Advertisement

அங்கு பட்டு புடவை சர சரக்க தலை நிறைய மல்லிகை பூ சூடி…கையில் கண்ணாடி வளையல் பட்டு புடவைக்கு ஏற்று கை நிற்ய அணிந்துக் கொண்டு வந்து தன் முன் நின்ற ஜமுனா…
தன் கையில் உள்ள ஒரு பண்டல் மல்லிகை பூவை நிஷாவிடம் …  “வெச்சிக்கோங்க அட்டம்மா…”என்று சொல்லி நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்டு நிஷா தன் உடையான ஜீன்ஸையும் கையில் உள்ள பூவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருக்க…
சிக்கந்தர் தான்… “இந்த ட்ரசுக்கு பூ வெச்சா நல்லா இருக்காது ஜாமூன்.” என்று சொன்னதும்…
தன் கன்னத்தில் “தப்பு…தப்பு…” என்று போட்டுக் கொண்டவள்…
“சுமங்கலி பூ வேண்டாமுன்னு சொல்ல கூடாது.” என்று வியாக்கனம் பேசி வைத்தாள்.
அன்று ஒரு வழியாக ஒரு சின்ன துண்டை தன் தலையில் வைத்த நிஷா, பின் மீதம்  இருந்த மொத்த பூவையும்  ஜமுனாவின் அம்மா பட்ததிக்கு சூட்டி…
அவளிடம் இருக்கும்  சுடிதாரிலேயே இருக்கும் நல்லதை ஒன்று மாட்டி விட்டு நிஷா தான் அன்று ஷாபிங்குக்கு அழைத்து சென்றாள்.
அந்த நினைவில் கிஷோர்… “போ..போ..அவங்க எல்லாம் ரொம்ப மாடல்.” என்று சொல்லி தன் மனைவியை  அனுப்பிய கிஷோர்  பின் சிக்கந்தரின் பக்கம் திரும்பி … அப்புறம் என்பது போல் பார்த்தான்.
சிக்கந்தரின் முகத்தில் தெரிந்த  அதிருப்தியை பார்த்த கிஷோர்…. “என்ன சிக்கந்தர்…?” என்று கேட்டதற்க்கு…
“நம்ம ஜாமூன் நல்ல ட்ரஸ் பண்ணிட்டு வரனும் அவ்வளவு தான். ஆனா அவங்க மாடல் நாம அதுக்கு ஏத்தது போல நாம போகனும் என்று எல்லாம் இல்லை.” என்று சிக்கந்தர் சொன்னதும்..
“சரி சரி..நான் சொன்ன விதம் தப்பு…ஒகே வா…” என்று  கிஷோர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
“நாங்க ரெடி.” என்று ஒரு பக்கம் சித்தார்த்தின் கையையும், மறு பக்கம் ஜமுனாவின் கையையும் பற்றிக் கொண்டு  நின்றுக் கொண்டு  இருந்தாள் நிஷா… சிக்கந்தரின் கண் அங்கும் இங்கும் எங்கும் போகவில்லை. அவன் கண் முன் ஜமுனா மட்டுமே தெரிந்தாள்.
சந்தன நிறத்தில் அனார்க்காலி சுடிதார் அணிந்து…அன்று போல் கண்ணாடி வளையல் அணியாமல் முத்து  வளையல் ஒரு கையிலும்..மறு கையில் அன்று ஷாப்பிங் போன போது வாங்கிய மெல்லிய ப்ரேஸ்லேட்டும்…காதில்  வெள்ளை கல் வைத்த கம்மல் போட்டுக் கொண்டு இருந்ததால் அதன் ஜொலிப்பு அவள் கன்னத்தில் பட்டு அந்த கன்னமும் ஜொலிப்பது போல் சிக்கந்தருக்கு தெரிந்தது.  சிக்கந்தர்  ஜமுனாவின் மீது வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டே இருந்தான்.
“ம் கிளம்பலாமா…?” என்று  கிஷோர் சிக்கந்தரிடம் கேட்கவும், ஏதோ கனவுலகில் இருந்து வெளி வந்தவன் போல சிக்கந்தர்…
“எங்கு…?” என்று  கேட்டான்.
“ஏய் பொண்ணு பாக்கடா…” என்று கிஷோர் அதிர்ந்து போய் சொல்லவும் தான்..எதோ  தாக்கத்தில் இருந்து மீண்டவன்..
“தோ ஜீ..ஒரு நிமிடம்.” என்று சொல்லி விட்டு சிக்கந்தர் தன் அறைக்கு சென்றான் என்பதை விட ஓடினான்  என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன என்பது போல்  நிஷா கிஷோரை பார்க்க… “பைனல் டச்சா இருக்கும் டீ…மாப்பிள்ளைலே..அப்புறம் அந்த  பொண்ணு நான் தான் மாப்பிள்ளைன்னு நினச்சிட்டா…அவன் கொஞ்சம் நல்லாவே ட்ரஸ் பண்ணிட்டு வரட்டும்..ஏன்னா  ஐய்யாவோட பர்ஸனாலிட்டி அப்படி…” என்று  கிஷோர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… சிக்கந்தர் அந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்தான்.
 சிக்கந்தர் கிஷோர் சொன்னது போல மேக்கப் எல்லாம் செய்ய வில்லை. போனது போல தான் வந்து நின்றான். பின் ஏன் அவ்வளவு அவசரமா ஓடினான் என்று அனைவரும் நினைத்தனர். பின் அனைவரும் ஒன்று போல்…”ஓ  அதுவா…” என்பது போல் சிக்கந்தரை பார்த்தனர்.
அனைவரும் தன்னை  ஏதோ போல் பார்ப்பதை பார்த்து… “என்ன…?” என்பது  போல்  பார்த்தான். அதுவும் ஜமுனாவின் கண்ணில்  தெரிந்த சிரிப்பில்… “என்ன சிரிப்பு  வேண்டி இருக்கு…?” என்று அதட்டி கேட்டான்.
“இல்ல சின்ன பசங்க போல…இதுக்கு ஓடினிங்கலா…” தன் விரலை ஒன்று என்பது போல் காட்டி சொன்னதும்…
“அடி…” என்று அவளை அடிப்பது போல் கை ஓங்கி சென்றவன் பின் செல்லமாக அவள் தலையில் கை வைத்து பின்  சட்டென்று ஜமுனாவின் தலையில் இருந்து கை எடுத்து விட்டான்.
“ராட்சஸி போக வெச்சிட்டு சின்ன பசங்க  போல செய்யிறத பாரு…” என்று மனதில் முனு முனுங்க…
கிஷோர்… “என்னடா இப்போவாவது போகலாமா…?” என்று கேட்டு அனைவரும் ஒரு வழியாக பெண் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
“ஹாய்  சிக்கந்தர்…” என்று வாசலில் கை நீட்டி வர வேற்றது கல்யாண பெண்ணே..
அது தான் பெண் என்று தெரியாது சிக்கந்தரும் தன் கை நீட்டி… “ஹாலோ…” என்று சொல்லி விட்டு அனைவரும் அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நிஷா சொன்னது போல் அமர்ந்த உடன் சாப்பாட்டு  வேலையை தான் முடித்தனர்.
நம் ஜமுனா தான் என்ன பெண்ணையே காட்டல…அதுக்கு முன்ன சாப்பட்டு கடை பரப்பிட்டாங்க..என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அந்த சாப்பாடு கொஞ்சம் கூட ருசிக்கவில்லை.
ருசிக்க வில்லை என்றதும்…நீங்க உங்க கற்பனை குதிரையை தட்டிட்டு இருப்பிங்க..ஆனா நீங்க நினைப்பது போல் இல்லை. அவளுக்கு ஏற்றார் போல்  சமையல் காரம் சாரமாய் இல்லாது. ரொட்டியையும் ஆளு பராட்டாவையும்…கூட தொட்டுக்க என்று வைத்ததில் காரத்தோடு அதில் இனிப்பு கொஞ்சம் தூக்கலாய் தெரிந்ததால் அம்மணிக்கு சாப்பாடு ருசிக்கவில்லை.
சரி ஏதோ கொடுத்ததை குறை சொல்லாது சாப்பிட்டு முடித்த ஜமுனா நிஷாவிடன்… “அட்டம்மா  என்ன இன்னும் பெண்ணை காட்டவில்லை.” என்று கேட்டாள்.  ஆம் ஜமுனாவுக்கு தங்களை வர வேற்றது பெண் என்று தெரியாது யாரோ வீட்டில் இருப்பவர் என்று நினைத்துக் கொண்டாள். நிஷா பக்கத்தில் அமர்ந்து இருந்தாலும், ஜமுனா கொஞ்சம் சத்தமாக  கேட்டதால் அங்கு இருந்த அனைவரின் காதிலும் விழுந்தது.
ஜமுனா கேட்டதும் சிக்கந்தரும் பெண்ணை காட்டாது என்ன இது…என்று நினைத்துக் கொண்டு இருந்தவன் ஜமுனாவின் பேச்சை பின் தொடர்ந்து… “ஆமாம் எனக்கும் கொஞ்சம் அர்ஜெண்ட் ஒர்க் இருக்கு.” என்று தன் கை கடிகாரத்தை பார்த்த வாறு  சொன்னதும்…அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
கிஷோர்… “ஏய் கை நல்லா நீட்டி பிடிச்சிட்டு இப்போ பெண் காட்டுன்னு சொல்ற…” என்று கேட்டதும்..
சிக்கந்தரும் சரி ஜமுனாவும் சரி அதிர்ந்து போய் எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து… “இவங்களா பெண்….?” என்று  இருவரும் ஒரு சேர கேட்டனர். எதிரில் அமர்ந்து இருந்த அந்த பெண்…சுப்ரியாவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.
அவள் அதிர்வுக்கு காரணம்  அவள் காலேஜ் படிக்கும் போது சிக்கந்தர் மேல் அவ்வளவு க்ரேசியாக இருந்தாள். கிஷோரும் சிக்கந்தரும் மிக நெருக்கம் என்பதாலேயே  அண்ணனின் நண்பனாய் கிஷோர் தன் வீட்டுக்கு வரும் போது எல்லாம் அப்படி உபசரிப்பாள். சிக்கந்தரின் விபத்தில் சுப்ரியாவும்  கொஞ்சம் நாள்..ஒரு மாதிரியாக தான் சுற்றிக் கொண்டு இருந்தாள்.
பின் சிக்கந்தரின் மேல் இருந்த க்ரேஸ் அவன் இடத்தில் வந்த இன்னொருவன் மேல் வந்தது.பின் காலேஜ் முடித்து தன் அண்ணனோடு தொழிலை பார்த்ததில் இந்த  க்ரேஸி எல்லாம் மறைந்து..வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்துக் கொண்டு விட்டாள்.
என்ன காரனமோ…சுப்ரியாவுக்கு முப்பத்தை ஐந்து வயதை கடந்தும்  ஏதாவது ஒரு காரணத்தால் அவள் திருமணம் தடைப்பட்டு கொண்டு இருந்தது. போன வாரம் கிஷோர் வந்து…
தன் அண்ணனிடம் “உனக்கு சிக்கந்தர் தெரியும் தானே,..?” என்று கேட்க..
“ம் தெரியுமே…  கார் ரேஸர்…உனக்கும் ரொம்ப க்ளோஸ்..கார் விபத்தாகி  பதிமூன்று வருடம் கழித்து முழித்து இருக்கான்… இப்போ நீயும் அவனும் சேர்ந்து புது கார் லான்ச் செய்ய போங்க..இப்போ மும்பையில்  இது தானே பேச்சு கிஷோர்.” என்று தனக்கு தெரிந்த விவரம் அனைத்தையும் சொல்லி விட்டு…
பின்… “இப்போ என்ன சிக்கந்தரை பத்தி என் கிட்ட கேட்குற…?” என்று தன் அண்ணன் கேள்விக்கு… 
அன்று  கிஷோர் என்னை  பார்த்துக் கொண்டே… “அவனுக்கு பெண் பார்க்கிறேன்..நீயும்  உன் தங்கைக்கு இடம் பார்த்துட்டு தானே இருக்க…” என்று கிஷோர் சொன்னதுமே,  அவர் என்ன சொல்ல வருகிறார் என்று  புரிந்துக் கொண்ட என் அண்ணன் என்னை திரும்பி பார்த்ததும்..
என் கண்னில் தெரிந்த மகிழ்ச்சியில் “ம் பார்த்துடலாம்.” என்று என் அண்ணன் சொன்னதற்க்கு…கிஷோர்.. “ஜாதகம்  அது போல்… “ என்று தன் பேச்சை கிஷோர்  இழுத்து  நிறுத்தவும்..
“அது எல்லாம் வேண்டாம். இரண்டு  பேருக்குமே வயசு ஆயிடுச்சி…இனி அது எல்லாம் பார்க்க வேண்டாம்.” என்று தன் அண்ணன் சொன்னதும்…
கிஷோர்…   “சரி  அடுத்த வாரம்  வர்றோம். எல்லாம் பேசி முடிச்சிடலாம்.” என்று  இந்த இடம் முடிந்தது போல் பேசி சென்ற அன்றில் இருந்து, இந்த ஒரு வாரமும் இந்த ஏழு நாட்களையும் சுப்ரியா  எப்படி கடத்தினாள் என்று அவளுக்கு மட்டுமே  தெரியும்.
பத்து வருடத்திற்க்கு மேல் தனியாக தொழிலை எடுத்து நடத்துக்கிறாள்… முதலில் கல்யாணம் தட்டி கழித்த போது எல்லாம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கையா…? தொழிலில் கொடுத்த வெற்றி அவளை அவ்வாறு நினைக்க தோன்றியது.
ஆனால் கடந்த ஒரு வாரமாய் சிக்கந்தர் அடுத்த வாரம் தன்னை பார்க்க வருகிறான் என்று தெரிந்த நாள் தொட்டு… இதோ இன்று இவன் முன் அமர்ந்து இருக்கும் இந்த நேரம் வரை… டீன்  ஏஜ் பெண் போல்…ஏதோ சொல்வாங்கலே வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குதுன்னு அது போல பறந்து..
இன்று காலையில் இருந்து… “அண்ணா அவங்க ஏன் இன்னும் வரல. போன் போடு…”  என்று சொன்ன தன்னை  அண்ணன் பார்த்த பார்வையை கூட பொருட்படுத்தாது…
“போன் போடுங்க…” என்று சொல்லி விட்டு இதோ அவர்கள் வந்ததும் முதல் ஆளாய் வர வேற்று அமர வைத்தால்…பெண் நான் என்றதும் அதிர்ந்து போகிறான்.. நான் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கேன்….?
அதுவும் சாதரணமாக இருக்கும் இந்த பெண் கூட அதிர்ந்து இவங்க தான் பெண்ணா…? என்று கேட்கிறாள். என்று அவள் நினைக்க…அவள் நினைத்தது போல் அவள் மோசம் எல்லாம் இல்லை
இன்னும் சொல்ல  போனால் பால் நிறம் என்பார்களே அது போல் வெள்ளை நிறத்தில் சும்மா  மெழுகு பொம்மை போல் பார்க்க அவ்வளவு அழகாக தான் இருக்கிறாள். என்ன ஒன்று அவள்  அழகோடு அவள் வயதும் சேர்த்தே அனைவருக்கும் தெரிவது போல் இருந்தாள்.
சிக்கந்தர் தன் வயதை மறந்து… என்ன  என்னோட வயது அதிகமா இருக்காங்க…?என்று நினைத்து அதிர்ந்தான்  என்றால்… ஜமுனா…என்னது பெண் மாப்பிள்ளையின் கை கொடுத்து வர வேற்ப்பாங்கலா…என்று நினைத்து அதிர்ந்து கேட்டாள்.
 
 
 

Advertisement