Advertisement

அத்தியாயம்…7…1
நிஷா சொன்னது போல் அவ்வளது தூரம் பயணம் செய்ததிற்க்கு  அந்த வெது வெதுப்பான நீரை உடம்பில் ஊற்ற..ஏதோ ஒரு புத்துயிர் பெற்றது போல் உணர்ந்தான் சிக்கந்தர்.
குளித்து விட்டு வந்தவன் நிலை கண்ணாடி முன் தன் முழு உருவத்தையும் பார்த்தவன் கண்ணுக்கு தெரிந்த மாற்றங்கள் அவனை மகிச்சியிலும் ஆழ்த்தியது. துயரத்திலும் ஆழ்த்தியது.
மகிழ்ச்சிக்கு காரணம்…எப்போதும் அவன் முகம் விளையாட்டு பிள்ளை போல் தான் இருக்கும். அவன் உண்மையிலேயே ஒரு விளையாட்டு பிள்ளையாக தான் அப்போது இருந்தான்.
கவலை கொள்ள அவன் வாழ்க்கையில் எதுவும் இல்லை.  பிறந்தது செல்வ செழிப்பான குடும்பத்தில்…படிக்கும் காலத்தில் படிப்பும் சரி அவன் முன்நிலையில் தான் இருந்தான்.
தோற்றமும் அனைவரும் மேடி  என்று கூப்பிடும் அளவுக்கு  அழகாக இருப்பான். அவன் தன் கல்லூரி படிப்பின் கடைசி வருடம் இருக்கும் போது…
அவனின் கார் மோகம் அதையே தன்  அடுத்த இளக்காய் எடுத்தால் என்ன…?என்று யோசித்தான். அவனின் இந்த கார்  மோகத்திர்க்கு காரணம் தன் தந்தையே…
தன் அண்ணன் அன்னை பின் சுற்ற..இவனோ எப்போதும் தன் தந்தை பின் தான்  சுற்றுவான். பள்ளியில்  விடுமுறை என்றால், தன் தந்தையின் கை பிடித்து அவரோடு தான் செல்வான்.
அப்போது தன் தந்தை லான்ச் செய்யும் காரின் வகைகள்..தந்தை வைத்திருந்த கார் ஷோருமில் இருக்கும் காரின்  வகைகளை பார்ப்பவனுக்கு சின்ன வயதிலேயே காரின் பரிச்சயம் உண்டு.
பின் தந்தையின் வழிக்காட்டலில் காரை சிறுவயது முதலே ஓட்டியும் இருக்கிறான். அதாவது அவன் கையில் லைசன்ஸ் வரும் முன்னவே…அதாவது அவன் பதினெட்டாம் வயதிற்க்குள்ளாகவே அவனின் வசம் கார் வந்து விட்டதோடு…அவன் எவ்வளவு வேகம் எடுத்தாலும் காரின் கன்ரோல் முழுவதும் அவனிடமே இருக்கும்.
அனைவரின் பேச்சான… “யப்பா என்ன  ஸ்பீட் சிக்கந்தர் …” என்ற அந்த பாராட்டு இன்னும்  இன்னும் வேண்டும் என மனது தூண்ட…
அப்போது கார் ரேசின் முதன்மை பந்தயகாரனாக இருந்த தன் ரோல் மாடல் கிஷோரிடம் பயிற்ச்சி பெற தன் தந்தையிடம்  கேட்டான்.
அவரும் சிக்கந்தரை  உடனே கிஷோரின் முன் நிறுத்தி விட்டான். ஆனால் அதன் பின் அவனின் தந்தையின் செல்வாக்கு எல்லாம் அங்கு வேலை செய்யவில்லை.
கிஷோர் தன் தந்தையிடம் பேசிய வார்த்தை இன்றும் அவன் மனதில்நினைவு  இருக்கிறது… “உங்களை தெரியும் சார்…அதுவும் இந்த பீல்டுல இருந்துட்டு உங்கள  தெரியாம போகுமா…?” என்று தன் ஜீ  தன் தந்தையிடம் பவ்யமாக பேச்சை ஆராம்பித்தவர்..
பின்… “ஆனா அதுக்காக மட்டும் எல்லாம் உங்க மகனுக்கு பயிற்ச்சி கொடுக்க முடியாது. அவனிடம் இருக்கும் திறமை பொறுத்தே…” என்று தயவு தாட்சயணம் இன்றி சொன்னார்.
அன்று வர்மா குடும்பம் என்றால், எதுவும் செய்ய காத்திருந்த சூழ்நிலையில் பேசிய தன் ஜீயின் பேச்சை மிகவும் ரசித்தான் சிக்கந்தர்.
தன் தந்தை கிஷோரிடம் ஏதோ பேச ஆராம்பிக்க… “அதான் ஜீ சொல்லிட்டிங்கல்லே டாட்…திறமைக்கு  மதிப்புன்னு…பார்த்தே கொடுக்கட்டும்.” என்று தன் ரோல் மாடலில் வைத்திருந்த சிக்கந்தர் அன்றில் இருந்து கிஷோரை தன் குருஜீவே ஏற்றுக் கொண்டான்.
பின் தன்  திறமை பார்த்து தன் தந்தையிடம் பாராட்டியது. பின் அவர்களுக்குள் வளர்ந்த அந்த நட்பா…?இல்லை அதற்க்கும் மேல் இருக்கும் பெயர் சொல்ல முடியாத உறவா…?அவனுக்கே தெரியாது.
ஆனால் தன் தந்தைக்கு  பின் அந்த இடத்தில் தன் ஜீயை வைத்து விட்டான். அது மட்டும் உண்மை…காரணம் இன்று  வரை அவனுக்கே தெரியாது. 
அப்போது எல்லாம் கிஷோரிடம் தெரியுடும் அந்த ஆண்மை கலந்த கம்பீரத்தில்…
“ஏன் ஜீ உங்கள போல நான் இல்லை…?” என்று சிக்கந்தர் கிஷோரிடம் நிறைய முறை  கேட்டு இருக்கிறான்.
“என்னை போல் நீ எப்படிடா இருக்க முடியும்…? நீ எனக்கு தம்பி இல்லையே…?” என்று  சிக்கந்தர் என்ன சொல்ல வருகிறான் என்று  தெரிந்தே  சொன்னான்.
“ஜீ நான் சொன்னது நீங்க நல்லா  சும்மா ரித்திக் ரேஷன் போல இருக்கிங்க..நான் பார்…” என்று கேட்டதற்க்கு…
“நீ என்னடா உன்னை பார்த்தவங்க எல்லோரும் மேடின்னு கூப்பிடுவது போல சும்மா சாக்லெட் பாய்யா இருக்க…”
“எனக்கு சாக்லெட் பாய் லுக் வேண்டாம்.  ஹான்சம் லுக் தான் வேண்டும்.” என்று அன்று  தான் எப்படி இருக்க நினைத்தானோ இன்று அப்படி இருந்தான்.
இந்த  ஹான்சம் லுக் வயதால் வந்ததா…தான் படுத்தே இருந்ததால்  கை காலுக்கு அசைவு தேவை என்று  தனக்கு ஏற்பாடு செய்த  பிசியோ  தெரபி திறமையால் வந்ததா…இல்லை சூப்..ஜூஸ்…என்று சத்துமிக்க உணவை இந்த பதிமூன்று வருடம் உண்ணதால் வந்ததா…அது சிக்கந்தருக்கே தெரியவில்லை.
ஆனால் அன்று தான் எப்படி இருக்க வேண்டும் என்று சிக்கந்தர் ஆசை பட்டானோ அது போல் அவன் உருவத்தில் இருக்க…முகத்தில் முன் சொன்ன அந்த சாக்லெட் லும் காணமல் போய் விட்டது.
தேடினாலும் குழந்தை தனம் என்பது  அவன் முகத்தில் மருந்துக்கு இல்லாது முகத்தில் கடினம் தெரிய…கொஞ்சம் உற்று பார்த்தால் வயதில் முதிர்ச்சி தெரிகிறதா என்று அவன் கண்னாடி முன் தன் முகத்தை மிக நெருக்கத்தில் கொண்டு போகும் போது அங்கு வந்த கிஷோர்…
அவன் தலையை தட்டிய வாறே… “ஏன்டா இங்கு என்னடா செஞ்சிட்டு இருக்க…அங்கு பொம்பள பிள்ள ஜமுனாவே ரெடியாகி சாப்பிட வந்துட்டா…
நீ என்னன்னா…?கண்ணாடி முன்னாடி நின்னுட்டு முகத்தை உத்து உத்து பார்த்துட்டு இருக்க…?நான் தெரியாம தான் கேக்குறேன் இவ்வளவு கிட்ட உன் முகத்தை பாக்குறியே உனக்கு  பயமா இல்ல…?” என்று சிக்கந்தரின் மனது தெரியாது கிஷோர் சாதரண மனநிலையின் பேசினான்.
“பதிமூன்று வருடமா பார்க்களலே ஜீ..அதான் பதிமூன்று வருடத்தையும் சேர்த்து  வெச்சி மொத்தமா இப்போ பார்க்கிறேன்.” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு சட்டென்று அவன் முகத்தை  கூர்ந்து பார்த்த கிஷோர்…
“என் கிட்ட அதை பத்தி பேசாதே…பேசாதேன்னு சொல்லிட்டு நீ தான் அதையே நினச்சிட்டு இருக்க சிக்கந்தர். இது உனக்கு நல்லது இல்ல…
உன் நிலை வரக்கூடாது தான். ஆனால் வந்துட்டுச்சி…அதுக்கு பிறகு என்ன செய்யனும் தான் பாக்கனுமே தவிர..அதையே நினச்சிட்டு இருந்தா..இன்னும் இன்னும் உன் நிலை மோசமா தான் ஆகும்.
ஏன்டா கோமாவில் இருந்து எழுந்த உடன் கூட நீ இப்படி பேசலியேடா…அதுக்கு அடுத்து என்ன என்று தானே என் கிட்ட பேசினே..நான் கூட ஆச்சரியப்பட்டு போனேனடா..ஆனா இப்போ என்ன திடிர் என்று இப்படி பேசுற…?” என்று கேட்ட கிஷோருக்கு  பதில் சொல்ல தான் சிக்கந்தரால் முடியவில்லை.
கிஷோர் சொன்னது போல் கோமாவில் இருந்து எழுந்த போது கூட நான் இந்த அளவு பலவீனம் பட்டு போகவில்லையே…இப்போது மட்டும் ஏன்…எப்போதிலிருந்து என்று  யோசித்தவன் கண் முன்  அவனின் ஜாமூன் வந்து நின்றாள்.
அவளின் முகம் கண் முன் வரவும், அதிர்ந்து போனவனாய் சிக்கந்தர் தன் தலையை உலுக்கி கொள்ள…அதை  பார்த்த கிஷோர் … “ஏய் சிக்கந்தர் என்ன  பண்ணுது…?” என்று பதறி போய் தன் கைய் பற்றிய தன் ஜீயின் முகத்தை பார்த்த சிக்கந்தருக்கு குற்றவுணர்வு கடலளவு பெருகியது.
‘என்ன செய்கிறேன் நான்…என் ஜீக்கு என்ன செய்ய போகிறேன் நான்…’ என்று அவன் மனசாட்சி கேட்கும் கேள்விக்கே அவன் பதில் சொல்ல முடியாதவனாய் கண் மூடி நின்றுக் கொண்டான்.
அதை பார்த்த கிஷோருக்கு இன்னும் தான் பதட்டம் கூடி போனது… “ஏய் என்னடா பண்ணுது சொல்லி தொலையேன்டா…” என்று  கிஷோர் கத்திய பின் தான் தன் சுய நினைவுக்கு வந்த சிக்கந்தர் பின் தன்னை தேற்றியவனாய்…
“ஒன்னும் இல்ல ஜீ…பழையதை  கொஞ்சம் நினச்சிட்டு இருந்தேன். அதான்.” என்று சொன்னவனை இரண்டு குத்து கித்திய கிஷோர்…
“கொஞ்ச நேரத்தில் கதி கலங்க வெச்சிட்டியேடா…” என்று சொல்லி விட்டு  சிக்கந்தரை  கைய்யோடு அழைத்து  சென்றான் கிஷோர்.
சிக்கந்தர் கீழே செல்லும் போது நிஷா … “சாப்பிடு ஜமுனா உன் மாமய்யா இப்போ வந்துடுவாரு.” என்று சொல்லிக் கொண்டு இருக்க…
அதற்க்கு ஜமுனா “பரவாயில்ல அட்டா மாமய்யா வந்துடட்டும்.” என்று நிஷாவுக்கு ஜமுனா பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அங்கு  வந்த இருவரையும் பார்த்து நிஷா…
“சீக்கிரம் வந்து சாப்பிட மாட்டிங்களா…?பாரு ஜமுனா உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா…” என்று கடிந்துக் கொள்ள…
அதை கவனியாதவன் போல சிக்கந்தர் ஆமா… “சின்னா எங்கே…?” என்று  சிக்கந்தர் கிஷோர் மகனை விசாரித்தான்.
“ஆமாம் நானும் கவனிக்கல பாரேன் சின்னா எங்கே மாமய்யா…?” என்று ஜமுனா  கேட்ட்தற்க்கு..
நிஷா… “என் அம்மா வீட்டில் இருக்கான். நாளைக்கு கிஷோர் கூட்டிட்டு வந்துடுவார்.” என்ற பதிலில் ஜமுனாவின் முகம் வாடி போய் விட…
சிக்கந்தரோ சந்தேகத்துடன் நிஷாவை பார்த்த வாறு… “பாபி எங்க  கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறிங்களா…?” என்ற கேள்விக்கு..
திணறிய வாறு… “மறைக்கிறதா அதெல்லாம் ஒன்னும் இல்லையே…” என்று நிஷா பதறி போய் பதில் சொன்னதிலேயே ஏதோ மறைக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்ட சிக்கந்தர்..
“இப்போ நீங்க என்ன என்று சொல்லலேன்னா நான் சாப்பிட மாட்டேன்.” என்று அடமாய் மீண்டும் மேல  போக பார்த்தவனின் கை பற்றிய நிஷா…
“மூன்று நாள் முன் என் அண்ணன் இறந்துட்டார் சிக்கந்தர்.” என்ற பதிலில்..
சிக்கந்தர்  அதிர்ந்தவனாய்… “எப்படி…?” என்று கேட்டான் என்றால் ஜமுனா…தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்தவளாய் நிஷாவின் தோளை ஆறுதலாய்  பற்றிக் கொண்டாள்.
“சிவியர் ஹார்ட் அட்டாக்.”  என்று வருத்தம் தோய்ந்த முகத்தில்  நிஷா சொன்னாள்.
“மூன்று நாள் முன்ன… ஆனா நீங்க இப்போ உங்க அம்மா  பாபி கூட இல்லாம்மா இங்கு இருக்கிங்க…?” என்று சிக்கந்தர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தயக்கத்துடன் தன் கணவன் கிஷோரை நிஷா பார்த்தாள்.
“ஓ இதெல்லாம் இவருடைய வேலை தானா…” என்று கிஷோரை பார்த்த வாறு கேட்டவன்..
பின் நிஷாவின் பக்கம் திரும்பி.. “பாபி உங்க அம்மா வயசானவங்க…உங்க அண்ணன் குழந்தைங்க…அப்புறம் உங்க பாபி…அவங்களுக்கு இப்போ தான் உங்க ஆறுதல் தேவை. இப்போ நீங்க அவங்க பக்கத்துல இருப்பது தான் முக்கியது.
சொந்தம் எல்லாம் இது போல் நேரத்தில் உதவாம அப்புறம் எதுக்கு நாம சொந்தம் என்று சொல்லிட்டு இருக்கோம் பாபி..
நீங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு பாபி. ஜீ என்ன தான் சொல்லி இருந்தாலும், நீங்க அங்கே இருந்து வந்து இருக்க கூடாது.” என்று  சிக்கந்தர் நிஷாவிடம் கடிந்துக் கொண்டான்.
ஜமுனாவும்… “எனக்காக தான் அங்கு இருந்து இங்கு வந்திங்களா …” என்று வருத்தத்துடன் அவள் கேட்க..
“சீ சீ..உனக்காக மட்டும் இல்ல ஜமுனா..நீ ஏன் இப்படி நினைக்கிற…” என்று நிஷா ஜமுனாவின் வருத்தத்தை போக்க இப்படி சொன்னாள்.
“அப்போ எனக்காக வந்திங்களா…?” என்று சிக்கந்தர் நிஷாவை பார்த்து கேட்டான்.
இப்போதும் நிஷா தயக்கத்துடன் கிஷோரை தான் பார்த்தாள். “இப்போ புரியுது.. எல்லாம் இவரோட வேலை தான்.” என்று இப்போது சிக்கந்தர் கிஷோரை பார்த்து முறைத்தான்.
“அது தான் சின்னாவை விட்டு வந்து இருக்கா இல்ல. அப்புறம் என்ன…?” என்று கிஷோர் தெரியாது வாய் விட்டு விட..
“ஆமாம் ஆமாம்  ரொம்ப பெரிய மனுஷனை தான் விட்டுட்டு வந்து இருக்கிங்க…அவனோட அவங்களுக்கு யாரு ஆறுதல் சொல்ல முடியும்…?” என்று சிக்கந்தர் கேட்டான்.
இது வரை தயக்கத்துடன் பேசிக் கொண்டு இருந்த நிஷா…சிக்கந்தரின் இந்த  பேச்சில்…  “இல்ல சிக்கந்தர் அம்மாக்கு சின்னா இருப்பது தான் இப்போதைக்கு மிக பெரிய ஆறுதலே…என்னை பார்த்தாளே… நிஷா உன் பய்யா இப்படி…உன் பய்யா அப்படின்னு எப்போவும் அண்ணாவை பத்தியே பேசிட்டு… அவங்க நியாபகமாகவே இருக்காங்க…
ஆனா சின்னா பண்ற அட்டகாசத்துல குறும்புல… அவங்க கவலை மறந்து..அவனை பாத்துக்குறதிலேயே அவங்க நேரம் போயிடுது..அதே போல் தான் அண்ணன் பசங்களுக்கு சின்னா இருந்தா அவங்க டாட் நியாபகம் வராது… இவன் கூட கொஞ்சம் விளையாடுறாங்க.” என்று சொல்லியும்..
“இல்ல பாபி..நீங்க என்ன தான் சொன்னாலும், இது போல நேரத்தில் நீங்க இங்கு வந்து இருக்க கூடாது.” என்று திட்ட வட்டமாய் சொன்னவன்..
“ஜீ நீங்க என்ன செய்யிறிங்க… நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டு…பாபிய அவங்க அம்மா வீட்டில் விட்டுட்டு….. நீங்களும் அவங்களுக்கு ஆறுதலா இரண்டு நாளா இருந்துட்டு வாங்க…” என்று  சொல்லிக் கொண்டு வந்த சிக்கந்தர் பேச்சை ஏதோ சொல்லி தடுக்க வந்த கிஷோரை பேச விடாது…
“நியாயமா பார்த்தா அவங்க அண்ணன் இறந்த அன்னைக்கே நீங்க பாபியோட அம்மா வீட்டுக்கு போய் இருக்கனும்.நீங்க அந்த நேரத்தின் என்னோட இருந்துட்டு..சரி சரி  போனதை  பேசி பிரயோசனம் இல்லை. அதான் இப்போவாவது நீங்க அவங்களுக்கு ஆறுதலாய் இரண்டு நாள் இருந்துட்டு வாங்க ஜீ.” என்று சொன்னவனை யோசனையுடம் கிஷோர் பார்க்க…
“என்ன ஜீ உங்க அக்கா கூத்துற பத்தி யோசனையா..வேணுமுன்னா ஜாமூனாவையும் கூட்டிட்டு போங்களேன்.” என்று அதற்க்கும் சிக்கந்தர்  கிஷோருக்கு வழி  சொன்னான்.
“இல்ல அவள கூட்டிட்டு போயிட்டா..அப்புறம் உன்னை யார் பார்த்துப்பா…” என்று சொல்லி இருவரும் அவர்கள் இருவரையும் அங்கு விட்டு விட்டு நிஷா அம்மா வீட்டிற்க்கு சென்றனர்.
ஜமுனாவுக்கு சிக்கந்தர் துணையா…?சிக்கந்தருக்கு ஜமுனா துணையா…?பார்க்கலாம்.
 

Advertisement