Advertisement

அத்தியாயம்…21…1
கிஷோர் யார்…?என்று  கேட்டதற்க்கு அமைதியாகி பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று யோசிக்கும் வேளயில் நிஷா… “கிஷோர் இது எல்லாம்  இப்போ பேசி இப்போவே முடிவு எடுக்க வேண்டிய விசயம் இல்ல.. எல்லாம் யோசிச்சி தான் முடிவு செய்யனும்..திருமணம் என்பது சாதரணமான  விசயமில்ல கிஷோர்…”
இதை பற்றி தன் கணவனிடம் இவர்கள் முன் பேச முடியாது….கிஷோரை பொறுத்த வரை..அவனுக்கு சிக்கந்தரும் முக்கியம்..அதே போல் அவரின் அக்கா மகள் ஜமுனாவும் முக்கியம்..
இருவருக்கும் வேறு துணை என்று முடிவு செய்யும் போது சிக்கந்தருக்கு சிக்கந்தர் பக்கம் மட்டும் ஆராய்ந்து முடிவு செய்யலாம்.
அதே போல் ஜமுனாவுக்கும் மாப்பிள்ளை பார்க்கும் போது தங்கள் வீட்டு பெண்ணின் நலன் கருதி முடிவு எடுத்தால் போதும். ஆனால் இங்கு இருவர்களுமே தங்களுக்கு நெருக்கமானவர்கள். இருவருமே நல்லா இருக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் முடிவை எப்படி நல்ல முடிவாக யோசிக்க முடியும்….?
அப்படி யோசித்து எடுக்கும் முடிவு ஒருவருக்கு சாதகமாகவும், ஒருவருக்கு பாதகமாகவும் அமைந்து விட்டதாக கிஷோரின் மனது நினைக்க ஆராம்பித்து விட்டால்..கண்டிப்பாக அது தன் கணவனின் மனதை பாதிக்க செய்யும்.
அதை நினைத்து தான் தனிமையில் இதை பற்றி தன் கணவரிடம் பேசி..பின் சிக்கந்தரிடம் பேசினால் சரியாக இருக்கும் என்று நினைத்து நிஷா பேசினாள்.
ஆனால் கிஷோரோ… “என்ன டாலி…நீயா திருமணம் யோசிக்காமல் நிதானமா முடிவு செய்யனும் என்று சொல்றது… உங்களை பார்த்த செகண்ட் என் லைப் நீங்க தான்னு நான் முடிவு பண்ணிட்டேன் என்று பதினைந்து வருடம் முன் என் முன் நீ பேசியது மறந்துடுச்சா டாலி…”
சமயம் சந்தர்ப்பம் தெரியாது தன் கணவன் தங்கள் காதலை பற்றி இப்போது பேசி, தன்னை பார்த்து காதல்  பார்வை பார்க்கும் கணவனுக்கு பதிலாய் காதல்  பார்வை பார்க்க முடியாது..சிக்கந்தரின் எதிரில் கண்டன பார்வையும் செலுத்த முடியாது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பார்வையை பார்த்து வைத்தாள்.
இதே சாதரண சமயம் என்றால் நிஷாவின் பார்வையை கிஷோர் புரிந்து இருப்பானோ என்னவோ… ஆனால் இப்போது சிக்கந்தருக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டது.
அதோடு அப்பெண்ணுக்கும் சிக்கந்தரை பிடித்து விட்டது. இனி என்ன அடுத்து திருமணம் தான் என்ற மகிழ்ச்சியில் இருந்ததால் கிஷோர் நிஷாவின் பார்வையின் மாற்றம் தெரியாது.
திரும்பவும் சிக்கந்தரிடம் தன் கவனத்தை செலுத்தியன்…. “சொல்லு சிக்கந்தர் பெண் யார்…?” என்று திரும்பவும் கேட்டான்.
“ஜீ அந்த பெண்ணுக்கு என்னை  பிடித்து இருந்தாலும், பதினைந்து வயது வித்தியாசத்தில் தன் வீட்டு பெண்ணை கட்டி கொடுக்க அவங்க வீட்டில் இருப்பவங்க ஒத்துப்பாங்கலோ என்று தான் எனக்கு தயக்கமா இருக்கு ஜீ…
நான் கேட்டு அவங்க இல்லேன்னு சொல்லிட்டா… திரும்ப நான் எழுந்ததுக்கே பயன் இல்லாம போயிடும் ஜீ..அந்த பெண்ணை நான் கேட்டு அவங்க மறுத்தா எல்லாம் போன மாதிரி தான்.” என்ற சிக்கந்தரின் பேச்சில்…
“ஏய் சிக்கந்தர் என்னடா இவ்வளவு எமோஷனல் ஆகுற…?” என்று கேட்ட கிஷோர்  பின் ஏதோ யோசித்தவனாய்..
“அந்த பெண்ணுக்கு என்ன வயசு…?” சிக்கந்தர் முதலில் அந்த பெண்ணின் வயதை சொன்னதை நியாபகத்தில் இல்லாது திரும்பவும் கேட்டார்.
“இருபத்தி ஐந்து.” என்று சிக்கந்தர் சொன்னதும்…
“இருபத்தி ஐந்து வயதுடைய பெண் ஒன்னும் சின்ன பெண் இல்ல..இப்போ இருக்கும் பெண்ணுங்க பதினெட்டு வயதிலேயே படு விவரமா தான் ஆயிடுதுங்க..
அப்படி இருக்கும் போது இருபத்தி ஐந்து வயதுடைய பெண்…உன்னை பிடித்து திருமணம் வரை வந்து இருக்குன்னா…எல்லாம் யோசிக்காமலா ஒத்துக் கொண்டு இருப்பாள். பெண்ணுக்கு பிடித்து இருக்கு அதையே சொல்லி பெண் கேட்கலாம்…
கேட்காமலேயே அவங்க பெண் கொடுப்பாங்களா…? இல்லையான்னு…? தெரியல..என்று நாம இங்கு உட்கார்ந்து பேசிட்டு இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்ல… புரியுதா.. கேட்டால் தான் அடுத்து என்ன என்று நாம யோசிக்க முடியும்.” என்ற கிஷோரின் பேச்சில்..
“அப்போ பெண் கேட்டுடலாமா ஜீ.” என்று  சிக்கந்தர் மீண்டும் உறுதி படுத்திக் கொண்டவனாய்..
தொண்டையை கமறிக் கொண்டு… “எனக்கு ஜாமூனை கட்டி கொடுப்பிங்கலா ஜீ.”என்று  எந்த மேல் பூச்சும் இல்லாது சிக்கந்தர் நேரிடையாகவே தன் ஜீயிடம் சிக்கந்தர் பெண் கேட்டு விட்டான்.
ஒரு நிமிடம் அவன் என்ன கேட்டான் என்று யோசித்த கிஷோர் பின் ஜமுனாவையா  கேட்டான் என்பது போல் அதிர்ந்து சிக்கந்தரை பார்த்த கிஷோரின் பார்வை தொடர்ந்து தன்  அக்கா மகள் மீது படிந்தது.
தன்  மாமய்யா தன்னை பார்க்கவும், இது வரை பயத்திலும், தயக்கத்திலும், அமர்ந்து இருந்த ஜமுனா இப்போது நிமிர்ந்து தன் மாமய்யாவையே பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த அந்த உறுதியில்,  ஒரு நிமிடம் கண் மூடி திறந்த கிஷோர்… “நாளைக்கு என் முடிவை சொல்லலாமா சிக்கந்தர்.” என்று கேட்ட கிஷோரின் குரலில் என்ன இருந்தது…?  சிக்கந்தரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
கிஷோரின் இந்த பேச்சில்…”ஜீ…” என்று ஏதோ பேச வந்த சிக்கந்தரின் பேச்சை தடுத்து நிறுத்திய கிஷோர்…
“இப்போவும் உனக்கு எந்த குறையுமில்லேன்னு தான் நான் சொல்வேன்டா… அதில் எந்த மாற்றமும் இல்ல… இப்போ நீ கேட்டது ஜமுனாவை.” என்று கிஷோர் சொல்லவும்..
“அப்போ ஜமுனான்னா என்கிட்ட குறை வந்துடுமா ஜீ…?”
ஏனோ சிக்கந்தருக்கு கிஷோரின் இந்த பேச்சு பிடிக்கவில்லை. தன்னிடம் குறை இல்லை. உனக்கு என்னடா….? உனக்கு பெண் இப்போதும் நீ நான் என்று போட்டி போட்டு கொடுப்பாங்க என்று சொன்னவர்.
இன்று தன் அக்கா மகள் என்றதும்…இப்போது என்னிடம் இருக்கும் அந்த வயது வித்தியாசம் ஒரு குறையா ஜீக்கு தெரியுதா…?என்ற ஆதாங்கத்தில் சிக்கந்தர் அப்படி கேட்டு விட்டான்.
அதற்க்கு நிஷா… “சிக்கந்தர்….” என்று ஏதோ கோபமாக பேச ஆராம்பித்தவளின் பேச்சையும் தடுத்து நிறுத்திய கிஷோர்…
“நிஷா அமைதியா இரு…ஜமுனாவின் மேல் உனக்கும் உரிமை இருக்கு…அதில் சந்தேகம் இல்ல…ஆனா இதை பத்தி இனி பேசனும் என்றால் நம் ரூமில் பேசலாம் இங்கு இல்ல.” என்று கிஷோர் நிஷாவை அடக்கினான்.
அந்த பேச்சும் சிக்கந்தருக்கு பிடிக்காது தான் போய் விட்டது. அப்போ பாபி கிட்ட பேசும் அளவுக்கு  எனக்கு ஜமுனாவை கொடுப்பதற்க்கு தடுக்க ஏதோ ஒரு விசயம் இருக்கு… என்று நினைத்த சிக்கந்தரின் மனது கிஷோருக்கு புரிந்து விட்டதோ என்னவோ…
“சிக்கந்தர் என்னை பார்…” என்று சொல்லி சிக்கந்தரை தன்னை பார்க்க  வைத்த கிஷோர்…
“இதே என் அக்கா உயிரோடு இருந்து இருந்தா…நானே உனக்காக உன்னை பற்றி நல்ல விதமா சொல்லி அவளை நான் உனக்கு பெண் கேட்டு இருப்பேன்.” என்று கிஷோர் சொல்லி வாய் மூடவில்லை.
“உங்க அக்கா உயிரோடு இருந்தாலும், இல்லேன்னாலும், நான் அதே உங்க சிக்கந்தர் தான் ஜீ… அதில் எந்த மாற்றமும் இல்லலே… அப்போ என் நல்லதை நீங்கலே நினைவில் கொண்டு வந்து எனக்கு பெண் கொடுக்கலாமே..இதில் என்ன யோசிக்க இருக்கு ஜீ.” என்று சிக்கந்த கேட்டதற்க்கு..
“இருக்குடா நிறைய இருக்கு….உனக்கு இவள பத்தி எவ்வளவு தெரியும் என்று எனக்கு தெரியல….” ஜமுனாவை காட்டி சொன்ன கிஷோர் தொடர்ந்து…
“வயது இருபத்தி ஐந்து. ஆனால் இந்த  வயது வரை அவள் தனியா வெளியில் போக மாட்டா…எங்க அக்காவுக்கு பயம்..தனியா போனா தன் நாத்தனார் பசங்க ஏதாவது செய்துடு வாங்களொன்னு…அப்படி பொத்தி பொத்தி பார்த்துக்கிட்டா…
உன்னை பார்க்கும் வரும் முன் நான் அக்காவுக்கு உடல் நிலை சரியில்லேன்னு அங்கு போனேன் சொன்னேன் தானே..அப்போ அவங்க என் கிட்ட பேசுனது எல்லாம் ஜமுனாவை பத்தி மட்டும் தான்.
அக்கா  ஜமுனாவுக்கு ஐந்து வருடமாவே மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருந்து இருக்காங்க..ஆனா ஒவ்வொரு இடத்தையும்  எங்க அக்காவோட நாத்தனார் தடுத்து நிறுத்தி இருக்காங்க.
என் கிட்ட அவங்க இதை தான் கேட்டது…அவளை ஒருவன் கையில் பிடிச்சி கொடுத்து இருந்தா நான் நிம்மதியா கண் மூடி இருப்பேன். ஆனால் என்னால் அது முடியல..
என் பெண்ணை உன்னை நம்பி தான் விட்டுட்டு  போறேன் நீ தான் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமச்சி கொடுக்கனும்..அவளுக்கு வயது தான் ஆச்சே தவிர… அவளுக்கு ஒரு விவரமும் தெரியாது. நீ தான் எல்லாம் பார்த்து  கொடுக்கனும்.
 நான் வாழாத மகிழ்ச்சியான வாழ்க்கையை என் மகள் வாழனும்…நான் தான் என் கணவனோடு நீண்ட வருடம் வாழ முடியாம  போயிடுச்சி..ஆனா என் மகள் சீறும் சிறப்புமா..தீர்க்க சுமங்கலியா வாழனும்…” என்று என் கிட்ட சொல்லிட்டே இருந்தா…
கிஷோர் இதே போல் பேசிக் கொண்டு இருக்க சிக்கந்தர்… “ஜாமூன் என்னை கல்யாணம் செய்தா தீர்க்க சுமங்கலியா இருக்க மாட்டான்னு நினைக்கிறிங்கலா ஜீ.” என்ற அவனின் கேள்வியில்..
கிஷோருக்கு முன்  நிஷா… “என்ன  பேச்சு பேசுற சிக்கந்தர்..இது தான் நீ உன் ஜீயை புரிந்துக் கொண்ட லட்சணமா….?என்ன பேசுற…? உனக்கு ஒன்னுன்னா அவர் எப்படி ஆயிடுவாருன்னு நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா…?
அவர் அக்கா அவருக்கு இன்னொரு அம்மா போல…அவங்க மரணபடுக்கையில் இருக்கும் போது..உன்னை கருணை கொலை செய்ய ஏற்பாடு நடக்கிறது என்று  தெரிஞ்சி உடன் அவங்க அக்காவையும்..
இதோ ஒன்னும் தெரியாத  இந்த சின்ன பெண்ணையும் அப்படியே விட்டு விட்டு  உனக்காக  தான் அவர் சென்னை ஓடி வந்தார். அவங்க அக்கா இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சும் உன்னை விட்டு போகல..
அதே போல் என் அண்ணன் இங்கு இறந்தும் அவர் எனக்கு ஆதரவா இங்க வரல..இதில் இருந்து உனக்கு என்னடா தெரியுது…அவருக்கு அவர் அக்காவோட..அவரின் மனைவி என்னோட நீ நீ தான்டா அவருக்கு முக்கியம்.
 அவர் கிட்டயே  என்னை கட்டுனா ஜமுனா சுமங்கலியா இருக்க மாட்டாளா….? என்று உன் மரணத்தை பத்தி அதாவது என்னை கட்டுனா அவள் தாலிய அறுத்துடுவாளான்னு கேட்குற…?” என்று நிஷா பேச பேச தான் சிக்கந்தருக்கு தான் பேசிய பேச்சின் அர்த்தமே அவனுக்கு புரிந்தது.
”பாபி பாபி நான் அந்த அர்த்தத்தில் நான் கேட்கல…” என்று சிக்கந்தர் வருந்தி சொன்னான்.
“நீ என்ன நினச்சி அது போல் கேட்டியோ ..ஆனா நீ பேசியதை கேட்டா உன் ஜீ ரொம்ப குளிர்ந்து போயிடுவாறோ…?” என்று நிஷா கிண்டலாக கேட்டாள்.
“ஜீ சாரி ஜீ..நான் தப்பா கேட்டு இருந்தா சாரி ஜீ..எனக்கு தெரியும் ஜீ..உங்களுக்கு எல்லோரையும் விட நான் தான் முக்கியம்.”  என்று சிக்கந்தர் சொன்னதற்க்கு…
“இந்த ஒரு நாள் அவகாசம் கூட ஜமுனாவுக்காக மட்டும் இல்லடா..உனக்காகவும் தான். புரிஞ்சிக்கோ…
நீயும் அவளும் என்ன பேசினிங்க..எந்த அளவுக்கு புரிஞ்சிட்டு இருக்கிங்கன்னு  கூட எனக்கு தெரியல…   நீ என் கிட்ட ஜமுனாவை பெண் கேட்டு வரும் முன்னவே எல்லாம் வழியிலும் இது சரியான்னு யோசிச்சி தான் .. 
இதோ இன்னைக்கு  நீ இங்கு வந்து இருப்பேன்னு எனக்கு தெரியும்…ஏன்னா உன்னை பத்தி எல்லாம் எனக்கும் தெரியும் சிக்கந்தர். ஆனால் உன்னை மணக்க இவள் ஒத்துக் கொண்டது எந்த அளவுக்கு என்று  எனக்கு தெரியல..” என்று சொல்லிக் கொண்டு  வந்த கிஷோர் கொஞ்சம் தயக்கத்தோடு…
“அவளுக்கு சின்ன வயசுல இருந்தே அப்பா இல்ல சிக்கந்தர்..அம்மா அம்மா அவள் அத்தை  பசங்க கிட்ட பேசுவது என்ன பார்க்க கூட மாட்டா..ஏன்னா அவங்கல பத்தி தான் தெரியுமே… அவள் ஊர் வீடு இப்படி எங்கேயும் அவள் யாரோடு பேசி பழகுனது இல்ல..
இப்போ தான் இதோ இந்த ஊர் வெளி ஆள் என்று  உன்னோடு பேசிக் கொண்டு இருக்கா…உன்னை பத்தி நான் சொல்ல தேவையில்ல என் மகன் சொல்லுவான்…ஏன்னா இப்போவும் நீ ஹீரோ போல் தான் இருக்க…” என்று கிஷோர் சொல்லிக் கொண்டு போக..
இது வரை வாய் திறக்காது அமைதியாக அனைவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டு வந்த ஜமுனா… “இப்போ நான் அவங்க அழகுக்காக தான் அவங்கல கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டேன்னு சொல்ல வற்றிங்கலா…மாமய்யா….” என்று அவள் கேட்கும் போதே அழுகை கட்டுப்படுத்தியும் முடியாது அவள் குரல் அழுகைக்கு மாற..
கிஷோர்..சிக்கந்தர்..நிஷா..மூன்று பேருமே அவளிடம் ஓடி போய்… “ஏய் உன் மாமய்யா  உன்னை அப்படி சொல்வரா…” என்று நிஷா ஒரு பக்கம்  ஜமுனாவை சமாதானம் படுத்தினாள் என்றால்..
சிக்கந்தர்… “ஏய் ஜாமூன் அவர் உன் மாமய்யா உன்னை அப்படி சொல்வாரா…?” என்று ஒரு பக்கம் அவன் சமாதானம் செய்ய..
கிஷோரோ  ஜமுனாவின்  தோள் மீது கைய் போட்டு அவளுக்கு ஆறுதல் தரும் படி தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தானே ஒழிய வாய் திறந்து… “நான்  அப்படி அர்த்தம் கொள்ளும் படி பேசவில்லை.” என்று சொல்லவில்லை.மாறாக ஏதோ தீவிரமான யோசனையில் தான் இருந்தான்.
“பார்த்திங்களா…?மாமய்யா மட்டும் ஒன்னும்  சொல்லலே ..அவரு அந்த அர்த்தில் தான் சொல்லி இருக்கார்.” என்று  சொல்லி மீண்டும் தன் அடங்கிய அழுமையை  தொடர்ந்தாள்.
இப்போது சிக்கந்தர் ஜமுனாவை  சமாதானப்படுத்து வதை விட்டு விட்டு கிஷோரை பார்க்க..கிஷோர் இப்போதும் ஏதோ சிந்தனையுடன் இருப்பதை பார்த்து விட்டு…
“ஜீ அவ என்ன சொல்றான்னு பாருங்க..நீங்க அவள என் அழகுக்காக தான் என்னை கல்யாணம் செய்ய அவ சம்மதித்ததா அர்த்தம் படும் படி தான் சொன்னிங்கன்னு அவ சொல்றா.. அது இல்லேன்னு சொல்லுங்க ஜீ…” என்று சிக்கந்தர் தன் பேச்சில் அழுத்துத்தை கூட்டி சொன்னான்.
இப்போது கிஷோரின் பார்வை அனைவரையும் விட்டு விட்டு ஜமுனா பக்கம் மட்டும் சென்றது…. “சரி நான் உன்னை அதை சொல்லலே..ஆனா உனக்கு சிக்கந்தரை எத்தனை நாளா தெரியும்…எந்த அளவுக்கு அவன் கிட்ட நீ பேசியிருக்க… என்று கேட்டு கொண்டு வந்தவன்..
பின் எதோ நினைத்தவனாய்… முதல்ல வெளி ஆண் பிள்ளைங்க கூட நீ எத்தனை பேர் கிட்ட பேசி இருக்க..சொல்..முதல்ல பேசின ஆண்பிள்ளையே இதோ இந்த சிக்கந்தர் தான்…அவன் பார்க்க நல்லா இருக்கான்…அவனுக்கு உன்னை பிடிச்சீருக்கு என்று கேட்டு இருக்கான்..நீ உடனே ஒத்துக் கொண்டு விட்ட..
நாளைக்கு கல்யாணம் ஆன பின் எதோ பிரச்சனையில்…ஏதோ பிரச்சனை என்ன அவன் வயது வித்தியாசமே அப்போ ன் கண்ணில் பட..நாம தப்பு செய்து விட்டோமோ என்று  ஒரு நிமிடம்  நீ யோசிச்சா..கூட அது உன் வாழ்க்கையோடு இதோ இவன் வாழ்க்கையும்  நரகத்தில் தள்ளி விடும்.” என்று சொன்னவனின் பேச்சை ஜமுனா பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தாள்.
இடையில் ஏதோ பேச வந்த சிக்கந்தரின் கையை பிடித்து தடுத்த ஜமுனா கிஷோர் பேசட்டும் என்ற வகையில் அவன் சொல்வதை அனைத்தையும் பொறுமையா கேட்ட ஜமுனா..
“இப்போ நான் பேசட்டுமா மாமய்யா…நான் பார்த்த முதல் ஆண்மகன் சிக்கந்தர்..அதான் அவர் என்னை பிடிச்சி இருக்கான்னு கேட்ட உடன் ஒத்துக்கிட்டேன்..
இல்ல மாமய்யா பேசுனது இவர் முதலயா இருக்கலாம்..ஆனா ஆண்மகன் என்று பார்த்தா என்னிடம்  காதல் சொன்னது இவர் முதலில் இல்லை.” என்ற ஜமுனாவின் வார்த்தையில் கிஷோரோடு நம் சிக்கந்தர் தான் அதிகமாய் அதிர்ந்தது..அதிர்ச்சியோடு சிக்கந்தர் ஜமுனாவை பார்க்க..கிஷோருக்கு அந்த நிலமையிலும் சிக்கந்தரின் முகபாவத்தை பார்த்து  சிரிப்பு தான் வந்தது.
“நான் போகும் கம்பியூட்டர் க்ளாஸ் ஓனரே என்னை பார்த்த இரண்டாள் நாளே அவர் விருப்பத்தை என் கிட்ட சொன்னார். நான் அப்போவே … எனக்கு விருப்பம் இல்லை. என்று சொல்லிட்டேன். அவர் யோசிச்சி உன் பதில் சொல்லுன்னு சொன்னார்…நான் இதில் யோசிக்க ஒன்னும் இல்ல என்று சொல்லி விட்டேன்.
இவர் என் கிட்ட அவர் விருப்பத்தை சொல்ல கூட இல்ல…ஆனால் பிடிச்சி இருந்தது..நீங்க சொன்னது போல எப்போவும் ஒரு நிமிடமும் நான் எடுத்த முடிவு தவறு என்று யோசிக்க மாட்டேன்.
எங்க அம்மா ஆசைப்பட்ட படி தீர்க்க சுமங்கலியா தான் நான் வாழ்வேன்… கூடவே எங்க அம்மா ஆசைப்பட்ட நான் மகிழ்ச்சியா வாழனும் என்றால் அது நான் இவரை திருமணம் செய்தால் தான் நான் மகிழ்ச்சியா இருப்பேன் மாமய்யா…” என்ற ஜமுனாவின் பேச்சில் கிஷோர் அவளை அணைத்துக் கொண்டவன்..
“உனக்கும் இவனுக்கும் திருமணம் செய்வதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லம்மா…என்னை பொறுத்த வரை நீங்க இரண்டு பேருமே சந்தோஷமா இருக்கனும்..இதில் ஒருத்தர்  இந்த வாழ்க்கையில் வருத்தபட்டா  கூட அது என்னை பாதிக்கும்…
அதுக்கு தான் நான் யோசிக்க நாளை வரை டைம் கேட்டேன் .இப்போ நீ இவ்வளவு தீவிரமா இருக்கும் போது..அதுவும் இவனை திருமணம் செய்தா தான் நான் மகிழ்ச்சியா இருப்பேன் என்று சொல்லும் போது நான் இனி மறுக்க ஒன்றும் இல்லை.. இனி எந்த பேச்சு வந்தாலும் நான் பார்த்துக்குறேன்.” என்று கிஷோர் சொல்ல..
கிஷோரின் அனைத்து பேச்சையும் விட்டு விட்டு அவன் சொன்ன யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்குறேன் என்ற வார்த்தையில் சிக்கந்தர் முகம் யோசனைக்கு மாறியது..
“எங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களை யார் என்ன சொல்ல போறாங்க ஜீ….” என்று சிக்கந்தர் கேட்டதற்க்கு…
“உங்க வீட்டு ஆளுங்க சிக்கந்தர்.” என்று கிஷோர் சட்டென்று சொல்லி விட்டான்.
“முதலில் அவங்களை என் வீட்டு ஆளுங்க என்று சொல்லாதிங்க…அப்புறம் இதில் அவங்களுக்கு என்ன வந்தது….?” என்று சிக்கந்தர் இங்கு தன் ஜீயை கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் அதே வேளயில்..
சென்னையில் சிக்கந்தரின் இல்லத்தில்… ஷ்யாம் தன் அண்ணியிடம்… “அண்ணி சிக்கந்தர் எப்போ பாரு கிஷோர் எனக்கு குருஜீ குருஜீ..என்று சொல்லிட்டு இருப்பானே.. இப்போ அந்த குருஜீ..சிக்கந்தருக்கு மாமாவாகவும் இருக்கான்.” என்று பேசிக் கொண்டு இருந்தான்.
 

Advertisement