Advertisement

அத்தியாயம்…22….2
“ஆ பார்த்து பார்த்து பத்திரம்…” என்று சிக்கந்தர்  தன் அன்னையை படுக்கையில் படுக்க வைத்திருப்போரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். ஆம்புலன்ஸ்சில் இருந்து ஸ்டேச்சரில் வைத்து விட்டு  சுலோச்சனாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட  அறையின் முன் வந்ததும், சிக்கந்தர் தானே பார்த்து படுக்க வைத்து விடுகிறேன் என்று தான் சொன்னான்.
ஆனால்  கூடவே வந்த ஒரு மருத்துவர்… “மிஸ்டர் அவங்க இதுக்கே  என்றே  ட்ரைய்ணப் பண்ணவங்க..அவங்களுக்கு தெரியும் ஒரு நோயாளியை எப்படி ஹான்டில் செய்வது என்று…” 
அப்படி அந்த மருத்துவர் சொல்லியும் சிக்கந்தர் கூடவே இருந்து தான் தன் அன்னையை படுக்கையில் படுக்க வைத்தான். இதை எல்லாம் கிஷோர்  கை கட்டிக் கொண்டு ஒரு புன்சிரிப்போடு  பார்த்துக் கொண்டு இருந்தான்.
தன் அன்னைக்கு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு சிக்கந்தர் சுலோச்சனாவுக்கு என்று ஏற்பாடு செய்திருந்த நர்ஸ்சிடம்  உங்க டாக்டர் கிட்ட எல்லாம் கேட்டிக்கிட்டிங்கலே…?பார்த்து.”  என்று அந்த  பெண்ணிடம் சொல்லி விட்டு  கீழே வந்தான்.
அங்கு சிக்கந்தரின் குடும்பம் அதாவது ஷ்யாம் அவன் மனைவி. தருண் அவன் மனைவி  இருப்பதை பார்த்து விட்டு… ஜமுனா பக்கம் திரும்பியவன்…
“என்ன நின்னுட்டு இருக்க.. அவங்களுக்கு என்ன கொடுக்கனுமோ எடுத்துட்டு  வா….” என்று ஜமுனாவை சமையல் அறைப்பக்கம் தள்ளி அவளை அந்த வீட்டின் உரிமைக்காரியாகவும்…
ஷ்யாம் அவன் மனைவி…தருண் அவன் மனைவி அவர்களை ஹாலை விட்டு அடுத்து எங்கும் போக விடாது அங்கேயே அமர வைத்து  விட்டு அவர்களை உபசரித்ததில் நீங்க இந்த வீட்டுக்கு விருந்தாளிகள் தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டான்.
சுபத்ரா ஜமுனா சமையல் அறைப்பக்கம் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அதை பார்த்த ஷ்யாம்… “என்ன நீ இங்கு இருந்து எங்கல கவனித்து இருக்கனும்..இப்போ நீ எங்க கூட அமர்ந்துட்டு அந்த பெண் கிச்சன் பக்கம் போகுதுன்னு பார்க்குறியா….?” என்றூ ஷ்யாம் கேட்டதும்.
ஏதோ நினைவில் இருந்த  சுபத்ராவின் தலை தன்னால்…”ஆம்.” என்று ஆடியது.
ஷ்யாம் சுபதராவின் பக்கத்திலேயே  அமர்ந்து இருந்ததால், அவளின் கை சதையை வலிக்கும் அளவுக்கு கிள்ளியவன்… “உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் கிட்டவே இப்படி சொல்லுவே…” என்று அவள் காதக்கருகில் அடக்கப்பட்ட சீற்றத்துடன் ஷ்யாம்  கத்தவும் தான்..
சுபத்ரா தான் என்ன சொன்னோம் என்றே உணர்ந்து அவசரமாக… “இல்ல மாமா இல்ல.” என்று மறுப்பு தெரிவித்தாள்
“யோசிக்காம நாம சொல்றோம் பாரு அது தான்டி  உண்மை…முதல்ல சொன்னது தான் நிஜம் இப்போ நீ பொய் சொல்ற…வீட்டுக்கு வாடீ..” என்று பல்லைக்கடித்தான்.
சுபத்ரா அதற்க்கு ஒன்றும் சொல்லாது இருக்கும் இடம் கருதி அமைதியாகி விட்டாளோ…இல்லை உண்மையிலே இந்த வீட்டையையும் சிக்கந்தரின் இப்போதைய தோற்றத்தையும்… அதுவும் அவன் ஒவ்வொரு முறையும் ஜமுனாவின் மீது வீசும் காதல் பார்வையும் பார்த்து…
“அந்த விபத்து மட்டுக் நடக்காமல் இருந்து இருந்தால்..இது அனைத்தும் எனக்கு.” என்று இப்படி அவள் மனம் எண்ணாமல் இருக்க .முடியவில்லை.
அதுவும் சிக்கந்தர் யாரிடம் என்ன பேசினாலும் அவன் பார்வை அவ்வப்போதோ  இல்லை அவன் பேச்சின் முடிவிலோ தலை கோதுவது போல ஜமுனாவின் பக்கம் திரும்பி தான் போகும்.
ஜமுனா அங்கு இல்லாத போது அவன் கண்கள் தேடும் அந்த தேடல்…இவனுக்கு இப்படி எல்லாம் பார்க்க தெரியுமா…? இவன் இப்படி எல்லாம் நடந்துக் கொள்வானா…? என்று தான் சுபத்ரா நினைத்தாள்.
அந்த வயதில் காதல் சொன்னது கூட  நான் தான்..அதுவும் தன் காதலை   ஏற்ப்பானா…? இல்லையா…? என்ற சந்தேகத்துடன் தான் தன் விருப்பத்தை சொன்னாள்.
அவளின் சந்தேகத்திற்க்கு காரணம்.. அத்தை பெண். அழகும் கூட  அவ்வப்போது விழாவில் பார்ப்பான். நானே வலிய சென்று “எப்படி அத்தான் இருக்கிங்க…?” என்று கேட்டால்..
“ம் பைன்.” என்ற சொல்லோடு அவன் தன்னை கடந்து விடுவான்.
ஆசையாக ஒரு பார்வையோ..பேச்சோ என்று அவன் தன்னிடம் நடந்துக் கொள்ளாத போது..தன் காதலை ஏற்பானா என்ற சந்தேகம் வருவது இயல்பு தானே..
அந்த சந்தேகத்திலேயே தன் காதலை சொன்னதும்…நெற்றி சுருங்க சில நிமிடம் தான் யோசித்தான்…  “.ஒகே சுபத்ரா நான் உன்னை மேரஜ் செய்துக்குறேன்.” என்று அவன் காதல் சொல்லாது கல்யாணம் செய்துக்குறேன் என்று  அவன் சொன்னதை கேட்டதும்..
அவளுக்கு சந்தேகம் நாம் கேட்டது சரி தானா என்று… “என்ன சொன்னிங்க. அத்தான்..என்ன சொன்னிங்க..” என்று திரும்பவு நான் கேட்டதும்..
“நீ கேட்டதுக்கு நான் ஒகே சொன்னேன் சுபத்ரா…” 
சிக்கந்தர் அப்போதும் தன் காதலை சொல்லாது நேரிடையாக கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதோடு நிச்சயமும் அடுத்த வாரத்தில் வைத்து விட.. அவளுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.
தோழிகளிடம் தன்னை உயர்த்திக்காட்டிக் கொள்ள..சிக்கந்தரும் தானும் என்ன என்ன செய்வோம் என்று அவனோடு கனவில் கண்ட காட்சி எல்லாம்  உண்மை போல் சொன்னது மெய்ப்பிக்க போகிறது என்ற அவளின் அந்த சந்தோஷம் ஒரு வாரம்  கூட நீடிக்கவில்லை.
நிச்சயம் அன்று கூட தான் ஏதாவது பேசினால் பதில். அவ்வளவு தான். அவன் தன்னிடம் ஆசையாக பேசவோ ஏன் பார்க்கவோ கூட இல்லை. மோதிரம் மாட்டும் போது கூட தன் கை பிடிக்காது தன் விரலில் மாட்டியவன் பின் தன் நண்பர்கள் பக்கம் திரும்பி பேச ஆராம்பித்து விட்டான்.அடுத்து பார்ட்டி என்றூ அவர்களோடு சென்றவனின் வந்த நிலையோடு அவளின் சந்தோஷம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.பின் நடந்தது எதுவும் அவள் நினைத்து பார்க்காதது…
இன்று அவனின் சித்தியாக அவன் வீட்டில் ஒர்  விருந்தாளியாக அமர்ந்து இருக்க..தான் ஆசைப்பட்டவனின் காதால் பார்வையை இன்று பார்த்தாள். ஆனால் தன் மீது இல்லாது  வேறு ஒரு பெண் மீது.. இருபதில் வராத காதல் முப்பதின் முடிவில் வந்து இருக்கிறது.
அதுவும் அவன்  செய்யும் செயல் அனைத்தும் ஏதோ ஒரு டீன் ஏஜ் பையன் போல் இருப்பதை பார்த்து பொறாமை என்று சொல்ல முடியாது..ஆனால் இது எப்படி…? என்று தான் நினைத்திருந்தாள்.
தருண்… “சுபத்ரா..சுபத்ரா..” என்று  இரு முறை கூப்பிடவும் தான் தன் முன் தட்டில் டீ கப்போடு  நின்றுக் கொண்டு இருக்கும் ஜமுனாவை கவனித்தாள்.
சுபத்ரா “எனக்கு டீ  பிடிக்காது.” என்று சொன்னதும்..
ஜமுனா .. “அப்போ  காபி  எடுத்துட்டு வரட்டுமா…?” என்று கேட்டாள்.
“ம்  கொஞ்சம் ஸ்ட்டாங்கா…” என்று தன் விரலில் அளவை காட்டி சொல்லவும்..
“சரி..” என்று சொல்லி விட்டு  சமையல் அறைப்பக்கம் செல்ல பார்த்த ஜமுனாவை சிக்கந்தர்..
“ஜாமூன் உட்கார் சர்வெண்ட் எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க.” என்று அவளை தன் பக்கத்தில் அமர வைத்து விட்டு ஷ்யாமிடம்..
“ம் அப்புறம்..” என்று பேச்சை ஆராம்பித்தான்.
ஷ்யாம் சும்மா இல்லாது… “ஏன் சிக்கந்தர் அந்த பெண் சுபத்ராவுக்கு காபி கொண்டு வந்து கொடுக்க கூடாதா…எல்லோருக்கும் அவள் தானே  கொடுத்தாள்.” என்று  ஷ்யாம் வேண்டும் என்றே ஜமுனாவை அந்த பெண்..அவள் இவள் என்று பேச…
அவனை புரிந்துக் கொண்டவனாய்… “ கொடுக்கலாம் சித்தா…கொடுக்கலாம் தப்பே இல்ல..இந்த வீட்டின் உரிமைக்காரி தான் வந்த விருந்தாளிகளை நல்ல முறையில் கவனித்து அனுப்ப வேண்டும்.
அப்படி பார்த்தால் ஜாமூன் தான் சுபாவுக்கு கொடுக்கனும்..ஆனா பாருங்க ஜமுனா வந்து டீயா…?காபியா வந்து கேட்கும் போது அவள் என் முகத்தை பார்த்துட்டு இருந்ததில் அவள் கேட்டது கவனிக்காது விட்ட்தால் ஜமுனா அனைவருக்கும் டீ போட்டு வந்த பிறகு..
ஒரு விருந்தாளியா.. அவங்க நாகரிகமா கொடுத்ததை எடுத்திட்டு இருந்து இருக்கனும். விருந்தாளி பொறுத்து தான் விருந்தோம்பலும் இருக்கும் சித்த…”
இது வரை சுபத்ராவை அவள் இவள் என்று சிக்கந்தர் பேசியது கிடையாது. அன்று மருத்துவமனையில் பேசியது தான்.அடுத்து அவன் பார்வை கூட சுபத்ரா பக்கம் செல்லவில்லை. ஆனால்  புதுமனை புகு விழாவில் சித்தாப்பாவின் மனைவியாக அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தான்.
ஆனால் இன்று அவனின் ஒருமை பேச்சில் ஷ்யாம்.. “சிக்கந்தர் அவள் உனக்கு சித்தி நீ என்ன மரியாதை இல்லாம பேசுற…” என்று கடியவும்..
“விருந்தோம்பல்  போல் தான் இதுவும் சித்தப்பா..நீங்க எனக்கு மனைவியா வரப்போறவளை  அவள் இவள் என்றால் நானும் அப்படி தான் பேசுவேன். மரியாதை வேண்டும் என்றால்..நாம் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.” என்றும் சொன்னான்.
அப்போதும் ஷ்யாம் விடாது “அந்த பெண் என்னோட  சின்னவ தானே…” என்று கேட்டு வைக்க..
“சுபத்ராவும் என்னோட சின்னவ அதோட அத்தை மகள் அதோட…” என்று இழுத்தவனின் பேச்சை நிறுத்த  கிஷோரின் . “சிக்கந்தர்…” என்ற அவன்  அழைப்பே போதுமானதாய் இருந்தது.
“ஈவினிங்க அவங்களுக்கு ப்ளைட் அதுக்குள்ள பேசுவது எல்லாம் பேசிடு…கல்யாணம் அன்னைக்கு ஏதாவது பேச்சு வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்.” என்று கிஷோர் சொன்னதை கேட்டு..
ஷ்யாம் திரும்பவும்.. “என்னது சிக்கந்தருக்கு அடுத்த மாதம்  கல்யாணமா…?” என்று ஒன்றும் தெரியாத்து போல் கேட்டான்.
“உங்களுக்கு இது முதல்லையே தெரியும்..உங்களுக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். அப்புறம் என்ன இது பேச்சு…ஏன் என்னை பத்தி டீடைய்ல்ஸ் அனுப்பியவன் இதை அனுப்பலையா…?” என்று சிக்கந்தர் கேட்டதும் ஷ்யாம் அமைதியாகி விட..
தருண் … “இது தேவையா…? என்பது போல் ஒரு பார்வை பார்த்தவன்..
பின் காரியத்தில் கண்ணாக… “சிக்கந்தர் நீ கல்யாணம் செய்துட்டு ஒரு குடும்பமா இருப்பதில் எங்களுக்கு ஒரு ஆட்சபனையும் இல்ல.” என்ற  அவனின் பேச்சில்..
“ஓ இதில் நீங்க ஆட்சேபனை  வேற தெரிவிப்பிங்களோ…?” என்ற  சிக்கந்தரின் கேள்வியில்  தருண் தான் என்ன சொல்வது என்று தெரியாது முழித்து இருக்க..
“ஆ என்ன சொல்ல நினச்சிட்டு இங்கு எல்லாம் வந்து இருக்கிங்களோ அது பத்தி பேசுங்க.”
அவர்கள் அனைவரும் சுலோச்சனாவை பத்திரமாய் கொண்டு வந்து சேர்க்க இங்கு வரவில்லை என்பது சிக்கந்தருக்கு தெரியும். அவர்களின் நோக்கம் அந்த சொத்து அதை பத்தி பேச தான் வந்து இருக்கிறார்கள்.. இதில் என்ன பேச்சு… என்பது போல் பேசியதில்..
தருண் நேரிடையாவே… “தோ பார் இந்தர் நீ நல்லா இருக்க..அது போல் நாங்களும் நல்லா இருக்கனும் தானே..நம்ம குடும்பம் இறங்கினா அது அப்பா இறங்குவதற்க்கு சமம்..அது உனக்கு தெரியும் தானே..நீ இது போல் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியது கேள்வி பட்டே எல்லோரும் ஒரு மாதிரி பேசினாங்க.. நான் தான் ஒரு மாதிரி சமாளித்து பேசி வைத்து இருக்கேன்.” என்று தருண் சொல்லவும்..
“ஏன் சமாளித்தே இருப்பதை அப்படியே சொல்வதற்க்கு என்ன…?” என்று சிக்கந்தர் கேட்கவும்.. 
“என்ன இந்தர் இப்படி பேசுற…?”
“பின் எப்படி பேச சொல்ற..என்னை கொல்ல பார்த்தவங்க கிட்ட என்னை  எப்படி பேச சொல்ற…?” என்று சிக்கந்தரின் பேச்சில் உஷ்ணம் ஏறவும்..
கிஷோர் திரும்பவும் ..” சிக்கந்தர்.” என்று அழைத்து  அவனை அமைதி படுத்தினான்.
சிக்கந்தர் பின் ஒரு முடிவோடு… “எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு..என் சொத்து எனக்கு வந்து ஆகனும்..வேணும் என்றால் அதில் வந்த வருமானத்தில் பாதி கொடுங்க அது போதும். இதுக்கு மேல பேச என் கிட்ட எதுவும் இல்ல..நேரமும் இல்ல…முடிவு உங்க கையில் தான் இருக்கு..உங்க வக்கீல் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.. கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் உங்களுக்கு வக்கீல் பீஸாவது மிச்சம் ஆகும்..” என்று அவ்வளவு தான் என்பது போல் எழுந்துக் கொண்டான்.
இப்போது தருண் ஜமுனாவை பார்த்து.. “நீ நம்ம வீட்டுக்கு வர வேண்டிய பெண்..நம்ம குடும்ப  மானம் உன்னையும் சேர்ந்தது. அவன் கிட்ட நீயாவது சொல்லும்மா…” என்று தருண் ஜமுனாவை கூட்டு சேர்க்க பார்க்க..
ஜமுனாவோ.. “இது பத்தி எல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாதுங்க..அவங்க ஏதாவது செய்தா அது சரியா தான் இருக்கும். அது  மட்டும் எனக்கு தெரியும்.” என்று தருணிடம் சொன்னவள் பின் அனைவரையும் பார்த்து..
“சாரி எனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆயிடுச்சி நான் கிளம்பனும்.” என்று சொல்லி விட்டு எழுந்தவள் பின்  வந்த  சிக்கந்தரை பார்த்து..
“அவங்கல பாருங்க பாவா..என்னை எப்போ வேணா கவனித்துக் கொள்ளலாம்.” என்று சொல்லி விட்டு செல்பவளை கூடவே செல்ல தான் சிக்கந்தரின் மனம் ஏங்கியது.
ஆனால் போக முடியாது ஷ்யாம் தருணிடம்.. கிஷோரை பார்த்து.. “ஜீ பத்திரிகை கொடுங்க.” என்று சொன்னவன்..
கிஷோர் கொடுத்த்து… “எல்லோரும் வந்துடனும்…கூடவே என் சொத்தும் எனக்கு வந்துடனும்.” என்று சொல்லி கை கூப்பி அவ்வளவு தான் நீங்க போகலாம் என்று சொல்லாமல் சொல்லி சிக்கந்தர்  அவர்களை வழி அனுப்பி வைத்தான்.
 
 
     

Advertisement