Advertisement

அத்தியாயம்…7…2 
சிக்கந்தரும், ஜமுனாவும் தனியாக இருப்பது  என்றால், அவர்கள் இருவர் மட்டுமே  அந்த வீட்டில் தனித்து இருப்பது இல்லை.
அந்த பங்களாவின் கேட்டில் ஆராம்பித்து… தோட்டம் தொடங்கி  சமையல் அறையிலிருந்து மேல் வேலைகள் செய்ய என்று அந்த வீட்டில் மொத்தம் ஏழு  வேலையாட்கள் உள்ளனர்.
இருந்தும் நிஷா போகும் போது ஜமுனாவிடமும் சிக்கந்தரிடமும்… “எது என்றாலும் வேலையாட்களை கேளுங்க…கேட்டதை செய்து கொடுப்பர்”  என்று இருவரிடமும்  நிஷா எத்தனை முறை  சொல்லி இருப்பாள் என்று கணக்கு பார்க்காத அளவுக்கு சொன்னவள்..
அதோடு விடாது சமையல் செய்யும் பெண்ணிடம்… “ பார்த்து செய்…அவர் இப்போது தான் உடம்பு சரியில்லாம எழுந்து வந்து இருக்கார். பார்த்து செய்…” என்று சிக்கந்தருக்கு தெரியாது வேலையாள் பெண் சாந்தியிடமும் சொன்னாள்.
இதை கேட்ட கிஷோருக்கே பொறுமை பறந்து போய்… “ எல்லாம் உன்னோட என் அக்கா பெண் நல்லா பார்த்துப்பா… நீயாவது வேலையாள் செய்ததை பரிமாறுவே ஆனா ஜமுனா அவளே செய்து மரிமாறுவா…” என்று சொன்ன கிஷோருக்கு அப்போது தெரியவில்லை.
அந்த வார்த்தையை ஏன் சொன்னோம் என்று… தன் மாமய்யா பேச்சுக்கு…  “நீங்க கவலை படாதிங்க அட்டம்மா… நான் அவரை நல்லாலாலா பார்த்துப்பேன்.” என்று அழுத்தும் திருத்தமாய்  சொல்லி தான் ஜமுனாவும் அவர்களை வழி அனுப்பி வைத்தாள்.
பாவம் சமையல் பத்தி சிக்கந்தருக்கு தெரிyaaது பேசியதால், இதன் உள்விவரம் தெரியாது சிரித்த முகத்துடம்… தன் ஜீயையும் பாபியையும் வழி அனுப்பி வைத்து விட்டு வந்தவன்…
“அப்புறம் ஜாமூன்..எனக்கு படுக்குறப்ப பால்  குடிக்கும் பழக்கம் இருக்கு உனக்கு…?” என்று கேட்டதற்க்கு…
“நான் இஞ்சி டீ  குடிப்பேன்.” என்று  சொல்லியதோடு சமையலறை பக்கம்  சென்ற  ஜமுனா சிக்கந்தருக்கு  வெது வெதுப்பான பாலில் சிறிதளவு சீனியை போட்டு …தனக்கு இஞ்சியை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி தண்ணீரில் கொதிக்க வைத்த பின்…சிறிதளவே பாலை அதில் கலந்தவள்… சிக்கந்தருக்கு போட்ட அளவு சீனியை தன் டீயிலும் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தவள்…
பாலை சிக்கந்தரிடம் நீட்டி டீ இருக்கும் கோப்பையை தான் எடுத்துக் கொண்டவள்..அவன் எதிருல் அமர்ந்து அந்த டீயை ரசித்து ஒரு  மிடறு விழுங்கி விட்டு சிக்கந்தரை பார்த்தாள்.
சிக்கந்தர் தான் கொடுத்த பாலை பருகாது தன்னையே பார்த்திருப்பதை பார்த்து… “ என்ன…?” என்பது போல் சைகையில் கேட்டாள்.
“இல்ல இஞ்சி டீ சுறு சுறுப்பா இருக்க தான் குடிப்பாங்க…ஆனா நீ தூங்க போற சமயத்தில் குடிக்கிறியே…?” என்று  சிக்கந்தர் கேட்டான்.
“சின்ன வயசுல இருந்து அம்மா படுக்குறப்ப இதை குடிச்சிட்டு தான் படுப்பாங்க. அவங்க குடிக்கும் போது எனக்கும் கொடுப்பாங்களா… எனக்கும் அதே பழக்கமாயிடுச்சி…” என்று சாதரணமாக ஜமுனா பேசினாலும், அவள் அம்மா என்று சொல்லும் போது…குரலில் கொஞ்சம் பிசிறு தட்டுவது போல் இருந்தது.
தாயின் நினைவில் கலங்குகிறாள் என்று தெரிந்தும், மேலும் அதை பற்றி துருவாது வேறு கதை பேசிக் கொண்டு இருந்தான்.
“மாமய்யாவை  எப்போவிலிருந்து உங்களுக்கு தெரியும்…?உங்களுக்கு பிடிச்ச கலர்..உங்களுக்கு பிடிச்ச நடிகை நடிகன்….என்று பேசிக் கொண்டு இருக்க..
சிக்கந்தர் தன் கையில் உள்ள பாலை  குடித்தவனுக்கு அதில் உள்ள சீனி பத்தாது… சாந்தியிடம் கேட்டு வாங்கி பின்  குடிப்பதை பார்த்த ஜமுனா…
“நான் சரியா தான் சீனி போட்டேன். ஒரு சமயம் சரியா கலக்கி இருக்க மாட்டேன்.” என்று அவளே சீனி பத்தாதிற்க்கு காரணம் சொல்லி விட்டு, தன்  பேச்சை தொடர்ந்தாள்.
பேசிக் கொண்டு இருக்கும் போதே ஜமுனா தன் கை மறைவில் கொட்டாவி விட்டதை பார்த்த சிக்கந்தர்… “சரி ஜாமூன் டைம் ஆயிடுச்சி  பார். நீ போய் தூங்கு.” என்று சிக்கந்தர் சொன்ன போது தான் சிக்கந்தர் தன் பெயரை  மாற்றி அழைத்ததை கவனித்த ஜமுனா…
“அது என்று ஜாமூன்னு என் பெயர் ஜமுனா….” என்று சொல்ல…
“எனக்கு  ஜாமூன்னா ரொம்ப பிடிக்கும். அது தான்.” என்ற சொல்லோடு… “ம் நேரம் ஆயிடுச்சி போய் தூங்கு.” என்று  சின்ன பிள்ளையை கண்டிப்பது போல் ஜமுனாவிடம் சொன்னான்.
“நான் ஒன்னும் சின்ன பெண் இல்லை.” என்று  சொல்லிக் கொண்டு எழுந்து பூமி அதிர  தாங்கள் குடித்து முடித்த க்ளாசை  சமையல் அறையில் கொண்டு செல்லும் போது அவள் பாதம் வைக்கும் அழுத்ததை பார்த்த சிக்கந்தருக்கு..அவளின் செயல் சின்ன பிள்ளை  போலவே தான் இருந்தது.
 அவளின் செய்கைகளை பார்த்து சிரித்துக் கொண்டே… “சரி சரி நீ சின்ன பெண் கிடையாது. பெரிய பெண் தான்.” என்று அவன் வாய் சொல்லும் செய்து வேறாகவும், அவன் கண் சொல்லும் செய்தி வேறு ஒன்றாகவும் இருந்தது.
ஆனால் ஏற்கனவே பாதி தூக்கத்தில் இருந்த ஜமுனாவுக்கு அவன் பேச்சின் பொருள் புரியாது… “ம் அது.” என்று ஜமுனா செய்த செயல் இன்னும் அவளை சிறு பிள்ளையாக தான் காட்டியது.
இவனும்.. “சரி சரி போய் தூங்கு.” என்று விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் படுத்த சிக்கந்தரின் நினைவு முழுவதும் ஜமுனாவே…
“வயது இருபத்தி நான்கு  சொன்னா… ஆனா இவள் செயல் இன்னும் சின்ன பிள்ளை போலவே இருக்கே…இவளின் இந்த செயல் அவள் பிறந்த இடமான கிராமத்திற்க்கு சரி பட்டு வரும்…
இங்கு  மும்பாய் போன்ற பெரிய நகரத்தில்…பதிமூன்று வருட முன்பே.. சென்னைக்கும் இங்கேயே பெரிய வித்தியாசங்கள் இருக்கும். அதுவும் நான் ஒரளவுக்கு பழகிய  சொஸைட்டிக்கும் மும்பைக்கும் அந்த அளவுக்கு வித்தியாசம்  இல்லாத போதே…
ஒரு சில விசயத்தை பார்த்து முதலில் நான் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். அதில் அன்று  இருக்கும் பெண்கள் அப்போதே மது என்பது சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஏதாவது பார்ட்டி என்றால் கண்டிப்பாக அதில் மதுவும் இருக்கும்.
வீட்டில் வைக்கும் பார்ட்டியிலேயே மதுவை   சர்வ சாதரணமாக அந்த வீட்டு பெண்ணே வந்தவர்களுக்கு  கலந்து  கொடுத்து விட்டு தானும் ஒன்றை கையில் வைத்துக் கொள்வாள்.
சென்னையிலும் பார்ட்டியில் மது இருந்தாலும், வீட்டில் கொடுப்பதில் கண்டிப்பாக இருக்காது. ஏன் தலை முறை தலை முறையாக செல்வத்தில் இருக்கும் தங்கள் குடும்பமே…வீட்டு பார்ட்டில் மது சேர்க்க மாட்டார்கள்.
அதே போல் குடும்பத்துடன் எங்காவது பார்ட்டிக்கு செல்லும் படி ஆனால்…மது ஆராம்பிக்கும் முன்னவே வீட்டு பெண்களை காரில் அனுப்பி விட்டு ஆண்கள் பின் செல்வார்கள்.
அப்படி பார்த்து பழகிய தனக்கு முதலில் இந்த மும்பைய் பிடி பட கொஞ்சம் காலம் ஆனது. இந்த பதிமூன்று வருடத்தில் இன்னும் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறதோ…இன்னும் முழுவதுமாக தெரியவில்லை.
மருத்துவமனையில் ஜீ தன்னிடம் செல்லில் காண்பித்த தொழில் நுட்பத்தை பார்த்து இவனே ஆச்சரிப்பட்டு தான் போனான். 
தன் ஜீ சொன்ன… “சிக்கந்தர் இதில் நமக்கு நன்மையும் இருக்கு  தீமையும் இருக்கு… நன்மை இதோ  உன்னோடு நான் இருந்தாலும், தொழிலை நான் இங்கு இருந்தே பார்த்துக் கொள்கிறேன்.
தீமை இந்த போன் நம்ம சின்னா கையில் பார்க்கும் போது எல்லாம்  எனக்கு பக் பக் என்று அடித்துக் கொள்ளும்.” என்று அன்று தன் ஜீ சொன்னதை கேட்டதோடு இவனும் இந்த ஒரு மாத காலமாய்  புது தொழில் நுட்பத்தில் என்ன என்ன தெரிந்துக் கொள்ள வேண்டுமோ…  அனைத்தும் தெரிந்துக் கொண்டான்.
நான் இனி ஈடுபடும் செயல்களுக்கு, இது உபயோகமாய் இருக்கும் என்று நினைத்து கற்றவனுக்கு…இதை ஜாமூனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே கண் அயர்ந்தான். மறுநாள் விடியல் சிக்கந்தருக்கு  ஜாமூனின் முகத்தில் தான் விடிந்தது.
தன் காதின் அருகில்.. “ஜீ..ஜீ…” என்று அழைக்கும் சத்தத்தில்…ஜீயா அது நான் கூப்பிடுவது ஆச்சே என்று நினைத்து  கண்ணை கசக்கி விட்டு முழித்தவனுக்கு ஏனோ அன்றைய விடியல் மிக அழகானதாய் இருந்தது போல் உணர்ந்தான்.
சிரித்த முகத்துடன் ஜாமூன்.. “என்ன ஜீ எத்தனை தடவை எழுப்புவது…?” என்று கடிந்துக் கொண்டே தான்  எழுந்து நிற்கும் போது தான் போர்த்தி இருந்த போர்வை கீழே விழவும்…
அதை எடுத்த ஜாமூன் அதை மடித்துக் கொண்டே… “ப்ரஷ் பண்ணிட்டு வாங்க.  மாமய்யா  நீங்க எழுந்ததும் பில்டர்  காபி… அதுவும் பெட் காபி தான்  குடிப்பிங்கன்னு சொன்னார்..மாமய்யா சொன்னது போல் பில்டர் காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டேன். 
ஆனா பெட் காபி தர மாட்டேன்.” என்று அவள் மாட்டேன் என்று  சொல்லும் போது அவள் தலை வலது இடது புறமாக ஆட்டிய போது, அவள் காதில் உள்ள ஜிமிக்கியும் ஆட..
அதை பார்த்த வாறே எந்த மறுப்பும் சொல்லாது ப்ரஷ் செய்து விட்டு வந்தவனின் கையில் காபி கப்பை கொடுத்து விட்டு  ஜமுனா அவனின் முகத்தையே பார்த வாறு நின்று விட்டாள்.
“என்ன ஜாமூன்  என்ன என்னையே  பார்த்துட்டு இருக்க…” என்று ஜமுனாவிடம் கேட்டுக் கொண்டே காபியை  குடித்தவனுக்கு அனைத்தும்  சரியாகவே இருந்தது.ஆனால் கொஞ்சம் சர்க்கரை போட்டு இருந்தால் இன்னும்  நன்றாக இருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டே குடித்துக் கொண்டு இருந்தவனிடம்…
ஜமுனா… “காபி நல்லா  இருக்கா…?மாமய்யா சொன்னது போல தான் போட்டேன்.” என்று சொன்னவளின் முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ தான் நினைத்ததை சொல்லாது…
“ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு…என் டேஸ்ட் படியே…” என்று சொன்னான்.
“சரி அப்போ நான் டிபன் பண்ண போறேன்.” என்று சொல்லிக் கொண்டே தன் கையில் உள்ள கோப்பையை  பிடிங்கிக் கொண்டு சென்றவளிடம்…
“சமையல்  செய்ய சர்வண்ட் இருக்காங்கலே… நீ ஏன் செய்யிற…?” என்று கேட்டதற்க்கு.. கதவின் அருகில் சென்றவள் திரும்பி அவனை  பார்த்து…
 “வீட்டு ஆள் செய்வது போல ஆகுமா…?” என்று கேட்டு விட்டு போனவளின் முதுகையே பார்த்திருந்தவனுக்கு… ஏனோ தன் தாயின் நியாபகம் வந்து..தன் தாயோடு ஜமுனாவை ஒப்பிட்டு பார்த்தது.
தன் அம்மா இது போல் தன் அறைக்கு வந்து காபி கொடுத்து இருக்கிறார்களா…? என்று யோசித்தவனுக்கு..கிடைத்த பதில்  இல்லை என்பதே..
அதுவும் தன் சுவை என்ன என்று தெரியுமா…? அதற்க்கும் அவன் பதில் இல்லை என்பதே… அதே போல் இது போல்…ஜமுனா ப்ரஷ் செய்யாது கொடுக்க மாட்டேன் என்று  சொன்னது போல் தன்னை ஏதாவது ஒரு விசயத்தில் திட்டம் செய்து இருக்கிறார்களா…?அதற்க்கும் இல்லை.
இப்படி அனைத்திலும் தன் அன்னைக்கு எதிர் பதமாய் இருக்கும் ஜமுனாவில் இந்த செயல்கள் அவனுக்கு பிடித்தே இருந்தது.
பிடித்தன் என்றால்  இப்போது அவனின் ஜீயின் மகன்  சின்னா ஏதாவது செய்தால் பிடிக்குமே..அதே போல் தான் ஜமுனாவின் இந்த சின்ன சின்ன  செயல்கள் மூலம் சிக்கந்தருக்கு  பிடித்தவள் ஆகி போனவள்..
எப்போது  சின்னாவை போல் பிடித்தவளின் நிலையில்  இருந்து…தன் மனதோடு அவள் மனமும்.. தன் உடலோடு அவள் உடலும் கலக்க வேண்டும் என்ற அந்த பிடித்தம்… எப்போது ஏற்படும்…?
பல நினைவுகளின் தாக்கத்தோடு காலை உணவுக்கு வந்தவன் முன் நீட்டப்பட்ட அடையில் அனைத்து நினைவும் மறந்து போய்..
“எனக்கு இது ரொம்ப பிடிக்கும் இதோட…” என்று மேலும் ஏதோ பேசும் முன் சிக்கந்தரின் தட்டில் வைக்கப்பட தேங்காய் சட்னியில் வாய் அடைத்து போனவனாய்  ஜமுனாவை நிமிர்ந்து பார்த்தான்.
“மாமய்யா சொன்னாங்க…அவனுக்கு அடையோடு தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப பிடிக்கும்.” என்று சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் சென்றுக் கொண்டு இருந்தவள் பின் நாக்கை கடித்துக் மொண்டவளாய்…
“சாரி ஜீ…சாரி மாமய்யா சொன்னதை அப்படியே உங்க குட்ட ரிப்பிட் பண்ணிட்டேனா…அது தான் அப்படி.” என்று சொன்னவளின் செயலும் பேச்சிலும் சிரித்தவனாய்..
“அது என்ன ஜீன்னு கூப்பிடுற…?” என்று கேட்டவனுக்கு..
“உங்களுக்கு மாமய்யா ஜீ…எனக்கு நீங்க ஜீ.” என்று சாதரணமாக சொல்லில் கொண்டே சமையலறையில் இருந்து மீண்டும் ஒரு அடையை சுட சுட எடுத்துக் கொண்டு வந்தவள் அவன் தட்டில்  வைத்து…
“சூடு ஆறதுக்கு முன்ன சாப்பிடுங்க ஜீ.” என்ற ஜமுனாவின் சொல்லுக்கு கட்டுபட்டவனாய் அந்த அடையை பிட்டு வாயில் வைத்தவனின் கண்கள் லேசாக கலங்கி தான் போனது.
“என்ன ஜீ இதுக்கு எல்லாம கண்ணீர் விடுவாங்க… மாமய்யா சொன்னாங்க உங்கள பார்த்துக்கோன்னு அதான் பார்த்துக்கிட்டேன்.” என்று சொன்னவள் தனக்கான அடையை சுட சமையலறைக்கு போனதால்..
அவன் அங்கு வைத்திருந்த  தண்ணீரை முழுவதும்  குடித்தும்  காரம் அடங்காது.. அந்த டையினிங் டேபுளில் வைத்திருந்த ஜாமூனில் இருந்து ஒன்றை அப்படியே வாயில்  திணித்துக் கொள்ளும் போது சரியாக அங்கு வந்த  ஜமுனா…
“சாப்பிடும்  போது அது என்ன ஸ்வீட். இதை சாப்பிட்டு அப்புறம் அதை சாப்பிடலாம்.” என்று கண்டித்து விட்டு கைய்யோடு அந்த ஸ்வீட்டை அவள் எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
குறைந்த பட்சம்… “நீ கொடுத்த அடையில் இருக்கும் காரத்தில் தான் அந்த ஸ்வீட்டை சாப்பிட்டேன்.” என்று சொல்லி இருந்தால், மதியம் சாப்பாட்டாவது அவன் தண்ணீர் ஸ்வீட் இல்லாது சாப்பிட்டு இருக்கலாம். விதி வலியது தான்.
சிரித்துக் கொண்டே உணவை சாப்பிட்டு விட்டு.. சமைலறைக்கு சென்றவன்… “மதிய உணவுக்கு நான் ஏதாவது உதவி செய்யவா…?” என்று கேட்டான்.
“இல்ல… இல்ல… நீங்க உங்க ரூமுக்கு போங்க. நான் சாப்பிடு ரெடியா ஆயிட்ட பிறகு கூப்பிடுறேன். நீங்க அப்போ வந்தா போதும்.” என்று பட பட என்று சொன்னவளின் பேச்சில்..
“ஏய் நான் சமைக்கிறேன் என்றா சொன்னேன் . ஜஸ்ட் எல்ப் தானே செய்யிறேன்னு   கேட்டேன். அதுக்கு ஏன் நீ இப்படி பயப்படுற…?” என்று  கேட்ட்தற்க்கு….
“இல்ல நான் சமைக்கும் போது யாராவது இருந்தா …நான் காய் கட்  பண்றதுக்கு பதிலா என் கைய் கட் பண்ணிப்பேன்.” என்ற ஜமுனாவின் பேச்சில் பயந்து போய் சமையல் மேடையில் இருந்து இறங்கியவன்..
கைய் எடுத்து கும்பிட்டு… “தாயே நீ சமச்ச பிறகே கூப்பிடு.” என்று சென்றவனின் முதுமு பின்… “உங்களுக்கு என்ன பிடிக்குமுன்னு சொல்லிட்டு போங்க ஜீ…” என்ற ஜமுனாவின்  குரலுக்கு..
திரும்பாமலேயே… “உனக்கு என்ன பிடிக்குமோ அதையே செய் ஜாமூன்.” என்று சொன்னவனுக்கு தெரிய வில்லை. மதியம் அவன் எத்தனை ஜாமூனை காலி செய்ய வேண்டி இருக்குமோ என்று…
 
 

Advertisement