Advertisement

அத்தியாயம்….12 
சிக்கந்தர் … “உனக்கு….” என்று கேட்டதும் புரியாது…
“என்ன ஜீ….?” என்று  ஜமுனா கேட்டாள்.
“இல்ல சித்தார்த் கண்ணுக்கு  நான் ஹீரோவா தெரியிறேன்… உனக்கு நான் எப்படி தெரியிறேன்…” என்று விளக்கமாக சொல்லி விட்டு அவள் என்ன சொல்வாள் என்று ஒரு  வித பட படப்புடன்  தான் சிக்கந்தர் ஜமுனாவின் பதிலுக்கு காத்துக் கொண்டு இருந்தான்.
அவனின் இந்த பட படப்பு எல்லாம் ஒன்றும் இல்லை என்ற வகையாக…. “நீங்க எனக்கு ஜீ….” என்று சொன்னதும்… ஜமுனாவின் அந்த பதிலில் ஏதோ பாதிக்கப்பட்டவனாய்…
“நான் உனக்கும் ஒண்ணும் ஜீ இல்ல.” என்று சிக்கந்தர் ஜமுனாவிடம் எரிந்து விழுந்தான்.
நாம் என்ன சொன்னோம்…இதற்க்கு இவர் இப்படி கோபப்படுறார். நாம கோபப்படாலாவது பரவாயில..சாப்பட்டில் காரத்தை சேர்த்துக்குறோம்…ஜீ உப்பும் இல்லாம… உரைப்பும் இல்லாம …சின்ன பசங்க போல சப்புன்னு தானே சாப்பிடுறார்…இவருக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது….?
அவன் தன் மீது கோப்ப்பட்டதும், நம் எந்த செயல் அவனை கோபமூட்டியது என்றோ..நம் எந்த பேச்சு அவனை கோபமடைய செய்தது என்றோ யோசிக்காது… அவன் சாப்பிடும் சாப்பாட்டை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாள்.
இதன் நடுவில் அந்த ஜூஸ் யாரும் குடிக்காது அப்படியே இருந்ததை பார்த்து..பேசிய அவர்களுக்கு தாகம் எடுத்ததோ இல்லையோ…இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த சித்தார்த்துக்கு நாக்கு வரண்டு விட… யாரும் குடிக்காத அந்த ஜூஸை தான் எடுத்து குடித்து  முடித்தான்.
அதை பார்த்த ஜமுனா… “ஏய் அது ஜீக்கு எடுத்துட்டு வந்ததுடா…” என்று ஜமுனா சித்தார்த்திடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது…
சிக்கந்தர்… “எனக்கு எடுத்துட்டு வந்ததை அவன் குடிச்சா இப்போ என்ன ஆச்சி…?” என்று சிக்கந்தர் திரும்பவும் ஜமுனாவிடம் எரிச்சல் போல் பேசி வைத்ததில்…
ஓ ஜீக்கு இந்த பெண் முடியலேன்னு ரொம்ப வருத்தம் 
போல்..ஆமாம் இருக்க தானே செய்யும்…இதே அந்த விபத்து ஏற்படலேன்னா இவர் இரு குழந்தைக்கு அப்பா ஆகி இருப்பார்.. இப்போ முதலில் இருந்தா..என்பதே எரிச்சலை தான் ஏற்படுத்தும். அதுவும் பெண் பிடிக்கலேன்னா…எரிச்சல் இருக்க தானே செய்யும்…என்று  சிக்கந்தர் கோபத்திற்க்கு அவளே ஒரு காரணத்தை கற்பித்துக் கொன்டவள்..
மேலும் அவனை இடைஞ்சல் செய்யாது… “சரி டா ஜீ ரெஸ்ட் எடுக்கட்டும்..வா நாம போகலாம்.” என்று  ஜமுனா சித்தார்த்தை கூப்பிட்டாள்.
“போவது என்றால் நீ போ…அவனை ஏன் கூப்பிடுற…” என்று சிக்கந்தர் தன் பேச்சில் அதே நிலையை பின் பற்றினான்.
“இல்ல ஜீ நீங்க ரெஸ்ட் எடுப்பிங்கன்னு தான்….” என்று தன் பேச்சை இழுத்து நிறுத்தியவளிடம்…
“ஆமாம் ஆமாம்.. மனைவி பிளைங்கன்னு பிக்கல் பிடுங்களில் இருக்கேன்…அதனால இப்போ எனக்கு ஓய்வு ரொம்ப தேவை தான்.” என்று ஜமனா நினைத்தது சரி தான் என்பது போல் சிக்கந்தர் பேசி வைக்க…
சிக்கந்தரின் இந்த பேச்சை  அறையில் இருந்த ஜமுனா சித்தார்  மட்டும் கேட்கவில்லை. சிக்கந்தரின் மனதில்   என்ன இருக்கிறது என்று தெரியாது வேறு வேலை பார்க்க முடியாது என்று  நினைத்த கிஷோர் சிக்கந்தரின் மனநிலையை பற்றி அறிய வந்தவனின் காதிலும், சிக்கந்தரின்  இந்த பேச்சு விழுந்தது. பின் கிஷோர் கேட்க வந்ததை கேட்காது  சென்று விட்டான். 
ஜமுனாவும் சிக்கந்தரின் பேச்சில் தான் நினைத்தது தான் சரி…மாமய்யா கிட்ட இதை பற்றி பேச வேண்டும் என்ற முடிவோடு… “சரிங்க ஜீ நீங்க ரிலாக்ஸ் ஆக சித்தார்த்திடம் பேசிட்டு இருங்க…” போகும்  போது சும்மா போகாது ஜமுனா வாயை விட…
“நான் என்ன இப்போ டென்ஷனில் இருக்கேன்னு..என்னை ரிலேக்ஸ் பண்ண சொல்ற….” என்று தன் முந்தைய பேச்சைய தொடர…
“சரி ஜீ..சரி…நீங்க டென்ஷனாவே இல்ல..நான் தான் டென்ஷனில் ஏதோ சொல்லிட்டேன்.” என்றூ அவனுக்கு தகுந்த படி பேசி ஒரு வழியாக அங்கு இருந்து வந்தவள் நேராக வந்த இடம்..தன் மாமய்யாவின் அறைக்கு முன்.
 வாசலில் நின்றவள்… கதவை தட்டி விட்டு…அவர்களின் அழைப்பிற்க்காக காத்திருக்க… கதவை திறந்த நிஷா…
“என்ன இது யாரோ போல கதவை எல்லாம் தட்டிட்டு…” என்று ஜமுனாவை அதட்டிய நிஷா..
பின் “உள்ளே வா…” என்று அழைத்தாள்.
ஜமுனா அந்த அறையில் போகும் போது கிஷோர் கட்டில் மேல் அமர்ந்து தன் மடியில் தலைகாணியை தாங்கியவனாய் ஏதோ பலத்த யோசனையில் இருப்பதை பார்த்து… நாம இப்போ இதை பற்றி பேசலாமா…வேண்டாமா…?” என்று யோசித்தாள்.
அப்போது கிஷோர்… “நீயே ஜமுனா கிட்ட கேளு..அவன் என்ன சொன்னான்னு…” என்று நிஷாவிடம் சொன்னான்.
நிஷா ஜமுனாவிடம்…”சிக்கந்தர் உன்னிடம் ஏதோ சொன்னான் என்று உன் மாமய்யா சொல்றாரு..என்ன சொன்னார்….?” என்று கேட்டதும்..
நான் இதற்க்கு தானே வந்தேன் என்பது போல் ஜமுனா… “அட்டம்மா ஜீக்கு சீக்கிரம் கல்யாணம் செஞ்சிடனும்… அவர்ட் ரொம்ப பாவம் தெரியுமா…இந்நேரம் அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணோட கல்யாணம் ஆகி இருந்தா….இவ்வளவு பெரிய பசங்க கூட அவருக்கு இருந்து இருக்கும்.” என்று ஜமுனா சொல்லி விட்டு…
தான் அறிந்தது பாதியும்…சிக்கந்தர் சொன்னது மீதியுமாய் சொல்லி விட்டு  “சீக்கிரம் பெண் பாருங்க மாமய்யா…” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது…
போகும் போது… “அவர் போன் போட்டு அவர் வீட்டை அலங்காரம் செய்யிறவங்க கிட்ட சீக்கிரம் செஞ்சு முடிங்கன்னு சொல்றாரு…நீங்க நல்ல பெண்ணா காட்டலேன்னு அவர் கோச்சிட்டு போகுறாரோன்னு எனக்கு தோனுது மாமய்யா…” என்று போகும் போது  பத்த வைத்து விட்டும் சென்றாள்..
ஜமுனா சொன்னது போல் கோபம் கொண்டு செல்கிறான் என்று எல்லாம் கிஷோர் என்ன வில்லை ஆனால் அவன் மனதில் என்னவோ இருக்கிறது. அதுவும் தன்னிடம் கூட சொல்ல முடியாத விசயம்…என்று மட்டும் புரிந்துக் கொண்ட கிஷோர்..
எது என்றாலும் அவனாகவே  சொல்லட்டும். அவன் சொல்லுவான்… அதற்க்குள் அவனுக்கு ஏற்றது போல் பெண்ணை பார்க்க வேண்டும் என்று முடிவு கட்டியவனாய்…தன் தொழில்லோடு  தீவிரமாக பெண் பார்க்கும் படலத்திலும் ஈடுப்பட்டான்.
அதற்க்குள் சிக்கந்தரின் வீடு அவன் நினைத்தது போல் அழகு பெற்று அவனிடம் வந்து சேர்ந்தது. நிஷா தான் நல்ல நாள் பார்த்து அவன் வீட்டு கிரகபிரவேசம் செய்ய நாள் குறித்தாள். சிக்கந்தர்… “எதுக்கு பாபி..நாம மட்டும் பால் காய்ச்சினா போதாத…?” என்று கேட்ட்தற்க்கு…
“ஒரு சிலது இது போல் விமர்சனையா செய்யனும் சிக்கந்தர்…” என்று சொன்ன நிஷாவின் பேச்சில் அனைத்தும் தடபுடலாக செய்தான் சிக்கந்தர். இதற்க்கு நடுவில் கிஷோரோடு  சேர்ந்து அந்த கார் லான்ச் செய்யும்  வேலையிலும் இருவரும் தீவிரமாக இறங்கினர்.
நான்கு நாட்களில் ஆவ்வீட்டுக்கு போக வேண்டும் என்று நினைத்தவனை, ஒரு மாதம் கழித்தே நல்ல நாள் என்று சொல்லி நிஷா குறித்து வைத்த அந்த நல்ல நாளில் சிக்கந்தரின் வீட்டு கிரகபிரவேசம் நடைப்பெற்றது.
முதலில் பசுவை  அதன் கன்னுக்குட்டியோடு அந்த வீட்டில் நுழைய வைத்த  பிரோகிதர்..
பின் சிக்கந்தரை பார்த்து… “உங்க மனைவியோடு வலது காலை எடுத்து வாப்பா…” என்று சொன்னதும்.. சிக்கந்தர் அப்படியே நின்று விட்டான்.அனைவரையும் அழைத்த நிஷா சிக்கந்தரின் வீட்டு ஆட்களையும் தான் அழைத்து இருந்தாள்.
பிரோகிதர் சொன்னதை கேட்ட சிக்கந்தரின் அன்னை… “தருண் நீ உன் மனைவியோடு போப்பா…” என்று சொன்னதும் தருண் தன் மனைவியின் கை பற்றியவனாய் அந்த வீட்டை ஆசையோடு என்பதை விட  பேராசையோடு பார்த்துக் கொண்டே உள் நுழைய பார்த்தான்.
ஆம் பார்த்தான் தான் ஆனால் உள் நுழையும் முன் சிக்கந்தர்… “தருண் நில்.” என்றான்.
அதை கேட்ட அவன் அன்னை… “சிக்கந்தர் புது வீட்டுக்கு தனியா போக கூடாது. துணையோட தான் போகனும்.” என்று அவன் அன்னை சொல்லும் போதே அவனின் பார்வை தன்னால் ஜமுனாவை தொட்டு மீண்டது.
தன் நிலையையும், இருக்கும் நிலையையும் புரிந்துக் கொண்டவனாய் சட்டென்று தன் மனநிலையை மாற்றிக் கொண்ட சிக்கந்தர் தன் அன்னையை  பார்த்து…
“ம் தெரியும் மாம்…துணையோட போகனும் என்று தெரியும்.” என்று தன் அன்னையை பார்த்து சொன்ன சிக்கந்தர்…
 தன் ஜீயை பார்த்து… “ஜீ நீங்க பாபியோட முதல்ல வீட்டுக்குள் போங்க.” என்று சொன்னதும் நிஷா தயங்கி நின்றாள். ஆனால் அந்த தயக்கம் கிஷோருக்கு இல்லை.
“டாலி வா…” என்று நிஷாவின்  வலது கை பற்றியவன் இடது கையை சிக்கந்தரை நோக்கி நீட்டினான்..சிரித்துக் கொண்டே அந்த கையை இறுக பற்றிக் கொண்ட சிக்கந்தர், ஜமுனாவையும், அவள் கை பற்றி நின்றுக் கொண்டு இருந்த சித்தார்த்தையும் பார்த்தான்..
அழைக்கலாமா…? இதே அவன் மனதில் எதுவும் இல்லை என்றால்.. “ஜாமூன் வா…” என்று அழைத்திருப்பான். கள்ளம் புகுந்த உள்ளத்தில் எப்போதும் ஒரு தடு மாற்றம் இருக்க தான் செய்யும். அந்த தடுமாற்றத்தின் விளைவாய்… சிக்கந்தர் அழைக்க தயங்கினான்.
ஆனால் அந்த தயக்கம்  எல்லாம் நிஷாவுக்கு இல்லை… “ஜமுனா வா…” என்று தன் கையை அவள் பக்கம் நீட்ட… தயங்கி நின்ற ஜமுனாவை இப்போது… “ஜாமூன்…” என்று சிக்கந்தர் அழுத்தி கூப்பிட்டதும்..
சித்தார்த்தை பிடித்துக் கொண்டு ஓடி வந்தவள் தன் அட்டம்மாவின் கை பற்றியவளாய்…ஐவருமாய் அந்த வீட்டில்  தங்கள் வலது காலை எடுத்து வைத்து அடி எடுத்து வைத்தனர்.
அதை பார்த்த சிக்கந்தரின் குடும்பத்திற்க்கு வயிறு எரிந்தது. அதுவும் இவ்வீடு தவறு தவறு மாளிகை. தன் கணவர் கட்டியது மனைவிக்கு தெரியாது..மகனாய் தருணுக்கு கூட தெரியாது.
வாங்கியவர் அனைத்து பொறுப்பையும் கிஷோரிடம் விட்டு விட்டு இதோ மூன்று நாள் முன் அதுவும் கிஷோர் போனில் அழைத்து தன் கணவர் கட்டிய வீட்டுக்கு வர வேண்டி உள்ளது என்று வந்தவர்.
அந்த வீட்டை பார்த்து வாய் அடைத்து நின்று விட்டார்.அவர் மட்டும் அல்லாது தருண்… மிஸஸ் தருண்…ஷ்யாம்..மிஸஸ் ஷ்யாம்… என்று  அனைவரும் மலைத்து விட்டனர்.
வர்மாவே அவ்வீட்டை சிக்கந்தரின் ரசனைக்கு ஏற்ப அழகுற கட்டி விட்டு தான் சென்றார். அழகுக்கு அழகு சேர்ப்பது போல் சிக்கந்தர் தன் ரசனையை வீட்டு அலங்காரத்தில் காட்ட… வீட்டின் வெளியே பார்த்தே…இவ்வளவு பெரியதா…?
அதுவும் இந்த இடத்தில் என்றூ மலைத்து போனவர்கள். அந்த வீட்டின்  உள் அலங்காரத்தை பார்த்து இன்னும் இன்னும் மலைத்து தான் போனார்கள்.
அதுவும் தருண் தன் அன்னை… “நீ உன் மனைவியோடு போ…” என்று சொன்னதும்..தருணுக்கு சிக்கந்தரின் இந்த தனியாளாய் நிற்க்கும் இந்த நிலையை பார்த்து..
அவன் மனதில் ஏதேதோ எண்ண வைத்து மிக மகிழ்ச்சியுடன் தன் மனைவியின் கை பற்றியவனின் நினைப்பில் தீயை வைப்பது போல… 
கூட பிறந்த தன்னோடு… “ஜீ..ஜீ…” அவன் என்ன பெரியவன் என்று மனதில் பொறுமி கொண்டு வந்தவன்..அதை மனதில் மட்டும் நினைக்காது சிக்கந்தரிடம் கேட்டும் விட்டான்.
“உனக்கு  அண்ணன் என்னோட உன் ஜீ பெருசா….?” என்று..
“கொஞ்சம் கூட யோசிக்காது தயங்காது… “கண்டிப்பா…” என்று  சிக்கந்தர் சொல்லி விட்டான்.
“நீ ரொம்ப உன் ஜீயை நம்புற..பாரு ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் பட்ட நாமத்தை உம் நெத்தியில் தீட்ட போறார்.” என்று அண்ணன் தம்பி பேசிக் கொண்டு இருக்கும் வேளையில்..அவர்கள் ஊர் பழக்கப்படி பிரோகிதர் கொடுத்த குங்மத்தில் நீரை ஊற்றி  கலக்கிய  ஜமுனா சிக்கந்தருக்கு நெற்றி முழுவது ஒரே  இழுவையாக இழுத்து  வைத்து விட்டு சென்று விட்டாள்.
அதை பார்த்த தருண் முறைத்தான் என்றால், சிக்கந்தர் சிரித்து விட்டான்… “சிரிடா சிரி..நான் சொல்லி வாய் மூடல தோ இழுத்துட்டு போயிட்டாளே…” என்று தருண் கடுப்புடன் சொன்னான்.
அதை கேட்டும் தன் சிரிப்பை நிறுத்தாது இருக்க… “சிக்கந்தர் உனக்கு குடும்பம் இல்லை. அதை அவங்க தனக்கு சாதகமா பயன் படுத்திக்க பார்க்குறாங்க…”  தன்னை போல் தான் பிறர் இருப்பர் என்ற நினைப்பை மெய்ப்பிக்கும் வகையில் தருண் வர்மாவின் பேச்சி இருந்தது.
தருண் சொன்ன மற்ற பேச்சை விட்ட சிக்கந்தர்… “தனியான….?” புரியாதது போல் சிக்கந்தர் கேட்டான்.
“தனியான உனக்குன்னு ஒரு குடும்பம் இல்லை. இது வரை உன் கிட்ட இருக்கும் சொத்து..உன் திறமை பத்தி உன் ஜீக்கு ரொம்ப நல்லாவே தெரியும்…அதன் மூலம் இனி வரும் பணம்..உனக்கு பின் அவனுக்கு என்று கணக்கு போட்டு விடுவார்..
இனி தான் போடுவாறோ இல்ல ஏற்கனவே  போட்டு வெச்சிட்டாரோனு தெரியல..இதை ஏன் சொல்றேன்னா நீ தான் முதல்ல  புது வீட்டில் நுழை என்று  அவரை அழைத்தேன்னா..
அவரும் உடனே பெண்டாட்டி கை பிடிச்சிட்டு வந்துட்டாரு பார்..அதை பார்த்து தான் சொல்றேன்..பார்த்து.” என்று  தருண் வர்மா சொன்னான்.
தன் அண்ணனை பேச விட்டு அனைத்தையும் கேட்ட சிக்கந்தர்… “எப்படி…மாம் நீ  முதல்ல வீட்டுக்குள் போ என்று சொன்னது, பாபி கை பிடிச்சிட்டு… அந்த பங்களா இனி தனக்கு தான் என்ற மிதப்போடு கால் வைக்க நினச்சியே அப்படியா….?
இல்ல இவன் தனி கட்டை தானே இவனோடதும் இனி நமக்கு தான் இன்னும் இன்னும் வருவதும் நமக்கு தான் என்று தப்பு கணக்கு போட்டுட்டு இந்த மண்டையில் சில பல ப்ளான் போட்டுட்டு இருக்கியே..அப்படியா….?
ஆ ஒன்று கவனிக்கனும் மாம் உன்னை போக சொல்லும் போது உன் பார்வை என் பக்கம் கூட வரல..உன் கண் மொத்தமும் இந்த இடம் இந்த பங்களா…இது தான் தெரிஞ்சது.
ஆனா என் ஜீ…என்னோடு தான் இந்த வீட்டுக்கு வந்தாரு.. ஆ அப்புறம் ஒண்ணு  சொன்னியே அது என்ன….? என்று யோசிப்பது போல் பாவனை செய்த சிக்கந்தர்..
பின் நியாபகம் வந்தவனாய்…. “நான் தனி கட்டை..இது வரை தனிக்கட்டை இனியும் அப்படியே விட்டு விடலாம் என்று நீங்க  யோசிக்கலாம்..ஆனா என் ஜீ அப்படி நினைக்க மாட்டார். எனக்கு பெண் பார்த்துட்டு இருக்கார்..
இந்த விமர்சனையான விழா கூட அதுக்கு தான் இருக்கும்… என்னோட உன் ஜீ பெருசான்னு கேட்ட..ஆமாம் உன்னோட என் ஜீ தான் எனக்கு பெருசு..எனக்கும் மட்டும் இல்ல நம்ம டாடிக்கும் கூட ஜீ தான் பெருசா  தோனி இருக்கு..
அதான் இந்த வீட்டை கட்டுவது கூட உங்களுக்கு தெரியாது செய்தவர்..இதன் மொத்த பொறுப்பையும் ஜீ கிட்ட  கொடுத்துட்டு போய் இருக்கார்..
அவருக்கே தெரிந்து இருக்கு..தன் மகனிடமோ மனைவியிடமோ இதை கொடுத்தால்… எனக்கு இது இருப்பதே தெரியாது போல செஞ்சி விடுவிங்கன்னு….” என்று பேசிய சிக்கந்தர்…
“இனி ஒரு முறை என் ஜீயை பத்தி தப்பா பேச கூடாது…பேசினா இது போல் பேச்சால் பதில் சொல்லிட்டு இருக்க மாட்டேன்..என்னோட பதிலே வேறு மாதிரி இருக்கும்..என்னை பத்தி தான் உனக்கு தெரியுமே… படுத்து எழுந்தவன்  நினைக்காதே இந்த சிக்கந்தரின் மனது அதே இருபத்தியெழு வயதில் தான் இருக்கு.” என்று சொல்லி விட்டு சென்றான்..
தன் அண்ணனிடம் சொல்லி விட்டு மற்ற விருந்தினர்களை கவனிக்க ஆராம்பித்தவனின் மனதோ என்னுடைய பிரச்சனையே இப்போ அது தானே..என் அறிவுக்கு தெரிகிறது. என் வயது முப்பத்தி ஒன்பது என்று..ஆனால் மனதுக்கு… 
 
 

Advertisement