Advertisement

அத்தியாயம்….1 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி
 கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி
கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…
என்ற பாடல் அந்த பெரிய மாளிகையின் வீட்டின் பூஜை அறையில் பதிவு செய்து வைத்திருந்த பாடல் இசைக்க, அந்த இசையில் ஒன்றவும் முடியாமல், அதை தவிர்க்கவும்  முடியாது தன் முன் இருக்கும் அந்த கோவிந்தனிடம் முறையிட்டு கொண்டு இருந்தார் அந்த வீட்டின் இல்லத்தரசி… சுலோச்சனா தேவி…
“கடவுளே நான் செய்வது தப்பா…? சரியா…? எனக்கு தெரியல. எனக்கு தோனினதை தான் நான் செஞ்சேன். ஆனால் இப்போ ஏனோ மனசு பட பட என்று  அடித்துக் கொள்கிறது.” என்று அந்த இறைவனிடம் முறையிட்டுக் கொண்டு இருக்கும் போது, சுலோச்சனாவின் மூத்த மகன் தருண் வர்மா…
“அம்மா போகலாமா…?” என்று கேட்டான்.
அவன் கேட்டதற்க்கு …“ஆ…” என்று பேச்சை இழுத்து நிறுத்திய  சுலோச்சனா பின் தன் மூத்த மகனிடம்…
“நாம செய்யிறது சரியா தருண்.” என்று கேட்டார்.
“அம்மா ஒரு முடிவு எடுக்க கூடாது. எடுத்துட்டா ..அது தவறா…?சரியா…?என்று யோசிக்க கூடாது.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
வெளியில் அவசரவண்டியில் இருந்து வரும்  சத்தம் காதை பிளக்கும் அளவுக்கு சத்தம் மிட்டது.
“அந்த சத்தத்தை நிறுத்த சொல்லுடா..அதை கேட்டாளே என் ஈரக்குடலே நடுங்குது.” என்று சொல்லும் போதே சுலோச்சனாவின் குரல் பயத்தில் கொஞ்சம் திக்கி திணறி தான் வந்தது.
“அம்மா அவங்க வேலைய அவங்க செய்யுறாங்க.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, மருத்துவமனையின் கடை நிலை ஊழியர் இருவர் வந்து…
“எங்கு இருக்கும்மா…?” என்று ஏதோ ஒரு பொருளை கேட்பது போல் கேட்டனர்.
அந்த மருத்துவ ஊழியர் கேட்டற்க்கு பதிலாய் சுலோச்சனாவின் கை மாடியை காட்டும் போதே, அந்த கை ஒரு நிலையில் இல்லாது  வெட வெடத்து கொண்டு இருந்தது…
“அம்மா…” என்று சொல்லிக் கொண்டே தருண் சுலோச்சனாவின்  கையை தன் பிடியில் கொண்டு வந்து, அவருக்கு தைரியம் அளிப்பது போல்  பிடித்துக் கொண்டான்.
அந்த அவசர வண்டியின் சத்தத்தில் அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்த அந்த ஹாலை நிறப்பியவர்கள்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனரே ஒழிய…ஒருவரும் வாய் திறந்து பேசவில்லை. மயான அமைதி என்பார்களே… அது போல் பேச கூட பயந்து…என்ன பேசுவது என்று தயங்கி அனைவரும் நின்றனர்.
சுலோச்சனாவின் கை காட்டிய அறையில் இருந்து அவர்கள் கொண்டு சென்ற அந்த ஸ்டேச்சரின் அளவையும் மீறி கால் தொங்க…அதை மடக்க முடியாது ஒருவன் மடக்கி விட்டு…மின் தூக்கியின் வழியே கொண்டு  வந்த அந்த ஆறடி ஆண்மகன் வேறு யாரும் இல்லை.
அந்த வீட்டின் இளைய மகன் சிக்கந்தர் வர்மா… பதிமூன்று வருடங்களாய் கோமாவில் படுத்த படுக்கையாக கிடந்தவன். நாளை பிணமேடையில் படுக்க இன்று கருணை கொலை செய்ய…அவனின் உறுப்பு தேவைப்படும் அந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கீழே கொண்டு வந்தவர்களிடம்…
சுலோச்சனா… “நாங்க எங்க காரில் வர்றோம்.” என்று சொன்னார்.
எங்கு அந்த வண்டியில் அந்த சத்ததித்தில் சிக்கந்தர் முகத்தை பார்த்து செல்ல வேண்டிய  சூழ்நிலை வந்து விடுமோ என்று அவசர அவசரமாக சொன்னவரிடம்…
“மேடம் நீங்க உங்க காரிலேயே வரலாம். அதுவும் அவசரம் எல்லாம் இல்ல.அது தான் எல்லா பார்மால்டீசும் முடிச்சிட்டிங்கலே…அதனால  நீங்க பொறுமையாவே பாடிய வாங்க வரலாம்.” என்று அந்த மருத்துவ ஊழியர்  கடைசியாக  உபயோகித்த பாடி என்ற வார்த்தையை கேட்டதும் சுலோச்சனாவின் உள்ளம் தன்னால் ஆட்டம் கண்டது.
திரும்பவும் பூஜை அறையில் தன் பார்வையை கொண்டு சென்ற சுலோச்சனா… “நான் செய்வது சரியா…?தவறா…?ஈசனே நீ தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று இறைவனிடமே அனைத்தையும் ஒப்புத்தவரின் மனநிலை இப்போது கொஞ்சம் அடங்கியது போல் இருக்க…
“சரிப்பா நாங்க அரை மணி நேரம் கழிச்சி வர்றோம்.” என்று சொல்லோடு, தன் மகனை கருணை கொலை செய்யும் பொருட்டு அழைத்து செல்வதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு அமைதியாகி நின்றார்.
ஆனால் சுலோச்சனா ஈசனிடம் முறையிட்ட…நல்லதா …?கெட்டதா…? என்பதற்க்கு பதில் சொல்ல  கிஷோர் என்பவன் பாம்பேயிலிருந்து கிடைத்த விமானத்தை பிடித்து சென்னை வர முயற்ச்சி செய்துக் கொண்டு இருந்தான்.
கிஷோரின் மனைவி  நிஷா … “ஏங்க பதட்ட படாதிங்க. சிக்கந்தருக்கு ஒன்னும் ஆகாது.” என்று தன் கணவனின் பதட்டத்தை பார்த்து சமாதானம் படுத்தியவளாய் அவர் கையில் குளிர்ந்த நீரை கொடுத்தவள்…
“முதல்ல இதை குடிங்க.” என்று சொன்னதும் அந்த தண்ணீரை வாங்கி கட கட என்று குடித்து முடித்தும் அவன் பதட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.
கைய் பேசியில் தன் பிஏவிடம்… “நான் தான் என் ஊருக்கு போயிட்டேன். நீ என்ன பண்ணிட்டு இருந்த…?*****புடுங்கிட்டு இருந்தியா…?” என்று சத்தம் இட்டுக் கொண்டு இருந்தான்.
அதற்க்கு பேசியின் அந்த பக்கத்தில் இருந்து என்ன பதில் வந்ததோ…ஆனால் இந்த பக்கத்தில் இருந்த கிஷோர்… “எனக்கு எந்த சாக்கும் தேவையில்லை.நான் சிக்கந்தர் விசயத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டேன்னு உனக்கு தெரியும் தானே…
அங்கு நடப்பது என்ன…?அவங்க என்ன மூவ் பண்றாங்க…? ஆளை வெச்சி அதுவும் ஒன்றுக்கு இரண்டு பேரையாவது வெச்சி  கண்காணிங்க என்று சொல்லி இருக்கேன் தானே…? அப்புறம் எப்படி இப்படி ஆச்சி…?” என்று கிஷோர் கண்டமேனிக்கு கத்திக் கொண்டு இருந்தான்.
அவனின் கத்தலை இதற்க்கும் மேல் அந்த பிஏவான தீபக் தாங்க மாட்டான் என்று நினைத்தோ என்னவோ …சென்னை போவதற்க்கு உண்டான விமான டிக்கட் கிடைத்து விட..
சிக்கந்தர் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் கிஷோர் பாம்பேயில் இருந்து சென்னை கிளம்பும் விமானத்தில் ஏறி அமரும் அதே வேளயில்… 
சென்னையில் அடையாரில் இருக்கும் தன் இல்லத்தில் இருந்து சிக்கந்தர்  சர்மா அவசர வண்டியில் அவன் இறுதி மூச்சு நிற்க  வைக்கும் முதல் முயற்ச்சியாக அந்த அவசர வண்டியின் ஓட்டுனர்  வண்டியின் முதல் கீரை ஸ்டாட்  செய்தான்.
மருத்துவமனையில் அந்த ஆளும் கட்சியின் அமைச்சர் மருத்துவரிடம்… “என்ன கிளம்பிடுச்சா…?” என்று கேட்டதற்க்கு,…
“இதோ கிளம்பி வந்துட்டு இருக்காங்க.” என்று அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர் சொன்னார்.
“யோய் இதையே தான் ஒரு மணி நேரமா சொல்லிட்டு இருக்க…இன்னும் என்ன வெச்சி அழகு பார்த்துட்டு இருக்காங்க. பதிமூன்று வருடம் பார்த்தது போதாதா…?” என்று சொல்லி அந்த அமைச்சர் அந்த தலமை மருத்துவரிடம் கத்திக் கொண்டு இருந்தார்.
“இதோ..இதோ…சார்.” என்று சொல்லிய அந்த தலமை மருத்துவர் அவசரவண்டி ஓட்டுனருக்கு துணையாக அனுப்பி வைத்தவனுக்கு பேசியில் அழைப்பு விடுத்தார். அழைப்பை அவன் எடுக்காது போகவும், ஓட்டுனருக்கே அழைப்பு விடுத்தார்.
“என்ன கந்தன்..என்ன இன்னும் வந்து சேரல..இங்கு எல்லாம் ரெடியா இருக்கு.அந்த அமைச்சர் வேற கத்திட்டு இருக்கார். அவர் பையன் நிலமையும் கொஞ்சம் மோசமா தான் இருக்கு சீக்கிரம் வாங்க.” என்று அந்த தலமை அவசரப்படுத்தியதில்…
ஏற்கனவே வேகத்தில் சென்றுக் கொண்டு இருந்த அந்த அவசர வண்டி இன்னும் தன் வேகத்தை கூட்ட…அந்த இரவு வேலையில் தடுப்பு வைத்திருப்பதை கவனியாது பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் பக்கம் திரும்பி அந்த ஓட்டுனர் ஏதோ சொல்ல வர…
“ஏய் கந்தா…” என்று பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் கத்தி…கந்தா எதற்க்கு கத்துக்கிறான் என்று தெரியும் முன்னவே அனைத்தும் கண் மூடி திறப்பதற்க்குள் நடந்து விட்டது.
அவசர வண்டி அந்த தடுப்பு சுவரை  இடித்து பின் நிலை தடுமாறி வண்டி கவிழ்ந்து போய் அநாதரவாய் கவிழ்ந்து கிடக்கும் வேளயில்…
அவசரவண்டியின் உள் ஸ்டேச்சரில் படுத்து வைக்கப்பட்டு இருந்த சிக்கந்தர் வர்மா, அந்த வண்டியின் மேல் பாகத்தில் தலை மோதி கவிழ்ந்ததில்… பதிமூன்று வருடமாய் நினைவிழந்து இருந்தவன் வாயில் இருந்து…
“ஜீ…” என்ற பெயர்  ஈன ஸ்வரத்தில் முனகினான்.
சிக்கந்தர் வர்மா  ஜீ என்று  அழைத்த அதே சமயத்தில் சென்னை விமான நிலையத்தில் தன் காலடி எடுத்து வைத்திருந்தான் கிஷோர்…
விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த உடன் அவனுக்காக கார் காத்திருந்தது. அதில் ஏறி அமர்ந்தவன் கேட்ட முதல் கேள்வி… “எந்த ஹாஸ்பிட்டல்…” என்பதே…
“*******மருத்துவமனை.” என்று சென்னையில் இருக்கும் கிஷோரின் உதவியாளரின் பதிலில்…
“யாருக்கு…?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.
“அதற்க்கு கல்விதுறை அமைச்சரின் மகனுக்கு இதய துடிப்பு மிக மோசமாக போய் விட்டது. சீக்கிரம் அவனுக்கு மாற்று இதயம் பொருத்தியாக வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டு வந்தவனின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்தியது கிஷோரின் பேச்சு.
“அவன் மகன் உயிர் பிழைக்க, என் சிக்கந்தர் உயிர் கேட்குதோ…” என்று கத்தியவன் பின் தானே  சமாதானம் ஆனவனாய் …
காரின் ஓட்டுனரிடம்… “சீக்கிரம்.” என்று அவசரப்படுத்தினான்.
இங்கு ஜீ என்று சொன்னவன் பின் ஏதூம் பேசாது திரும்ப அமைதியாகி விட்டான். ஆனால் அவன் பேசிய பேச்சான அந்த ஜீ என்ற  வார்த்தையை அந்த மயக்க நிலையிலும், ஓட்டுனர் கந்தன் கேட்டு கொண்டே தான்  கண் மூடினான்.
கிஷோரின் கார் சிக்கந்தரை அழைத்து வந்த அவசர வண்டி விபத்தாகி இருக்கும் சாலை வழியாக தான் வந்து கொண்டு இருந்த்து.
அப்போது கிஷோர் காரின் ஓட்டுனர்… “சார் ஆம்புலன்ஸ் ஆக்சிடண்ட் ஆகி இருக்கு சார்.” என்று பதட்டத்துடன் சொன்னார்.
காரின் கண்ணாடியை கீழே இறக்கி  விட்டு அதை பார்த்த கிஷோரின் மனிதாபமான மனது,  நில் என்று தான் சொன்னது. ஆனால் அந்த மனிதாபிமான மனதை சிக்கந்தரின் முகம் மனதில் வந்ததும்…
“சீக்கிரம்…*****ஹாஸ்பிட்டல் போகனும்.” என்று சொல்லும் போதே கிஷோரின் உதவியாளன் …
“சார் அந்த ஆம்புலன்ஸ் *****அந்த ஹாஸ்பிட்டலோடது தான் சார்.” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்…
அந்த ஆம்புலன்ஸ் பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கியனை பார்த்து… “சார்…அந்த அமைச்சர் வந்து இருக்கார் சார்.” என்று  அந்த உதவியாளர் சொல்லி முடித்தது தான் தாமதம்.
கிஷோர்“ஸ்டாப்.” என்று சொல்லவும் காரின் ஓட்டுனர் காரை சர்ரென்று நிறுத்தவும்…சாலையின் எதிர் பக்கம் வண்டி வருகிறதா…? இல்லையா…?என்று கூட பாராது பைத்தியக்காரன் போல் ஓடும் அந்த கிஷோர் சாதரணமானவன் கிடையாது.
அதே போல் ஆம்புலன்சில் பதிமூன்று வருடமாய் படுத்து இன்று  கருணை கொலை செய்ய அழைத்து செல்லும் சிக்கந்தர் வர்மா, பிறப்பிலும் சரி… அவன் வாழ்ந்த வாழ்விலும் சரி உச்சத்தை தொட்டவன்.
இன்று உயிர் நீச்சம் ஆகுமா…? நீடிக்குமா…? என்று தெரியாது அலை மோதியிருக்கும் அந்த உயிரை பிடித்து நிறுத்த…நான் இருக்கிறேன் என்பது போல் ஓடி வந்தவனை பார்த்தவுடன் அந்த அமைச்சரின் முகம் தன்னால்  கூம்பி போயிற்று…
பின் ஏதோ நினைத்தவராய்… “அது தான் அரசு ஆணை நம்ம கிட்ட இருக்கே…” என்று தனக்கு தானே தைரியம் படுத்திக் கொண்டவராய்…
தன் பக்கத்தில் இருந்த அந்த மருத்துமவனையின் தலமை மருத்துவரிடம்… “ம் சீக்கிரம் உள்ள  இறக்குறது எடுத்துட்டு வாங்க. அங்கே என் பையன் காத்துட்டு இருக்கான்லே…” என்று சொன்னதும் தான்…
முதலில் அந்த ஆம்புலன்சின் ஓட்டுனரை வண்டியில் இருந்து இழுத்து போட…இழுக்கும் போது வலியில் நினைவுக்கு வந்த அந்த ஓட்டுனர் கந்தன்…
அமைச்சர் பேசியது காதில் விழ…. “டாக்ட..ர் அ..ந்..த கோ…மா பேஷ…ண்..டுக்கு  நினை…வு திரு…ம்புது சார். அவர் ஏதோ பேசினார்.” என்று சொன்ன அந்த வார்த்தை யார்  காதில் விழ வேண்டுமோ சரியாக அவன் காதில் விழுந்ததில்…
தனக்கு வேண்டிய மருத்துவமனையின் தலமை மருத்துவரை  தொடர்பு கொண்டு பேச வேண்டியதை பேசி முடித்தவன் அடுத்து தன் வக்கீலுக்கு அழைத்து செய்ய வேண்டிய பார்மால்ட்டீஸ் அனைத்தும் செய்து முடிக்கவும்…
அந்த அவசர வண்டியில் இருந்து அவனின் சிக்கந்தரை வெளியில் எடுக்கவும் சரியாக இருந்தது. அந்த அமைச்சர் வேறு ஒரு வண்டியில் ஏற்று  என்று அந்த தலைமை மருத்துவரை அவசரப்படுத்த அந்த மருத்துவன் அருகில் சென்ற கிஷோர்…
“என்னை யார் என்று தெரிகிறதா…?” என்று கேட்டதற்க்கு,
“சார் உங்களை  தெரியாம இருப்பாங்களா… நம்ம இந்தியாவுக்கே பெருமை சேர்த்து தந்தவராச்சே சார். அதுவும் இல்லாம இப்போ இந்தியாவுக்கு புது கார் லான்ச் செய்வதில் நீங்க தானே முதல் இடத்தில் இருக்கிங்க.
உங்களை தெரியாம இருக்குமா…?” என்று பெருமை பட கூறிய அந்த மருத்துவரின் பேச்சில்…
“குட் வெரி குட்…என்னை நல்லாவே  தெரிஞ்சி வெச்சி இருக்கிங்க…அதுவும் இருபது வருடம் முன்  நான் கார் ரேஸில் வென்றது வரை. ரொம்ப சந்தோஷம்.” என்று சொன்ன கிஷோர் ஸ்டேச்சரில் படுக்க வைக்கப்பட்டிருந்த சிக்கந்தரை காட்டி…
“அப்போ இவரையும் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கனும். எங்களுக்கு உண்டான தொடர்பும் தெரிஞ்சி இருக்கனும். அப்போ தெரிஞ்சே…” என்று சொல்லிக் கொண்டு வந்த கிஷோர் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த அமைச்சரை காட்டி…
“இவன் சொன்னான் என்று இதை செய்ய துணிஞ்சி இருக்கிங்கிங்கன்னா…” என்று சொல்லிக் கொண்டு வந்தவனின் பேச்சை இடையில் தடுத்து நிறுத்தினார் அந்த அமைச்சர்…
“யாரை மரியாதை இல்லாம பேசுறிங்க தம்பி கொஞ்சம் பார்த்து பேசுங்க… நான் அமைச்சர்.” என்று கர்வமாக சொன்னவரை பார்த்து …
“ம் தெரியுமே ஐந்து வருடமே ஆட்சியில் இருக்கும் அமைச்சர். அதுவும் அந்த பதவிய பிடிக்க என்னை போல் இருப்பவர்களிடம் பணம் வாங்குபவர்கள்…எனக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு தான் என்னை பத்தி முழுசா தெரியலேன்னு நினைக்கிறேன்.
தெரியலேன்னா உங்க தலைவர் கிட்டயே கேளுங்களேன். சொல்லுவார் தேர்தல் அப்போ எத்தனை பெட்டி என்னிடம் இருந்து வாங்குனதில் இருந்து…” என்று கிஷோர் சொல்லிக் கொன்டு இருக்கும் போதே அந்த அமைச்சருக்கு அவர் தலைவரிடம் இருந்து கைய் பேசியின் மூலம் அழைப்பு வந்தது.
“யோவ்  என்னய்யா  பண்ணி வெச்சி இருக்க…உன் மகனை உட்கார வைக்க வேறு யாரும் கிடைக்கலையா…? அதுவும் அந்த சிக்கந்தரை போய். அவன் படுத்து கிடக்கிறான் அதனால தப்பிச்ச…அவன் மட்டும் எழுந்தா..இப்போ உன் எதிரில் கத்திட்டு இருக்கானே அது போல எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டான். முதல்ல அங்கு இருந்து  கிளம்பு.” என்ற தலைவரின் பேச்சுக்கு…
“தலைவா என் மகன்.”
“அதுக்கு வேறு ஏற்பாடு ஏதாவது செய்யலாம். இது போல் விசயத்திற்க்கு எல்லாம் வயித்துகே காஞ்சி போய் இருக்காங்களே… அது போல் இடம் தான் சரி. புரியுதா…?முதல்ல இந்த இடத்தை காலி செய்.” என்று கட்டளையிட்டு அந்த தலைவர் கைய் பேசியை வைத்து விட்டார்.

Advertisement