Advertisement

“ஜீ இவங்க என்ன  முன்ன வரும் போதும்…ஏய் என்று கத்திட்டு வந்தாங்க. போகும் போதும் ஏய் என்று கத்திட்டு போறாங்க..ஏய் என்ற வார்த்தை இவங்க குடும்ப வார்த்தையா ஜீ…?”  என்று இப்போது இது தான் முக்கியமானது போல தன் சந்தேகத்தை கேட்டான்.
“ஏய்…” என்று கிஷோரும் அதே வார்த்தையை உபயோகிக்க…
“கன்பாம் ஜீ…இது உங்க குடும்ப வார்த்தை தான்.” என்று அந்த சூழ்நிலையிலும் தன் நைய்யான்டியை கை விடாதவனாய் பேசினான்.
அப்போது சொர்ணா… “என்ன தம்பி உடம்பு எப்படி இருக்கு…? நீங்க  கையில துப்பாகி வெச்சிட்டு இருந்தா நாங்க பயந்து போயிடுவோமா…?” என்று சொன்னதோடு மட்டும் இல்லாது…
“எங்கே சுடுங்க…சுடுங்க…” என்று சொல்லிக் கொண்டே சிக்கந்தரை நோக்கி வந்து கொண்டு இருந்தாள் அந்த  சொர்ணாக்கா…
“நான் துப்பாக்கி வெச்சி இருந்தா பயப்பட மாட்ட…அது எனக்கு நல்லாவே தெரியுது. இவங்க வெச்சிட்டு இருந்தா பயப்படுவிங்களா…?இல்ல இவங்களுக்கும் பயப்பட மாட்டிங்களா…?” என்று கேட்க..
அப்போது தான் சிக்கந்தரை நோக்கி  வந்து கொண்டு இருந்த சொர்ணா…பின் திரும்பி பார்த்தாள். அங்கு காக்கி உடையில் நான்கு காவலர்கள் இருப்பதை பார்த்து…
உடனே தன் முகபாவத்தை மாற்றியவளாய்… “சார் சார் நீங்களே இந்த அநியாயத்தை கேளுங்க சார். ஜமுனா கண்ணு என் தம்பி பொண்ணு சார்.
என் தம்பி பொண்டாட்டி இரண்டு வாரம் முன் தான் இறந்தா…இரண்டு வருடமாவே என் கடைசி பைய்யனும் ஜமுனா கண்ணும் விரும்புறாங்க… அது அவங்க அம்மாவுக்கு கூட தெரியும்.
அதுங்க கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடனுமுன்னு சொல்லிடே இருந்த அந்த புன்னிய வதி…பாவம் ஒரே பெண் கல்யாணம் கூட பாக்க முடியாது இப்படி அல்ப ஆயிசுல போய் சேர்ந்துட்டா…
இழவு விழுந்த வீட்டில் ஒரு நல்லது பண்ணனும் என்று சொல்வாங்க..அது தான் அவங்க அம்மா விருப்ப படி இது இரண்டுத்துக்கு கல்யாணம் செய்ய எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டேன்.
ஆனா இந்த ஆளு இப்போ வந்து ஜமுனா கண்னை இழுத்து போக பாக்குறாரு…நீயே இந்த நியாயத்தை கேளுங்க சார்.” என்று ஒரு நொடியில் ஒரு  புது கதையை பின்னி அதை அந்த காவர்கள் முன் கோர்வையாக சொன்னாள் சொர்ணா…
“என்ன மிஸ்டர் கிஷோர். இந்த அம்மா சொல்றதுக்கு  நீங்க என்ன சொல்றிங்க…?” என்று  அங்கு வந்த காவலர்களில்  ஒருவர்  கேட்டார்.
அந்த காவலர் தெரிந்தவர் போல் கிஷோர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமலேயே அந்த காவல் அதிகாரி கிஷோரை  பெயர் இட்டு அழைப்பதை பார்த்து சொர்ணா யோசனையுடன் அவர்கள் உரையாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“ஜமுனா என் அக்கா மகள்.” என்று சொன்னவர்… “இவங்க சொல்வது போல்…அந்தம்மா மகனை என் வீட்டு பெண் விரும்பல…இவ சொத்துக்கு ஆசை பட்டு வலுகட்டயமாய் அவங்க மகனுக்கு கல்யானம் செய்ய பாக்குறாங்க…” என்று கிஷோர் சொன்னதும்..
அந்த காவலர் தன் பார்வையை ஜமுனா பக்கம் திருப்பினார்… “ நான் அசங்கல விரும்பல.” என்று ஜமுனா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சொர்ணா முறைத்த முறைப்பில்…
“எனக்கு இங்கு இருக்கவே பயமா இருக்கு சார்…நான் என் மாமய்யா கூட  போயிடுறேன். அன்னை என் மாமய்யா கூட அனுப்பி விட்டுடுங்க…” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.
“ஏய் ஜாமூன்..நீ மேஜர் உன் விருப்பம் இல்லாது ஒன்னும் பண்ணாது…சார் கிட்ட உன் வயசு சொல்லு…” என்று சொல்ல..
ஜமுனா… “இருபத்திநான்கு முடிஞ்சி இருக்கு சார்.” என்று தன் வயதை காவலரை பார்த்து சொல்லாது சிக்கந்தரை பார்த்து  சொன்னாள் ஜமுனா…
“அப்புறம் என்ன மேஜர் ஆகி ஆறுவருடம் கூட கடந்து விட்டது.” என்று சிக்கந்தர் காவலரிடம் சொல்ல…
கிஷோர்… “அவருக்கு கணக்கும் தெரியும். கண்ணும் தெரியும். அவள பார்த்தா மைனர் பொண்ணு போலவா இருக்கு…?” என்று கிஷோர் கேட்ட்தற்க்கு…
“உயரத்தை பார்த்தா….” என்று ஆராம்பித்தவனின் வாக்கியத்தை முடிக்க விடாது…
“சிக்கந்தர் நேரம் ஆகுது. நாம நம்ம நேரத்தையும் வீண் அடிப்பது மட்டும் அல்லாது அவங்களோட நேரத்தைவும் வீண் செய்யிறோம்.” என்று கிஷோர் சிக்கந்தரிடம் கடிந்துக் கொண்டான்.
“சரி…ஜீ.” என்று சொன்னவன் அத்தோடு வாய் திறவாது நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தான். 
பின் கிஷோர் தன்னிடம் உள்ள இரு காகிதத்தை அவரிடம் கொடுத்த கிஷோர்… “ இது என் அக்கா எனக்கு எழுதி கொடுத்தது…இது முறையா பதிவும் செய்து இருக்கு…” என்று சொல்லிக் கொண்டே நீட்டினான்.
காவலாளி அதை படித்து  விட்டு… சொர்ணாவின் பக்கம் தன் பார்வையை செலுத்தியவர்… “தனக்கு பின் தன் மகளையும் தன் சொத்துக்கும் கார்டியனா தன் தம்பி கிஷோர் என்று தெளிவா எழுதி அதை பதிவும் செய்து இருக்காங்க..
அதுவும் இல்லாம இதில் என் கணவனின் அக்கா குடும்பத்தால் என் மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதால்…எனக்கு பின் அவள் இந்த ஊரில் இருப்பது அவளுக்கு நல்லது இல்லை. என்று காவல் துறைக்கும் ஒரு கடிதம் எழுதி கொடுத்துட்டு தான் இறந்து இருக்காங்க…
இப்போ நீங்க இவங்க போவதற்க்கு ஏதாவது இடஞ்சல் செய்தா நாங்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.” என்று சொன்னதும்…
அடுத்து சொர்ணா… “ஓ நீங்க இந்த கிஷோருக்கு வேண்டிய ஆளா..அது தான் அவனுக்கு சாதகமா பேசிட்டு இருக்கிங்க…நான் இதை சும்மா விட மாட்டேன்.” என்று சொல்லி கத்திக் கொண்டே இருக்க…
அந்த காவலர்கள்… “நீங்க கிளம்புங்க சார். நான் இவங்களை பார்த்துக்குறேன்.” என்று சொன்ன அந்த காவலர்…
சிக்கந்தரை பார்த்து… “அது தான் கலெக்ட்டர் சொல்லி நாங்க இங்கு வர்றோம் தானே… அதுக்குள்ள என்ன இது துப்பாக்கி எல்லாம்.ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி இருந்தா…நாங்க உங்கல உள்ள வைக்க வேண்டி இருக்கும்.” என்று சிக்கந்தரை பார்த்து அந்த காவலர் கண்டித்தார்.
“நான் படுக்கும் போது எல்லாம் முடிஞ்ச பின் தான் போலீஸ் வரும்..அது போல வந்தா..என்ன செய்யிறது…அதுக்கு தான் சுட்டேன். ஆனா நான் பார்த்து அவங்க மேல படாம தான் சுட்டேன்.” என்று சிக்கந்தர்  மெல்ல முனு முனுத்தான்.
அது அந்த காவர்கள் காதில் விழ வில்லை என்றாலும், பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவின் காதிலும் கிஷோரின் காதிலும் விழுந்தது.
கிஷோர் சிக்கந்தரை பார்த்து முறைத்தான் என்றால்…ஜமுனா வந்த சிரிப்பை அடக்கியதால் அவள் கண் அவளின் உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த…அந்த கண்ணையே ஒரு நிமிடம் பார்த்திருந்தான் சிக்கந்தர்.
“சரி சிக்கந்தர் சீக்கிரம் போகலாம்..உன் பாபி வேற போனுக்கு மேல போனா பண்ணிட்டு இருக்கா…நீ இதை எல்லாம் கார் டிக்கியில் வைக்க ஜமுனாவுக்கு உதவி செய். நான் உன் பாபி கிட்ட பேசிட்டு வந்துடுறேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கிஷோர் தன் மனைவியை அழைத்திருந்தான்.
கிஷோர் மனைவியும் உடனே அழைப்பை ஏற்று விட்டார் போல..வெளியில் போவதற்க்குள்ளாகாவே… “சாரிடா சாரி டாலு…” என்று  கெஞ்சிக் கொண்டே…வெளியில் சென்றார்.
சிக்கந்தர்… “சின்ன பசங்க இருக்காங்களே..அவங்க முன்னாடி என்ன பேசுவதுன்னு தெரியுறது இல்ல.” என்று சொல்லி கொண்டே ஜமுனாவிடம்…
“முதல்ல அந்த நகை பத்திரம் வெச்சி இருக்கியே அந்த சூட்கேசை  கொடு. முதல்ல அதை எடுத்து காரில் வைக்கிறேன்.” என்று  சொன்னான்.
ஆனால் தான் சொன்னதை எடுத்து கொடுக்காது, இடுப்பில் கை வைத்து தன்னை முறைத்துக் கொண்டு இருந்த ஜமுனாவை பார்த்து…
“என்ன  ஜாமுன்…என்ன…” என்று  கேட்க…
“இல்ல மாமய்யா பேசுனதுக்கு யாரோ சின்ன பசங்கன்னு சொன்னாங்க…அது தான் அது யாருன்னு கேட்கலாமுன்னு….” என்று ஜமுனா கிண்டலாக கேட்டாள்.
“ஏன் நான் தா…” என்று சொல்ல ஆராம்பித்த சிக்கந்தர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லாது, பாதியில் நிறுத்தியவன்..
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள…இப்போது அவசரமாக தம் அடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவனிடம் அது கை வசம் இல்லாததால்.
தன் மூச்சை இழுத்து விட்டவனாய், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள…அவன் எப்போதும் செய்யும்… தன்  பின் பக்கம் முடியை கோதிக் கொண்டு இருக்கும் போதே…
கிஷோர் தன் மனைவியிடம் பேசி முடித்து விட்டு உள்நுழையும் போது சிக்கந்தரின் இந்த முடிக் கோதலை பார்த்தவன்..அவனை பற்றி அறிந்தவனாய்…
ஜமுனா முழித்துக் கொன்டு இருப்பதை பார்த்துக் கொண்டே… “என்ன சிக்கந்தர் என்ன…?” என்று கேட்டான்.
“தம் இருக்கா ஜீ…” என்று கிஷோர் கேட்டதற்க்கு பதில் அளிக்காது… சிக்கந்தர்  தன் தேவையை கேட்டான்
“நான் விட்டு எட்டு வருடம் ஆயிடுச்சிடா…” என்று சொன்னதும்…
“சரி ஜீ…நீங்க பார்த்து எடுத்து வைய்ங்க…நான் கொஞ்சம் வெளியில் நிற்கிறேன்.” என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான்.

Advertisement