Advertisement

அத்தியாயம்…2(2)
தனக்கு நிச்சயத்தை பெண்ணை தன் சித்தப்பா திருமணம் செய்துக் கொண்டாரா…? கிஷோர் சொன்னதை கேட்டு சிக்கந்தர் அதிர்ந்தது ஒரு பக்கம் இருந்தால்,  அதை விட குழம்பி போனவனாய்…
எப்படி ஜீ…?எப்படி…?” என்று கேட்டதற்க்கு…
 “உனக்கு சுபத்ரா  அத்தை உன் பெண். உங்க  சித்தாப்பாவுக்கு அக்கா பெண். தட்ஸ் ஹால்…” என்று கிஷோர் உறவின்  முறையை  சிக்கந்தருக்கு  விளக்கி கூறினான்.
“எப்படி முடிந்தது இருவருக்கும். என்னை அவர்கள் திரும்பி வர மாட்டேன் என்று முடிவே செய்து விட்டார்களா…?என்று நினைத்தவன் மனது…
‘உனக்கு இதில் சந்தேகம் வேறா…?அதுக்கு தானே தானா போக எவ்வளவு காலம் ஆகுமோ…?என்று கருணை கொலை என்ற பெயரில் தன்னை கொலை செய்ய அனுப்பி இருக்கிறார்கள். அதுவும் யார்…?பெத்த தாய்.
இதன் நடுவில்  சிக்கந்தரின் குடும்பம் மொத்தமும்  சிக்கந்தருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைக்கு  எத்தனை முறை வந்தாலும்…அத்தனை முறையும் சிக்கந்தர்…
“நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை.” என்ற ஒரே பதிலை சொல்லி அனுப்பி கொண்டு இருந்தான்.
கிஷோர்  கூட… “இது எத்தனை நாளுக்கு…?” என்று கேட்டதற்க்கு…
“அவர்களை பார்த்தால் நான் உடைய மாட்டேன் என்று என் மனதுக்கு எப்போது தோன்றுகிறதோ…அது வரை.” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு தன் தொழில் தன் குடும்பம் என்று அனைத்தும் மறந்தவனாய் கிஷோர் அந்த மருத்துவமனையே கதி என்று  கிடந்தான்.
நிஷாவிடம் இருந்து நாளுக்கு ஒரு அழைப்பு வரும்..அந்த அழைப்பை கிஷோர் சிக்கந்தர் முன்நிலையிலேயே பேசுவான். கிஷோர் பேசிய பின்…சிக்கந்தரும்…
பழைய நினைவில்… “பாபி…” என்று அழைத்துக் கொண்டு  போன நாட்களை இருவரும் மீட்டு எடுத்து பேச இப்படி பொழுது போய் கொண்டு இருந்தது. பின் தொழில் சார்பாய்  கிஷோரின் உதவியாளன் தீபக் அழைத்து பேசுவான்.
தீபக்கை சிக்கந்தருக்கு தெரியாது. அதனால் கிஷோர் பேசும் தொழில் பேச்சை கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தவனின் மனதில் ஏதேதொ திட்டம்   உருவாகியது.
ஆனால் கிஷோருக்கு ஒரு சில சமயம் வரும் அழைப்பை மட்டும்…சிக்கந்தர் எதிரில்  பேசாது தனிமையில் பேசி விட்டி வருபவனின் முகம் ஏனோ கலை இழந்தது போல் காணப்படும்.
ஒரிரு  முறை சிக்கந்தர்… “என்ன ஜீ ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டதற்க்கு…
“இல்லையே…ஒன்றும் இல்லையே…” என்று அவர் சொல்லும் பதிலிலேயே  சிக்கந்தருக்கு தெரிந்து விட்டது  ஏதோ இருக்கிறது என்று.
ஆனால் சிக்கந்தர் என்ன என்று அழுத்தி கேட்காது நடப்பதை ஒரு பார்வையாளனாய் மட்டும் பார்த்திருக்க..இடையிடையே…சிக்கந்தரின்  மொத்த குடும்பம் வந்து சிக்கந்தரை பார்த்து ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க… கிஷோரிடம்… “அடுத்த வாரம் அனைவரையும் பார்க்குறேன் ஜீ..அதுக்கு முன்ன இங்கே வந்து அவங்களை சீன் போட வேண்டாம் என்று சொல்லி விடுங்க ஜீ.” என்று சொன்னவன்…
அடுத்து சிறிது நேரம் யோசித்த சிக்கந்தர் கிஷோரிடம்…. “நான் டாக்டர் கிட்ட பேசனும் ஜீ…” என்று கேட்டதற்க்கு…
“எதுக்கு சிக்கந்தர் உடம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுதா…?மறைக்காம என் கிட்ட சொல்லுடா…” என்ற கிஷோரின் பதட்டமான குரலில்…
“ஜீ…ஜீ டாக்டரை  பார்க்கனும் என்று சொன்னா… உடம்பு பிரச்சனை பண்ணா மட்டும் தானா…? இனி நான் என்ன பண்ணலாம்..என்ன பண்ண கூடாதுன்னு கேட்க இருக்க கூடாதா…?” என்ற பேச்சில் அவனின் அந்த குருஜீயே குழம்பி போக வைத்து விட்டான்.
கிஷோரின் குழம்பிய முகத்தை பார்த்து விட்டு… “உங்க எதிரில் தான் பேசுவேன். போதுமா ஜீ…” என்று சொல்ல…
கிஷோரும் அடுத்து எதுவும் கேட்காது மருத்துவரை பார்க்க வைத்தான் கூடவே அவனுமாய்..
சிக்கந்தரிடம்  அந்த மருத்துவர்  கேட்ட… “மிஸ்டர் சிக்கந்தர் எப்படி இருக்கிங்க …?என்ற கேள்விக்கு விடை அளிக்காது…
“அதை நீங்க தான் சொல்லனும் டாக்டர். அதற்க்கு தான் உங்களை அழைத்து பேச நினைக்கிறேன்.” என்ற சிக்கந்தரின் பேச்சில்…
அந்த மருத்துவர் கிஷோரை பார்க்க… கிஷோரின் மனதில்.. . ‘இதுக்கே அதிர்ந்தா எப்படி…?  இன்னும் உனக்கு இருக்கு பார்…’ என்று அவன் நினைத்தது போல தான் சிக்கந்தரின் அடுத்து அடுத்த பேச்சுகள் இருந்தது.
“நான் உடம்பு அளவில்  பிட்னஸா இருக்கேனா…?”  என்று சிக்கந்தர் கேட்ட முதல் கேள்விக்கு…
“யூ ஹார் பர்பெக்ட்  மிஸ்டர் சிக்கந்தர்.” என்ற அந்த மருத்துவரின் பதிலுக்கு…
“இனி இந்த மிஸ்டர் போட தேவையில்லை டாக்டர்…நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும் போது இந்த மிஸ்டர் போடுவதற்க்கே உங்களின் நேரம் இழுத்துக் கொள்ளும்.” என்று சொன்ன சிக்கந்தர் தன் அடுத்த கேள்வியான…
“என் மனநிலை எப்படி இருக்கு…?” என்ற தன் இரண்டாம் சந்தேகத்தை கேட்டான்.
‘உன் மனநிலை நல்லா தான் இருக்கு.உன்னிடம் பேசின பின் என் மனநிலை என்ன  ஆக போகிறது  என்று தான்  எனக்கு தெரியல.’ என்று ஒரு மனிதனாய்  மனதில் நினைத்த அந்த மனிதர்…
ஒரு மருத்துவராய் சிக்கந்தர் கேட்ட  கேள்விக்கு… “உங்கள் மனநிலை நல்ல  நிலையில் தான் இருக்கு மிஸ்…” மிஸ்டர் என்று போட வந்தவர் அதை போடாது… “சிக்கந்தர்.” என்று ஒழுங்காக அவன் கேள்விக்கு பதில் அளித்தார்.
பின்… “அப்போ நான் நார்மல் வாழ்க்கை வாழலாமா டாக்டர்…” என்று கேட்டதற்க்கு..
“ம் அது தான் சொல்லிட்டனே சிக்கந்தர். யூ ஆல் ரைட். உங்க மனதும் உடம்பும் நல்ல நிலையில் இருக்கு..பதிமூன்று வருடம் கோமாவில் இருந்தவர் ஒரே மாதத்திற்க்குள்  இப்படி வருவது அபூர்வம் சிக்கந்தர்.
இதன் காரணம் இதோ உங்க ஜீ சொன்ன..அவனுக்கு வாழ்க்கை மீது பிடித்தம் என்பதை விட  காதல். அது அவனை திரும்ப நினைவுக்கு கொண்டு வந்துவிடும் என்று சொல்லிட்டே இருப்பார். அது நிஜம் என்று நீங்க நிரூபிச்சிட்டிங்க சிக்கந்தர்.” என்று  சொன்னதற்க்கு…
சிக்கந்தர் கேட்ட… “அப்போ நான் நார்மல் வாழ்க்கை வாழலாமா டாக்டர்.” என்று முதலில் கேட்ட கேள்வியையே திரும்பவும் அழுத்தம் திருத்தமாய் சிக்கந்தர் கேட்க..
இப்போது தான் டாக்டருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து அவனை உற்று பார்த்தார்..அவர் பார்வையில் சிரித்த சிக்கந்தர்…
“நான் கேட்டதை நீங்க சரியா  புரிஞ்சிக்கலேன்னு நினைக்கிறேன் டாக்டர்…நார்மல் வாழ்க்கைன்னா நான் திருமணம் செய்துக் கொள்ளலாமா…?என்னால் ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்தி, நானும் சந்தோஷமா இருக்க  முடியுமா…?என்று கேட்கிறேன்.” என்ற அவன் கேள்வியில் அந்த மருத்துவர் நெஞ்சை பிடித்துக் கொண்டார் என்றால்…
கிஷோருக்கோ… ‘இவனுக்கு இப்போவும் பெண் தேவைபடுதோ…’ என்று தான் நினைத்தான்.
அந்த மருத்துவர் கோமாவில் இருந்து எழுந்தவனின் மனநிலையே முதலில் ஒரு நிலைக்கு வர காலம் பிடிக்கும். பின் அவன் உடல் நிலை பழைய நிலைக்கு வர கால அவகாசம் தேவைப்படும். 
பின் அடுத்து என்ன வாழ்ழ்கை என்று யோசிப்பான்…அப்படி இருக்க இவன் கோமாவில் இருந்து எழுந்து ஒரு மாதமே ஆனநிலையில் எதிரில் அமர்ந்து…
“நான் தாம்பத்திய வாழ்க்கைக்கு லாயிக்கா…? என்று கேட்பான் என்று எதிர் பாராத்தால் தான் சிக்கந்தர் அப்படி கேட்ட்தும் மருத்துவர் அதிர்ந்தார்.
பின் இந்த குழப்பத்தையும் தெளிவு படுத்துவதும் ஒரு மருத்துவனாய் தன் கடை என்று நினைத்தவர்… “என்னை பொறுத்தவரை நீங்க அதுகேயே பர்பெக்ட் தான் சிக்கந்தர்.
ஆனாலும் இதை பத்தி முழுவதையும் தெரியனும் என்றால்..அதுக்கு உன்டான மருத்துவரை இன்று மாலை பார்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்று சொன்னதும்…
“ஏன் டாக்டர் நான் அவரை  ஆப்டனுன் அவரை பார்க்க முடியாதா…?” என்ற கேள்வில் பாவம் போல் அந்த மருத்துவர் கிஷோரை பார்க்க…
கிஷோரே சிக்கந்தரின் அலப்பரையில்  போதும்டா… ‘என்னவோ பெண் இப்போவே ரெடியா இருப்பது போலவும்…இன்று மதியம் டாக்டரை கன்சல்ட் செஞ்ச பின் மாலை கல்யாணம் செய்ய போறது போல பேச்சை பார்.’ என்று மனதில் தாளித்தவன்..
வெளியில்… “விடுடா சாயங்கலாமா பார்க்கலாம்.” என்று பல்லை கடித்துக் கொண்டு அவனிடம் சொன்ன கிஷோர் ..அந்த மருத்துவரை பார்த்து … 
“நீங்க சொன்னது போல் ஈவினிங்கே…அப்பாயிண்ட்  மென்ட் வாங்கிடுங்க…” என்று அந்த மருத்துவரிடம் சொல்லி விட்டு, இன்னும் அந்த மருத்துவரை என்ன என்ன கேட்டு குழப்பித்து விடுவானோ என்று நினைத்து கிஷோர் சிக்கந்தரை கைய்யோடு  அழைத்து சென்று விட்டான்.
அந்த மருத்துவர் சொன்னது போல். அதற்க்கு என்று இருக்கும்  மருத்துவரிடம் சிக்கந்தருக்கு முன் பதிவு செய்து கொடுத்தார்.
அந்த மருத்துவரும்  சிக்கந்தரை அவன் தாம்பத்யா வாழ்க்கைக்கு தகுதியானவனா…?என்று சோதித்து பார்த்து விட்டு…
அதே வார்த்தையை… “யூ ஆர் பர்பெக்ட் ஆல்ரைட்” என்று சான்றிதழ் கொடுத்தார்.
தங்களுக்கு என்று ஒதுக்கபட்ட அறைக்கு வந்ததும் கிஷோர்… “என்னடா…என்ன இது எல்லாம்…?” என்று சிக்கந்தர் என்ன  நினைக்கிறான்  என்று அறிய கேட்டான்.
“என்ன ஜீ நான் கல்யாணம் செய்துக்க கூடாதா…? எனக்கு வயது ரொம்ப  கடந்துச்சா…?” என்று கேள்வியாக தன்னை  பார்த்த சிக்கந்தரை அணைத்துக் கொண்ட கிஷோர்…
“என்னடா வயசு. என்ன பெரிய வயசு ஆயிடுச்சி உனக்கு…இப்போ இருக்கும் பையன்கள் எல்லாம் படிச்சி முடிச்சி ஒரு நல்ல வேலையில் அமரவே இருபத்தி ஐந்து   வயது ஆயிடுது…
அப்புறம் சென்டில் மென்ட் ஆகனும் என்று ஒரு வீடு வாங்கி காரு வாங்கி…கூடவே அவனுக்கு ஏதாவது ஒரு உடன் பிறப்பு இருந்தா அவன் கடமை எல்லாம் அப்படி இப்படி முடிச்சி திரும்பி பார்த்தா…
அவன் வயது முப்பத்திஐந்து வயதில் வந்து நிற்கும். அப்புறம் அவனுக்கு பொறுத்தமான வரனா பார்த்து…குடும்பம் பார்த்து… பெண் பார்த்து… அப்புறம் ஜாதகத்தில் ராகு…கேது…என்று பத்துக்கு எட்டு பொருத்தமாவது இருக்கான்னு பார்த்து… கல்யாணம் செய்ய முப்பத்தியாறு வயசு ஆயிடுது. அவங்கள  கம்பெர்  செய்தா உனக்கு மூன்று வயது கடந்து இருக்கு… அவ்வளவு தானே…?”என்று சொன்ன கிஷோர் கூடுதலாய்…
“உனக்கு இதில் எதுவும் இல்லாததால் தான் இருபத்தியாறு வயதிலேயே பெண் தேவைன்னு இருந்த…” என்று அவன் அன்று சொன்ன போது முறைக்காத  முறைப்பை,  இன்று முறைத்து வைத்தான்.
“இப்போவும் எனக்கு தேவைப்படுது ஜீ..ஆனா இது தேவை பெண் மட்டும் இல்ல..எல்லாவற்றிற்க்கும்.” என்று சிக்கந்தர் சொன்ன  எல்லாவற்றிற்க்கும் என்ற வார்த்தைக்கு  மிக அழுத்தம் கொடுத்து சொன்னான்.
இப்போது கிஷோருக்கும் இது தான் தோன்றியது. இவனுக்கு ஒரு துணை கண்டிப்பாக தேவை. நமக்கு வேலை  வைக்காது அது தான் பார்க்க வேண்டிய மருத்துவரை பார்த்து…கேட்க வேண்டிய அனைத்தையும் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு விட்டாயிற்றே..
இனி என்ன ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட வேண்டியது தான் என்று நினைத்த கிஷோர் அதை…
“கண்டிப்பா நான் உனக்கு ஒரு நல்ல பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்டா…” என்று சிக்கந்தரிடம் சொன்னான்.
“பார்ப்பேனா கண்டிப்பா நீங்க தான் பார்த்து ஆகனும் ஜீ. இப்போ எனக்கு வேறு யார் இருக்கா…?காதல் செய்து கல்யாணம் செய்துக்க வேண்டிய காலம் எல்லாம் எனக்கு கடந்து விட்டது ஜீ…அதனால நீங்க தான் பார்த்து கட்டி வைத்தாகனும்.”என்று சிக்கந்தர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கிஷோருக்கு கைய் பேசியில் அழைப்பு வந்தது.
தன் கைய் பேசியில் வந்த எண்ணையே ஒரு நிமிடம் உற்று  பார்த்த கிஷோர் எப்போதும் போல் தனிமையில் பேச நினைத்து…
“இன்னைக்கு முழுவதும் நீ ஓய்வே எடுக்கல…கொஞ்சம் படுத்து ரெஸ்ட்…எடு…” என்று சொல்லிக்  கொண்டே அந்த இடத்தை விட்டு போக பார்த்த தன் ஜீயின் கை பிடித்து தடுத்து நிறுத்தவும், கிஷோரின் பேசியில் வந்த சத்தமும்  நிற்கவும் சரியாக இருந்தது.
தன் கைய் பேசியையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த கிஷோரிடம்… “என்ன ஜீ போன்ல யாரு…? ஒரு போன் கால் வந்தா மட்டும் உங்க முகமே ஒரு மாதிரியா மாறி போயிடுது. என்ன ஜீ பிரச்சனை…?
நான் மட்டும் எல்லாம் என் மனசு நினைக்கிறது கூட  உங்க கிட்ட சொல்றேன் ஜீ. ஏன் இன்னும் சொல்ல போனா  தனியா பார்க்க வேண்டிய மருத்துவரை  கூட உங்க கூட தானே ஜீ பார்த்தேன்.
எனக்கு பெண் தேவை என்று அந்த வயதில் பிரண்சுங்க கூட சொல்லாததை உங்க கிட்ட சொன்னேன். ஏன்னா நான் உங்களை வேறா நினைக்கள ஜீ..அப்போவும் சரி இப்போவும் சரி.” என்று  சிக்கந்தர் கிஷோரிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் கிஷோரின் கைய் பேசிக்கு அழைப்பு வந்தது.
இப்போது தன் கைய் பேசியை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லாது… பேச ஆராம்பித்தான். அதுவும் பக்கத்தில் இருப்பவரும் கேட்கும் படி கைய் பேசியை ஸ்பீக்கரில் போட்டவன்…
“சொல்லும்மா ஜமுனா…” என்று  கிஷோர் நலம் விசாரித்து கூட முடிக்கவில்லை.
“மாமய்யா எப்போ நம்ம ஊருக்கு விருவீங்க…” என்று கிஷோரால் ஜமுனா என்று அழைக்கப்பட்ட அந்த பெண் கேட்ட குரலில்  இருந்த அவசரமும், பயமும் சேர்ந்து ஒலிக்க..
“வந்துடுறேன் மா…சீக்கிரம் வந்துடுறேன்.” என்று கிஷோர் அந்த பெண் ஜமுனாவிடம் சொல்ல..
பேசியின் அந்த பக்கம் இருந்த ஜமுனா… “மாமய்யா உங்க ஸ்நேகிதுடுக்கு இன்னும் சரியாகலையா…?” என்று  அவள் கேட்பதிலேயே இன்னுமா சரியாகல என்ற ஆதாங்கமே மேலோங்கி காணப்பட்டது.
சிக்கந்தரை ஒரு தர்ம சங்கட பார்வை பார்த்துக் கொண்டே… “சரியாடுச்சிடா…இன்னும் ஒரு வாரத்தில் நான் அங்கு வரப்பார்க்கிறேன்.” என்று கிஷோர் சொன்னதும்…
பேசியின் அந்த பக்கத்தில் இருந்த அப்பெண்…  “ஒரு வாரம் ஆகுமா மாமய்யா…?” என்று அவள் இழுத்த இழுவையே சொன்னது. அங்கு ஏதோ அவளுக்கு பெரிய பிரச்சனை என்று…
கிஷோர் …”என்னம்மா அவங்க ரொம்ப பிரச்சனை பண்றாங்கலா…?” என்று கேட்டதற்க்கு…
அப்பெண் ஜமுனா… “அத்தம்மா வந்து இன்னும் பத்து நாள்ள உனக்கும் என் மகனுக்கும் கல்யாணம் என்று சொல்லிட்டு போயிட்டாங்க மாமய்யா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. மாமய்யா அதுக்குள்ள வந்துடுவீங்கலே…?” என்று கேட்ட அப்பெண் குரலில் ஏகாத்துக்கும் பயம் இருந்தது.
“ஜமுனா வந்துடுறேன் பயப்படாம இரும்மா..நீ பயந்தா தான் அவங்க இன்னும் ரொம்ப பண்ணுவாங்க..கட்டாயத்துல எல்லாம் கல்யாணம் செய்ய முடியாது. நான்  அங்கு இருக்கும் கலெக்டருக்கு போன் பண்றேன் பயப்படாதே….அவங்க உன்னை வந்து பார்ப்பாங்க.” என்று ஜமுனாவுக்கு தைரியம் சொன்னார் கிஷோர்.
“கலெக்டரா…”அந்த கலெக்டர் போனால் இன்னும் அப்பெண்ணின் பயம் கூடுமே ஒழிய குறையாது போல என்று இந்த பக்கத்தில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த சிக்கந்தர்  எண்ணினான்.
கிஷோரோ… “பயப்படாதே ஜமுனா..கலெக்டர் எனக்கு தெரிஞ்சவர் தான். ரொம்பவும் நல்லவர்.” என்று தைரியம் சொன்னவர்…
“நான் கண்டிப்பா வரப்பார்க்கிறேன்.” என்ற சொல்லோடு அணைத்து விட்டு யோசனையுடன் இருக்கும் கிஷோர் முகத்தை தன்னை பார்க்க வைத்த சிக்கந்தர்…
“சொல்லுங்க…” என்று சொன்னதும்…
கிஷோர்… “ஜமுனா என் அக்கா பெண்.” என்று சொன்னதும்…
“உங்க சொந்த ஊரில் உங்களுக்கு  ஒரு  அக்கா இருக்காங்க. அவங்க பெயர் கல்யாணி.  அவங்க கணவன் இறந்த   பிறகு கூட அவங்க அந்த ஊரை விட்டு வரமாட்டேங்குறாங்க. என்று சொல்லிட்டு இருப்பிங்களே அவங்களா…?” என்று தன் நியாபக அடுக்கில் இருந்தவைகளை  நினைவு கூர்ந்து சிக்கந்தர் கேட்டான்.
“ஆமாம்.அவங்களே தான்.” என்று சொன்ன கிஷோர்…
“இருந்தாங்க இப்போ இல்ல.” என்று கிஷோர் சொன்னதும்..
“ஓ…” என்றவன்….
“எப்போ ஜீ தவறினாங்க……?” என்று கேட்டதற்க்கு..அவன் குருஜீ சொன்ன….
“பத்து நாள் முன்.” என்ற வார்த்தையின் அமர்ந்து இருந்த சிக்கந்தர் எழுந்து நிற்க முயற்ச்சி செய்தான். ஆனால் முடியாது விழ பார்த்தவனை பிடித்துக் கொண்ட கிஷோர்…
“சிக்கந்தர் என்ன பண்ணுது உடம்புக்கு…உனக்கு ஒன்னும் இல்லையே…” அவன் முகத்தில் துளிர்த்த வியற்வையை துடைத்துக் கொன்டு பதட்டத்துடன் கேட்ட கிஷோர் கையை பிடித்துக் கொண்ட சிக்கந்தருக்கு அடுத்து என்ன வார்த்தை பேசுவது என்று தெரியாது அவன் முகத்தையே பார்த்திருந்தான்.
  

Advertisement