Advertisement

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்லுவர்…சிக்கந்தரின்  அந்த பார்வை நிச்சயமாய் இவன் அந்த பெண்ணின் மீது  எவ்வளவு காதலாய் இருக்கிறான் என்று…
சுலோச்சனா இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போது தருண் வர்மா… “சித்து காம்பிளக்ஸ்ல உங்க பிரண்ட் எதேச்சையா பார்த்தாரு போட்டோ பிடிச்சி உங்க செல்லுக்கு அனுப்பினாரு..
அந்த காரில் இருக்கும் போட்டோவும் உங்க பிரண்ட் எதேச்சையா பார்த்துட்டு எதேச்சையா பிடிச்சி உங்களுக்கு அனுப்பினாரா சித்து…” என்று கேட்ட தருண் வர்மா…
பின்… “எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சித்து..இந்த போட்டோவை அனுப்பிய உங்க பிரண்ட் இரண்டு பேரும் ஒருவரா இல்ல வேறு  வேறா…?
இதை ஏன் கேட்குறேன்னா. ஒருவர் என்றால் அவருக்கு சிக்கந்தார்த் பின் சுத்துவதை தவிர வேறு வேலை இல்லையா…? இல்ல இரண்டு பேரும் வேறு வேறு என்றால்…மும்பை முழுக்க உங்க பிரண்ட் இருக்காங்கலா…? இருக்குற எல்லோருக்கும் நம்ம சிக்கந்தரை தெரியுமா….?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவனை அடக்க வழி தெரியாத ஷ்யாம்… 
“அண்ணி என் கிட்ட மட்டும் தேவையானதை மட்டும் பேசு..வீண் பேச்சு வேண்டாம் என்று சொன்னிங்க..இப்போ உங்க மகன் மட்டும் பேசுவது அனைத்தும் தேவையான பேச்சோ…”  என்று சுலோச்சனாவிடம் எகுற…
“இல்ல நானே கேட்கனும் என்று நினைத்தேன் சிக்கந்தரை வேவு பார்க்க ஆளை வைத்து இருக்கியா ஷ்யாம்…” தருண் இதை சுத்தி வளைத்து கேட்டான் என்றால்..சுலோச்சனா நேரிடையாக கேட்டு விட்டார்.
ஷ்யாமும் மறைக்க முடியாது… “ஆமாம்..அவன் பாட்டுக்கு வக்கீல் நோட்டிஸ் விட்டுட்டான்..அவனின் அடுத்த மூவ் என்ன என்று நமக்கு தெரிய வேண்டாமா…? அது தான் ஆள் வைத்தேன்..
நமக்கு எதிரா அவன் அறிமுகம் படுத்தும் புது கார் லான்ச் பத்தி தெரியவும்…நமக்கு எதிரா  வக்கீல் நோட்டிஸ் விட்டவன் அடுத்து என்ன  செய்ய போகிறான் என்று தெரிந்துக் கொள்ள தான் ஆள் வைத்தேன்..ஆனால் சத்தியமா நான் இதை எதிர் பார்க்கவில்லை.” என்று தன் கையில் உள்ள பேசியை காட்டி ஷ்யாம் சொன்னான்.
ஷ்யாம் மட்டும் அல்லாது சிக்கந்தர் குடும்பத்தில் உள்ள யாரும் இதை எதிர் பார்க்கவில்லை.. சிக்கந்தருக்கு கிஷோர் பெண் தேடுகிறான் என்று அன்று  புகுமனை புதுவிழாவில் பெண் வீட்டார்கள் வந்து பேசிய போதே சுலோச்சனாவுக்கு தெரிந்து விட்டது.
சென்னை வந்ததும் தருண் கூட … “என்னம்மா அவன் இப்போ போய் கல்யாணம் செய்துக்கிறேன் என்று  பெண் பார்க்கிறான்..பார்க்கவே காமடியா இருக்கு.” என்று தன் பெரிய மகனின் பேச்சுக்கு சுலோச்சனா அன்றே…
“அவன் இப்போ தானே எழுந்தான்..அதான் இப்போ கல்யாணம் செய்ய பெண் தேடுறான்.” என்று  சொன்னவர் கூடவே…
கூடவே… “பார்த்தலே இப்போ கூட அவனுக்கு பெண் கொடுக்க எத்தனை பேர் காத்துட்டு இருக்காங்கன்னு…இதில் காமெடி எங்கு இருந்து வந்தது…?” என்று சுலோச்சனா தன் பெரிய மகனிடம்  கேட்டார்.
“என்ன திடிர் என்று அவன் மேல பாசம்…?” என்று தருண் கிண்டலாக கேட்டான்.
சற்று தயங்கிய சுலோச்சனா… “அவன் என் பைய்யன்டா..அவன் அப்படியே இருக்குறதுக்கு இப்படி செய்தால் என்ன என்று நீங்க கேட்டிங்க..நான் முதல்ல வேண்டாம் என்று  தானேடா சொன்னேன்.
நீங்க தானே வர்மா க்ரூப் விழ போகுது அதுக்கு பணம் ரொம்ப தேவை.அப்பா இப்படி செய்து வைத்து போய் இருக்கார்…இவன் இப்படியே படுத்துட்டு இருந்தா யாருக்கு என்ன பிரயோசனம்…?
அதுக்கு பதிலா கருணை கொலை செய்தா அவனுக்கும் விமோசனம்…நம்ம வர்மா க்ரூப்பையும் வீழ்ச்சியில் இருந்து காப்பத்திடலாம். நீ தானேடா சொன்ன..இப்போ என்ன என்றால்..எல்லாம் நான் செய்தது போல சொல்ற…” என்று சுலோச்சனா பட பட்டக்க கேட்டார்.
“நான்  ஒன்னும் இல்லேன்னு சொல்லலையேம்மா..நாங்க தான் முதல்ல ஆராம்பிச்சோம்…ஒரு வருடம் இரண்டு வருடம் இல்ல நீண்ட எட்டு வருடம் சென்று தான் இந்த யோசனையே வந்தது.அவன் அப்படி எழுந்துப்பான் என்று தெரிஞ்சா நாங்க ஏன் இப்படி செய்ய நினைத்து இருந்து இருக்க போறோம்.
ஆனா இது அனைத்துக்கும் அப்போ சரி சரின்னு சொல்லிட்டு இப்போ இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லாம பேசுவது தான் நல்லா இல்ல…தப்போ சரியோ..இது நாம எல்லாம் தான் செய்தோம்..அதன் விளைவை நாம ஒன்னா தான் சமாளிக்கனும்..இது போல் தப்பிக்க கூடாது.” என்று தருண் சொல்ல.. அன்றைய பேச்சு இன்றும் தொடர்ந்தது.
“இல்ல நான் தப்பிக்க நினைக்கல..ஷ்யாம் அவன் பெண்களிடம் பழகுவது பத்தி பேசுவது எனக்கு பிடிக்கல..நீயும் அவன் என்னவோ ரொம்ப குறைவு போல இந்த வயதில் திருமணமா என்று கேட்டதும் அப்படி பேச வேண்டியதா ஆயிடுச்சி.. என்று சுலோச்சனா தேவி பதில் அளித்தார்.
“சரி இதை பத்தி பேசனும் என்றால் பேசிட்டே தான் இருப்போம்… சிக்கந்தருக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கிறது போல தான் இருக்கு..நமக்கு கூடிய விரைவில் சும்மா ஒரு தகவலா அவன் திருமணத்தை பத்தி நமக்கு தெரிவிப்பான் என்று நினைக்கிறேன்.அதுக்கு முன்ன நீங்க சிக்கந்தர் வீட்டுக்கு போகனும்.” என்று தருண்  தன் அம்மாவிடம் சொன்னான்.
“எதுக்குடா எதுக்கு இப்போ என்னை அங்கு அனுப்புற…அவனுக்கு உங்க எல்லோர் மீதான கோபத்தை விட என் மீது தான் கோபம் அதிகமா இருக்கு…இப்போ நான் போய் அவன் கல்யாணத்தை பத்தி பேசுனா அவ்வளவு நல்லா இருக்காது தருண்.” என்றூ தான் மும்பை போக மாட்டேன் என்பது போல் சுலோச்சனா தேவி பேசினார்.
“அம்மா நான் உங்கள அங்கு போய் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல..அப்படி பேச சொல்லலே…உங்களுக்கும்  பிடிச்சி இருக்கு போலவே பேசுங்க…” என்று தருண் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஷ்யாம் இடை புகுந்து…
“ஆ நல்லா இருங்க என்று சொல்லிட்டு அவன் கேட்ட அனைத்து சொத்துக்களையும் அவன் கையில் திருமண பரிசா கொடுத்துட்டு வர்ற சொல்றியா…?” என்று ஷ்யாம் கிண்டலாக கேட்டான்.
அதற்க்கு தருண்.. “அப்போ அவன் கிட்ட மோத சொல்றிங்கலா…?நம்ம வக்கீல் சொன்னதை கேட்டிங்கலே… பதிமூன்று வருடம் அவருடைய  ஷேரில் இருந்து வந்த வருமானத்தை கணக்கு போட்டாலே உங்களோடது… என்னோடது..அப்பா அம்மாக்கு கொடுத்த பங்கு எல்லாத்தையும் தூக்கி கொடுப்பது போல ஆகும்.
அதுவும் அவன் சொந்த சம்பாதியத்தில் வாங்குனதில் வந்த ஷேரை நீங்க கொடுத்தே ஆக வேண்டும்..இந்த கேசு எல்லாம் கோர்ட்க்கு போனால் நிக்கவே நிக்காது. இதை எல்லாம் வெளியிலேயே பேசி தீர்த்துக்கங்கன்னு தானே சொன்னார்.
இதோ இந்த படத்தை பார்த்தாலே தெரியுது. அவனுக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடித்து இருக்குன்னு..இப்போ அவன் ரொம்ப சந்தோஷமா இருப்பான்..இப்போ அம்மா போய் உன்னோட சொத்தை கொடுத்துடுறோம்..ஆனா அதில் வந்த வருமானம் மட்டும்   இப்போ கொடுக்குற நிலையில் இல்லை.
அது கொடுக்கனும் என்றால் வர்மா க்ரூப் சரிஞ்சிடும் என்று சொன்னா அவன் புரிஞ்சுப்பான்..அவனுக்கு அம்மா மேல தான் பாசம் இல்ல..ஆனா அவனுக்கு அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும்…வர்மா க்ரூப் அழிவதை அவன் ஒத்துக் கொள்ள மாட்டான்.” என்று சொல்லி ஒரு வழியாக வர்மா  குடும்பம் சுலோச்சனா தேவையை மும்பைக்கு கிளப்பியது.
மும்பையில்..
கிஷோர் “ நீ கொஞ்சம் யோசி சிக்கந்தர்…உன்னோடதை வாங்கு. அது உன் உரிமை..ஆனால் அதில் வந்த வருமானம் என்று  கணக்கு போட்டால் அவங்களால் முடியாது.” என்று கிஷோர் சிக்கந்தருக்கு புரிய வைக்க முயன்று கொண்டு இருந்தான்.
“விற்க்கட்டும்..எல்லாம் விற்க்கட்டும்..இதுக்காக தானே…ஒரு அம்மா மகனை கொல்ல பார்த்தது…ஒரு அண்ணன் தம்பிய கொல்ல பார்த்தது..எதுக்காக என்னை கொல்ல பார்த்தாங்கலோ அது எதுவுமே அவங்க கிட்ட இருக்க கூடாது.” என்று சொல்லி விட்டு ஆவேசமாக அந்த இடத்தை விட்டு போனான் சிக்கந்தர்.
எப்போதும் தன் மாமய்யா  பேசினால்…அனைத்துக்கும் .. “சரி ஜீ சரி ஜீ…” என்று சொல்லும் சிக்கந்தர் .இந்த பேச்சுக்கு தன் மாமய்யாவை எதிர்த்து பேசியதோடு கோபத்தோடும் அந்த இடத்தை விட்டு அகன்றவன் பின்னவே சென்ற ஜமுனா..
“ஜீ…” என்று ஜமுனா பேச்சை ஆராம்பிக்கும் முன்னவே…
“தோ பார் ஜாமூன்..உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தான். நான் உன்னை அவ்வளவு விரும்புறேன்..அது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்ல..
நான் உன்னை அப்படி பார்த்துக்கனும்..நீ சொன்னதை எல்லாம்  கேட்கும் தலையாட்டி பொம்மை போல் நான் இருக்கனும் என்று ஆசைப்படுறேன்….நான் அப்படி இருக்க  எனக்கு உன் ஒத்துழைப்பும் தேவை..நமக்கு இடையே எப்போதும் அந்த வீட்டு பேச்சு இருக்க கூடாது… “ என்று சொல்பவனிடம் ஜமுனா என்ன என்று பேசுவாள்..
மாமய்யா பேசியது சரி என்று பட்டதால் தான் ஜமுனா சிக்கந்தரிடம் இதை பற்றி பேச வந்தாள்..இவன் தான் அந்த பேச்சே வேண்டாம் என்று  விட்டானே… இனி என்ன இருக்கு பேச என்று நினைத்து அந்த இட்த்தை விட்டு போக பார்க்க திரும்பியவளின் கையை பிடித்து கொண்டு ஒரே சுழலாக சுழற்ற…சரியாக அவன் மடியில் அமர்ந்துக் கொண்டவளின்  பின் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டவன்…
“அதை தவிர வேறு எது என்றாலும் பேச சொன்னனே…” என்று அவள் முதுகையில் இருந்து தன் முகத்தை எடுக்காது அதில் பத்தித்த வாறே  பேசியவனின்  மீசை  ரோமத்தின் உராய்வில்…
“எ..ன்..ன..பேசனும்.” என்று ஜமுனாவுக்கு வார்த்தைகள் திணறலாக வெளி வந்தது.
“ம் என்ன பேசுறதா…நம்ம இடையில் பேச விசயமா இல்ல…” என்று கேட்டவன்..
பின்… “நாம ஹனி மூன் எங்க போகலாம்..அதை பத்தி பேச்சை ஆராம்பித்தால்..அடுத்து நாம அங்கு…” என்று பேசியவனின் பேச்சை தடுக்கும் விதமாய் அவன் கைய் பேசி அழைத்து அவன் பேச்சுக்கு இடையூறு செய்தது..
ஜமுனாவை வளைத்து பிடித்த வாறே பேசியின் அழைப்பை ஏற்றவனுக்கு பேசியின் அந்த பக்கம் சொன்ன  செய்தியில்… ஜமுனாவின் இடையில் இருந்த கை தன்னால் நழுவ…
“மாம்க்கு ஒன்னும் இல்லலே…” என்று அதிர்ந்து போய் சிக்கந்தர்  கேட்டான்..இது தான் தான் ஆடா  விட்டாலும் தன் சதை ஆடும் என்பதோ… 

Advertisement