Advertisement

இருந்தும் அந்த அமைச்சருக்கு மனது பொறுக்காது கிஷோரிடம்… “நாங்க ஒன்னும் சட்ட விரோதமா எல்லாம் செய்யலையே…எல்லாம் சட்டப்படி தான் நடந்தது.” என்ரு சொல்லி விட்டு தன்னிடம் உள்ள அரசானையை கிஷோரிடம் அந்த அமைச்சர் நீட்டினார்.
அதை வாங்கி பார்த்த கிஷோர் அந்த படிவத்தின் அடியில் கைய்யெழுத்து இட்டிருந்த சுலோச்சனா தேவி என்ற பெயரை பார்த்து விட்டு வருத்தம் பாதி கோபம் மீதியுமாய்  திரும்ப அந்த படிவத்தை அமைச்சரிடம் கொடுத்த கிஷோர்…
“இனி இதுக்கு தேவையிருக்காது. அது தான் நினைவு வந்து பேசுனதா…அந்த ட்ரைவர் சொல்லிட்டாரே…வெறும் இரண்டு சதவீதம் தான் அவனுக்கு நினைவு திரும்ப சான்ஸ் இருக்கு என்னும் போதே…
அதை காட்டி அந்த அம்மா இரண்டு தடவை கொடுத்த கருணை கொலை மனுவை நான் ஒன்னும் இல்லாம்ம செஞ்சவன். இப்போ…இவன் பேசினான் என்னும் போது…” அங்கு ஸ்டேச்சரில் படுத்திருந்த சிக்கந்தரை காட்டி…
“இனி அவனை பத்தி கருணை கொலைன்னு பேச்சு வந்தா கூட…அவங்களை  கொலை பண்ணவும் நான் தயங்க மாட்டேன்,” என்று கிஷோர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
அவன் அழைத்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வந்தது. கூடவே  அந்த மருத்துவமனையின் தலைவரும் ஒரு காரில் வந்து இறங்கினார். பின் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது.
இது எதுவும் தெரியாது சுலோச்சனாவின் குடும்ப உறுப்பினர்கள் மொத்த பேரும் ******அந்த மருத்துவமனையில்  வந்து இறங்கினர்.
அப்போது தான் வெறும் கைய்யோடு அந்த மருத்துவமனைக்கு வந்த அமைச்சர்…இவர்களை பார்த்ததும்…
“மேடம் நீங்க உங்க மகனின்  கருணை மனு தாக்கல் செய்ததை இரண்டு தடவை ரிஜெக் ஆகி..இப்போ நான் என் மகனுக்கு உங்க மகன் இதயம் பொருத்தமா இருக்கு என்று இந்த ஹாஸ்பிட்டலின் சீப் டாக்டர் சொன்னதால..
இந்த தடவை மனு கொடுங்க நான் ட்ரைப் பண்றேன்னு உங்க கிட்ட கேட்டேன் தான். ஆனால் உங்களை நாம் கம்பெல் பண்ணேனா மேடம்..சொல்லுங்க…” என்று பேசிய அமைச்சரின் வார்த்தையின் அர்த்தம் புரியாது சுலோச்சனா..
“நீங்க  என்ன சொல்ல வர்றிங்கன்னு தெரியல…ஏன் இப்போ என் மகனோடது உங்க மகனுக்கு பொறுந்தலையா…?” என்ற சுலோச்சனாவின் கேள்விக்கு…
“அது ஆபிரேஷன் செஞ்சா தானே தெரியும். அது தான் உங்க மகனை அந்த கிஷோர் எடுத்துட்டு போயிட்டானே…அவன் சொன்னது போல…இரண்டு பர்சன்ட் சான்ஸ் இருக்கும் போதே அவனை எதையும் செய்ய விடல.
இப்போ அவன் பேசினான் என்று தெரிஞ்சா விட்டு விடுவானா…?” என்று அந்த அமைச்சர் சாதரணமாக சொல்லிக் கொண்டு போக…
அமைச்சர் சொன்ன பேசினான் என்ற வார்த்தையின்  சுலோச்சனா குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் சமைந்து போய் நின்று விட்டனர்.
சுலோச்சனா தான்… “என்ன என் மகன் பேசினனா…?” என்று கேட்ட சுலோச்சனாவின் குரலில் என்ன இருந்தது. அதிர்ச்சியா…?ஆச்சரியமா…?
சிக்கந்தரை கொண்டு சென்ற அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கிஷோரிடம்… “அவருக்கு நினைவு வந்துடுச்சு  கிஷோர்..உங்க நம்பிக்கை  வீண் போகவில்லை.” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல…
“எனக்கு தெரியும் டாக்டர். அவன் திரும்ப வந்துடுவான்னு…அவனுக்கு வாழ்க்கை மீது இருக்கும் காதல் கண்டிப்பா அவன் நினைவை மீட்டு கொண்டு வந்துடும் என்று  எனக்கு நல்லா தெரியும்.” என்று  சொன்ன கிஷோர் …
“நான் போய் அவனை பார்க்கலாமா…?” என்று அந்த மருத்துவரிடம் அனுமதி கேட்டான்.
“இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்க கிஷோர்..பதிமூன்று வருடம் நினைவு இல்லாது இருந்தவர்..முதலில் முழித்த பின் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
நான்  மனநல மருத்துவரையும், கவுன்சிலிங் செய்ய ஒருத்தரையும் அழச்சி இருக்கேன். அவங்க பார்த்துட்டு நிலமை என்ன என்று சொன்ன பிறகு நீங்க போய் பாருங்க.
அப்புறம் ரொம்ப வருடமா படுக்கையிலே இருந்ததால் அவருக்கு பிசியோ தெரிப்பி தேவைப்படும். அதுக்கும் ஏற்பாடு செய்துட்டேன். என்று சொன்ன அந்த மருத்துவரே…
“சிக்கந்தருக்கு பிசியோ தெரிப்பிக்கு நிறைய தேபைப்படாது என்று தான் நினைக்கிறேன். அவர் படுக்கையில் இரிக்க் போதே தினம் பிசியோ செய்துக் கொண்டு தானே இருந்தோம்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
அந்த இட்த்திற்க்கு வந்த நர்ஸ்… “சார் அவர் ஜீ ஜீன்னு சொல்லிட்டு இருக்கார். பின் அவரே நான் பார்க்கனும் என்று சொல்றார்” என்று அந்த நர்ஸ்  சொன்னதும்..
கிஷோரின் முகம் தன்னால் மலர்ச்சியைய் காட்டியது. முழித்த உடன்  அவன்  தன் தாயை தேடவில்லை.தந்தையை கேட்கவில்லை…ஜீ இந்த ஜீயை தேடி இருக்கான். என்று நினைத்தவன் இப்போது அந்த மருத்தவரை பார்க்க…
அவர் … “போங்க கிஷோர் சார். ஆனால் பார்த்து பேசுங்க…இப்போ அவர் எந்த மனநிலையில் இருப்பார் என்று சொல்ல முடியாது.” என்று அந்த மருத்துவர் கிஷோரிடம்  எச்சரிக்கை செய்து   அனுப்பினார்.
“ம் நான் பார்த்துக்குறேன் டாக்டர்.” என்று சொல்லி விட்டு  சிக்கந்தர் இருக்கும் இடத்திற்க்கு சென்ற கிஷோரின் இதயமே துள்ளி குதித்து வெளியே  வந்து விடுமோ என்பது போல்  அடித்துக் கொண்டது.
சிக்கந்தர் படுத்திருந்த படுக்கையின் அருகில் சென்று அவன் முகத்தையே பார்த்திருந்த கிஷோருக்கு ஏதேதோ நினைவுகள்.
முழித்த உடன் இதோ தன்னை தேடும் இவன்  எனக்கு  ரத்தம் சொந்தம்…? நட்பா…? இல்லை இல்லவே இல்லை. எனக்கும் இவனுக்குமான உறவு அவன் நினைவில் இருக்கும் போது பந்தம் வெறும் ஆறுவருடங்கள் தான்.
அந்த ஆறுவருடங்களின் அந்த நட்பு என்று சொல்ல முடியாது அவன் தன்னை பார்க்கும் போது எல்லாம்… “ஜீ…” என்று சொல்லி அணைக்கும் அந்த ஆத்மார்த்தனான அணைப்பு…
அந்த அணைப்பு சொல்லி விடும் அவன் தன் மீது வைத்திருக்கு குருபக்தி…ஆம் அவர்களுக்கிடையே இருப்பது நட்போ…?சொந்தமோ…?கிடையாது.
நான் அவனுக்கு குரு எங்கள் இருவருக்குமான முதல் தொடர்பு…கார் ரேஸ்…தான் அவனுக்கு ஏழுவருடம் முந்தி கார் ரேஸில் இந்தியாவுக்கு என்று வெற்றி வாகை சூடி தந்து.
இனி போதும் வரும் தலைமுறைக்கு வழி விட வேண்டும். அவர்களை இந்தியாவின் முன்நிலை கார் ரேசராய் உருவாக்க வேண்டும் என்று கிஷோர் எண்ணி..
ரேசில் இருந்து ஓய்வு பெற்று…பயிற்ச்சி ஆளானாய் அவன் உருவெடுத்த போது…வந்து சேர்ந்தவன் தான் இந்த சிக்கந்தர்.
முதலில் அவனை பார்த்த போதே…எண்ணி விட்டான் கிஷோர்…இவன் தன்னையும் மிஞ்சிவிடுவான் என்று. கிஷோரின் நினைப்பை பொய்யாக்காது அவன் நினைத்ததை விட…அவன் வேகம். அவன் செயல் திறமையை பார்த்து…
“உனக்கு சொல்லி கொடுக்க என்னிடம் எதுவும் இல்லையே  சிக்கந்தர். பின் ஏன் என்னிடம் வந்த…?” என்று கிஷோர் கேட்டதற்க்கு..
தன்னை பார்த்ததும் அணைக்கும் அந்த அணைப்பை கொடுத்த சிக்கந்தர் … “இதற்க்கு தான் ஜீ…”  என்று சொன்னவன் ஒன்றும் சாதரணமானவன் கிடையாது.
இந்தியாவில் புது கார் லான்ச் ஆவது என்றால் அது சிக்கந்தர் தந்தை  வர்மாவின் மூலமாய் தான் இருக்கும். அவர் அதை பணத்திற்க்கு செய்ததோடு தங்கள் அந்தஸ்த்தை காட்டவே செய்கிறார் என்று…
அந்த  துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். அப்படி பட்டவரின் மகன் தனக்காக என்று சொல்லியதை கேட்டு…
“சிக்கந்தர் நான் எல்லாம் உன் அளவு பெரிய ஆள் கிடையாது. என் அப்பா சாதரண ஒரு கார் மெக்கானிக். அவர் ஷெட்டில் வந்த கார்கள்.காரின் வகைகளை பார்த்து பிடித்தம் ஏற்பட்டு..
பின் அந்த பிடித்தமே என்னுள் ஒரு வேகம் எடுத்து… அடுத்து என்ன என்று யோசிக்கும் போது என்னை சுற்றி இருப்பவர்கள் சொன்னது தான் …
“உன் வேகத்திற்க்கு நீ கார் ரேசிலேயே கலந்து கொள்ளலாம் என்று.” 
அந்த வார்த்தையை கேட்டு ஆந்திராவில் இருந்து பாம்பே வந்து …என்னவோ என் வேகத்தை பார்த்து முதல்ல என் கிட்ட ஒரு காரை கொடுத்து ஓட்டுடா என்று சொல்லுவாங்கன்னு நினச்சி வந்தவனுக்கு கொடுத்த முதல் வேலை…
காரை பள பள என்று துடைப்பது பின்…ஏற்கனவே ரேசின் ட்ரையினருக்கு எடு பிடி… அதாவது அவங்க சொல்ற வேலைய செய்யுறது. இது தான்.பின் மெல்ல மெல்ல என் திறமையை காட்டி தான் இந்த நிலைக்கி வந்தேன். நீ நினைப்பது போல் நான் ஒன்னும் அவ்வளவு பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லடா ராசான்னு.” என்று சொன்னது போது…
சிக்கந்தர் சொன்ன… “இது தான் ஜீ… இது தான். இந்த உங்க திறமை…நான் எல்லாம் கத்துக்கனேனா..நான் ஏதாவது கேட்டால் என்ன பார்த்தால் கூட போதும் அது என் கைக்கு வந்து விடும்.
நான் கத்துக்குனது எல்லாம் பெரிய விசயம் இல்ல ஜீ..நீங்க வந்த இடம் உங்ஜ சொந்த உழைப்பில் வந்தது…நான் என்ன செஞ்சாலும் என் பின்னாடி என் அப்பா வர்மா இருக்கார் ஜீ.” 
ஆம் சிக்கந்தர்  வர்மா சொல்வது ஒரு வகையில் சரி தான்.  சிக்கந்தருக்கு இந்த பயிற்ச்சி எல்லாம் தேவையில்லை உங்க மகனை கொண்டு வாங்க என்று தான் கார் ரேசுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருக்கும் தலைவர் பதவியில் இருப்பவர் சொன்னது..
ஆனால் சிக்கந்தர் தான் அனைவரையும் போல தான்  நான். என் திறமை பார்த்து தான் எனக்கு கொடுக்க வேண்டும். உங்கள் பெயரை வைத்து இல்லை என்று தன் தந்தையிடம் சொன்னவன்…
தன் பயிற்ச்சி ஆளாய் தன் குருஜீ  கிஷோர் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்க்கு இசைந்து இதோ கிஷோர் முன் அவன் சீடனாய் இருக்கிறான்.
அவர்களின்  அந்த பந்தத்தை  பார்த்து பாம்பேயில் பொறாமை படாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த பொறாமையால் வந்த விளைவா…அவனுக்கு அந்த விபத்து…இன்றும்  கிஷோரால் அந்த நாளை மறக்க முடியாது.
ஏதேதோ நினைவலைகள் மனதில் மோத…சிக்கந்தரையே பார்த்திருந்த கிஷோருக்கு,  முதன் முதலில் அவனுடைய இருபது வயதில் பார்த்த அந்த தோற்றமும்…
இதோ இப்போது  முப்பத்திஒன்பது வயதில் இருக்கும்  இந்த தோற்றத்தில் இருக்கும் வித்தியாசத்தையும் கணக்கிட்டு கொண்டு இருந்தான்.
எப்போதும் சிக்கந்தர் ஒரு இடத்தில் நிற்க மாட்டான். தன் பக்கத்தில் நிற்பவன் திரும்புவதற்க்குள் அந்த இடத்திலேயே வேறு ஒரு மூலையில் இருப்பவனிடம் பேசிக் கொண்டு இருப்பான். வேகம் வேகம் வேகம் தான். 
ஒரு இடத்தில் இருக்க மாட்டான்.  அவன் அந்த வேகம் தான் இவனை  மொத்தமாய் பதிமூன்று வருடம் ஒரே இடத்தில் படுக்கை வைத்து விட்டதோ…என்று கிஷோர் அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.
கடைசியாக இவனை நினைவோடு பார்த்தது இவனின் நிச்சயத்தன்று. அப்போது  இவனுக்கு இருபத்தியாறு வயது தான்.
அப்போதே கிஷோர் கேட்டார் தான்… “ஏன் இவ்வளவு சீக்கிரம்  திருமணம் செய்துக் கொள்கிறாய்…” என்று…
அதற்க்கு அவன் அன்று கூச்சமே இல்லாது சொன்ன… “எனக்கு லேடிஸ் தேவைப்படுது ஜீ…” என்று சொன்ன சிக்கந்தரின் பேச்சில் அதிர்ந்து..
“டேய் அதுக்கு எல்லாமா கல்யாணம் செய்துப்பாங்க…?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட கிஷோரின் பேச்சை அன்று தவறாய் புரிந்துக் கொண்ட சிக்கந்தர்…
“ஜீ அது போல இடத்திற்க்கு போனா… நம்ம உடம்பிற்க்கு  வேறு ஏதாவது பிரச்சனை வராது.” என்று கேட்டானே… அதை கேட்டு கிஷோருக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.
“டேய் நான் கல்யாணம் செய்ய இது போதுமா…?அந்த பெண் மீது காதல் பிடித்தம். குறைந்த பட்சம் இந்த ஈர்ப்புன்னு சொல்வாங்களே..அதாவது இருக்கான்னு கேட்டேன்டா…” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னான்.
“ஓ அதுவா ஜீ…என் அத்தை பெண் வந்து நான் உன்னை ரொம்ப லவ்  பண்றேன் என்று சொன்னா…அவளை மறுக்க எந்த ரீசனும் இல்ல.
ஒரே வீட்டில் வளர்ந்தோம்..என்னை பத்தி அவளுக்கு தெரியும். என்னை பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். சரி கல்யாணம் செய்துட்டா எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை.” என்று சொன்னவனை பேசி மேலும் குழப்பாது…
“வாழ்த்துக்கள்.” என்று சிக்கந்தரை வாழ்த்தி விட்டு வெளி நாட்டின் கார் ஒன்று  இந்தியாவில் லான்ச் செய்ய வேண்டி உள்ளதால்…அவன்  அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் தான், அன்று இரவே கிஷோர் அங்கு இருந்து கிளம்பி விட்டான்.
அப்போது கிஷோர் இது போல் பெரிய ஆள் எல்லாம் கிடையாது. அவனின் மொத்த பணத்தையும் போட்டு தான் அப்போது எல்லாம் புது காரை எல்லாம் லான்ச் செய்துக் கொண்டு இருந்தான்.
அதால் எல்லாம் அனைத்திற்க்கு அவனே முன் இருந்து பார்த்துக் கொள்வான். எதிலும் ரிஸ்க் எடுக்க அவன் தயார் இல்லை. அதனால் தான்  கிஷோர் அன்றே…அப்போதே அங்கு இருந்து கிளம்பி விட்டான்.
கிளம்பிய ஐந்து மணிநேரத்திற்க்கு பின் அவனுக்கு வந்த தகவல்… “சிக்கந்தரின் கார் விபத்திற்க்கு உள்ளாகி விட்டது.” என்று..
இன்று  கிஷோர் தொழிலில் மற்றவர்கள் தொட முடியாத இடத்திற்க்கு சென்று விட்டான்.ஆனால் சிக்கந்தரின் வாழ்க்கை அன்று படுத்தது அதே நிலையில் நின்று விட்டது.
இதோ இப்போதும்  முழிப்பவனின் மனநிலை எப்படி இருக்கும்…? தன் உருவத்தை பார்த்து ஏமாற்றம் எல்லாம் அடைய மாட்டான்.  ஒன்று இரண்டு வெள்ளை முடிகள். இன்று பத்து வயதிலேயே வெள்ளை முடிகள் வந்து விடுகிறது.
அதனால் அதை பற்றி கவலை இல்லை. முகமும் அப்போது இருப்பது போல் இளமையோடு இல்லை என்றாலும், இன்றும் அவன் கம்பீரத்தோடு தானே இருக்கிறான்.
வசதி இருந்ததால் ஆளை வைத்து பார்த்துக் கொண்டதால். படுக்கையில் இருந்த போதும் படுக்கை புண் அவன் உடலில் ஒரு  சிறு கீறு கூட இல்லாது இருந்தது.
அதனால் சிக்கந்தர் பெரியதாக அதிர்ச்சி ஆக மாட்டான் என்று சிக்கந்தரையே பார்த்துக் கொண்டு ஏதோ நினைவில் இருந்ததால், சிக்கந்தர் கண் முழித்து தன்னை பார்த்துக் கொண்டு இருப்பது  தெரிந்தாலும் உணராது இருக்க…
“ஜீ என்ன ஜீ. என்னை சைட் அடிக்கிறிங்களா…?” என்று பேசியவனின் பேச்சில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாது  எப்போதும் போல கம்பீரமான குரலில் கேட்ட சிக்கந்தர் தன் இருகையையும் விரிக்க..
அதில் தன்னை புகுத்திக் கொண்டவனை எப்போதும் போல் அணைத்த அணைப்பில்,  முன் இருந்த அந்த வலிமை இல்லை என்றாலும்,  அந்த அன்பு அதே போல்…அதோடு கூடுதலாய் இருப்பது போல் உணர்ந்தான் சிக்கந்தரின் அந்த ஜீ…

Advertisement