Advertisement

                 நினைவுகள் 8

 

யசோ “இன்னும் கோவம் போகலையா வசுமா”…

“பேசாதேங்க யசோமா நீங்ககூட என்கிட்டே மறைச்சுட்டேங்கள”

‘இங்க பாரு வசுமா அப்பா,அம்மா உனக்கு சப்ரைசா இருக்கட்டும், நீங்க சொல்லதேங்கனு  சொல்லிட்டாங்க அப்புறம் எப்படி டா உனக்கு சொல்லமுடியும்’

‘நீங்க என்ன சொன்னாலும் நான் உங்ககிட்ட பேசமாட்டேன்’என்று யசோவிடம் பேசாமல் இருந்தால்..

ஜானகி “அக்கா அவ இப்போ கோவமா இருப்பா ஆனா அடுத்த நொடி யசோமானு வந்து நிப்பா,நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க”

ராமன் “என்ன கோவம் வசுக்கு,….ஜானகி”

“இலா நிச்சயத்தோடு, வசுக்கும்,தேவ்க்கும்…நிச்சயம் பண்ணிட்டோம், அதுவும் அவளுக்கு நிச்சயம் பண்ணுறோம்னு அவகிட்ட சொல்லலா அதான் கோவம் மாமா அவளுக்கு”

ராமன் “அப்படியா,சரி நான் போய் வசுகிட்ட பேசிட்டு வரேன்”

யசோ “வசும்மா இன்னும் சாப்பிடலைங்க,அவள சமாதானம் பண்ணி  கூப்பிட்டு வாங்க”

ராதா “இப்போ சந்தோஷமா தேவ்”

‘தேங்க்ஸ் மா,ஆனா இந்த பொண்ணுதான் நான் விரும்புற பொண்ணுனு உங்களுக்கு எப்படிமா தெரியும்’

ராதா “என் ராஜாவ பத்தி எனக்கு தெரியாத’எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கணும் ராஜா அதுதான் இந்த அம்மாவுக்கு முக்கியம்” ஆனால் ராதாவோ, மனதில் “ஒரு நாள் ராதா தேவ்வின் அறையை சுத்தம் செய்யும்பொழுது,தேவ்வின் பைல் கீழே கிடந்தது அதை எடுத்து அவன் அலமாரியில் வைக்க,அதில்  இருந்து வசுவின் போட்டோ ஆல்பம் கீழே விழுந்தது,அதை எடுத்து ராதா பார்த்துவிட்டு,நந்தனிடமும் அதை காட்டினார்..அதில் இருந்துதான் நந்தன் வசுவையும்,அவளின் நண்பர்களையும் வேலைக்கு எடுத்தார்..

தேவ் ‘அம்மா என்ன யோசனை’

ராதா “அதெல்லாம் ஒன்னுமில்லை ராஜா வசுகிட்ட பேசுனியா தேவ்”

“எங்கமா அவளுக்கு என்மேல கோவம்,நிச்சயத்தை பத்தி அவளுக்கு தெரியாதுல அதானால ரொம்ப கோபமா இருக்கா”

“எல்லாம் சரியாகிடும் தேவ்,போ அவகிட்ட பேசி சமாதானம் பண்ணு”

“சரிமா…நீங்க துங்கலையா”

“அப்பா இன்னும் வீட்டுக்கு வரல அவருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ராஜா..நீ போ”

‘ஹ்ம்ம் சரிமா’

இலா “என்ன, இப்பக்கூட பேசமாற்ற”

விழி “என்னங்க பேசணும்”

“எதாவது பேசு,சொல்லு”

“நீங்க சொல்லுங்க”

“நீ ஒன்னும் சொல்லவேணாம்,போய் தூங்கு,பை”என்று கோபத்தில் போனை கட் பண்ணிவிட்டான்.

யசோ ஒருவழியாக வசுவை சமாதானம் செய்து சாப்பிட வைத்தனர்…வசு சாப்பிட்டு முடித்து அவள் அறைக்கு வந்து போனை ஆன் பார்த்தால் அதில் ஏகப்பட்ட மெசேஜ்,போன் கால் என்று வந்து இருந்தது,அதில் தேவ் மெசேஜ்,மட்டும் அதிகமாக இருந்தது,.

வசு “அவரு எதுக்கு இத்தனை மெசேஜ்,போன் பண்ணிருக்காங்க”மனதில் நினைத்துகொண்டு,ஒவ்வொரு மெசேஜையும் ஓபன் பண்ணி பார்த்தால். அதில் முழுவதும் “சுகி,எனக்கும்..உனக்கும் நிச்சயம்னு நான் மண்டபத்துக்கு வந்த பின்னாடிதான் தெரியும்”பேசு சுகி”என்றும்….மன்னிப்பும் கேட்டும் சில மெசேஜும்,காதல் கவிதை மெசேஜும்,என பல மெசேஜ் வந்தன….ஆனால் அவள் அதெல்லாம் படித்துமுடித்ததும் அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினால்…..

தேவ் ‘இவ்ளோ மெசேஜ் பண்ணிருக்கேன் ஒரு பதில் அனுப்புறால’என்று மனதில் நினைத்துகொண்டு உறங்கிவிட்டான் அவள் நினைவிலே….

“என்ன சம்மந்தி எதுக்கு எங்களை இங்க வர சொன்னேங்க” என்று ராதாவும்,நந்தனும்,ராமனிடம் கேட்டனர்…

‘உங்களுக்கு எத்தனை பசங்க நந்தன்,

“இது என்ன கேள்வி எங்களுக்கு ரெண்டு பசங்க,ஒரு பையன் இறந்துட்டான்,இன்னொரு பையன்தான் தேவ்,ஏன் கேக்குறேங்க”

‘அப்போ உங்களுக்கு என்னை தெரியும்,இல்லையா நந்தன்’

“தெரியும் அண்ணா உங்களை மட்டும் இல்லை வாசுகியையும் தெரியும்”என்று ராதா கூறினால்.

ராமன் “அப்புறம் ஏன் என்னை தெரியதமாதிரி இருந்தேங்க நந்தன்”

‘எல்லாம் என் பையன் தேவ்க்காக சம்மந்தி’என்று நடந்த அனைத்தையும் கூறனார் நந்தன்.

“என்னை மனிச்சுட்டுங்க நந்தன் அந்த சம்பவம் நடந்த பின்னாடி நான் எப்படி உங்க முகத்துல முழிக்குறதுனு’இந்த ஊரவிட்டு கிளம்பிட்டேன்,என்னை மனிச்சுடுங்க நந்தன்,உங்க பிள்ளையா கொன்ன பாவத்துக்கு இப்போ என் பொண்ணு சுயநினைவில்லாம இருக்கா இது கடவுள் கொடுத்த தண்டனையா நான் ஏத்துகிறேன் நந்தன்”என்று காலில் விழுக போனார்.

“என்னை இது சம்மந்தி வசு எங்க வீட்டு பொண்ணு,அவளுக்கு ஒன்னும் ஆகாது”என்று ஆறுதல் கூறினார்.

‘ஆனா நடந்த உண்மை தேவ்க்கு தெரியுமா சம்மந்தி’என்று ராமன் கேட்டார்.

“தெரியாது அண்ணா,தேவ்க்கு எந்த உண்மையும் தெரியாது,நீங்களும் எதுவும் சொல்லதேங்க,தேவ்க்கு மட்டும் உண்மை தெரிஞ்சா வசுவ வெறுத்து ஒதுக்கிடுவான் அண்ணா,அவனுக்கு தெரியாம இருப்பதுதான் நமக்கும்,முக்கியமா வசுக்கு நல்லது அண்ணா”என்று ராதா கூறினார்.

“சரிமா,இதை பத்தி பேசத்தான் உங்களை சந்திக்கணும் சொன்னே ஆனா எல்லாம் தெரிஞ்சும் என் பொண்ணை மருமகளா ஏத்துகிட்டேங்களே அதுவே போதும்”என்று மறுபடியும் கையெடுத்து கும்பிட்டார்.

“இங்க பாருங்க சம்மந்தி இதெல்லாம் நினைச்சு மனச குழப்பிக்காதேங்க போய் கல்யாண வேலைய பாருங்க,இப்போ நாமா கிளம்பலாம் சம்மந்தி”என்று நந்தன் ராமனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

‘டாக்டர்…உங்களைத்தேடி ஒரு பொண்ணு வந்திருக்காங்க’என்று செவிலி ஒருவர் கூறினார்.

“யாரு,அவங்க பேரு என்ன நர்ஸ்”

“பேரு தெரியாது டாக்டர்,ஆனா உங்களைதான் பார்க்கணும் சொல்லி ஒருமணி நேரமா காத்திருக்காங்க டாக்டர்,வர சொல்லவா சார்”என்று வினவினார்.

இலா “ம்ம் வரசொல்லுங்க சிஸ்டர்”

‘உள்ள வரலாமா’என்று அவனுக்கு சொந்தாமான குரல் கேட்க்க..

“எஸ் வாங்க’என்று சொல்லிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான்,இலக்கியன்.

‘ஹே நீயா,என்னை பார்க்க நான் வேலை பார்க்குற ஹோஸ்ப்பிட்டலுக்கே வந்துட்ட’ என்று மலரிடம் கேட்டான்.

“உங்களுக்கு என் மேல கோபமா”என உள்ளே வந்ததும் கேட்டால்.

‘இல்லையே,ஏன் கேக்குற’

‘அப்புறம் ஏன் நான் அனுப்புன மெசேஜுக்கு நீங்க பதில் அனுப்பல’

“ஓ இதுதான் விசயமா,எனக்கு முக்கியமான மீட்டிங் இருந்தது அதுதான் உன் மெசேஜுக்கு ரீப்ளே பண்ணலை,இதுக்கு போய் என்னை தேடி வந்திருக்க,ஒரு போன் பண்ணிருக்கலமே விழி”என்றான்.

‘என்மேல கோபம்னா என்னை திட்டிருங்க,அதுக்காக பேசாம இருக்கதேங்க,எனக்கு கஷ்டமா இருக்குங்க’என்று கண்களில் வழியும் நீரை அவன்முன் காட்டாமல் துடைத்தால்.

“அவள் விழிநீரை கண்டதும்,எழுந்து அவள் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்’ “உண்மையிலே எனக்கு முக்கியமான மீட்டிங் இருந்தது விழி அதனாலதான் உன்கிட்ட பேச முடியல,இனிமே இப்படி பண்ணமாட்டேன் எவ்ளோ வேலை இருந்தாலும் உனக்கு சொல்லிட்டு போறேன் சரியா” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

“ஹ்ம்ம் சரிங்க,நான் கிளம்புறேன் வேலைய பாருங்க”என்று கிளம்பினால்.

‘ஹே எங்க போற வா வெளிய சாப்பிட்டு உன்னை வீட்டுல விடுறேன்,வா போகலாம்’

“சரிங்க”

‘வெற்றி இப்போ அவளுக்கும் ,தேவ்க்கும் கல்யாணம் நடக்கபோகுது, அவளுக்கு ஒன்னுனா தேவ் உன்னை சும்மா விடமாட்டான்,என்ன பண்ணபோற வெற்றி’

“எனக்கு அவ உயிர் மட்டும்தான் வேணும்,அதுக்கு இடையிலே யாரு வந்தாலும் அவங்களையும் சேர்த்து கொல்லுவேன்”.

‘அந்த பொண்ணுமேல இவ்ளோ கோபடுற அளவுக்கு அவமேல அப்படி என்ன குரோதம் வெற்றி’.

“என் உயிரே என் தம்பிதான் ஆனா அவனை கொன்னுட்டு இப்போ அவ கல்யாணம் பண்ணிக்கபோறா,ஒருநாள் உனக்கு அந்த உண்மைய சொல்லுறேன் சிவா,இப்போ அந்த பொண்ணா கண்காணிச்டே இரு சரியா”

‘சரி வெற்றி,ஆனா கதிர் அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுறான், இதெல்லாம் சரியா வருமா’

‘கதிர்க்கு நம்மளோட திட்டம் தெரியகூடாது,சிவா,அப்படி தெரிஞ்சதுனா அந்த பொண்ண காப்பாத்துரத்துக்கு கதிர் எந்த எல்லைக்கும் போவான், சிவா,எதுக்கும் கதிரையும் வாட்ச் பண்ணு வா போகலாம்’யாருக்கு தெரியக்கூடாது என்று நினைத்தார்களோ அவனின் மனைவிக்கு தெரிந்துவிட்டது,இவர்களின் திட்டம்.

“சொல்லுங்க கதிர் என்ன விஷயமா என்கிட்டே பேசணும் சொன்னேங்க” என்று கதிரிடம் கேட்டான் தேவ்.

‘தேவ் உங்களுக்கு என்னை தெரியாது ஆனா உங்க வருங்களா மனைவி வாசுகிய எனக்கு தெரியும்,அவங்களும் நானும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்,என்று அவளை சந்தித்ததில் இருந்து அவனின் காதலியை காப்பாற்றியது வரை சொல்லி முடித்தான்’

“அதுமட்டுமில்லை தேவ் என் அண்ணனால வசுக்கு ஆபத்து இருக்கு அதனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வசுவ நீங்க உங்க பாதுகாப்புல இருக்கணும்,இனி வசுக்கு நீங்கதான் பாதுகாப்பு வளையம்,எனக்கு தெரிஞ்ச வரை உங்ககிட்ட சொல்லிட்டேன் இனி நீங்க பார்த்துகோங்க தேவ்”என்று கூறினான்.

தேவ் “ரொம்ப நன்றி கதிர்,இனி என் சுகிய நான் பத்திரமா பார்த்துகிறேன், ஆனா வெற்றிக்கு ஏன் வசுமேல இவ்வளோ கோபம்”

“அது நீங்க போகப்போக புரிஞ்சுகோங்க தேவ்,நான் கிளம்புறேன்”என்று தேவ்விடம் விடைபெற்று சென்றான்.

கல்யாண வேலைகள் மிகவும் வேகமாக நடந்தது….வாசுவுக்கும்,மலருக்கும் புடவை,நகை,என்று பார்த்து பார்த்து எடுத்தனர்…கல்யாணம் நடக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், மணமகனுக்கும், மணமகளுக்கும் நலங்கு வைக்கும் வைபவம் நடந்தது.

முதலில் இலக்கியனுக்கு நடந்தது “தாய் மாமன் நலங்குக்கு எடுத்த உடையை அவனுக்கு கொடுத்து உடுத்திவரவேண்டும்,பின்பு மணமகனை நலங்குபலகையில் அமரவைத்து,தாய் மாமன் சந்தானம் வைத்து, மாலையிட்டு அவன் முன் வைத்துள்ள மூன்று பானைகளிலும் மூன்று கையளவு அரிசியை எடுத்து போடவேண்டும் தாய் மாமன் மனைவி,அல்லது,அக்கா ,தங்கைமார்கள்,இப்படியாக இலக்கியனின் நலங்கு முடிந்ததும்,வசுவின் நலங்கு ஆரம்பமானது.

வசுவுக்கும் இலக்கியனுக்கு செய்தமாதிரி நலங்கு செய்து (மணப்பெண்ணுக்கு பானை வைக்ககூடாது)அது தவிர்த்து வசுவுக்கும் நலங்கு வைத்தனர்,இவர்களுக்கு நலங்கு வைத்த பின்னர் மலருக்கும், தேவ்க்கும் நலங்கு வைத்தனர்.

அன்று மாலை மணப்பெண்ணுக்கு வளையல் போடும் சடங்கும் நடந்தது,இதில் மாப்பிள்ளைவீட்டார் மணப்பெண்ணுக்கு தங்கநிற கண்ணாடி வளையல் வாங்கி பெண் வீட்டுக்கு சென்று மணப்பெண்ணின் அத்தை அதை போட்டுவிடுவார்கள்,அந்த வளையல் உடையாமல் இருக்க மணப்பெண்ணை எந்த வேலையையும் செய்யவிடமாட்டார்கள்.

கல்யாண நாளும் வந்தது…இரு பெண்களும் தங்கள் துணைகள் தேர்ந்தெடுத்த தங்கநிற பார்டரும்,குங்குமநிறம் கொண்ட பட்டுசேலையை உடுத்தி மணமேடைக்கு வந்தனர்,தேவ்வும்,இலாவும்,ஐயர் கூறும் மந்திரத்தை சொல்லிக்கொண்டு நிமிர்ந்து தங்களது துணைவிகளை பார்த்துகொண்டுஇருந்தனர்.

அப்பொழுது தேவ் மனதில் அந்த அழகான வரிகள் தோன்றியது.

அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை “

“இருவரும் மணமகனின் அருகில் அமர்ந்ததும்,இலா “அழகா இருக்க விழி” என்றான்.

மலரோ சிரிப்புடன் “தேங்க்ஸ்ங்க”

தேவ் “உனக்கு இந்த சேலை நல்ல இருக்கு,எப்படி என் செலக்சன்”

வசு “எனக்கு பிடிச்சுயிருக்கு”

ஐயர் “இந்தாங்கோ இதை எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டுவாங்கோ”என்று தாலித்தட்டை கொடுத்தார்.

அனைவரின் ஆசிர்வாதமும் ஒருசேர்த்து மணமகன்களின் கையில் ஐயர் தாலியை கொடுக்க,இருவரும் ஒருசேர வாங்கி,தங்களது துணைகளின், கழுத்தில் ஒவ்வொரு முடிச்சுக்கும் “இனி என்னில் சரிபாதியாக நீயும்,நானும்,இருக்கவேண்டும்,உன்னை என்றும் கைவிடமாட்டேன் என்றும்,உன் சொந்தங்களை என் சொந்தமாகவும்,என் சொந்தங்களை உன் சொந்தமாகவும் பார்ப்பேன் என்றும்,சொல்லி இலக்கியனும்,தேவ்வும், மூன்று முடிச்சுட்டர்கள்.

இரு ஜோடிகளும் இனி நல்லபடியாக வாழவேண்டும் என்று மணமக்களின் பெற்றோர்களும்,சொந்தங்களும் அட்சதை தூவி வாழ்த்தினர்.

“இப்போ இரண்டு ஜோடிகளும் அவங்க அப்பா அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிகோங்க”என்றார் ஐயர்.

தேவ் “எல்லார்கிட்டயும், தனியா ஆசிர்வாதம் வாங்குறதைவிட, எல்லோரையும் ஒண்ணா நிக்கவச்சு ஆசிர்வாதம் வாங்குனா நல்ல இருக்கும் என்னப்பா”என்று நந்தனிடம் கூறினான்.

ஐயர் “இதுவும் நல்லதுதான்,இரண்டு ஜோடியோட அம்மா அப்பா,இங்க வந்து நில்லுங்க”என்று அரை வட்டமாக நிற்கவைத்து,இரு ஜோடிகளும்,ஒருசேர அவர்களிடம்  விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அவர்களின் பெற்றோகள், “எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும், பதினாறு பெற்று பெருவாழ்வு வாழனும் பிள்ளைகளே”என்று ஆசிர்வாதம் செய்தனர்.

அதற்கடுத்து மணமக்களை வாழ்த்த ஒவ்வருவராக வந்தனர், போட்டோகிராபர் இரு ஜோடிகளையும் விதவிதமாக போட்டோ எடுத்தனர், மணமக்களை சாப்பிட அழைத்து சென்றனர்,அப்பொழுது மணமக்களை ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட சொல்லி போட்டோ எடுத்தனர்,இலா ஜோடியை எடுத்து முடித்த பின்,தேவ் ஜோடியை எடுக்க, போட்டோகிராபர், வசுவை ஊட்டிவிட சொல்ல அவளோ “அதெல்லாம் வேணாங்க’என்று மறுத்துவிட்டால்,ஆனால் தேவ்வோ அவளுக்கு ஊட்டிவிட்டு அதை போட்டோ எடுக்க சொன்னான்.

வசு “எனக்கு இதெல்லாம் பிடிக்காது வசீ”என்றால்,அவனின் பெயரை சுருக்கி அழைத்ததை அவன் கவனிக்கவில்லை.

“பழகிக்கோ சுகி”

“ஆனால் அவளோ ‘எனக்கு ஊட்டிவிட பிடிக்காது”என்று நினைவில் யாருடனோ சொல்லிய நினைவு அவளுக்கு தோன்றியது.

‘இன்னுமா நீ சாப்பிடலை’என்று தேவ் அவளை கேட்டான்.

“எனக்கு பிடிக்கலை,என்று இலையை மூடி வைத்தால்.

‘என்னாச்சு சுகி,ஏன் இலையை பாதிலையே மூடி வைக்குற’என்று அவன் அவசரமாக கேட்டான்.

“இல்லங்க எனக்கு பிடிக்கலை”என்று எழுந்துவிட்டால்.

‘இப்படியாக மணமக்களின் ஒவ்வொரு சடங்கும் முடிந்தது’.

“இங்க பாரு வசு அங்க,எல்லோருக்கும் மரியாதை கொடுத்து நடந்துக்கோ,காலையில சீக்கிரம் எழுந்து பழகிக்கோ,அத்தை,மாமாகிட்ட நல்லபடியா நடந்துக்கோ,சரியா”.என்று ஜானகி மகள் பிரிவதைவிட அவள் மாமியார் வீட்டில் எப்படி நடந்துக்க வேண்டும் என்பதை பாடம் எடுத்துகொண்டு இருந்தார்.

‘நீ எல்லாம் என் அம்மாவா பொண்ணு பிஞ்சு போறேனே கொஞ்சமாது கவலைபடுனும் தோணுதா,பேசாத போங்க அம்மா,என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“வசுமா பார்த்து நடந்துக்கோ,சரியா அம்மா அடிக்கடி உன்னை வந்து பார்க்குறேன்,அப்புறம் உன்னோட எல்லா பொருளும் அம்மா எடுத்து வச்சுட்டேன் ஹ்ம்ம்,நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் வசுமா”,என்று யசோ வசுவை கட்டியணைத்து கண்ணீர் விட்டனர்.

“மற்றொரு பக்கம்,மலரின் பெற்றோர்கள், பார்த்து நடந்துக்கோ பாப்பா ஜானகி அண்ணி எது சொன்னாலும்,கேட்கணும்,அம்மா சொல்லிகொடுத்த சமையல் குறிப்பு எல்லாம் நீ ஞாபகம் இருக்குல வாய்க்கு ருசியா சமைச்சு போடு அத்தை மாமாவுக்கு,மாப்பிளைக்கு,ஹ்ம்ம்”.

“வசு போயிட்டு வரேன் டி,நீயும் அடிக்கடி மெசேஜ் பண்ணு,பார்த்து இரு பை டி”என்று இருதோழிகளும் கட்டியணைத்து விடைபெற்றனர்.

‘சரி டி மலர்,நீயும் எனக்கு மெசேஜ் பண்ணு,இந்த கண்ணா நம்ம கல்யாணத்துக்கு வரலை டி அவன் வீட்டுக்கு  வந்தா சொல்லு,பை டி’என்றாள்.

“சரிம்மா,போயிட்டு வரேன்,”என்று முதலில்,இலாக்கியன்,மலர்,தம்பதியர் குடும்பத்துடன் கிளம்பினர்.

“அடுத்து தேவ்,வசு தம்பதியினர்,குடும்பத்துடன் கிளம்பினார்கள்.

‘பொண்ணு மாப்பிளை வந்துட்டாங்க,ஆரத்திய எடுத்துட்டு வாங்க,என்றார். உறவினர் ஒருவர் தேவ்,வசுவை ஆலம் சுற்றி,வரவேற்றனர்,வலது கால எடுத்து வச்சு வாம்மா,அண்ணி இங்கதான் பூஜை அறை, பொண்ணையும், மாப்பிளையும் வரசொல்லுங்க விளக்கேத்த,என்றார்.

“மருமகளே குடும்பம் நல்லபடியா இருக்கணும்,எல்லோரும் நல்ல இருக்கணும் சாமிகிட்ட வேண்டிகிட்டே இந்த விளக்கா ஏத்து,என்று வசுவிற்கு,கூறினார்.

“அடுத்து புது பெண்ணை சமையல் அறையில் உள்ள,உப்பு, புளி,பருப்பு வகைகளை, தொட சொல்லி” அதன் அர்த்தங்ககளையும் சொன்னார்.

“இதே போல,ஜானகி வீட்டிலும் நடந்தது,ஆனால் மலர் மனதில் ஏதோ ஒன்று சங்கடம் நிலவியது”அவள் முகத்தை பார்த்து யசோ என்னவென்று விசாரித்தார்,அவளோ எதுவும் இல்லை என்று கூறிவிட்டால்.

இரு ஜோடிகளின் முதல் இரவும் வந்தது.

இலக்கியன் அறையில் அலங்காரம் மிகவும் அழகாக செய்யப்பட்டது, ஆனால் ரசிக்கும் நிலையில் அவன் இல்லை,கதவு திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்து பார்த்தான்,மலர் கையில் பால் சொம்புடன் அவன் எதிரில் நின்றுகொண்டு இருந்தால்.

‘இங்க கொடு மலர்,என்று அவள் கையில் இருக்கும் பாலை வாங்கி மேஜையில் வைத்து விட்டு,அவளை அவன் அருகில் அமரச்சொல்லி அவளிடம் “என்னை விரும்பிதான் கல்யாணம் பண்ணிய மலர்”என்றான்.

‘என்ன திடீர்னு, இந்த கேள்வி,உங்களை பிடிக்கலைன்னு யாராவது சொல்லுவாங்களா,எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்’என்றால்.

“அப்புறம் ஏன்,என்கிட்டே மறைச்ச,நீ என்னை ஒரு வருஷமா விரும்புறத”என்றான்.

‘அவளோ அதிர்ச்சியில்,நான் உங்களை விரும்புறது எப்படி தெரியும்’என்றால்.

“வசு” ஒருவரியில் பதில் சொன்னான்.

‘ஆமாம்,நான் உங்களை விரும்பினேன்’தெளிவாக சொன்னால்.

“ஆனா ஒரு வருஷமா இல்லை இரண்டு வருஷமா,என்று அவன் படிப்பு முடிந்து வந்த பொழுது வசு என்று நினைத்துகொண்டு மலரை பயமுறுத்தியது,இலாவுக்கு என ஜானகியுடன் சேர்ந்து சமைத்தது,அவனின் பிறந்தநாள் போது  இலாவுக்கு பிடித்த பரிசுகள் வாங்கி வைத்தது,என்று ஒவ்வொன்றையும் கூறி முடித்தாள்.

“இப்போதான் நிம்மதியா இருக்கு,உன்கிட்ட இருந்து எப்படி உன் காதலா சொல்லவைக்குறதுன்னு நினைச்சேன்,ஒரு சின்ன போய்தான் சொன்னேன் அதுக்கே இப்படி வருதே உண்மை,”என்றான்.

‘என்ன சொல்லுறேங்க,என்று ஒரு நொடி யோசித்து,உண்மையை தன்வாயால் சொல்லியது’

“என்னங்க என்று சிணுங்கி அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள்”

“இனி இருவரும் காதலை மறைக்கபோவது இல்லை,என்று அவளின் ஒவ்வொரு பக்கமாய்,தன் விரல் என்னும் பேனாவால் நிருபித்துக்கொண்டு இருந்தான்,இலக்கியன்.அழகான காதல் ஓவியம் நிறுவப்பட்டது.

“தேவ்வின் அறையில் அலங்காரம் அழகாக இருந்து,வசு அவனுக்காக காத்துகொண்டு இருந்தால்,ஒரு நிலையில் எழுந்து ஜன்னல் அருகே நின்று அந்த முழு நிலவை  பார்த்துகொண்டு இருந்தால்,அப்பொழுதும் அவள் நினைவில் இதே போல உணர்வு தோன்றியது, “இந்த முழுநிலவு வந்தா நான் வருவேன்னு அர்த்தம்” என்று யாரோ கூறியது போல் உணரமுடிந்தது”.

‘என்ன நான் வந்ததகூட கவனிக்காம அந்த நிலவ பார்த்துட்டு இருக்குற’என்று வசுவின் பின்னாடி வந்து நின்றான் தேவ்.

“திடுக்கிட்டு திரும்பினால்”

‘ஹே பார்த்து,நான் தான்,’

“இல்லை அந்த நிலா என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது”என்றால்.

‘நீகூடத்தான் என்னை ரொம்ப இம்சிக்குற சுகி”என்று அவளின் கழுத்து வளைவில் அவன் முகத்தை பதித்தான்.

“என்னங்க இருங்க,முதல பால் குடிங்க”

‘அதெல்லம் அப்புறம் குடிக்கலாம்’என்று அவளை தூக்கிக்கொண்டு மெத்தையின் அருகில் சென்று இறக்கிவிட்டான்.

“என்னை பிடிக்குமா சுகி”என்று கையை பிடித்துகொண்டு அவளிடம் கேட்டான்.

‘ஹ்ம்ம்,முதல நாம பழகணும்,அடுத்து புரிஞ்சுக்கணும்,என் காதலா உங்ககிட்ட சொல்லணும்,அப்புறம் இதெல்லாம் நடந்தா நாம ரெண்டுபேரும் எந்தவித சங்கடம் இல்லாம இருக்கலாம்’என்று அவள் கூறினால்.

“ஹ்ம்ம் சரி,நீ சொல்றதும் சரிதான்,1st பழகலாம்”என்று அவளின் தலையில் செல்லமாக முட்டி கூறினான்.

“ஆனா சுகி இது “நமக்குள்ள இருக்கும்”என்று அவன் சொல்வதற்குள் இவள் கூறிவிட்டால்”

“ஓகே குட் நைட்”

‘இருவரும் தங்களது காதலை எதிர் பார்த்துகொண்டு இருந்தனர்,

ஆனால் இருவரின் விலகலை பார்த்த அந்த ஆத்மா வேதனையுடன் காற்றோடு காற்றாக கலந்தது.

 

 

                           உன்நினைவுகள் தொடரும்……….

 

Advertisement