Advertisement

“உங்களுக்கு தங்கை இருந்து இருந்தா நானே வரதட்சணை  கொடுத்து கல்யாணம் செய்து இருப்பேன் ஜீ…” என்று  சிக்கந்தர் எதற்க்கு சொன்னான் என்று தெரிந்தே…
“ஏன்டா நான் நல்லா  இருக்கேன். என் தங்கையும் நல்லா இருப்பா..அவளை  கரைக்ட் செய்வேன்னு என் கிட்டவே சொல்ற..உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்…” என்று கிண்டலால சிக்கந்தரின் சொல்லுவான் கிஷோர்..
இப்போது வருவது என் மகன் என்ற கிஷோரின் பேச்சில் பழைய நினைவுகள் இருவருக்கும் கிளம்ப இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு சிரிக்கும் வேளயில், நிஷா தன்  மகன் சித்தார்த் என்று பெயருட்டு அனைவரும் சின்னா என்று அழைக்கும் தன் ஜீயின் மகனை ஆவளோடு பார்த்து …
“சின்னா வா..வா…” என்று  தன் தோளுக்கு அருகில் வளர்ந்து விட்ட சின்னாவை அணைத்துக் கொண்டவனின் கண்கள் தன்னால் கலங்கியது.
இதோ இவனுக்கு நான் தான் பெயரிட்டேன்…அன்று பெயர் சூட்டும் விழாவில் அனைவரும் என்ன  பெயர் என்று கிஷோர் நிஷாவிடம் கேட்கும் போது…
சிக்கந்தரிடம்… “நீயே ஒரு நல்ல பெயரா வைடா…பிறந்த பதினைந்து நாளே ஆன குழந்தையை தன் கையில் கொடுத்ததும்.. கை நடுங்க குழந்தையை வாங்கி கொண்ட சிக்கந்தர் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
இதோ இப்போது போல் சின்னா தன் நெஞ்சில் முகம் பதித்தது போல் தான்…  அன்றும் தன் முகத்தை பதித்திருந்தான். என்ன ஒன்று அன்று  தன் கையில்  இருந்தவன்..
இன்று முன்  நின்றுக் கொண்டு அணைத்திருக்கிறான்…நீண்ட வருடம் பதிமூன்று… அவன் நினைவை கிளற…அதற்க்கு மேல் யோசிக்க விடாது…
“ஹாலோ ஹீரோ சார்..எப்படி இருக்கிங்க…?” என்ற சின்னாவின் விசாரிப்பில்.. அணைப்பில் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வைத்த சிக்கந்தர்…
“நீயே பார்த்து சொல். நான் எப்படி இருக்கேன்…?” என்று தன் ஜீயின் மகனின் வளர்ச்சியையும், அந்த அழகிய முகத்தையும், அதில் தெரிந்த குறும்பையும் ரசித்துக் கொண்டே  சிக்கந்தர்  கேட்டான்.
சின்னாவும் அப்போது  தான் சின்ன சின்ன ரோம முடிகள் நான் மீசையாக  வளர ஆராம்பித்து இருக்கிறேன் என்று சொல்லும் படி  அந்த டீன் ஏஜின் வளர்ச்சிக்கும் மீறிய நிலையில் இருந்தவன்..
அந்த ரோமத்தை நீவி விட்ட வாறே… “ம் பரவாயில்ல என் டாட் பொய் சொல்லவில்லை.” என்று சொன்னவன்..
சிக்கந்தரை சுற்றி  சுற்றி பார்த்து விட்டு… “ஆனா  எங்க டாட் நீங்க சாக்லெட் பாய் போல இருப்பிங்கன்னு சொன்னார்..பட் யூவர் வெரி ஹார்ட் ஹான்சம் பர்சன் யா…” என்று கண்  சிமிட்டி சொன்னவனின் தலையில் டொங் என்று  குட்டிய நிஷா..
கிஷோரை பார்த்து… “இதுக்கு எல்லாம் காரணம் நீங்க தான். எப்போ  வெளியில் கூடிட்டு  போனாலும் செம ஹார்ட்..என்று லேடீஸை பார்த்து ஜொள்ளு வழிய வேண்டியது.. பையன் என்னடான்னா அவன்  அப்பாவையே மிஞ்சுடுவான் போல…” என்று ஒரு அன்னையாய் மகனின் இந்த பேச்சை கேட்டு கடிந்துக் கொண்டாள்.
“பாபி…கூல் கூல்… சின்னா சின்ன பையன் பாபி…” என்று நிஷாவை சிக்கந்தர் அமைதி படுத்திக் கொண்டு இருக்கும் போதே..
சித்தார்த்… “நான் என்ன தப்பா சொல்லிட்டேன் அங்கிள்..  ரியலி யூவர் ஹான்சம் பர்சன்..பார்த்தா நல்லா இருக்கிங்க. என் மனசுக்கு தோனுனதை சொன்னேன். இதில் என்ன தப்பு இருக்கு…?” என்ற சித்தார்த்தின் பேச்சில் சிக்கந்தர்  அப்படியே மலைத்து நின்று விட்டான்.
“என்னடா உன்ன போலவே பேசுறான்னு பாக்குறியா… நீ  எயித்து படிக்கும் போது உன் மிஸ் கிட்ட நீங்க செக்ஸியா இருக்கிங்கன்னு சொல்லிட்டு…அப்புறம் வீட்டில் கூப்பிட்டு பேசுனதுக்கு..
நான்  நேத்து ஒரு இந்தி பாட்டு பார்த்தேன். அதில் கரிஷ்மா கபூர் ஏய் செக்ஸி…அலோ செக்ஸின்னு ஒரு பாட்டு பாடுனாங்க..அவங்கல மாதிரியே இவங்களும் இருப்பது போல எனக்கு தோனுச்சி.. அதை நான் அவங்க கிட்டயே சொன்னேன்..இதில் என்ன தப்பு இருக்கு…? என்று உன் அப்பா அம்மா…பிரின்ஸ்பால் டீச்சர் எல்லோர் முன்னும் சொன்னவன் தானேடா…” என்று அன்று சிக்கந்தர் பேசிய பேச்சை நினைவூட்டிய கிஷோர்…
“என்ன என் பையனும் உன் போலவே பேசுறானா….?நானே சமயத்துல இவன்  பேசுறத கேட்டு…எப்படி சிக்கந்தர் போல பேசுறான்…?அவன் கூடவே இருந்து இருந்தால் கூட  பரவாயில்லை..நேரில் பார்த்தது கூட இல்ல..எப்படி யோசிச்சேன்டா…”என்று தன் ஜீயின் பேச்சில்..ஏதோ ஒரு சொந்தம் சித்தார் மேல் தோன்றியது.
தன்னை கிஷோர் செய்வது போல் சித்தார்த்தின் தலையை கலைத்து விட்ட சிக்கந்தர்… “யெஸ் ஜீ..அப்படியே இவன நான் என்னில் பார்க்கிறேன் ஜீ…” என்று சொன்னான். இப்படி இங்கு சிக்கந்தரின் உறவில் ஒருவருக்கு மேல் ஒருவர் சேர..
சென்னையில்…
“என்ன இன்னும் ஷ்யாம் வரலையா…?” என்று சுபத்ராவிடம்  தேவி கேட்டார்.
“இன்னும் இல்ல.” என்ற அந்த இல்லை என்று சொல்லும் போதே ஒரு வித அழுத்தம் கொடுத்து சொன்னாள் சுபத்ரா…
“இப்போ இருக்கும் நிலை என்ன…?உன் புருஷன் செய்வது என்ன…? கொஞ்சம் கண்டிச்சி வைக்க மாட்டியா…?என்று தேவி சொன்னது தான்..
“யாரு நான் உங்க தம்பிய கண்டிச்சி…நீங்க முதல்ல இருந்து கண்டிச்சி வளர்த்து இருந்தா…ஏன் அவர் இப்படி இருந்து இருக்க போறார். உங்க  பசங்களை மட்டும் நல்லா  ஒழுக்கமானவனா வளர்த்துட்டு… மச்சின்னை கண்டுக்காம விட்டிட்டிங்க…இப்போ என் கிட்ட வந்து புருஷன கண்டிக்கிறது தானே..
ஒழுங்கு படுத்துவது தானேன்னு சொல்லிட்டு…  இவங்க வளர்க்க தெரியாம வளர்ப்பாங்கலாம்… நாங்க இவங்களை திருத்தனுமா…?புருஷனை திருத்த தான் நாங்க கல்யாணம் செய்துட்டு  வர்றோம் பாரு…” என்று   சுபத்ரா  சிக்கந்தர் அன்னையை எதிர்த்து பேசினாள்.
இது வரை சுபத்ரா இப்படி எல்லாம் எதிர்த்து பேசியது கிடையாது..ஷ்யாம் எப்போதும்  இது போல் தான் நேரம் கடந்து வருவான். அதாவது திருமணம் முன்னே இப்படி தான்.
திருமணம் என்ற கூட்டிற்க்குள் அடைய விரும்பாத ஒரு சுதந்திர பறவை தான் ஷ்யாம் வர்மா…தன்னோடு சின்னவன் தருணுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னும்…
இன்னும் சின்னவனான சிக்கந்தருக்கும் தன் அக்கா மகளுக்கு திருமணம் செய்ய பேச்சு ஆராம்பித்த பிறகும் சரி..தனக்கு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து பார்த்தது கிடையாது.
திருமணம் எதற்க்கு…?**** அதுக்கு தானே..அது தான் எனக்கு கிடைக்கிறதே பின் என்ன…என்று பிலாசிபி பேசும் ரகம் நன் ஷ்யாம் வர்மா…
அப்படி பட்டவனை அழுது “என் மகள்  வாழ்க்கை உன் கையில் தான் என்று அழுது ஆர்பாட்டம் செய்து நான் செத்து விடுவேன் என்று தற்கொலை நாடகத்தை கையில் எடுத்த ஷ்யாமின் அக்கா..அதாவது சுபத்ராவின் அம்மாவின் நாடகத்தில்..
உடனே சரி என்று சொல்லாது “நான் சுபாவிடம் பேசிட்டு சொல்றேன்.” என்று தன் அக்காவிடம்  சொன்னவன்..
பின்  ஷ்யாம் வர்மா தன் அக்கா மகளிடம் தனிமையில் … “சுபா என்னை பத்தி உனக்கு தெரியும் தானே…?” என்று  நேரிடையாக கேட்ட தன்னோடு பன்னிரென்டு வயது மூத்த மாமனிடம்.. அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்.
 பின்…“ம் தெரியும் மாமா…” என்று  தலையாட்டி விட்டு   தலை குனிந்து விட்டாள்.
“தெரியும்னா..எது வரை தெரியும்.” என்று கேட்டதற்க்கு..
“எல்லாம்…”என்று சொன்னாள் சுபத்ரா..அதே தலை குனிந்த படி தான்.
இதற்க்கு மேல் ஒரு அக்கா மகளிடம் தன்னை பற்றி விளக்காது… “என்னால மாற முடியுமான்னு தெரியல..வீட்ல கல்யாணம் அது இதுன்னு பேசுறாங்க..அதை  பத்தி நான் நினச்சி கூட பார்க்கல்… அதை பத்தி நினச்சி பார்க்குறதாவும் இல்ல…
ஆனா இப்போ உங்க அம்மா உனக்கும் எனக்கும் உள்ள வயசு வித்தியாசத்தை கூட பார்க்காது உனக்கும் சிக்கந்தருக்கும்  முடிவு செய்த அதே டேட்டில்  நான் உன்னை கல்யாணம் செய்துக்கனுமாம்.” என்று ஷ்யாம் பேச்சில்..
சுபத்ரா  ஷ்யாம் பேச்சான சிக்கந்தருக்கும் உனக்கும் திருமணம் செய்ய இருந்த டேட்டில் என்று சொல்லும் போது தன்னால் தலை நிமிர்ந்து தன் மாமனை பார்த்தாள் சுபத்ரா…
“என்ன சுபா…?” என்று கேட்ட ஷ்யாமிடம்..
“ஒன்னும் இல்ல மாமா…அம்மா விருப்ப படியே நடக்கட்டும்.” என்று  சொல்லி விட்டு சென்றவனில் பின் வந்த ஷ்யாம்..
“சுபா கல்யாணம் ஆன பின் நான் திருந்திடுவேன்..அப்படி இப்படின்னு பயங்கர திட்டம் இருந்தா..இந்த கல்யாண பேச்சை இத்தோட  நிறுத்திடலாம்.” என்ற ஷ்யாம் பேச்சில் திரும்பி அவனை பார்த்தவள் ..
“இல்லை.” என்று தலையாட்டி விட்டு  சென்ற சுபத்ராவின் மனதில் நேற்று மாலை ஷ்யாம் தன்னிடம் பேச வேண்டும் என்று  சொன்ன உடன்..
தன் அம்மா தன்னிடம்… “தோ பாருடீ..அவன் என்ன சொன்னாலும்..சரி சரின்னு தலையாட்டி வை.  நீ பண்ணி வெச்ச காரியத்துக்கு அவன் உனக்கு தாலி கட்டினா தான் உண்டு.” என்ற தன் அன்னையின் பேச்சில்..
“ஏம்மா ஏ…மாமாவை பத்தி தெரியும் தானே..நான் என்ன தப்பும்மா செஞ்சேன்…நிச்சயம் ஆயிடுச்சி.  சிக்கந்தருக்கு விபத்து..கோமாவில் போயிட்டான். எப்போ எழுந்துப்பான்னு தெரியாது.” என்று சொன்ன சுபத்ராவின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய அவள் அன்னை…
“எழுந்துப்பான்னா என்றே தெரியாது.” என்று  சுபத்ராவின் பேச்சை  திருத்தி சொன்னார்.
“ம் நீங்க சொல்வது சரி தான். எழுந்துப்பானா  என்றே தெரியாது தான். ஆனா அதுக்காக உங்க தம்பிய கல்யாணம் செய்ய முடியுமா…? என் வயசு என்ன…?  அவர் வயசு என்ன…?அதுவும் இல்லாம…” என்று மேலும் ஏதோ சொல்ல வந்த சுபத்ராவின்   பேச்சை தடுத்து நிறுத்திய அவள் அன்னை…
“ஆமா டீ..அவன் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி தான்.  வயசும் உன்னோட அவனுக்கு அதிகம் தான். ஒரு நிச்சயம் ஆகி விட்டதுன்னு இப்படி கல்யாணம் செய்ய கூடாது தான்….ஆனா இப்போ பிரச்சனை  உன் நிச்சயம் மட்டும் இல்லையே…” என்ற தன் அன்னையின் பேச்சில்…கூனி குறுகி விட்ட சுபத்ரா..
“சரிம்மா நான் மாமவையே கல்யாணம் செய்துக்கிறேன்.” என்று  சொன்ன   சுபத்ரா..அதை நிறைவேற்றும் பொருட்டு இதோ தன் மாமா சொன்ன அனைத்திற்க்கும் தலையாட்டி விட்டாள்.
 

Advertisement