Advertisement

அத்தியாயம்….4
“சிக்கந்தர் உன் உடம்புக்கு ஒன்னும் செய்யல லே…” விமானத்திலும் சரி…இதோ விமானத்தை விட்டு காரில் சென்றுக் கொண்டு இருக்கும் இந்த சில மணி நேரத்திலும் சரி…
இதே வார்த்தையை எத்தனை விதமாக கிஷோர் சிக்கந்தரிடம் கேட்டு இருப்பார் என்று கேட்டவருக்கும் தெரியாது. கேட்கப்பட்ட நபருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு கணக்கில்  வைக்க முடியாத அளவுக்கு கேட்டு விட்டார்.
“ஜீ நான் நல்லா இருக்கேன் ஜீ..நான் ரொம்ப ஸ்டாங்காவே இருக்கேன் ஜீ… இந்த ஒரு மாதமா நீங்க உன்னை பார்த்துக்காம என்னை பார்த்த தொட்டு  எனக்கு என்னவோ நீங்க தான் கொஞ்சம் வீக்கா ஆனது போல இருக்கு…
பாம்பே போன பின் உங்களுக்கு ஒரு மெடிக்கல் செக்கப் செய்யனும் ஜீ…வயது வேறு என்னோடு ஏழு வயது மூத்தவர்…நாப்பத்தியாறு…கண்டிப்பா செக்கப் செய்து விடனும் ஜீ…” என்று கிஷோரையே நோயாளி ஆக்குவது போல் பேசி வைத்தான் சிக்கந்தர்.
“யார் வீக்கா ஆனா நானா…நானா…?” என்று சிகந்தரிடம் சண்டை போடுவதுய் போல் பேசினார் கிஷோர்.
“பார்த்திங்களா ஜீ…பார்த்திங்களா…?உங்களுக்கு எப்படி மூச்சி வாங்குதுன்னு…கண்டிப்பா உங்களுக்கு செக்கப் செய்தே ஆகனும் ஜீ…ஆகனும்.” என்று சொல்ல…
“ஏய் வேண்டாம்டா உனக்கு நல்லாவே தெரியும். என்னை வீக்கா ஆக்குவது போல…அதுவும் என் உடம்பை பத்தி பேசினா எனக்கு பிடிக்காதுன்னு…” என்று சிக்கந்தரிடம் சொல்ல..
“அதே தான் ஜீ..அதே தான். அதுக்கு தான் உங்களை அப்படி சொன்னேன். உங்களுக்கு மட்டும் இல்ல யாருக்கும் அவங்களை  ஒரு நோயாளி  போல ட்ரீட் செய்தா பிடிக்காது ஜீ..”
சிக்கந்தர்  கடைசியாக அவன் சொன்ன பிடிக்காது என்று சொல்லும் போது அதில் அழுத்தத்தை கூட்டி சொன்னான்.
“சாரிடா…சாரி… இந்த ஏசி காரிலும் உனக்கு வேத்து கொட்டுவதை பார்த்து எனக்கு பயம் ஆயிடுச்சி சிக்கந்தர். அதான் அப்படி நிறைய தடவை கேட்டேன்.” என்று கிஷோர்  சிக்கந்தரிடம் மன்னிப்பு கேட்டான்.
“ஜீ என்ன ஜீ…மன்னிப்பு எல்லாம். எனக்கு தெரியும் ஜீ என் மீது இருக்கும் அளவுக்கு மீறிய அன்பு தான் இப்படி கேட்க வைக்குதுன்னு..ஆனா எனக்கு நீங்க அந்த வார்த்தையை சொல்ல சொல்ல நான் என்னுடைய பதிமூன்று வருடம் நான் படுத்துட்டு இருந்தது தான் நியாபகத்தில் வருது.
இனி அந்த பதிமூன்று வருடம் என்பது என் வாழ்க்கையில் முடிந்து போன விசயமா இருக்கனும். அது நியாபகம்  படுத்தும் எதுவும் என் காதுக்கு வர கூடாது ஜீ.” என்று சொன்னவனின் மனநிலை புரிந்தவனாய்  கிஷோர்..
“இனி நான் கேட்க மாட்டேன். ஆனா ஒன்று  உன் உடம்புக்கு  ஏதாவது செய்தா… நீயே என் கிட்ட வந்து சொல்லிடனும்.” என்று அவனிடம் வாக்குறுதியை  பெற்றுக் கொண்டே அதன் பின் சிக்கந்தரிடம் அவன் உடல் நிலை பற்றி விசாரிக்காது விட்டான்.
உன் உடல் நிலைக்கு ஏதாவது ஒன்று என்றால், என்னிடம் வந்து சொல்லி விட வேண்டும் என்று சொன்ன அவன் குருஜீ…உன் மனநிலையையும் என்னிடம் சொல்லி விட வேண்டும் என்று சொல்லி இருந்தால்…
சிக்கந்தர் தன் மனதில் உதிர்த்த காதலை எந்த வித தயக்கமும் இல்லாது தன் குருஜீயிடம் சொல்லி இருப்பானோ…மனதுக்கும், அறிவுக்கும் இடையே அல்லாடி இருக்க மாட்டோனோ…
“இன்னும் எவ்வளவு தூரம் தான் போகனும்  ஜீ…?” என்று சிக்கந்தர் கேட்டான்.
ஏன் என்றால் விமானநிலையத்தில் இருந்து காரில் ஏறி அவ்வளவு மணிநேரம் கடந்தும் குண்டூர் வர நேரம் பிடித்ததை விட…அதன் உள் இருக்கும் அந்த கிராமத்திற்க்கு போக அவ்வளவு நேரம் பிடித்த்து.
வழி எங்கும் பச்சை பசேல் என்று பச்சை ஆடை உடுத்தி இயற்க்கை அழகு கொட்டி  கிடப்பதை பார்த்துக் கொண்டே வந்தவர்களுக்கு கண்கள் குளிர்ச்சியாக தான் இருந்தது.
ஆனால் மூளை இனி அடுத்து என்ன  என்று இருவரும் ஒரே விசயத்தையே யோசித்ததால்  அந்த குளிச்சி மனதை குளிர்விப்பதற்க்கு பதிலாய் சிக்கந்தருக்கு மூளை சூடேரி விட்டது.
“ஜீ உங்க அக்கா பெண் ஜாமூன்…” என்று ஆராம்பித்தவன்  அவன் ஜீயின் முறைப்பில்  “ஆ ஜமுனா…இன்னைக்கே கூட்டிட்டு பாம்பேக்கு பறந்துடலாமா ஜீ…அதுக்கு உண்டான ஏற்பாட்டை ஜாமூன் … செய்து ரெடியா தானே இருப்பாங்க.”
சிக்கந்தர் ஜமுனாவை திரும்ப திரும்ப ஜாமூன் என்றதில் அவனை திட்ட வாய் எடுக்க… “ஜீ அது என்னவோ நீங்க உங்க அக்கா பெண் கிட்ட போன்ல  பேசும் போதே… நீங்க ஜமுனா என்று சொல்லும் போது என் மனசுல ஜாமூன்னு தான்  பதிவு ஆயிடுச்சி…
சொல்லுவாங்களே முதல்ல எது நம் மனசுல பதிவு ஆகுதோ… அது தான் எப்போவும் சட்டென்று வாயில் வரும் என்று… அது என்னவோ  என் வாயில் இருந்து ஜாமூன்  தான் வருது நான் என்ன செய்ய ஜீ…” என்று பாவம் போல் சிக்கந்தர் பேச…
“ஏய் நீ எப்படி பட்ட ஆள் என்று யாருக்கு தெரியுதோ இல்லையோ எனக்கு தெரியும்டா…” என்று சொல்லிக் கொண்டே அவனின் புஜத்தில் தட்டி விட்டவர்களின் இடையில் பேச்சு இது போல் கிண்டல் கேளி என்று அந்த பயணம் முடிவடையும் வரை தொடர்ந்தது.
கிஷோரின் அக்காவின் ஊரை அடைந்ததும் சிக்கந்தர் அந்த வளர்ச்சி அடையாத  கிராமத்தை பார்த்து… “ஜீ நீங்க உங்க அக்கா பெண்ணையாவது உங்க கிட்ட அழச்சிட்டு இருக்கலாம்…இங்கு படிச்சி அந்த பெண் பாம்பேயில் எப்படி தன் படிப்பை தொடர முடியும்.” என்று கேட்டான்.
கிஷோர் “படிப்பை முடிச்சாச்சி…” என்று சொல்லும் போதே கிஷோரின் அக்கா இல்லம் வந்து விட்டது.
வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த ஜமுனா…கிஷோர் காரை விட்டு இறங்கியதும்…
“மாமய்யா…” என்று  அழைத்துக் கொண்டே  கிஷோரை கட்டி கொண்ட  ஜமுனா….கிஷோரின் தோள் அளவுக்கே இருந்த அந்த பெண்ணை  கிஷோரும் தன் கைக் கொண்டு அணைத்துக் கொண்டதால் சிக்கந்தருக்கு ஜமுனாவின் முகம் தெரியவில்லை.
ஆனாலும் அவள் குரல்…அதுவும் பதட்டத்துடன் தான் மாமய்யா என்று கத்திக் கொண்டு வந்தாள். அந்த பதட்டத்திலுமே அவள்  குரல் அவ்வளவு இனிமையாக சிக்கந்தருக்கு கேட்டது. 
மாமனும் மருமகளுக்கும் இடையில்  அந்த அணைப்பில் பிரிந்த நேரத்தில் தான் சிக்கந்தர் ஜமுனாவின் முகத்தை பார்த்தான்.
மிக மிக சாதரண முக அமைப்பு தான்.நிறமும் மாநிறத்தில் தான் இருந்தாள். கிஷோரின் அக்கா பெண் என்பதால் நிறத்தை இன்னும் கூடுதலாக  எதிர் பார்த்தானோ…
ஏன் என்றால் கிஷோர் வெளுத்த நிறம். ஜீயின் பெயரையும் அவர் நிறத்தையும் வைத்து…அவரை நார்த் இந்தியன் என்று தான் சிக்கந்தர் நினைத்துக் கொண்டு இருந்தான். ஊர் குண்டூர் என்று சொன்ன போதும்… 
ஜமுனாவின் மாமய்யா என்ற அழைப்பும்,ஊரையும் பார்த்து… ‘ஓ ஜீ சுந்தர தெலுங்கா…?என்று யோசித்தவனுக்கு கூடவே ஜமுனாவின் உயரம் நிறம்..முக அமைப்பு அனைத்தையும் மீறி.. சிக்கந்தருக்கு அவள் முகத்தில் ஏதோ ஒரு கலை இருப்பது போல் தோன்றியது … 
என்ன இது  நம்ம ஜீயின் அக்கா பெண்ணின் உயரம் நிறம்..என்ற ஆராய்ச்சியும் மீறி…அவள் முகத்தில் கலை என்று ஏதோ ..தப்புடா தப்பு அது சின்ன பெண்…
என்று நினைக்கும் போதே மீண்டும் சிக்கந்தரின் பார்வை ஜமுனாவின் பக்கம் சென்றது…வயது என்ன இருக்கும் என்று…?
அவன் நினைவை கலைவது போல்… “ஏய் வாடா…என்ன ஆராத்தி சுத்தினா தான் வருவீயா…?” என்று கேட்கும் போதே ஜமுனாவின்  கையில், ஆராத்தி தட்டோடு வந்தவள்..
“மாமய்யா அவங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து நேரா இங்கு தான் வர்றாங்கன்னு  நேத்து போன்ல சொன்னிங்களே மாமய்யா…அது தான் ஆராத்தி கரச்சி ரெடியா எடுத்து வெச்சேன்.” என்று சொல்லிக் கொண்டே ஜமுனா தயக்கத்துடன் சிக்கந்தை பார்த்தாள்.
ஆராத்தி எடுப்பதா…? வேண்டாமா…? ஒரு பெண் வாய் திறக்காது கண்ணால் பேச முடியுமா…?முடியும் என்பது போல் தான் ஜமுனாவின் பார்வை  சிக்கந்தரிடம் கேட்டது.
அவளின் பார்வையை பார்த்துக் கொண்டே… “ம்…எடு.” என்பது போல் அவள் எதிரில் வந்து நின்றான்.
ஆலம்  சுற்றியதும்…ஏதோ பணம் போட பணத்தை எடுக்கும் போகும் போது அவன் கை பிடித்து தடுத்த ஜமுனா…
“நல்லதுக்கு ஆலம் சுத்தும் போது தான் பணம் போடனும்.இது போல் போட கூடாது.” என்று சொல்லோடு அந்த ஆரத்தியை கொட்டி விட்டு வந்தவள்..
இப்போது … “வாங்கோ…” என்று அவள் பேசிய அந்த தமிழ் ஏனோ சிக்கந்தருக்கு புதியதாக இருந்தது.
“ம்…வர்…றேன் வர்..றேன்.” என்று இழுத்த வாறே சொல்லிக் கொண்டு அந்த வீட்டில் தன் வலது காலை எடுத்து வைத்து  உள் நுழைந்தான்.
அந்த வீடு பெரியதாக தான் இருந்தது.ஆனால் வசதி என்று பார்த்தால், அப்படி பெரியதாக இல்லாது சாதரண பர்னிச்சர்களை கொண்டு மிக எளிமையாக தான் வீடு காட்சி அளித்தது.
யோசனையுடம் தன் ஜீயை திரும்பி பார்த்தான். தனக்கு அந்த விபத்து நடக்கும் போது, கிஷோர் அந்த அளவுக்கு வளர வில்லை.வளர்ந்துக் கொண்டு இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
அதனால் தான் அந்த விழா அன்று செல்ல மனது இல்லை என்றாலும் தன்னிடம் ஆயிரம் மன்னிப்பை வேண்டிக் கொண்டு தன் தொழிலை பார்க்க சென்றான்.
ஆனால் இன்றைய நிலை…கிஷோர் அவர் செல்வ நிலையை வாயை திறந்து சொல்லவில்லை என்றாலும், இந்த ஒரு மாத காலமாய்…தன் தொழில் பேச்சை தன்னோடு மருத்துவமனையில் இருக்கும் போது தானே கைய் பேசியின் வழியே நடந்தது..
அந்த பேச்சின் படி பார்த்தால்…இன்று நல்ல நிலையில் தானே இருக்கிறார்.ஏன் இவர்களை இப்படியே விட்டு விட்டார்…? என்று யோசித்த வாறே கிஷோரையே பார்த்திருந்தான்.
தன் முன் நீட்டிய காபியை கவனிக்காது தன்னையே பார்த்திருந்த சிக்கந்தரிடம்… “காபி வாங்கிட்டு அப்புறம் என்னை பார்க்கலாம்.” என்ற கிஷோரின் பேச்சில் சிரித்துக் கொண்டே காபியை வாங்கி குடித்துக் கொண்டு இருக்கும் போது…
கிஷோர்… “என் உதவி எதையும் அக்கா ஏத்துக்கல..நீ காரில் வரும் போது கேட்டியே உங்க அக்கா மகளையாவது நீங்க  உங்க கூட அழச்சிட்டு வந்து படிக்க வெச்சி இருக்கலாமேன்னு…?
நான் இதை என் அக்கா கிட்ட சொல்லாமலயா இருந்து இருப்பேன். நீ தான் உன் கணவன் ஊர். கணவன் இடமுன்னு இருக்க…ஜமுனாவையாவது அனுப்பு…நான் படிக்க வெச்சி நல்ல நிலையில் கொண்டு வர்றேன்னு…
ஆனா அதுக்கு அக்கா என் கணவர் முகத்தை என் மகளிடம் தான் நான் பார்க்கிறேன். நான் இருக்கும் வரை அவ கே  இருக்கட்டும்…என் காலத்துக்கு பின்  அவளுக்கு எல்லாமே நீ தானேன்னு சொல்லிட்டாங்க…
எனக்கு கணவனும் இல்லாம…மகளையும் நான் அழச்சிட்டு போனா..அக்கா தனிமையா பீல் பண்ணுவாங்கன்னு ரொம்ப எல்லாம் கட்டாயப்படுத்தல…” என்று சொன்ன கிஷோரின் பேச்சை கேட்ட சிக்கந்தர் புரிகிறது என்பது போல் தலையாட்டியவனின் கண்ணில் மாட்டியது…
கிஷோரின் அக்கா மாமாவின் புகைப்படம்.அதாவது ஜமுனாவின் அப்பா அம்மாவின் சேர்ந்து இருக்கும் புகைப்படம்…கிஷோர் சொன்ன அக்கா சொன்ன என் கணவரின் முகத்தை என் மகளிடம் தான் பார்க்கிறேன் என்ற வார்த்தை சிக்கந்தர் வர்மாவுக்கு புரிவது போல இருந்தது.
கிஷோரின் அக்கா அப்படியே   தன் ஜீயைய் போலவே இருந்தார். அக்காவின் கணவன் ஜமுனா  போல்..அதாவது கிஷோரின் அக்கா கணவரின் மறு பிம்பம் போல் ஜமுனா இருந்தாள்.
ஜமுனா ஏற்கனவே அவர்கள் வரும் நேரத்தை கணக்கிட்டு மதியம் உணவை சமைத்து வைத்திருக்க…வாழை இலை போட்டு முதலில் சாப்பிட்டில் போட்ட கோங்குர சட்னியை பிசைந்து வாயில் வைத்த சிக்கந்தருக்கு, அதன் காரம் தாளது கண்ணில் இருந்து கண்ணீர் வர அளவுக்கு அதில் இருந்த காரத்தில் பக்கத்தில் இருந்த தன் நீரும் பத்தாது கிஷோருக்கு  வைத்த நீரையும் பருகியும் கூட காரம் அடங்காது…
“உஸ்…உஸ்…” என்று கஷ்ட படுபவனின் வாயை திறக்கும் படி சொன்ன ஜமுனா…அவன் வாயில் மைசூர் பாக்கை அள்ளி போட்டாள்.
அதை சாப்பிட்ட பின் தான் சிக்கந்தரின் காரத்தின் சாரம் கொஞ்சம் அடங்கியது என்று சொல்லலாம்… ‘யப்பா என்ன காரம்  டா…’ என்று நினைத்த சிக்கந்தர் வெறும் தயிர் சாதத்தோடு தன் மதியம் சாப்பட்டை  முடித்துக் கொண்டான்.
ஜமுனா தான்… “மன்னிச்சி எனக்கு தெரியாதா…நீங்க காரமு சாப்பிட மாட்டிங்க…தெரியாம செய்தேன்.” என்று பாவம்  தமிழை திமிழா பேசினாள்.
“பரவாயில்லம்மா ஒன்னும் பிரச்சனை இல்ல. தயிர் நல்லாவே இருந்தது. நான் நல்லா சாப்பிட்டேன்…நீ ஒன்னும் கவலை படாதேம்மா…” என்று ஜமுனாவில் கில்ட்டி பீலை போக்க சொன்னான்.
“ஓ நல்லா சாப்பிட்டியா….சரி சரி.” என்று கிண்டல் செய்த கிஷோர்..
ஜமுனாவிடம்.. “வீட்டில் ஸ்வீட் இருந்தா ஒரு தட்டில் எடுத்து இவன் கிட்ட கொடும்மா…” என்று சொன்னதும்.. மைசூர் பாக்…பால் கோவா கொஞ்சம் எடுத்து வைத்து சிக்கந்தர் முன் நீட்டினாள்.
ஒரு மைசூர் பாக்கை ஒரே வாயில் போட்டவன் ..கொஞ்சம் வைத்த பால் கோவாவை  வாயில் போட்டவனுக்கு அந்த பால் கோவாவோ அவன் வாயின் பாதி அளவே தான் இருந்தது.
இதை வாயை மூடாது பார்த்திருந்த நம் ஜமுனாக்கு வாந்தி வருவது போல் ஆகி விட்டது. சிக்கந்தருக்கு காரம்  எப்படி அலர்ஜீயோ…நன் ஜமுனாவுக்கு ஸ்வீட் சாப்பிட்டால் திகட்டுவது போல் இவளுக்கு பார்த்தாளே திகட்டி விடும்.
இருவரும் இருதுருவமாய் இருக்க…ஒரே நட்சத்திரமாய் உருவாகும்  போது  இந்த  சிறு சிறு பிரச்சனகள்  எல்லாம்  அவர்களுக்கு தூசி போல் தட்டி விட்டு போய் விடும்.
 

Advertisement