Advertisement

அத்தியாயம்….14
எப்போதும் சிக்கந்தர் உடைக்கு கூடுதல் கவனம் செலுத்தி தான் உடுத்துவான். இன்று அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உடை உடுத்தியவன்..கண்ணாடி முன் நின்று முன்னும் பின்னும் பார்த்து என்ன நினைத்தானோ….வேறு ஒரு உடையை எடுத்து உடுத்தி அதே போல் கண்னாடி முன் நின்றவன் திரும்பவும் மாற்றி…
என்று இதே போல் நான்கு முறை செய்தான்..அந்த நான்கு உடையும் அவனுக்கு பொருத்தம் இல்லை என்று மாற்றவில்லை. ஏனோ அந்த உடையில் தன் வயது சரியாக தெரிவது போல் இருந்தது.
கொஞ்சம் கம்மியாக நான் ரொம்ப எதிர் பார்க்கல..ஒரு ஆறு வயது கம்மி பண்ணி காட்ட கூடாதா…? என்று தன் முன் இருந்த கண்ணாடியிடம் பேசியவன்..பின் கூர்ந்து பார்த்தவன்.
தன் தலை முடியில்  இரண்டு நரை முடி இருப்பது அவன் கண்ணில் பட..அதை எடுத்து விட்டு இன்னும் ஏதாவது இருக்கிறதா…? என்று கூர்ந்து பார்த்தவன் கண்ணுக்கு எதுவும் மாட்டது போக…
தன்னிடம் இருக்கும் மொத்த  உடையையும் எடுத்து மெத்தையின் மீது போட்டவன் கண்ணுக்கு மாட்டியது   மெரூன் கலரில் காலர் இல்லாத டீ ஷர்ட்..முதலில் எல்லாம் அவன் இது போல் உடையை தான் இலகுவாக உடுத்துவான்.
இப்போது அதாவது போன வாரம் தனக்கு என்று வாங்க ஷாப்பிங் சென்ற போது இது அவன் கண்ணில் மாட்டியது தனக்கு இது போட்டால் நன்றாக இருக்கும் என்றும் தெரியும்…
இருந்தும் வாங்க தயங்கினான்..காரணம் வயது..பின் என்ன நினைத்தானோ எடுத்து விட்டான்..இப்போது  அதை போட்டு பார்த்தவனுக்கு அவன் மனதுக்கு ஏத்தது போல் அந்த உடை அவ்வளவு அழகாக இருந்தது. 
அதுவும் அவனின் அந்த லைர் சான்டல் கலர் ஜூனுக்கு  இந்த மெரூன் கலர் டீ ஷர்ட் பொருந்தி போக…வயது கொஞ்சம் தடை செய்தாலும் அதை தகர்த்து எரிந்தவனாய் அந்த உடையை போட்டுக் கொண்டவன் புது மாப்பிள்ளை போல் கிஷோர் வீட்டுக்கு சென்றான்.
“ஹாய் ஹீரோ…யூ ஆர் வெரி ஸ்மார்ட்…” என்று சொல்லி வர வேற்ற சித்தார்த்தின் பேச்சில் மகிழ்ந்தவனாய் … “ஓ அப்படியா…?” என்று சொல்லி அவன் தோள் மீது கை போட்டவனின் கண் நாளா பக்கமும் சுழன்றது.
“என்ன ஹீரோ டாடியே  தேடுறிங்கலா….?” அவன் கண்ணின் தேடலை பார்த்து சித்தார்த கேட்டான்.
“ஆமாம் ஆமாம்…” என்று சொன்னவனுக்கு பதிலாய்.
“மாமும் டாடியும்..கேக் வாங்க போயி இருக்காங்க…” என்ற சித்தார்த்தின் பதிலில் அப்போது தான் சித்தார்த்தின் உடையையும் கவனித்தான்.
எப்போதும் போல் இலகு உடை உடுத்தாது..அவனுன் ஜீன் ஷர்ட் என்று உடுத்தி இருந்தான். .
“என்ன விசேஷம்….?” என்ற  சிக்கந்தரின் கேள்விக்கு சித்தார்த் பதில் அளிக்கும் முன்னவே தன் பின் பக்கம் இருந்து…
“சேம் பீச்…” என்று தன் முதுகை கிள்ளியவளின் ஸ்பரிசத்திலும்..அவள் குரலிலும் சட்டென்று திரும்பி பார்த்த  கண்னுக்கு ஜமுனாவின் தோற்றத்தை பார்த்து  அப்படியே   நின்று விட்டான்.,
காரணம் ஜமுனா தன்னை போலவே சான்டில் கலரில் பட்டு புடவை உடுத்தி அதற்க்கு தோதாய் ரவிக்கையை மெரூன் கலரில் போட்டுக் கொண்டு தலை நிறைய மல்லிகை பூவில் அவள் தன் முன் நிற்கவும்…
அதுவும் கையில் ட்ரேயில் ஏதோ எடுத்துக் கொண்டு… “எடுத்துக்குங்க ஜீ…” என்று தன் முகம் பார்த்து பின் தன் கையில் வைத்திருக்கும் தட்டையையும்  மாறி மாறி பார்த்தவள்…பின் தான் எடுக்காது அவளையே பார்த்திருப்பதை பார்த்து..
தன் புருவத்தை வில்லாய் அவள் உயர்த்தியதில்… அவள் பெண்ணாகவும்..தான் அவளை பெண் பார்க்க வந்த  மாப்பிள்ளையாகவும் கற்பனை செய்துக் கொண்டவனின் மனது… இது வரை    மதில் மேல் இருக்கும் பூனை போல் அவன் மனதும் அங்கும் இங்கும் இது ஈர்ப்பா..இல்லை அதற்க்கு மேல… என்று இரு தரப்பிலும் வாதடிக் கொண்டு இருந்த அவன் மனது ஒரே நேர்க்கோட்டில்…இது காதல்ல்ல்.
நான் இவளை காதலிக்கிறேன்..என்று தன் மனது அடித்து கூற… “ஜாமூன்…. “ என்று அழைத்துக் கொண்டே ஏற்கனவே அவள் தன் அருகில் தான்  நின்றுக் கொண்டு இருந்தாள்.
அந்த இடை வெளியையும் குறைக்கும் பொருட்டு… “ஜாமூன்…” என்று அழைத்துக் கொண்டே இன்னும் அவளை நெருங்க நினைத்தவனின் காதில்..
“ஏன்னடா வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா….?”  என்று தன் ஜீயின் குரலில் தன் உணர்வுக்கு வந்தவன்  ஜமுனா பக்கம் செல்ல பார்த்த கால்களை வலுக்கட்டாய்மாக கிஷோர் பக்கம் செலுத்தினான்..
சிரித்துக் கொண்டே… “இப்போ தான் ஜீ.” என்று சொன்னவன் கண்கள் மீண்டும் ஜமுனாவின் பக்கமே சென்றது.
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விட மாட்டேன் என்பது போல்.ஜமுனா மீண்டும் சிக்கந்தரின் முன் ட்ரேயை நீட்டியள்…
“ஜூஸை எடுக்காது…முறச்சி மட்டும் பார்த்துட்டு வந்துட்டிங்க….எடுத்துக்கோங்க..நான் மாமய்யாவுக்கும் அட்டம்மாவுக்கு… எடுத்துட்டு வரனும்.”  என்ற ஜமுனாவின் பேச்சில்… ஒரு க்ளாஸை எடுத்துக் கொண்ட  சிக்கந்தர்..
நிஷாவை பார்த்து… “எப்படி பாபி இருக்கிங்க…?” என்று கேட்டான்.
அவன் கேட்டதற்க்கு பதில் அளிக்காது…. “ஒரு கல்யாணம் செய்துட்டு அப்புறாம் அந்த வீட்டுக்கு போன்னு நான் உன் கிட்ட எத்தனை தடவை சொன்னேன்..என் பேச்சை கேட்டியா….?” என்று நிஷா  சிக்கந்தரிடம் கேட்டாள்.
அதற்க்கு சிக்கந்தர் பதில் அளிக்கும் முன் கிஷோர்… “இப்போ அவன் போனதில் உனக்கு என்ன பிரச்சனை….?” என்று கேட்க..
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல…உங்க சிக்கந்தர் முகத்தை பாருங்க…எப்படி சோர்ந்து இருக்கான்னு…நான் பார்த்துக்குறேன்னு கூட்டிட்டு வந்தா மட்டும் போதாது..நல்லா பார்த்துக்கனும்.” என்ற மனைவியின் பேச்சில் தான் கிஷோர் தன் சிக்கந்தரை கவனித்து  பார்த்தான்.
என்ன தான் உடை  சிக்கந்தர் பார்த்து பார்த்து உடுத்தி இருந்தாலும், முகம் கொஞ்சம் சோர்ந்து போய் தான் காணப்பட்டது… “என்ன சிக்கந்தர் உன் உடம்பு ஏதாவது செய்யுதா…?சொல். டாக்டர் கிட்ட காமிக்கலாம்.” என்று சிக்கந்தரிடம் கிஷோர் கேட்க..
“அய்யோ ஜீ உடம்புக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல..நல்லா தான் இருக்கேன்.” என்று ஜீயிடம் சொன்ன சிக்கந்தரின் மனதோ..மனதுக்கு தான் ஜீ…பிரச்சனை..
அந்த பிரச்சனையையும் நீங்க மனசு வெச்சா தீர்க்க முடியும்..ஆனால்  அதற்க்கு நான் முதலில் என் பிரச்சனையை சொல்லனும்…என்னால் இதை உங்க முகம் பார்த்து சொல்ல முடியுமா….?என்று எனக்கு தெரியல ஜீ… என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்..
பின் பேச்சை மாற்றும் விதமாய்… “என்ன இன்னைக்கு எல்லாம் அழகா ட்ரஸ் போட்டு இருக்கிங்க..ஏதாவது விசேஷமா….?”சித்தார்த்திடம் விடை கிடைக்காத கேள்விக்கு திரும்பவும் கிஷோரிடம் கேட்டான் சிக்கந்தர்.
“ஜாமூன் சொல்ல்லையா….? அவளுக்கு இன்னைக்கு பிறந்த நாள். அதான் நானும் உன் பாபியும் கேக் வாங்கிட்டு வந்தோம்.” என்று கிஷோரின் பதிலில்..
உடனே… “காலையில் போனில் இதை ஏன் ஜீ சொல்லலே…” என்று சிக்கந்தர் ஒரு மாதிரி குரலில் கேட்டான்.
சிக்கந்தரின் குரல் மாற்றத்தில்.. கிஷோர்… “என்ன சிக்கந்தர்…. இது சும்மா வீட்டோட செய்ய போறோம்..அதான் கேக் கட்ட பண்ணும் போது நீ இருக்கனும் என்று நினச்சி உன்னை அழச்சேன்.” என்று சிக்கந்தர் கேட்ட கேள்விக்கு கிஷோர் பொறுமையாகவே பதில் சொன்னான்.
“நீங்க காலையிலேயே சொல்லி இருக்கலாம் ஜீ…நான் அவளுக்கு எதுவுமே வாங்கிட்டு வரல….” என்று சிக்கந்தர் வருத்தமான குரலில் சொன்னான்…
“சரி அதுக்கு என்ன..ஈவினிங் தான் கேக் கட் பண்ண போறோம். சாப்பிட்டு நீயே ஜமுனாவை கூட்டிட்டு போய் அவளுக்கு  பிடித்தமானதே வாங்கி கொடு.” என்ற கிஷோரின் இந்த பேச்சும் சிக்கந்தருக்கு பிடித்து போனது.
“சரி ஜீ.” சிரித்துக் கொண்டே சொன்னவன்.. எழுந்து ஜமுனா பக்கம் சென்று… “  தெலுங்கு அம்மாயிக்கு  என் பிறந்த நாள் நல்வாழ் த்துக்கள்…” என்று அவள் கரம் பற்றிக் கொண்டு சொன்னவன்..
பின் பற்றிய அவள் கரத்தை விடாது… “அப்புறம் அம்மாயிக்கு என்ன வயசு முடியுது..என்ன வயசு தொடங்குது….” என்று ஜமுனாவை பார்த்து கேட்டான்.
“ம்…” என்று யோசித்த ஜமுனா தன் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக் கொண்டு….
“இருபத்தி நான்கு முடிந்து இருபத்தை ஐந்து தொடக்கம்.” என்ற ஜமுனாவின் பதிலில…
“அது என்ன இருபத்தி நாளு..இனி இருபத்தி நாளு எல்லாம் இல்ல..உன் வயசு இருபத்தி ஐந்து…” என்று சிரித்திக் கொண்டே சொன்னான்.
“என் வயசு ஏத்துறதுல உங்களுக்கு ஏன் ஜீ அவ்வளவு சந்தோஷம்… எனக்கே ஒரு வயசு கூடிடுச்சேன்னு காலையில் இருந்து சோகமா இருக்கேன்.” என்று ஜமுனா வருத்துடன் சொன்னாள்.
சிக்கந்தரோ  ஜமுனாவின் மனநிலைக்கு எதிர் பதமாய் மிக மகிழ்ச்சியுடன் இருந்தான். மனதில் தன்னால் கணக்கு போடலாயிற்று..
“இப்போ எனக்கும் அவளுக்கு வயது வித்தியாசம் பதினைந்து இல்ல. பதினான்கு என்று…” உடனே அவனின் இன்னொரு மனம்..
“இன்னும் மூன்று மாதம் கழித்து உனக்கு பிறந்த நாள் வருது…அப்போ உன் வயது நாற்பது..அப்போ கணக்கு போட்டு பார்த்தா திரும்பவும் உனக்கும் அவளுக்கும்  வயது வித்தியாசம் பதினைந்து தான்.” என்ற் உண்மையை எடுத்துரைத்த்து.
அந்த உண்மையை ஏனோ சிக்கந்தரின் மனம்  ஏற்க மறுத்தது… “இப்போ அவளுக்கும் எனக்கும் என்ன வயது வித்தியாசம் அதை பார்த்தா போதும்..கொஞ்ச நாளாவது இதை அனுபவித்துக் கொள்கிறேன்.” என்று நினைத்தவனாய் மகிழ்ந்து போய்…
ஜமுனாவிடம்… “வயது கூட கூட தான் நம் மனது பக்குவம் அடையும்..அதனால வயசு ஏறிடுச்சின்னு சோகமா இருக்காதே..இன்னைக்கு உன் பிறந்த நாள் அதனால நீ சந்தோஷமா இருக்கனும்.” என்று சிக்கந்தர் அவள் தலையை தடவி கொடுத்து சொன்னான்.
அதற்க்கு கிஷோர்… “நல்லா சொல்…காலையில் இருந்து அவ முகமே சரியில்ல..கேட்டா இதோ இப்போ சொன்னாளே..வயசு கூடுது அதான்னு.” என்று கிஷோர் சொல்லவும் தான் சிக்கந்தர் ஜமுனாவை கூர்ந்து பார்த்தான்.
அவள் என்ன தான் புதிய உடை…நகை பூ என்று உடுத்தி இருந்தாலும்..கண்ணில் இட்ட  மையையும் மீறி அவள் கண்களில் இருந்த வெறுமையில்…
“ஜாமூன் அம்மா நியாபகமா….?” என்று ஜமுனாவின் மனதை சரியாக யூகித்தவனாய் கேட்டான்.
அதற்க்கு ஜமுனா…. “ஆமாம்.” என்று தலையாட்டும் போதே ஜமுனா என்ன தான் கட்டு படுத்தியும் முடியாது அவள் கண்களில் இருந்து கண்னீர் வரலாயிற்று..
“ஜாமூன்..என்ன என்னடா இது…” என்று சிக்கந்தர்  ஜமுனாவின் கண்ணீரை துடைத்துக் கொண்டு இருக்கும் போதே இடையில் வந்து நின்ற நிஷா…
“ஏய் ஏன்னடா ஏன் அழுற..அம்மா நியாபகமா…?அம்மா போனது வருத்தம் தான்டா..ஆனா இது நம் கிட்ட இல்லடா… .அம்மா நியாபகம் வந்தா நீ உன் மாமய்யாவை பார்…உங்க அம்மா உனக்கு தெரிவாங்க.. உங்க ஊர்ல தான் சொல்வாங்கலே..தாய் மாமன் கூட ஒரு வகையில்  அம்மா மாதிரி தான்னு…” என்று நிஷா ஜமுனாவை சமாதானப்படுத்தி அவள் கண்ணீரை நிறுத்தி விட்டாள்.
நிஷா ஜமுனாவுக்கும், தனக்கும்  இடையில் நின்றது சிக்கந்தருக்கு ஏனோ பிடிக்கவில்லை.நிஷாவையும் தன் மனதில் திட்ட கூடும் என்று அவன் நினைத்தது இல்லை. ஆனால் இன்று திட்டினான்..
‘அது தான் நான் சமாதானப்படுத்திட்டு இருக்கேன்ல..அப்புறம் என்ன இடையில் வந்து புகுவது…’ என்று மனதில் தன் பாபியை திட்டிக் கொண்டு இருக்குஇம் போது..
கிஷோர்… “என்னடா சாப்பிடலாமா…? என்று சிக்கந்தரிடம் கேட்டான்.
அதற்க்கு சிக்கந்தர் … “இப்போ தானே ஜூஸ் குடிச்சேன்..அதனால கொஞ்ச நேரம் ஆகட்டும்.” என்று சொன்னதும்…
“இல்ல ஈவினிங் கேக் கட் பண்ணனும்..நீ வேற ஜமுனாவை கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கி தர்றதா ப்ளான் ஆச்சே..அது தான்.” என்று சொன்ன கிஷோர்…
 பின் அதற்க்கு தீர்வாய் அவனே… “சரி அப்போ நீ வேற ஒரு நாள் கூட்டிட்டு போய் அவளுக்கு ஏதாவது  வாங்கி கொடு.” என்று கிஷோர் சொன்னதும்
தான் இருந்த இடத்தை விட்டு எழுந்தவன்… “இல்ல ஜீ..இன்னைக்கு பிறந்த நாளை வெச்சிட்டு இன்னொரு நாள்ளா வாங்கி தர்றது..சாப்பிட்டு நான் ஜமுனாவை கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லிக் கொண்டே சாப்பாடும் அறை நோக்கி சென்றான்.
அனைவருக்கும்  நிஷா பரிமாறிய வாறே… “பேசாம கேக் கட் பண்ணிட்டு எல்லோருமாவே வெளியே போயிட்டு வரலாமா…சித்தார்த்தை வெளியே கூட்டிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு..அதுவும் இல்லாம ஜமுனா இங்கு வந்து வெளியே ரொம்ப போகல…” என்று நிஷா கேட்டாள்.
நிஷா சொன்னது நல்ல ஐடியாவாக தான் இருந்தது. ஆனால் அது நம் சிக்கந்தருக்கு ஆப்பு வைக்குதே…ஜமுனாவோடு தனியாக போவதை பற்றி நினைத்தாலே அவன்  மனது ஏதோ சந்தோஷத்தில் துள்ளியது.
இன்னும் கேட்டால் அவன் அவளோடு காதல் மொழி பேச போவது இல்லை. இனிமேல் பேசுவானா என்பதே அவனுக்கு சந்தேகம் தான்… தன் ஜீ தன்னோடு ஜமுனாவை தனியாக அனுப்புவது எதற்க்காக..
ஒன்று என் வயது. இன்னொன்று என் மீது இருக்கும் நம்பிக்கை..நான் ஜமுனாவை விரும்பினால்…அது தன் ஜீக்கு செய்யும் துரோகம் அல்லவா…
இப்படி விருப்பத்திலும்…தன் ஜீயுக்கு இடையே தள்ளாடிய அவன் மனது ஒரு நிலைக்கு வந்தது..அதாவது ஜமுனாவோடு இருப்பது என் மனதுக்கு இதமாக இருக்கிறது. இருந்து விட்டு போகிறேன்..
நான் அவள் மனதை கெடுக்க போவது இல்லை..என் இந்த விருப்பம் என்னோடு தான் இருக்க போகிறது..இதில் யாருக்கு என்ன தீமை வந்து விட போகிறது..என்று முடிவு செய்தவனாய் இன்று ஜமுனாவோடு தனியாக போகும் சமயத்தை காத்துக் கொண்டு இருந்தவனுக்கு நிஷாவின் இந்த பேச்சு பிடிக்காது தான் போனது.
ஆனாலும் அதற்க்கு அவன் மறுப்பு சொல்லவில்லை..நான் என்ன அவளிடம் காதல் வசனமா பேச போகிறேன்.. அவளை என் பார்வை பின் தொடர போகிறதிதில் யார் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என்று நினைத்து…
“சரி பாபி…” என்று சொன்னவன்..
சாப்பிட்டதும்.. “ஏதாவது வேலை இருக்கா ஜீ.” என்று கிஷோரிடம் சிக்கந்தர் கேட்டான்.
“இல்ல சிக்கந்தர்..நம்ம வரை தான் கேக் கட் பண்றது.” என்று கிஷோர் சொன்னதும்..
“ஏன் ஜீ கொஞ்சம் கிரண்டா செய்து இருக்கலாமே..முன்னவே என்னிடம்  சொல்லி இருந்தா நான் எல்லாத்தையும் பார்த்து இருப்பனே…” என்று சிக்கந்தர் சொன்னதற்க்கு..
“இப்போ தான் அக்கா இறந்தது…அந்த நியாபகம் அவளுக்கு இருக்கும்டா…போன வருடம் அம்மா இருந்தாங்க… அதை நினச்சி தான் அவ காலையில் இருந்து சோகமாவே இருந்தா..
நான் கேட்டதற்க்கு உன் கிட்ட  முதல்ல சொன்னா பாரு வயசு ஏறுதுன்னு அதே தான் சொல்லிட்டு இருந்தா..சரி அவ அப்படியே மறந்துட்டு இருக்கட்டும் என்று தான் நான்  வற்புறுத்தி கேட்கல.
.ஆனா உன் கிட்ட அவ எப்படி உடனே தன் கஷ்டத்தை சொன்னான்னு தெரியல… சரி அதுவும் நல்லது தான். ஒருத்தர் கிட்டவாவது தன் கஷ்டத்தை சொல்லனும் லே….” என்று சொன்ன கிஷோர்..
பின் ..”அதுவும் இல்லாம ஜமுனா உன் கிரகபிரவேசத்துக்கு வந்ததில் இருந்து..அங்கு வந்த பெண்களை பார்த்துட்டு நிஷா கிட்ட அவங்க எவ்வளவு வெள்ளையா இருக்காங்கலே அட்டம்மா..
அவங்க எப்படி அவ்வளவு அழகா ட்ரஸ் பண்றாங்க…எப்படி கார் ஓட்டுறாங்க..என்னம்மா இங்கிலீஷ் பேசுறாங்கன்னு சொல்லிட்டு இருந்து இருக்கா..அதுவும் இல்லாம உன் விழாவில் யாரோ ஒருத்தர்… நீ இந்த வீட்டில் வேலை பாக்குறியான்னு கேட்டு இருக்கா…?” என்று சொன்ன கிஷோரை அடுத்து பேச விடாது…
“யாரு சொல்லுச்சி அது…ஜாமூனை  கூப்பிடுங்க.. அது  யாருன்னு சொல்லட்டும்..” என்று சொல்லிக் கொண்டே தன் பேசியை எடுத்தவன் தன் விழாவில் எடுத்த வீடியோவை போட்டோகிராபர்  தனக்கு  அனுப்பியதை எடுத்து..
“அவளை கூப்பிடுங்க…” என்று கத்தியவனின் வாயை அடைத்து..
“அவ என் அக்கா பெண்டா..எல்லாம் கேட்டேன்…அந்த பொம்பளையையும் நல்லாவே கேட்டேன் அதனால் அதை விடு…” என்று சிக்கந்தரை அடக்கிய கிஷோர்…
“நான் சொல்ல வந்தது… அவளை இங்கு இருக்கும் க்ளாசுக்கு அனுப்பனும்..கொஞ்சம் ட்ரஸ் சென்ஸ் சொல்லி கொடுக்கனும்..அப்புறம் கார் ஓட்ட கத்து கொடுக்கனும்..அப்புறம் இங்கிலீஷ் சரளமா பேச வைக்கனும்… “ என்று கிஷோர் அடுக்கி கொண்டு போக..
கிஷோரின் கை பிடித்து தடுத்து நிறுத்திய சிக்கந்தர்… “அவள் அவளாவே இருக்கட்டும் ஜீ.” என்று சொன்னான்.

Advertisement