Advertisement

அத்தியாயம்….17
நிஷா திரும்பவும் சிக்கந்தருக்கு பேசியில் அழைப்பு விடுத்து…  “மாலையில் சீக்கிரம் வா…உனக்கு பிடித்த கட்லெட் செய்து வைக்கிறேன்.” என்று சொன்னதற்க்கு… சிக்கந்தர் மனதில்…
‘எனக்கு இப்போ எல்லாம் கட்லெட்டோட ஜாமூன் தான் ரொம்ப பிடித்து இருக்கு..அதனால நீங்க சீக்கிரம் வா என்று சொல்ல வில்லை என்றாலும் சீக்கிரம் வந்து விடுவேன்.  என்று நினைத்தவன்…
வெளியில் நிஷாவிடம்… “கண்டிப்பா பாபி..நீங்க கூப்பிட்டு நான் வராமல் இருதுடுவேன்னா…” என்று சிக்கந்தர் மிக பவ்யமாக சொன்னான்.
சிக்கந்தரின் உள்குத்து தெரியாத நம் நிஷாவோ…. “சிக்கந்தர்ன்னா சிக்கந்தர் தான்…இதை எக்லாம் நீ ஏன் உன் ஜீக்கு சொல்லி கொடுக்க கூடாது…உனக்கு முன்ன அவருக்கு தான் போன் போட்டு நானே என் கைய்யால்ல கட்லெட் செஞ்சி வைக்கிறேன்..சாப்பிட வாங்கன்னு சொன்னதற்க்கு…
நீ செஞ்ச அந்த கட்லெட்டுக்காக கோடி கணக்கில் இருக்கும் வியாபரத்தை விட்டு வர சொல்றியா…?லூசு தனமா பேசாம போன வைய்ன்னு சொல்லிட்டாரு சிக்கந்தர்.” என்று நிஷா தன் கணவன் மேல் புகார் வாசித்தாள்.
அதற்க்கு சிக்கந்தர்… “ஜீ அப்படியா சொன்னார்….?” என்று அதிர்ந்து போய் கேட்பது போல் கேட்ட சிக்கந்தர் பின்… “ஆனா இதை நீங்க லவ் பண்றப்ப போன் பண்ணி கூப்பிட்டு இருந்தா என்ன செய்து இருப்பார் பாபி…” என்று  கேட்டதற்க்கு…
நிஷா… “அதானே… அப்போ எல்லாம் நான் கடிச்சி வெச்ச ஒரு பப்பரா மிட்டாய்க்காக  ஓடி வந்து இருக்கார் சிக்கந்தர்.” என்று நிஷா வெள்ளந்தியாக சொன்னாள்.
“அதான் பாபி…க..மு க.பி…இது தான் நிதர்ச்சனம்.” என்று சிக்கந்தர் சொன்னது பாதி புரிந்தும்… பாதி புரியாதும் இரண்டு கட்டானாக … “ஆமாம்.” என்று நிஷா பேசியை வைத்து விட்டாள்.
நிஷா பேசியதை நினைத்துக் கொண்டே கிளம்பியவன் வழியில் சித்தார்த்துக்கு பிடித்த ஸ்வீட்டை வாங்கியவன்..ஜமுனாவுக்கு பிடித்த கார வகைகளை கடையில் என்ன  என்ன இருந்ததோ அனைத்தையும் அள்ளிக் கொண்டு காரை எடுக்கும் போது..
அந்த கடையின் வெளியில் விற்றுக் கொண்டு இருந்த சிகப்பு ரோஜா கொத்துக்களை பார்த்து… ‘இதை எப்போது உன்னிடம் தைரியமாக கொடுக்க போகிறேன்னு தெரியல..இப்போதைக்கு என்னால உனக்கு இதை தான் வாங்கி கொடுக்க முடிகிறது.’ என்று தன் கையில் இருந்த கார வகைகளை பார்த்து எண்ணிக் கொண்டான்.
கிஷோர் வீட்டுக்கு சென்றதும் தான்  வாங்கி வந்தவைகளை நிஷாவிடம் கொடுத்து விட்டு… “சித்தார்த்  எங்கே பாபி….?” என்று கேட்டு வீட்டை சுற்றி பார்த்தான்.
நிஷா சிக்கந்தர் தன் மகனை தான் தேடுகிறான் என்று தவறாக புரிந்துக் கொண்டு… “வீட்டுக்கு ஒருத்தர் வந்தா..வாங்கன்னு கூப்பிட கூட அந்த கம்பூட்டரை விட்டு வர்றது கிடையாது. இரு சிக்கந்தர் நான் போய் கூப்பிடறேன்.” என்று தன் மகனை அழைத்து வர போக பார்த்தவளை…
“என்ன பாபி நான் என்ன விருந்தாளியா..வான்னு கூப்பிட்டா தான் வர்றதுக்கு…சித்தார்த் விளையாடட்டும் பாபி…என்ன ஒண்ணு  படிப்பு பாதிக்காம பார்த்துக்கோங்க….” என்று சிக்கந்தர் சொன்னதும்..
சரி என்பது போல் சிக்கந்தர் வாங்கி வந்ததை உள்ளே வைக்க எடுத்தவள் அதில் இருக்கும் கார வகைகளை பார்த்து… “என்ன சிக்கந்தர் எதுக்கு இவ்வளவு வாங்கிட்டு வந்த..அதுவும் கார வகையிலேயே இவ்வளவு… இங்கு யார் காரத்தை சாப்பிடுவா…? ஜமுனாவுக்கு மட்டும்  தான்  இங்கு காரம் பிடிக்கும்..அவள் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு….?” என்று கேட்ட நிஷா கூடவே..
“தேவைக்கு எடுத்து வைத்துக் கொண்டு மிச்சத்தை சாந்திக்கு தான் கொடுக்கனும்.” என்று சொல்லிக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு போன நிஷாவிடம்…
“யாருக்கு கொடுக்கும் முன் ஜமுனா கிட்ட கேட்டுட்டே கொடுங்க பாபி..அவளுக்கு காரம் என்றால் பச்சை மிளகாய கூட விட்டு வைக்க மாட்டா..அதான்.” என்று சிக்கந்தர் சொன்னதற்க்கு…
“வீட்டு ஆளுங்களுக்கு இல்லாம வேலைக்காரங்களுக்கு எடுத்து கொடுக்க மாட்டேன் சிக்கந்தர்..முதல்ல ஜமுனாவுக்கு எது எது  வேண்டும் என்று கேட்டுட்டு தான் கொடுப்பேன்.” என்று சொல்லி நிஷா செல்லவும் தான் சிக்கந்தருக்கு அப்பாடா என்றானது.
பின் என்ன போன வாரம் ஜமுனாவின் பிறந்த நாள் அன்று வெளியில் சென்ற  போது பேச்சு வாக்கில் அவள் சொன்ன… “இங்கு எல்லாம் நல்லா இருக்கு..ஆனா சாப்பாடு தான் எனக்கு பிடிக்கல ஜீ.” என்று ஜமுனா சொன்னதற்க்கு…
சிக்கந்தர்.. “ஏன் சாந்தி நல்லா சமைக்கிறது இல்லையா….?அப்படி இல்லேன்னா நீ பாபி கிட்ட சொல்லு அவங்க சாந்தி கிட்ட சொல்வாங்க..இல்லேன்னா வேறு சமையல்காரம்மாவை மாத்திடலாம்.” என்று சொன்னதற்க்கு..
ஜமுனா… “அய்யோ அவங்க நல்லா  தான் சமைக்கிறாங்க… எனக்கு தான் அது உப்பும்  இல்லாம காரமும் இல்லாம சல்லுன்னு இருக்கு.” என்று அவள் சொல்லும் போதே அவளின் முகம் அஷ்டகோணத்தில் சுழிக்க…
“நீயே அவங்க கிட்ட சொல்லலாம்லே…கொஞ்சம் காரம் போடுங்கான்னு.” என்று சிக்கந்தர் ஜமுனாவிடம் கேட்டான்.
“எதுக்கு….?எதுக்கு என்றேன்…?அன்னிக்கி நீங்க காரத்தால  துடிச்சிங்கலே அது போல மத்தவங்க கஷ்டப்படுவதற்க்கா…?வேண்டாம் நான் அட்ஜெஸ்ட் பண்ணிப்பேன். எனக்கு என்ன என்றால் சாப்பாடு தான் அப்படி சல்லுன்னு இருக்கு சாயங்காலம் சாப்பிட ஏதாவது கார சாரமா இருந்தா நல்லா இருக்கும்.” என்று அவள் சொல்லும் போதே சிக்கந்தர் முடிவு செய்து விட்டான்.
அடுத்த முறை செல்லும் போது காரத்தில் என்ன என்ன இருக்கோ அனைத்தையும் வாங்கி  விட வேண்டும் என்று… அது தான் அடுத்து ஜீ வீட்டுக்கு போகும் வரை ஜாமூனுக்கு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவனாய் தான் இத்தனை வாங்கி வந்தது.
அதை நான் வேலைக்காரிக்கு கொடுக்க போறேன் என்று நிஷா சொன்னதும் சிக்கந்தர் பயந்து விட்டான்..பின் அவள் ஜமுனா வெச்ச மிச்சத்தை தான் கொடுப்பேன் என்று  சொன்னதும் தான் சிக்கந்தருக்கு அப்பாடா என்றானது.
ஒரு வழியாய்…மனதில் எங்கே அவள்…?என்ற தேடலுக்கு முடிவாய் ஜமுனா தன்  அறையை விட்டு வெளியில் வந்தவள் சிக்கந்தரை  பார்த்து… “எப்போ ஜீ வந்திங்க….?” என்று கேட்டாள்.
அதற்க்கு சிக்கந்தர்… “அது நான் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆனது…நீங்க தான் ஆளே காணும்.” என்று சிக்கந்தர் குறைப்படுவது போல்  சொன்னான்.
அவனுக்கு ஆசையாக அவள் முகத்தையாவது பார்க்கலாம் என்று முக்கியமான வேலை எல்லாம் விட்டு விட்டு வந்தால்..இவள் தன் அறையை விட்டு கூட வெளியில் வர மாட்டேன் என்கிறாளே..என்ற ஆதாங்கத்தில்  தான் அப்படி சொன்னான்.
“சாரி ஜீ..நேத்து க்ளாஸை பத்தி திரும்பவும் கம்பியூட்டரில் பார்த்துட்டு இருந்தேன் ஜீ…எனக்கு மத்தவங்க போல ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க முடியல ஜீ..அடுத்த நாள் க்ளாசில் மத்த பசங்க நல்லா பண்றாங்க என்னால சரியா பண்ண  முடியல..அதான் திரும்ப திரும்ப அதையே படிச்சிட்டு இருந்தேன்.” என்று ஜமுனா சோகமாக சொல்லவும்..
சிக்கந்தருக்கு மற்றது எல்லாம் மறந்து போய்… “ஏய் ஜாமூன் இது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல… அவங்க ஒரே தடவையில அடுத்த நாள் தெரிஞ்சி இருக்கு. உனக்கு கொஞ்சம் அதிக நாள் தேவை பட்டு இருக்கு..அவ்வளவு தான்.”  என்று சிக்கந்தர் சொன்னான்
“நான் ஒன்னு சொல்லட்டுமா ஜாமூன்..எவ்வளவு சீக்கிரம் அவங்க கத்துக்கிட்டாங்களோ அவ்வளவு சீக்கிரம் அவங்க படிச்சது அவங்களுக்கு மறந்து போயிடும். ஆனா உனக்கு நீ படிச்சது அவ்வளவு சீக்கிரம் மறக்காது தெரியுமா….?” என்று  சிக்கந்தர் சொன்னதற்க்கு…
“அப்படியா….?” என்று கேட்டாள்.
“ஆமாம்…” என்ற அவன் பேச்சை நம்பியவளாய் சிரித்துக் கொண்டே…”அப்போன்னா சரி ஜீ…” என்று சொன்னாள்.
பின் இருவருக்கும் நிஷா கட்லெட் கொண்டு வந்து கொடுக்க/.. அதை உண்டதும் சிக்கந்தர்… “என்ன கார் கத்துக்கலாமா….?” என்று கேட்டான்.
அதற்க்கு ஜமுனா… “அட்டம்மா சொன்னாங்க..ஆனா உங்களுக்கு வேலை இருக்குமே ஜீ…” என்று தயங்கி நின்றவளை…
“அதெல்லாம் இல்ல ஜாமூன் நீ சிக்கிரம் கிளம்பி வா…” என்று  சொல்லி அவளை ஒரு வழியாக அனுப்பி வைத்து விட்டு  சிக்கந்தர் அப்பாடா என்று இருக்க…
நிஷா… “சீக்கிரம் கத்துக்கிட்டா சீக்கிரம் மறந்து போயிடுமா…? உண்மை….?இது எனக்கு தெரியாம போயிடுச்சே..சிக்கந்தர்” என்று கேலி செய்ய..
“பாபி அது உண்மையா..?இல்லையான்னு கேள்வி இல்ல…அவ சந்தோஷமா போனா பாருங்க அது தான் வேண்டும்.” என்று சிக்கந்தர் சொல்லும் போது நிஷா இதை தான் நினைத்துக் கொண்டாள்.
எல்லோரும் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கிறான்..இவன் மகிழ்ச்சியா இருக்க வேண்டும். அதற்க்கு இவனுக்கு எற்றது போல் ஒரு பெண்னை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவனின்  மகிழ்ச்சியே… தன் வீட்டில் வைத்துக் கொண்டு அவனுக்கு வெளியில் பெண் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் நிஷா…
“ஏய்…இது என்ன உன் வீட்டு உலக்கையா..? இப்படி போட்டு ஆட்டற..காரு…. கீர் பார்த்து போட வேண்டும்…ஜஸ்ட் இதை இப்படி செய்து முதல் கீர் போட வேண்டும் என்றால்..இதோ இது தான் முதல் கீர் அந்த பக்கம் இதை இப்படி லேசா செய்தா போதும்.” என்று ஒவ்வொன்றாய் பொறுமையாக முதலில் சொல்லி கொடுத்தான்.
ஜமுனா சொன்னது போல அவள் கொஞ்சம் இல்லை நிறையவே லேட் பிக்கப்பாக  தான்.. கீரை கைய்யாள வைப்பதற்க்கு அரை மணி நேரம் சென்று விட்டது..
பின் ஆள் இல்லாத சாலையில் வண்டியை கொண்டு வந்து நிறுத்திய சிக்கந்தர் ஓட்டுனர் இருக்கையில் அவளை அமர வைத்து விட்டு அவள் பக்கத்தில் தான் அமர்ந்தவன்.
“ம் நான் சொன்னனே கீர் இப்போ அதை போடு.” என்று சொல்லி விட்டு என்ன குழம்ப போறாளோ என்று தான் சிக்கந்தர் நினைத்திருந்தான்.
ஆனால் சிக்கந்தர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையாக முதல் செயல் முறையிலேயே சரியாக செய்து விட்டு.. ஏதோ பெரிய மெடல் வாங்கியது போல் ஜமுனா சிக்கந்தரை கெத்தாக ஒரு பார்வை பார்த்தாள்.
அவள் காரை ஒரு இன்ச் கூட நகர்த்தவில்லை. ஆனால் அந்த கீரை சரியாக போட்டதே அவளுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. 
அவள் பிறந்தது பக்கா  கிராம்ம்..அங்கு பெண்கள் கார் ஓட்டுவது அறிது என்ன ஒட்டவே மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் அம்மாவோடு எப்போவாவது டவுனுக்கு வரும் போது ஒரு சில பெண்கள் கார் ஓட்டுவதை பார்த்து இருக்கிறாள்..அவர்கள் என்னவோ மலையை பிரட்டி போட்டது போல் அதை அதிசயத்து பார்த்திருப்பாள்.
இன்று தானே காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அந்த கீரை கையில் பிடித்து முதல் கீரை போட்டதும் ஏதோ உலகத்தில் சாதித்த திருப்தி அவளுக்கு வந்தது.
சிக்கந்தரும் மகிழ்ந்து போய்… “வெரி குட் ஜாமூன்…நல்லா செய்த,.அதே போல் தான் அடுத்து அடுத்து…” என்று சொல்லி..
கார் ஓட்டும் போதே முதல் கீரில் இருந்து இரண்டாம் கீருக்கு போவது எப்படி…?பின் மூன்று பின் நான்கு..பின் நியூட் என்று சொல்லி கொடுத்தவன்,.
கார் வேகமாக போகும் போது க்ளச்சை காலில் பிடித்து தான் கீரை முதல் மோடுக்கு மாத்தனும் என்று மிக பொறுமையாக சொல்லி கொடுத்தவன்..
“ம்..ஓட்டு…” இது வரை தன் கையை ஸ்டேரிங்கில் வைத்து ஓட்டியவர்கள் இப்போது தன் கையை எடுத்து விட்டு… “ஓட்டு…” என்றதும்..
ஜமுனா முதலில் தயங்கினாலும் சிக்கந்தர் பார்த்த பார்வையில் மெல்ல மெல்ல  அவன் சொல்லி கொடுத்ததை திரும்பவும் மனதில் ஓட்டி பார்த்தவள்..
இப்போது  நம்பிக்கை வந்தவளாய்… “ம் ஓட்டுறேன்.” என்று தன் கையை கீரில் வைத்தாள்.
சிக்கந்தர்.. “வெரி குட்…” என்றதும்..
“அதை ஒட்டுனது பிறகு சொல்லுங்க.” என்ற ஜமுனாவின் பேச்சில் …
“பாருடா…” என்று சொல்லி சிரித்தான்.
ஜமுனா அதற்க்கும்… “பாருங்க..பாருங்க…” என்றதும்.. ‘அதை நீ சொல்லாமலேயே செய்வேன்டீ’ என்று நினைத்துக் கொண்டான்.
இப்படி சில பல பேச்சுக்கள் நடுவில் சிக்கந்தர் எதிர் பார்த்ததை விட ஜமுனா காரை நன்றாகவே  ஓட்டினாள். ஓட்டும் முனைப்பில் ஜமுனாவும் சிக்கந்தரும் மிக அருகில் அமர்ந்து இருவரின் உடலும் உரசும் அளவுக்கு நெருங்கி இருப்பதை இருவரும் கவனிக்கவில்லை.
“ஏய் இதை இப்படி சட்டுன்னு திருப்ப கூடாது.” என்று சிக்கந்தர் சொல்லிக் கொண்டே ஸ்டேரிங்கின் மீது கை எடுத்து சென்றவன்..ஸ்டேரிங்கை பிடிக்க ஜமுனாவின் இரு கை நடுவில் விட்டு தொட்டவன்..
“இதோ இப்படி…” என்று சொல்லிக் கொண்டே அவன் திருப்பியதில் அவன் கை தடங்கள் தன் மேனியின் மீது பட்ட இடத்தில்  ஏற்பட்ட அதிர்வலையில் சட்டென்று ஜமுனா சிக்கந்தரை பார்த்தாள்.
சிக்கந்தரும் அப்போது தான் தன் கை முட்டி பட்ட இடத்தின் ஸ்பரிசத்தில் அவனும் ஜமுனாவை திரும்பி பார்த்தான். இருவரின் கண்கள் ஒன்றோடு ஒன்று கலக்க இது வரை சிக்கந்தருக்கு மட்டும் தோன்றியது இப்போது ஜமுனாவுக்கும் தோன்றியதோ என்னவோ..
சிக்கந்தர் இது வரை ஜமுனாவின் முகத்தில் அறியாமை ..மகிழ்ச்சி..
கோபம்…துயரம். .. என்று பார்த்திருந்த அந்த முகத்தில் இப்போது தான் முதன்  முறையாக அவள் முகத்தில் வெட்கம் பார்க்கிறான்.
ஆம் அந்த உடல் தீண்டலோ//இல்லை சிக்கந்தரின் பார்வையில் தெரிந்த மெய் தீண்டலிலோ ஜமுனாவுக்கு  அந்த தொடுகையில் கோபமோ..அருவெறுப்போ வராது வெட்கம் வந்தது.

Advertisement