Advertisement

அத்தியாயம்….8
“சிக்கந்தர் உடம்பு எப்படி இருக்கு…?ஒன்னும் இல்லையே…” என்று  சிக்கந்தரை பேச விடாது  கிஷோர் தொடர்ந்து  பேசிக் கொண்டு இருந்தான்.
“ஜீ..ஜீ…எனக்கு பேச சான்ஸ் கொடுங்க.” என்று சொன்ன சிக்கந்தர்.
“ம் நான் நல்லா இருக்கேன். ஜாமூன் என்னை நல்லா பார்த்துக்குறா…அதனால என்னை பத்தி கவலை படாம நீங்க உங்க மச்சான் குடும்பத்தை பாருங்க.” என்று சொன்னவன்..
“அங்கு எப்படி இப்போ பரவாயில்லையா..கொஞ்சம் தெளிஞ்சிட்டாங்களா…?” என்ற கேள்விக்கு…
“ம் பரவாயில்ல. ஆன்ட்டி தான் ரொம்ப பாவம்…அதுவும் போக போக சரியாயிடும்.” என்று சொன்னவன்..
“பின் நாளைக்கு வந்துடுவோம் சிக்கந்தர்.” என்று கிஷோர் சொன்னதும்..
“ஏன் ஏன்…ஒரு நாளு நாளைக்காவது அங்கு இருந்துட்டே வாங்கலேன் ஜீ.” என்று  சிக்கந்தர் சொன்னதற்க்கு..
“சின்னாவுக்கு இரண்டு நாளையில் ஸ்கூல் ஓபன் செய்யிறாங்க…அதுவும் இல்லாம இங்கு மச்சான் பசங்களுக்கு ஸ்கூல் ஓப்பன்..இனி பசங்கல கவனிக்கிறதுல அவங்க கவலை மறக்க வேண்டியது தான்.
அதுவும் இல்லாம நானும் ஆபிசுக்கு போய் ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சி…என்ன தான் தீபக் நல்லா பார்த்துக்குறான் என்றாலும், நாமும் கொஞ்சம் பார்த்தா தான் நல்லது டா…” என்று சொன்ன கிஷோர்..
“இது எல்லாம் உன் கிட்ட சொல்லனுமா…?அப்போவே எனக்கு பிஸ்னஸ்  ட்ரிக்ஸ் சொல்லி கொடுத்தவன் ஆச்சே…” என்று சொன்ன கிஷோர் மனதில்..
இவன் மட்டும் பதிமூன்று வருடத்தை படுக்கையில் கட்த்தாது இருந்து இருந்தால், இன்று அவன் நிலையே வேறாக இருந்து இருக்கும் என்று கிஷோர் சிக்கந்தரிடம் பேசிக் கொண்டு இருந்தாலும்,  அவன் மனதில் இதை நினையாமல் இருக்க முடியவில்லை.
இதையே தான் சிக்கந்தரும் நினைத்தான். என்ன வேறு மாதிரி…அவன் தந்தை…  “இந்த ரேசில் இருந்து உன் கவனத்தை நம் பிசினசுக்கு திருப்புனா..இன்னும் நாம எங்கோ போயிடுவோம்  இந்தர்.” என்ற தன் தந்தையின்  அப்போதைய பேச்சுக்கு.
“டாட் இந்த ரேஸ் எல்லாம் குறிப்பிட்ட ஒரு வயது வரை தான்.  பின் நான் என்ன செய்ய போகிறேன்..நம்ம தொழிலை தானே பார்க்க போகிறேன்.  
எந்த புது கார் லான்ச் செய்யிறது என்றாலும், அது  நம்ம நிறுவனமா தான் இருக்கும்.” என்று  அன்று தன் தந்தையிடம் சொன்னது  சிக்கந்தருக்கு  இன்று  நினைவுக்கு வந்தது.
இதோ இப்போது அவன் புது காரை லான்ச் செய்ய போகிறான் தான். ஆனால் தன் தந்தையின் நிறூவனத்திற்க்கு எதிராக.ஆம் அவன் காரை லான்ச் செய்ய நினைதத்து தன்  தாத்தா ஆராம்பித்த நிறுவனத்தையும் அதை கட்டி காத்த தன் தந்தையின் நிறுவனத்திற்க்கு எதிராக தான் செயல் பட போகிறான்.
அந்த நிறுவனத்தை கை பற்றுவது என்பது இப்போதைக்கு முடியாது. அக்குடும்பம் மொத்த பேரும் ஒன்றாய் இருக்க ..தான் தனித்து அதை கை பற்றுவது என்பது முடியாது என்று தெரிந்து தான்… அதை எதிர்க்க துணிந்து விட்டான்.
எதற்க்காக என்னை மரணம் வரை கொண்டு செல்ல நினைத்தீர்களோ அது உங்களுக்கு கிடைக்க விட மாட்டேன். என்று  இவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போது கிஷோர்..
பேசியில் சிக்கந்தரிடம் எந்த பதிலும்  வராது பார்த்து… “சிக்கந்தர் யூ ஒகே…” என்று கிஷோர் கேட்கும் போதே அந்த இடத்திற்க்கு தன் துப்பட்டாவில் கை துடைத்த வாறே சிக்கந்தர் அறைக்கு வந்த ஜமுனா…
“சாப்பிட வர்றிங்களா…?” என்ற ஜமுனாவின் அழைப்பே ஏனோ சிக்கந்தருக்கு புளியை கரைப்பது போல் இருந்தது. அதுவும் சரியாக அப்போது தான்  கிஷோர் கேட்ட..
“சிக்கந்தர் யூ ஓகே…” என்ற விசாரிப்பில்..
மனதில்.. ‘இது வரை ஒகேவா தான் இருந்தேன். இனி உங்க அக்கா பெண் சமையலில் நான் என்ன நிலைக்கு ஆளாக போகி போகிறேனோ…’ என்று நினைத்துக் கொண்டவன்..
“நான் நல்லா தான் இருக்கேன் ஜீ.. டைமுக்கு சாப்பாடு..அதுவும் இது வரை வேலையாள் மட்டுமே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு, உங்க அக்கா கூத்துரு பார்த்து பார்த்து சமைக்கும் போது …எனக்கு என்ன குறை இருக்க போகுது ஜீ.” என்று சிக்கந்தர்  கிஷோரிடம் பேசினாலும், ஜமுனாவை பார்த்துக் கொண்டே தான் பேசினான்.
சிக்கந்தர் பேச்சை  கேட்ட ஜமுனாவின் முகம் தன்னால் மலர்ந்தது… அவள் மனதிலோ இவரை இன்னும் நல்லா பார்த்துக்கனும் என்று நினைத்தவளின் மனது தன்னால் மாலை சிற்றுண்டி என்ன செய்வது என்று கணக்கு போடலாயின…
ஜமுனாவும், சிக்கந்தரும் இருவரும் எதிர் எதிர் அமர்ந்து ஒருவர் மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டு… ஜமுனா… அவள் சமைத்த உணவின் பெயரை சொல்லிக்  கொண்டே.. அதில் தான் என்ன என்ன போட்டேன் என்று  வள வளத்துக் கொண்டு இருந்தாள்.
சிக்கந்தருக்கு இந்த அனுபவம் மிக மிக புதியதாய். அவன் வீட்டில்  பேச்சு என்பது குறைவு. அப்படி பேசினாலும் காரியமாக தான் இருக்கும். அவன் தந்தை அவனுக்கு நெருக்கம் தான்.அவருமே சாப்பிடும் போது பேச மாட்டார்.
அப்படி பேசுவதற்க்கும் ஒன்றாய் சாப்பிட வேண்டும் அல்லவா..அவர்கள் வீட்டில் அது அறியதே..அப்படி என்றாவது அமர்ந்து சாப்பிட நேரிட்டாலும், அமைதியாக தான்  உணவு உண்பர். அப்படி பேசி தான் ஆக வேண்டும் என்ற பட்சத்தில் அந்த பேச்சுகள் இதுவாக தான் இருக்கும்…
“சிக்கந்தர் அப்பா உன் கோட்டா  முடிஞ்சிடுச்சின்னு சொல்லிட்டார்… நான் ஒரு லட்சம் அந்த காலனி மக்களுக்கு கொடுக்கிறேன் என்று பேட்டி கொடுத்துட்டேன். அதை கொடுக்கலேன்னா என் மானம் போயிடும்.” என்று  ஒரு அன்னையாய் தன் மகனிடம் பேசுவார்.
சிக்கந்தர் பதில்.. உடனே… “ஒகே கொடுத்துடுறேன்.” என்பவன் ஒன்றுக்கு இரண்டு லட்சமாகவே கொடுத்து விடுவான். அப்போது அவனுக்கும் அது சாதரணமாக தான் தோன்றியது. ஆனால் இப்போது அனைத்தும் அவன் மனதில் அந்த பிம்பம் மாறி வேறு மாதிரியாக தோன்றுகிறது.
“என்ன ஜீ  சாப்பிடாம தட்டையே பார்த்துட்டு இருக்கிங்க…?” என்ற ஜமுனாவின் கேள்வி மூலம் நிகழ் காலத்திற்க்கு வந்த சிக்கந்தர், ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினான்.
“ஜீ ஏதாவது இருந்தா சொல்லுங்க..நீங்க எப்போ பார்த்தாலும் அப்போ அப்போ  உங்க மைண்ட் எங்கயே பறந்து போகுது. நான் ஏதாவது கேட்டா மட்டும் ஒன்னு இல்லேன்னு சொல்லிட்டு லேண்ட் ஆயிடுது. உங்க உடும்புக்கு ஏதாவது பண்ணுதா…?சொல்லுங்க.
உங்க ஜீ என் கிட்ட உங்கள ஆயிரம் பத்திரம் சொல்லிட்டு போய் இருக்கார். ஏதாவது இருந்தா சொல்லிடுங்க ஜீ…” என்று சொன்னவளையே  பார்த்திருந்த சிக்கந்தர்..
“உங்க மாமய்யா என்னை பத்திரமா பார்த்துக்க சொன்னதால மட்டும் தான் என்னை பார்த்துகுறிய ஜாமூன்.” என்று சிக்கந்தர் கேட்ட பின் தான்.. நான் ஏன் இதை  இவளிடம் கேட்டோம் என்றே சிக்கந்தர்  யோசித்தான். 
எனக்கும் இவளுக்குமான பழக்கம் ஒரு நாள் மட்டும் தானே..பின் இவள் அவள் மாமய்யாவுக்காக செய்யாது தனக்காக செய்வாள் என்று  நினைப்பதே முட்டாள் தனமானது. இதில் அவளிடமே அதை பற்றி  கேட்டு..சீ என்னை பத்தி என்ன நினைப்பா…? ‘ என்று யோசித்துக் கொண்டே ஜமுனாவை பார்த்தான்.
ஜமுனாவும் அப்போது அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். சிக்கந்தர் தன்னை பார்க்கவும்… “நான் செய்யிறதை பார்த்தா ஒருத்தர் சொல்லி செய்வது போலவா  இருக்கு…?” என்ற ஜமுனாவின் கேள்வியில் சிக்கந்தரின் தலை தன்னால் ..
“இல்லை…” என்று மறுத்து ஆடியது.
“அப்போ ஏன் என்னை பார்த்து அப்படி கேட்டிங்க…?”
“இல்ல  நாம இரண்டு பேருக்கும் அந்த அளவுக்கு பழக்கம் இல்ல. பார்த்து ஒரு நாள் தான் ஆகுது. அது தான்…” என்று  சிக்கந்தர் தன் பேச்சை இழுத்து நிறுத்தினான்.
“ஒரு நாளோ இரண்டு நாளோ…நம்மை நம்பி இருப்பவங்களுக்கு நாம செய்யனும்.” என்ற ஜமுனாவின்  பேச்சு நியாமனதாக  தான் இருந்தது.
இருந்தும் சிக்கந்தரின் மனது  ஜமுனாவிடம் இதோடு வேறு பதில்  எதிர் பார்த்தது. அது என்ன என்று அவனுக்கே தெரியாதது தான்  ஆச்சரியம்.
“என்ன ஜீ சாப்பிடவே மாட்டேங்குறிங்க…?காலையில்  நான் சமச்சது என்ன அவ்வளவு மட்டமாவா இருந்தது…? என்ற ஜமுனாவின் கேள்வியில்..
சிக்கந்தரின் கை தன்னால் ஒரு பிடி அன்னத்தை எடுத்து வாயில் வைத்தது தான் அவனுக்கு தெரியும்..அடுத்து அவன்  தொடர் இருமளிலும்… கண்ணில் வந்த தண்ணீரிலும் வேறு எதுவும் யோசிக்க முடியாது நினைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவனாய் இருந்தவன் வாயில் காலையில் எடுத்து வைத்த ஜாமூன் மொத்தத்தையும் கொடுத்தும்…பால்கோவாவை கொடுத்தும் அவன்  ஊ..ஊ என்று தன் நாக்கை தொங்கப்போட்டு கொண்டு அவன் ஊதிய உதலில் பயந்து போய் ஜமுனா தன் மாமய்யாவை அழைத்து விட்டாள். விளைவு நாளை வர வேண்டியவர்கள் அன்றே வந்து விட்டனர்.
“சாரி மாமய்யா எனக்கு அவங்களுக்கு காரம் சாப்பிட்டது இல்லேன்னு தெரியாது. நான் நம்ம ஊர் மாதிரி சமச்சிட்டேன்.” என்று தன் மாமனிடம் ஜமுனா ஆயிரம் மன்னிப்பு கேட்டாள்.
“பரவாயில்ல ஜமுனா நீ என்ன தெரிஞ்சா செஞ்சே தெரியாம தானே செஞ்ச பரவாயில்லை.” என்று  கிஷோர் ஜமுனாவிடம் சொன்னாலும், மனது இதால் சிக்கந்தரின் உடலுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ…என்று மனது கவலை பட தான் செய்தது.
ஜமுனாவிடம் பேசி விட்டு  முதல் தளத்தில் இருக்கும்  சிக்கந்தர் அறைக்கு சென்ற கிஷோர் அங்கு  ஏற்கனவே சிவந்த நிறம் கொண்ட சிக்கந்தரின் முகம் மேலும்  சிவந்து, சோர்ந்து படுத்து இருந்தவனை  பார்த்து பயந்தவனாய் அவன் அருகில் சென்றவன் அவன் நெற்றியில் கை  வைத்து பார்த்தான். கிஷோரின் ஸ்பரிசத்தில் கண்ணை மூடி படுத்து இருந்த சிக்கந்தர் கண்ணை திறந்து பார்த்தான்.
“ஆஸ்பிட்டல் போயிடலாமாடா…?” என்று கேட்ட கிஷோரை பார்த்து சிரித்தவன்..
“ஒன்னும் இல்ல ஜீ…காரம் சாப்பிட்டு பழக்கம் இல்லலே அதான். கொஞ்சம்…” என்று நாக்கை வெளியே  நீட்டி காட்டியவன்..
“எரிஞ்சிடுச்சி…” என்று சொல்லி விட்டு சிரித்தான்.
“சிரி..நல்லா சிரி.” என்று சொல்லி விட்டு சிக்கந்தரின் தலையை கலைத்து விட்ட கிஷோர்..
“ஜமுனா போன் பண்ணதும் நான் ரொம்ப பயந்துட்டேன்டா…நீ சொன்னதும் நான் உன்னை தனியா விட்டுட்டு வந்து  இருக்க கூடாதோ … என்று நினச்சிட்டேன்டா…” என்று  ஆதாங்கத்துடன் பேசியவனின் கை பற்றிக் கொண்ட சிக்கந்தர்…
“பயப்படாதிங்க ஜீ. எனக்கு ஒன்னும் ஆகாது. அப்படி ஆகி இருந்தா..அது எப்போவோ ஆகி இருக்கும்.” என்று சொன்னான்.
“இப்போ பேசு..ஏன்டா ஜமுனா கிட்ட எனக்கு காரம் ஒத்துக்காதுன்னு சொல்றதுக்கு என்னடா…?” என்று கிஷோர் சிக்கந்தரை கேட்டான்.
“அது என்னவோ எனக்கு சொல்ல தோனல  ஜீ…அதுவும் ஜாமூனுக்கு தன் ஊர் சமையல் பத்தி ரொம்ப பெருமை…அதை கெடுக்க எனக்கு விருப்பம் இல்ல ஜீ.” என்ற சிக்கந்தரின் பேச்சில் அதியத்து…
“நீ எப்போடா இவ்வளவு நல்லவனா மாறின…யார் என்ன கேட்டாலும் உனக்கு பிடிக்கலேன்னா முகத்துக்கு நேரா வேண்டாம் என்று மறுத்துடுவ…” என்று சிக்கந்தரின் பேசிக் கொன்டே கிஷோர் நிஷாவிடம்…
“மேல பால் கொண்டு வா…கூடவே சின்னாவையும் கூட்டிட்டு வா…” என்று சொன்னதும் சோர்ந்து போய் படுத்திருந்த சிக்கந்தர் எழுந்து அமர்ந்து கலைந்திருந்த தன் கேசத்தை ஒழுங்கு படுத்தி  அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்.
“ஏன்டா வருவது என் பையன்டா…என்னவோ பொண்ணு வருவது போல….” என்று கிண்டல் செய்யும் போதே கிஷோரின் நினைவும், சிக்கந்தரின் நினைவும் தன்னால் பதிமூன்று வருடங்கள் பின்னோக்கி சென்றது.
“ஜீ உங்களுக்கு ஒரு தங்கை  இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்…” என்று சிக்கந்தர்  சொன்னதும்…
“ஏன்டா உனக்கு இந்த எண்ணம் எல்லாம். உங்களை  போல  சில்வர் ஸ்பூன் குடும்பம் இல்லேடா எங்களுது. அக்காவுக்கு கல்யாணமே பாதி கடனுல தான் நடந்தது. அதை அடைக்க எங்க அப்பா  பட்ட பாடு  பார்த்தவன்டா நான்.
அதை அடைக்க அவர் கடைய அடைக்காது வேலை பார்த்ததால் தான் அவர் உடம்பை பார்த்துக்காது சீக்கிரம் போயிட்டாரோன்னு நானே   சில சமயம் நினைப்பேன். இதுல தங்கை வேறா…” என்று சொன்ன தன் ஜீயிடம்…

Advertisement