Advertisement

அத்தியாயம்….5 
“எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ஜமுனா…?” என்று கேட்ட கிஷோருக்கு…
“எடுத்து  வெச்சிட்டே மாமய்யா…” என்று ஜமுனா பதில் சொன்னாள்.
“உன் சர்டிபிகேட்…” என்று  முக்கியமானதை நியாபகப்படுத்தியவரின் முன்…நான் என்ன என்ன வைத்திருக்கிறேன் என்று  தன் மாமாவிடம் காண்பித்தாள்.
முன் ஏற்பாடாய்.. தங்கள் இடத்தின் பத்திரம்..தன் அன்னை தனக்கு வாங்குய நகைகள் .பாஸ்புக்..கிரிடிட் கார்ட்…வீட்டில் இருந்த பணம் என்று அனைத்தும் எடுத்து வைத்த முக்கியமான சூட்கேசை கிஷோரிடம் கொடுத்து விட்டு…
தன்னுடைய கைய் பையில் வைத்த தன் சான்றிதழை எடுத்து காண்பித்தவள்…பின் ஒரே சூட்கேசில் இருந்த தன் துணிமணிகளை காட்டி…
“எல்லாம் எடுத்து வெச்சிட்டேன் மாமய்யா…” என்று ஜமுனா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..
தடி தடியாக வாட்டசாட்டமான உடம்பை வைத்துக் கொண்டு நான்கு பேர் உள் நுழைய..அந்த நாளுபேரில் நடுநாயகமாய் சொர்ணக்காவுக்கே அக்கா என்று சொல்லும் படி உருவத்தை கொண்ட ஒரு பெண் பெண்மணி அவர்களோடு வந்தாள்.
வந்ததும் கிஷோரிடம்… “என்ன தம்பி எங்க வீட்டு  பொண்ணு கல்யாணத்துக்கு வந்தியா…?” என்று தான் பெத்த பெண் போல பேசினாள். உண்மையில் சொர்ணா என்ற பெயரை வைத்திருந்த அந்த பெண்மணி.
அந்த பெண் மணியை பார்த்ததுமே…இவ்வளவு நேரமும் சாதரணமாக பேசிக்  கொண்டு இருந்த ஜமுனா…கிஷோர் சிக்கந்தர் நடுவில் நின்றுக் கொண்டு இருவரின் கையையும் பற்றிக் கொண்டு… தன் அத்தையை பயப்பார்வை பார்த்திருந்தாள் ஜமுனா…
ஆம் அந்த சொர்ணா ஜமுனாவின் அத்தையே தான். அவர் கணவர் தான் ஜமுனாவின் அப்பாவை பாம்பு கடித்து இறந்து விட்டது போல் கொலையை இயற்க்கை இறப்பாக  அனைவரின் முன்னும் காட்டினான்.
இப்போது ஜமுனாவின் அன்னை தான் இறப்பதற்க்கு முன்..அனைத்து சொத்துக்களும்..ஜமுனாவின் குழந்தைக்கே என்று எழுதி வைத்து விட்டதால்…
 நான்கு ஆம்பிள்ளை பிள்ளைகளை பெத்திருக்கும் ஜமுனாவின் அத்தை … “ஒன்னுக்கு நான்கா  பெத்து வெச்சி இருக்கேன். உனக்கு எவனை விருப்பம் என்று சொல் அவனையே கட்டி  வைக்கிறேன்.” எல்லாம் உன் விருப்பம் தான் என்பது போல் சொன்னாள்  சொர்ணா…
அத்தையம்மா பெத்ததில் நான்கில் இரண்டுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதுங்க…பாவம் அத்தை சொன்னதை கேட்டு அந்த இருமருமகள்களும் பயந்து  போய்  ஜமுனாவை பார்த்தனர்.
“அத்தை எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லை. நான் மேல படிக்கனும்.” என்று ஜமுனா சொன்னதும்..
தன் இளைய மகனை கூப்பிட்ட சொர்ணா… “ராசா உயில்ல என்ன ராசா இருக்கு. கல்யாணம் ஆயி குழந்தை பிறந்தா தான் அந்த குழந்தைக்கு சொத்து போகுமா…இல்ல குழந்தை பிறந்தா மட்டும் போதுமா…?” என்று பேசிய  சொர்ணா  பேச்சில் பயந்து  போய் பார்த்த ஜமுனாவிடம்…
“கண்ணு நானும் உன்னை முறையா தான் என் வூட்டுக்கு அழச்சிக்க பார்க்கிறேன். ஆயிரம் இருந்தாலும் நீ என் தம்பி மகள்…உன்னை அப்படி முறைத்தவறி வாழ விட்டுடுவேனா…?” என்று ஜமுனாவின் கன்னம் பற்றி கொஞ்சிக் கொண்டே  சொன்ன சொர்ணா…
பின் இவ்வளவு நேரம் பேசிய குரல் மாறிய விதமாய்… “தோ பாரு…உன் மாமன் வருவான் தப்பிச்சிடலாமுன்னு கனவு… கினவு… காண்டுட்டு இருக்காதே… இது எங்க ஊரு…இங்க இருந்து எனக்கு சொந்தமான ஒரு பிடி மண்ணே எடுத்துட்டு போக விட மாட்டேன்.
அப்படி இருக்கும் போது ஏக்கர் கணக்கில் வரும் நலத்தின் சாவியான உன்னை அப்படி  ஈசியா இன்னொருத்தன் கையில் கொடுத்துடுவேனா…?பாத்து பதமா நடந்தா எல்லாம் முறையா நடக்கும் அவ்வளவு தான் சொல்லி புட்டேன்.
இன்னும் பத்து நாள்ள உனக்கும் என் நான்காவது மவனுக்கும் கல்யாணம். முறையா நீ மூனவதா மருவளா தான் வரனும்..
ஆனா பாரு சின்னவன் எனக்கு சின்ன வயசில இருந்தே ஜமுனான்னா ரொம்ப பிடிக்குமுன்னு சொல்றான். சரி இஷ்ட்டப்பட்டவனுக்கு வாழ்க்கை பட்டா அவன் உன்னை ரொம்ப சந்தோஷமா வெச்சி இருப்பான் பாரு..
தோ பாரு கண்ணு அத்தம்மா உன் நல்லதுக்கு தான் எல்லாம் பண்ணுறேன். உன்னை புடிச்சி போய் கட்டுற என் புள்ள…நீ என் தம்பி மகள்… அதுவும் கையில் சொத்தோட வரும் மருமவ…
உன்னை நான் ஒன்னும் பண்ண மாட்டேன். அதாவது நீ ராங்கா யோசிக்காத வரை.” என்று சொல்லி விட்டு சென்ற சொர்ணா அத்தையின் பேச்சை கேட்டு விட்டு தான் அன்று தன் மாமன் கிஷோருக்கு பயந்து போல் போன் செய்தது.
அன்று  சென்றவர்கள் இதோ இன்று தான் வருகிறார்கள். அதுவும் தன் நான்கு பையனோடு வருவதை பார்த்து பயந்து போய் இருவரின் நடுவில் நின்றால் பாதுக்காப்பு போல் நின்றுக் கொண்டவளுக்கு..
பின் தான் அய்யோ வந்து இருப்பது இருவரே…அதுவும் மாமய்யா கூட வந்தவர் இப்போ தான் கோமாவின் இருந்து எழுந்தவர்…அவரால் இவங்களை அடிக்க முடியுமா…?என்று சந்தேகத்துடன் தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த சிக்கந்தரை திரும்பி பார்த்தாள்.
சிக்கந்தரும் அப்போது ஜமுனாவை தான் பார்த்துக்  கொண்டு இருந்தான். ஜமுனா தன்னை பார்த்ததும்.. “என்ன இவனுங்கல நம்பி வந்து கைய்ய பிடிச்சிட்டோம்…அவங்க கிட்ட இருந்து நம்மை காப்பாதுவாங்களான்னு சந்தேகம் வந்துடுச்சா…?” என்று சிக்கந்தர் கேட்டான்.
அதற்க்கு முதலில்… “ஆமாம்.” என்பது போல் தலையாட்டி விட்டு…பின் அவசர அவசராமக… “இல்லை.” என்று சொல்லவும்..
“நீ முதலில் தலையாட்டின பாரு.அது தான் சரி…இது சினிமா கிடையாது பறந்து பறந்து அடிக்க…அதுவும் பாரு அந்த அடியாளுங்களை பாரு..
ஒவ்வொருத்தரும் எத்தனை பேர் அடிப்பாங்கன்னு தெரியல. அந்த அளவுக்கு பல்கா இருக்காங்க…நாங்களோ… இரண்டு பேரு…அதுவும் நான் இப்போ தான் எழுந்தே இருக்கேன்.
இன்னும் என் பாடி எந்த அளவுக்கு இருக்குதுன்னு எனக்கே தெரியல…அதனால அவனுங்கல  அடிக்கும் ரிஸ்க் எல்லாம் எங்களால எடுக்க முடியாது.” என்று சொன்னதும் பயந்து போய் விட்டாள் ஜமுனா..
அந்த பயத்திலும்… “அவுங்க அடியாள் எல்லாம் கிடையாது..என் அத்தம்மா பசங்க.” என்று சொன்னதும்…
“பாருடா என் அத்தம்மா பசங்க…பரவாயில்லையே சொந்தம் எல்லாம் வாயில சொந்தத்தோட வருது. அப்புறம் என்ன பார்க்க பசங்க நல்லா பல்க்கா தான் இருக்காங்க…கட்டிக்க வேண்டியது தானே…” என்று  சிக்கந்தர் சொன்னதும்…
ஜமுனாவின் கண்களில் இருந்து கண்ணீர்  சர சர என்று வழிந்தோட… “மாமய்யா…” என்று சிக்கந்தர் கையை விட்டவளாய் கிஷோரின்  தோளில் சாய்ந்துக் கொண்டவள்…தன் மாமனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
சொர்ணா ஜமுனாவை பார்த்து… “என்ன கண்ணு கல்யாணத்துக்கு மாமய்யாவை கூப்பிட்டியா…?” என்று கேட்டவர் பின் அவரே…
“ஆமா ஆமா…தாய் ஸ்தானத்துல தாய் மாமன் தானே செய்யனும்.” என்று ஜமுனாவிடம் பேசியவர்…
கிஷோரை பார்த்து கை கூப்பி… “நீங்க வந்ததுல சந்தோஷம் தம்பி…நானே உங்களை கூப்பிடனும் நினச்சேன். ஆனா பாருங்க ஒத்த ஆள கல்யாண வேல பாக்குற தொட்டு உங்கள அழைக்கிறத மறந்துட்டேன்.
ஆனாலும் நாங்க அழச்சி தான்  நீங்க வரனும் என்றது இல்லலே…உங்க வீட்டு பெண் கல்யாணத்துக்கு நீங்க தானே மத்தவங்களை அழைக்கனும்.” என்று சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டார் சொர்ணா…
“ம் நல்லது. நீங்கல ஜமுனாவ எங்க வீட்டு பெண்ணு என்று சொல்லிட்டுங்க…உங்க கிட்ட அவ பேருல எனக்கு இருக்கும்  உரிமையை நிலை நாட்ட நான் ரொம்ப போராட வேண்டி இருக்குமோன்னு நினச்சேன். ஆனா நீங்கல இப்போ எனக்கான உரிமைய சொல்லிட்ட பிறகு..
என் உரிமை பட்ட என் அக்கா மகளை நான் என் கூட பம்பாய் அழச்சிட்டு போறேன். அவ மேல படிக்க ஆசை படுறா…இங்கு அதுக்குண்டான வசதி இல்ல. அதான் கூட்டிட்டு போக  எல்லாம் ரெடி ஆயிடுச்சி…
நானும் இப்போ தான் ஜமுனா கிட்ட கூட  சொல்லிட்டு இருந்தேன். உன் அத்தம்மாவ பார்த்துட்டு சொல்லிட்டு போனா நல்லா இருக்குமுன்னு   சொல்லிடே இருந்தேன். நீங்க வந்து நிக்கிறிங்க…” என்று தன் மாமன் பேசும் கோர்வையான பேச்சில் ஜமுனா வாய் திறந்து போல் பார்த்திருந்தாள்.
சிக்கந்தரோ… “ஆ இப்போ அடுத்து பைட்டா…” என்று கேட்க..
சிக்கந்தர் சொன்னது போல தான்..அந்த நான்கு தடி தாண்டவராயன்களும்..ஒன்று போல்… “ஏய்…” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கட்டி இருந்த வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே அவர்களை அடிக்க வந்தனர்.
“என்ன ஜீ நான் படுத்த உடன் புது ட்ரேண்டும் படுத்துச்சா…பதிமூன்று வருடம் முன் பார்க்கும் தெலுங்கு படம் போலவே இப்போவும்..சீ சீ…” என்று சொல்லிக் கொண்டே..
தான் மறைத்து வைத்திருந்த கன்னை எடுத்து அவர்கள் மூன் நீட்டியவன்… “நான் எல்லாம் எதுக்கும் பாக்க மாட்டேன். இங்கு வரும் போதே கள்ள துப்பாக்கியும் வாங்கிட்டு தான் வந்தேன்.
இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சா அவ்வளவு தான்  சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். பதிமூன்று வருடம் படுத்து வாழ்க்கைய வீணா அக்கி கொண்டவன்.
உங்களை சுட்டு இன்னும் கொஞ்ச நாள் வாழ்க்கை வீணா போவதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல…என்ன சுடவா…? சுடவா…?” என்று சொல்லிக் கொண்டு இருந்தவனின் பேச்சு வெறும் பேச்சு அளவோடு மட்டும் இல்லாது… அவர்களின் கால் நோக்கி சுடவும் செய்து விட்டான்.
“ஏய்..ஏய்..” என்று முன்னோக்கி வந்தவர்கள் சிக்கந்தரின் துப்பாக்கி சூட்டில் திரும்பவும் பின்னோக்கி சென்று  விட்டனர்.

Advertisement