Advertisement

“ஓ…யெஸ் யெஸ்…” என்று சிக்கந்தர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கிஷோரின் வீடு வந்து விட்டது.மன்னிக்கவும் பங்களா பெரிய பங்களா வந்து விட்டது என்று  தான் சொல்ல வேண்டும்.
சிக்கந்தர் அந்த பங்களாவை பார்த்து மகிழ்ந்து போனவனாய்… “சூப்பர் ஜீ..கை கொடுங்க.” என்று சிக்கந்தர்  தன் சந்தோஷத்தை குரலிலும் காட்டினான். முகத்திலும் காட்டினான்.
கிஷோர் முன் இருந்தது அடுக்கு மாடி கட்டிடம்.அனைத்து வசதிகளும் கொண்ட உயர் தர வகுப்பினர் மட்டும் இருக்கும் குடியிருப்பு தான் அது..
ஆனால்  இது அந்த பங்களாவை பார்க்க பார்க்க… “ஜீ  சும்மா கலக்கிட்டிங்க ஜீ…உண்மைய சொல்லுங்க…இது நம்ம பாபியோட டேஸ்ட் தானே…” என்று தன் குருஜீயை கலாய்த்துக் கொண்டே வந்தவன்..
அப்போது தான் ஜமுனாவின் நியாபகம் வந்தவனாய்… காரின் பின் பக்கம் திரும்பிய  வாறு பார்த்தவன்… “என்ன ஜாமூன் உன் மாமய்யா  இல்லு பிடிச்சி இருக்கா…?” என்று கேட்டான்.
“ஆ..ஆ பிடிச்சி இருக்கு.” என்று சொன்ன ஜமுனாவின் குரல் என்னவோ போல் இருக்க சிக்கந்தர் ஜமுனாவை உற்று பார்த்தான்.
அவள் கலங்கிய தோற்றமும், முக்கியமாய் அவள் கண்களில் தெரிந்த அந்த கலக்கத்தில்  முன் சீட்டில் வைத்திருந்த அவள்  கை மீது கை வைத்தவனாய்…
“என்ன  ஜாமூன் என்ன…?” என்று கேட்ட சிக்கந்தரின் குரலில் வேறு பாட்டால் தான் கிஷோர் சிக்கந்தர்  ஜமுனா இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
பாவம் கிஷோருக்கு  சிக்கந்தரின் குரல் மாறுபட்டு தெரிந்த அளவுக்கு, தன் அக்கா மகளின் கலங்கிய முகமோ…கலங்கிய கண்களோ தெரியவில்லை  போல்…
“என்னடா என்ன…?” என்று கிஷோர் சிக்கந்தரை பார்த்து தான் கேட்டானே தவிர ஜமுனாவை பார்த்து எதுவும் கேட்கவில்லை.
“இல்ல ஜீ ஜாமூன் ஒரு மாதிரியா இருக்கா…” என்று சிக்கந்தர் சொல்லவும் தான் கிஷோர் தன் அக்கா மகளை பார்வை இட்டான்.
பார்வை இட்டு கூட கிஷோருக்கு ஒன்னும் தெரியாது… “அவ நல்லா தானேடா இருக்கா…?” என்று  சிக்கந்தரிடம் சொன்ன கிஷோர் ஜமுனாவிடம்…
“என்ன ஜமுனா ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டான்.
“ஒன்னும் இல்ல மாமய்யா…நான் நல்லா தானே இருக்கேன்.” என்று சொன்னவளின் முகமும் சரி …கண்களும் சரி… இப்போது முன் இருந்த கலக்கம் இல்லாது சாதரணமாக இருந்தது. இதையும் நம் சிக்கந்தர் கவனித்தான் தான்.
ஆனால் இம்முறை கிஷோரிடம் எதுவும் சொல்லாது…ஜமுனாவிடம் எதுவும் கேட்காது  ஜமுனாவை அவளுக்கே தெரியாது  கண் காணித்தான்.
கார் அந்த பங்களாவின் முன் நிற்கவும், நிஷா கிஷோரின் மனைவி ஓடி வந்தவள்..
காரின் முன் பக்கம் இருந்து சிக்கந்தர் இறங்க… பின் பக்கம் இருந்து ஜமுனா இறங்க…யாரை முதலில் வரவேற்பது என்று ஒரு நிமிடம் நிஷா நின்று  விட்டாள்.
“பாபி…” என்று சிக்கந்தர் அழைக்க அவனிடம் செல்ல பார்த்த  நிஷாவின் கால்கள் சிக்கந்தரின் கண் அசைவில் ஜமுனா பக்கம் சென்றது.
“எப்படி டா இருக்க…?” என்று பாசத்துடன் ஜமுனாவை அணைத்துக் கொண்டாள் நிஷா…
ஜமுனா நிஷாவின் அணைப்பில் அவள் கலக்கம் முழுவதும் நீங்கியவளாய்.. “அட்டா…” என்று ஜமுனாவும் அணைத்துக் கொண்டாள்.
“என்னாலே அம்மாவோட இறப்புக்கு வர முடியலடா ..சாரி ஜமுனா…” என்று நிஷா மன்னிப்பு கேட்டாள்.
“பரவாயில்ல அட்டா…நீங்க மாமய்யா கூட வந்தா பரவாயில்ல. தனியா வந்து இருந்தா என் அத்தம்மா  உங்களையும் பிரச்சனைக்கு இழுத்து விட்டு இருப்பாங்க. பரவாயில்ல.” என்று ஜமுனா சொன்னதும்…
“அதை தான் உங்க மாமய்யாவும் சொன்னாங்க..தனியா போனா  பிரச்சனை. நான் சிக்கந்தருக்கு சரியா ஆயிட்ட பிறகு நானே போய் அவளை நம்மோட அழச்சிட்டு வந்துடுறேன். நீ இப்போ போமாக இருப்பது தான் நல்லது. அவங்களுக்கு நாம ஜமுனாவை கண்டுக்க மாட்டோம் என்று..அவங்க எது செய்வது என்றாலும் நிதானமா செய்வாங்க. நீ போகாதே…என்றதால் தான் நான் வரல ஜமுனா…” என்று தான் வராத்திற்க்கு உன்டான காரணத்தை நிஷா சொன்னாள்.
“தெரியும் அட்டா…மாமய்யா சொன்னது தான் சரி.” என்று ஜமுனா சொன்னதும்…
நிஷா அங்கு இருந்த வேலையாளை அழைத்து “டிக்கியில் இருப்பதை எடுத்து வை.” என்று சொன்னவள்..
பின் சிக்கந்தரிடம் நிஷாவின் கால் செல்லும் போதே …அவள் கண்கள் கலங்கி விட்டது.தன் கணவனுக்கு இந்த சிக்கந்தர் எவ்வளவு முக்கியமனாவன் என்பதை நேரிலும் அறிந்து இருக்கிறாள்…
சிக்கந்தர் படுத்ததில் இருந்து… மூச்சுக்கு மூச்சு  சாப்பிடும் போதும் சரி… விளையாடும் போதும் சரி….ஒரு இட்ததை பார்த்தாலும் சரி…ஒரு நிறத்தில் உடை உடுத்தும் போது சரி…
“இது என் சிக்கந்தருக்கு பிடிக்கும்…” என்ற வார்த்தையை தன் கணவர்  சொல்லாது இருக்க மாட்டான் என்று அறிந்தவள் ஆயிற்றே…நிஷா…
“எப்படி இருக்க  சிக்கந்தர்…” என்று சிக்கந்தரின் கை பிடித்து கேட்கும் போதே நிஷாவின் கை  நடுங்க ஆராம்பித்து விட்டது.
“பாபி…” என்று சிக்கந்தரும்… “நிஷா பேபி…” என்று கிஷோரும் ஒரு சேர அதட்டவும், தன் கண்ணீரை துடைத்து விட்டு கொண்டவள்..
தன்னை சாதரணமாக காட்டிக் கொண்டவளாய்… “எப்படி இருக்க சிக்கந்தர்…?” என்று திரும்பவும் கேட்டாள்.
“நீங்களா  இருக்கும் போது எனக்கு என்ன பாபி …நல்லா இருக்கேன்.” என்று சொன்னவன் நிஷாவின் கையை பற்றிக் கொண்டவனாய்…
“கவலை படாதிங்க பாபி…நல்லா ஆகிட்டேன்.” என்று நிஷாவுக்கு சிக்கந்தர் ஆறுதல் சொன்னான்.
“ம்  நீங்க ரொம்பவே நல்லா ஆயிட்டதா உங்கள் ஜீ சொன்னாரு..சொன்னாரு…” என்று சிக்கந்தரிடம் சொல்லிக் கொண்டே…
“என்ன சிக்கந்தர்  பெண்ணை பார்த்துடலாமா…?” என்று  தொடர்ந்து நிஷா பேச…
தன் ஜீ எதை தன் நிஷா பேபியிடம் சொல்லி இருக்கிறார் என்று அறிந்தவனாய்..
“பாபி..என்ன நீங்க எவ்வளவு தூரம் ட்ராவல்  பண்ணி வந்து இருக்கோம். வெளியிலேயே வெச்சி பேசிட்டு இருங்கிங்க.” என்று கடிந்துக் கொண்ட சிக்கந்தர்…
“வா ஜாமூன் இவங்க நம்மை கூப்பிட மாட்டாங்க..நாமே போனா தான் உண்டு.” என்று சொல்லி ஜமுனாவின் கை பிடித்து வீட்டின் உளழைத்து சென்றான்.
இவ்வீட்டிலும் சிக்கந்தர் தன் வலது காலை தான் எடுத்து வைத்தான். அதுவும் ஜமுனாவின் கை பற்றியவனாய்..இது அனைத்தும் அவன் ஏதோ நினைத்து எல்லாம் செய்யவில்லை.
சாதரணமாக அவன் வளர்ந்த சூழ்நிலை..பிறந்தது சென்னையில் உயர் மட்டத்தில் பிறந்து…பார்ட்டி …பப்..என்ற கலாச்சாரத்தில் வளர்ந்து…மும்பை ரேசுக்காக வந்து போனதோடு …அதிகம் இங்கு தான் ஆறு வருடங்கள் சிக்கந்தர் இருந்தான்.
அதனால் இந்த கை பற்றல் எல்லாம் அவனுக்கு சாதரணமாக தான் இருந்தது. ஜமுனாவும்  அவன் கை பற்றலை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு சமயம் வயது கம்மியாக இருந்து இருந்தால், அவள் பிறந்த கிராமத்தில் இந்த கைய் பற்றல் என்ன…? ஆண்மகனிடம் பேசுவது கூட தவறு என்று சொல்லி வளர்க்கப்பட்டவளுக்கு..
சிக்கந்தரிடம் பேச  கூட தயங்கி இருப்பாள். சிக்கந்தர் தன் மாமய்யாவின் நண்பனாய் அறிமுகம் ஆனதால் இதை பெரியதாய் எடுத்துக் கொள்ளாது…
“கைய விடுங்க.” என்று ஜமுனா சாதரணமாக தான் சொன்னாள்.
“ஓ…” என்றதோடு  சிக்கந்தரும் அவள் கையை விட்டு  விட்டவனாய்…
“சரி வா…வா…” என்று  அந்த பங்களாவை  சுற்றி  பார்த்துக் கொண்டே பேசியவனாய் உள்நுழைந்தான்.
நிஷா… “ வீடு பிடிச்சி இருக்கா…” என்று கேட்க..
“ம் சமையா இருக்கு பாபி.” என்று சொன்னவனுக்கு…
“மேல முதல் ரூம் உனக்கு ரெடி பண்ணி இருக்கு சிக்கந்தர்.” என்று சொன்னதும்…
“ம்..ஒகே…” என்று சொல்லி இரண்டடி எடுத்து வைத்த சிக்கந்தர் பின் திரும்பி… “ஒரே வாரம் தான் பாபி..பின் என் இடத்திற்க்கு போயிடுவேன்.” என்று சட்டதிட்டமாக சொன்னவனின் பேச்சுக்கு..
“ஏன்..உனக்கு இங்கு என்ன பிரச்சனை…?” என்று நிஷா சிக்கந்தரின் பேச்சுக்கு மறுப்பு சொல்லிக்  கொண்டு இருக்கும் போது…
கைய் பேசியின் மூலம் முக்கியமான விசயத்தை தன் பிஏ தீபக்கிடம் பேசி விட்டு  அப்போது தான் அங்கு வந்த கிஷோர் இவர்களின் பேச்சை கேட்டு…
தன் மனைவியிடம்… “நிஷா பேபி…அவனை அவன் விருப்பத்துக்கு விட்டு விடு.” என்று  கிஷோர் தன் மனைவியை தான் அடக்கினானே தவிர… சிக்கந்தரை இங்கு தான் தங்க வேண்டும் என்று அவனை அறிந்தவனாய் கட்டயப்படுத்த வில்லை.
“என்ன கிஷோர்…” என்று மீண்டும் நிஷா தன் எதிர்ப்பை தெரிவிக்க…
“நிஷா பேபி…அடுத்த மாசம்  நம்ம கார் லான்ச்..அதுவும் நானும் அவனும் சேர்ந்து தான் அறிமுகப்படுத்த போகிறோம்.அடுத்து அவனுக்கு ஒரு  பெண்ணை பார்த்து கட்டி வைக்கனும்.. அப்போ அவன் தனியா இருந்தா தானே பெண் வீட்டுக்கும் நல்லது. அவனுக்கும் நல்லது.” என்று இருக்கும் எதார்தத்தை கிஷோர் சொன்னதும் தான் நிஷா அமைதியாகி போனாள்.
சிக்கந்தருக்கு பெண்  பார்க்க வேண்டும் என்று கிஷோர் சொன்னதும், ஜமுனாவின் பார்வை தன்னால் சிக்கந்தரை பார்க்க..அப்போது சிக்கந்தரும் ஜமுனாவை தான் பார்த்துக் கொண்டு இருந்ததால்…
ஜமுனா தன்னை பார்க்கவும் சிக்கந்தர்…“என்ன ஜாமூன் உனக்கும் பையன பார்த்துடலாமா…?” என்று கேட்டதும்..
“ம்.. ம் வேண்டாம்..வேண்டாம்.” என்று ஜமுனா அவசரமாக மறுத்தாள்.
“ஓ அப்போ ஜாமூனுக்கு  கல்யாணமே செய்துக்க எண்ணம் இல்லையா…?” என்று கேட்க…
அதற்க்கும் அவசரமாய்… “ஆ  செய்துப்பேன். செய்துப்பேன்.” என்று மறுக்க…
கிஷோர் தான்.. “ஏன்டா எப்போ பார்த்தாலும் அவளை வம்புக்கு இழுத்துட்டு இருக்க..போங்க இரண்டு பேரும் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க.சாப்பிடலாம்.” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

Advertisement