Advertisement

அத்தியாயம்…3(1)
“ஜீ என்…னால உ..ங்க அ…க்கா இற…ப்புக்கு கூ…ட போ…கலையா…?” என்று கேட்ட சிக்கந்தருக்கு நிற்க முடியாது ஆடி போனவனாய் தொப்பென்று அந்த படுக்கையில் அமர்ந்துக் கொண்டவனுக்கு, மூச்சு விடுவதே சிரமம் போல் இழுத்து இழுத்து வந்தது. 
அடுத்து என்ன பேசுவது என்று கூட தெரியாது கண்கள் கலங்க கிஷோரை, தன் குருஜீயை பார்த்திருந்தான் சிக்கந்தர். 
பதிமூன்று வருடம்  கழித்து எழுந்த உடன்  பேசும் போது திக்காத பேச்சு… இன்று திக்கி திணறி தான் வந்தது. அதே போல் அப்போதே  இரண்டு நாளிலேயே எழுந்து நிற்க முயற்ச்சி செய்தவனுக்கு, இது போல் கால்கள் ஆட்டம்  காணவில்லை.
அதே போல் தான்  பதிமூன்று வருடம், தன் இளமையின் மொத்த பகுதியும் படுக்கையிலேயே சுயநினைவு இல்லாது தான் கழிந்து விட்டது என்று தெரிந்தும், மனதில் அவன் என்ன நினைத்தானோ வெளியில் கண்ணீர் விடாது தன் பலவீனத்தை காட்டி கொள்ளாது கம்பீரமாய் அமர்ந்து இருந்தவன்.
தன் தாயே தன்னை கருணை கொலை செய்ய மனு போட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கலங்காத அந்த மனித மனம்…
தனக்காக தன் ஜீ அவர் உடன் பிறந்த சகோதரியின் இறப்புக்கு கூட போகவில்லை என்று நினைக்கும் போது பேச்சு தன்னால்  குழறியது.மனது தள்ளாடியதால் உடலும் தள்ளாட மனதின் பலவீனம் கண்ணீராய்  வந்து விழுந்தன.
“சிக்கந்தர் நீ ஒரி பண்ணிகாதே…ஒன்னும் இல்ல. நான் அக்காவை பார்த்துட்டு தான் இங்கு வந்தேன்.அதனால கவலை படாதே.” என்று கிஷோர் சிக்கந்தருக்கு ஆறுதல் சொல்லும் படி  நிலையில் இருந்தான் சிக்கந்தர்.
“ஜீ..நீங்க போயிட்டு வந்து இருக்கலாம் ஜீ…உங்களுக்கு உங்க அக்காவை எவ்வளவு பிடிக்குமுன்னு எனக்கு தெரியும் ஜீ… என் ஜீக்கு பிடிச்ச அவங்க அக்காவை நானும் தான் பார்க்க ஆசை பட்டேன். ஆனா அதுக்குள்ள…” என்று  தான் கோமாவில் விழுந்ததை பற்றி சொல்லிக் கொண்டு வந்த சிக்கந்தர்.
பின் ஏதோ நினைத்தவனாய்… “நான் பார்த்துட்டு தான் இங்கு வந்தேன்னா… அப்போ இவங்க ஏற்பாடு செய்ததை கேட்டு தான் நீங்க உங்க அக்காவை விட்டுட்டு வந்துட்டிங்கலா ஜீ…?” என்று கேட்டதற்க்கு…
“ஆமாம்…” என்று தலையாட்டிய கிஷோர் தொடர்ந்து…  “அக்காவுக்கு கேன்சர். ஆறுமாசமா குண்டூருக்கும் பாம்பேவுக்கும் தான் அலஞ்சிட்டு இருந்தேன். கூட இந்த கார் லான்ச்  வேற..என்னை  ரொம்ப கடுப்பு ஆக்கிடுச்சி…
அது தான் இங்கு என்ன நிலவரம் என்று தெரிய  ஒரு ஆள வெச்சி இருந்தேன். அவனுக்கு  சொந்த விசயம் பிரச்சனை போல…அதில் உன் விசயத்தை மறந்து கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரிய வந்தது.
அது தான் அக்காவை அப்படியே விட்டுட்டு வர வேண்டியதா போயிடுச்சி…” என்று சொன்னவனையே பார்த்திருந்த சிக்கந்தருக்கு அடுத்து என்ன பேசுவது…?என்ன கேட்பது என்று தயங்கினாலும் பேசி தானே ஆக வேண்டும் என்று நினைத்து…
“உங்க மாமா வேற இறந்துட்டதா சொல்லி இருந்திங்கலே…?” என்று கேட்ட சிக்கந்தர் பின் அவனே…
“அவங்களுக்கு மகன் இருக்கானா…?” என்று ஒரு எதிர் பார்ப்போடு கேட்டான்.
“இல்ல சிக்கந்தர் ஒரே பெண் தான். மாமாவை சொத்து தகராறு  பாம்பை வெச்சி கடிக்க வெச்சிட்டு…இயற்க்கை மரணமா ஆக்கிட்டாங்க…
அவங்க எல்லாம் கொலை செய்யவும் தயங்க மாட்டாங்க. அதுக்குன்னு ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டாங்க. அது தான் அக்காவை என் கூடவே வந்துடுன்னு கத்திட்டு இருப்பேன்.
அக்கா இந்த நிலத்துக்காக தான் உங்க மாமா உயிரை விட்டார். இந்த நிலத்திற்க்காக தானே உங்க மாமா உயிரை எடுத்தாங்க. நான் இங்கு இருந்து வந்தா இந்த நிலம் அவங்க சுலுவா எடுத்துப்பாங்க..
இந்த நிலம் யாருக்கு வேணா போகலாம். ஆனா இந்த நிலத்திற்க்காக என் புருஷனை கொன்னவங்களுக்கு மட்டும் பே கூடாதுன்னு சொல்லிட்டு கடைசி  வரை அடமா அங்கேயே இருந்துட்டாங்க.” என்று தன் அக்காவின் வாழ்க்கையை சொன்னான் கிஷோர்.
இது வரை கிஷோர் தன் ஊரை பத்தி குண்டூர் என்று  சொல்லி இருக்கார். அதே போல் அவருடைய தந்தை ஒரு மெக்கானிக் ஷெட்  வைத்திருந்தார் என்று தெரியும்.
அதுவும் கிஷோர்  தான் ஏன் கார் ரேசுக்கு வந்தேன் என்று சொல்லும் போது, பேச்சோடு பேச்சாய்  வந்த விசயங்கள் இது. அதோடு அக்காவின் கணவர் உயிரோடு இல்லை என்பதே கிஷோர் தன் சொந்த விசயங்களை பகிர்ந்துக் கொண்டது.
ஆனால் இருவரும் நிறைய பேசுவார்கள். காதலர்கள் தான் என்ன பேசுகிறார்கள் ஏது பேசுகிறாகள் என்று தெரியாது மணிக்கணக்காய் பேசுவார்களா… பிடித்தவர்களோடு அது நட்பாய் இல்லாது, எந்த உறவு முறையும் இல்லாது பிடித்தம். அந்த பிடித்தம் எந்த வகையாக கூட  இருக்கலாம். பக்கத்து வீட்டு ஆட்களோடு இருக்கலாம். கூட படித்தவனோட படித்தவளோடு இருக்கலாம்.
யாரோடு  இந்த பிடித்தம் வரும்  என்று தெரியாது. ஆனால் உண்மையான அந்த பிடித்தம் சரியான நபர்கள் மீது வந்து விட்டால்…அந்த பிடித்தத்திற்க்காக எது என்றாலும் செய்யலாம். இவர்களின் இந்த பிடித்தம் சிக்கந்தருக்கு தன் குருஜீ மீது வர..
கிஷோருக்கோ  தன்னோடு துடிப்பு மிக்க ஒரு இளைஞன்  தான் விரும்பிய துறைக்கு கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் வந்தது.நாட்கள் செல்ல செல்ல அந்த பிடித்தம் வளர்ந்ததே தவிர எள்ளவும் குறையவில்லை.
அந்த பிடித்தம் இன்னும் நெருக்கமாகியதில் அவர்கள் நேரம் காலம் தெரியாது பேசி இருக்கிறார்கள் சிக்கந்தர் தன் குடும்பத்தை பற்றி அனைத்தும் பேசி இருக்கிறான்.
ஆனால் ஜீயை பற்று தெரிந்தது அவர் சொன்ன இரண்டு ஒரு விசயம் தான். அது அக்கா பின் அவர் கணவன் இறந்து விட்டார் அவ்வளவு தான்.
 நிஷா ஜீ காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவன் முன்நிலையில் தான் நடந்தது. கிஷோருக்கு ரசிகையாக அறிமுகமான நிஷா. பின் காதலியாகி… அதன் பின் மனைவியாகி… கிஷோரின் குழந்தைக்கு தாய் ஆனது எல்லாம் அவனும் கூட இருந்ததால்…அனைத்தும் அவனுக்கு தெரியும்.
கிஷோரே இது வரை தன் சொந்த வாழ்க்கையை பற்றி சொன்னது இதுவே முதல் முறை… அதுவும் ஜீ சொன்ன அக்காவுக்கு மகன் இல்லை என்பதில்..
“ஜீ அந்த பெண் தனியா இருக்கு போல..அதுவும்  ரொம்ப பயந்து போய்  இருக்கு ஜீ…நாம உடனே குண்டூருக்கு போகனும்.” என்று சொல்லி அவன் தன்னையும் சேர்த்துக் கொள்ள…
“சிக்கந்தர் நீயும் வர்றியா…?” என்று சந்தேகத்துடன் கேட்டதற்க்கு…
“இனி நானும் பாம்பேக்காரனாக ஆக போறேன் ஜீ. நாம இரண்டு பேரா சேர்ந்து நம்ம சார்பா புது காரை லான்ச் செய்ய போறோன்.” என்று சொல்லிக் கொண்டு வந்த சிக்கந்தரை கிஷோர் சந்தேகமாக பார்த்தான்.
“ஜீ பதிமூன்று வருடம் படுத்ததால், என் மூளையும் படுத்து விட்டது என்று நினச்சிட்டிங்களா…?அது பதிமூன்று வருடத்தையும் சேர்த்து என்னை யோசிக்க வைக்குது ஜீ… நீங்க இந்த ஒரு மாசமா உங்க தொழில் பேச்சை பேசுறிங்களே எனக்கு புரியாது  என்று நினைக்கிறீங்களா…
தருண் வர்மாவும்…ஷ்யாம் வர்மாவும் சேர்ந்து புது கார் இந்தியாவுக்கு லான்ச் செய்ய தான் நினைக்கிறாங்க..அந்த காரை நீங்க தான் இந்தியாவுக்கு லான்ச் பண்ண நினைக்கிறிங்க. அதுக்கு ரொம்ப பணம் தேவைபடுது…
எந்த அளவுக்குன்னா…தருண் வர்மாவுக்கு அவன் அப்பா கொடுத்த ஷேரை எல்லாம் மொத்தமா போட்டு…ஷ்யாம் வர்மா அவரோடதை போட்டு…சுலோச்சனா தேவி தன்னோடதையும் கொடுத்து அதுவும் போதாது…என்னோடதையும் போட..
அதாவது என்னை கருணை கொலை செய்த பின்  என்னோட ஷேரையும் அதில் சேர்த்தா தான் அந்த காரை இந்தியாவில் லான்ச் செய்ய முடியும்.
அது அவ்வளவு பெரிய தொகை. அதை புரட்ட தானே ஜீ…உங்களுக்கு தொழிலில் பிரச்சனைன்னு மிக நாசுக்கா என் கிட்ட சொன்னிங்க…” என்று சிக்கந்தர் அனைத்தையும் பிட்டு பிட்டு வைத்ததில்…
கிஷோரால்… “ஆமாம்.” என்று மட்டும் தான் தலையாட்ட முடிந்தது.
“இதுக்காக தான் என்னை கருணை என்ற பெயரில் கொலை செய்த பார்த்தாங்களா ஜீ…?” என்று கேட்ட்தற்க்கு…
“அதற்க்கும் தான்.” என்று அதோடு தன் பேச்சை முடித்துக் கொண்டான் கிஷோர்.
“எதுன்னாலும் இருந்து போகட்டும் ஜீ..ஆனா இனி நாம…நாம தான் அந்த புது காரை லான்ச் செய்யுறோம்.” என்று சிக்கந்தர் சொன்னதும்…
“சிக்கந்தர் அது ரொம்ப பெரிய தொகை. அதுவும் இல்லாம இப்போ  போன வருடம் தான் புதுசா ஒரு வீடை நிஷாக்கு வாங்கினேன். என் தொகை அதில் பாதி  இழுத்துட்டுச்சி…அது தான்.” என்று கிஷோர் தயங்க…
“அது தான் என்னோடையது இருக்க ஜீ அப்புறம் என்ன…?” என்று சிக்கந்தர் கேட்டான்,
“இது சரியா வருமான்னு எனக்கு தெரியல சிக்கந்தர். இது வரை நம்மிடம் பணம் வந்தது இல்லை.இதனால்…” என்று  கிஷோர் இழுத்து தன் பேச்சை நிறுத்தினான்.
“பணம் என்ன ஜீ…பெரிய பணம்…நமக்கு நடுவுல எது வந்தாலும், நாம எப்போவும் இப்படி தான் இருப்போம் ஜீ…” என்று சொன்னவனின் பேச்சை கிஷோர் ஆமோதித்து ஏற்றுக் கொண்டான்.
முன்னவே ஏற்பாடு செய்தது போல் அடுத்த நாள் சிக்கந்தர் அவன் குடும்ப  உறுப்பினர் மொத்த பேரையும் பார்க்கும் நாள்.
விடியலிலேயே கிஷோர்… “சிக்கந்தர்  பார்த்து பேசு. எதுக்கும் டென்ஷன் ஆகாதே…உன் உடம்போட வேறு எதுவும் முக்கியம் இல்லை. சிக்கந்தர் டென்ஷன் ஆகாதே…டென்ஷன் ஆகாதே…” என்று சொல்லி கிஷோர் டென்ஷனாகி கொண்டு இருந்தான்.
“ஜீ ஜீ…நீங்க ஏன் டென்ஷனா இருக்கிங்க….” என்று கேட்ட சிக்கந்தர்….அவர்கள் உதவிக்கு என்று ஒரு பெண் அங்கு சிக்கந்தருக்கு ஜூஸ் கொடுக்க சாத்துக்குடியை பிழிந்து சிக்கந்தரிடம் நீட்ட..
“நீங்க இதை ஜீக்கு கொடுங்க. இது இப்போ அவருக்கு தான்  மிக மிக தேவை.” என்று சொன்னான்.
இதோ அதோ என்று நாள் வந்து விட்டது போல்… நேரமும் வந்து விட்டது. ஒன்பது மணிக்கு வர சொன்னால் எட்டு   மணிக்கே சிக்கந்த சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வந்து விட்டு…பின்  ஒரு மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு….அவர்களை சந்தித்தான் நம் சிக்கந்தர்.
 

Advertisement