Advertisement

அத்தியாயம்….13
விழா முடியும் தருவாயில் அனைவரும் சிக்கந்தரிடம் விடை பெறும் போது தவறாது  கிஷோரிடமும்… கை நீட்டி விடை பெற்று சென்றனர்.
இதை எல்லாம் வெளி ஆட்கள் போல் ஒரு ஒரமாய்  வேடிக்கை பார்க்கும் சூழலில் தான் சிக்கந்தரின் குடும்பம் இருந்தது.அந்த சூழ்நிலை அதாகவே உருவானதா…?இல்லை சிக்கந்தர் உருவாக்கினானா…? என்று தெரியவில்லை.
இதை தான் சிக்கந்தர் அன்னை அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்த படி யோசித்துக் கொண்டு இருந்தார்.
சிக்கந்தரிடம் யார் என்ன கேட்டாலு,ம் தனக்கு தெரியாததை… “என் ஜீயிடம் கேளூங்க.” என்று அவன் கிஷோருக்கு கொடுத்த அந்த  முன்நிலை தான் இப்போது கிஷோருக்கு கிடைக்கும் மரியாதைக்கு காரணம் என்று அவர் நினைத்தார்.
அவர் நினைத்தது போல் அதுவும் ஒரு காரணம் தான்..ஆம் அது ஒர்டு காரணம் தானே அன்றி அதுவே காரனம் ஆகி விட முடியாது. சிக்கந்தரும் இந்த மும்பையில் இருந்தவன் தான்..
அந்த சமயத்தில் கிஷோரை விட சிக்கந்தருக்கு தான் பேன் அதிகம்..அதோடு அவன் அப்போது ஆராம்பித்த கார் ஸ்பாட்ஸ் விற்பனை சூடு பிடித்து மிக வெற்றிக்கரமாக சென்று கொண்டு தான் இருந்த்து.
ஆனால் இப்போது சிக்கந்தரோடு கிஷோர் தான் மும்பையில் அவன் பெயர் சொன்ன உடன் அடையாளம் காணப்படும் நபர்…ஒருவர் என்ன தான்  வெற்றி பெற்றவனாய் இருந்தாலும் , நம் இருப்பை அவ்வப் போது  வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்க வேண்டும்..
நம் தலை கொஞ்சம் மறைந்தாலும், நம் மக்கள் நம்மை மறக்க கூடும்..இது தான் உலக வழக்கம். அப்படி இருக்கும் போது சிக்கந்தர் நீண்ட பதிமூன்று வருடம் கழித்து நான் மீண்டும் தொழில் செய்ய போகிறேன்..என்று நினைத்த உடன் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பாது..
என்ன தான் அவன் முதலில் வெற்றி பெற்றவனாய் இருந்த போதிலுமே… அவன் குடும்ப பின்னணி பெரியதாக இருந்தாலுமே..இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப அவனால் தொழில் நடத்த முடியுமா…? என்ற சந்தேகம் அனைவரின்  மனதிலும் உதிக்கும்..
ஆனால் சிக்கந்தரை பொறுத்த வரை அந்த சந்தேகத்திற்க்கு இடமே இல்லாது சிக்கந்தர் கிஷோரோடு கை கோர்க்கவும்…பணம் ப்ளஸ் பணம் திறமை ப்ளஸ்  திறமை…என்று கணக்கு போட்டு வெற்றி அவர்களுக்கே என்ற பட்ச்சத்தில் தான் அனைவரின் பார்வையும் சிக்கந்தர் பக்கம் சென்றது..ஆம் சிக்கந்தர் பக்கம் தான். 
கிஷோர் வெற்றியாளனோடு மனைவி குழந்தை என்று அவன் குடும்பத்தோடு நிற்க..தனித்து நிற்க்கும் அவனை தங்கள் பக்கம் இழுக்க ஒரு சிலர்  நினைத்துக் கொண்டு இருந்தனர்.
தங்கள் பக்கம் என்றால்…சுப்ரியாவை போல் தொழிலை பார்த்து வாழ்க்கையை கோட்டை விட்ட கொஞ்சம் வயது முதிர்ந்த பெண்களின் பெற்றோர்கள் தங்கள் மகளை சிக்கந்தருக்கு மணம் முடிக்க கிஷோரின் உதவியை நாடினர்.
ஒரு சில பெண்கள் அவர்களாகவே… அதவாது கணவன் இருந்தும் மனைவியை பார்க்காது தங்கள் தொழிலை கட்டிக் கொண்டு அழும் இளம் மனைவிமார்களின் பார்வையும் சிக்கந்தரின் பக்கம் வீச தான் செய்தது. 
அதாவது…வேறு மாதிரி உறவுக்கு… ஆனால் இதற்க்கு அவர்கள் கிஷோரின் உதவியை நாடவில்லை…நேரிடையாக அவர்களே களத்தில் இறங்கி விட்டனர்.
அனைவரும் சென்று இருக்க காரணத்திற்க்காக மட்டும் இருந்த ஒரு சிலரில் கிஷோரிடம்…. “ ம் கேள்வி பட்டேன்.மிஸ்டர் சிக்கந்தருக்கு எல்லாமே நீங்க தானாம்…நீங்க சொன்ன உடனே கேட்டுப்பார் என்று…” என்று ஒரு பெண்ணின்  தந்தை கிஷோரிடம் பேசிக் கொண்டு இருந்தவர்..
தன் மகளை காட்டி… “என் மகள்..ஷோபனா நீங்க இவளை பார்த்து இருக்கலாம்.” என்று தன் மகளை அறிமுகம் படுத்தினார்.
“ஹாய்…” என்று கிஷோரிடம் கை நீட்டிய அந்த ஷோபனா…நிஷாவுக்கு ஒரு நமஸ்த்தே வைத்து விட்டதோடு தன் பார்வையை நிஷா பக்கம் திருப்பாது கிஷோர் பக்கமே பார்த்து நின்றுக் கொண்டு இருந்தாள். ஒரு புடவையை இது போல் கூட கட்ட முடியுமா….?முடியும் என்பது போல் ஷோபனா நின்றுக் கொண்டு இருக்கிறாளே…. 
அவளை பார்ப்பவர்கள் அந்த புடவை இடுப்பை விட்டு நழுவி விழுந்து விடுமோ என்பது போல் தான் பயந்து பார்ப்பர். இப்போது அந்த பயப்பார்வை ஜமுனாவின் கண்களில் தெரிந்தது.
அவர் சொன்னது போல கிஷோர் அந்த பெண்ணை பார்த்து  இருக்கிறான் தான். தொழில் முறை என்று வரும் போது பார்ட்டி என்பது தவிர்க்க முடியாத விசயமாக ஆகிவிடும்..
முதலில் அப்படி தோன்றிய அந்த பார்ட்டி போக போக அதற்க்கு அடிமையும் ஆகி விடுவார்கள்.கிஷோர் இது போல் பார்ட்டிக்கு சென்று இருக்கிறான்..அங்கு இந்த ஷோபனாவையும் பார்த்து இருக்கிறான்.
இவளோடு சில சமயம் நடனமும் ஆடி இருக்கிறான்…அப்போது அவன் உடல் ஈச..அது வேண்டும் என்றா..இல்லை தெரியாமலா என்று அவன் உணரும் முன்னவே கிஷோர் விலகி விடுவான்.
அப்பெண்ணை தன்னிடம் எதற்க்கு அறிமுகப்படுத்துகிறார் என்று தெரிந்தும்….அமைதியாகி விட்டான்… சிக்கந்தர் சொன்னது போல கிஷோர் இந்த கிரக பிரவேசத்தை இவ்வளவு கிரண்டாக  செய்ய நினைத்ததும் இதற்க்காக தான்.ஆனால் இப்போது இந்த பெண்களை பார்த்து நாம் செய்தது சரியா என்பது போல் யோசித்தான்.
கிஷோர் நாகரீகப்பெண்களுக்கு எதிரி இல்லை. இன்னும் சொல்ல போனால் அவன் மனைவி நிஷா இந்த காலத்து பெண் தான்..அவளும் மாடல் உடையை உடுத்துவாள் தான். ஆனால் அந்த உடையில் ஒரு கண்ணியம் இருக்கும்..
சுற்றும் முற்றும் பார்த்த கிஷோர் கண்ணுக்கு அது போல் எந்த பெண்ணும் அவனுக்கு தெரியவில்லை…சுப்ரியா மிக மிக நல்ல பெண்..இந்த காலத்திற்க்கு ஏற்றது போலவும் இருப்பாள்.அதே போல் பார்க்க  கண்ணியமான தோற்றத்தில் தான் உடை உடுத்துவாள்.
அது தவிர அவனுக்கு நீண்ட ஆண்டாக தெரியும்…அதனால் தான் பார்த்த உடன் பெண் கேட்டு விட்டான்…என்னவோ சிக்கந்தருக்கு அப்பெண்ணை பிடிக்கவில்லை. பிடிக்காத திருமணம் கடைசி வரை பிடிக்காமலேயே போய் விடும்.
அதனால் அவன்  அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டான்..ஆனால் திருமணம் எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த விழாவை அதற்க்காக பயன் படுத்திக் கொண்டது
ஆனால் இதிலும் தோல்வியா என்று நினைத்திக் கொண்டே கிஷோர் சிக்கந்தரை பார்க்க..அங்கு அவன் நிலை இவ்வோடு படு மோசமாக இருந்தது.. விட்டால் சிக்கந்தர் மேல் விழுந்து விடுவது போல ஒரு பெண்..இல்லை பெண் இல்லை மத்தியதர வயதில் இருக்கும் ஒரு பெண்மணி..
தன் வயதை குறைக்க செய்த முயற்ச்சியில் படு தோல்வி உற்றவளாய்..அவளின் மூப்பு முகத்தில் தெரிய… சிக்கந்தரின் தோள் மீது கை வைத்து அப்பெண் பேசிக் கொண்டு இருந்தாள்.
நெளிந்த வாறு இருந்த சிக்கந்தர்  தன் ஜீ தன்னை பார்த்ததும்… காப்பாற்று என்பது போல் ஜாடை காட்டினான். கிஷோர் அங்கு செல்லும் போது..ஜமுனா..
“மாமய்யா அவங்க ஜீக்கு ரொம்ப வேண்டியவங்க போல..ரொம்ப க்ளோஸா பேசிட்டு இருக்காங்க..என் கிட்ட தண்ணீ கேட்ட ஜீக்கு கூட தண்ணீ கொடுத்த உடனே அங்கு நிற்காம வந்துட்டேன். நீங்க அப்புறம் போங்க மாமய்யா…” என்று சிக்கந்தரிடம் போக பார்த்த தன் மாமய்யாவையும் தடுத்து நிறுத்த பார்த்தாள் ஜமுனா….
“அய்யோ ஜமுனா அவங்க ஒன்னும் சிக்கந்தருக்கு வேண்டியவங்க கிடையாது.” என்று ஜமுனாவிடம் சொல்லிக் கொண்டே சிக்கந்தரை நோக்கி நடை போட்டான்.
“ரொம்ப  தொட்டு தொட்டு பேசிட்டு இருக்காங்க.” என்று தன் மாமய்யாவிடன்ம் பேசிக் கொண்டே ஜமுனாவும்  அங்கு சென்றாள்..
“நீங்க கவலை படாதிங்க..உங்களுக்கு எப்போ போர் அடித்தாலும் நான் கன்பெனி கொடுக்க ரெடியா இருக்கேன்.” என்று அந்த பெண்மணி சிக்கந்தரிடம் பேசிக் கொண்டு இருக்கும் சமயத்தில் கிஷோரும், ஜமுனாவும் அங்கு சென்றதால்..அந்த வார்த்தை இருவர் காதிலும் விழுந்தது.
“நீங்க கம்பெனி வெச்சி நடத்துறிங்களா….? என்ற ஜமுனாவின் கேள்வியில் அப்பெண்மணி சிக்கந்தர் மட்டுமே அங்கு இருக்கிறான் என்று நினைத்து, அவன் முகத்தை மட்டுமே பார்த்து பேசிக் கொண்டு இருந்தவள்.. இப்பேச்சில் திரும்பி ஜமுனாவை பார்த்தாள்..
ஓ கொஞ்ச நேரம் முன் தண்ணீ எடுத்துட்டு வந்த பெண் என்று சாதரணமாக  மீண்டும் சிக்கந்தரிடம் திரும்ப பார்த்த அப்பெண்மணி ஜமுனா பக்கத்தில் கை கட்டி தன்னை ஏளனமாக பார்த்துக் கொண்டு இருந்த கிஷோரை பார்த்ததும்…
“ஓ ஹாலோ மிஸ்டர்  கிஷோர் எப்படி இருக்கிங்க…?” என்று ஆவளோடு கிஷோர் முன் தன் கை நீட்டினாள். அந்த பெண்ணையும், அவள் கையையும் மாறி மாறி பார்த்தவனின் பார்வையில் அப்பெண் மணியின் கை தன்னால் கீழே இறங்கியது.
இவை ஏதோ படம் போல் பார்த்துக் கொண்டு இருந்த ஜமுனா தன் முந்தைய கேள்வியை மீண்டும் கேட்டாள்… “நீங்க கம்பெனி வெச்சி நட்த்துறிங்களா….?” என்ற ஜமுனா அதோடு விடாது..
“ஜீக்கு உங்க கம்பெனி எல்லாம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்..அவரே சொந்தமா வெச்சி நடத்த போறார்.” என்று ஜமுனா கிஷோரும், சிக்கந்தரும் ஒன்றாய் தொழில் நடத்த போகிறாகள் என்று தனக்கு தெரிந்த கணக்கீட்டின் படி..இப்படி சொல்லி வைத்தாள். ஜமுனா எந்த அர்த்தத்தில் சொன்னாளோ…ஆனால் சிக்கந்தருக்கு அவள் வார்த்தை சரியாக  பொறுந்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
“ஆமாம் ஜாமூன் நீ சொன்னது சரி தான்..நான் எனக்கே எனக்கானத்தை மட்டும் தான் தேடுறேன்.” என்ற சிக்கந்தரின் பதில் யாருக்கு புரிந்த்ததோ அந்த பெண்மணிக்கு புரிந்து விட்ட்து போல்…
“சரி நான் கிளம்புறேன்.” என்று சொன்னதும்…
“கிளம்புங்க..உங்க கணவர் ரொம்ப நேரம் முன்னவே வீட்டுக்கு வந்துட்டாரு போல..எனக்கு போன் போட்டு இன்னுமா பங்கஷன் முடியலேன்னு கேட்டார்.” என்ற கிஷோரின் பேச்சை நம்பலாமா…?வேண்டாமா? >என்பது போல் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே அந்த பெண்மணி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
இந்த விழா சிக்கந்தருக்கு ஏத்த பெண் கிடைக்கவில்லை என்றாலும், சிக்கந்தரின் குடும்பத்திற்க்கு இன்றும் அவனுக்கு பெண் கொடுக்க ரெடியாக இருப்பதை பார்த்து விட்டு தான்  அவர்கள் சென்னை கிளம்பினர்.
அவர்களை வழி அனுப்ப வந்த  போது சிக்கந்தர் தருணிடம்… “என் வக்கீல் நோட்டிஸ் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்…” என்று அடுத்து தன் பேச்சை  தொடராது தருண் முகத்தை பார்த்திருந்தான் சிக்கந்தர்.
“நானும் அதை பத்தி பேசனும் என்று தான் நினைத்தேன். என்ன சிக்கந்தர் இது எல்லாம்…உன் குடும்பத்திற்க்கு நீயே வக்கீல் நோட்டிள் விடுவியா….?இதை யாராவது கேட்டா நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க….?” என்று தருண் வர்மா கேட்டதற்க்கு…
”பெத்த தாயே கருண கொலை செய்ய அனுப்பினதை கேள்வி பட்டப்போ நினச்சதோட இதை ஒன்னும் அவ்வளவு பெருசா நினைக்க மாட்டாங்க..அதனால் அதை பத்தி பெருசா நீ கவலை பட தேவையில்லை ப்ரோ…” என்று தருண் தோளை தட்டிய சிக்கந்தர்..
“நான் அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் படி கேட்டதை கொடுக்க பாருங்க..இல்லேன்னா நான் அடுத்த  ஸ்டெப் எடுக்க வேண்டி இருக்கும் என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தருண் தன் சித்தப்பா ஷ்யாம் வர்மாவின் முகத்தை பார்த்தான்.
“ஓ இதை ஹான்டில் பண்றது நம்ம சித்தப்பூ தானா… “ என்று கேட்ட சிக்கந்தர் தன் பார்வையை ஷ்யாம் மீது செலுத்தி…
“என்ன சித்தூ..இதை அப்படியே விட்டா நானும் அப்படியே விட்டு விடுவேன் என்று நினச்சிங்களா….? இன்னும் நீங்க  யாருமே என்னை புரிஞ்சிக்கலையோன்னு நினைக்கிறேன்…
எனக்கு வேண்டும் என்றால் வேண்டும்..வேண்டாம் என்றால் வேண்டாம் அவ்வளவு தான்… அதனால இதை அப்படியே விட்டா நான் அமைதியா போயிடுவேன் என்று தப்பு கணக்கு எல்லாம் போட வேண்டாம்.”  என்ற சிக்கந்தரின் பேச்சு தன் குடும்பத்தோடு பேசுவது போல் இல்லை.…
ஷ்யாம் தான்… “சிக்கந்தர் எங்களை எல்லாம் நீ தப்பா நினச்சிட்டு இருக்கேன்ன்னு தோனுது..நான் சுபத்ராவை கல்யாணம் செய்தது…” என்று பேசிக் கொண்டு இருந்தவனின் பேச்சை தொடர விடாது சிக்கந்தர்…
“சித்தூ நான் கேட்டது என் அப்பா எனக்காக விட்ட சொத்து..அப்புறம் நான் ஆறுவருடமாய் சம்பாதித்த சொத்து…இதில் உங்க மனைவி எங்கு இருந்து வந்தாங்க…
அப்போவும் சரி இப்போவும் சரி..உங்க மனைவி எல்லாம் எனக்கு ஒரு விசயமே இல்லை…அதனால உங்க கற்பனையை இதோட நிறுத்திட்டு எனக்கு சேர வேண்டியது..நல்லா கேட்டுக்கோங்க எனக்கு சேர வேண்டியது மட்டும் தான் கேக்குறேன்..மத்தவங்களோடது எனக்கு வேண்டாம்.”
இந்த வார்த்தையை சிக்கந்தர்  சுபத்ராவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே தான்  சொன்னான்.அந்த விழாவில் வரும் [போது ஒவ்வொரும் ஒவ்வொரு  மனநிலையில் இருக்க… போகும் போது அதற்க்கு நேர்மாறான மனநிகையில் தான் மும்பை விட்டு சென்றார்கள்.
சிக்கந்தர் புது வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது.அவன் தன் சுயநினைவு வந்து மாதம் மூன்று கடந்து விட்டதும். மருத்துவமனையில் ஒரு மாதமும் கிஷோரின் இல்லத்தில் இரண்டு மாதமும் இருந்தான்.
இந்த மூன்று மாதமும் தனிமை என்று அவன் உணர்ந்ததே இல்லை. விட்ட இடத்தை பிடிக்க தொழில் பின் ஓடியவன். பின்  மீதி நேரத்தை சித்தார்த்திடமும்..தன் ஜீயிடமும்..பின் பாபி…கடைசியில் ஜாமூன் என்று சிக்கந்தர் நினைக்கும் போதே..அவன் நாக்கு தித்திப்பது போல் உணர்ந்தான்.
இங்கு வந்த இந்த ஒரு வாரத்தில் ஜீ தான் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு  இங்கு வந்தாரே ஒழிய பாபியோ…ஜாமூனோ வரவில்லை. “அழைத்து வா ஜீ…” என்று கேட்க தான் நினைத்தான்… ஏனோ ஏதோ ஒரு வித தயக்கம் கேட்காது விட்டு விட்டான்.
இன்று ஞாயிறு எழுந்த உடன் ஜீ வீட்டுக்கு சென்றால் என்ன …?என்று யோசித்தவனுக்கு அவர்கள் ஏதாவது ப்ளான் செய்து இருந்தால்…
தான் இங்கு வநத்தில் இருந்து ஜீ தன் குடும்பத்தோடு தனியாக செல்லவில்லை. அவர்களுக்கு உண்டான இடத்தை நாம் கொடுக்க வேண்டும்..இப்போது அங்கு செல்வதா…? வேண்டாமா… ? அந்த வேண்டாமா என்று அவன் யோசிக்கும் போதே அவன் மனம் சோர்வு உற்றது போல் ஆனது.
தயங்கி தயங்கி தன் பேசியை எடுப்பதும் வைப்பதுமாக இருக்க…அப்படி ஒரு சமயம் அவன் பேசியை எடுக்கவும் ஜீயின் பேசியில் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
உடனே அவன் ஜீயின் அழைப்பை  ஏற்று காதில் வைத்தவன்… “சொல்லுங்க ஜீ.” என்றதும்…
“என்னடா போனை கையிலேயே வெச்சிட்டு இருந்தியா….?” என்று கேட்டவன்..சிக்கந்தரின் பதிலை எதிர் பாராது… “உன்ன பாபி சா[ப்பிட கூப்பிடுறா.. வீட்டுக்கு வா.” என்று கிஷோர் அழைப்பு விடுத்ததும்..
“நானும் அங்கு வரலாம் என்று தான் நினச்சிட்டு இருதேன் ஜீ.” என்று உண்மையை சொன்னதும்..
“நினைக்கிறவன் வர்றதுக்கு என்னடா….” என்று கிஷோர் கேட்டதும்..
“இல்ல இந்த மூன்று மாசமா நீங்க உங்க குடும்பத்தோடு டைம் ஸ்பெண்ட் பண்ணவே இல்ல..அதான்… இன்னைக்கி…” என்று சிக்கந்தர் தன் பேச்சை இழுத்து நிறுத்துனான்.
“ஓ அப்படியா..அப்போ நீ என் குடும்பம் கிடையாதா….?” என்று கிஷோர் கேட்டதற்க்கு…
“ஜீ..ஜீ..” என்ற சிக்கந்தரின் பேச்சை காதில் வாங்க கிஷோர்… “அப்போ நாளைக்கு உனக்கு ஒரு மனைவி வந்தா… நாங்க வர்றது உனக்கு இடஞ்சலா இருக்குமா….?” என்ற கிஷோரின் கேள்விக்கு…
”என்ன ஜீ…இது…?” என்று சிக்கந்தர் வருத்தத்துடன் பேச..
“பின்ன என்னடா பேச்சு பேசிட்டு இருக்க..இங்கு வரனும் என்று  நின்ச்ச்சா உடனே நீ வரனும்..நான் வேலையா வீட்டில் இல்லேன்னாலும் உன் பாபி இருக்கா..உன் சித்தார்த் இருக்கான்..உன் ஜாமூன் இருக்கா அப்புறம் என்ன வர வேண்டியது தானே…” என்ற கிஷோரின் பேச்சை எப்போதும் பேசுவதை விட இன்று பேசியது சிக்கந்தருக்கு பிடித்து இருந்தது.
அதுவும் கிஷோர் சொன்ன.. உன் ஜாமூனில் மெழுகாய் உருகி தான் போனான்.
 

Advertisement