Advertisement

அத்தியாயம்…21…2 
“என்ன ஷ்யாம் சொல்ற…எனக்கு புரியல…” என்று தன் மச்சினன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது சுலோச்சனா தேவி கேட்டார்.
“இதோ இது போல் எல்லாம் புரியாம போய் தான். நம்ம சொத்தை சம்மந்தமே  இல்லாதவன் அள்ளிக்கிட்டு போக பார்க்குறான்.” என்று அப்போதும்  ஷ்யாம் மற்றவர்களுக்கு  புரியாதது போல் தான் பேசினான்.
அப்போது தான் தூங்கி எழுந்து வந்த சுபத்ரா… “உங்க மச்சினன் யாருக்கு புரியும் படி பேசி இருக்கார். நடந்து இருக்கார்” என்று சொன்னதை கேட்ட ஷ்யாம்.
“நான் நடந்துக்குறது இருக்கட்டும் டீ..ஒரு பொம்பளை தூங்கி எழுந்து வர நேரமாடி இது…இப்படி இருந்தா குடும்பம் எங்கு இருந்து உருப்படும்.” என்று ஏதோ பேச வந்த ஷ்யாம் தன் மனைவி வந்த கோலத்தை பார்த்து தன் பேச்சு திசை மாறி செல்கிறது என்று கூட உணராது பேசி வைத்தான்.
“அதை  நைட்டு வீட்டுக்கே வராத  ஆம்பிள்ளை பேச கூடாது.”
எப்போதும் போல் கணவன் மனைவி சண்டை ஆராம்பாகி விட..அப்போது தான் தன் குழந்தையை பள்ளிக்கூடத்திற்க்கு விட்டு  விட்டு வந்த தருண் வர்மா…
“எனன  இன்னைக்கு காலையிலேயே ஆராம்பிச்சாச்சா….?” என்று எரிச்சல் பட்டு கேட்டுக் கொண்டே  தலை மேல் கை வைத்த வாறே… அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
சுலோச்சனாவோ… “உங்க சண்டைய விடுறிங்கலா…” என்று சத்தம் போட்டு அடக்கியவர்…ஷ்யாமை பார்த்து … “நீ ஏதோ…சிக்கந்தர் கிஷோர் என்று சொல்ல வந்த என்ன விசயம்….?” என்று ஷ்யாமுக்கு சுலோச்சனா நியாபகம் படுத்தவும் தான்…
”பார்த்திங்களா இவளே பார்த்தாலே முக்கியமானதை எல்லாம் மறந்து வேண்டாததை பேச ஆராம்பிச்சிடுறேன்.” என்று அப்போதும் தன் மனைவியை குறை சொன்ன ஷ்யாம்…
பின் தன் அண்ணியிடம்… “ மூன்று நாள் முன் மும்பையில் இருக்கும்  என் பிரண்ட்  எனக்கு போன் செய்து உன் அண்ணன் மகன் இப்போ ரொம்ப நல்லா ஆயிட்டான்  போல…
சிக்கந்தர் விபத்துக்கு முன்  எப்படி இருந்தானோ இப்போவும்  அப்படியே இருக்கான். அதுக்கு காரணம் அவன் கூட இருக்கும் பொண்ணா கூட இருக்கலாம்.” என்று  அவன் சொன்னதும்..
நான் கூட அப்போ அந்த கிஷோர்  பைய்யனோட மனைவியா இருக்கும் என்று தான் நினச்சேன்… அப்பவே இவன் பாபி பாபி என்று அவ பின்னாடி சுத்திட்டு இருப்பானே..அது என்ன பாபியோ போ…” அவனின் சாக்கடை பிடித்த புத்தி அவனை இப்படி தான் பேச சொன்னது.
ஷ்யாம் என்ன என்று சொல்லாது சுற்றி வளைத்து பேசுவதும்..அதுவும் தன் மகனை பெண்கள் விசயத்தில் இப்படி பேசியது பிடிக்காது… “என்ன விசயம் அது சொல்..அவன் லேடீஸ் விசயத்தில் எப்படின்னு எனக்கு தெரியும்.” என்று சுலோச்சனா சொல்லவும்…
“ஓ மகன் பாசமோ…” என்று ஷ்யாம் எகத்தாளமாய் கேட்டதற்க்கு…
“ஏன் அது இருக்க கூடாதா….? அவன் அப்படி படுத்து இருப்பது பார்க்க முடியாது தான் நீங்க சொன்னதற்க்கு நான் ஒத்துக்கிட்டேன்..அதுவும் டாக்டர் இனி அந்த இரண்டு சதவீதம் கூட நம்பிக்கை இல்லேன்னு சொன்ன பின் தான்…ஆனா இப்போ தோனுது..நான் ஏன் அதுக்கு ஒத்துக்கிட்டேன் என்று… “ என்று வருந்தி சொன்னார் சுலோச்சனா..
ஆமாம் இப்போது எல்லாம் சுலோச்சனா தன் இளைய மகனை நினைத்து கொஞ்சம் வருத்தப்பட ஆராம்பித்து விட்டார். அதுவும் தன் நட்பு வட்டத்திலும்… உறவு வட்டத்திலும்…
முன் எல்லாம் தான் எடுத்த முடிவில்… “ஆமாம் இப்படி தான் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்..படுத்துட்டே இருந்தா யாருக்கு என்ன பிரயோசனம்…?இது போல் செய்தால் உன் மகனால் எத்தனை பேர் உயிர் பிழைக்கும்… 
அப்படி பிழைத்தால் ஜீயேந்திரனை பத்தி பேசியது போல் உன்னை பத்தி தான் எல்லோரு பேசுவாங்க….” என்று அப்போது ஏற்றி விட்டவர்கள்..
இன்று … “என்ன இருந்தாலும் ஒரு அம்மாவா நீ அந்த முடிவை எடுத்து இருக்க கூடாது…இப்போ கூட அத நினச்சா எனக்கு உடம்பு எல்லாம் நடுங்குது போ…
எங்களுக்கே அப்படி இருந்தா… எழுந்து அமர்ந்த சிக்கந்தருக்கு எப்படி இருந்து இருக்கும்…? சும்மாவா சிங்கம் வெறி பிடிச்சிட்டு தான் சுத்தும். இப்போ உன் மகன் அடிப்பட்ட சிங்கம்…கண்டிப்பா  அவன் உங்களை நிம்மதியா வாழ விட மாட்டான். கேள்வி பட்டேன் சிக்கந்தர் வக்கீல்  நோட்டிஸ் விட்டு  இருக்கிறதா….?” என்று கேட்கும் நட்புக்கும் உறவுக்கும் பதில் சொல்லி  முடியவில்லை சுலோச்சனாவுக்கு…
இது போல் விசயம் எல்லாம் எப்படி தான் இவ்வளவு சீக்கிரம் இவர்களின் காதுக்கு எட்டி  விடுகிறதோ என்று நினைத்தாலும் 
வெளியில்… “ ஒரு சின்ன பிரச்சனை தான்.. பேசினா சரியா ஆகிடும்.” என்று சமாளிப்பாய்  சுலோச்சனா பதில் அளித்தாலும்.
அப்போதும் அவர்கள் விடாது… “ஆமாம் ஆமாம் உங்க போல பெரிய மனுஷங்களுக்கு  இது எல்லாம் சின்ன விசயம் தான்.” என்று போகும் போதும் கடைசியாக இது போல் பேசி விட்டு செல்வதை கேட்டு கேட்டு… இப்போது எல்லாம் சுலோச்சனா அதிகம் வெளியில் செல்வது இல்லை.
ஏற்கனவே நானே அவன் கோபத்தில் இன்னும் என்ன என்ன செய்ய போறானோ என்று பயந்துட்டு இருக்கேன்.. இவன் என்ன என்றால் அவனை பத்தி என்ன என்று நேரிடையா சொல்லாம..கிஷோர் மனைவி கூட வெளியில்  செல்வதை வந்து சொல்றான்..அதுவும்  தப்பா.. இவனை போலவே எல்லோரையும் நினச்சிட்டான் போல… என்று  திட்ட..
“நான் ஒன்னும் சும்மா உங்க மகனை பத்தி தப்பா பேசலா அண்ணி.” என்று மீண்டும் ஷ்யாம் இதே ரீதியின் பேச்சை தொடர்ந்தான்.
அதற்க்கு சுலோச்சனா…. “முக்கியமான விசயமா இருந்தா சொல்லு ஷ்யாம்..ஏற்கனவே நீங்க செஞ்சி வெச்சி இருக்க குளறு படியால் இன்னும் என்ன என்ன ஆகுமோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்..
வர்மா க்ரூப் ஒன்றும் இல்லாம போயிடுச்சி  என்று வெளியில் தெரிந்தால் நம்ம நிலமை என்ன.. என்று அதை பத்தி யோசி… அதை விட்டு அவன் இன்னும் யாரு யாரு கூட சுத்திட்டு இருக்கான்னு பார்த்துட்டு இருக்காதே…. 
உனக்கும் வயசு ஆயிடுச்சி ஷ்யாம் இளமை திரும்பம்பல..உன் வயதுக்கு ஏத்தது போல நட… பேசு….” என்று சுலோச்சனா ஷ்யாமை திட்டி விட்டு தன் அறைக்கு போக பார்த்தார்.
அப்போது ஷ்யாம்… “என்னை பத்தி இனி என்ன இருக்கு அண்ணியாரே…இனி என்னை பத்தி சொல்ல ஒன்னும் இல்ல..ஆனா உங்க சின்ன மகனை பத்தி பேச நிறைய இருக்கு..எனக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும்..
இப்போ என்ன சொன்னிங்க..என் வயதுக்கு ஏத்தது மாதிரி பேசு… நட.. என்றா… இளமை எனக்கு திரும்பல அன்ணியாரே உங்க சின்ன மகனுக்கு தான் திரும்பி இருக்கு..அதான் இருபத்தி ஐந்து வயதுடைய பெண் கூட  ஜோடி போட்டுட்டு சுத்திட்டு இருக்கான்.” என்று சொன்ன ஷ்யாம் அடுத்து பேசாது அமைதியாக தருண் வர்மா பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார்.
தன் அறைக்கு போக பார்த்த  சுலோச்சனாவும்…சரி காபி கலந்து குடிக்கலாம் என்று  சமையல் அறை பக்கம் செல்ல பார்த்த சுபத்ராவும்..அப்போது தான் தன் அறையில் இருந்து வெளி வந்த தருணின் மனைவியும் சரி…
“யாரு சிக்கந்தரா…?இருபத்தை ஐந்து வயது பெண்ணோட…” என்று சுலோச்சனா கேட்டு கொன்டே ஷ்யாம் அருகில் வந்தவர்..
“தப்பா இருக்காது ஷ்யாம்..அவன் சின்ன வயதுலேயே அவன்  அப்படி எதுவும்  செய்தது இல்ல..அவனை பத்தி யாரும் தப்பாவும் சொன்னது இல்ல.. அந்த பெண் தெரிஞ்ச பெண்ணாகூட  இருக்கலாம் ஷ்யாம்…” என்று சுலோச்சனா சொன்னதற்க்கு..
“ஆமாம் ஆமாம் தெரிஞ்ச பெண் தான். ரொம்ப ரொம்ப தெரிஞ்ச பெண்…கிஷோரின் அக்கா மகளா அந்த பெண் இருக்கும் பட்சத்தில், சிக்கந்தருக்கு அந்த பெண்  ரொம்ப தெரிஞ்ச பெண்ணா தானே இருக்க முடியும்.” என்று சொல்லி ஷ்யாம் நிறுத்த…
அனைவரும் அன்று சிக்கந்தர் வீட்டு புது மனை புகு விழா அன்று பார்த்த அந்த பெண்ணினை மனதில் நினைவு கூர்ந்து பார்த்தனர்..
பின் சுபத்ரா… “நான் அன்னைக்கு அந்த பெண்ணை பார்த்தேன். அவ்வளவு ஒன்னும் அழகு இல்லையே..பார்க்க சுமாரா தான் இருந்தா..சிக்கந்தர் டேஸ்ட்டுக்கு அவ வர மாட்டா…” என்று சுபத்ரா சொன்னாள்.
அதற்க்கு ஷ்யாம்… “ஆமாம் ஆமாம் அவன் டேஸ்ட் என்ன என்று உனக்கு தானே தெரியும்.” 
இன்னும் என்ன என்ன பேசி இருப்பானோ ஷ்யாம். இடையில் சுலோச்சனா தேவி… “ஷ்யாம் சும்மா இரு…நிலம புரியாம என்ன இப்படி பேசிட்டு இருக்கிங்க.” என்று சொன்னவர்..
ஷ்யாமிடம்… “நீ ஒழுங்கா சொல்லு ஷ்யாம்..சும்மா சும்மா பேசுறது நிறுத்துறது எல்லாம் வேண்டாம்.” என்று சுலோச்சனா தேவி சொல்லவும்…
“அண்ணி மூன்று  நாள் முன்  என் பிரண்ட் ஒரு காம்பிளேக்ஸ்ல சிக்கந்தர்..கிஷோரோட அக்கா பெண் அந்த பெண் பெயர் ஜமுனா இரண்டு பேரையும்  சேர்த்து வைத்து பார்த்து இருக்கான்.” என்று ஷ்யாம் சொல்லவும்..
“என்ன ஷ்யாம் இந்த காலத்தில்..அதுவும் மும்பையில் ஒன்னா போனாங்கன்னு சொல்லிட்டு…” என்று சலித்துக் கொண்ட சுலோச்சனாவின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய ஷ்யாம்..
அன்று தான் தன் பேசிக்கு தன் நண்பன் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்து அனைவரும் பார்க்கும் படி காட்டினான்..
ஒரு படத்தில்   ஜமுனா பிறந்த நாள் அன்று சென்ற போது கிஷோர்.. நிஷா.. சித்தார்த்த.. ஜமுனா… சிக்கந்தர்… என்று அனைவரும் இருந்த புகைப்படம் அதில் இடம் பெற்று இருந்தது.
அனைவரும் அதில் இருந்தாலும் சிக்கந்தரின்  பார்வை.. ஜமுனா மீது படிந்து இருப்பது..அதுவும் ஜமுனா சிக்கந்தரின் பக்கத்தில் எல்லாம் அமரவில்லை..எதிர் எதிர் இருக்கையில் தான் காபி ஷாப்பில் அமர்ந்து இருக்கின்றனர்.
அந்த பெண் கிஷோரிடம் பேசிக் கொண்டு இருக்க….சிக்கந்தர் அந்த பெண்ணை பார்க்கும் அந்த பார்வையில் தான் எவ்வளவு காதல்…அதை சுலோச்சனாவால் நன்கு உணர முடிந்த்து.
ஷ்யாம் காட்டிய அடுத்த  புகைப்படம்  ஜமுனாவுக்கு சிக்கந்தர் கார் ஒட்ட கத்துக் கொடுக்கும் போது எடுத்த படம்..அதுவும் எந்த நெருக்கம்  ஜமுனாவுக்கு சிக்கந்தரின் மீது இருக்கும் நேசத்தை அவளுக்கு புரிய வைத்ததோ..அது தான் ஷ்யாம் பேசியில் புகைப்படமாய் இடம் பெற்று இருந்தது. 
முதலில் பார்த்த படத்தில்  தெரிந்த சிக்கந்தரின் பார்வையில் சுலோச்சனாவுக்கு இருந்த சந்தேகம் அடுத்த புகைப்படத்தில் தன் மகன் அந்த பெண்ணிடம் இருந்த நெருக்கமான காட்சியை பார்த்து விட்டு தன் பார்வையை திருப்பிக் கொண்டவர் மனதில் இது தான் தோன்றியது.
அவனுக்கு திருமணம் நிச்சயம் செய்த சுபத்ராவிடம் கூட இவன் இது போல் பார்வையோ இது போலான நெருக்கத்தையோ காட்டவில்லையே…
அன்று  சிக்கந்தர் அவன் தந்தையிடம் பேசும் போது நானும் பக்கத்தில் தானே இருந்தேன்..… “டாட் நானே எனக்கு ஒரு பெண் பாருங்க..அடுத்த முறை சென்னை வந்தா திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேச தான் இப்போ வந்தேன்.சுபத்ரா என்னை விருபும்றதா இப்போ தான் சொன்னா..நானும் அவளுக்கு ஒகே சொல்லிட்டேன்… “ என்று  அன்று ஏதோ செய்தி வாசிப்பது போல்  சிக்கந்தர் பேசியதில்…
அவன் தந்தையே… “என்னடா எதோ  பிசினஸ் மீட்டிங்கில் என் டீலை அவன் ஒத்துக் கொண்டு விட்டான்.அதனால் நான் ஒகே சொல்லிட்டேன் என்பது போல சொல்ற.. இந்தர் இது லைப்டா…” என்று அவர் சொல்லவும்…
“யெஸ் டாட்..பட் இப்போ எனக்கு நீங்க  ஒரு பெண்னை பார்த்தாலும், ஜஸ்ட் கொஞ்சம் நேரம் தான் பார்க்க போறேன்..பார்வைக்கு அழகா இருந்தா பிடிச்சி இருக்குன்னு சொல்ல போறேன்..பின்  கல்யாணம் முடிவு செய்தா கல்யாணம் வரை போனில் பேச போறேன்…
சுபத்ரா பார்க்க நல்லா தான் இருக்கா…பேசுவது நான் சின்ன வயசில இருந்து பேசிட்டு தானே இருக்கேன்.. என்ன ஒன்னு கொஞ்சம் செல்ப் டப்பா..மத்தப்படி அவ கிட்ட குறை சொல்லும் படி எனக்கு ஒன்னும் தோனல..அதான் ஒகே சொல்லிட்டேன்.”  என்று அந்த வயதில்  அப்படி பேசி நிச்சயம் செய்தவனின் இன்றைய இந்த பார்வை.. 

Advertisement