Advertisement

அத்தியாயம்….9 
சுபத்ரா… “மா நான் என்னம்மா தப்பு செஞ்சேன்…? பேச்சுக்கு சும்மா பிரண்சுங்க கிட்ட சொன்னது. அது இப்போ இப்படி ஆகுமுன்னு நான் நினச்சி பார்க்கல..அதோட சிக்கந்தருக்கு இப்படி ஆகும் என்று யார் எதிர் பார்த்தா…?” என்று அழுதுக் கொண்டே பேசிய மகளின் நிலையை பார்த்து அந்த தாய்க்கும் கண்கலங்கி தான் போனது.
அவருக்குமே தன் தம்பி என்றாலும், வயது வித்தியாசம். அதோடு அவனின் பெண்கள் பழக்கம். இது எல்லாம் தெரிந்தே தன் பெண்ணை அவனுக்கு கொடுப்பது அவருக்கும்  விருப்பம் இல்லை தான். ஆனால் இப்போது அவருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே…. ஆம் சுபத்ரா வேறு வழியில்லாது தான் ஷ்யாமை திருமணம் செய்துக் கொண்டது.
சிக்கந்தர் நிச்சயம் நடந்த அன்றே பெரும் விபத்து..மூன்று நாள் கழிந்தும் கோமாவில் இருந்து எழுந்துக் கொள்ளாதவனை மருத்துவர் முழுவதும் பரிசோதித்து சிக்கந்தரின் தந்தையிடம்…
“சாரி சார் உங்க  மகன் இந்த கோமாவில் இருந்து வர…இரண்டு சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கு…” 
இதை மருத்துவர் சொல்லும் போதும் சுபத்ராவின் அன்னையும் பக்கம் இருக்க..பின் யோசித்து அவனுக்காக தன் மகளை காத்திருக்க செய்வது முட்டாள் தனம் என்று நினைத்தார்.
கூடவே உறவு நட்புக்கள் சேர்ந்து… “சூடோட   சூடா  உன் மகளுக்கு  நடத்த குறித்த தேதியிலேயே  திருமணம் செய்து வெச்சிட்டு..இல்லேன்னா உன் மக ராசியில்லாதவ என்று பேச்சு வந்துடும்.
இப்போவே சிக்கந்தர் நிச்சம் ஆன அன்றே இப்படி ஆனதில் கொஞ்சம் லேசா பேச்சு  பேச்சு அடிபடுது தான்.” என்று சொன்னவர் தான் அந்த பேச்சை பரப்பியது  என்று  அந்த தாய்க்கு தெரிந்தது.
இருந்தும் அவர் சொன்ன..நிச்சயம் செய்த அதே தேதியின் தன் மகளுக்கு முடித்து விட வேண்டும் என்று பார்த்த முதல் சம்மந்தம் சுபத்ராவின் கல்லூரி தோழியின் அண்ணனாக வாய்க்க.. அன்று  முதல் பிரச்சனை ஆராம்பித்தது.
சிக்கந்தரின் பிரச்சனை எழுந்தாலும், ஒன்றும் இல்லை. தன் மகள் அழகுக்கும் தங்கள் வசதிக்கு நல்ல இடமாகவே கிடைக்கும் என்று தான் தங்களுக்கு சமமான இடமான இந்த இடம் வந்தது. வந்தவர்கள் கொடுதத்தை நன்கு சாப்பிட்டு விட்டு, பெண்ணை பார்க்க வந்தவர்கள்…
 “ பெண்ணை அழைத்து வா…” என்றனர். 
 அவர்கள் முன் வந்து  நின்ற சுபத்ரா மாப்பிள்ளையின் பக்கத்தில் அமர்ந்து இருந்த  மாப்பிள்ளையின் தங்கையை பார்த்ததுமே சுபத்ராவுக்கு வேர்த்து கொட்ட ஆராம்பித்து விட்டது.
அப்பெண்ணும் சுபத்ராவை பார்த்து… “நீயா…?” என்று கேட்டு கொண்டே  எழுந்து நின்றவள்…தன் அண்ணனை பார்த்து… “அண்ணா நிச்சயம் ஆன அன்று அந்த மாப்பிள்ளைக்கு விபத்தானதில் அந்த பெண் மீது என்ன தப்பு இருக்கு…?என்று  கேட்டிங்க. அது நியாயமானது தான்.
நானும் இதையே தான் நினைத்தேன். நமக்கு இது போல் நடந்தால்…இதை நினைத்து தான் இங்கு வந்தோம். ஆனா இவ…” என்று சுபத்ராவை  கை காட்டிய அப்பெண்…
“இவளுக்கு நிச்சயம் செய்த பையன் இவளோட மாமன் மகன் …தெரியும் தானே..அவங்களுக்குள்ள நிச்சயம் மட்டும் முடியல…எல்லாம் முடிஞ்சிடுச்சி..இப்போ உனக்கு இந்த பெண் தேவையா…?” என்று சுபத்ராவை கை காட்டி அப்பெண் தன் அண்ணனிடம் கேட்டாள்.
சுபத்ராவின் அன்னை… “என்ன என்னம்மா  பேச்சு இது…?ஒரு பெண்ணா இருந்து  ஒரு  பெண் மீது இப்படி அபாண்டமாக  பழி போடுறியே இது நியாயமா…?” என்று கேட்டதற்க்கு அப்பெண்…
“அபாண்டமா நான் பழிபோடுறேன்னா…?ஆன்ட்டி  உங்க மக பக்கத்துல அமைதியா இருக்காளே..அவ கிட்டயே கேளுங்க. ஏன்னா இதை நானா  சொல்லலே..உங்க மகள் சொன்னதை தான் நான் சொன்னேன். இது எனக்கு மட்டும் தெரிந்தது இல்லை. என் காலேஜ்  மொத்தமும் தெரியும்.  இவ மொத்தமா  சிக்கந்தர் கிட்ட விழுந்த விசயம்.” என்று சொல்லி விட்டு  அவள்  அனைவரையும் அழைத்து  சென்று விட்டாள்.
அப்படியே மார்பு பட படக்க அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டார் அந்த அன்னை. தந்தை இல்லாது தனியே..என்ன தான் பணத்திற்க்கு குறை இல்லாது போதும்..எத்தனை இடர்ப்பாட்டில் வளர்த்தார்.
ஆனால் இப்படி…முதலில் நிச்சயம் செய்தவன் விபத்து. இப்போது …இது என்ன பேச்சு…? தன் மகளை  பார்க்க.. அவளோ தன் அன்னையை பார்க்க முடியாது தலை குனிந்து நின்று விட்டாள்.
“சொல்லுடீ…அந்த  பெண் சொன்னது உண்மையா…?” என்று கேட்ட சுபத்ராவின் அன்னை…பின் ஏதோ நினைத்தவராய்…
“இல்லையே சிக்கந்தர் சென்னை வந்தா கூட உன் கிட்ட  ஆசையா பேசி நான் பார்த்தது இல்லையே..நீ தானேடி உன் விருப்பத்தை அவன் கிட்ட சொன்ன…
அவன் நீ கேட்டதும் ஒத்துகினதே பெரிய விசயம் என்பது போல் தானே நான் சட்டு புட்டுன்னு நிச்சயத்தை வெச்சேன். சொல்லுடீ… உண்மைய சொல்.” என்று சுபத்ராவின் முதுகில் இரண்டு போடு போட்டு  கேட்டார்.
“அம்மா..அம்மா…” என்று தயங்கிய சுபத்ரா அவள் அன்னை மீண்டும் அடிக்க கை ஓங்கிக் கொண்டு வரவும்..
“அம்மா எங்க காலேஜ் கேல்ஸ்சுக்கு   சிக்கந்தர்னாலே ஒரு க்ரேஸிமா…நான் அவனோட மாமா பெண் என்பதாலே என்னை எல்லோரும்  பொறாமையா பார்ப்பாங்க.
அவங்க என் கிட்ட வந்து சிக்கந்தர் உன்  கிட்ட பேசுவாரா…?எப்படி பேசுவார். என்ன என்று…?என் கிட்ட கேட்கும் போது  எல்லாம்.”
இது வரை தங்கு தடையின்றி பேசிக் கொண்டு இருந்த சுபத்ரா  பின் தயங்கியவளாய்… “என்னனா சிக்கந்தருக்கு ரொம்ப பிடிக்கும்… என்னை  கிட்ட தொட்டு  தொட்டு தான் பேசுவார். அப்புறம் என்னை காதலிக்கிறார்…என்னை கிஸ் பண்ணி இருக்கார்… அப்புறம்.” என்று அதற்க்கு மேல் பேச முடியாது வாய் மூடி கதறி அழுதாள் சுபத்ரா..
கல்லூரியின் அனைத்து பெண்கள் எதிரில் அவர்கள் விரும்பும் ஆண்மகன் தன்னை விரும்புகிறான் என்று பெருமையாக சொன்ன  அந்த பொய்..தன் கற்பனையில் சிக்கந்தர் தன்னிடம் எப்படி எல்லாம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ..அதை நடந்ததாய் சொன்னது இன்று இப்படி ஆகும் என்று  அவள் கனவிலும் நினைத்து பார்க்காதது.
“அடி பாவீ..அவ அவ என்ன என்னவோ செய்துட்டு எதுவும் செய்யாத அப்பிராணி போல இருக்காளுங்க..இங்கு ஒன்னும் இல்லாததை நீயே உன் வாயில்  கெடுத்துட்டு இப்படி பண்ணிட்டியேடீ…” என்று மேலும் இரண்டு அடி தான் அந்த அன்னையால் கொடுக்க முடிந்தது.
பின் எவ்வளவு சீக்கிரம் தன் மகளுக்கு திருமணத்தை முடிக்க வேண்டுமோ முடித்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை வேட்டையை நட்த்தினார்.
முதலில் தனக்கு  சம்மான இட்த்தை தான் பார்த்தார். சுபத்ரா  சொன்ன பொய்யால் அது தடை பட…தங்களோடு  கொஞ்சம் வசதியில் கீழ் உள்ளவர்களை பார்த்தார். 
தனக்கு சம்மந்தமான இடமாவது… “உங்க பெண் செய்த தப்புக்கு அது கொடுங்க. இது கொடுங்க..இப்போவே எல்லாம் சொத்தும் என் மகனுக்கு எழுதி வெச்சிடுங்க.” என்று பேரமாவது பேசினார்கள்.
ஆனால் வசதியில் தன்னோடு கீழ் இருந்தவர்கள் சுபத்ரா சொன்ன பொய் அறிந்து… “எங்களுக்கு பணத்தோடு மானம்  தான பெரிது.” என்று எழுந்து விட்டவர்கள்.. .
 தங்கள் வீட்டு வாசப்படியை கடக்கும் போது… “என்னடா இவ்வளவு பெரிய இடம் நம்மோட சம்மந்தம் செய்ய நினைக்கிறாங்கலேன்னு அப்போவே எனக்கு சந்தேகம் தான்.” என்று முனு முனுத்துக் கொண்டு கடந்தனர்.
அனைத்து இடத்திலுமே சுபத்ரா சொன்ன பொய் முன் வந்து நிற்க…கடைசியாக சுபத்ராவின்  அன்னையின் கண்ணுக்கு மாப்பிள்ளையாக மாட்டியவன் தான் ஷ்யாம்…
தவறு செய்யாது அதன் பிம்பம் சுபத்ரா மேல் படிய… அதனால்  தன் தாய் மாமனுக்கு வாழ்க்கை பட்டு..இதோ இன்று  வரை பட்டுக் கொண்டு  தான் இருக்கிறாள்.
தன் கணவருக்காக காத்திருக்கும் சமயத்தில் சிக்கந்தரின் அன்னை இப்படி வந்து கேட்கவும், பழையது புதியது என்று கலந்த நினைவுகளின் தாக்கத்தில் கத்தி விட்டாள் சுபத்ரா..
சரியாக அந்த சமயத்தில் அங்கு வந்த ஷ்யாம். தன் மனைவியின் பேச்சில்… “ஓ இப்போ தான் அம்மணிக்கு  அண்ணி என்னை வளர்த்ததிற்க்கும் அவங்க பசங்களை  வளர்த்த்திற்க்கும் இருக்கும் வித்தியாசம் தெரியுதோ…” என்று கேட்டான்.
பின் யோசித்த வாறே… “உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி பதிமூன்று வருடம் ஆகிறது.  இந்த பதிமூன்று வருடமா தெரியாத வித்தியாசம் இப்போ தெரியுதுன்னா…? என்ன சிக்கந்தர் எழுந்துட்டான்… அதனால் எனக்கும் அவனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுதா…?” என்று கேட்ட ஷ்யாம்..
தொடர்ந்து… “ தோ பாருடீ நீ சொன்னது போல அவன் என் போல இல்ல… இதோ நீ அவன நினச்சி பேசிட்டு இருக்கலே..அவன் நினைவில் கூட உன் நினைப்பு இருக்காது. அவன் எல்லாம் அடுத்து என்ன என்பது  போல்  தான் அவன் வாழ்க்கையை  நகர்த்திட்டு இருப்பான்.” என்று சொல்லிக் கொண்டு இருந்தவன்..
தன்னிடம் இருந்த வக்கீல்  நோட்டிசை தன் அண்ணியிடம் கொடுத்த  ஷ்யாம்… “அண்ணி உங்க மகன் அவன் விளையாட்டை ஆராம்பித்து விட்டான்.” என்று சொல்லி விட்டு கொடுக்க..
அதை வாங்கி படித்த தேவி…. “ஷ்யாம் இது என்ன…?” என்று அதிர்ந்து போய் கேட்டார்.
“அவன் பெயரில்  இருக்கு ஷோர்..அதில் இத்தனை வருடம் வந்த லாபம். அவன் வாங்கியது. அவன் பெயரில் இருக்கும் சொத்து அனைத்தும் அவனிடம்  ஒரு மாத்த்திற்க்குள் கொடுக்க வேண்டும் என்று வக்கீல்  நோட்டிஸ் அனுப்பி இருக்கான்.”  என்று தன் அண்ணி கேட்டதற்க்கு விள்ள வாரியாக விளக்கினான்.

Advertisement