Advertisement

“இப்போ என்ன செய்யிறது ஷ்யாம்…?” என்று  தன் மச்சினனிடம் கேட்டார்.
“அது தான் எனக்கும் தெரியல அண்ணி…தருணிடம் பேச வேண்டும்..அவன் ஷேர் எல்லாம் அப்படியே தான் இருக்கு..ஆனால் அதில் வந்த லாபம்…” என்று தன் பேச்சை  இழுத்தி நிறுத்தினான் ஷ்யாம்.
அப்போது தன் அறையில் இருந்து அங்கு வந்த தருண் வர்மா… “ அதன் லாபம் எல்லாம் நீங்க தானே கண்ட மேனிக்கி இறச்சி விட்டு இருக்கிங்க… அப்போ  இந்த  நோட்டிஸ் வக்கீலுக்கு உண்டான பதிலை நீங்களே அனுப்புங்க.” என்று சொன்னான்.
அதற்க்கு ஷ்யாமால் வாய் திறந்து பேச முடியவில்லை. சிக்கந்தரின் தந்தை வர்மா இருந்த வரை தொழில் ஏறுமுகத்தில் மட்டும் தான் இருந்தது. அவர் மறைவுக்கு பின்  தொழிலில் இறக்கம் வரவில்லை என்றாலும், மற்ற நிறுவனம் அடுத்து என்ன என்று பார்த்து முன்னேறிக் கொண்டு இருக்க…
வர்மா நிறுவனம் மட்டும் அப்படியே இருந்தது. ஆனால் செலவு கேட்க வர்மா இல்லாததால் பணம் கண்ட மேனிக்கு போக…லாபத்தை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு செலவு செய்யாது,  சொந்த செலவுக்கு செய்ததால்…நிறுவனத்தின் வளர்ச்சி அப்படியே தேங்கி நின்று விட்டது.
விளைவு அடுத்து தங்கள் நிறுவன வளர்ச்சிக்கு ஏத்சவது செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்…அதன் எதிரொலியாக தான் அந்த கருணை கொலை..பின் அந்த புது கார் லான்ச்…
அதை அவர்கள் எண்ணப்படி செய்தும் முடித்து இருப்பார்கள். குறுக்கே கிஷோர் வராமல் இருந்து இருந்தால்…இப்போது முதலுக்கே மோசம் போல் சிக்கந்தர் வக்கீல் நோட்டிஸ் விடவும் குடும்பத்திற்க்குள் இரண்டு பட்டு நிற்க்கும் சூழ்நிலையில் இருந்தனர்.
மும்பையில்…
கிஷோர் சிக்கந்தரிடம்… “என் பிரண்டோட தங்கை இருக்கா..நாளைக்கு போய் பார்க்கலாமா…?” என்று கேட்டதும், சிக்கந்தர்  எந்த மறுப்பும் சொல்லாது…
“ம் பார்க்கலாம் ஜீ.” என்று சொல்லி விட்டான்.
சிக்கந்தர் வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்துக் கொண்டவனாய்…  ஒரு பக்கம் தன் தொழிலை பார்க்க நினைத்தாலும், மறுப்பக்கம் தனக்குண்டான குடும்பத்தை உருவாக்க நினைத்தான்.
அதுவும் சித்தார்த்தை பார்க்கும் போது அந்த எண்ணம் வலுவானது. அதுவும் சிக்கந்தர்  சித்தார்த்தை பிறந்த குழந்தையாக கையில் வாங்கியது.
பின் தன் நிச்சயத்துக்கு சென்னை சென்று விபத்தாகி…இதோ நீண்ட நெடிட வருடத்திற்க்கு பின் சித்தார்த்தை பார்க்க…தனக்கும் திருமணம் முடிந்து இருந்தால்..
குறைந்தது பத்து வயதில் ஒரு மகளோ…மகனோ இருந்து இருப்பான்  தானே… கோமாவில் இருந்து எழுந்த உடன் தெரியாத அவன் இழப்பு எல்லாம் நாட்கள் செல்ல செல்ல…
உறவுகளை ஒருவர் ஒருவரை பார்க்க பார்க்க…அதுவும் மும்பையில் ஆறு வருடங்கள் இருந்தவன்.  அங்கும் அவனுக்கு ஒரு  சில நட்புக்கள் இருந்தனர்.
தொழில் பார்த்து மீதம் இருக்கும் நேரத்தை தன் நட்பு வட்டத்தை நாடி சென்றான். அங்கு தன் வயதை  ஒற்றவர்கள்  மனைவி குழந்தைகளோடு இருப்பதை பார்த்து மனதில் தன்னால் ஏக்கம் வரலாயிற்று.
அந்த விபத்து நடக்காமல் இருந்து இருந்தால், தனக்கும் ஒரு குடும்பம் இருந்து இருக்கும் என்று நினைத்தான். எப்போதும் தன் மனதில் நினைத்ததை தன் ஜீயிடம்  சொல்லி விடுபவன்…இதை மட்டும் சொல்லவில்லை. ஏனோ சொல்ல தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு நாள் சித்தார் பிறந்த நாளில் அனைவரையும் அழக்கவில்லை என்றாலும், சிக்கந்தரின் சோக முகத்தை மாற்ற..சிக்கந்தரின் நட்புக்கு அழைப்பு விடுத்து இருந்தான் அவன் ஜீ கிஷோர்.
அன்று  சிக்கந்தரின் நண்பன் ஒருவன்  தன் குடும்பத்தோடு வந்தவன்  தன் பெண்  மீது கை போட்டுக் கொண்டு சிக்கந்தரிடம் … “ புதுசா  கார் லான்ச் செய்ய போறதா கேள்வி பட்டேன். அமொண்ட் ரொம்ப பெரியது போல…” என்று தன் பேச்சை  இழுத்து நிறுத்திய அந்த நண்பன்.
பின் தன் தாடையை தடவிய வாறே… “ நீ இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்குடா சேர்த்து வைக்க போற..உனக்கு  என்ன குடும்பமா இருக்கு…?” என்று சொன்னவன்..
“தோ பார்..பதிமூன்று வருடத்தை படுத்து வீண் ஆக்கிட்ட…இப்போ தொழிலை பார்த்து வீண் ஆக்காதே… விட்டதை பிடிப்பது போல…அதுக்குன்னு நிறைய பெண்கள் இருக்காங்க… என்ன நான் சொல்வது .” என்று  கண் சிமிட்டி அந்த நண்பன் சொன்ன பேச்சை அவன் தோள் மீது கை போட்டுக் கொண்டு இருந்த அவனின் எட்டு வயது குழந்தை மட்டும் அல்லாது, விருந்தினரை கவனிக்க என்று சுற்றிக் கொண்டு இருந்த  கிஷோரின் காதிலும்  அப்பேச்சு விழுந்தது.
“பார்த்துப்பா உன் அறிவுரையை சிக்கந்தருக்கு பதில் உன் பெண் பாலோ செய்ய  போறா…” என்று சொன்ன கிஷோரின் மீது சிக்கந்தரின் நண்பனுக்கு  கோபம் கோபமாய் வந்தது.
ஆனால் ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்தான். இப்போது மும்பையில் கிஷோரின் கை தான்  ஒங்கி இருக்கிறது.
இப்போது சிக்கந்தரும் சேர்ந்துக் கொண்டான்..இனி அவர்களின்  வளர்ச்சி அசுர வளர்ச்சியாக தான் இருக்கும் என்று அறிந்து தான்… அதன் பொறாமை எதிரொலியாய்..சிக்கந்தரின் கவனத்தை சிதறடிக்க இது போல் பேசியது.
ஆனால்  கிஷோர் கேட்டு இப்படி சொன்னதும் .. “என்ன பேச்சு…?” என்பது போல் அந்த நண்பன் கிஷோரை எதிர்த்து பேசவில்லை என்றாலும், தன் அதிர்ருப்தியை பார்வையில் காட்டினான்.
நான் சொன்னது உண்மை தான் என்பது போல் கிஷோர் சிக்கந்தரின் நண்பனிடம் பார்வையில் உன் மகளை பார் என்று சொன்னதும்… தன் தோளுக்கு கீய் தன் வயிற்றுப்பகுதியில்  முகம் புதைத்து இருந்த அவன் மகள்…
அவன் பார்க்கும் போது நிமிர்ந்து தன் தந்தையை பார்த்துக் கொண்டு இருந்தாள் அக்குழந்தை. தன் தந்தை தன்னை பார்த்ததும்… அவள் மனதில் எழுந்த சந்தேகமான…. 
“ டாட் அதுக்கு உண்டான பெண் என்றால் யார் டாட்…?” என்று கேட்டு அந்த தந்தையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள்.
உடனே சிக்கந்தர் அக்குழந்தையை தன்னிடம் இழுத்துக் கொண்டவனாய்… “நாங்க எங்க ஆபிசுக்கு   வேலையில் சேர்க்க வேண்டிய பெண்கள் பத்தி பேசிட்டு இருக்கோம் செல்லம்.இது பெரியவங்க பேச்சு…உனக்கு ரொம்ப  போர் அடிக்கும்.” என்று சொன்னவன்..
தன்  நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்த சித்தார்த்தை அழைத்தவன்… “இவளுக்கு ரொம்ப பேர் அடிக்குதுடா…உன் விழாவுக்கு வந்துட்டு யாருக்காவது போர் அடிக்கலாமா…?” என்று சிக்கந்தர் கேட்டதும்..
அதற்க்கு பதிலாய் சித்தார்த்… “நான் இவள என் பிரன்சுங்க கிட்ட அழச்சிட்டு போறேன்  ஹீரோ…” என்று சொல்லி அந்த சின்ன பெண்ணின் கை பற்றியவனாய் தன் நட்பு வட்டத்திற்க்குள் அப்பெண்ணையும் சேர்த்துக்  கொண்டான்.
“நாம் பேசும் போது பார்த்து பேசனும்.. உன் பேச்சு என்னை மட்டும் இல்ல உன் பெண்ணையும் திசை திருப்ப கூடும்.” என்று  சிக்கந்தர்  இப்படி சொன்னான் என்றால்…
கிஷோர்… “சித்தார்த்துக்கு இது வரை திருமணம் ஆகவில்லை.ஆனால் இனியும் ஆகாது என்று இல்லையே… நீங்க சொன்னது  போல் பெண்களை தேடி செல்ல..
அவனின் வாலிப  வயதிலேயே…அவனுடன் இருக்கும் நட்பு வட்டம் சென்ற போது… தனக்கு ஒரு பெண் தேவை என்று அவன் உணர்ந்த போது…அதை திருமணம் மூலம் தான்  பெற முயற்ச்சி செய்தானே ஒழிய…வேறு வழியில்  பெற முயன்றது இல்லை.
அதனால் அவன் தேவையை நல்ல முறையில்  கிடைக்க  செய்வோம்…அவன் தொழிலுக்கு ஒரு வாரிசும் வரும். அதனால அவனை பத்தி வீணா கவலை படாம உன்னை பத்தி  கவலை படு.” என்று சொல்லி விட்டு அனுப்பிய கிஷோர் செய்த முதல் வேலை தன் நண்பனின் தங்கையை சிக்கந்தருக்கு பேசி முடித்தது  தான்.
இதோ அதன் படி நாளை பெண் பார்க்கும் நிகழ்வு  நிலையில், முன்றைய இரவில் எப்போதும் போல் அவன் அறைக்கு பால் கொண்டு சென்ற ஜமுனா… 
“மாமய்யா கிட்ட பொண்ணு போட்டோ கேட்டு வாங்கலையா…?”என்று  ஏதோ நினைவில் இருந்த சிக்கந்தரின்  காதில் கிசு கிசு என்று ரகசியம் பேசுகிறேன் என்று மெல்ல பேசிய ஜமுனாவின் பேச்சு புரியாதவனாய் அவளை நிமிர்ந்து  பார்த்தான்.
அவன்  குழம்பிய முகத்தை பார்த்த ஜமுனா அவன் கையில் பாலை திணித்தவளாய்… “அய்யோ அய்யோ…” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள்…
“மாமய்யா கிட்ட பெண் போட்டோ கேக்கலையா…?” என்று ஜமுனா கேட்ட பின் தான் சிக்கந்தருக்கு அதன் நினைவே வந்தது.ஆம் நாம் ஏன் ஜீ கிட்ட போட்டோ கேட்கவில்லை  என்று.
அதே குழம்பிய முகம் படிந்து இருக்க சிக்கந்தர்  ஜமுனாவிடம்… “இல்லை…” என்று தலையாட்டினான்.
 சிக்கந்தரின் பேச்சில் ஏதோ யோசித்தவளாய்… “ நான் வேணா மாமய்யா கிட்ட கேட்டு வாங்கிட்டு வரட்டுமா…?” என்று  ஜமுனா அதே ரகசிய குரலில் கேட்டாள்.
அதற்க்கு சிக்கந்தர் உடனடியாக… “வேண்டாம் நேரிலேயே பார்த்துக்கலாம்.” என்று சொன்னதும்…
“நேரில் பிடிக்கலேன்னா என்ன செய்வீங்க..இப்போவே போட்டோவில் பார்த்தா நீங்க  ஏதோ ஒரு முடிவுக்கு வரலாமே ஜீ…” என்ற ஜமுனாவின் பேச்சு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட ஏனோ சிக்கந்தருக்கு போட்டோ  பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.
திரும்பவும்… “வேண்டாம்.” என்று சிக்கந்தர் சொன்னதும்…
ஜமுனா சிக்கந்தர் குடித்த பால் க்ளாஸை வாங்கிக் கொண்டு செல்லும் போது… “எந்த காலத்தில் இருக்கிறாரோ…” என்று ஜமுனா சொல்லி சென்றது சிக்கந்தருக்கு   தெளிவாகவே கேட்டது.

Advertisement