Advertisement

அத்தியாயம்…2(1)
கிஷோரை அணைத்து விடுவித்த சிக்கந்தர்… “சொல்லுங்க ஜீ…எத்தனை வருடமா…நான் இப்படி படுத்துட்டு இருக்கேன்.” என்று  கிஷோரை ஆராய்ச்சி பார்வை பார்த்திக் கொண்டே  கேட்டான்.
“சிக்கந்தர்…” என்று தயங்கிய கிஷோரின் குரல் கொஞ்சம் தயங்கியும், கொஞ்சம் அதிசயத்தும்  எதிரோலித்தது.
“ஜீ நீங்க யாரோ…” என்று தொடங்கிய சிக்கந்தர் பின் நியாபகம் வந்தவனாய்… “ஆ ஏதோ அமைச்சருன்னு கத்திட்டு இருந்திங்க.” என்று ஆராம்பித்தவன்..
“எனக்கு அப்போவே கொஞ்சம் கொஞ்சம் நினைவு வந்துடுச்சி ஜீ…ஆனா எத்தனை வருடம் தெரியல.நீங்க அதை  பத்தி பேசினிங்களா…?அதுவும் தெரியல. ஆனா  மத்தது நல்லாவே கேட்டது ஜீ…” என்று சொன்னவனின் பேச்சில் மருந்துக்கும் வேதனையோ…வருத்தமோ இல்லை. 
அவன் பேச்சை கேட்டு…கிஷோருக்கே ஆச்சரியமாக போய் விட்டது.இவனை பற்றி நாம் முழுவதும் அறிந்துக் கொள்ளவில்லையோ…’ என்று நினைத்தவன். ‘ஒரு வேளை மனதில் வைத்து புழுங்குகின்றானோ…’ என்று நினைத்துக் கொண்டவனின் முகத்தை பார்த்த சிக்கந்தர்…
“எனக்கு நினைவு அப்பவே கொஞ்சம் கொஞ்சமா வர ஆராம்பிச்சிடுச்சி ஜீ..நீங்க சொன்ன அம்மா தான் என்னை கருணை கொலை செய்ய மனு போட்டாங்க. அதை கேட்டதும்… உடம்பு வலியோட….” என்று சொன்னவன் தன் நெஞ்சு பகுதியை காட்டி…
“இங்கு ரொம்ப வலிச்சது ஜீ… அப்புறம் யோசிச்சேன். எதுக்கு அப்படி செய்ய சொன்னாங்க…?புரியல.” என்று தான் கேட்ட்தையும், தான் நினைத்தையும், சொன்னவன்..
பின்… “அப்பா எப்படி  இதுக்கு சம்மதித்தார்…?” என்று தன் சந்தேகத்தை சிக்கந்தர் கேட்டான்.
கிஷோரின் தயங்கிய முகத்தை பார்த்த சிக்கந்தர்… “என்ன ஜீ இல்லையா…?” என்று கேட்டதற்க்கு…
“ஆமாம்.” என்று ஒரே வார்த்தையில் தான் கிஷோர் பதில் அளித்தான்.
கிஷோருக்கு இப்போது  சிக்கந்தரிடம் பேசுவது பயமாக இருந்தது.அதுவும் சிக்கந்தரின் தெளிவான பேச்சும், அவன் கேள்வியும் அவனுக்கு பயத்தையே கொடுத்தது.
கோமாவில் இருந்து எழுந்த உடன்…அதுவும் பதிமூன்று வருடம் கழித்து எழுந்த ஒருவனால் இப்படி தெளிவாக பேச முடியுமா…? யாராவது சொல்லி இருந்தால் கிஷோர் கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான்.
ஆனால் நேரில் பார்த்து கேட்பதை அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அதுவும் அவன் கேள்விக்கு பதில் அளிக்கலாமா…? பதிமூன்று வருடம் கழித்து எழுந்தவன். எதை தாங்குவான் எதை தாங்க மாட்டான் என்று தெரியாது.  ஏதாவது நாம் பேச போய் ஏதாவது ஆகி விட்டால்…
அதை நினைத்தே  சிக்கந்தருக்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்துக்  கொண்டு இருந்த கிஷோர் இடை இடையே கதவு பகுதியையும் பார்த்து இருந்தான்.
“கவலை படாதிங்க ஜீ…எனக்கு ஒன்னும் ஆகாது. எங்க அம்மா தான் என்னை பிண மேடைக்கு அனுப்ப வண்டியில ஏத்தி  அனுப்பி இருக்காங்க..நான் நினைவு தெரிந்து கேட்ட  முதல் வார்த்தை அது தான். அப்போவே என் மூச்சு நிக்கல…என் ஆயுசு கெட்டி ஜீ..அதனால என் கிட்ட என்ன பேசுறது…?எது பேச கூடாது…?” எல்லாம் தயங்க வேண்டாம் ஜீ…” என்று சொன்னவனின்  முகத்தை கிஷோர் பார்த்தான்.
அந்த முகத்தில் அளவுக்கு மீறி தெரிந்த வேதனையில்… “சிக்கந்தர்…” என்று சொல்லிக் கொண்டே முதல் முறை கிஷோரே  சிக்கந்தரை அணைத்துக் கொண்டான்.
எப்போதும்  சிக்கந்தர் கிஷோரை பார்த்ததுமே கட்டி அணைத்து விடுவான். கிஷோர் கூட … “உன் பாபி என் கிட்ட கேட்குறா…?உங்களுக்கு நான் மனைவியா..அந்த சிக்கந்தர் மனைவியான்னு…? உன் குருபக்தியில்…என் கணவன் பக்தியை  பத்த வெச்சிடாதே டா…” என்று கூட சொல்லி கிண்டல் அடித்து இருக்கிறான்  கிஷோர்.
சில சமயம் சிக்கந்தர் கேட்பான் … “ஏன் ஜீ உங்களுக்கு என் மேல பாசமே இல்லையா…? எப்போ பார்த்தாலும் நானே உங்களை கட்டி பிடிக்கிறேனே…” என்று
அதற்கு அவனின் ஜீ… “எனக்கு எங்கேடா சான்ஸ் கொடுக்குற…” என்று சொன்னவன் இன்று அவனின் வேதனையை தன் அணைப்பு கொஞ்சம் குறைக்குமானால் சிக்கந்தரை தன் கைய் அணைப்பினிலேயே வைத்துக் கொள்ள கூட தயாராய் இருந்தான் கிஷோர்.
“போதும் ஜீ. போதும் எனக்கு ஒன்னும் இல்லை.” என்று கிஷோரின் அணைப்பில் இருந்து விலகிய சிக்கந்தர்…
“சொல்லுங்க ஜீ…அப்பா எப்போ தவறினார்…?” என்று கேட்டான்.
“பத்து வருடம் முன்.” என்று  சொன்னதும்…
“ஓ…” என்று சிக்கந்தர் சொன்ன அந்த ஒரு வார்த்தையிலேயே  அவனின் வேதனையின் அளவு கிஷோருக்கு தெரிந்தது. சிக்கந்தருக்கு அம்மாவை விட அப்பா தான் நெருக்கம் என்று கிஷோருக்கு தான் தெரியுமே…
“நான் படுத்து எத்தனை வருஷம் ஆச்சி…?” என்ற கேள்விக்கு..
“பதிமூன்று.” என்று சொன்னதும்…
“அப்போ நான் படுத்து மூன்று வருஷம் தான் இருந்து இருக்கார்.” என்று கேட்டவன் கிஷோரின் பதிலை எதிர் பாராது…அவனே தொடர்ந்து…
“அப்போ அதுக்கு அப்புறம் தான் அம்…” அம்மா என்று சொல்ல வந்த  சிக்கந்தர் அந்த வார்த்தையை சொல்லாது…
“இந்த கருணை கொலை எல்லாம் செய்ய ஆராம்பிச்சதா…?” என்று  சிக்கந்தர் கேள்வி கேட்க..
கிஷோருக்கு தான் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது இருந்தார். சிக்கந்தர் கேட்ட கேள்விக்கு எல்லாம் கிஷோருக்கு விடை தெரியும்.
ஆனால் அதை சிக்கந்தர் முகம் பார்த்து சொல்ல மிக தயங்கி தயங்கி தான் கிஷோர் சொல்ல வேண்டியதாக இருந்தது. கிஷோரை மேலும் தயங்க விடாது அந்த இடத்திற்க்கு வந்த அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வந்து சேர்ந்தார்.
சிக்கந்தருக்கு நினைவு வந்து பதினைந்து நாள் கடந்து விட்டது. அந்த பதினைந்து நாளிலேயே சிக்கந்தர் தான் தவறிய பதிமூன்று வருடத்தை  கிஷோரிடம் கேட்டு அறிந்துக் கொண்டான்.
கிஷோருக்கு இத்தனை வருடத்தில் என்ன நடந்தது என்று சொல்ல எல்லாம் தயக்கம் இல்லை. முதலில் சிக்கந்தரின் உடல் நிலை நினைத்து தான் தயங்கினான்.
அன்று தலைமை மருத்துவர் வந்து சொன்ன… “உடல் நிலையிலும் சரி…மனநிலையிலும் சரி…சிக்கந்தர்   ஸ்டாங்காவே இருக்கார். பிசியோ தான் கொஞ்சம் தேவை படுது. அது எத்தனை நாள் எத்தனை வாரம் என்று இப்போ  சொல்ல முடியாது.”என்று சொன்ன மருத்துவரின் பேச்சில் தைரியம் வந்த கிஷோர்..
சிக்கந்தர் கேட்ட கேட்காத கேள்வி  அனைத்திற்க்கும் பதில் சொல்லிக் கொண்டு வந்த கிஷோர் இடையில் அவன் கேட்ட அவனின் அத்தை பெண்…
அவனுக்கு என்று நிச்சயம் செய்து விட்டு…அதை தன் நண்பர்களோடு கொண்டாட விருந்து கேளிக்கையில் அளவுக்கு மீறிய போதையில் நண்பர்களோடு காரை ஓட்டிக் கொண்டு வந்து விபத்திற்க்கு ஆளாகி படுத்து இருந்தவன்..
கேட்ட கேள்வியான… “சுபத்ராவுக்கு கல்யாணம் ஆயிடுச்சிலே ஜீ…” என்ற அவன் பேச்சில் அவளுக்கு ஆகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
“ம் ஆயிடுச்சி ஆயிடுச்சி…” என்று  கிஷோர் சொன்ன தோரணையில் …
“என்ன ஜீ…இப்படி சொல்றிங்க…என் மேல உங்களுக்கு அன்பு அதிகம் என்று  எனக்கு தெரியும் ஜீ…அதனால அந்த பெண் இத்தனை வருடம் காத்து இருக்கனும்  என்று நினைப்பதே தப்பு தானே ஜீ…
 அது நியாயமும் இல்ல ஜீ..உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர் பார்க்கல.” என்று சொன்ன சிக்கந்தரின் நியாயமான பேச்சை  கேட்ட கிஷோர் இவன் எப்படி அந்த பெண்ணுக்கு ஒகே சொன்னான் என்று யோசித்தவன்…
“நானும் உனக்காக வருட கணக்கில் காத்து இருக்க சொல்லலே சிக்கந்தர். உனக்கு நினைவு திரும்புவதில் இரண்டு சதவீதம் தான் நம்பிக்கை கொடுத்த நிலையில், காத்திருக்க சொல்ல கூடாது.
இன்னும் சொல்ல போனால் அப்பெண் ஒரு வருடம் அப்படி இருந்தால், நானே  அந்த பெண்ணை கூப்பிட்டு பேசி இருப்பேன்.” என்று சொன்ன கிஷோரிடம்..
“அப்புறம் என்ன ஜீ…நீங்கல சொல்றிங்க..அப்புறம் ஏன் அவள் கல்யாணம் செய்துட்டா என்பதை அப்படி சொன்னிங்க…?” என்று  சிக்கந்தர் கேட்டான்.
“அவ நீ படுத்த மூன்று மாசத்தில்  கல்யாணம் செய்துக்கிட்டா…” என்று கிஷோர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிக்கந்தரின் முகம் மாறி போனது.
“ எந்த தேதி…?” என்று சிக்கந்தர் கேட்க…
அவன் எதற்க்கு கேட்கிறான் என்று தெரிந்தவனாய்… “உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செய்ய இருந்த தேதியில் தான் அவள் கழுத்தில் தாலி ஏறியது.” என்று சொன்னதுமே…சிக்கந்தரின் முகம் முற்றிலும் கலை இழந்து போனது.
“ஏய் நீ இந்த அளவுக்கு பீல் பண்ற அளவுக்கு எல்லாம் அவ தகுதி இல்ல…விடு..விடு…” என்று கிஷோர் சொன்னார்.
“பீல் எல்லாம் இல்லே ஜீ…ஆனாலும் எப்படி …யோசிக்கிறேன்…? அவள் நிலையில் நான் இருந்தா  கல்யாணம் செய்துக்காம இருந்து இருப்பேன் எல்லாம் சொல்ல மாட்டேன்.
ஆனால் கொஞ்சம் டைம் எடுத்து இருப்பேன். நீங்க சொன்னிங்கலே அந்த இரண்டு சதவீதம் எனக்கு நினைவு திரும்ப சான்ஸ் இருக்குன்னு… அதுக்காக ஒரு வருடம் ஒரே ஒரு வருடம் பொறுத்திருந்திருப்பேன் ஜீ…” என்று சொன்னவன்…
“சரி விடுங்க ஜீ…” என்று சொல்லி விட்டு கிஷோர் முகத்தை பார்த்த சிக்கந்தருக்கு..இன்னும் என்னவோ இருக்கு போலவே என்று நினைத்தவன்…
“சொல்லுங்க ஜீ…நான் எவ்வளவு ஸ்டாங்குன்னு எனக்கே தெரிய வேண்டி இருக்கு சொல்லுங்க…மிச்சம் மீதி எது இருந்தாலும் சொல்லி விடுங்க.” என்று  சிக்கந்தர் சொல்லி விட்டான் தான்.
ஆனால் கிஷோர் சொன்ன அந்த செய்தி..இது வரை சொன்னது எல்லாம் ஒன்றும்  இல்லை என்று ஆனாது.
“சுபத்ரா கல்யாணம் செய்துகிட்டது வேறு யாரையும் இல்ல  உன் சித்தப்பா… ஷ்யாம் வர்மாவை.” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு ஒரு நிமிடம் சிக்கந்தர்  அதிர்ந்து தான் போய் விட்டான்.
 

Advertisement