Advertisement

அத்தியாயம்….22…3
தருண் கடைசியாக ஏர்போர்ட் கிளம்பும் போது கூட… கிஷோரிடம் “திருமணத்தை கார் லான்ச்க்கு பின் வைத்துக் கொண்டு இருக்கலாமே…? இரண்டும் ஒரே சமயத்தில் கஷ்டம் இல்லையா…?” என்று கேட்டான்.
தருண் எந்த எண்ணத்தில் கேட்டான் என்று எல்லாம் கிஷோர் யோசிக்கவில்லை. அவன் யோசித்தது எல்லாம் தன் வீட்டு பெண்ணை யாரும் தவறாய் ஒரு வார்த்தை பேசி விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருந்தான்.
கிஷோர் முக்கியமாய் கார் லான்ச் முன் திருமணம் வைக்க நினைத்ததே… கார் லான்ச்  அன்று சிக்கந்தர் தன் மனைவியோடு இருக்க வேண்டும் என்பது முதல் காரணம் என்றால்… இரண்டாம் காரணம்..திருமணம் முன் கார் லான்ச் வைத்து இருந்தால் கண்டிப்பாக அனைவரின் கவனமும் ஜமுனா மீது திரும்பும்…
இப்போது எல்லாம் இந்த சிக்கந்தர் பார்வை எல்லாம் சரியே இல்லை. யார் இருக்கிறார்கள் இல்லை என்று கூட பாராது… ஜமுனாவை  பார்த்து வைக்கிறான்.
இவனின் இந்த பார்வையை விழா அன்று யாராவது கவனித்து விட்டு ஏதாவது சொன்னால்… ஏன் இவனே எதற்க்கு எடுத்தாலும், ஜாமூன் ஜாமூன் என்று கூப்பிட்டு விழாவில் ஜமுனாவை  முதலில் நிற்க வைத்து விடுவான்.
அப்போது கண்டிப்பாக மற்றவர்கள் ஜமுனாவை பார்த்து … “யார்..?” என்ற கேள்வி வரும்..கூடவே பதிலாய் கிஷோரின் அக்கா மகள் என்று வரும் போது நாக்கு தான் நரம்பு இல்லாதது ஆச்சே..
கண்டிப்பாக அவர்களின் கற்பனை கண்ட மேனிக்கு தான்  மேயும். “ஒ இதுக்கு தான் சிக்கந்தரை கைக்குள் வைத்துக் கொண்டானா…?” என்று தன்னை  பார்த்து கேள்வி எழ கூடும். அதை பற்றி எல்லாம் அவன் கவலை பட மாட்டன் தான்.
ஆனால் இந்த பேச்சில் ஜமுனாவின் நடத்தையில் ஒரு கேள்வியோடு தான் மற்றவர்கள் பேசுவார்கள். அதை தான் கிஷோர் விரும்ப வில்லை.  அதனால் தான் சிக்கந்தரோடு கிஷோர் தான் திருமணத்தை விரைவில் வைக்க முனைந்தான்,
இப்போது தருண் இப்படி கேட்டதும்… கிஷோர் சொன்ன பதில் “கார் லான்ச்சில் ஜமுனா சிக்கந்தரின் மனைவியா தான் எல்லோர் பார்வைக்கும் தெரியனும்.” என்று சொல்லி விட்டான்.
ஷ்யாம் அதற்க்கு எதோ பேச வாய் திறக்கும் வேளயில் கிஷோர் திரும்பவும்… “என்னை பத்தி ஏதாவது பேசினால் சிக்கந்தருக்காக நான் பார்ப்பேன். ஆனால் பேச்சு ஜமுனா பத்தி என்றால் நான் யாரையும் பார்க்க மாட்டேன்.” என்று கிஷோர் சொன்னதும்..
அதற்க்கும் ஷ்யாம்… “அப்போ சிக்கந்தரா..உங்க அக்கா மகளா என்று பார்த்தா நீங்க உங்க அக்கா மகளுக்கு தான் முக்கியத்துவம்  கொடுப்பிங்க…” என்று  சொன்னவர்.
பின் அப்போது தான் அந்த இடத்திற்க்கு வந்த சிக்கந்தரிடம் திரும்பவும் அதே பேச்சு பேச… சிக்கந்தர்  “நல்ல ஆம்பிள்ளைக்கு அழகே வீட்டு  பெண்களை எங்கும் யார் முன்னாடியும் விட்டு கொடுக்க கூடாது என்பதே..என் ஜீ அப்படி செய்யலேன்னா தான் ஆச்சரியமே…” என்று சொன்னவன்..
பின் “என் கல்யாணத்தை பத்தி நீங்க எல்லாம்  ஏன் இவ்வளவு   யோசிக்கறிங்கன்னு தெரியலையே…?” என்று தன் நெற்றியை தடவிய வாறு கேட்டதற்க்கு…
“இல்ல வேலை அதிகமாச்சே..நீ ஒருத்தன் எவ்வளவு தான் பார்த்துப்ப..அது தான்.” என்று மிகவும் அக்கறை படுவது போல் பேசி விட்டு தான் தருண் வர்மா சென்றான்..பின் பேசி தானே ஆக வேண்டும். இல்லை என்றால் அந்த பாதி வட்டி குறைத்ததும் வட்டிக்கு வட்டி என்று  சொல்லி விட்டால்…அந்த பயம் இருக்க தானே செய்யும்.
அனைத்தும் பேசிய அவர்கள் தன் அன்னையை பற்றி பேசாமலேயே சென்று விட்டார்கள்… இவர்கள் போல் ஒரு சில உறவுகள் இருக்க தான் செய்கின்றனர்..
நன்றாக இருக்கும் போது நம் உழைப்பை வாங்கிக் கொள்பவர்கள் கொஞ்சம் நம் நிலை மோசமானல் அது உடல் நிலையானாலும் சரி , பொருளாதார நிலையானாலும் சரி..உறவுகளில் சில பேர் இப்படி இருக்க தான்  செய்கிறார்கள். 
அவர்களில் இவர்களும் சேர…. கடைசியாக அந்த ஷேரின்…என்று ஷ்யாம் இழுக்கும் போதே சிக்கந்தர் … “நான் சொன்னது சொன்னது தான்… இப்போ யாரையும் எப்போவும் நம்ப முடியாது.
அதை நான் கண் கூட கண்டவன்.. அனைத்திலும் என் மனைவிக்கும் நாளை வரும் என் குழந்தைகளுக்கும் பொருளாதார பாதுகாப்பு செய்வது என் கடமை…
யாரும் என்னை பார்க்கவில்லை. நான் யாரையும் பார்க்கும் அவசியம்  எனக்கு இல்லை… அம்மா செய்த்தை மறந்துட்டு பார்த்துக்குறானே..அதே போல் நாம் பேசினா  அந்த சொத்தை பற்றி விட்டு விடுவான் என்று  நினைத்தால்..நீங்கள் நினைத்தது நடக்காது.  நான் அம்மாவை பார்த்துக்குறது அப்பாவுக்காக. என் அப்பாவுக்காக…அவ்வளவு தான்.” என்று சிக்கந்தர் தன் பேச்சை முடித்துக் கொண்டான்.
இனி சொல்ல ஒன்றும் இல்லை என்பது போல தருண் ஷ்யாம் ..அடுத்து தங்களுடைய ஷேரை எது எது விற்க வேண்டும்…எந்த அசையா சொத்தை விற்க வேண்டும் என்று கணக்கும் போட்டவர்கள்..
நியாபகமாய் ஜமுனாவிடம்… “பார்த்தும்மா அடிக்கடி சென்னை வாங்க..அவன் மறந்தாலும் நீ தான்மா அவனுக்கு நியாபகப்படுத்தி கூட்டிட்டு வரனும்.” என்று ஜமுனாவிடம் நல்ல முறையாகவே பேசி விட்டு சென்றனர்..
பின் இனி தங்களோடு சிக்கந்தர் தான் உயர்ந்து நிற்ப்பான் என்று தெரிந்து விட்டது. உயர்ந்தவர்களை பகைத்துக் கொள்ள கூடாது என்பது எழுத படாத விதி அல்லவா அந்த விதியை பின் பற்றி பேசி விட்டே சென்னை  பறந்தார்கள்.
அதோ இதோ என்று சிக்கந்தர்  ஜமுனாவின் திருமண நாளும் வந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற போது ஜமுனாவின் முகம் வழக்கத்திற்க்கு மாறாய் சோர்ந்து போய்  காணப்பட்டது. 
சிக்கந்தர் கார் லான்ச் திருமணம் என்று இரண்டு வேலைகளுக்கு  இடையே அல்லாடுவதால்  ஜமுனாவை பார்க்க என்று சிக்கந்தர் வந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட்தால் தான் இந்த பெண் இவ்வளவு சோகமாக இருக்கிறாள் என்று நினைத்த நிஷா…
கிஷோரிடம்… “இவங்க என்னங்க… ரொமன்ஸ்ல நம்மோட முந்திடுவாங்க போல…” என்று தன்  தன் கணவனிடம் கிண்டலாக பேச..
தன் குறுந்தாடியை தடவி விட்ட வாறே… “நானும் அது தான்  யோசிச்சிட்டு இருக்கேன் டாலி பைய்யன் நம்மோட முந்திடுவான்னோ…” என்று பேசிக் கொண்டு இருந்தவர்களின் இருவரின் மனமும் மிக மகிழ்ச்சியில்  மூழ்கி போய் இருந்தது.
நாளை திருமணம் என்ற போது விடிந்து விடியாத காலையிலேயே தன் வீட்டுக்கு வந்து நின்ற சிக்கந்தரை பார்த்து,…அதுவும் இரவு உடையிலேயே வந்து நின்றாவனை பார்த்து கிஷோரும் நிஷாவும் பயந்து தான் போய் விட்டனர்.
கிஷோர் பதறி போய்… “என்ன சிக்கந்தர் ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டான்.
 நிஷாவோ  மனதில் நேத்து நையிட் தானே இவங்கல பத்தி  மகிழ்ச்சியா பேசிட்டு இருந்தோம்..என்ன காலையிலேயே இப்படி வந்து நிற்கிறான் என்று யோசித்து நிற்க..
சிக்கந்தர்..”இல்ல ஜீ பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல…ஜாமூனை பாக்க..” என்று சிக்கந்தர் தன் பேச்சை இழுத்து நிறுத்தினான்.
அவன் சொன்னதை கேட்ட கிஷோர்… “ஏன்டா..ஏன்டா..? ஒரு மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டியாடா…?” என்று கோபிப்பது போல் கிண்டலாக பேசிய கிஷோர் அவன் தலையில் தட்டிய வாறே அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு..
நிஷாவிடம்… “காபி கொண்டுட்டு வா டாலி..” என்று தன் மனைவியிடம் சொன்னவன் சிக்கந்தர் பக்கம் திரும்பி ..
“என் கூட காபி குடிச்சிட்டு  அப்புறம் உன் ஜாமூனை பாக்க போறியா…?இல்ல இப்போவே பார்த்து ஆகனுமா…?” என்று கிஷோர் கிண்டலாக கேட்க..
அதற்க்கு சிக்கந்தர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாது…  “காபி வேண்டும் தான்..அதோட ஜாமூனுக்கு டீயும் கொடுத்துட்டா நான் அவ ரூமுக்கு போயிடுவேன்.” என்று சொன்னதும்..
“ஏன்டா..இப்படி சொல்றியே..உனக்கு வெக்கமாவே இல்லையா…?” என்று கிஷோர் கேட்க…
அதற்க்கும் கூச்சமே இல்லாது… “ நாளைக்கு எப்படியும் நீங்கலே அவள என் ரூமுக்கு அனுப்பி வைக்க போறிங்க..அதுக்கு முன்ன இப்போ நான் அவ ரூமுக்கு போறேன்..இதில் கூச்சம் எங்கு இருந்து வந்தது…?” என்று கேட்டவன்..
அதோடு விடாது.. “தோ பாருங்க ஜீ… இந்த முறை… சடங்கு பெண் வீட்டில் தான் செய்யனும் என்று ஏதாவது சொல்ல கூடாது.” என்று சொன்னவனின் பேச்சி கிஷோருக்கு பாதி புரிந்தும் மீதி புரியாததுமாய் போக..
“என்னடா சொல்ற..என்ன முறை…?” என்று கேட்டதற்க்கு.. தன் முன் நீன்ட தட்டில் இருந்து தனக்கு காபியும் தன் ஜாமூனுக்கு டீயையும்  எடுத்துக்  கொண்டவன்..
மின் தூக்கி  நோக்கி சென்ற வாறே… “அது தான் பஸ்ட் நையிட்  ஜீ…இங்கு தான் வைக்கனும் எல்லாம் சொல்ல கூடாது. நான் அங்கு எல்லாம் ஏற்பாடும் பக்காவா  செய்துட்டேன்.” என்று சொல்லிக் கொண்டே மின் தூக்கியின் உள் சென்று அதன்  கதவை அடைக்கும் வேளையில் அவன் ஜீ…
“அவன் வெட்கம் எல்லாத்தையும் விட்டுட்டான்” என்று  நிஷாவிடம்  சொல்லிக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொள்ளும் ஜீயை பார்த்த வாறே..முதல் தளத்திற்க்கு வந்தவனின் முகம் இப்போது யோசனைக்கு தாவியது.
இரண்டு நாளாக வேலையின் நடுவில் சிக்கந்தர் ஜமுனாவிடம்  பேசிக் கொண்டு தான் இருக்கிறான். ஏனோ அவள் பேச்சில் சோர்வு..
“என்ன ஜாமூன்…?” என்று கேட்டால் ஒன்றும் இல்லை.
“உடம்பு சரியில்லையா…? என்று சிக்கந்தர் கேட்டால் அதற்க்கும்  ஜமுனா..
“ஒன்றும் இல்லை.” என்ற பதிலே..
பின் “மனது சரியில்லையா…?” என்று சிக்கந்தர் கேட்ட போது சிறிது நேரம் கழித்தே ஜமுனா அந்த…
“ஒன்றும் இல்லை.” என்ற பதில் தந்தாள்.
அவளின் அந்த சிறு மெளனம் தான் அவள் ஏதோ நினைத்து அவள் மனதை வருத்திக் கொண்டு இருக்கிறாள்  என்று புரிந்தவனாய் விடியும் விடியாத இந்த காலை பொழுதில் ஜமுனாவை காண வந்து விட்டான்.
கிஷோர்… “என்னடா…?” என்று தன்னிடம் பதறி கேட்கும் போது ஏதேதோ பேசி பேச்சை திசை மாற்றி விட்டான்.
ஜமுனா என்னவோ சரியாக பேசவில்லை என்று சொன்னால் கண்டிப்பாக ஜீயும்…பாபியும் மனம் வருந்துவார்கள். நாளை திருமணம் இன்று அவள் ஏதோ போல் இருக்கிறாள் என்று சொன்னால்..
கண்டிப்பாக ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். அவர்கள் முடிந்த மட்டும் ஜமுனாவை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். ஜீக்கும் சரி பாபிக்கும் சரி சித்தார்த்தும் ஜமுனாவும் வேறு வேறு இல்லை. ஜமுனாவை தன் பெண் போல் தான் பார்த்துக் கொள்கிறார்கள்..
இவள் எதை நினைத்து தன்னையே வருத்திக் கொள்கிறாளோ என்று தெரியாது இவர்களிம் அதை பற்றி பேச வேண்டாம் என்று  நினைத்து அவர்களிடம் ஒரு மாதிரியாக பேசி விட்டு ஜமுனாவின் அறைக்கு வந்தவன்..
கதவு தாழ்ப்பாள் போடாது வெறும் சாத்தியிருக்கும் கதவை திறந்து உள் நுழைந்தவன் கண்ணில் பட்டது படுக்கையில் அமர்ந்த வாக்கில் ஏதோ யோசனையில் இருப்பவளை  தான்..
தன் கையில் இருக்கும் கப்பை அங்கு இருக்கும் டீப்பாவின் மீது  வைத்து விட்டு அவள் அருகில் சென்றான். சிக்கந்தர் அந்த கப்புக்களை டீப்பாவின் மீது வைக்கும் போது எழும் சத்தத்தில்  கூட ஜமுனாவின்  மோன நிலை மாறாது அப்படியே அமர்ந்து இருக்க.. அவள் முகத்தை பார்த்து சிக்கந்தர் என்ன நினைத்தானோ…
அவள் பக்கத்தில் அமர்ந்த சிக்கந்தர் ஜமுனாவின் தலை கோதியவனாய் .. “அம்மா நியாபகமா…?” என்று சிக்கந்தர் கேட்டது தான் கண்ணில் நீர் வழிய அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.

Advertisement