Advertisement

அத்தியாயம்….19
சிக்கந்தரும்  தன் மாமய்யாவும் பேசிக் கொண்டு இருந்ததை, ஜமுனா  ஒரு  வித பயத்தோடு தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். சிக்கந்தர் தன் ஜீயிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், இடை இடையே ஜனுமாவை பார்வையிடுவதையும்  மறக்கவில்லை.
‘ஏன இவ..இப்படி முழிச்சிட்டு இருக்கா…?’ என்று நினைத்தவன்..இப்படி முழுக்காதே என்று  ஜமுனாவிடம்  கண்ணால் ஜாடை காட்டினான் சிக்கந்தர்.
பாவம் சிக்கந்தரின் ஜாடையை புரிந்துக் மொள்ள முடியாத ஜமுனா… “என்ன ஜீ…?” என்று தெளிவாக தன் சந்தேகத்தை சிக்கந்தரிடம் கேட்டாள்.
அப்போது தான் கிஷோர் என்ன என்பது போல் ஜமுனாவையும், சிக்கந்தரையும் மாறி மாறி  பார்க்க..; கடவுளே கவனிக்காதவரையும் கவனிக்க வெச்சிடுவா போலவே…’ என்று மனதில் நினைத்தவன்.
“இல்ல ஏதாவது சந்தேகம்னா போன் பண்ணு…என் நம்பர் தெரியும் லே…அப்போ  போன் பண்ணு…” என்று சிக்கந்தர் போன் பண்ணு என்று சொல்லும் போது, அதில் அழுத்தத்தை  கூட்டி தான் சொன்னான்.
அதாவது போன் பண்ணு என்பதை சிக்கந்தர் இப்படி சொல்ல … ஜமுனாவும் பதிலுக்கு … “சரி…” என்ப்து போல் தான் நன்றாக தலையாட்டினாள்.ஆனால் அதை அவள் புரிந்துக் கொண்டு தலையாட்டினாளா…?புரியாது சந்தேகம் என்பது புரிந்து தலையாட்டினாளா…?என்பது அவள் போன் செய்யும் போது தான் தனக்கு தெரியும் என்பதை புரிந்துக் கொண்ட சிக்கந்தர்..
இன்னும் இங்கு இருந்தா இவ இப்படி முழி முழிச்சே காட்டி  கொடுத்துடுவா..இங்கு இருந்து போகலாம் என்று  முடிவு செய்தவனாய்…
“சரி ஜீ நான் கிளம்புறேன்.” என்று  வீட்டின் வெளியில் நின்றுக் கொண்டே போக பார்த்தவனை கிஷோர்… “என்னடா வெளியில் இருந்து அப்படியே போற.. உதை வாங்க போற…வீட்டுக்குள் வந்து சாப்பிட்டு போ…” என்று  கிஷோர்  சிக்கந்தருக்கு  சாப்பிட அழைப்பு விடுக்கும் போது நேரம் ஏழை தான் தொட்டு இருந்தது.
“இல்ல ஜீ அவசராம ஒரு மெயில் பார்க்க வேண்டி இருக்கு..அதுக்கு ரிப்ளேவும் செய்யனும்..கொஞ்சம் ஒர்க் இருக்கு  ஜீ புரிஞ்சிக்குகோங்க…” என்று சிக்கந்தர் சொன்னதும்..
கிஷோர் … “அதான் நான் ஜமுனாவுக்கு கார் பழக ஆள வைக்கிறேன்னு சொன்னேன்..இப்போ பாரு ஆர அமர உட்கார்ந்து சாப்பிட  கூட முடியாது ஓடுற…” என்று  கிஷோர் உரிமையுடன் கடிந்து கொண்டான்.
கிஷோர் இப்படி பேசவும் ஜமுனா ஒரு விதமான பார்வையை தன் மாமய்யாவிடம் செலுத்தியவள்… முடிவில் சிக்கந்தரை பார்த்து ஏக்கப்பார்வையை செலுத்தி விட்டு தலை குனிந்துக் கொண்டாள்.
சிக்கந்தருக்கு பேச்சு கிஷோரிடம் இருந்தாலும் அவ்வப்போது ஜமுனாவிடமும் படிந்து படிந்து மீள்வதால் அவளின் அந்த பார்வையை புரிந்துக் கொண்டவனாய்…
‘என் பங்காரு…நான்  உன் பாவா அப்படி வேறு யாரையும் உன்னிடம் பழக விட்டு விட மாட்டேன் ஜாமூன்.’ என்று மனதில்  சொல்லிக் கொண்டவனாய்..
“எனக்கும் ஒரு ரிலேக்சேக்ஷன் வேணும் ஜீ..சும்மா ஆபிஸ் ஒர்க்கே பார்த்துட்டு இருந்தா…என்னவோ தலை வலிக்கிறது போல இருக்கு.” என்று சிக்கந்தர் கிஷோரிடம் சொன்னான்.
அந்த பாசக்கார கிஷோரோ..சிக்கந்தர் சொன்ன அந்த தலை வலியை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொண்டு..எப்போதும் போல… “என்ன சிக்கந்தர் தலை வலிக்குதுன்னு சொல்ற…இந்த தலை வலி எப்போவாவது வருதா…?இல்ல அடிக்கடி வருதா…?உண்மைய சொல்…எனக்கு சொல்லு  ஏதாவது என் கிட்ட இருந்து மறைக்கிறியா….?” என்று  வார்த்தைகள் கட கட என்று கொட்ட.. .
கிஷோர் கண்கள் சிக்கந்தரின் உடலை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு முழுவதும்  வலம் வந்தது.
சிக்கந்தருக்கே தன் ஜீயின் இந்த பதட்டம்..தன் மீது இருக்கும் அன்பு இதை நினைத்து நாம் செய்வது தவறோ…? என்று நினைத்து அவன் மனசாட்சி குத்தியது.
ஆனால் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவை பார்த்ததும்… எனக்கு பிடித்த பெண் இவளாய் இருக்கும் போது வேறு நான் என்ன செய்வது…?
அதுவும் இல்லாது நான் என் ஜீயிடம் எப்[போது மறைக்க போவது இல்லையே..இதோ ஜாமூனிடம் ஒன்றுக்கு இரண்டு தடவை பேசி தெளிவு  படுத்திக் கொண்டு..தன்னிடம்  அவளின் இந்த பிடித்ததும் எது வரை…?
அதாவது எந்த அளவுக்கு தன் மீது அவளுக்கு விருப்பம் இருக்கு என்று தெரிந்ததும், இதை தன் ஜீயிடம் தானே சொல்ல போகிறேன்..
அவர் எனக்கு பெண் பார்க்கிறேன் என்று சொன்னார்….. என்ன தான் அவர் பெண் பார்த்தாலும், என் மனதுக்கு பிடித்து இருந்தால் தானே நான் அவளை கல்யாணம் செயுதுக்க முடியும்…
என் மனதுக்கு பிடித்த பெண் உங்க அக்கா மகள் தான் என்று  சொன்னால் தனக்கு கொடுக்காமலா போய் விடுவார் என்று நினைத்துக் கொண்டவன்..
கிஷோரின் இந்த பாசத்தில் ரொம்ப நேரம் கடத்திட கூடாது தன் ஜீயிடம் சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தவனாய்…
கிஷோரின் பதட்டத்தை குறைக்கும் வகையில்…  “ஜீ நான் தலை வலின்னு சொல்றது ரொம்ப நேரம் வேலை  பார்த்தா தான் சொன்னேன். அது எல்லோருக்கும் வருவது தானே ஜீ.. அதனால என்னை பத்தி மட்டுமே யோசிக்காது மற்றவங்க பத்தியும் யோசிங்க ஜீ… என்று  சொன்ன சிக்கந்தரின் தோளில் கை போட்ட கிஷோர்…
“உனக்கு பிடித்த பெண்ணை கல்யாண்ம் செய்து கொடுத்து விட்டா அப்புறம் நான் ஏன்டா உன்னை பத்தி யோசிக்க போறேன்..அடுத்து என் கவனம் ஜமுனா தான்..அவளுக்கும் இருபத்தை ஐந்து ஆகி விட்டது.
இங்கு இந்த வயது அவ்வளவு பெரிய வயசு எல்லாம் இல்ல…ஆனா அவ ஊருல இத்தனை வயசு வரை யாரும் கல்யாணம் செய்யாம வீட்ல வெச்சிக்கிட்டு இருக்க மாட்டாங்க…உனக்கு அடுத்து நான் அவளை பார்க்கனும்டா…” என்று  சொன்ன கிஷோரை கட்டி அணைத்த சிக்கந்தர்,…
“எல்லாம் நல்ல படியா முடியும் ஜீ.” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். சிக்கந்தரின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அவன் ஜீ சொன்ன..உன் மனதுக்கு பிடித்த பெண்ணை கட்டி வைப்பேன் என்ற அந்த வார்த்தையே…
கிஷோர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டே இவ்வளவு மகிழ்ச்சி அடையும் சிக்கந்தர்… அவனுக்கு பிடித்த பெண்ணையே அவனுக்கு திருமணம் முடித்து கொடுத்தால்…
“சரி ஜீ நான் கிளம்புறேன்…” என்று  தன் ஜீயிடம் விடைப்பெற்ற சிக்கந்தர்…
ஜமுனாவிடம்…. “சரி ஜாமூன் கிளம்புறேன்…அப்புறம் இது வரை கம்பியூட்டரில் என்ன என்ன சொல்லி கொடுத்தாங்கன்னு நையிட் எனக்கு போன் பண்ணி சொல்லு…” என்று சொன்னதும்..
பயத்துடன் தன் மாமய்யாவை பார்த்துக் கொன்டே… “சரி ஜீ…” என்று சொன்னாள்.
சிக்கந்தர் அங்கு இருந்து கிளம்பியதும் கிஷோர் ஜமுனாவின் பயத்தை வேறு மாதிரியாக புரிந்துக் கொண்டவராய்… “என்ன  ஜமுனா அவன் கார் ஓட்ட கத்துக் கொடுக்கும் போது ஏதாவது சத்தம் போட்டானா…?
அப்படி போட்டு இருந்தா அதை நினச்சி பயப்பட  தேவையில்லம்மா… அவன் கோபம் எல்லாம் கொஞ்சம் நேரம் தான்.. அதுவும் அவன் யாரிடம் அன்பா இருக்கானோ அவங்க கிட்ட மட்டும் தான் அவன் கோபத்தை காட்டுவான்.
அவன் எப்போவும் அவன் அப்பாவிடம் இது போல் உரிமையுடன் பழகுவான்..அப்புறம் என்னிடமும் உன் அட்டம்மாவிடமும் பேசுவான்..இப்போ நீ அப்புறம் சித்தார்த்திடம் இது போல் பேசுறான்…அவன் ரொம்ப நல்லவன்ம்மா…” என்று  தன்னிடம் சொல்லும் தன் மாமய்யாவிடம் இப்போதே சொல்லி விடலாமா….
“எனக்கு அந்த ரொம்ப நல்லவனை ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்குன்னு….” என்று  அவள்  நினைக்கும் போதே… தன் மாமய்யா  “என்னம்மா  புரியுதா…?” என்று கேட்டதற்க்கு…
“புரியுது…” என்பது போல் தலையாட்டி வைத்தாள்.
ஜமுனாவுக்கு சிக்கந்தரின் மீதான இந்த பிடித்தம் இன்று தான் வந்தது. ஆனால் அதை உடனே வீட்டில் சொல்லி விட வேண்டும் என்று  அவள் மனது அவளிடம் சொல்லிக் கொண்டே இருந்தது.
அது என்னவோ தன் மாமய்யாவுக்கு தெரியாது இது செய்வது ஏதோ அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போல் இருந்தது.தன்னிடம் அவர் காட்டும் அன்பு பாசம் இதை பார்த்து அவளுக்கு ஏதோ போல் இருந்தது.
சரி இவராவது தன் தாய் மாமா தன்னிடம் பாசமாக இருக்கிறார்.ஆனால் அட்டம்மா… அவங்களும் என்னிடம் எவ்வளவு பாசமா இருக்காங்க… அவர்களிடம் இருந்து சிக்கந்தரின் விசயம் மறைப்பது தவறல்லவோ..
இப்படி அவள் தனக்குள் பல விதமாக நினைத்துக் கொன்டு இருக்க..அவள் மனதின் அந்த சிந்தனைகள் தொடர்ந்து இரவு உணவு உண்ணும் போதும் தொடர..
அவளின் சிந்தனையான அந்த முகத்தை பார்த்த நிஷா தான்… “என்ன ஜமுனா என்னவோ போல் இருக்க….” என்று  கேட்டாள்.
ஜமுனா சொன்ன…” ஒன்றும் இல்ல அட்டம்மா…” என்ற பதிலை நம்ப  முடியாது…
“உன் மனசுல என்ன இருக்குன்னு நீ சொன்னா தான் எங்களுக்கு புரியும் ஜமுனா..எது இருந்தாலும் நேரிடையா சொல்வது தான் மனதுக்கும் நல்லது…உடம்புக்கும் நல்லது.” என்ற நிஷாவின்  பேச்சில்..
அதுவும்… “உறவுக்கும் நல்லது….” என்ற வார்த்தையில் உடனே சொல்லி விடலாம் என்று தான் ஜமுனா நினைத்தாள்.
உடனே எதற்க்கும் இன்று இரவு சிக்கந்தரிடம் பேசி விட்டே சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவள் தன் அட்டாமாவுக்கு பதில் கொடுக்காது இருந்து விட்டாள்.
“ஜமுனா யாரு எப்படி பார்த்துக்கிடாலும்  அம்மா பார்ப்பது போல வராது. அது எனக்கும் புரியும்..இதே உன் அம்மாவா இருந்தா கண்டிப்பா உனக்கு என்ன பிரச்சனைன்னு  நீ அவங்க  கிட்ட சொல்லாமலேயே அவங்க புரிஞ்சிட்டு இருப்பாங்க…
ஆனாலும் நான் உன்னை சித்தார்த்  போல தான் பார்க்கிறேன்… இப்போ நீ சொல்லாமல் உன் மனசு புரியாம இருக்கலாம்..ஆனா போக போக உன்னை நானும் புரிஞ்சிப்பேன் ஜமுனா..அது வரை என்ன இருந்தாலும் நீ என்னிடம் சொல்லலாம்.” என்று நிஷா சொன்னதும்..
ஜமுனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வர… “ஜமுனா என்னடா என்னடா….?” என்று  நிஷா  பதறி போய்  ஜமுனாவிடம் விசாரித்தாள்.
“இல்ல அட்டம்மா..ஒன்னும் இல்ல…நான் உங்க கிட்ட சொல்லுவேன் அட்டம்மா நான் இன்னைக்கு இல்ல நாளைக்கு கண்டிப்பா சொல்றேன்..இதை நான் உங்க கிட்ட சொல்லாமல் இருப்பது ரொம்ப தப்பு அட்டமா கண்டிப்பா சொல்லிடறேன்…
ஆனால் இன்னைக்கு என்னால சொல்ல முடியாது. இதை பத்தி சொல்லனு முன்னா இன்னொருத்தர் அனுமதி வேண்டும்.” என்று ஜமுனா   சொல்லி விட்டு அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டாள்.
ஜமுனா சொன்ன அந்த இன்னொருத்தர் அனுமதி என்ற வார்த்தையில்..இது காதல் சம்மந்தப்பட்டது என்று சரியாக புரிந்துக் கொண்ட நிஷா…
‘ஊரில் விரும்பி இருக்கா..அது யாருன்னு கேட்டு அவனுக்கே இவளை கட்டி வைக்கனும்…ஆனால் அந்த பையனை இங்கு வர வழைத்து விடனும்..அந்த ஊரில் இவளோட அத்தைய நம்பி விட முடியாது.”என்று தனக்கு  தானே  ஏதேதோ முடிவு செய்தவளாய் தன் அறைக்கு சென்றாள்.
கிஷோரின் யோசனை படிந்த முகத்தை பார்த்த நிஷா… ஜமுனாவை மறந்தவளாய் …”என்ன கிஷோர்  என்ன பிரச்சனை…?”  என்று கேட்டுக் மொண்டே கிஷோரை தன் மடி சாய்த்துக் கொண்ட நிஷாவின்  கைய் பற்றிய கிஷோர்…
“எல்லாம்  நம்ம சிக்கந்தர் பற்றி தான் டாலி…அவனுக்கு சரியா ஆகி நான்கு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனா ஒரு பெண் கூட அவனுக்கு  பிடிக்க மாட்டேங்குது.
எந்த பெண்ணை காட்டினாலும், அவன் தனக்கு வரப்போற பெண் என்ற  பார்வையில் பார்க்காது ஏதே தானோ என்று  தான் பார்க்கிறான்..
நான் என்ன என்று கேட்டாலும்,… “ சாரி ஜீ எனக்கு என்னவோ இவங்கல பார்த்தா அந்த மாதிரி ப்ளீங் வரலேன்னு” சொல்றான்…
இன்னும் கேட்டா நான் காட்டுற பெண்கள் எல்லாம் பார்க்க அவ்வளவு  அழகானவங்க… அவங்கல அவாய்ட் பண்ண காரணமே இல்ல… இவன்  மனசுல அப்படி என்ன தான் வெச்சிட்டு இருக்கான்னே எனக்கு தெரியல..
கல்யாண விசயத்துல கன்வின்ஸ் பண்ண கூடாது. அப்படி பண்ணா வாழ்க்கை முழுவதும் அவங்க வாழ்க்கை கன்வீன்ஸ்ல தான் போகும். அதான் அவன் வேண்டாம் என்று  சொன்னதும் நான் அடுத்து வேறு எதுவும் கேட்கல..
ஆனா அவனுக்கு சீக்கிரம்  ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கனும்…அவனுக்கு அடுத்து ஜமுனாவுக்கு பார்க்கனும்..அவளும் நம்ம பொறுப்பு தானே டாலி…” என்று கிஷோர் சொன்னதும்..அதுவும் ஜமுனாவை பற்றிய பேச்சில்  அவள்  சொன்ன நாளைக்கு சொல்றேன் என்ற வார்த்தை நினைவில் வந்து…
‘அதை இவர் கிட்ட சொல்லலாமா…?’ என்று  யோசித்த நிஷா பின் இவர் ஏற்கனவே சிக்கந்தர் விசயத்தை நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார்.
இதில்  ஜமுனா யாரையோ விரும்புறா என்று நாம் நினைப்பதை சொன்னால் .அது யார் ….? என்று அதை நினைத்து வேறு இவரின் கவலை இன்னும்  கூடும்.

Advertisement