Advertisement

அத்தியாயம்…..22…1
சிக்கந்தர்  அனுமதிக்கப்பட்டு இருந்த அதே மருத்துவமனையில் தான்  சுலோச்சனா தேவியையும் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிழைப்பது கடினம் என்று அனைத்து மருத்துவமனையும் கை விட்ட நிலையில், கிஷோரின் நண்பரின் மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் தான் கடைசியாக சுலோச்சனா  அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர் சிக்கந்தரிடம்… “அவங்க நிலை ஒன்றும் சொல்லும் படி இல்ல. அதனால…பார்க்கலாம்.” என்று சொல்லி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார். ஆனால் சிக்கந்தருக்கு தான் ஏதோ போல் இருந்தது.
விபத்து…தங்கள் குடும்பத்துக்கும் விபத்துக்கும்  மிக நெருக்கமோ…அது என்ன எப்பொ பார் விபத்து…? என்று நினைத்தவனின் நியாயமான மனது முதல் விபத்து உன் அஜாக்கிரதையால் நடந்தது.ஒன்று நீ மது அருந்தி விட்டு காரை எடுத்து இருக்க கூடாது. அப்படி காரை எடுக்கும் பட்ச்சத்தில் நீ மதுவை தொட்டு இருக்க கூடாது என்று நினைத்தவனின் மனது தன்னால் அதற்க்கு உண்டான தன்னை தான் என் நீண்ட பதிமூன்று வருடம்  வீணாய் ஆகி விட்டதே என்று நினைக்கும் போதே அந்த நிலையிலுல் தன்னால் ஜமுனாவின் நினைவு வந்த்து…
இந்த பதிமூன்று வருடத்தின் தவம் என் ஜாமூன் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தருணும் ஷ்யாமும் தன் அருகில் வருவதை பார்த்து  ஜமுனாவின் நினைவில் தளர்ந்து இருந்த  சிக்கந்தரின் முகம் இவர்கள் வரவில் மீண்டும் இறுக்கத்திற்க்கு தாவியது.
அருகில் வந்த தருண்… “டாக்டர் என்ன சொன்னார்  இந்தர்…?” என்று சாதராணமாக அவன்  கேட்டான்.
இத்தனை வருடங்கள் கணக்கில் சேர்க்காது போல..ஏதுவும் நடவாதது போல பேசிய அவன் பேச்சுக்கு பதில் கொடுக்க வேண்டுமா..? என்று  ஒரு நிமிடம் யோசித்த சிக்கந்தர் பின் என்ன நினைத்தானோ…
“எதுவும் நிச்சயம் இல்ல என்பது போல தான் சொன்னார்.” என்று தருணிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிக்கந்தருக்கு  கிஷோரிடம் இருந்து பேசியில் அழைப்பு வந்தது.
“எஸ் கீயூஸ் மீ…” என்று மன்னிப்பு வேண்டுதல் போல தருணிடம்  கேட்ட சிக்கந்தர் அவனை விட்டு தள்ளி நடந்து போனவனாய் கிஷோரின் பேசியின் அழைப்பை ஏற்றுக் கொண்டவனாய்…
“ஜீ,…” என்று அவன் பேசிய பேச்சு தருணின் காதில் நன்றாக விழுந்தது..சிக்கந்தர் கேட்ட அந்த மன்னிப்பே  சிக்கந்தருக்கு அந்த கிஷோரை அவனின் நெருங்கியவனாகவும்..தான் அந்நியமாகவும்  உணர வைத்தான்.
“இல்ல ஜீ கொஞ்சம் சீரியஸ் தான்..வந்துடுவேன்..ஜாமூன் கிட்ட சொல்லிடுங்க…வந்ததும் பேசிக்கலாம்.” என்று கிஷோர் கேட்ட கேள்விகளுக்கு ஒரிரு வார்த்தையில் பதில் அளித்து விட்டு பின் தருண் பக்கம் வராது..அவனுக்கு எதிர் பக்கமாய் பார்த்து அமர்ந்துக் கொண்டவனின் மனதில்  தன் தந்தை ஒரு  முறை  பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது.
“டாட் மாம் மேல உங்களுக்கு இருக்க லவ் மாமுக்கு உங்க மேல இல்ல டாட்…” என்று அவனின் பதினைந்தாவது வயதில் தன் தந்தையிடம்  சொன்ன போது..
தான் சொன்னதை கேட்ட தன் தந்தை அன்று தன்னை பார்த்து கேள்வியாக…” அதற்க்கு…” என்று ஒரே வார்த்தையில் கேட்ட  பேச்சுக்கு அன்று என்ன பேசுவது என்று தெரியாது.. தன் தந்தையை பார்த்து நின்றவனின் தலையை வருடிய வாறு…
“உன் மாம்மை பார்த்த உடன் பிடிச்சிது..முறையா  உன் தாத்தா பாட்டியோடு பெண் கேட்டேன் கட்டிக்கிட்டேன்… அந்த லவ் இப்போ வரையும் இருக்கு..ஆனா அவளுக்கு இது  பெரியவங்க பார்த்து வெச்ச கல்யாணம். அதனால் அவளுக்கு காதலோடு கடமை தான் தெரியுது போல…” என்று சொன்னவர்..
பின்…”ஒருத்தவங்களை நமக்கு பிடிச்சிட்டா அவங்களுக்கு நம்மை பிடிக்காம போனாலும்…அந்த பிடிப்பு நம்மை விட்டு போக கூடாது…அப்படின்னு  பார்த்தா உன் மாம்முக்கு என்னை பிடிக்காமல் எல்லாம் போகல… சொல்லிக்கிற அளவுக்கு பிடித்தம் இல்ல  என்று வேணா சொல்லிக்கலாம்.” என்ற தன் தந்தை அன்று சொன்ன வார்த்தை இன்று அவன் நினைவுக்கு வந்த்து.
இன்று மட்டும் தன் தந்தை இருந்து இருந்தால்..தன்னை போல் பதறாது அவரால் அமர்ந்து இருக்க முடியுமா…? கண்டிப்பாக முடியாது.அவனுக்கு தெரியும்..இப்போது அவர் மட்டும்  உயிரோடு இருந்து இருந்தால் மருத்துவர் சொல்லி விட்டு சென்ற செய்தியை கேட்டு அவருக்கும் ஏதாவது ஒன்று  ஆகி இருக்கும்… என்று நினைத்தவன் தருண் ஷ்யாமை பார்த்தான். அவர்கள் இருவரும் தன் பேசியில் ஏதோ பார்த்துக் கொண்டு இருந்தனர்…
சுலோச்சனாவுக்கு விபத்து என்று கேள்வி பட்டதும் மனது தாங்காது இங்கு ஓடி வந்து விட்டான் தான். அப்போதும் தன் சித்தப்பா அண்ணன்  தன்னிடம் அம்மாவுக்கு எப்படி இருக்கு என்று சொல்லாது..
“உன்னை பார்க்க தான் சென்னை ஏர்போர்ட்டுக்கு கிளம்பினாங்க… இப்படி ஆயிடுச்சி..அவங்களுக்கு கொஞ்ச நாளாவே மனது சரியில்ல…” என்று சொன்ன தருண்..
“குறிப்பிட்டு சொல்லனும் என்றால் உன் வக்கீல் நோட்டிஸ் பார்த்ததில் இருந்து  அவங்களுக்கு தூக்கம் போயிடுச்சி..சரியா சாப்பிடுறதும் இல்ல…” என்று தருண் பேசிய நீண்ட பேச்சுக்கு முற்றுப்புள்ளியாய்..
“இப்போ அவங்க நிலை என்ன…?அது மட்டும் சொல் போதும்.” என்று சிக்கந்தர் தன் பேச்சை கத்தரிப்பது போல் முடித்துக் கொண்டான்.
என்ன மனிதர்கள்…?இந்த நிலையிலும் என் அடுத்த மூவ் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் அவர்கன் எண்ணம்.. அன்னையை காட்டி அவர்கள் தன் கருணை பெற செய்யும் முயற்ச்சி இதை பார்த்து எப்போ மும்பைக்கு போவோம் என்றாகி விட்டது.
இன்னும் கேட்டால் மும்பை என்பது அவனுக்கு சொந்த ஊர் கிடையாது. அவனின் ஊர் சென்னை தான். அவன் குடும்பம் இருப்பதும் சென்னை தான்..ஆனால் சொந்த ஊர் தன் குடும்பம் என்றால் மட்டும் அந்த ஊர் நமக்கு சொந்தமாய் தோனாது.
எந்த இடமானாலும் அங்கு நமக்கான  ஒரு பற்று  இருக்க வேண்டும்..நம்மை தேடும் ஒரு உறவு…நம் மனது  தேடும் ஒரு சொந்தம் இருந்தால் தான் அந்த ஊரின் மீது நமக்கு ஒரு பற்று ஏற்படும். இப்போது அவன் பற்று மும்பையே அதனால் எப்போதடா மும்பைக்கு போவோம் என்று  காத்திருந்தான்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தன் அன்னை பிழைக்க வேண்டும் என்று எல்லாம் கடவுளிடம் வேண்டுதல் வைக்கவில்லை. எது என்றாலும் அவர்களுக்கு வலி இல்லாது தா..அது மட்டுமே அவன் நினைத்துக் கொண்டது.
அது கூட  முதல் மகனுக்கு இல்லை போலும், ஷ்யாமிடம்.. “சித்து இவன் பிடி கொடுத்தே  பேச மாட்டேங்குறான்..நானும் அம்மாவை  வெச்சி பேசினா ஏதாவது வழிக்கு வருவான் என்று பேசுறேன்.. ஏதோ யாரோ கிட்ட பேசுவது போல என் கிட்ட பேசுறான்..அந்த கிஷோர் போனுக்கு மட்டும் … “சொல்லுங்க ஜீன்னு பம்மிக்கிட்டு பேசுறான்.” என்று தருண் சிக்கந்தரை பற்றி ஷ்யாமிடம் குறையாக பேசினான்.
அதற்க்கு ஷ்யாம்.. “முதல்லையே அவனுக்கு அவன் ஜீன்னா எது என்றாலும் செய்வான்..இப்போ அவன் அக்கா பொண்ண வேற கட்ட போறான்… அவன் ஒன்னு இரண்டு  தோப்பு கரணம் போடுன்னா கூட போடுவான்.” என்று ஷ்யாம் தன் முன் இருந்த தருண் காட்டும் ஜாடையை கூட கவனிக்காது அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தான்.
ஷ்யாம் தோள் மீது ஒரு கை படவும் யார்…?என்று திரும்பி பார்த்த ஷ்யாம் அங்கு சிக்கந்தர் நிற்பதை பார்த்து அடுத்து என்ன பேசுவது..?என்று அவன் யோசித்துக் கொண்டே திரும்பவும் தன் முன் நின்றுக் கொண்டு இருந்த தருணை பார்க்க… அவன் தலை மீது கை வைத்துக் கொண்டு தன்னை முறைத்து பார்ப்பதை பார்த்து ஷ்யாம் திரும்பவும் சிக்கந்தரை பார்த்தான்.
தான் பேசிய பேச்சுக்கு அவன் கோபப்படுவான் ஏதாவது திட்டுவான் என்று  ஷ்யாம் எதிர் பார்க்க அவனோ சிரிப்புடன்… “இந்த தோப்புக்கரணம் நான் ஜாமூன் கிட்ட போடுறேன் என்று சொன்னேன்…ஆனா இப்போ நீங்க பேசுனதை கேட்டதும்…ஏன் அந்த தோப்புக்கரணம் என் ஜீக்கு போட கூடாதுன்னு தோனுது.
சொந்த இரத்தங்களே பொய்த்து போகும் இந்த காலத்தி நட்புக்கு மரியாதை தந்து..என் உடலுக்கு  உயிர்  கொடுத்து…  அந்த உடலுக்கும் உயிர்க்கும் உயிர்ப்பை கொடுக்க ஒரு உறவையும் கொடுக்க போகும் என் ஜீக்கு தினம் நான் போட தான் போக போறேன்  தோப்புகரணம்.. ஆனா அதுக்கு முன்ன இப்போ டாக்டர் நம்மை கூப்பிடுறார் போகலாமா…?” என்று கூலாக கேட்டு  விட்டு போகும் சிக்கந்தரின் பின் சென்ற ஷ்யாம் தருண் இதை தான் நினைத்தார்கள்..
இவன் என்ன அப்போ எல்லாம் எல்லாவற்றிற்க்கும் கோபமாக .கத்துவான். இப்போ என்ன என்றால் இப்படி அமைதியா பேசிட்டு போறான்..ஓ இவனுக்கு வயது ஆயிடுச்சிலே…அவன் இவர்கள் பேசியதற்க்கு அவன் கோபம் படாமல் நடந்துக் கொள்வதற்க்கு,  அவனின் வயதை காரணமாக நினைத்துக் கொண்டனர்.
ஆனால் உண்மை…  ஷ்யாம் சொன்ன அந்த தோப்புக்கரணம் என்ற வார்த்தை  அவனின் ஜாமூனை  நினைவு படுத்தி விட…எப்போது அவளை பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு இருந்த சிக்கந்தருக்கு அந்த நினைவே ஒரு சுகத்தை அவனுக்கு கொடுக்க… அதன் விளைவே அவனின் அந்த நிதானமான பேச்சு…
தலமை மருத்துவரின் அறையில்  அந்த மருத்துவர் சிக்கந்தரிடம்.. “ உங்க அம்மா உயிருக்கு ஆபத்து இல்லை.” என்று சொன்னவர் முகத்தில் மகிழ்ச்சிக்கு பதில் சங்கடமே இருக்க…
சிக்கந்தர்… “அவருக்கு வேற ஏதாவது…?” என்ற கேள்வியில்..
“ஆமாம் மிஸ்டர் சிக்கந்தர்..அவங்களுக்கு பலமா  அடிப்பட்ட இடம் முதுகு தண்டு வடம்..” என்று அந்த மருத்துவர் சொன்ன செய்தியிலேயே சிக்கந்தருக்கு அவர் அடுத்து என்ன சொல்ல போகிறார் என்று புரிந்து விட்டது.
“அவர் உயிரை பிழைக்க வெச்ச எங்களால் அவங்க உணர்வுகளை உயிர்ப்பிக்க முடியல..சாரி அவங்க…” என்று அடுத்து அந்த மருத்துவர் சொல்வதற்க்குள்…
ஷ்யாம்.. “அப்போ இவங்களும் கோமாவுக்கு போயிட்டாங்கலா…?” என்று அதிர்ந்து போய் கேட்டான்.
சிக்கந்தர் அவரை பார்த்து முறைத்து விட்டு மருத்துவர் பக்கம் திரும்பி… “ நீங்க சொல்வது எனக்கு  முழுவதும் புரிந்துக் கொள்ள முடியல…” என்று  சிக்கந்தர் சொன்னதற்க்கு…
“அவங்க உணர்வை உயிர்ப்பிக்க முடியலேன்னா… நீங்க பேசுவதை அவங்க கேட்பாங்க…ஆனா அவங்களால் பதில் பேச முடியாது..அதே போல்  அவங்களால் உட்கார முடியாது எல்லாம் படுக்கையில் தான்.” என்று அடுத்து சுலோச்சனா கோமாவில் விழவில்லை..ஆனால் பாதி கோமா போல் தான் என்று சொல்லி விட்டார்.
மருத்துவர் அறையை விட்டு வெளி வந்த தருண் சிக்கந்தரிடம்… “இப்போ என்ன செய்யிறது சிக்கந்தர்…? எனக்கு   தொழில்ல ஏகப்பட்ட லாஸ் இதில் நீ வேறு..இவர் வேறு பொறுப்பு இல்லாம இருக்கார்.” என்று தருண் ஷ்யாமை பார்த்து சொன்னவன்.. திரும்பவும் சிக்கந்தரை பார்த்து…
“இப்போ என்ன செய்வதுடா..?” என்று  கேட்டான்.
“என்ன இப்போ இவங்களுக்கும் ஒரு கருணை மனு கொடுத்து விடலாமா…?” என்று கேட்டவன்..
பின் என்ன நினைத்தானோ… “நான் அவங்கல மும்பைக்கு கூட்டிட்டு போய் பார்த்துக்குறேன்.” என்று சொன்னான்.
சொல்லி விட்டு பின்  ஏதோ யோசித்த வாறேஎ கொஞ்சம் தள்ளி போய் நின்றுக் கொண்டு அழைத்தது தன் ஜாமூனை.  அழைத்தவன்  மருத்துவர்  தன்னிடம் சொன்னதையும், தான் தருணிடம் சொன்னதையும் சொன்ன சிக்கந்தர்…
“உன் முடிவு கேட்காது நான் சொன்னது தப்பா…ஜாமூன்…?” என்று கேட்டான்..
சிக்கந்தர் தருண் தன்னிடம்   சொன்னதை கேட்டு அம்மாவை பார்த்துக் கொள்ள இவ்வளவு தயக்கமா..?பணத்திற்க்கு குறை இல்லை. அதனால் ஒருவருக்கு இருவர் ஆளை வைத்தாவது பார்த்துக் கொள்ளலாமே…
தன் அப்பா இருந்து இருந்தால்  என்று அவன் நினைக்கும் போதே தன்னால்  அவனின் வாய்… “நான் மும்பை கூட்டி கொண்டு போகிறேன்.” என்று வார்த்தைகள் வெளி வந்து விட்டது.
கார் லான்ச் முன் உங்க திருமணம் நட்ததி விட வேண்டும் என்று சொன்ன கிஷோர் இடம் மனதில் மகிழ்ச்சி பொங்க… “சரி ஜீ சரி ஜீ.” என்று சொல்லி விட்டு இப்போது ஜமுனாவை கேட்காது தான் மட்டும் இந்த முடிவை எடுத்தது சரியா…?
அவன் தருணிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அதாவது அவன் வார்த்தையின் முடிவிலேயே அவன் இதை நினைத்தான்..சரியா…? தவறா…? என்று..
பின் ஒரு நிமிடம் கூட தாமதிக்காது…  ஜாமூனிடம் அனைத்தும் சொன்னவன்… “என் முடிவு உனக்கு ஓகே தானே ஜாமூன்.. நான் உன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கனும்.” என்று சிக்கந்தர் மன்னிப்பு கேட்கும் குரலில் கேட்க..
இப்போது ஜமுனா… “ஏன் இப்படி என் கிட்ட கேட்குறிங்க ஜீ…உங்க அம்மாவை நான் சரியா பார்த்துப்பேன்னா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கா ஜீ…?” என்ற ஜமுனாவின் கேள்வியில்…
“ஏய் ஜாமூன் நான் உன்னை தப்பா எல்லாம் நினைக்கல.” என்று சிக்கந்தர் அவசரமாக  சொன்னான்.
“அப்போ ஏன் இந்த பேச்சு ஜீ…?” என்ற ஜமுனாவின் கேள்வியில்..
“இல்ல திருமணம் பின் பொபொறுப்பு இருவருக்கும் தான். அப்போ எந்த முடிவு எடுப்பது என்றாலும் அந்த பொறுப்பை பாதி சுமக்கும் அடுத்தவரிடமும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் தானே ஜாமூன்..நான் அதை நினைத்து தான் சொன்னேன்.
“அம்மா எல்லாம் பொறுப்பு  வகையில் வராது ஜீ..அதாவது அவங்கல பத்தி முடிவு எடுக்கும் போது நம் மூளை செயல்படுவதற்க்கு முன் நம் மனது செயல் படுத்தி விடும்.. எங்க அம்மா இப்படி இருந்தா நான் உங்கல கேட்டு தான் முடிவு எடுத்து இருக்கனும் என்று நீங்க எதிர்பார்ப்பிங்கலா ஜீ…” என்ற ஜமுனாவின் கேள்வியில் சிக்கந்தர் தன் தவறு புரிந்து…
“சாரி ஜாமூன்….” என்று அவளிடம் மன்னிப்பு கேட்டவன்..
கிசு  கிசுப்பான குரலில்..குரல் தடைப்பட… “ஐ லவ் ஜாமூன்.. ஐ லவ்… நீ எனக்கு வரம் டீ.” என்று எண்ணிக்கையில் அடங்காது முத்தங்களை வைத்து விட்டு அந்த பேசியை அணைத்து விட்டவனின் மனது அவளை எப்போது அணைப்போம் என்று ஏங்கியது.

Advertisement