Advertisement

அத்தியாயம்….10 
சமையல் அறையில் ஏதோ பாத்திரத்தை உருட்டிக் கொண்டு இருந்த ஜமுனாவிடம் வந்த நிஷா… “இன்னும்  இங்கு என்ன செய்யிற …?” என்று கேட்டாள்.
“அட்டம்மா மதியத்துக்கு ஏதாவது செய்து வெச்சிட்டு போயிடலாமுன்னு…” என்ற ஜமுனாவின் பேச்சில் நிஷா முறைத்து பார்த்தாள்.
“இல்ல அட்டம்மா இப்போ எல்லாம் நான் காரத்த ரொம்ப கம்மியா தான் போடுறேன்.” என்று நிஷா முறைத்து பார்த்ததிற்க்கு இது தான் காரணம் என்று  நினைத்து ஜமுனா சொன்னாள்.
“நான் அதுக்கு முறைக்கல…சரியா சாப்பிடும் நேரத்துக்கு தான்  அங்கு  போறோம். சாப்பிடாம அனுப்ப மாட்டாங்க..நீ என்ன என்றால் சமச்சிட்டு வர்றேன்னு சொல்ற…முதல போய் நல்லா ட்ரஸ்ஸா போடு.” என்று ஜமுனாவை அவள் அறைக்கு அனுப்ப பார்த்தாள்.
அப்போது கூட ஜமுனா போகாது தயங்கி நின்றவளை பார்த்து… “என்ன ஜமுனா  போக டைம் ஆயிடுச்சி.” என்று சொல்லி ஜமுனாவை ரெடியாக விரட்டினாள்.
“இல்ல அட்டம்மா இடம் முடியாம கை நினைக்கலாமா…?” என்ற ஜமுனாவின் பேச்சு புரியாது…
“நீ என்ன சொல்ல வர்றேன்னு  எனக்கு புரியல ஜமுனா…” என்று  நிஷா கேட்ட்தற்க்கு..
“இல்ல ஜீக்கு பெண்ணை பிடிக்கனும். அந்த பெண்ணுக்கு நம்ம ஜீயை பிடிக்கனும். அப்புறம் தானே நம்ம  அங்க கை நனைக்கனும்.” என்று தங்க ஊரின் பின் பற்றுஜ் முறையை ஜமுனா சொன்னாள்.
அதை கேட்ட சிரித்த நிஷா… “நீ எந்த காலத்தில் இருக்க ஜீ…முதல்ல இப்போ நாம போகு இடம் உன் மாமய்யாவோட பிரண்ட் வீடு தான்..அதனால  இது ஒரு பிரன்லி விசிட்டும் கூட…
அது மட்டும் இல்லாது  நாம பார்க்கும் பெண்ணை நான் ஏற்கனவே பார்த்து இருக்கேன். ரொம்ப அழகா இருப்பா…குறை சொல்லும் படி அவ கிட்ட எதுய்வும் இல்ல.
அந்த பெண்ணுக்கும் சிக்கந்தரை பிடிக்கும்.  ஏன்னா அவ காலேஜ் டேஸ்ல சிக்கந்தர் மேல அவ்வளவு கிரேஸியா இருந்து இருக்கா…அதனால இந்த இடம் முடிந்தது போல் தான்.” என்று நிஷா சொல்லவும்…
“சரி அட்டம்மா அப்பன்னா நான் சிக்கிடம் ரெடியாகிட்டு வர்றேன்.” என்று சொல்லி ஜமுனா அவள் அறைக்கு சென்றாள்.
 நிஷா பின் என்ன நினைத்தாளோ … நிஷா ஜமுனாவின் அறை நோக்கி சென்றாள். ஹாலில் கிஷோரும், சிக்கந்தரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
அவர்களை தான்டி செல்ல பார்த்த நிஷாவை அழைத்த கிஷோர்… “கிளம்பாம என்ன கேட் வாக் செய்துட்டு இருக்கே…” என்று கேட்டதும்..
அவன் எதிரில் போய் இடுப்பில் கை வைத்து நின்ற நிஷா… “நான் ..நான் கேட் வாக் செய்யிறேன்…” என்று  தன் நெஞ்சின் மீது கை வைத்து கேட்டாள்  நிஷா.
“பின்ன என்ன டாலி…இப்போ கூட என் பிரண்ட் போன் செய்து இன்னும் கிளம்பிளையான்னு கேட்டுட்டான். நீ என்ன என்றால் இங்கு நடை பழகிட்டு இருக்க…” கிஷோர் திரும்பவும் வாய் விட்டான்.
“ம் சொல்லுவிங்க..நீங்க இதுவும் சொல்லுவீங்க. இதுக்கு மேலயும் சொல்லுவிங்க.” என்று மூச்சு வாங்க பேசிய நிஷா  தொடர்ந்து…
“உங்க அக்கா கூத்துரு…” சிக்கந்தர் போல்  நிஷா பேச ஆராம்பிக்க.. இந்த பேச்சில் கிஷோர்  சிக்கந்தரை பார்த்து முறைத்தான்.
அதை பார்த்த சிக்கந்தர்… “முறைப்பு எல்லாம் இங்கே தான்..உங்க டாலி பேச்சை கவனிங்க. இல்லேன்னா முறைக்கிறதோடு சேர்த்து அடியும் விழும் ஜீ.” என்று சிக்கந்தர் சொன்னதும்.. தன் முறைப்பை கை விட்ட கிஷோர் தன் மனைவியை பார்த்தான்.
விட்ட இடத்தில் இருந்து நிஷா… “உங்க அக்கா கூத்துரு கிச்சனில் மதியத்துக்கு சாப்பாடு செய்யிறேன் என்று பாத்திரத்தை உருட்டிட்டு இருந்தா…” என்று நிஷா சொன்னதும்…
சிக்கந்தர்… “என்னது மதியத்துக்கு ஜாமூன் சமைக்குதா…?” என்று அதிர்ந்து போய் கேட்டான்.
“கவலை படாதே சிக்கந்தர் அவளை ஒரு வழியா பேசி கிளம்புன்னு அனுப்பிட்டு…” என்ற நிஷாவின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய கிஷோர்..
“அதை தான் அவளை கிளம்ப சொல்லிட்டளே..பின் நீ ஏன் கிளம்பாம இருக்க…” என்று கேட்டான்.
ஏற்கனவே  கிஷோரை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்த நிஷா…இன்னும்  கூடுதலாய் முறைத்து விட்டு…
“ம் போன முறை நாம வெளியில் போகும் போது அவள் பண்ணிட்டு வந்த ட்ரஸை பார்த்திங்க தானே…? அது தான் இப்போ நான்  போன முறை ஷாப்பிங் செய்த போது அவளுக்கு எடுத்த ட்ரசில் நல்லதா பார்த்து எடுத்து கொடுத்துட்டு… அவளை கொஞ்சம் ரெடி பண்ணலாமுன்னு அவ ரூமுக்கு போறேன்..
இப்போ சொல்லுங்க. நான் கேட் வாக் செய்யாம அப்படியே வெளியே கிளம்பி போகட்டுமா…?என்று  நிஷா கேட்டாள்.
தன் தலையில் கை வைத்து அமர்ந்துக் கொண்ட கிஷோர்… “சாரி டாலி..சாரி. என் டாலி எது செஞ்சாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்டா..ஆனா பாரேன் நான்  தான் அப்போ அப்போ தெரியாம வாய் விட்டு இது போல் மாட்டிட்டு முழிக்கிறேன்” என்று சமாதனம் பேசி  கிஷோர் தன் மனைவியை ஜமுனாவின் அறைக்கு அனுப்பி வைத்தான்.
நிஷா செல்வதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த சிக்கந்தரை பார்த்து… “இப்போ ஏன்டா சிரிக்கிற…?” என்று கேட்டவன் தானும் சிரித்தான்.
“இல்ல ஜீ  பாபி சொன்னாங்கல..போன முறை ஜாமூன்  பண்ணிட்டு வந்த  ட்ரஸை பத்தி..அது நினச்சி தான் சிரிக்கிறேன் ஜீ…” என்று சொன்ன சிக்கந்தர்  திரும்பவும் அடக்க மாட்டமல் சிரித்து வைத்தான்.
“அவளுக்கு இங்கு இருக்கும் நிலமை  தெரியாதுடா…கிராமத்திலேயே இருந்த பெண். இங்கு செட்டாக கொஞ்சம் காலம் பிடிக்கும்.” என்று கிஷோர் சொன்னதற்க்கு…
“நீங்க ஜாமூனை அங்கயே விட்டுட்டு  இருந்து இருக்க கூடாது ஜீ..இங்கேயே வெச்சிட்டு இல்லேன்னாலும், அப்போ அப்போ அழைச்சிட்டு வந்து இருக்கலாம்.” என்று சிக்கந்தரின் பேச்சு.. கிஷோருக்கு செய்து இருக்கலாம் என்று தான் தோன்றியது.
சிக்கந்தரும், ஜமுனாவும் அதோ இதோ என்று மும்பை  வந்து இதோ ஒரு மாதம் கடந்து விட்டது. வந்த அந்த வாரத்திலேயே… நிஷா என்ன நினைத்தாளோ கிஷோரிடம்..
“கிஷோர் நான் ஜமுனாவை கூட்டிட்டு ஷாப்பிங் போயிட்டு வர்றேன்.” என்று சொன்னாள்.
அதை கேட்ட கிஷோர்… “இப்போவா…?” என்று  கிஷோர் கேட்டதற்க்கும் காரணம் இருக்கிறது.
நிஷா அண்ணன் இறந்து  பத்து நாள் தான் ஆகிறது. அப்படி இருக்கும் போது ஷாப்பிங்..அதுவும் நிஷா இப்படி எல்லாம் கேட்பவள் இல்லையே என்று அவன் யோசனையுடன் தன் மனைவியை பார்த்தான்.
நிஷா அப்போது தான் தன் மாமய்யாவுக்கு காபியை கொண்டு வந்த ஜமுனாவை கண் காட்டினாள். கிஷோரும் அப்போது தான் ஜமுனாவை உற்று பார்த்தான்.
உற்று பார்த்தான் என்றால், இது வரை ஜமுனாவின் முகத்தை மட்டுமே பார்த்து அவள் முகத்தில் கவலை பட்டால்…அவள் தன் தாயின் நினைவில் கவலை கொள்கிறாளோ என்று நினைத்து  “என்னடா…?” என்று கேட்பான்.
 தனியாக அமர்ந்து இருந்தால் தன் மகனை அவளிடம் அனுப்பி வைப்பான்.இப்படி கிஷோர் தன் அக்கா மகள் ஜமுனாவை பார்த்து பார்த்து தான் கவனித்தான்.
ஆனால் பெண்களுக்கே உண்டான  அந்த கவனிப்பு  கிஷோரிடம் இல்லை. ஜமுனா அணிந்த உடை எல்லாம் மிக மிக சாதரணமாக தான் இருந்தது. இன்னும் சொல்ல போனால் அந்த வீட்டில் சமையல் செய்யும் சாந்தி…மேல் வேலை செய்யும் மாலினி கூட சரியாக தைத்து தோதாக வர..
அந்த வீட்டின் உரிமையாளரின் அக்கா மகள்..ஏதோ வெளுத்த உடையில் தோள தோள என்று போட்டுக் கொண்டு இருப்பதை நிஷா முதலில் தன் அண்ணனின் மறைவில் சரியாக கவனிக்க வில்லை தான்.
ஆனால் சாந்தியும் மாலினியும் ஜமுனாவை காட்டி ஏதோ குசு குசு என்று பேச… என்ன பேசுகிறார்கள் என்று அவர்களை உற்று பார்க்கும் போது..
சாந்தி… “பாவம் அங்க  ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தது போல…” என்று ஜமுனாவை காட்டி மாலினியிடம் சொன்னாள்.
மாலினியோ… “ஆமாம்… ஆமாம்… நான் கூட பாக்குறேன் . எப்போவும் நாளு ட்ரஸ் தான். அதையே  தான் மாத்தி மாத்தி போட்டுட்டு இருக்கா..அதுவும் அந்த ட்ரஸ் அந்த பெண்ணுக்கு தச்சது இல்ல போல…யாரோ கொடுத்ததா தான் இருக்கும்..ரொம்ப பெருசா இருக்கு.” என்ற அவர்களின் பேச்சில் தான் நிஷாவே ஜமுனா உடை அணிவதை பார்த்தது.
“அய்யோ இத்தனை நாள் இதை எப்படி கவனிக்காமல் விட்டேன்.” என்று தன்னையே திட்டிக் கொண்ட நிஷா  நம் துக்கம் நம்மோடு இப்பெண் நம்மையே நம்பி வந்து இருக்கிறாள்.
அதுவும் இல்லாது தன் மீது உண்மையாக காதல் வைத்திருக்கும் தன் கிஷோருக்கு பிடித்த அக்காவின் மகள்..இவளை நல்ல படியாக நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த நிஷா.. நாளையே இவளை ஷாப்பிங்  கூட்டிட்டு போய் அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டாள்.
அதன் படி தான்  கிஷோர் முன் நிஷா … “ ஷாப்பிங்போக வேண்டும்.” என்று சொன்னது..
கிஷோரும் அப்போது தான் ஜமுனாவின் உடையை பார்த்து நொந்து போனவராய்… “சரி டாலி…” என்று சொன்னவரின் குரல் கொஞ்சம் தயக்கத்திற்க்கு தாவியது.
“என்ன கிஷோர்…?” என்று நிஷா தன் கணவனிடம் கேட்டாள்.
“இல்ல இன்னைக்கு நான் ஆபிசுக்கு போயே ஆகனும்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது   ஜாக்கிங் முடித்து விட்டு சித்தார் கை பிடித்துக் கொண்டு வந்த சிக்கந்தர்…
 தன்  ஜீயும், பாபியும் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருப்பதை பார்த்து… “என்ன ஜீ ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டான்.
“பிரச்சனை எல்லாம் இல்ல..உன் பாபிக்கு ஷாப்பிங் போகனுமாம். எனக்கு இன்னைக்கு ஆபிஸ் போயே ஆகனும். அது தான்…” என்று கிஷோர் சொன்னதும்…
“நான் போயிட்டு வர்றேன் ஜீ.” என்று சிக்கந்தர் சொன்னாலுமே… இப்போது ஷாப்பிங்கா…?என்று நினைத்தான் சிக்கந்தர். ஆனால்  எதற்க்கு இப்போது ஷாப்பிங் என்று எல்லாம் கேட்கவில்லை.
“இல்ல உனக்கும்…” என்று தன் பேச்சை பாதியில் கிஷோர் நிறுத்தினான்.
“அதை நாளைக்கு கூட பார்த்துப்பேன் ஜீ.” என்று சொல்லி விட்டு…
நிஷாவிடம்.. “கிளம்புங்க பாபி.” என்று சொன்னான்.
“சரி சிக்கந்தர் நான் ஜமுனாவை கிளம்ப சொல்றேன்.” என்று நிஷா சொல்ல…
‘ஓ ஷாப்பிங் ஜாமூனுக்கா…’ என்று  நினைத்துக் கொண்டான்.
அவனுமே இதை பற்றி தன் ஜீயிடம் சொல்ல ஆராம்பித்து பின்  சொல்லாமல் விட்டு விடுவான். அவன் ஜீ தான் ஜமுனாவின் உடையை கவனிக்க வில்லை. நம்  சிக்கந்த வந்த முதன் நாளே கவனித்து விட்டான். இன்னும் சொல்ல போனால்   ஜமுனாவின் ஊரில்  அனைத்தும் பாக் செய்த்தை எடுத்து வைத்தவன்..
அவள் நீட்டிய தன் உடை இருக்கும் பென்ட்டி என்று சொன்ன இரு சின்ன பெட்டியை பார்த்து… ‘இவ்வளவு தானா…?” என்று யோசித்தான்.
இன்று நிஷா ஷாப்பிங் என்றதும்கிளம்பி விட்டு காத்திருக்க…கிளம்பிய நிஷாவும் சிக்கந்தர்  வந்து  பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
தன் செல்லை பார்த்துக் கொண்டு இருந்த சிக்கந்தர் தன்  தோளின் மீது நிஷா கை படவும் … என்ன என்பது போல் நிஷாவை பார்த்தான்.
தன்னை அழைத்து விட்டு நிஷா தன்னை பார்க்காது அவள் பார்வை எங்கேயோ இருப்பதை பார்த்து  நிஷாவின் பார்வையை தொடர்ந்து தன் பார்வையை செலுத்தினான் சிக்கந்தர்.

Advertisement