Advertisement

அத்தியாயம்….20
“இன்னைக்கு கம்பியூட்டர் கிளாஸ் போகலையா  ஜமுனா…?” தன் கணவனுக்கு உணவு  பரி மாறிக் கொண்டே நிஷா ஜமுனாவை பார்த்து கேட்டாள்.
நிஷா கேள்விக்கு ஜமுனா பதில் அளிக்காது போகவும் குனிந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த கிஷோர் நிமிர்ந்து ஜமுனாவை பார்த்தான்.
அப்போது ஜமுனா உணவு தட்டில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தாளே தவிர அதை எடுத்து வாயில் வைக்கவும் இல்லை..நிஷா பேசியதை காதில் வாங்கவும் இல்லை என்று  புரிந்துக் கொண்ட கிஷோர்…
“என்ன ஜமுனா ஏதாவது பிரச்சனையா….?” என்று எப்போது சிக்கந்தரை பார்த்து கேட்கும் கேள்வியை இன்று ஜமுனாவை பார்த்து கிஷோர் கேட்டான்.
கிஷோரின் குரலுக்கு தான் ஏதோ யோசனையில் இருந்து வெளி வந்த ஜமுனா… “என்ன மாமய்யா….?” என்று கேட்டாள்.
இப்போது கிஷோர் தன் கேள்வியை மாற்றி… “கம்பியூட்டர் க்ளாசில் ஏதாவது பிரச்சனையா….?” என்ற கேள்விக்கு ஜமுனா…
“இல்லையே மாமய்யா…” என்று சொன்னவளின் மனது ஏன் இப்படி கேட்டார் என்று யோசிக்கும் போதே நிஷா… “அப்போ ஏன் ஒரு மாதிரியா இருக்க…?” என்று கேட்க..
“இல்ல அட்டம்மா நான் நல்லா தான் இருக்கேன்.” என்று தடுமாறி ஒரு மாதிரி அவள் விழிப்பதை கணவன் மனைவி இருவரும் மாறி மாறி ஜமுனாவை பார்த்தனர்.
ஜமுனாவை தொடர்ந்து பார்வையிடுவதை இடையில் நிறுத்துவது போல் அப்போது தான் சிக்கந்தர் அவங்கு வந்து சேர…கிஷோர் அனைத்தும் மறந்தவனாய்…
“வாடா வா…” என்று  சிக்கந்தரை அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்துக் கொன்டவன்..
“டாலி சிக்கந்தருக்கும் டிபன் வை.” என்று கிஷோர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..
ஒரு தட்டில்  அன்றைக்கு காலை உணவுக்கு என்று சமைத்தது அனைத்தும் வைத்து சிக்கந்தரின் முன் வைத்த நிஷா… “அவனுக்கு டிபன் கொடுக்க உங்க ரெக்கமெண்டேஷன் ஒன்னும் தேவையில்ல.” என்று நிஷா தன் கணவனிடம் முறுத்திக் கொண்டு… சிக்கந்தருக்கு தண்ணீர் அவன் பக்கத்தில் வைத்தாள்.
கிஷோர்  சிரித்துக் கொண்டே உணவை உண்ண சிக்கந்தர் இதை எதையும் கவனிக்காது தன் எதிரில் அமர்ந்து இருந்த ஜமுனாவையே பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.’
‘அய்யோ என்ன இவங்க இப்படி பார்த்து  வைக்கிறாங்க..நானே ஏற்கனவே பயந்துட்டு இருக்கேன்…இப்போ இவங்க பாக்குறது வேற இன்னும் எனக்கு பயத்தை கூட்டுதே…’ என்ற்  நினைத்துக் கொண்டவளாய்..எச்சிலை தொண்டை  குழியில் இறங்க கூட சிரமப்பட்டு முழுங்கி வைத்தாள்.
“என்ன ஜாமூன் நீ சாப்பிடலையா….?” என்று சிக்கந்தர்  இன்னும் போட்டு கொடுக்க…கிஷோர் நிஷாவின் கவனம் மீண்டும் ஜமுனாவிடம் சென்றது.
“ஆமா  சிக்கந்தர் அவ காலையில் இருந்தே ஒரு மாதிரியா தான் சுத்திட்டு இருக்கா…அவ மாமய்யா க்ளாஸ்ல ஏதாவது பிரச்சனையா கேட்டா..அதுக்கும் இல்ல என்ற…என்னன்னு தெரியல..” என்று நிஷா சிக்கந்தரிடம் சொல்லும் போதே நேர்று இரவு ஏதோ சொன்னாளே..அதை பத்தி தன் மாமய்யாவிடம் பேச யோசிச்சிட்டு இருக்காளோ..
இங்கு வந்து அமர்ந்ததில் இருந்து வாசல் கதவையே பார்த்துட்டு பார்த்திட்டு இருந்தாளே..ஒரு சமயம் இங்கு அவன் வர்றாத சொல்லி இருக்கானோ..அதை தான் நேத்து அப்படி சொன்னாளோ….
அந்த பையன் வர்றது போல இருந்தால்..இவரை இன்னைக்கு ஆபிஸ் போக வேண்டாம் என்று சொல்லனுமே..இந்த பெண் எது என்றாலும்  வெளிப்படையா சொன்னா தானே எனக்கும் புரியும்.. இவர் போன பின் அந்த பையன் வந்தா என்ன பண்றது…? ஏதாவது முக்கியமான மீட்டிங் இருந்தா என் போனை கூட அட்டன் பண்ண மாட்டார்… வர்றது சொன்னா இப்போவே அவர் கிட்ட சொல்லி முக்கியமான மீட்டிங்க இருந்தா கூட..
அதோட இது தான் முக்கியம் என்று போக விடாம பிடிச்சி வைக்கலாம்… ஆனாலும் இந்த கிராமத்து பொண்ணுங்களுக்கு கொஞ்சம் அழுத்தம் தாம்பா… என்று மனதில் ஜமுனாவை தாலித்த வாறு..இருவருக்கும் என்ன என்ன தேவை என்று கேட்டு பரி மாறிக் கொண்டு இருந்தாள்.
நிஷா  அந்த பைய்யன் அந்த பைய்யன் என்று மனதில் நினைத்தாளே தவிர..அது சிக்கந்தரா இருக்குமோ என்று ஒரு துளி சந்தேகம் கூட அவளுக்கு எழவில்லை.
அதுவும் சிக்கந்தர்… “ஜீ இன்னைக்கு முக்கியமான வேலை ஏதாவது இருக்கா ஜீ…?” என்று சிக்கந்தர் தன் கணவனிடம் கேட்பதை கேட்டும் கூட அவளுக்கு அந்த சந்தேகம் எழவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கிஷோர் தான் சிக்கந்தர் கேட்டதற்க்கு பதில் சொல்லாது…. “எதுக்கு கேட்குறடா…?” என்று கேட்க…
“ஒரு முக்கியமான விசயம் உங்க கிட்ட பேசனும் ஜீ..அதான்.” என்ற சிக்கந்தரின் பேச்சில்..
உடனே தன்  கைய் பேசியை எடுத்த கிஷோர் தன் பி.ஏவுக்கு அழைத்து சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு…
“அந்த  பத்து மணி மீட்டிங்கை கேன்சல் பண்ணிடு தீபக்.” என்று  கிஷோர் சொல்லி தன் கைய் பேசியை அணைத்து விட்டு இப்போது சிக்கந்தர் முகத்தை பார்த்த கிஷோர்…
“சாப்பிட்டு பேசலாமா….?” என்று சொல்லிக் கொண்டே தன் உணவினை தொடர்ந்தான் கிஷோர்..
“ஜீ அந்த கேன்சல் பண்ண மீட்டிங்க ரொம்ப முக்கியமோ….?” என்று சிக்கந்தர் கேட்டதற்க்கு…
கிஷோர்… “நீ சொன்ன முக்கியமான விசயம் பேசனும் என்று அதோட இது முக்கியம் இல்லேன்னு தான் நான் நினைக்கிறேன் சிக்கந்தர்..” என்று  சொன்ன  கிஷோர் …
தன் கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டே… “இந்த சமயத்தில் நீ வந்து இருக்க..அதுவும் என் கிட்ட முக்கியமா பேசனும் என்று வேற சொல்ற..அப்போ  அது ரொம்ப முக்கியமானதா தானே இருக்கும்.. “ என்று சொல்லிக்  கொண்டே எழுந்து கை அலம்ப  எழுந்த கிஷோர்..
 “சாப்பிட்டு வா பேசலாம்.”  என்று சிக்கந்தருக்கு அழைப்பு விடுத்தவன்..
ஜமுனா அப்படியே சாப்பிடாது அமர்ந்து இருப்பதை பார்த்து… “உனக்கு இன்னைக்கு சாப்பிட பிடிக்கலேன்னு நினைக்கிறேன்.” என்று ஜமுனாவிடம் கேட்ட கிஷோர் நிஷாவை பார்த்து…
“நாளையில் இருந்து ஏதாவது ஒரு ஐட்டத்தை ஜமுனாவுக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் காரமா சாந்தியை சமைக்க சொல்.” என்று சொன்னவன்..
திரும்பவும் ஜமுனாவை பார்த்து… “பிடிக்கலேன்னா எழுந்துடு..க்ளாஸ் போகும் போது பழத்தை சாப்பிட்டு போ…” என்று சொல்லிக் கொண்டே கைய் கழுவும் இடம் நோக்கி சென்றார்  கிஷோர்…
நிஷாவுக்கு இப்போது சிக்கந்தர் கிஷோரிடம் என்ன பேச போகிறான் என்று எல்லாம் யோசிக்கவில்லை. மிஞ்சி மிஞ்சி போனா என்ன பேசுவாங்க..சிக்கந்தர் அவன் குடும்பத்தின் மீது போட்ட வழக்கின் நிலை பத்தி பேசுவாங்க..
இல்லேன்னா அடுத்த மாசம் அந்த  கார் லான்ச் அதை பத்தி பேச போறாங்க..எனக்கு அது எல்லாம் தேவையில்லை..இந்த பொண்ணு நேத்துல இருந்து ஒரு மாதிரியா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே முழிச்சிட்டு இருக்கு..
அவ அந்த பையனை வரச்சொல்லி இருக்கா போல…அவன் வரும் போது இவர் இருக்கார் எனக்கு அது  போதும் என்று நினைத்து  ஒரு பெரும் மூச்சி விட்டவளாய்.. சிக்கந்தர் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
நிஷா சாப்பிடும் போதே ஜமுனா அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டாள்..சிக்கந்தர் சாப்பிட்டு முடித்தும் உட்கார்ந்துக் கொண்டு இருப்பதை பார்த்து…
“நீ போ  சிக்கந்தர். நீ என்னவோ அவர் கிட்ட பேசனும் என்று சொன்னியே போ அவர் அங்கு காத்துட்டு இருக்கார் பார்…” ஹாலில் கிஷோர் அமர்ந்து இருப்பதை காட்டி நிஷா சொன்னதும்…
“நான் இதை பத்தி உங்க எல்லோர் கிட்டயும் தான் பேசனும் பாபி..நீங்க பொறுமையா சாப்பிட்டே வாங்க.” என்று சிக்கந்தர் நிஷா பக்கத்திலேயே அமர்ந்து இருக்க..
‘நம்ம கிட்டயும் பேசனுமா….?தொழில் பத்தியோ…அந்த கார் லான்ச் பத்தியோ என் கிட்ட பேச என்ன இருக்கு…? ஒரு சமயம் இவனும் ஏதாவது பெண்ணை  பத்தி சொல்ல போறானோ…’ என்று நினைத்தவளுக்கு..
‘அப்பாடா…’ என்று அவள் மனம் ஆசுவாசம் அடைந்தது.
இரவு முழுவதும் கணவன் இவனை பற்றி தானே நினைத்துக் கொண்டு இருந்தார்..சிக்கந்தர் ஏதாவது பெண்னை சொன்னால் கண்னை மூடி கட்டி வைத்து விட வேண்டியது தான்.
அதே போல் இப்போ வர்ற பையன் ஜமுனாவுக்கு ஏற்றவனா இருந்தா…?பையன் வசதி கம்மியா இருந்தாலும் பரவாயில்ல…நாம இங்கு ஏதாவது தொழில் வெச்சி கொடுத்து கட்டி வெச்சிட வேண்டியது தான்.
நாம மட்டும் என்ன…?பிறக்கும்  போதே உச்சாணி கொம்பு மேலயா பிறந்தோம் என்று தன் கணவன் நேற்று சொன்ன  சிக்கந்தருக்கு முடித்து விட்டு அடுத்து ஜமுனாவுக்கு பார்க்க வேண்டும் எந்ன்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தாரே..
அந்த இரு கவலைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தால் சந்தோஷம் தானே… ஜமுனா விரும்பும் பையனை இன்னைக்கு  வீட்டிக்கு வர சொல்லி இருக்கா..என்று நிஷா ஒரு முடிவு செய்து அவளே எதேதோ நினைத்துக் கொன்டவளாய் அவசர அவசரமாக உணவினை சாப்பிட்டு…
சிக்கந்தரிடம்… “வா சிக்கந்தர்.” என்று நிஷா அழைத்தாள்.
டையினிங் டேபில் மேல் இருக்கும் பாத்திரம் எல்லாம் அப்படி அப்படியே இருப்பதை பார்த்த சிக்கந்தர்…. “இதெல்லாம் பாபி.” என்று அந்த பாத்திரங்களை சுட்டி காட்டி சிக்கந்தர் கேட்கவும்..
“அதெல்லாம் சாந்தி பார்துப்பா வா…” என்று  தன்னை அழைத்து செல்லும் நிஷாவை நினைத்து சிக்கந்தருக்கு என்னபோ போல் ஆனது.
நிஷா எப்போதும் சாப்பிட்ட உடன் அந்த இடம் சுத்தப்படுத்தி விட வேண்டும். இது போல் அப்படி அப்படியே போட்டு விட்டு வருவதை அவர் எப்போதும் விரும்ப மாட்டார்.
இன்று தான் பேசும் பேச்சு தான் முக்கியம் என்பது போல் தன் நடை முறையையே மாற்றிக் கொண்டு வரும் இந்த பாபி… தான் சொல்லி விசயத்தை கேட்டால்…என்று நினைத்த சிக்கந்தரின் மனது..
பேச வந்து விட்டேன்..இன்று பேசி தான் ஆக வேண்டும்..ஒரு நாள் இல்லை ஒரு நாள் இதை பற்றி  நான் என் ஜீயிடம் பேசி தானே ஆக வேண்டும்.. அதை இன்றே பேசி விட்டால்…கொஞ்சம் நிம்மதியாவது கிட்டும். என்று முடிவு செய்தவனாய் கிஷோரின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்..
தன் எதிரில் நிஷா வந்து அமரவும் கிஷோர் யோசனையுடன் தன் மனைவியை பார்க்க… “உங்க சிக்கந்தர் தான் நானும் இருக்கனும் என்று சொன்னார்.” என்று சொன்ன நிஷா சட்டமாய் அமர்ந்துக் கொண்டாள்.
கிஷோர் யோசனையுடன் திரும்பி சிக்கந்தரை பார்க்க… “பாபியும் இருக்கனும் ஜீ.” என்ற பேச்சில் ..
சரி என்பது போல் சிக்கந்தர் பேச கேட்க ஏதுவாய் அவனை பார்க்க வசதியாக கிஷோர் அமர்ந்துக் கொண்டான்..
அப்போது தான் ஜமுனாவும் தன் அறையில் இருந்து மெல்ல மெல்ல அந்த இடத்திற்க்கு தயக்கத்துடன் வந்தவள்.. நிஷாவின் பக்கத்தில் விட்டால் விழுந்து விடுபவள் போல் முனையில் அமர்நதுக் கொண்டாள்.
ஜமுனா அந்த இடத்திற்க்கு வந்து அமர்ந்த்தும் கிஷோர் தன் கையில் இருக்கும் கைக்கடிக்காரத்தில் நேரத்தை பார்த்தவன்..
“என்ன ஜமுனா க்ளாஸ் போகலா…?” என்று கேட்டான்.
“இல்ல மாமய்யா..போன் செய்து இன்னைக்கு வரலேன்னு சொல்லிட்டேன்.” என்ற ஜமுனாவின் பதிலில்..
கிஷோர்… “என்னம்மா உடம்பு ஏதாவது பண்ணுதா…?” என்று கேட்டதற்க்கு..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமாய்யா..சும்மா தான்.” என்று சொன்னவள் தயக்கத்துடன்  சிக்கந்தரை பார்த்து தலை குனிந்து கொண்டாள்.இதை கிஷோர் கவனில்லைவில்லை என்றாலும் நிஷா கவனித்து விட்டாள்…
மேலும் கிஷோர்  ஜமுனாவிடம் தயங்கிய வாறு… “சிக்கந்தர்  ஏதோ முக்கியமான விசயம் பேசனும் என்று  சொன்னான்.” என்று சொன்னதும்..
ஜமுனா திரும்பவும் சிக்கந்தடரை நிமிர்ந்து பாக்க..சிக்கந்தரோ… “ அவளும் இருக்கட்டும்.” என்று அவன் அவசர பேச்சில்..
கிஷோருக்கு வித்தியாசமாக தெரியவில்லை என்றாலும், நிஷாவுக்கு அது வித்தியாசமாய் தெரிந்தது. நேற்று முதல்  ஜமுனாவின் இந்த தடுமாற்றம்…இன்றும் அந்த தடுமாற்றம் தொடர்வது..
நேற்று நிஷா  … “எதுன்னாலும் என் கிட்ட சொல்.” என்றதற்க்கு ஜமுனா சொன்ன.. “கண்டிப்பா சொல்றேன் அட்டம்மா… ஆனா இது இன்னொருத்தர் கிட்ட கேட்டு சொல்றேன்.” என்ற ஜமுனாவின் அந்த வார்த்தை… இன்று காலையிலே வந்து நிற்க்கும் சிக்கந்தர்…
கூடவே இவள் ஏன் இப்போ இங்கு வந்து உட்காருகிறாள். நிஷாவுக்கு ஜமுனா வந்து உட்கார்ந்ததில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் முன் எல்லாம் இங்கு எங்களோட வந்து உட்கார் என்று சொல்லும் போது எல்லாம்… தன் அறையிலேயே முடங்கி கொள்கிறவள்…
இன்று தான் அழைக்காது அவள்  வந்து அமர்ந்துக் கொண்டது..பெண்களுக்கே உண்டான அந்த சூட்சுமத்தில் அப்படியும் இருக்குமோ….? என்று யோசித்தவளாய் என்ன என்று தெரியாது நான் எதுவும் பேச முடியாது என்று அமைதி காத்தாள்.
இவள் இவ்வாறு யோசனை செய்யும்  சமயத்தில் கிஷோர்… “என்ன சிக்கந்தர் ஏதோ என்னிடம் பேசனும் என்று சொன்னியே என்ன விசயம்…?” என்று கேட்டதற்க்கு..
சிக்கந்தர் கொஞ்சம் கூட தயங்காது… “என் கல்யாணத்தை பத்தி தான் ஜீ….” என்று  சொல்லவும்…
கிஷோர் யோசனையுடன் தன் மனைவி முகத்தை பார்த்தவன் அவள் காட்டும்  கண் ஜாடையை கவனியாது சட்டென்று தன் பார்வையை சிக்கந்தர் பக்கம் திருப்பி விட்ட கிஷோர்…
“சொல்லு சிக்கந்தர்..உன் மனசுல எந்த மாதிரி பெண்னை எதிர் பார்க்கற..நீ சொன்னா தான் நான் அது போல் பார்க்க முடியும்.” என்று கிஷோர் சிக்கந்தரிடம் கேட்டான்.
கிஷோருக்கு சிக்கந்தர் முதலிலேயே எனக்கு முப்பதில் பார்த்தால் வயதானவங்கல பார்ப்பது போல இருக்குன்னு என் கிட்ட சொல்லி இருந்தா..நாம அது போலவே பார்த்து இருந்து இருக்கலாமே..சொல்வதற்க்கு இல்லை…இந்நேரம் அவனுக்கு திருமணம் முடிந்து கூட இருக்கலாம்..
இப்படி காலத்தை வீண் அடித்து விட்டானே இப்போவாவது ஒழுங்கா சொல்லட்டும் என்று நினைத்து தான் பாவம் கிஷோர் அப்படி சொன்னது…
ஆனால் சிக்கந்தர் அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு… “ஜீ  நான் இருபத்தை ஐந்து வயதை பெண்ணை கல்யாணம் செய்ய விரும்பினா  அது தப்பா ஜீ…?.” என்ற சிக்கந்தரின் கேள்வியில்.. நிஷாவுக்கு அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் ஊர்ஜிதம் ஆகி விட பதட்டத்துடன் அவர்களின் பேசுவதை  கவனிக்க ஆராம்பித்தாள்.
ஆனால் கிஷோர்  எந்த விகல்பமும் இல்லாது… “தப்பே இல்ல  சிக்கந்தர்.நேத்து கூட உன் பாபி இதை பத்தி தான் பேசிட்டு இருந்தா….  அது பத்தி அப்புறம் சொல்றேன்.
நான் காலையில் எழுந்து செய்த முதல் வேலை மேட்ரி மோனில் வயதை மாத்தி போட்டது தான்..அதாவது இருபத்திஐந்தில் இருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் பெண் தேவை என்று..
உன்னை பத்தி எல்லாம் சொல்லி தான் கேட்குறோம்..  அவங்களுக்கும் பிடிச்சி பெண் கொடுத்தா தப்பே இல்ல சிக்கந்தர்..கவலை படாதே  இப்போ நீ உன் விருப்பத்தை சொல்லிட்டலே.. சீக்கிரம் முடிச்சிடலாம்.” என்று  கிஷோர் சொன்னதும்..
உடனே சிக்கந்தர்… “ நானே பெண்னை பார்த்துட்டே ஜீ….” இதை சிக்கந்தர் சொல்லும் போது அவனின் பார்வை தன்னால் ஜமுனாவின் பக்கம் சென்று மீண்டது..
அந்த சிறிது இடைவெளியிலேயே சிக்கந்தர் கண் மூடி பயப்படாதே என்று சமிஞ்சை காண்பித்தே  தன் ஜீயிடம் தன் பேச்சை தொடர்ந்தான்.
கிஷோருக்கு தான் சிக்கந்தர் சொல்வதை உள்வாங்கிக் கொள்ளவே ஒரு நிமிடம் பிடித்த்து..புரிந்த்தும்… எழுந்து அவனை கட்டி அணைத்தவன்..
“படவா என் கூடவே தானேடா சுத்திட்டு இருந்த இந்த வேலைய எப்போ பார்த்த…?” என்று மகிழ்ச்சியுடன் சொன்ன கிஷோர்…
நிஷாவை பார்த்து… “பாரு டாலி நமக்கு வேலைய மிச்சம் வெச்சிட்டான்.” என்று தன் மனைவியிடம் சொன்ன கிஷோர் பாவம் அப்போதும் தன் மனைவி தன்னிடம் காட்டும் ஜாடையை கவனியாது..
திரும்பவும் சிக்கந்தரை பார்த்து… “சொல்லுடா பெண் யார்…? இப்போவே பெண் கேட்டு போயிடலாம்.” என்று கிஷோர் அவசரப்படுத்தினான்.
“ஜீ ஜீ..பொறுமை..பொறுமை.” என்று சொல்லிக் கொண்டு கிஷோரை அமர வைத்தவன்
“நீங்க  நான் இவ்வளவு சின்ன பெண்ணை கல்யாணம் செய்வது தப்பு இல்லேன்னு சொல்வதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜீ..அதுவும் நான்  சொல்லாமலேயே நீங்கலே..ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஜீ…” என்று சிக்கந்தர் சொன்னதற்க்கு..
“சரிடா அதெல்லாம் விடு பெண் யாரு…?” என்று கிஷோர் கேட்கவும்..
சிக்கந்த கொஞ்சம் தயங்க… கிஷோர் தான்… “என்னடா என்ன விசயம்..பெண்ணுக்கு பிடிக்கலையா,…?” என்று கிஷோர் தயங்கி கேட்கவும்..
“பெண்ணுக்கு பிடிச்சி இருக்கு ஜீ..பெண்ணுக்கு என்னை ரொம்ப பிடிச்சி இருக்கு.” என்று அதை அழுத்தம் திருத்தமாய் சொன்னவன்..
தொடர்ந்து… “அவங்க வீட்டு பெரியவங்க இதை எப்படி ஏத்துப்பாங்கன்னு தான் பயமா இருக்கு ஜீ.” என்று தயங்கியவாறு தன் பேச்சை நிறுத்தினான் சிக்கந்தர்.
“பெண்னுக்கு உன்னை பிடிச்சி இருக்குல..அப்புறம் என்ன முறையா போய் பெண் கேட்போம் கொடுத்தா அவங்களுக்கு மரியாதை இல்லேன்னா பெண்ணை தூக்கிடுவோம்.” என்று கிஷோர் சொன்னான்..
 யாரோ வீட்டு பெண்னை தூக்கலாம் என்று சொல்லும் கிஷோர் அந்த பெண்ணே நம் வீட்டு பெண் தான்  என்று ஆகும் போது..என்ன ஆகும்…?

Advertisement