Advertisement

அத்தியாயம்….3…2
சுலோச்சனா தேவி அந்த அறையில் நுழைந்த நொடி சிக்கந்தர் அருகில்  சென்று அவன் முகத்தை  தொட்டு தொட்டு தடவி பார்த்து விட்டு… “உன்னை இப்படி பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா இந்தர்…” என்று சொன்னவரின்  மகிழ்ச்சியையே  தான் காட்டியது.
“மாம்…எனக்கு தெரியும்….மாம் எனக்கு தெரியும்.” என்று அதையே இரு  முறை அழுத்தி சொன்ன சிக்கந்தர்…
“அங்கு உட்காருங்க மாம்…” தன் எதிரில் அனைவரும் அமர்ந்து இருக்கும் இருக்கையை சுட்டி காட்டிய சிக்கந்தர்…
“ஜீ நீங்க இங்கே வாங்க…”என்று  கிஷோரை அழைத்த சிக்கந்தர், கட்டிலில் தன் பக்கம் அமரும் மாறு தொட்டு காண்பித்தான்.
“இந்தர்…” என்று ஏதோ பேச ஆராம்பித்த சுலோச்சனாவிடம்… “மாம்   பேசலாம். மொத்தமா பேச தானே…” என்று  சொன்னவன் பின் தன்னை  திருத்தியவனாய்…
“அது தான் உங்க பேமிலி மெம்பர் மொத்த பேரையும் கூப்பிட்டேன் பேச…” என்று சொன்னவனின் பேச்சில் எதோ  தட்ட…
தருண் வர்மா… “இந்தர்…” என்று அவன் பங்குக்கு ஏதோ பேச ஆராம்பிக்க…
“இரு பைய்யா இருங்க…என்ன அவசரம் பேச…பதிமூன்று வருடம் காத்துட்டு இருந்திங்க கொஞ்ச நேரம் எனக்காக காத்திருக்க மாட்டுங்களா…?” என்று கேட்டவன் ..
பின் அவனே… “கண்டிப்பா காத்திருப்பிங்க…எனக்காக காத்துட்டு தான் இருப்பிங்க.” என்று ஒரு இழுவையாக பேச்சை நிறுத்தியவன்..
அங்கு முள்ளின் மீது  இருப்பது போல் அமர்ந்திருந்த ஷ்யாம் வர்மா  சுபத்ராவை பார்த்து…
“அப்புறம்  சித்து எப்படி இருக்கிங்க…” என்று நலம் விசாரித்தவன்…
பின் சுபத்ராவின் பக்கம் பார்த்து… “எப்படி இருக்கிங்க மிஸஸ் சுபத்ரா ஷ்யாம் வர்மா…?” என்று கேட்டவன்…
பின் தனக்கு தானே சிரித்துக் கொண்டு… சுபத்ராவை பார்த்து… “உனக்கு…” என்று சொல்ல ஆராம்பித்தவன் பின் தன்னை திருத்தியவனாய்…
“உங்களுக்கு நான் முழு பெயர் வெச்சி கூப்பிட்டா பிடிக்காது தானே உங்களுக்கு…அது என்ன சுபத்ரான்னு நீட்டி முழுக்கி கூப்பிடுவது…செல்ல பெயரா கூப்பிட கூடாதான்னு…? நீங்க எப்போவும் என் கிட்ட சொல்லுவிங்களே…
நிஜமா எனக்கு உங்களை அப்போ சின்னதா…செல்ல பெயர் வெச்சி கூப்பிடனுமுன்னு தோனல…நிஜமா..நீங்க ஒவ்வொரு முறையும் இதை சொல்றப்ப..ஏன் எனக்கு தோன மாட்டேங்குதுன்னு நினைப்பேன்.
அதான் கல்யாணத்திற்க்கு அப்புறம் உங்க பெயரை எப்படி கூப்பிடுவதுன்னு முடிவு செய்துக்குறேன்னு சொன்னேன். ஆனா நான் முடிவு செய்ய நீண்ட வருடம் பிடித்து விட்டது…என்ன நான் சொல்றது சரி தானே மிஸஸ் சுபத்ரா ஷ்யாம் வர்மா…” என்று சொன்னவன்..
“உங்களுக்கு இந்த பெயர் தான் மிக பொருத்தமா இருக்கு மிஸஸ் சுபத்ரா ஷ்யாம் வர்மா…” 
அதோடு  சுபத்ராவிடம் பேச்சு முடிந்து விட்டது போல் முகத்தை திருப்பியவன், பின் மருந்துக்கும் சுபத்ரா பக்கம் தன் பார்வையை செலுத்தவில்லை.
சுலோச்சனா தேவி தான்… “என்ன இந்தர் இது…”
சுபத்ராவிடம் மகன் பேச பேச…தன் மச்சினன் சுபத்ராவின் முகத்தில் தோன்றிய தர்ம சங்கடமான நிலையை பார்த்து அவர்களுக்கு பரிந்துக் கொண்டு சுலோச்சனா தேவி பேச வர…
சிக்கந்தர் வர்மா சுலோச்சனா  தேவியை  சட்டென்று திரும்பி  பார்த்த பார்வையில் வாய் தன்னால் கப் சிப் என்று மூடிக் கொண்டது.
பின்  சிக்கந்தர்…அனைவரையும் பொதுவாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே… “ஒரு மாதமா  என் கிட்ட பேசனுமுன்னு மொத்த குடும்பமும் ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலஞ்சிட்டு இருந்திங்கன்னு ஜீ சொன்னார்…
அது தான் என்ன விசயமுன்னு  கேட்க உங்க எல்லோரையும் இன்னைக்கு வரச்சொன்னேன்.” என்று சொன்னவன் பக்கத்தில் அமர்ந்து இருந்த கிஷோரின் தோளில் கை போட்டவராய்…
யார் என்ன வேணாலும் என் கிட்ட பேசலாம்… என்பது போல் பொருள் பதிந்த பார்வையை அனைவரையும் பார்த்து வீசினான்.
தருணுக்கு சிக்கந்தர் கிஷோரை பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு, தங்களை அதுவும் பெத்த தாயை எதிரில் அமர வைத்ததோடு மட்டும் அல்லாது…
தங்களை யாரோ என்பது போல்  தூர விளக்கி வைப்பது போல் பேசும் பேச்சும். அந்த கிஷோரின் தோளின் மீது கைய் போட்டு அவன் தான் கூட பிறந்தவன் போல் அவன் நடந்துக் கொள்ளும் முறையையும்  பார்த்து பல்லை கடித்தவனாய்…
“இந்தர்…நீ இவனை நம்பாதே…” என்று தருண் வர்மா  தன் கை நீட்டி கிஷோரை காட்டிய வாறு சொல்ல…
சட்டென்று தான் இருந்த இருக்கையில் இருந்து எழுந்த சிக்கந்தர் தருண் நீட்டிய  கையில் இருந்த அந்த ஒற்றை விரலை பிடித்துக் கொண்டவன்…
“ஜீயை இந்த விரல் நீட்டி…அதுவும்  என் எதிரில் மரியாதை இல்லாது அவன் இவன்னு  போட்டு பேசினா…உன் மரியாதை கெட்டு விடும் ஜாக்கிரதை.” என்று சொல்லி விட்டு எழுந்தது போலவே முன்பு அமர்ந்து இருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்ட சிக்கந்தர். அதே போலவே கிஷோரின் தோள் மீது கை போட்டுக் கொண்டு…
“அப்புறம்…” என்று முக சாவகாசமாய் கேட்டான்.
“இந்தர் என்னப்பா..யாரோ கிட்ட பேசுவது போல் உன் பேமிலி கிட்ட பேசுற…?” என்று ஒரு ஆதாங்கத்துடன் சுலோச்சனா தேவி பேச…
“ஓ..அப்போ நீங்க எனக்கு யாரோ இல்லையா…?” என்று உதட்டை குவித்து பேசியவன் பின்…
“அப்போ நீங்க  சொல்ல வர்றது என்ன….மாம்…நீங்கள் எனக்கு மிக நெருக்கமானவங்க என்றா…”  அங்கு இருந்த அனைவரையும் காட்டி கேட்டான்.
“டேய் மத்தவங்க முன்னாடி..என்ன இது அம்மாவையும் உங்க குடும்பத்தையும் பேசுவது…முதல்ல நீ அவரை போக சொல்..அப்புறம் நம்ம குடும்பம் விசயத்தை பேசலாம்.” என்று  சிக்கந்தரின் சித்தப்பா ஷ்யாம் வர்மா கிஷோரை காட்டி அவரை அனுப்பி விட்டு நாம் குடும்பமாய் பேசலாம் என்று சொன்னதும்…
“முதல்ல என்னை இந்த டேய் பேசுவதை நிறுத்துங்க…அதுக்கு அப்புறம் குடும்பம் யாரு நீங்களா…?என்று  கேட்டவன்…
பின் கிஷோரின் மீது போட்டு இருந்த தோளில் அழுத்தத்தை கொடுத்த சிக்கந்தர்…’ “எனக்கு இப்போ மட்டும் இல்ல…அதாவது நீங்க என்னை சாவ அனுப்பினதை இழுத்து பிடித்து என்னை இப்படி உயிரோட உட்கார வெச்சி இருக்காரே…அதுக்கு முன்னவே எனக்கு ஜீ தான் எல்லாம். அவருக்கு பிறகு தான் நீங்க …அப்படி இருக்கும் போது..
 இப்போ அவருக்கு பின் கூட நீங்க இல்லாத போது…உங்களுக்காக அவரை வெளிய அனுப்ப சொல்றிங்க…?இப்போ சொல்லுங்க…யார் வெளியே போகனும்.. யார் என் அருகில் இருக்கனும் என்று…நீங்களே முடிவு பண்ணுங்க.” என்று முடிவை அவர்களிடமே ஒப்படைத்தான்.
சுலோச்சனா… “இந்தர் நான் எதுக்கு அந்த முடிவு எடுத்தேன்னு நீ யோசிக்கலையா…?பெத்த தாய் இந்த முடிவு எடுக்குறதுன்னா…அந்த மனசு என்ன துடி துடிச்சி இருக்கும் என்று உனக்கு தெரியாதாப்பா… உன் அம்மாவை பத்தி உனக்கு தெரியாதா…?” என்று சொல்ல…
“காரணம் எதுன்னாலும் இருக்கட்டும்…எதுன்னா எது வேண்டுமானலும்…முதல்ல கருணை கொலைன்னா என்ன…? எங்களுக்கு வசதி இல்ல…எங்களால் செலவு செய்ய முடியல…
இது போல் இருக்குறவங்க தான்..அதாவது இது போல் படுக்கையில் இருப்பவனை பார்த்துக் கொண்டால்… எங்களால் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி செய்ய வேலைக்கு போக முடியல…அதாவது அவங்க வாழ்வாதாரத்திற்க்காக போராடுவது தான் கருணை என்ற பெயரில் செய்யும்…கருணை கொலை…
ஆனா நீங்க செய்ய நினைத்தது…நான் படுத்துட்டு இருந்தா…என் பெயரில் நான் சம்பாதித்தது…என் அப்பா என் பெயரில் வாங்கி போட்ட  ஷேரும்…அதில் வரும் இன்ரெஸ்ட்டும்… என் பெயரில் இருக்கும் சொத்துக்களும் நான் படுத்து இருப்பது போல்…
அதுவும் வீணா படுத்து இருக்கே..அதை தொழில்ல போட்டா..ஒன்றை இரண்டாக்கலாம். இரண்டை மூன்று ஆக்கலாம்…உங்க தொழில் புத்தி…இப்படி யோசிக்க வைத்து இருக்கும்.
நான் கூட நினச்சேன்…என்னுடைய இந்த நிலையை காட்டி  கோர்ட்டில் ஒரு முனு கொடுத்தா போதும்…என் பணத்தை நீங்க என்ன வேணா செஞ்சு இருக்கலாமே…
நினைவு வந்து இருவாரம் இதே யோசனை தான். அப்புறம் தான் தெரிஞ்சது… என் டாட் போகும் போது உங்க எல்லோருக்கும் வெச்சிட்டு போன செக்…
நான் இருக்கும் வரை.நான் சம்பாதித்ததும்…அதில் வரும் வருமானமும்…அதே போல் அவர் எனக்கு கொடுத்த பங்கும்..அதில் வரும் வருமானமும் யாரும் ஒத்த பைசா எடுக்க முடியாது. அதன் உரிமை யாருக்கும் இல்லை என்று…
மாம் நான் ஒன்னும் சொல்லட்டுமா…அது என்னவோ தெரியல எல்லா பையன்களுக்கும் அப்பாவோட அம்மாவை தான் நம்ப சொல்லும்..ஆனா பாருங்க நான் சம்பாதித்தது அனைத்துக்கும் நான் அவரை தான் கார்டியனா போட்டேன்..அதாவது எனக்கு ஏதாவதுன்னா அது அவருக்கு என்று… டாட் கூட கேட்டார்…அம்மாவை போடுடா…என்னவோ தெரியல…
அப்பவே இல்ல டாட் நீங்க தான்னு டாட் கிட்ட சொன்னேன். அது என்னவோ  அப்போ  அப்படி தான் எனக்கு சொல்ல தோனுச்சி… செய்யவும் தோனுச்சி…இப்போ ஏன் அப்போ அப்படி தோனுச்சின்னு தெரியுது…உள்மனது உள்மனது தான் இல்ல மாம்…” என்று ஒரு முழு நீளத்திற்க்கு பேசி முடித்தவன்..
அனைவரையும் பார்த்து… “பேச வேண்டியது எல்லாம் பேசியாச்சா..அப்போ நீங்க கிளம்புனா…நான் ஜீ கூட என் வழி போக சரியா இருக்கும்.” என்று கையை கதவு பக்கம் காட்டி சொன்னான்.
தருண் வர்மா… “இதெல்லாம் இவன் சொன்னனா…?” என்று திரும்பவும் கிஷோர் பக்கம் கை காட்டி பேச..
இம்முறை சிக்கந்தர் எழுந்திருக்கவில்லை கிஷோர் எழுந்ததும் தெரியாது  மூக்கில் குத்தினதும் தெரியாது. ஒரு நொடியில் தருணை அடித்து விட்டு…
அவன் முன் ஒரு விரல் நீட்டி… எச்சரிப்பது போல…”பார்த்து பேசனும். இனி ஒரு முறை உன் வாயில் இருந்து என்னை மரியாதை இல்லாத வார்த்தை வந்தது… நான் சிக்கந்தருக்காக கூட பார்க்க மாட்டேன். பிளந்து கட்டிடுவேன்.” என்று எச்சரிக்கை செய்தான்.
கிஷோர் தருணை ஒரே குத்து தான் மூக்கின் மீது குத்தினான்…மூக்கில் இருந்து ரத்தம் கொட்ட…அதை பார்த்த ஷ்யாம் வர்மா…
“எவ்வளவு தைரியம் இருந்தா…எங்க வீட்டு பையன் மீது கை வைப்ப…” மனைவியின்  பக்கத்தில் பதிவுசாக அமர்ந்திருந்தவன்  எழுந்து கிஷோரை அடிக்க வர..
தன் மீது கை படும் முன் அவன் கையை இழுத்து பிடித்து முறுக்கிய கிஷோர்… “என்னடா…அடிக்க கை ஓங்குற..நீ…அடிச்சா என் உடம்பு தாங்கும். ஆனா நான் அடிச்சா…அவ்வளவு தான்.
என் அடி எப்படி இருந்ததுன்னு  தருண் கிட்ட கேளு சொல்லுவான். நான் என்ன உன்னை போல அடுத்தவன் சம்பாதியத்தில் தொழில் செய்பவனா…இல்லை அடுத்தவன் சம்பாதியத்தை எடுக்க குறுக்கு வழியில் யோசனை செய்பவனா…இல்லை அடுத்தவன்…” என்றதோடு நிறுத்திய கிஷோர், சுபத்ராவை கேவலமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே…அந்த வார்த்தையை முடிக்காது…
பின்… “நான் சுயம்புடா…நானே எழுந்து நானே நின்னு….இப்போ நானே உங்கள எல்லோரையும் எதிர்க்கிறேன்னா….எல்லாம் என் சுயம்டா…அடுத்தவனோடதை ஆட்டைய போடுற உங்களுக்கே மரியாதை தேவைபடுதுன்னா…
எனக்கு மரியாதை நீ கொடுத்து தான் ஆகவேண்டும்.” என்று கட்டளை இடுவது போல் சொன்ன கிஷோர் இப்போது தானே சிக்கந்தர் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டவனாய்…அவன் தோள் மீது கை போட்டுக் கொண்டு…
‘அப்புறம்…’ என்பது போல மிதப்பாய் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.
இப்போது ஷ்யாம் வர்மா அவன் முறுக்கிய கையை நீவி விட்ட வாறே…சிக்கந்தரிடம்… “பார் இந்தர்..உன் முன்னாடியே அவர் எங்களை அடிப்பது.” என்று  தன் அண்ணன் மகனிடம் புகார் வாசித்தான்.
ஷ்யாம் வர்மா கிஷோரை அவர் என்று  சொன்ன மரியாதையை  வார்த்தையை சொல்லி… “ஆ அப்படி தான் ஜீயை மரியதையா பேசனும்.” என்று ஷ்யாம் வர்மா சொன்ன மற்ற வார்த்தைகளை விடுத்து,  கிஷோருக்கு கொடுக்கும் மரியாதை தான் முக்கியம் என்பது போல் பேசினான்.
தருண் வர்மா தன் மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்தாலும் வந்து கொண்டே இருக்க…இதை பெரியதாக நினைக்காது  அவன் ஜீயை சொன்ன அவன் என்ற வார்த்தையை பெரியதாக நினைத்து பேசும் சிக்கந்தரை முறைத்தவனாய்…
“என்னடா பதிமூன்று வருடம் படுத்து எழுந்ததில், மூளை ஏதாவது  பிசகிடுச்சோ…” என்று கேட்டவனை ஒன்றும் சொல்லாது பார்த்தான்.
தருண் வர்மா தன் தம்பியிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை. எப்போதும் அவனையோ அவன் செயலையோ சொன்னால் எப்போதும் கன்னா பின்னா என்று  அவனுக்கு கோபம் மூக்குக்கு மேல் தான் வரும்.
எப்போதும் அவன் செயல் தான் முன் நிற்க்கும். பின் தான் யோசிப்பான். அப்படி பட்டவன் தான் அவனை பற்றி பேச…அமைதியாக தன்னை பார்ப்பதை பார்த்து இப்போது தருண் வர்மா  சிக்கந்தரை யோசனையுடன் பார்த்தான்.
“என்ன பைய்யா…இப்போ தெளிஞ்சிடுச்சா…நான் புத்தி பேதலிச்சி எழுந்துக்கலேன்னு…” என்று சொல்ல… அப்போதும் தருண் வர்மா விடாது…
“நீ உன் ஜீயை ரொம்ப நம்பரலே  இந்தர்.  உன் ஜீ என்ன  செய்தார் தெரியுமா…?நாம இந்தியாவில்  லான்ச் செய்ய வேண்டிய காரை நமக்கு போட்டியா லான்ச் செய்ய நினைக்கிறார்.
உன் ஜீ மட்டும்  இடையில் புகாம இருந்து இருந்தா இன்றைய நாள் தான் நாம் அந்த காரை இந்தியாவுக்கு லான்ச் செய்ய  வேண்டிய நாள்.” என்று சொல்லி முடிக்க…
சிக்கந்தர் வர்மா ஏதோ கணக்கு செய்ய பின்… “ஓ என்னை கருணை கொலை செய்த பின் எனக்கு வர வேண்டிய பணம் அப்படியே அங்கு….ஆ …ஆ…இப்போ கணக்கு சரியா வருது.” என்று சொன்னவன்.
பின்… “என்ன சொன்ன பைய்யா என் ஜீ உனக்கு எதிரா அந்த காரை லான்ச் பண்ண பாக்குறான்னா…?என்று கேட்டவன்….என் ஜீ இல்ல பைய்யா… நாங்க நாங்க தான் அந்த காரை லான்ச் செய்யுறோம். இன்னும் ஒரே மாதத்தில்…” என்று சொன்னவனின் பேச்சில் கடுப்பாகி…
ஷ்யாம் வர்மா… “உன் குடும்பத்துக்கே நம்பிக்கை துரோகம் செய்ய நினைக்கிறியே…சீ உனக்கு வெக்கமா இல்ல…?” என்று கேட்டான்.
பக்கத்தில் இருந்த சுபத்ராவை பார்த்த வாறே… “அது நீங்க சொல்றது தான் எனக்கு சிப்பு சிப்பா வருது  சித்து…” என்று சொன்னவன் பின் அனைவரையும் பார்த்து…
“இது தான் இந்த குடும்பம் அது இது என்று பேசுற கடைசி பேச்சா…இருக்கனும். இனி இது போல் பேச்சு நம்மக்குள்ள இருக்க கூடாது.
இந்த அம்மா அண்ணன் சித்தாப்பான்னு யாரும் யாரும் இனி உறவு முறை சொல்லிட்டு என் கிட்ட  பேச வந்துட கூடாது…ஆனா தொழில் பேச்சு பேச வரலாம்…ஏன்னா இனி உங்களுக்கு தொழில் எதிரியிலேயே முதல் எதிரி நானா தான் இருப்பேன்.” என்று சொன்னவன் இதோடு பேச்சு முடிந்தது போல் முடித்து விட்டு அவர்கள் சென்ற பின்…
“என்ன ஜீ…போகலாமா…?” என்று கிஷோரை பார்த்து கேட்டான்.
“சிக்கந்தர் இப்போ தான் எழுந்து இருக்க…இப்போ  அவ்வளவு தூரம் அலச்சல்  தேவை தானா…?” என்று கேட்க…
“கண்டிப்பா தேவை ஜீ…கண்டிப்பா  எனக்கு தேவை.” என்று சிக்கந்தர் வர்மா  எதை நினைத்து அந்த வார்த்தையை சொன்னானோ…ஆனால் அவனுக்கு அது மிக மிக தேவையாக ஆகி போனது என்பது தான்  நிஜம்.
“இங்கு இருந்து ப்ளைட் அதுக்கு பின் காரை வெச்சி தான் போகனும். அவ்வளவு தூரம் ட்ராவல் உன் உடம்பு ஏத்துக்குமா தெரியல சிக்கந்தர்.
நீ சொன்னது போலவே எல்லாம் செய்யலாம். இப்போ நீ இங்கு ஒரு வாரம் ஓய்வு எடு. நான் ஜமுனாவை கூட்டிட்டு பாம்பே போய்  விட்டு… திரும்ப இங்கே வந்து உன்னை அழச்சிட்டு போறேன்.” என்று பொறுமையாக கிஷோர் சிக்கந்தர் வர்மாவிடம் சொன்னான்
“இல்ல ஜீ..ஏற்கனவே எனக்காக உங்க  பிசினஸை எல்லாம் விட்டு இங்கு இருந்தது போதும்..இங்கு இருந்து நேரா….குண்டூர் போய் உங்க அக்கா பொண்ணை தூக்குறோம்..அங்கு இருந்து அப்படியே அவளை  பாம்பே கடத்திட்டு போறோம். என்ன ஜீ…” என்று கேட்க…
“அவ என் அக்கா பொண்ணுடா…” என்று சொன்னவனிடம்..
“நான் என்ன எங்க அக்கா பொண்ணுன்னா சொன்னேன் ஜீ…உங்க அக்கா பொண்ணு தான்…நான் சொந்தம் எல்லாம் கொண்டால ஜீ…” என்று சொன்னவனுக்கு அப்போது தெரியவில்லை…
அவளோட சொந்தம் மட்டும் போதும்..என்று தன் குருஜீயிடம் எப்படி கேட்பது என்று…காதலுக்கும் குருபக்திக்கும் இடையே திண்டாட போகிறான் என்று…
 

Advertisement