Advertisement

அத்தியாயம்…6 
சிக்கந்தர் ஏதோ டென்ஷனில் உள்ளான் என்பது மட்டும் கிஷோருக்கு புரிந்து போயின…பதிமூன்று வருடம் முன் கூட..இதே போல் தான் ஏதாவது டென்ஷன் என்றால்..சிகரெட் தேவைப்படும்..இல்லை என்றால் இது போல் தான் பின் தலை கோதிக் கொண்டே தனிமை நாடி சென்று விடுவான்.
இன்றும் அவன் அதே போல் செய்ததை பார்த்து ஆண்டு கணக்கில் படுத்து இருந்தாலும், அவன் குணநலன்கள் மட்டும் மாறவில்லை என்று நினைத்த கிஷோருக்கு தெரியவில்லை. அவன் குணநலனின் மட்டும் இல்லை…
அவ்வப்போது அவன் வயதே  மறந்தவனாய்  தான் ஆகிவிடுகிறான் என்று…ஆம் சிக்கந்தர்  கிஷோர் தன் மனைவியை டாலி என்று கொஞ்சும் போது எல்லாம் அப்போது  இதே வார்த்தையை தான் சொல்வான்.
இப்போதும் கிஷோரின்  அந்த கொஞ்சல் பேச்சுக்கு தன்னால் சிக்கந்தரின் வாயில் இருந்து… “சின்ன பையன்…” என்று தன்னால் வார்த்தை வந்து விட்டது.
அதை ஜமுனா சொன்ன போது தான் அவனின் இன்றைய வயதே அவன் நினைவுக்கு வந்து புத்தியில், சுத்தியாலடித்தது போல் உரைக்க, அதிர்ந்து  போய் நின்று விட்டான்.
ஆம் அவன் நினைவில் ஆக்ரமித்தது அனைத்தும் அவன் இருபத்தியாறு வயதில் இருப்பதே…அவனே சில சமயம் தான் கோமாவில் இருந்ததை பேசினான் தான்.
ஆனால் அது அவன் மூளை எடுத்துரைத்து சொன்னது. மூளை  எப்போதும் அலார்ட்டா இருக்காது தானே…மிக நெருங்கியவர்களிடமோ…இல்லை நெருங்கியவர்களை பற்றி  பேசும்  போதோ…
தன்னால் மனதில் தோன்றுவதை தான் வார்த்தைகளாய்ய் வெளிவருமே தவிர…இது சரியா…?இது தவறா…?என்று கணக்கு பார்த்து வராது. அதே போல் தான் சிக்கந்தரின் இன்றைய சூழ்நிலை இருந்தது.
அவனின் மனதுக்கு கிஷோர் நெருக்கமானவன் தான். ஆனால் ஜமுனா நெருக்கமானவளா…?தெரியவில்லை. ஆனால் எதையும் யோசிக்காது சிக்கந்தர் ஜமுனாவிடம்…
“சின்ன பசங்க எதிரில் என்ன பேச்சு…?” அவளையும் தன்னோடு சேர்த்து பேசி விட்ட பிறகு  கூட தன் வயதை அவன் உணர வில்லை.
ஜமுனா… “நீங்க சின்ன பையனா…?” என்று நேரிடையாக கேட்ட பிறகு தான்…அதன் உண்மை தன்மையில் அதிர்ந்து போய் விட்டான்.
அதன் கணம் அவனால் தாள முடியவில்லை. படுக்கையில் விட்டு எழுந்த போது உணராத பாரம்…தன் அம்மாவே தன்னை கருணை கொலை செய்ய துணிந்தார்கள் என்று தெரிந்த பின் உணராத பாரத்தை இன்று ஜமுனாவின் வாய் மொழி மூலம் நிதர்சனம் உரைக்க உரைந்து நின்று விட்டான்.
வெளியில் வந்தவனுக்கு…”எப்படி என் வயதை மறந்தேன். நான் முப்பத்திஒன்பதை கடந்த ஆண்மகன்…சின்ன பையன் போல கேலி கிண்டல் பேசி சிரித்துக் கொன்டு இருக்கிறேன்.
அந்த சின்ன பெண் என்னை பற்றி என்ன நினைப்பாள்…? யோசிக்க யோசிக்க…தலை வலி மண்டையை பிளப்பது போல் இருந்தது.
காரின் பக்கத்தில் நின்றுக் கொண்டு ஓட்டுனர் சிகரெட்டை பிடித்துக் கொண்டு இருக்க..அவனை நோக்கி  சிக்கந்தர் சென்றான்.
அவனை பார்த்ததும்… அந்த ஓட்டுனர் அவசரமக தன் கையில் உள்ள சிகரெட்டை கீழே போட பார்க்க… “ஏய்..போடாதே போடாதே..” என்று அவன் அருகில் சென்ற சிக்கந்தர்,…
“வேறு சிகரெட் இருக்கா…?” என்று அவன் விரலில் இருக்கும் சிகரெட்டை பார்த்துக் கொண்டே கேட்டான் .
ஓட்டுனரிடம்  சிகரெட்  இல்லை என்றால்  அவன் பிடித்த சிகரெட்டை கூட வாங்கி பிடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆனால் அந்த ஓட்டுனர் எச்சி சிகரெட் பிடிக்கும் நிலைக்கு சிக்கந்தரை தள்ளாது… “இருக்கு சார்.” என்று சொல்லிக் கொண்டே தன்னிடம் உள்ளதை எடுத்து  சிக்கந்தரிடம் நீட்டினான்.
அதனை வாயில் வைக்க…ஓட்டுனர் அதில் தீயை வைக்க…அதை ஆழ்ந்து அதன் சாரத்தை உள்ளே இழுத்து, அதன் விளைவாய் வெளிவந்த புகையை வெளிய விட்ட பின் தான் அவன் மனநிலை மட்டுப்பட்டது போல் இருந்தது.
கிஷோரோ வீட்டின் உள்ளே ஜமுனாவிடம்… “என்னம்மா என்ன பிரச்சனை…?” என்று பதட்டத்துடன் கேட்டான்.
அப்போது தான் சிக்கந்தர் சொன்ன அந்த சூட்கேசை எடுத்துக் கொன்டு இருந்த ஜமுனா…கிஷோரின் பேச்சில்..
“பிரச்சனையா..?என்ன பிரச்சனை மாமய்யா…?” என்று ஜமுனா தன் மாமனிடமே கேட்டு வைத்தாள்.
பாவம் ஜமானாவுக்கு சிக்கந்தரின் குணநலன்களும் தெரியாது..மனநிலையும் தெரியாததால்.. சிக்கந்தர் ஏதோ டென்ஷனில் இருக்கிறான் என்று  கூட அறியதவளாய் தன் அடுத்த வேலையை பார்க்க ஆராம்பித்து விட்டாள்.
“இல்ல சிக்கந்தர் ரொம்ப டென்ஷனா இருக்கான் அதான்.” என்று இழுக்க..
அப்போதும் பாவம் ஜமுனா… “அப்படியா மாமய்யா…அவர் டென்ஷன்ல இருக்காரா…?என் கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தார்.” என்று சொன்னாள்.
ஜமுனா பேசிய அளவில் கிஷோர் தெரிந்துக் கொண்டது. சரி இவளால் சிக்கந்தருக்கு டென்ஷன் இல்லை என்பதே…
பாவம் அப்போது கிஷோருக்கு தெரிய வாய்ப்பில்லை இனி ஜமுனாவால் சிக்கந்தர் எத்தனை சிகரெட் ஊதி தள்ள போகிறான் என்று தெரியாது சிகரெட்டா புகைக்க போகிறான் என்று…
கிஷோர் வெளியில் வந்து பார்க்கும் போது…சிக்கந்தரின் வாயில் இருக்கும் சிகரெட்டை பிடிங்கி எடுத்து வீசியவனாய்…
“என்ன  சிக்கந்தர் என்ன இது…?” என்று சிக்கந்தரை திட்டிய கிஷோர்…
அந்த ஓட்டுனரை பார்த்து… “நீ தான் கொடுத்தியா…?” என்று  அவனை பார்த்து சத்தம் போட்டான்.
“ஜீ ஜீ அவனை ஒன்னும் சொல்லாதிங்க..நான் கேட்டேன் அவன் கொடுத்தான். இதில் அவன் தவறு என்ன இருக்கு…?திட்டுவது என்றால் என்னை திட்டுங்க.” என்று சிக்கந்தர் சொன்னது தான் தாமதம்..
இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருந்தது போல்…கிஷோர்… “ஒரு மாசம் உனக்கு இந்த நினப்பு இருந்ததா…?இல்லை தானே…அப்போ இப்போ மட்டும் ஏன் இந்த கருமத்தை பிடிச்ச…?” என்ற கிஷோரின் கத்தலுக்கு..
“ஜீ ஜீ…சும்மா பிடிக்கனும் போல இருந்தது அது தான். எனக்கு இது பழக்கம் தானே ஜீ…என்னவோ புதுசா விடல பையன் பிடிச்சது பார்த்து சத்தம் போடுவது போல போடுறிங்க…”
என்னவோ அவனின்  அந்த வயது இப்போது பலமாக  அவனை தாக்கியது.  அதுவும் தான் உணராது மற்றவர்களின் வாய் மூலமா..இல்லை ஜமுனாவின் வாய் மூலமாய் கேட்டதாளோ..என்னவோ..அவன் தன் வயதை  குறிப்பிட்டே சொன்னான்.
பாவம் கிஷோருக்கு அவனின் பேச்சு புரியாது எதார்த்தமாய்… “நி சின்ன பையம் இல்லை தான்.” என்று சொன்னதோடு விடாது…
தொடர்ந்து சொன்ன… “இப்போ தான் எழுந்தே சிக்கந்தர். இதால் உடம்புக்கு ஏதாவது பிரச்சனை  வந்துட போகுது. அதான்…இரு எதுக்கும் நான் டாக்டர் கிட்ட போன் பண்ணி கேட்டுக்குறேன்.”
சிக்கந்தரின் உடல் நிலையில் அக்கறை கொண்டவனாய்…கிஷோர்  சிக்கந்தரை பார்த்த டாக்டரை  தன் கைய் பேசியின் மூலம் அழைக்க முற் பட்டான் கிஷோர்.
ஆனால் அதற்க்கு முன் கிஷோரிடம் இருந்து அவன் கைய் பேசியை பரித்துக் கொண்ட சிக்கந்தர்..
“சும்மா சும்மா என்னை நோயாளியா ட்ரீட் பண்ணாதிங்க ஜீ..எனக்கு இரிடேட்டிங்கா இருக்கு.”
எப்போதும் இல்லாது வழக்கமாய் தன்னை எரிந்து பேசியவனை யோசனையுடன் கிஷோர் பார்க்க..அப்போது தான் சிக்கந்தர் தன் தவறு உணர்ந்தவனாய்…
“ஜீ ஜீ..சாரி ஜீ..ஏதோ டென்ஷனின் பேசிட்டேன். சாரி ஜீ.” என்று  சிக்கந்தர் கிஷோரிடம் மன்னிப்பு வேண்டினான்.
“என் கிட்ட சாரி எல்லாம் கேட்க வேன்டாம் சிக்கந்தர். உன் டென்ஷன் என்ன அது சொல்.” என்று கேட்டான்.
சிக்கந்தர் என்ன என்று  சொல்வான்..என் வயதே நான் மறந்து போய் விடுகிறேன் என்றா…
என் மூளை எனக்கு முப்பத்திஒன்பது என்று சொல்கிறது. ஆனால்  என் மனதின் துடிப்பு இருபத்தியாறிலேயே நின்று விட்டது.அது முப்பத்திஒன்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. மனதுக்கும் மூளைக்கும் நடக்கும் போராட்டமே என் டென்ஷன் என்று சொல்ல முடியாது..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜீ…” என்று சொன்னதோடு கிஷோரின் நினைவை ஜமுனாவின் பக்கம் திருப்ப..
“உங்க அக்கா கூத்துரு..காத்துட்டு இருக்கா ஜீ. போங்க போங்க…” என்று  கிண்டலாக பேசி கிஷோரை திசை திருப்பி விட்டான்.
கிஷோர் ஜமுனா எல்லாம் எடுத்து வைத்து விட்டாளா…?என்று பார்க்க வீட்டின் உள் நுழைந்தாலும், கிஷோரின் மனது…மும்பை சென்ற உடன் சிக்கந்தரை பார்த்த டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும்
இவனின் மனநிலை இப்படி மாறுவது சரியா…? இத்தனை வருடம் கோமாவில் இருந்து எழுந்தால் இப்படி தான் மனநிலையில் அவ்வ போது மாற்றம் ஏற்படுமா…?
இதனால் உடல் நிலைக்கு ஏதாவது  பிரச்சனை ஏற்படுமா…? என்று கிஷோர் சிந்தித்து முடிக்கும் வேளயில்…
ஜமுனா சிக்கந்தர் இருவரும் சேர்ந்து  ஜமுனா எடுத்து வைத்த அனைத்தையும் டிக்கியில் எடுத்து வைத்து விட்டனர்.
மும்பை வந்து இறங்கியதும் கார்  கிஷோர் இருக்கும் வீட்டு பக்கம் செல்லாது வேறு எங்கோ செல்வதை பார்த்து சிக்கந்தர் “என்ன ஜீ…பாதை எங்கோ போகுது…?” என்று கேட்டான்.
“சொன்னனே டா… போன வருடம் உன் பாபிக்கு வீடு வாங்கி கொடுத்தேன். அதில் பணம் முடங்கி  விட்டது என்று…”

Advertisement