சே ச்சே நாம பார்க்காதவங்களா.. இவனவிட எவ்வளவு அழகானக்கூட பார்த்திருக்கேன்..தன் யோசனையில் இருந்தவளை தாயின் குரல் குறுக்கிட்டது..
 
என்ன ரமலி பேசாம உட்கார்ந்திருக்க.. தம்பிக்கு வீட்டை சுத்தி காட்டு அப்படியே உங்க ரூமை காட்டினா தம்பி இந்த டிரஸ மாத்திட்டு வரும் தானே.. ?”
 
ரமலியோ அம்மா நைட்டெல்லாம் என்னமா கேள்வி கேட்டு நம்மள தொலைச்சு கட்டினாங்க.. இப்ப என்னன்னா வார்த்தைக்கு வார்த்தை தம்பி தம்பின்னு சொல்லிட்டு இருக்காங்க.. என்னவோ நேற்று இரவு முழுவதும் ரமலி ஏதோ பொய் சொல்கிறாள் வக்கீலும் அவளும் கூட்டுச் சேர்ந்து ஏதோ மாப்பிள்ளை என்று ஏப்ப சாப்பையா யாரையோ கூட்டிட்டு வரப்போறாங்களோ என்று பயந்து கொண்டிருந்தவர் சக்தியை பார்க்கவுமே அந்த பயம் தனக்கு தேவையில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.. வக்கீலை போலவே இவருக்கும் ரமலிக்கு இவர்தான் பொறுத்தமானவர் என்று தெரிந்தது..
 
வாங்க ..”என்ற அவனை அழைத்தபடி மாடிப்படியில் கால்வைக்க இரு அத்தை குடும்பமும் வீட்டிற்குள் நுழைந்தது.. அவர்கள் அனைவரும் ரேணுகாவை கோபமாக முறைத்தபடி அவரை நோக்கிச் செல்ல ரமலியும் அவர்களை நோக்கிச் சென்றாள்..
 
சக்தியும் மாடியேறாமல் சோபாவில் அமர்ந்தான்.. என்ன ரேணு எத்தனை நாளா  ஆத்தாளும் மகளும் எங்கள அசிங்கப்படுத்தனும்னு காத்திருந்திங்க..??” அண்ணன் மனைவி என்ற மரியாதைகூட இல்லாமல் அவரிடம் கோபத்தை காட்ட,
 
ஏன்த்தே கல்யாணம் பண்ணினது நான்.. அம்மாவ எதுக்கு கேள்வி கேட்கிறிங்க.. என்னப்பார்த்தா பயமா..??”
 
எங்களுக்கென்ன பயம் பொண்ணாயிருந்தா கேட்கலாம் அண்ணனுக்கு ஒரு பஜாரியில்ல பொண்ண பொறந்திருக்கு..??”
 
சக்தியோ நம்ம கண்ணுக்கு இவள பார்க்கும்போது ஒரு மகாராணி மாதிரிதான் இருக்கா.. அவங்களுக்கு பஜாரியா மாதிரி தெரியுதா யாருக்கு கண்ணுல கோளாறு…
 
ஹாஹாஹா என சத்தமாக சிரித்தவள் உங்க அண்ணனுக்கு பொறந்தா பஜாரியா பொறக்காம வேற யாருத்த பொறப்பா.. ஆனா இதே வாய்தானே நேத்துவரைக்கும் என்னை பாப்பா, மருமகளேன்னு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு … கன்னத்தில் கைவைத்து யோசித்தவள் ஒருவேளை அது யாராயிருக்கும்.. ??”
 
கோபத்தில் பல்லை கடித்தவர்கள் அதுவும் தாங்கள்தானென்று எப்படி ஒத்துக் கொள்வார்கள் ஒருவேளை நம்ம மகன்களை கட்டிக்க ஒத்துக்க மாட்டாளா என கண்ணே, மணியே, பாப்பா, செல்லம் என்றுதான் அழைப்பார்கள்.. இவள் இப்படி அனைத்தையும் கொட்டி கவிழ்த்து தங்கள் பக்கமே திருப்புவாள் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை..
 
பல்லை கடித்தபடி பேசாமல் இருக்க மாமாக்களோ,” எங்க பையன்களை விட இவன் எந்த வகையில உசத்தி..?” சக்தியை முறைத்தபடி சொல்ல,
 
தன் தாயின் கையை பிடித்து சோபாவில் அமரவைத்தவள் சக்தியின் அருகில் அமர்ந்து மரியாதை ரொம்ப முக்கியம் மாமா..!! என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க ஏன்னா நான் உங்க சொந்தம் ஆனா இவங்கள ஒரு வார்த்தை மரியாதை இல்லாம பேசக்கூடாது சொல்லிட்டேன்..
 
சக்தியோ அவள் மாமா மகன்களை வெட்டவா குத்தவா என்பது போல முறைத்துக் கொண்டிருந்தான்.. வந்தவர்களை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவளுடைய இரு அத்தைமகன்களின் பார்வையும் ரமலியை வக்கிரமாக எந்த இடத்தில் பெண்களை பார்க்ககூடாதோ அதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.. இருவர் முகத்தையும் ஒரே அடியில் உடைக்கலாமா என பார்த்துக் கொண்டிருக்க ரமலி தன் அருகில் அமரவும்தான் சற்று கோபம் குறைந்தது..
 
எங்க உங்க பசங்கள என் முகத்தை பார்த்து இந்த கேள்விய கேட்கச் சொல்லுங்க பார்ப்போம் ..?”அவர்களின் மகன்களை பார்த்து இந்த கேள்வியை கேட்க அதுவரை தங்கள் கைவிட்டு போன ரமலியின் அழகை வெறித்திருந்தவர்கள் டக்கென தலைகுனிந்தார்கள்இருவருக்கும் வெவ்வேறு சமயங்களில் அவளிடம் அடிவாங்கியது நியாபகத்திற்கு வந்தது..
 
ஒரு பொண்ணை வளைக்க துப்பில்ல தங்களின் மகன்களை முறைத்தவர்களை கண்டு கொள்ளாமல் மாடியேறியவள் வரும்போது கையில் ஒரு பைலோடு வந்தாள்.. அதை தன் மாமாக்களிடம் கொடுக்க படித்து பார்த்தவர்கள் உள்ளுக்குள் வெலவெலத்து போனார்கள்..
 
தங்கள் மாமனார் இறந்ததிலிருந்து மச்சினனை பொம்மையாக்கி அவர்கள் அபகரித்த சொத்துக்கள் மற்றும் கையாடல் செய்த பணத்தின் கணக்குகள் இம்மி அளவு குறையாமல் இருந்தது..
 
ரமலியை முறைத்து,” என்னமா பொய் சொல்றியா இதெல்லாம் பொய் எங்க மேல இப்படியெல்லாம் குற்றம் சுமத்தனும்னு எத்தனை நாள் காத்திருந்த..?”
 
மாமா இதெல்லாம் உண்மைன்னு உங்களுக்கு தெரியும் சத்தமா பேசுறதால எல்லாம் பொய்யாகிறாது.. அப்புறம் நான் போலிஸ்ன்னு போனா குடும்பத்தோட ஜெயில்ல களிதிங்கிற மாதிரி ஆகிரும் பார்த்துக்கோங்க..??”
 
23 வயசுதான் ஆகுது அதுக்குள்ள இந்த பொண்ணு நம்ம எல்லார் கண்ணுலயும் விரலவிட்டு ஆட்டுதே.. இந்த பொண்ண லேசா எடைப்போட்டது தப்போ.. என்ன செஞ்சிருவான்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டமோ.. இவங்க தாத்தா செத்ததிலயிருந்து கொஞ்சம் கொஞ்சமா திட்டம்போட்டுத்தானே இவ்வளவு சொத்தையும் பணத்தையும் ஆட்டய போட்டோம்.. இப்ப இத எப்படி கொடுக்கிறது.. இன்னும் சொத்து வேணும்னு நினைச்சா இப்ப இருக்கிறதும் போயிரும்போலவே..
 
வக்கீல் வீட்டிற்குள் நுழைய அவரை வரவேற்றவள் அவரிடமிருந்து வாங்கிய பத்திரத்தை அவர்களிடம் கொடுக்க அதில் அவர்கள் இதுவரை அபகரித்த சொத்து எதையும் திருப்பிதரவேண்டாம்.. ஆனால் இனி சொத்துக்காக எந்த பிரச்சனையும் செய்யமாட்டோம்.. அதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு தங்களால் எந்த ஆபத்தும் வராது என எழுதப்பட்டிருந்தது..
 
பல்லை பிடிங்கிய பாம்பின் நிலையில் இருந்தவர்கள் கையெழுத்து போடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து  அனைவரும் மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டிருந்தார்கள்.. அனைவரும் கிளம்ப வக்கீலோ,” ஏம்மா ரமலி உன்னோட மாமா குடும்பம் இதோட சும்மா இருப்பாங்கன்னா நினைக்கிற..??”
 
ரேணுகாவோ ஏண்ணா அதான் சொத்து எதையும் தரவேண்டாம்னு சொல்லிட்டமே ?? அப்புறமுமா தொல்லை பண்ணுவாங்க.. நம்ம ரமலி போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுத்து சொத்து பூராவும் வாங்கிகிட்டு அவங்கள ஜெயில்ல போடனுன்னு என்கூட சண்டை போட்டிச்சு .. நான்தான் அவங்களால எந்த தொந்தரவும் வரவேணாம்னு சொத்த கொடுக்க சொன்னேன்.. இன்னமுமா தொல்லை கொடுப்பாங்க..”
 
நீங்க எவ்வளவு நல்லது நினைச்சாலும் அவங்க இப்ப இருக்கிற சொத்தத்தான் அபகரிக்க பார்ப்பாங்க ரேணு.. பார்த்துக்கலாம் ..”
 
கண்டிப்பா சும்மா இருக்க மாட்டாங்க.. இவங்க செய்யாட்டாலும் வேற ஆளுங்கள தூண்டிவிடுவாங்க.. சமாளிப்போம் அங்கிள்.. இதோ நீங்களும் சரணும் இருக்கிங்க ஹெல்ப் பண்ண மாட்டிங்களா..
 
வக்கீல் உறுதி கொடுக்க சரணோ யோசனையில் இருந்தான்.. என்னாச்சு தம்பி..”
 
இல்ல உங்க அத்தை பசங்களோட பார்வையே சரியில்ல.. கொஞ்சம் கூடுதலாவே கவனமா இருந்துக்கோ..
 
ஆமா தம்பி அதான் எனக்கும் பயமாயிருக்கு.. இனி இந்த சொத்து உங்க ரெண்டு பேருக்கும்தானே எது செய்றதா இருந்தாலும் ரெண்டுபேரும் கலந்துபேசி முடிவு பண்ணுங்க .. ரெண்டுபேரும் போக்குவரத்துல ரொம்ப கவனமா இருந்துக்கோங்க..ரமலி மாப்பிள்ளைக்கு உங்க ரூமை காட்டு வேற டிரஸ் மாத்திட்டு வரட்டும்.. வக்கீலை பார்த்தவர் அண்ணா நீங்க வாங்க சாப்பிடலாம்..
 
இருவரும் ரமலியின் அறைக்குள் நுழைய,” உங்கம்மா சொல்றது சரி ரமலி கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..?”
 
ம்ம்ம் உங்களையும் தேவையில்லாத பிரச்சனையில மாட்டிவிட்டுட்டனோ நீங்களும் கொஞ்சம் பார்த்துக்கோங்க..??”
 
ச்சே ச்சே ஒரு பொண்ணாயிருந்து நீயே இவ்வளவு போராடுற.. அதுவும் உனக்கு உரிமையான சொத்துக்கு.. அவங்க முன்னாடியே ஏதாவது பேசியிருப்பேன்.. இருந்தாலும் அவங்க உன் அத்தை குடும்பம் அதான் எதுவும் பேச முடியல..?”
 
பரவாயில்ல விடுங்க..” அவள் அறையே பெரியதாகத்தான் இருந்தது.. அதிலிருந்து உள்ளே ஒரு ஆபிஸ் அறைபோல செல்ல அதுவும பெரிய அறையாக இருந்தது.. அங்கு அழைத்துச் சென்றவள் ,”இங்கதான் உங்களோட டிரஸ் எல்லாம் இருக்கு மாத்திட்டு வாங்க நான் அங்க வெயிட் பண்றேன்...அவள் வெளியில் வர அவனும் தன்னை தூய்மைப்படுத்தி சாதாரணமான வெள்ளை வேட்டி சட்டையில் வர அவளும் சாதாரண சுடிதாருக்கு மாறியிருந்தாள்..
 
அவ்வளவு டிரஸ் இருக்க அவன் இயல்பு போலவே வேட்டி சட்டையைத்தான் அணிந்திருந்தான்.. அவனை பார்த்தவுடன் ரமலிக்கும் இதுதான் தோன்றியது.. இவனுக்குன்னு வாங்கின கோர்ட் சூட்டெல்லாம் வேஸ்டா.. தேவையில்லாம எல்லாத்தையும் இவர கேட்காம வாங்கி வைச்சிட்டமோ.. இயல்பாக வேட்டியை மடித்து கட்டியபடி வந்தவனை அவளறியாமல் ரசித்துப்பார்த்தாள்..
 
இருவரும் ஒன்றாக மாடியிருந்து இறங்கி வந்தவர்கள் மூவரும சேர்ந்து சாப்பிட அன்று  அவளை வெளியில் செல்ல வேண்டாம் என சொல்லியிருக்க  மூவரும் பேசியபடிதான் அன்றைய பொழுது கழிந்தது.. சரணுக்கு ரேணுகாவின் அன்பு, பாசம், அக்கறை பார்த்து அவர்மேல் தனி பாசத்தை தோற்றுவித்திருந்தது.. இதுவரை தன் மகளோடு அதிக நேரத்தை செலவழிக்காமல் இருந்த ரேணுகாவோ மகள் மருமகனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்..
 
சரணுக்குமே ரமலியிடம் பேசுவதைவிட ரேணுகாவிடம் பேசுவது ஈஸியாக இருந்தது இருவரும் தாய் மகன் போல பேசிக் கொண்டிருந்தார்கள்.. சரணுக்குமே இவர் வயதில் தனக்கொரு தாயோ இல்லை வேறு உறவு இருக்குதோ என்ற தோன்ற ஆரம்பித்திருந்தது..
 
விளையாட்டு போல திருமணம் முடிந்து ஒருவாரம் சென்றிருக்க அவர்களின் தொழில்கள் நடக்கும் எல்லா இடத்தையும் சுற்றி காட்டியிருந்தவள் , இன்று அவர்களின் பள்ளிக்கு அழைத்து போவதாக சொல்லியிருக்க இருவரும் அவரவர் அறையில் கிளம்பி கொண்டிருந்தனர்.. ரேணுகாவின் முன் அருகில் அமர்வது, இயல்பு போல எப்போதாவது கைகளை பிடித்து கொள்பவர்கள் தனிமையில் தனிதனி அறையில்தான் தங்கினர்.. ரமலி முதலிலேயே இப்படிதான் முடிவு செய்திருந்தாள்.. சரணுக்கும் என்னவோ தன் பழைய வாழ்க்கை தெரியாமல் ரமலியோடு ஒத்திருக்க முடியவில்லை..
 
சரண் காரோட்ட அவனுக்கு பள்ளிக்கு வழி சொல்லியவள் பள்ளிக்குள் நுழைய உள்ளே அழைத்தவளிடம் மறுத்துவிட்டு தான் பள்ளியை சுற்றிப்பார்த்துவிட்டு வருவதாக சொன்னவன் எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தான்.. அரைமணி நேரமாகியும் சரணை காணாமல் அவனே தேடி சென்றவள் ஒவ்வொரு கிளாஸ்ரூமாக பார்வையிட காணாமல் கடைசியில் பிளேகிரண்டில் ஸ்டுடண்ஸோடு விளையாடுவதை பார்த்து அவர்களை நோக்கி வந்தாள்..
 
 அவன் அவர்களோடு கபடி விளையாடிக் கொண்டிருந்தான்.. விளையாடிக் கொண்டே அந்த விளையாட்டின் ரூல்ஸையும் அதன் நுணுக்கங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவனை ஆச்சர்யமாக பார்த்தபடி அங்கேயே நின்றாள்..
 
 
                                                                    இனி……………….?????

Advertisement