Advertisement

அது தான்  ஜமுனா நாளைக்கு சொல்றேன் என்று  சொல்லி இருக்காளே..அவ சொன்ன பிறகு அதை பற்றி பேசலாம். இப்போ சிக்கந்தரின் விசயத்துக்கு வருவோம் என்று  முடிவு செய்த நிஷா…
“நீங்க சிக்கந்தருக்கு அழகான பெண்களாய் தான் காட்டினேன். ஆனாலும் அவனுக்கு   பிடிக்க மாட்டேங்குதுன்னு சொல்றிங்களே..அழகான பெண் என்றால்..அவங்களுடைய  வயசு என்ன….?” என்று நிஷா கிஷோரிடம் கேட்டாள்.
“ எதுக்கு கேட்குற….?” என்று கிஷோர் நிஷா கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது  அவன் ஒரு கேள்வி கேட்க…
“ஏன்..?எதுக்கு…? என்று நீங்க கேட்கும் கேள்விக்கு அப்புறம் பதில் சொல்றேன்..முதல்ல நீங்க காட்டிய பெண்களின் வயது என்ன….?” என்று  நிஷா திரும்பவும் அதே கேட்க..
கிஷோர் யோசனையுடன்… “ முப்பத்தி மூன்றிலிருந்து முப்பத்தி ஐந்துக்குள் இருக்கும் பெண்களை தான் காட்டினேன்… இப்போ இந்த கேள்வி எதற்க்கு….?” கிஷோரும் இந்த கேள்வி ஏன்..எனக்கு இதன் விடை தெரிந்தாக வேண்டும் என்பது போல்  அதிலேயே இருந்தான். 
“அங்கே தான் நீங்க தப்பு பண்ணி இருக்கிங்க..சிக்கந்தருக்கு  காட்டிய பெண்கள் அனைவரும் அழகா இருந்தும் மறுக்க காரணம் சிக்கந்தர் கண்ணுக்கு நீங்க காட்டிய பெண்கள் அனைவரையும் பார்த்தால்  வயது தன்னோட கூட போல் தெரிந்து இருக்கிறது.” என்று நிஷா சொல்லவும்…
“ஏய் இப்போ கிஷோருக்கு வயது முப்பத்தி ஒன்பது அவனுக்கு இந்த வயதுடைய பெண்ணை  தானே பார்க்க முடியும்… நீ என்ன இப்படி லூசு போல பேசுற…” என்று  கிஷோர் தன் மனைவியை கடிந்துக் கொண்டான்.
“நான் லூசு போல பேசல…நீங்க  இந்த வயதுடைய  பெண்ணை எத்தனை பெண் பார்த்தாலும், அது எவ்வளவு அழகானவாவங்களா இருந்தாலும் கூட.. சிக்கந்தருக்கு அவங்கல பார்த்தா…சிக்கந்தர் சொன்ன அந்த ப்ளீங் வராது.” என்று நிஷா திரும்ப திரும்ப அதையே அழுத்தம் திருத்தமாய் சொல்லவும்..கிஷோர் இப்போது யோசித்தான்.
“எதை வெச்சி நீ அப்படி சொல்ற….?” என்று கிஷோர் நிஷாவிடம் கேட்கவும்..
“ஆ இது கேள்வி…” என்று சொல்லவும்..கிஷோர்… “முதல்ல நீ சொன்னதுக்கு உண்டான காரணத்தை சொல்லு…” என்று கிஷோர் கடிந்துக் கொண்டான்.
அவனை பொறுத்த வரை  சீக்கிரம் சிக்கந்தருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று இந்த மூன்று மாதமாய் முனைந்துக் கொண்டு தான் இருக்கிறான்.
ஆனால் சிக்கந்தர் எந்த பெண்ணை காட்டினாலும் காரணமே சொல்லாது வேணாம் வேணாம் என்று  சொன்னால் அவனும் என்ன தான் செய்வான்…?
நிஷா என்ன என்றால் வயது கூட என்பது போல் சொல்கிறாள்..ஏன் அப்படி சொல்றேன் என்று  கேட்டா ரொம்ப தான் பண்றா… என்று நினைத்து கடிந்துக் கொண்டான்.
நிஷா கணவனின் மனநிலையை அறிந்தவளாய்.. “சரி சரி என் டாலி கோச்சிக்க  வேண்டாம்.” என்று கிஷோரை சமாதானப்படுத்தி விட்டு..
சிக்கந்தர் கிஷோர் காட்டிய பெண்களை மறுப்பதற்க்குண்டான காரணத்தை சொன்னாள்…
“சிக்கந்தருக்கு அந்த விபத்து நடந்து கோமாவில் விழும்  போது அவன் வயது இருபத்தியாறு.. அவன் கோமாவில் இருந்து எழும் போது முப்பத்திஒன்பது.” என்று நிஷா சொல்லவும்…
“இது தான் அனைவருக்கும் தெரியுமே…” என்று கிஷோர் ஏக கடுப்பாகி சொல்ல…
“இருங்க அவசரபடாதிங்க.. இப்போ உங்க வயசு நாப்பத்தியாறு..தூங்கி எழுந்ததும்..உங்க வயசு ஐம்பத்தி ஒன்பது என்று சொன்னா அதை உங்க மனசு ஏத்துக்குமா….?” என்ற நிஷாவின் கேள்வியில் கிஷோர் தன் மனைவியின் முகத்தை கூர்ந்து பார்க்க..
“ஆமாங்க உங்க சிக்கந்தர் இப்போ அந்த நிலையில் தான் இருக்கார். விபத்து நடந்த அந்த வயதில் தான் அவர் மனது இருக்கு… அதான் அன்னைக்கு  அந்த சுப்ரியாவ பார்த்ததும் ஒரு  கல்யாண பெண்ணா அவனுக்கு தோனல…
நீங்க அவன் நினைவில் இருந்து யோசிச்சி பாருங்க..இளமையும் துடிப்பும் இருக்க இருபத்தியாறு ஆண்மகன்..அதுவும் அப்போ அவனுக்கு  பேன்ஸ் வேற அவ்வளவு..எல்லாம் சின்ன சின்ன பெண்கள் அவனை சுற்றி சுத்திட்டே இருப்பாங்க..
ஒரு நாள் திடிர் என்று ஒரு நாள் படுத்துட்டான்..மீண்டும் எழுந்து பார்த்தா நீ படுத்து பதிமூன்று வருடம் ஆகுதுடா… இப்போ உனக்கு இருபத்தியாறு வயசு இல்ல..முப்பத்திஒன்பது வயசுன்னு நாம சொல்வதை அவன் அறிவு வேணா ஏத்துக்கலாம்..ஆனால் அவன் இளமையான மனது அதை ஏத்துக்க தயாராய் இல்ல..
அவன் அறிவுக்கும் மனசுக்கு இடையே தள்ளாடிட்டு இருக்கான்…” என்று நிஷா சிக்கந்தரின் நிலையை தெள்ள தெளிவாக விளக்கினாள்.
அவள் பேச பேச தான் கிஷோருக்கும் ஆமாம் என்பது போல் தோன்றியது. அதுவும் தான் காட்டிய பெண்களின் அழகை பாராது.. ஏதோ பார்த்து விட்டு அவன் மனது ஏற்காதது போல் திரும்பவும் தான் காட்டிய  கைய் பேசியை தன்னிடம் அவன் கொடுத்ததை இப்போது  நினைத்தால்..
ஆனாலும்.. என்று யோசித்த  கிஷோர்… “அப்போ அவனுக்கு இருபதில் பெண் பார்க்க சொல்றியா….?” என்று கேட்டான்.
“உங்க கிஷோருக்கு  கல்யாணம் ஆக வேண்டும் என்று நினைத்தால்..பாருங்க.” என்று சொல்லி விட்டு விளக்கை அணைத்தவளாய் படுத்து விட்டாள்.
ஆனால் நம் கிஷோர் தான் விடிய விடிய இதையே யோசனை செய்தவன்..பின் ஒரு முடிவுக்கு வந்தான்..அது அவன் மனதுக்கு ஏத்த மாதிரியே பெண் பார்த்தால் தான் என்ன…?
நாம் எதையும் மறைத்து பெண் தேட வேண்டாம்,..அனைத்தும் சொல்லியே பெண் தேடலாம். பெண்ணுக்கு பிடித்தால் பண்ணலாம்..இதில் என்ன தப்பு இருக்கு…?” என்று முடிவு செய்த கிஷோர் அந்த பெண் தன் அக்கா மகள் தான் என்று இருந்தால்..அவனின் இந்த முடிவு என்ன ஆகும்….?
இங்கு இவர்களின் இந்த உரையாடல் நடந்துக் கொண்டு இருக்கும்    அதே சமயத்தில் ஜமுனாவும் சிக்கந்தரை அழைத்து இருந்தாள்….
ஜமுனா அழைத்த உடன் ஒரே ரிங்கில் எடுத்து விட்ட சிக்கந்தர்… “என்ன ஜாமூன் சாப்பிட்டியா….?” என்று கேட்டான்.
‘இதை கேட்க தான் போன போட சொன்னாரா….?’ என்று மனதில் வைதவள்..
“ஆ அது எல்லாம் நல்லாவே சாப்பிட்டேன்.”
நாம எதுக்கு போன போட்டா இவர் என்ன கேட்கிறார் என்ற ஏக கடுப்பில் இது போல் பதில் அளித்தாள் ஜமுனா,..
“என்ன ஜாமூன் அவங்க ஊருக்கு ஏத்த மாதிரி ரொம்ப  கோபமா இருக்கா போல…” என்று  சிக்கந்தர் கேட்டதில்..
“இப்போ நான் சாப்பிட்டேனா..இல்லையா…?இல்ல நான் கோபமா இருக்கேன்னா…?இல்லையா…? இது தெரிஞ்சிக்க தான் என்னை போன போட  சொன்னிங்கலா….?”  என்று மிக உரிமையுடன் ஜமுனா சிக்கந்தரிடம் கேட்டாள்.
அதை கேட்ட அழைப்பின் அந்த பக்கம் இருந்த சிக்கந்தரின் பேசியின் மூலம்..அவனின் வெடி சிரிப்பு கேட்க…
“சிரிக்க வேண்டாம்..நீங்க ஒன்னும் சிரிக்க வேண்டாம். நான்   ரொம்ப கோபமா இருக்க..அப்புறம் நான் போனை வெச்சிடுவேன்.” என்ற அவள் பேச்சில் எங்கு போனை வைத்து விடுவாளோ என்ற  பயத்தில்  சிக்கந்தர்…
“ஏய் ஜாமூன் வெச்சிடாதே…” என்று  சொன்ன சிக்கந்தர் பின்…மிக சீரியசான குரலில்..
“உன்னுடைய இந்த உரிமையான அதட்டல் எனக்கு எவ்வளவு பிடிச்சி இருக்கு தெரியுமா ஜாமூன்..இது போல தான்  என் டாட் என் கிட்ட பேசுவாரு..
அப்புறம் என் ஜீ…இப்போ நீ…ஜீக்கு தனியா குடும்பம் இருக்கு ஜாமூன் இப்போவும் அவர் என் பின்னாடி சுத்துறது எனக்கு அவ்வளவா விருப்பம் இல்ல..
என்னால அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்[போவும் பாதிக்க கூடாது. நான் தனியா இருந்தா கண்டிப்பா அவருக்கு என் நினை[ப்பா தான் இருக்கும்.. அவர் காட்டிய பெண்களை எனக்கு பிடிக்கவே இல்ல…”
சிக்கந்தரி இந்த பேச்சுக்கு மட்டும் ஜமுனா… “ஏன் ஜீ..?” என்று கேட்டாள்.
அதற்க்கு சிக்கந்தர்… “இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியல ஜாமூன்..ஆனா என் மனசுல இருக்குறத சொல்றேன். ஜீ காட்டும் பெண்களை பர்த்தா என்னோட வயசு கூடுனாப்போலவே இருக்கு..அவங்கல பார்த்த உடன் எனக்கு என் அக்கா போல அப்படி தான் மனசுக்கு சட்டுன்னு தோனுது..
நீயே சொல் ஜாமூன்..படுத்து எழுந்த உடன் நீ படுத்தே உன் பதிமூன்று வருடத்தை கடந்துட்ட இப்போ உனக்கு வயசு முப்பத்திஒன்பதுனா…?எப்படி இருக்கும்…ஜாமூன்…?” என்ற சிக்கந்தரின் கேள்வியில்..
ஜமுனாவின் உதடு தன்னால்… “அது மிக கொடுமையா தான் இருக்கும் ஜீ.” என்று ஜமுனா பதில் அளித்தாள்.
“அதே நிலமையில் தான் நான் இருக்கேன் ஜாமூன்…உன்னை பார்த்தா மட்டும் தான் என் இளமை எனக்கு திரும்புவது போல இருக்கு… என் இளமையை மீட்டு எடுக்க உன்னை எனக்கு தருவாயா ஜாமூன்.” என்று  தன் விருப்பத்தை சிக்கந்தர் எந்த ஒளிவு மறைவும் இல்லாது நேரிடையாகவே கேட்டு விட்டான்.
ஜமுனாவும்…  “வருவேன்..” என்று அவன் போலவே நேரிடையாக பதில் அளித்த்தில்..
சிக்கந்தர் தான்… “ஜாமூன்…” என்று  திக்கி திணறி பின் ஒரு வழியாக…
“ஜாமூன் நல்லா  யோசிச்சிக்க..எனக்கும் உனக்கும் பதினைந்து வயது வித்தியாசம்…இன்னும் ஐந்து வருடம் கழிந்து எனக்கு சுகர் வரலாம்.
நான் பார்க்க வயதானவனாய் ஆகலாம்… இருபது வருடம் சென்று நான் தாம்பத்திய வாழ்க்கைக்கு லாயிக்கு  இல்லாதவனாய் கூட ஆகலாம்…” என்று அடுத்து அடுத்து சிக்கந்தர் இன்னும் என்ன சொல்லி இருப்பானோ…
“ஜீ ஜீ..நீங்க லாம்..லாம் என்று தொடர்ந்து சொல்லிட்டு வர்றது எனக்கும் கூட ஆகலாம்..அதாவது சுகர்.. பின் எக்ஸ் எக்ஸ்..இது எல்லாம் இப்போ வயசு பார்த்து வர்றது இல்ல ஜீ…” என்று ஜமுனா தன்  முடிவில் நிலையாக இருக்க..
சிக்கந்தர் தான் திரும்பவும்… “பக்கா தானே…” என்று திரும்பவும் கேட்கவும்..
ஜமுனா ஏக கடுப்பில்… “ஓ அப்போ அய்யா சும்மா டைம் பாசுக்கு பழகலாமுன்னு நொனச்சிட்டு இருந்திங்களா..காருல அப்படி இப்படின்னு தொட்டுட்டு இப்போ யோசி அது இதுன்னு சொல்லிட்டு இருக்கிங்க… “ என்ற ஜமுனாவின் பேச்சில்..
“ஜாமூன் எனக்கு இப்படி அப்படி இப்படி மட்டும் இல்ல..எப்படி எப்படி எல்லாமோ இருக்க எனக்கு ஆசையா இருக்கு.. அதுவும் உன் கிட்ட மட்டுமே… என் இளமை உன்னை பார்த்தால் மட்டும் தான் நான் உணர்றேன் ஜாமூன்..நாளைக்கே நான் உன் மாமய்யாவிடம் நம் விசத்தை பற்றி பேசுறேன்.” என்ற அந்த உறுதி  மொழியோடு..
காதலர்களுக்கே உண்டான சில  அந்தரங்க வார்த்தைகள் பேசிக் கொண்டு அவர்களின் அந்த இரவு விடிந்தது..
இரவு விடிந்து விட்டது…சிக்கந்தரின் வாழ்க்கையும் விடிய அவனின் ஜீ அவனுக்கு சாதகமான பதிலை தருவாரா…?
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
 
 

Advertisement