Advertisement

அத்தியாயம்…11
சிக்கந்தரும் ஜமுனாவின் பேச்சையும் கேட்டு,  அங்கு இருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர். இது வரை இருந்த அந்த குதுகலம் ஏனோ மட்டுப்பட்டு விட்டது. கிஷோருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
கிஷோர் இந்த வீட்டுக்கு  ஒரு நண்பனாய் நிறைய முறை வந்து இருக்கிறான். தான் வந்தால் சுப்ரியா எப்போதும் கவனிக்கும் அந்த கவனிப்பில் “மனதில்…”  என்னடா  இது வம்பு என்று நினைத்துக் கொள்வான்.
காரணம் அப்போது கிஷோர் நிஷாவை விரும்பிக் கொண்டு இருந்தான். தன்னோடு மிக சிறிய பெண் தன்னை கவனிப்பதை முதலில் தவறாய் புரிந்துக் கொண்டான்.
ஒரு முறை சுப்ரியா… “ நீங்க எப்போ வந்தாலும் காபி டீயோடவே போயிடுறிங்க..அடுத்த முறை சாப்பிடுவது போல் வர வேண்டும்.” என்ற சுப்ரியாவின் அதிகப்படியான கவனிப்பில்… 
“பரவாயில்ல சிஸ்டர்…” அந்த சிஸ்ட்டரில் கிஷோர் அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்தான்.
அதை கேட்ட கிஷோர் நண்பன்… “நீ ரொம்ப ஓவரா பண்ணிக்க வேண்டாம்..என் சிஸ்டரோட இந்த கவனிப்பு எல்லாம் உனக்கானது இல்ல…உன் பிரண்ட் சிக்கந்தருக்கானது.” என்று சொன்னதும்…
அன்று  முகத்தில் அசடு வழிய… “ஓ..” என்று சொல்லி வந்து விட்டான்.அவனுக்கு இது எல்லாம் புதியது இல்லை.
ஒரு காலத்தில் அவனுக்கும் இது போல் கேல்ஸ் பேன் இருந்தார்கள். இப்போது சிக்கந்தருக்கு..நாளைக்கு அந்த இடத்தில் இன்னொருவன்…இதை தெரிந்தவன் என்பதால் அதை பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் சிக்கந்தருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நண்பன் வீட்டுக்கு சென்றவன்..சுப்ரியாவை பார்த்ததும் முன் நடந்தது எல்லாம் நினைவில் வர…
சட்டென்று தன் நண்பனிடம் பெண் கேட்டு விட்டான். கிஷோர் பெண்  கேட்கும் போதே  சுப்ரியா முகத்தை பார்க்கவும் தவற வில்லை. அதில் தெரிந்த வெளிச்சத்தில்…
“பெண்ணுக்கு ஒகே…” என்று நினைத்த கிஷோர் சிக்கந்தர் பெண்ணை பார்த்து விட்டு சரி என்று சொன்னால், அடுத்த மாதமே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கிஷோர் திருமணம் வரை சென்று விட்டான்.
இந்த இடம் முடிந்து விடும் என்று கிஷோர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான். காரணம் சுப்ரியாவுக்கு சிக்கந்தரை  பிடித்து இருக்கிறது. சுப்ரியாவும் பார்க்க அழகாக இருக்கிறாள். படித்து இருக்கிறாள். தனியாக தொழில் நடத்தும் அளவுக்கு திறமை உள்ளவள்…
அதனால் இது முடிந்த மாதிரி தான் என்று நினைத்தவனுக்கு, சிக்கந்தரின் இந்த பேச்சில் அடுத்து என்ன பேசுவது என்று தடுமாறி அமைதியாகி விட்டான்.
சிக்கந்தரும் தான் பேசிய பின் தான் யோசித்தான். என் வயதுக்கு இப்பெண் தானே சரி…நான் ஏன் அப்படி சொன்னேன்..நினைத்தேன் என்று வருந்தியவனாய் தன் ஜீயை பார்த்தான்.
கிஷோர் முகத்தில் தெரிந்த தர்மசங்கடமான முக பாவத்தை பார்த்து சிக்கந்தர் பேச வாய் எடுக்கும் முன்.. நிஷா கிஷோர் நண்பனிடமும் சுப்ரியாவிடம்… 
“லன்ச் ரொம்ப நல்லா இருந்தது. யார் செய்தது…?வீட்டு இன்டியர் டெக்ரெஷன் ரொம்ப நல்லா இருக்கு…” என்று யாருக்கும் பாதிப்பு கொடுக்காத அளவுக்கு பேச்சை  கொண்டு சென்றவள் பின்…
“ஒகே அப்போ நாங்க கிளம்புறோம்….” என்று  நிஷா சொல்லவும்..கிஷோரின் நண்பன் எதோ பேச வாய் எடுக்க..அவன் கை  பிடித்து தடுத்து நிறுத்திய சுப்ரியா…
நிஷாவை பார்த்து… “ஒகே போயிட்டு வாங்க..நீங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி….” என்று சொல்லி தன் இரு கை கூப்பி இவர்களை வழி அனுப்பி வைத்தாள்.
அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழையும் போது சுப்ரியா முகத்தில் தெரிந்த அந்த பூரிப்பு இப்போது  இல்லை. ஆனால் முகம் வாடாது… “இது எல்லாம் ஒரு விசயமே இல்லை.” என்பது போல் கைய்யாண்டு இவர்களை வழி அனுப்பி வைத்தாள்.
காரில் அமைதி……அமைதி …அமைதி மட்டுமே…. வழியில் சித்தார்த் தான் ஜமுனாவிடம்… “அக்கா..அக்கா…” என்று ஏதோ பேசிக் கொண்டும்…கேட்டுக் கொண்டும் வந்தான். அதற்க்கு ஜமுனா பதில் சொன்னாலும் காரில் போகும் போது இருந்த உற்சாகம் இல்லாது ஒரு விதமான அமைதியிலேயே அந்த கார் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.
வீட்டில் உள் நுழைந்ததும் சிக்கந்தர்… “சாரி… ஜீ.” என்று கிஷோர் கை பிடித்து மன்னிப்பு கேட்டான்.
“ஏய் விடு. கல்யாணம் செய்துக்கிறவன் நீ உனக்கு அந்த பெண்ணை பிடிக்கலேன்னா…விடு.இதுக்கு எதுக்கு சாரி.” என்று சிக்கந்தரின் வருத்தத்தை போக்க  சொன்னான்.
“இல்ல ஜீ அந்த பெண் அழகா இருக்கா..அவ கிட்ட குறை ஒன்றும் சொல்ல முடியாது..ஏன் அப்படி இது தான் பெண்ணான்னு கேட்டேன்னு தெரியல…” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு  சென்று விட்டான்.
சிக்கந்தருக்கு எப்போதும் பொய் பேசுவது பிடிக்காது. இது வரை பொய் பேசியது இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் கூடிய மட்டும் பொய் பேசுவதை தவிர்த்து விடுவான். அதுவும் தன் ஜீயிடம் உண்மை உண்மை மட்டுமே..
இன்று… அந்த பென்ணை பார்த்தால் எனக்கு அக்கா ப்ளீங் தான் வருது. தன் ஜீயே ஆனாலும் அவனால் சொல்ல முடியவில்லை. உனக்கு மட்டும் என்ன வயது குறச்சலா…? யாரும் கேட்க வேண்டாம்..அது போல் ஒரு பார்வை பார்த்தால் கூட  தன்னால் தாங்க முடியாது என்று தான் தன் அறைக்கு ஓடி வந்து விட்டான்.
தன் முன் இருந்த கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்து…
“என்னடா செஞ்சி வெச்சிட்டு வந்து இருக்க……உனக்காக உன் ஜீ…அவமானப்படனுமா…?உன் கண்ணுக்கு அந்த பெண் அக்கா போல தெரியுதா….? உனக்கு இப்போ இருபத்தியாறு இல்லடா…முப்பத்தி ஒன்பது… முப்பத்தி ஒன்பது வயதுகாரனுக்கு முப்பத்தி ஐந்து வயதுடைய பெண்ணை தான் பார்க்கனும்..
உன் வயசுக்கு ஜாமூன்  மாதிரி சின்ன வயசு பெண் பார்ப்பங்கலா…? என்று அவன் நினைக்கும் போதே…பார்த்தால்…அவன் அடி மனதின் ஆழத்தில் இருந்து ஒரு குரல் கேட்க…
இது  தப்பு . இது ரொம்ப பெரிய தப்பு. இது போல நீ நினைப்பதே உன் ஜீக்கு நீ செய்யும் துரோகம்..அவனின் நியாயமான மனது அவனுக்கு  அப்படி எடுத்துரைத்தது..
உன் கண்ணுக்கு அப்பெண் அக்கா போல தெரிந்தால்..ஜாமூனுக்கு நீ அங்கிள்டா…அத முதல்ல நியாபகத்தில் வைத்துக் கொள். இனி இங்கு இருக்க கூடாது…நம் வீட்டுக்கு சென்று விட வேண்டும்.” என்று நினைத்தவன்..
தன் அப்பா தனக்காக தான் கோமாவில் விழுந்தாலும் என்றாவது எழுவான் என்ற நம்பிக்கையில் தன் பெயரில் கட்டிய வீடு.. இல்லை மாளிகை அது…சிக்கந்தருக்கே அது தெரியாது.
சிக்கந்தருக்கு இங்கும் ஒரு வீடு இருக்கிறது..ஆனால் முக்கியமான இடத்தில் இல்லாது நகரத்தை விட்டு கொஞ்சம் தள்ளி தான்  கட்டிய வீட்டையே அப்போது வாங்கினான்.பெரியதும் அல்லாது சிறியதும் அல்லாத வீடு  அது.
தனி ஒருவனுக்கு அது  மிகையே…தன் திருமணத்திற்க்கு பின் தன் வாழ்க்கை மும்பை தான் என்று முடிவானதில்,…சிக்கந்தர் ஒரு நாள் தன் தந்தையிடம்..
தன் விருப்பதை சொல்லி இந்த இடத்தில் இடம் வாங்கி இது போல் கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறான். பின் நடந்தது…?அது யாரும் எதிர் பாராத ஒன்று…
ஆனால் தன் தந்தை தன் விருப்பதிற்க்கு  ஏற்று இடம் வாங்க அதில் ஒரு மாளிகை கட்டி…அதன் பொறுப்பை கிஷோரிடம் கொடுத்தவர்…
“இது சிக்கந்தருக்காக கட்டியது.” என்று  சொல்லி வர்மா கிஷோரிடன் அதன் வீட்டு சாவீயை  நீட்டியவர்…
“எனக்கு நம்பிக்கை இருக்கு…அவன் மீண்டும் எழுவான்… அவன் வாழ்க்கை மீது அவனுக்கு அப்படி ஒரு விருப்பம்…அந்த விருப்பம் அவனை எழ செய்யும்….
ஆனால் அப்போ நான் இருப்பேனா….?தெரியல..அதான் சாவீயை உன் கிட்ட கொடுக்கிறேன்..அப்போ அப்போ வீட்டை  சுத்தப்படுத்தி வை…என் பின் அவன் உன் பொறுப்பு நீ தான்…” என்று  அன்று தன் ஜீயிடம் சொல்லி சென்ற தன் தந்தையை இன்று நினைத்தால் கூட…
“என்ன தவம்  செய்தேன்….?” என்று தான் சிக்கந்தரால் நினைக்க தோன்றியது.
மும்பை வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் தான் கிஷோர் சிக்கந்தரை அழைத்து தன் தந்தை தனக்கு அளித்த வீட்டை காட்டியது..
தன் கற்பனையின் பிம்பமாய் தன் முன் இருந்த பங்களாவை பார்த்து… “ஜீ இது யார் வீடு…?” என்று அதிர்ச்சியாகி கிஷோரிடம் கேட்டான்.
“உன் வீடு.” என்று சொன்ன ஜீயை இன்னும் அதிர்ந்து போய் சிக்கந்தர் பார்க்க…
“ஆமாம் டா..இது உன் வீடு தான். .உன் அப்பா உனக்காக கட்டின வீடு…இதை சுத்தம் செய்து வைக்கிறேன்..ஆனால் இன்டெரியர் செய்யவில்லை. அது நீ பார்த்து உன் ரசனைக்கு ஏற்ப செய்யலாம் என்று விட்டு விட்டேன்.” என்று சொல்லிய  தன் தந்தை சொன்னதை நினைத்து மகிழ்வதா..
தான் வருவேன் என்று தன் ரசனைக்கு ஏற்ப வீடு இருக்க வேண்டும் என்று காத்திருக்கும் தன் ஜீயின் நம்பிக்கை நினைத்து மகிழ்வதா….? என்று தெரியாது திண்டாடினான் சிக்கந்தர். மொத்தத்தில் மகிழ்ந்து இருந்தான்.
அவ்வீட்டை தனக்கு ஏற்ப மாற்ற கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று அவனுக்கே தெரியும்..அந்த கொஞ்ச நாளுக்காக நான் முன் இருந்த வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்வது முட்டாள் தனம்..
அதுவும் அங்கு வேறு ஒருவரை தன் ஜீ குடி வைத்திருக்க…அவர்களை காலி செய்து விட்டு அங்கு இருக்க அவனுக்கும் விருப்பம் இல்லை..அதோடு இங்கு தன் ஜீ வீடு..தன் வீடு தானே… அதோடு சித்தார்த். தனக்கு ஜீ எப்படியோ அதே போல் அவனுக்கு நான் இருக்க வேண்டும் என்று நினைத்தவனாய்…
இந்த வயதில் ஏற்பட கூடிய மாற்றங்களை கூட ஒரு ஆணாய் சித்தார்த்துக்கு புரிய வைத்து..இப்போது தன் துணை அவனுக்கு தேவை என்று இங்கு தங்கி விட்டான்..
இது தான் காரணங்கள் என்று அவன் மனம் பல சொன்னாலுமே, அவன் மனதின் ஒரு மூலையில் இருக்கும் வேறு ஒரு காரணம்..அது அவ்வ போது வெளி வந்தாலுமே..அதை தட்டி தன் மனதின் ஆழ பகுதியில்  அதை  புதைத்து வைத்து விட்டான்…என்று  நினைத்திருந்தான்.
ஆம் அவன்  அவ்வாறு நினைத்து  இருக்க…இன்று அது இல்லை…தன் முன் இருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்த வாறு…
“நீ நினைப்பது தப்பு… மிகவும் தப்பு….” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்ட சிக்கந்தர். பின் ஏதோ முடிவு செய்தவனாய்…தன் தந்தை கொடுத்த வீட்டுக்கு உள் அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்து இருந்தவனை கை பேசியில்  அழைத்து….
“என்ன முடிந்து விட்டதா….?” என்ரு கேட்டான்.
கை  பேசியின் அந்த பக்கம் இருந்தவனோ சிக்கந்தரின் நிலை புரியாது… “சார் நீங்க தானே பொறுமையா பார்த்து செய்யுங்கன்னு சொன்னிங்க….” என்று சொன்னதற்க்கு..
சிக்கந்தர்… “ஆமாம். நான் தான்  சொன்னேன்..இப்போ எனக்கு உடனே தேவை.” என்று சொன்ன சிக்கந்தரின் பேச்சை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாது முழித்திருந்த அந்த வீட்டு அலங்கார  நிறுவனர்…
வாடிக்கையாளர்கள் என்ன எது போல் பேசினாலும், அவர்களுக்கு ஏற்றது போல் தான் நாம் பேசியாக வேண்டும் என்று தொழிலின் முதல் படியை கற்று இந்த அளவுக்கு உயர்ந்து நிற்க்கும்…
அந்த  அலங்கார வடிவமைப்பாளர்… “நீங்க சொன்னதில் பாதி வேலை முடிஞ்சி இருக்கு சார்…இப்போ நீங்க அவசரம் சொன்னதால….சீக்கிரம் முடிச்சி ஒரு வாரத்தில் கொடுக்க பார்க்கிறேன்.” என்று சொன்னார்.
அதற்க்கும் சிக்கந்தர்… “ஒரு வாரம் எல்லாம் அதிகம். ஒரு நாளு நாட்களில் முடித்து கொடுக்க பாருங்க…அதிகப்பேரை  வைத்தாவது முடித்து கொடுங்க..நான் உங்களுக்கு அதற்க்கு தகுந்தது போல பேமெண்ட் கொடுத்துடுறேன்.” என்று சொன்னதும்…
ஒரு கை தேர்ந்த தொழிலில் வெற்றி பெற்றவராய்… “மூன்று  நாட்களில் முடித்து கொடுத்து விடுவேன் சார்.” என்று சொல்லி  விட்டு பேசியை அணைத்து விட்டார்.
சிக்கந்தர் அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டே கட்டிலில் அமரவும்,, ஜமுனா …சித்தார்த்தின் கை பிடித்துக் கொண்டு.. தனக்கு ஏதாவது கொடுக்க மட்டுமே தன் அறைக்கு வருபவள்…
இன்றும் கையில் பழ ஜூஸை கொண்டு வந்து எப்போதும் தன் கையில் கொடுப்பவள் இன்று அதற்க்கு மாறாய் அங்கு இருக்கும் டீப்பாவின் மீது வைத்து விட்டு…
“இப்போ எதுக்கு ஜீ அவ்வளவு அவசரமா அந்த வீட்டுக்கு போகனும்…?” என்று கேட்ட ஜமுனாவுக்கு சிக்கந்தர் உண்மையான பதிலா  சொல்ல முடியும்….?
சிரித்துக் கொண்டு… “நான் அங்கு போகுறதா தானே இருந்தேன் ஜாமூன்.”  ஜமுனாவின் கை பிடியில் இருந்த சித்தார்த்தை தன் பக்கம் இழுத்த வாறு சொன்னான்.
“அது எனக்கு தெரியாதா…?” என்று கேட்டவள்…
“இப்போ போன் போட்டு இவ்வளவு அவசரமா எதுக்கு போகனும்…?நான் அதை தான் கேட்டேன்.” என்று ஜமுனா  நான் ரொம்ப கோபமா இருக்கேன் என்பது போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டாள்.
சிக்கந்தர் ஜமுனா கேட்டதற்க்கு பதில் சொல்லாது பேச்சை மாற்றும் முயற்ச்சியாய் “ஜாமூன் ரொம்ப கோபமா இருக்க போல…அணல் இங்கு வரை அடிக்குது….அணலை குறைக்க ஜில்லுன்னு ஜூஸ் குடிப்போமா….?” என்று சித்தார்த்திடன் கேட்ட சிக்கந்தர்..
எதிரில் இருந்த ஜூஸை எக்கி எடுக்க பார்க்க..அதற்க்குள்  தான் எடுத்துக் கொண்ட ஜமுனா…. “உங்களுக்கு இன்னைக்கு ஜில்லுன்னே இல்ல..ஒன்லி சூடு தான்.” என்று சொன்னவள்..
“பேச்சை மாத்தாதிங்க ஜீ..எதுக்கு இவ்வளவு அவசரமா போகனும்…?” என்று ஜமுனா திரும்பவும் கேட்டாள்.
எப்போதும் சிக்கந்தர் பொய் பேசும் நிலை வந்தால், கூடிய மட்டும் எதுவும் பேசாது அமைதி காத்திடுவான்..அதையே இன்றும் பின் பற்றினான்.
சிக்கந்தரின் அமைதியை வேறு மாதிரியாக புரிந்துக்  கொண்ட ஜமுனா…. “அந்த பெண் பிடிக்கலே..மாமய்யா தப்பா நினைப்பாருன்னு போறிங்கலா…?” என்று அவளே ஒரு காரணத்தை கண்டு பிடித்து சிக்கந்தரிடன்ம் கேட்டவள்…
“நான் ஒன்னு சொல்லட்டுமா….?” என்று சிக்கந்தரின் காதில் ரகசியம் பேசியவள்…
பின் கண் சிமிட்டி… “பாக்க அழகா தான் இருந்தாங்க. வெள்ளையா ரொம்ப ரொம்ப அழகா தான் இருந்தாங்க..ஆனாலும் எனக்கும் அந்த அக்காவை பிடிக்கல…. “ என்று சொன்னவளின் பேச்சில் சிக்கந்தர்  ஜமுனாவின் முகத்தை  கூர்ந்து  பார்த்தான்.
பின் ஜமுனா தன் பேச்சை மாற்றியவளாய்……. “தப்பு தப்பு அக்கா இல்ல.. ஆன்ட்டி அவங்க பாக்க ஆன்ட்டி போல தான் இருந்தாங்க..வேண்டாம் ஜீ..அழகா தான் இருக்காங்க..ஆனாலும்  அழகா இருக்காங்கன்னு யாராவது ..ஆன்ட்டிய எல்லாம் கல்யாணம்  செய்துக்க முடியுமா…..?” என்று சும்மா இல்லாது கேட்டு வைத்தாள்.
சிக்கந்தர் தலை குனிந்து ஏதோ யோசித்தவன் பின் நிமிர்ந்து ஜமுனாவை பார்த்த வாறு… “அங்கிள் ஆன்ட்டிய தானே கல்யாணம் செய்துக்கனும்….?” என்று ஏதோ ஒரு பதிலை அவளிடம் எதிர் பார்த்தவனாய் கேட்டான்..
“அங்கிளா…?யார் அது…?” என்று கேட்டாள் ஜமுனா…
“எனக்கு வயசு முப்பத்தி ஒன்பது…. முப்பத்தி ஐந்து  வயது அந்த பெண் ஆன்ட்டின்னா..நான் அங்கிள் தானே….?” என்று கேட்ட சிக்கந்தரின் பார்வை ஜமுனாவின் முகத்தில் இன்னும் கூர்மையுடன் படியலாயிற்று…
ஏதோ யோசித்த ஜமுனா… “சீ..சீ நீங்க பாக்க அங்கிள் போல இல்ல….”  என்று சொன்ன ஜமுனா தன் துணைக்கு சித்தார்த்திடம்…
“நீயே சொல்லுடா ஜீ பாக்க அங்கிள் போலவா இருக்கார்…?” என்று கேட்டாள்.
 சிக்கந்தரின் ஜீயின் மகன் என்ன சொல்வான்… “ம் இவர் அங்கிள் இல்ல. என் ஹீரோ….” என்று சொல்லி  சிக்கந்தரின் தோளின் மீது கை போட்டு சாய்ந்த வாக்கில் நின்றுக் கொண்டான்…
“பார்த்திங்களா ஜீ..நீங்க அவனுக்கு ஹீரோவாம்.” என்று சொல்லி விட்டு , ஜமுனா இப்போது தன் கையில் உள்ள ஜூஸை சிக்கந்தரிடம் கொடுத்தாள்.
“உனக்கு…” 
 

Advertisement