Advertisement

அத்தியாயம்…18
வீட்டை நோக்கி கார் பயணித்துக் கொண்டு இருந்தது. இப்போது ஓட்டுனர் இருக்கையில் சிக்கந்தரும் பக்கத்தில் ஜமுனாவும் அமர்ந்து இருந்தனர். கார் மிதமான வேகத்தில் தான் சென்று கொண்டு இருந்தது.
போக்கு வரத்தும் அதிகம் இல்லை. இது போல் இருந்தால் சிக்கந்தரின் வேகம் குறைந்தது நூறை தொட்டு விடும். ஆனால் இப்போது  சிக்கந்தர் மித வேகத்தில் செலுத்த காரணம்…ஜமுனா ஏதாவது பேச மாட்டாளா….?என்று  தான்.
அந்த நெருக்கம் இருவருக்கும் ஒரு வித அவஸ்த்தையை கொடுத்து இருந்தது என்பது தான் நிஜம்.. சிக்கந்தருக்கு ஜமுனா மீது கொஞ்ச நாளாகவே  பிடிப்பு தான்.
ஆனால் ஜமுனாவுக்கு அந்த நெருக்கத்தில் கொடுத்த அந்த உணர்வு..அவளை பெண் என்று உணர செய்த அந்த நெருக்கம்…முதலில் சிக்கந்தரின் அந்த நெருக்கத்தில் ஜமுனாவின் உணர்வுகள் கட்டவிழ்ந்து விட்டது என்று தான் சொன்ன வேண்டும்..
அதன் விளைவு தானே சிக்கந்தரின் தோள் மீது தலையை வைத்து சாய்த்துக் கொண்டதை. இப்போது நினைத்தால் நான் எப்படி அப்படி செய்தேன்….? என்று அவள்  மனது அடித்துக் கொண்டது.
அதுவும் தன் அம்மா எப்போதும் சொல்லும்.. “இது ஆம்பிளை இல்லாத வீடு..நாம தான் பார்த்து நடந்துக்கனும்..அது போல் ஒரு ஆண் பார்வை தன் மீது தப்பா விழும் படி நம் செயலும் இருக்க கூடாது பேச்சும் இருக்க கூடாது. 
அப்படி ஏதாவது நடந்தா தட்டி கேட்க கூட  நம் வீட்டில் ஆண்கள் இல்லை..உன் மாமய்யா கூப்பிட்டா வரும் தூரத்தில் இல்லை. நீ  தான் பார்த்து நடந்துக்கனும்..யாரும் என் வளர்ப்பை தப்பா பேச கூடாது.”
எப்போது  அவள் பெரிய மனிஷி ஆனாளோ அப்போவிலிருந்து தன் தாய் தனக்கு சொன்ன அந்த வார்த்தைகள் என்ன ஆனது..? அம்மா ;போனதும் அவர்கள் சொல்லிக் கொடுத்த ஒழுக்கமும் என்னை விட்டு போய் விட்டதா…?நான் எப்படி…?அதுவும் நானே அவர் தோள் சாய்ந்தேன்..நினைக்க நினைக்க..அவளுக்கு அவமானமாக இருந்தது என்பதை விட..
ஒன்று நான் பாதை மாறி போகிறேனா…?இங்கு வந்ததில் இருந்து நான் பார்க்கும் காட்சி…கேட்கும் வார்த்தைகள் எல்லாமும் சேர்ந்து..இது எல்லாம் ஒன்றும் இல்லை என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி விட்டதோ… என்று யோசித்தவளின் மனம் இன்னொன்றையும் நினைத்து வருந்தியது.
ஜீ என்னை பற்றி என்ன நினைப்பார்….? அதை நினைக்க நினைக்க அவள் மனம் அவமானத்தில் துடித்தது…தோள் சாய்ந்த தன்னை எதுவும் செய்யாது தன் தலை முடியை மட்டும் தடவி கொடுத்து விட்டு…
சிக்கந்தர் “போகலாமா….?” என்று  கேட்கும் போது தானே நான் நானே  வெளி வந்தேன்…
சட்டென்று எழுந்து அவர் முகம் பார்த்த போது ஜீயின் முகத்தில் தெரிந்தது என்ன….?நீ இது போல் பெண்ணா…?என்று யோசித்து தன்னை பார்த்தாரா…?இல்லை சின்ன பெண் குழந்தை போல்…
ஆ அப்படி மட்டும் ஜீ தன்னை நினைக்கவும் கூடாது.தன்னை தப்பான பெண் என்பது வேறு ஒரு வகையில் போய் விடும்..ஆனால் தன்னை குழந்தை போல் தடவி கொடுத்தார் என்றால்..
இல்லை..இல்லை…அப்படி மட்டும் இருக்க கூடாது. ஏன் என்றால் நான்  அப்படி நினைத்து அவர் தோள் சாயவில்லை. என் மனதும் சரி… என் உணர்வும் சரி இந்த தீண்டலை அது போல் உணரவில்லை. இந்த உணர்வு வேறு ஒன்று…அது அது..அடுத்து அவள் அதை பற்றி சிந்திக்க கூட பயமாக இருந்தது..
முதலில் சிக்கந்தர் என்னை தவறாய் நினைக்க கூடாது…அடுத்து எனக்கு வந்த இந்த உணர்வு அவருக்கு வந்ததா..?வந்தது என்று தான் அவர் முகம் சொல்கிறது..ஆனால் அதை என்ன மாதிரி அவர் எடுத்துக் கொள்கிறார் அது தான் அவளுக்கு பயமாக இருக்கிறது.
இனி அடுத்து இவை அனைத்தும் யோசித்த படி வந்ததால்..ஜமுனா வாய் திறக்காமல் இருக்க..சிக்கந்தருக்கோ நன்றாக தானே போனது..இப்போது ஏன் இந்த மெளனம் என்பது போல் ஜமுனா முகத்தை பார்ப்பதும்.. சாலையை பார்ப்பது மாக காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.
என்ன தான் மெதுவாக காரை ஓட்டினாலும் அவர்கள் சேர  வேண்டிய இடம் வந்து தானே ஆகும்…கிஷோர் வீட்டின் முன் காரை நிறுத்தியவன் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தான்.
ஜமுனாவும் எதுவும் பேசாது தன் கையில் உள்ள  விரல்கள் நீவி விட்ட வாறு தலை  குனிந்து இருந்தவளை பார்த்துக் கொண்டு இருந்தானே ஒழிய..
“வீடு வந்து விட்டது.” என்று சிக்கந்தரும் சொல்ல வில்லை.ஜமுனாவும் கார் நின்றும் கூட இறங்க வில்லை. இறங்க முயற்ச்சிக்கவும் இல்லை.  அமைதியாக இருந்தாள்.
சிக்கந்தருக்கு தெரிந்து விட்ட்து இனி நான் தான் பேச வேண்டும்..ஆனால் பேசியாக வேண்டும்..இது வரை தராசின் தட்டு போல் ஏற்ற இறக்கமுமாய் ஜமுனாவை பற்றி அவன் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தவன்..
முதலி தெரியாத அந்த ஸ்பரிசத்தில் பாதி வீழ்ந்தான் என்றால்.. தெரிந்த ஜமுனா தன் தோள் சாய்ந்ததில்  மொத்தமாய் வீழ்ந்து போனான்..இனி ஜமுனா எனக்கு தான்..
ஜமுனாவை  பர்றியும் தன் ஜீயைய் பர்றியும் யோசித்தே இது சரியா வருமா…?வராதா….? என்று இரு தலை கொள்ளி போல் தத்தளித்துக் கொண்டு இருந்தவனின்  மனம்.
எப்போது ஜமுனா தன் தோள் சாய்ந்தாளோ..அவள் மனதில் என் மீது விருப்பம் இருக்கிறது. இனி ஜீ மட்டும் தான்..என் ஜீக்கு நான் நல்லா இருக்க வேண்டும்..அதே போல் அவர் அக்கா மகளும் நன்றாக இருக்க வேன்டும்..
“உங்க அக்கா மகளை திருமணம் செய்தா தான் நான் நல்லா இருப்பேன்.” என்று  ஜீயிடம் ஜமுனாவை கேட்டால் தனக்கு கொடுக்காமலா இருந்து விடுவார்.
அதே போல் ஜமுனாவும் அவள் மாமய்யாவிடம்.. “எனக்கு என் ஜீ தான் வேன்டும்.” என்று சொன்னால்..கண்டிப்பாக அவர் வேறு எதுவும் பார்க்க மாட்டார்.
ஆனால் அதற்க்கு ஜமுனாவிடம் பேசி தெளிவு படுத்திக்  படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன்..எப்படி  பேச்சை ஆராம்பிப்பது என்று  யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாய்..
ஆராய்சி செய்துக் கொன்டு இருந்த அவள் விரல்களை  சிக்கந்தர் பற்றிக் கொண்டு அவள் முகத்தை பார்த்தான். அவன் எதிர் பார்த்தது போல் சிக்கந்தர் தன் கை பிடித்ததும் சட்டென்று  திரும்பி சிக்கந்தர் முகத்தை ஜமுனா  பார்த்தாள்.
பார்த்தவளின் முகத்தில் கோபமோ..அருவெறுப்பே இல்லாததே சிக்கந்தருக்கு மகிழ்ச்சியை அளித்தது.பேச்சை முதலில் சாதரணமாக கொண்டு செல்வது போல்…..
“என்ன ஜாமூன் ஸ்டேரிங்கை பிடிச்சி பிடிச்சி விரல் நோவு எடுத்துட்டுச்சா…..?” என்று  சிக்கந்தர் கேட்டுக் கொண்டே அவள் செய்த விரலை நீவி விட்டதை இப்போது சிக்கந்தர் செய்தான்.
ஜமுனா இதை எதில் சேர்த்துக் கொள்வது..?இங்கு தான் எல்லாம் சகஜமா இருக்கே..அது போல் தன்னை  என்று அவள் அதற்க்கு மேல் தன்  எண்ணத்தை அதில் கொண்டு செல்லாது..
‘சேச்சே என் ஜீ என்னை எப்போதும் அப்படி நினைக்க மாட்டார். அப்படி நினைக்க மாட்டார்.’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொன்டாளே ஒழிய பார்த்த விழி பார்த்த படி அவனை பார்த்துக் கொண்டு இருந்தாளே ஒழிய ஜமுனா வாய் திறந்து பேசவில்லை.
திடிர் என்று  சிக்கந்தர்… “பிடிக்கவில்லையா….?” என்று  கேட்டான்.
ஜமுனா உடனே… எதற்க்கு ஏன் எது என்று  கூட யோசிக்காது.
“அய்யோ அப்படி எல்லாம் இல்லை.” என்று சொன்னவளின் உடனடி பதிலில் சிக்கந்தருக்கு மகிழ்ச்சி..என்பது சிறிய வார்த்தை… மிக மிக சந்தோஷமாக உணர்ந்தான்.
இருந்தும் அவனுக்கு முழுவதும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.. கிஷோரிடம் எதுவும் தெளிவு இல்லாது..ஜமுனாவுக்கு என்னை பிடிக்கும் என்று  நினைக்கிறேன்..வெக்கப்படுறா…?இதை எல்லாம் வைத்துக் கொண்டு தன் ஜீயிடம் பேச முடியாது.
தெளிவாக தெரிந்தால் தான் அடுத்து நான் அவரிடம் தைரியமாக பேச முடியும்..கேட்க முடியும்… என்ற முடிவோடு  “ஜாமூன்…” என்று சிக்கந்தர் பேச்சை ஆராம்பிக்கவும் காரின் கண்ணாடி தட்டப்படவும் சரியாக இருந்த்து.
கண்ணாடி வழியாக தட்டியது கிஷோர் என்று தெரிந்ததும், சிக்கந்தர்  ஜமுனாவின் முகத்தை தான் பார்த்தான். ஜமுனா முகத்தில் தெரிந்த பதட்டமும் பயமுமே சிக்கந்தருக்கு ஜமுனாவின் மனதை புரிந்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.
கள்ளம் இருக்கும் இடத்தில் தான் இந்த பயமும் பதட்டமும் இருக்கும்..இவள் தன்னை சாதரணமாக நினைத்திருந்தால் இப்படி பயந்து இருக்க மாட்டாள் பதட்டமும் பட்டு இருக்க மாட்டாள்.
முதலில் எல்லாம் இவள் தன்னை சாதரணமாக அவள் மாமய்யா எதிரிலேயே தொட்டு பேசி இருக்கிறாள் தானே… அப்போது எல்லாம் இது போல் அவள் முகம் மாறியது இல்லையே..ஏன் என்றால் அப்போது அவள் மனம் நிர்மலமாக இருந்தது..
இன்று  அந்த மனதில் தான் இருக்கிறேன்.அதனால் தான் இப்படி என்று அவளின் செயலை நினைத்து அவள் மனதை புரிந்துக் கொண்டாலுமே அவனுக்கு இது மட்டும் போதுமானதாய் இல்லை. 
இப்போது எதுவும் பேச முடியாது.ஆனால் பேசியாக வேண்டும். இவன் ஒரு முடிவுக்கு வரும் முன்னவே கிஷோர் மீண்டும்  மீண்டும் கண்ணாடியை தட்டி விட்டான்.
ஜமுனாவின் பயந்த முகத்தில் என்ன கண்டானோ அவளை சேர்த்தணைத்து… “பயப்படாதே ஒண்ணும் இல்ல.” என்று சிக்கந்தர் சொன்னதும் அவள் பயந்த முகம் ஆச்சரிய முகமாய் மாறி கண்கள் விரித்து அவள் பார்த்த  பார்வையில்..
“சோ க்யூட்…”என்று கொஞ்சியவன் திரும்பவும் கிஷோர் தட்டலில்…
“உன் மாமய்யா விட மாட்டார் போல பங்காரு.” என்று  திரும்பவும் கொஞ்சியவன்..
ஜமுனாவிடம்… “அதிர்ச்சிய குறை அதிர்ச்சிய குறை.” என்று சொல்லிக் கொண்டே…காரின்  கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினான்.
சிக்கந்தர் இறங்கியதும் ஜமுனாவும் தன்னால் இந்த பக்கத்தில் இருந்த காரின் கதவை திறந்துக் கொண்டு இறங்கி என்ன பேசுவது என்று  முழித்துக் கொண்டு இருக்க…இதை பார்த்த சிக்கந்தர் இவ முழிச்சே என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் காட்டி கொடுத்துடுவா போலவே..என்று நினைத்துக் கொண்டவனாய்.
தன் ஜீ ஜமுனாவை கவனிக்கும் முன் …”என்ன ஜீ….?” என்று சிக்கந்தர் கேட்டான்.
“அது தான்டா நான் கேட்குறேன்..என்னடா….?” என்று சிக்கந்தர் கேட்ட கேள்வியே கிஷோர் திரும்பவும் சிக்கந்தரிடம் கேட்டு வைத்தான். அதை கேட்ட ஜமுனாவுக்கு இன்னும் பயமாகி விட்டது… 
சிக்கந்தருக்கு தான்…’அய்யோ இவ இப்படி முழிச்சே..காதலை உணர்ந்த அன்றே அதுக்கு சமாதியும் கட்டிடுவா போலவே..என்று’  சிக்கர்ந்தர் தான் … “என்ன ஜீ…” என்று தன்னை சாதரணமாக காட்டிக் கொண்டு கேட்டான்.
“என்னடா என்ன என்ன என்று  கேட்டுட்டு ..கார் வந்து நின்று அரை மணி நேரமாயிடுச்சி..சரி வருவீங்க வருவீங்கன்னு பார்த்துட்டு இருந்தா வர வழி காணும்.
சரி இங்கு வந்து கண்ணாடி தட்டி தட்டி பார்த்தாலும், வராத இல்ல..என்ன டா….?” தான் கேட்ட என்ன என்பதற்க்கு கிஷோர் தன் நீண்ட விளக்கத்தை கொடுத்து விட்டான்.  சிக்கந்தர் தான் சொன்ன என்னத்திற்க்கு என்ன சொல்ல போறானோ…?
“அதுவா ஜீ..உங்க அக்கா கூத்துருக்கு க்ளாஸ் நடத்திட்டு இருந்தேன்…” என்று சிக்கந்தர் சொன்னதும்..
“ஏன்டா கொஞ்சம் சொதப்புறாளா…?” என்று ஜமுனாவை பார்த்துக் கொண்டே சிக்கந்தரிடம் மெதுவாக கிஷோர் கேட்டான்.
“சீ..சீ..அது எல்லாம் இல்ல எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு.” என்ற சிக்கந்தரின் பதிலில்..
“நல்லவா….?” என்று  குழம்பி போய் கேட்டான்.
“கார் நல்லா போயிட்டு இருந்ததை தான் அப்படி சொன்னேன் ஜீ.” என்று சிக்கந்தர் சமாளித்து விட..
“ஓ ஒரே நாள்ள கார் நல்லா ஓட்டினாளா….?” என்று சந்தேகத்துடன் கேட்ட கிஷோர் தொடர்ந்து… “கம்பியூட்டர் க்ளாஸ் சரியா புரியல..மத்தவங்களுக்கு உடனே புரியுது எனக்கு புரியலேன்னு வருத்தப்பட்டா சிக்கந்தர்..உனக்கு நேரம் இருந்தா..கொஞ்சம் அதையும் அவளுக்கு சொல்லி கொடேன்.” என்று சொன்ன கிஷோர்..
உடனே… “ வேண்டாம் வேண்டாம்..அடுத்த மாதம் கார் லான்ச் செய்வதில் நீயே பிசியா இருக்க உன்னை போய் வேண்டாம் ஜமுனா பொறுமையாவே கத்துக்கட்டும்.” என்று கிஷோர் சொன்னதும்…
“பரவாயில்ல ஜீ நானே தினம் இரண்டு மணி நேரம் வர்றேன்..ஒரு மணி நேரம் கார்.. ஒரு மணி நேரம் கம்பியூட்டர்…” என்று கிஷோரிடம் சொன்ன சிக்கந்தர் மனதில்..
;இப்போ எனக்கு கார் லான்சோடோ வாரிசு லான்ச் தான் முக்கியது…அதன் முதல் படி அவள் காதலை அவளுக்கு புரிய வைக்க வேண்டும்..அடுத்து  கல்யாணம் அடுத்து..அப்பா…’ என்று அவன் மனதில் திட்டம் வகுக்க தொடங்கி விட்டான்.அவன் திட்டம் ஜெயிக்குமா…? பார்க்கலாம்.
  

Advertisement