Advertisement

அத்தியாயம்…16 
மும்பையில் இருக்கும் அந்த பெரிய மாலின் முன் காரை நிறுத்திய நிஷா அனைவரையும் பார்த்து…. “காபி ஷாப்பில் வெயிட் பண்ணுங்க…நான் கார் பார்க்க பண்ணிட்டு வர்றேன்.” என்று சொன்னதும் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள்.
கிஷோர் சித்தார்த்தின் கைய் பற்றிக் கொண்டு சிக்கந்தரை பார்த்தான்..அவனின் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து…. “சிக்கந்தர் என்ன யோசனை…?” என்று கேட்டதற்க்கு…
“ஒண்ணும் இல்ல ஜீ…” என்று தன் நினைவில் இருந்து வெளி வந்த சிக்கந்தர் மனதோ…நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்..இன்று உனக்கு பிடித்த உன் ஜீ குடும்பம் அதோடு ஜாமூனோடு வந்து இருக்க..
இந்த நேரத்தை அனுபவி..என்று அவன் மனது எடுத்திரைக்க…மற்றதை எல்லாம் மறந்தவனாய்  ஜமுனா என்ன செய்கிறாள் என்று  அவளை திரும்பி பார்த்தான்.
அவன் எதிர் பார்த்தது போலவே…ஏதோ வெளிநாட்டுக்கு வந்தது போல் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தவளை…. “என்ன ஜாமூன் பாக்குற….?” என்று சிக்கந்தர் கேட்டான்.
“இல்ல ஜீ எவ்வளவு பெரிய தியேட்டர்..அதான் அதிசயமா இருக்கு…” என்று அவள் கண்கள் விரித்து சொன்ன அழகில் சொக்கி போனவனாய் அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டே…
“இங்கு தியேட்டர் மட்டும் இல்ல ஜாமூன்..இங்கு எல்லாம் இருக்கும்…” என்று சொன்ன சிக்கந்தர்..
“ஆமாம் உங்க ஊரில் கூட நான் மால் பார்த்தேன்னே. என்ன உங்க ஊரில் இருந்து கொஞ்ச தூரம் போகனும்… அது கொஞ்சம் சின்ன அளவில் இருக்கும்..இது அதோடு பெருசு அவ்வளவு தான்.” என்று சிக்கந்தர் ஜமுனாவிடம் சொன்னான்.
அதற்க்கு ஜமுனா… “ஆமாம் எங்க ஊர் டவுனில் கூட இது போல் இருக்கு..ஆனா நான் அங்கு போனது இல்லையே… ஆனா என் பிரண்சுங்க எல்லாம் போய் இருக்காங்க..ஆனா நான் மட்டும் தான் அங்கு போகல…”என்று ஜமுனா சொன்ன பாவனையில்..
முடிந்தால் இன்றே அவளை  அழைத்துக் கொண்டு ஒரு வேல்ட் டூர் போனால் என்ன என்று ஆசை வந்தது…. தன் ஆசையை அவளிடம் சொல்லவில்லை இருந்தாலும்..தன்னால் முடிந்த அளவுக்கு அவளை வெளியில் அழைத்துசெல்ல வேண்டும்… என்று நினைத்துக் கொண்ட சிக்கந்தர்..
ஜமுனா என்ன என்ன ஆசைப்படுகிறாளோ…அவளை நான் மணம் முடிப்பேனோ இல்லையோ அது வேறு விசயம்…ஆனால் அவள் விருப்பங்களை நாம் நிறை வேற்றி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கிஷோர் தான்… “என்ன இங்கயே நின்னுட்டிங்க வா போகலாம்..அப்புறம் நிஷா நமக்கு முன்ன  நமக்காக காத்திட்டு இருக்க போறா….” என்று சொன்னதற்க்கு…
“உங்க டாலி கொஞ்ச நேரம் வெயிட் செய்யிறதாலே ஒண்ணும் குறஞ்சிட மாட்டாங்க….” என்று சிக்கந்தர் கிஷோரை கேலி செய்தான்.
“உனக்கு இது பத்தி இப்போ தெரியாது…உனக்குன்னு ஒருத்தி வந்தா அப்போ தெரியும்..இந்த ஐந்து நிமிடம் அவள காத்திருக்க வைத்தால் ஐந்த நாள்….” என்று சொன்னவன்..
கண் அடித்து… “தனியா தான்.” என்று கிஷோர் சொன்ன விதத்தில் சிக்கந்தருக்கு சிரிப்பு வந்தாலும்..அதையும் தான்டி..இது போல் நமக்கும் ஒரு மிகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையுமா….? என்று அவன் மனம் ஏங்கியது.
ஒரு பெரும் மூச்சுடன் சிக்கந்தர் ஜமுனாவை பார்த்தான்..ஜமுனாவோ அந்த மால் பற்றிய தன் சந்தேகத்தை  சித்தார்த்திடம் கேட்டு தெளிவுப்படுத்திக்  கொண்டவளுக்கு   இன்னும் தன் வியப்பு மாறாது… அந்த மாலில் உள் அழகை ரசித்து பார்த்துக்  கொண்டு தான் வந்தாள்.
ஜமுனாவை பார்க்க பார்க்க சிக்கந்தருக்கு ஆசை அதிகமானதோடு..இவளுக்கு அது போல் எந்த எண்ணமும் இல்லை போலவே..இருந்து இருந்தால் ஒர விழிப்பார்வையாவது தன்னை நோக்கி பார்த்து இருப்பாளே… என்று நினைத்துக் கொண்ட  சிக்கந்தருக்கு இது தான் தோன்றியது..
பதிமூன்று வருடம் முன் எத்தனை பெண்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டு இருப்ப…எத்தனை பெண்கள் உன் மீது விழுந்து பழக நினைத்தார்கள் அவர்களை எல்லாம் ஒரு மனிஷியாவது நீ அவர்களுக்கு மதிப்பு கொடுத்தாயா…? அது தான் இப்போ அதுக்கும் சேர்த்து அனுபவிக்கிற… என்று அவன் மனசாட்சி  அவனை எள்ளி நகையாடியது…
திரும்பவும் ஜமுனா பக்கம் தன் பார்வையை கொண்டு போன சிக்கந்தர்  ஜமுனா ஏதோ மும்மூரமாய்  சித்தார்த்திடம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சிக்கந்தருக்கு மீண்டும் ஒரு பெரும் மூச்சு வந்து போனது.
சிக்கந்தரின் இந்த செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த கிஷோருக்கோ..தான் சொன்ன உனக்கு ஒரு மனைவி வந்தால் தெரியும் என்ற அந்த வார்த்தையில் சிக்கந்தர் ஜமுனா பக்கம் பார்வை திருப்பியதை பார்த்த கிஷோர்…
ஜமுனாவோடு வந்த தன் மகனை தான் பார்த்து அவன் பெரும் மூச்சு விடுகிறான் என்று தவறாய் புரிந்துக் கொண்டவன்… இன்னும் அவனுக்கு தீவிரமாக பெண் தேட வேண்டும் என்று முடிவுக்கு வந்தவர்கள்…
முதலில் காபி ஷாப்பில் காபி அருந்தி விட்டு..பின் அங்கு இருக்கும் மாலில் ஜமுனாவுக்கு உடை எடுத்தார்கள்..அவன் மாமய்யா ஒரு பக்கம் ஜமுனாவுக்கு உடை எடுத்தான் என்றால்..நிஷா அதற்க்கு தோதாக காலாணி…கம்பல்..ஹான் பேக் என்று அதற்க்கு மேச்சாக எடுத்து வைத்தாள்.
சிக்கந்தரோ ஜமுனாவை அழைத்துக் கொண்டு சுற்றியவன்..அவள்  கண்கள்  எது எது மீது எல்லாம் ஆசையாக படிகிறதோ..அதை எல்லாம் வாங்கி குவித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
பின் முடிவில்  நிஷா  அணிந்தது போல் ஒரு உடையை எடுத்து   அதற்க்கு உண்டான பணத்தை செலுத்தியவன்… பின் அவளிடம் நீட்டி…
“அங்கு ட்ரையல் ரூம் இருக்கு போய் இதை போட்டுட்டு வா.” என்று சொன்னான்.
பாதி ஆசையும்..மீதி தயக்கமுமாய்… “எனக்கு இது நல்லா இருக்குமா….?” என்று ஜமுனா கேட்டதற்க்கு..
முதலில் சொன்ன பதிலையே திரும்பவும் சொன்னான்… “போட்டு பார்த்தால் தானே தெரியும்.” என்று…
ஒரு எதிர் பார்ப்போடு அந்த உடையை எடுத்துக் கொண்டு பெண்கள் ஆடையை உடுத்திப் பார்க்கும் அறைக்குள் நுழைந்தாள்.  ஜமுனாவோடு வெளியில் நின்றுக் கொண்டு இருந்த சிக்கந்தர் அவளை விட  ஆவளோடு ஆடை சரி பார்க்கும் அறையின் வெளியில் காத்திருந்தவன்…
அவள் அந்த உடை உடுத்தி வந்ததை பார்த்ததும், முதலில் விட்ட பெரும் மூச்சோடு இது வேறு மூச்சாய் போனது. அவ்வளவு அழகாக கச்சிதமாய் அந்த உடை அவள் உடலுக்கு பொறுந்தி போனது.
சிக்கந்தர் முன் நின்று அப்படியும் இப்படியும் தன்னை சுற்றி  காட்டியவள்… “நல்லா இருக்கா…? என்று கேட்டதும்.. சிக்கந்தருக்கு அனைத்தையம் விட்டு அவளை எங்காவது அழைத்து சென்று விட்டால் என்ன என்று தோன்றியது. 
மீண்டும் ஜமுனா கேட்ட… “நல்லா இருக்கா….?” என்ற குரலுக்கு..
“ம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஜாமூன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்திற்க்கு கிஷோர் தன் மனைவி, மகனோடு வந்து சேர்ந்தான்.
அனைவரும் ஜமுனாவின் உடையை பார்த்து… “ரொம்ப நல்லா இருக்கு.” என்று சொன்னார்கள் என்றால்,  நிஷா கூடுதலாய்…
“இப்போ உன்னை பார்த்தால் ஸ்கூல் படிக்கிற சின்ன பெண் போல் இருக்கு ஜமுனா…” என்ற பேச்சில்  சிக்கந்தர் திரும்பவும் ஜமுனாவை உற்று பார்த்தான்.
ஆனால் இந்த பார்வை முதலில் பார்த்த ரசிப்பு பார்வை போல் இல்லாது மிக தீவிர்மாய் அவள் உடல் முழுவதும் தன் கண்ணை மேய விட்டவன்..
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய்… “ஒன்னு பாபி  ஜாமூன்  முதல்ல அவங்கல சொன்ன..இந்த உடையில் உங்க வயசு கம்மியா தெரியுது என்றதுக்கு சொல்ல வேண்டுமே என்று இப்படி சொல்லி இருக்க வேண்டும்..இல்ல ஜமுனா கொஞ்சம்  குள்ளமா இருக்காலே அதற்க்காக இப்படி ஸ்கூல் பெண் போல் இருக்கேன்னு சொல்லி இருக்க வேண்டும்..  ஸ்கூல் பெண் இப்படியா இருப்பா…?”
அவளின் வளைவு நெளிவுகளை தன் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவன் மனநிலை  எங்கு எங்கோ போக… தன் உடலை உதறியவனாய் தன் மனதை நடை முறைக்கு கொண்டு வந்தான்.
இப்படி சிக்கந்தரின் மனநிலை அவ்வப்போது தராசு போல் அங்கும் இங்கும் தாழ… படம் பின் உணவு என்று அன்றைய நாள் ஒரு முடிவுக்கு வந்தது.ஆனால் ஜமுனாவின் மனநிலையோ… ஒரே நிலையில்  மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ற நிலையில் அன்றைய நாள் அவளுக்கு முடிந்தது.
ஜமுனாவின் பிறந்த நாள் முடிந்து ஒரு வாரம் சென்று இருந்தது…இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது அந்த புது கார் லான்ச் செய்ய..பணம் பணம் பணம்…இதற்க்கு அலைவதற்க்கே சிக்கந்தருக்கு நேரம் சரியாக இருந்த்து.
கிஷோர் தன்னிடம் இருந்ததை சிக்கந்தரிடம் கொடுத்து விட்டான்..முதலில் சிக்கந்தரோடு வர்மா குடும்பத்திற்க்கு எதிராய் அவன் தான் அந்த காரை லான்ச் செய்வதில் முனைப்பாய் இருந்தான்..
அதற்க்கு காரணம் சிக்கந்தர் மட்டுமே..அதுவும் அவனை கருணை கொலை செய்வதை பற்றி பேச்சு எழுந்த உடன் முடிவு செய்து விட்டான்…நான் உங்களை எழ விட மாட்டேன் என்று..
ஆனால் எப்[போது சிக்கந்தர் எழுந்து விட்டானோ..அப்போதிலிருந்து கிஷோர் மனம் அமைதி அடைந்து விட்டது..என் சிக்கந்தர் கிடைத்து விட்டான் என்று…
மேலும் இனி அனைத்தும் அவன் பார்த்துக் கொள்வான்..தான் அவர்களுக்கு எதிராய் நிற்பதை விட..யாரை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவனே அவர்களுக்கு எதிராய் நின்று ஜெயித்தால்…அது தான் அவர்களுக்கு விழும் பலமான அடி என்று நினைத்தவனாய் கிஷோர் இந்த ஆட்டத்தில் இருந்து விலகி நின்றானே ஒழிய..முழுவதுமாய் ஒதுங்கி விட வில்லை.
அதனால் இதன் மொத்த பொறுப்பும் சிக்கந்தர் ஏற்றுக் கொண்டதால் அவ்வ போது ஜமுனாவின் நினைவுகள் வந்தாலும், அதையும் மீறி அடுத்த மாதம் தங்கள் கார் லான்ச்சே முதன்மையாக தெரிய அதன் வேலையில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தான்.
ஞாயிறு அன்றும் அவன் கார் லான்ச் சம்மந்தமாய் வெளியில் போகும் வேலை இருந்தது… தன் பேசியில் பதிவு செய்து வைத்திராத எண்ணில் இருந்து அழைப்பு வர..அதை ஏற்பதா வேண்டாமா…?என்று இருமனமாய் யோசித்தவன்.. பின் அந்த அழைப்பை ஏற்றான்.
அழைப்பை ஏற்றவுடன்… “என்ன ஜீ  போன எடுக்க இவ்வளவு நேரமா….?” என்று அந்த பக்கம் சிணுங்கலாக கேட்ட ஜமுனாவின் குரலில்…. ஏதோ ஒரு வித போதை தலைக்கு ஏறியது சிக்கந்தருக்கு….
அதன் தாக்கத்தில்…. “என்ன ஜாமூன்  போன் உன்னோடுதுன்னு தெரிஞ்சா டிங் டிங் என்ன டி..என்று சத்தம் ஆராம்பிக்கும் முன்னவே எடுக்க மாட்டேனா….?” என்று சிக்கந்தர் பேச்சுக்கு..
அழைப்பில்  அந்த பக்கம் இருந்த ஜமுனா… கல கல என்று சிரித்தவளாய்… “இது தான் என் போன் நம்பர்..இதை சேவ் பண்ணிக்கோங்க ஜீ…” என்று ஜமுனா சொன்னதும்…
“கண்டிப்பா…” என்று ஜமுனாவிடம் சொன்ன சிக்கந்தரின் மனமோ…இந்த எண்னை என் பேசியில் பதிவு செய்யவா…இல்லை என் இதயத்தில் பதிவு செய்யவா…. என்று   நினைத்துக் கொண்டது.
“போனை நேத்து தான் மாமய்யா வாங்கி கொடுத்தார்… நான் க்ளாஸ் போறேன் லே..வர லேட் ஆனா எனக்கோ அட்டம்மாவுக்கோ போன் போட்டு சொல்லுன்னு சொல்லி வாங்கி கொடுத்தார்.” என்ற அவளின் பேச்சில்..
மற்றதை எல்லாம் விடுத்து… “க்ளாஸா….? என்ன க்ளாஸ்…?.” என்று பர பரப்பான குரலில்  கேட்டான்.
ஜமுனாவோ மிக கூலாக… “கம்பியூட்டர் க்ளாஸ் போறேன்…” என்ற ஜமுனாவின் பதிலில்..
மீண்டும் சிக்கந்தர்… “என்ன கோர்ஸ்….?” என்று கேள்வி எழுப்பினான்.
சிறிது யோசித்த ஜமுனா…. “குறிப்பிட்டு கோர்ஸ் எல்லாம் இல்ல ஜீ..எனக்கு கம்பியூட்டர் பத்தி அவ்வளவா தெரியாது என்பதை விட அவ்வளவும் தெரியாது.
அதான் அட்டம்மா  முதல்ல கம்பியூட்டர் பத்தி பேஸிக் கத்துக்கோ அப்புறம் உனக்கு எதில் இன்ரெஸ்ட்டா இருக்கோ அதை பத்தி சர்டிபிகேட் வாங்கும் படி படின்னு  சொன்னாங்க.
 ..அப்போ தான் நாளைக்கு வேலைக்கு போனா அந்த படிப்பு  யூசா  இருக்கும் என்றும்  சொன்னாங்க..அதான் மூன்று நாளா க்ளாஸ் போயிட்டு இருக்கேன்.” என்று  ஜமுனா நீண்ட விளக்கம் அளித்தாள்.
சிக்கந்தருக்கு அப்போதும் தன் கேள்வி கணைகளை விடாது… “எந்த சென்டர்….?” என்று கேட்டான்.
“G.G சென்டர்…” என்ற ஜமுனாவின் பதிலில்..
“நல்லா பேமஸான கம்பியூட்டர் சென்டர் தான்” 
ஆம் அது மும்மையில் மிக புகழ் வாய்ந்த கம்பியூட்டர்  சென்டர் என்பதால் அதை பற்றி சிக்கந்தரும் அறிந்து  வைத்திருந்தான்.  அனைவரையும் பொறுத்த வரை இவை அனைத்து சரி தான்.
ஆனால் சிக்கந்தர் வரை..அவளுக்கு நானே அனைத்தும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் கற்றுக் கொள்வதில் முதல் படியை அடி எடுத்து வைத்திருக்கிறாள். 
ஆனால் இது எனக்கு தெரியவே இல்லை… இந்த எண்ணம் வந்த உடன் ஏனோ தான் அவளை விட்டு மிக தூரம் விலகி போவது போல் மனதுக்கு தோன்றியது.
அதுவும் ஜமுனா தொடர்ந்து சொன்ன…. “இன்னைக்கு ஈவினிங் கார் கத்துக்க போறேன்.” என்ற அவளின் தொடர் பேச்சில்..
“ஓ…” என்று மட்டுமே  சிக்கந்தர் சொன்னான்.
ஜமுனாவோ விடாது… “ மாலை ஐந்து மணிக்கு வந்து சொல்லி கொடுப்பாங்கலாம்.” என்ற ஜமுனாவின் பேச்சில்..
“ஏன் மாமய்யா அப்போ தான்  வர்றாரா….?” என்று கேட்டான்.
கிஷோர் இன்றும் தொழில்  விசயமாக காலையிலேயே வெளியில் சென்றது சிக்கந்தருக்கு தெரியும். அதனால் அப்படி கேட்டான்.
ஆனால் அதற்க்கு பதிலாய் ஜமுனா… “யாருக்கு தெரியும்…” என்ற பதுலில்..
யோசனையுடன்… “நீ தானே ஐந்து மணிக்குன்னு சொன்ன..” என்று கேட்டவன்..பின் அவனாய்… “ஓ பாபி சொல்லி தர்றாங்ங்கலா…?” என்ற சிக்கந்தரின் கேள்விக்கு..
“இல்ல பாபி எல்லாம் இல்ல…சித்தார்த்துக்கு பாடம் ரொம்ப விட்டு போயிடுச்சி அதனால அவனுக்கு சொல்லி கொடுக்கனும் என்று என்னை ட்ரைவிங் க்ளாசில் சேர்த்து விட்டு இருக்காங்க. இன்னைக்கு ஈவினிங் சார் வருவார் ” என்று ஜமுனா சொன்னது தான் தாமதம்..
“பாபி அங்கு இருக்காங்கலா….?” என்று கத்தி கேட்ட சிக்கந்தரின் குரலில் பேசியின் இந்த பக்கம் இருந்த ஜமுனாவின் உடல் ஒரு முறை தூக்கி வாறி போட்டது.
அந்த உதறலின் விளைவாக… “இ..ருக்கா..ங்க.” என்று திக்கி திணறி ஜமுனா சொன்னதும்..
“அவங்கல கூப்பிடு.” என்று சிக்கந்தர் சொன்னதும்…
பேசியின் அந்த பக்கம் ஜமுனா… “அட்டம்மா..அட்டமா…” என்று சத்தம் போட்டு நிஷாவை  அழைத்ததால், பேசியின் இந்த பக்கம் இருந்த சிக்கந்தருக்கு அது தெளிவாக கேட்டது.
பேசி நிஷாக்கு கை மாறியதும்… “ஏன் ஜாமூனுக்கு கார் ஓட்ட நீங்க கத்து கொடுக்கலாம்லே பாபி.” என்று எந்த முன்னுரையும் இல்லாது சிக்கந்தர் நேராக விசயத்துக்கு வந்து விட்டான்.
“இல்ல சிக்கந்தர் சித்தார் படி…” என்ற நிஷாவின் பேச்சை முழுவதுமாய் முடிக்க விடாது…
“ஜாமூன் சொன்னா…உங்களால் முடியலேன்னா ஜீயே  சொல்லி கொடுக்க சொல்லுங்க…” என்ற சிக்கந்தரின் பேச்சில்..
நிஷா குழம்பி போனவளாய்… “ஏய் சிக்கந்தர் அவருக்கு பிசினஸ்ல எவ்வளவு டென்ஷனா இருக்காருன்னு உனக்கே தெரியுமே..தோ இன்னைக்கு  சன்டே..சன்டே கூட வீட்டில் இல்லாம வெளிய போய் இருக்கார்..எல்லாம் தெரிஞ்சே என்ன சிக்கந்தர்…?” என்று  நிஷா பேசியது  நியாயமாய் இருந்தாலும் ஏனோ சிக்கந்தருக்கு அதை ஏற்றுக் கொள்ள தான் மனது இல்லை.. 
அதுவும் அவள் சொன்ன… “ட்ரைவிங் சொல்லி கொடுக்க சார் வர்றார்.” என்ற பேச்சில்…
அவன் எதேதோ நினைத்துக் கொண்டவனாய்… “சரி பாபி ஜாமூனுக்கு நான்  சொல்லி கொடுக்குறேன்…” என்று சிக்கந்தர் சொன்னதும்…
“நீயா….?” என்று சந்தேகத்துடன் கேட்ட நிஷா… “நேத்து தான் உன் ஜீ அவனுக்கு அவ்வளவு வேலை இருக்கு..இனி அடிக்கடி அவன் இங்கு வர முடியாது என்று  சொன்னார்.” என்ற நிஷாவின் பேச்சில்..
“இருக்கு தான் பாபி..ஆனால் இன்னைக்கு இல்ல..சன்டே எல்லாம் நான் வீட்டில் தான் இருப்பேன்..அதோடு தினம் ஒரு மணி நேரமாவது நமக்கு ரிலேக்க்ஷன்  தேவை தானே…நான் தினம் ஒரு மணி நேரம் வந்து ஜாமூனுக்கு கார் ஓட்ட கத்துக் கொடுக்கிறேன் பாபி.” என்று நிஷா அடுத்து கேள்விகளைகளை தொடுக்கும்  முன் பேசியை அணைத்து விட்ட சிக்கந்தர்…
பின் தன் டையை தளர்த்திய வாறே….பேசியில்.. இன்று பார்க்க வேண்டியவரை அழைத்திருந்தான்.

Advertisement