Advertisement

                  துருவங்கள் 20

 

”டேய்.. எப்படியோ என் மாமானுக்கு எந்த உண்மையும் தெரியவிடாம நாம முந்திகிட்டோம், அதே மாதிரி அந்த தெய்வாவையும்,  என் மாமானையும் போட்டு தள்ளிட்டு அவங்க சொத்து முழுசும் என் பேருக்கு எழுதி வாங்கனும். அது மட்டுமா, என்னை ஜெயிலுக்கு அனுபுன அந்த பாண்டியன நான் சும்மா விடமாட்டேன்.”

“ நான் அவங்களை கொல்ல தான், ஜெயில இருந்து தப்பி வந்தது வேற எவனுக்கும் தெரியக்கூடாது,   முக்கியமா அந்த பாண்டியனுக்கு தெரியக்கூடாது. நல்லவேளை என் மாமான நீ என்கிட்ட கூட்டிட்டு வந்த. இல்லையினா     அவனும் அவங்ககூட சேர்ந்துகிட்டு என்னையும், என் அப்பனையும் விடமாட்டான்”

“அண்ணே…. ஏன் சொத்துக்கு அந்த குடும்பத்தை கொல்லனும், பேசாம அந்த ஆள்கிட்ட       வெத்து பேப்பர்ல கையேழுத்து வாங்கிட்டு, அந்த பொண்ணுகிட்டயும் கையெழுத்து வாங்கிறலாம், இதுக்கு எதுக்கு நீங்க நல்லவன் வேஷம் போடனும், அதுமில்லாம தேவையில்லாம அந்த இரண்டு பேரையும் எதுக்கு வீணா கொல்லனும், கொன்னுட்டு ஜெயிலுக்கு வேற போகனும், சொல்லுங்க” திவாகரனின் அல்லக்கை கேட்க.

“ டேய் மடையா…., அந்த சொத்தும் முழுவதும் எனக்கு சொந்தம், ஆனா என் அம்மா, என் அப்பா செஞ்ச கொலைக்காகவும், எங்கமேல நம்பிக்கை இல்லாமலும், அவங்க சொத்தும் முழுவதும் அந்த தெய்வா பேருலையும், என் மாமா பேருலையும் எழுதி வச்சுட்டாங்க. அது தெரிஞ்ச என் அப்பா கோவத்துல என் அம்மாவ கொன்னுட்டாரு. அதான் அதுக்கு தான் அந்த குடும்பத்தையும் கொல்லனும் நானும் என் அப்பாவும் முடிவு செஞ்சோம்.”

“ஆனா…. நீ சொல்லறது சரி தான் ஏன் அவங்களை கொன்னுட்டு நாமா ஜெயிலுக்கு போகனும்.  பேசாம என் மாமானையும், அந்த தெய்வாவையும் மறுபடியும் கடத்திடலாம, கடத்தி அவங்ககிட்ட இருந்து சொத்தை எழுதி வாங்கிட்டு, அப்புறம் அவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டு, தூக்கிப்போட்டுட்டு நாமா வேற ஊருக்கு ஓடிடாலாம்.”

“எனக்கு தேவை அந்த சொத்தும், அந்த பாண்டியன் குடும்பம் அனுபவிக்க வேண்டிய துன்பம் மட்டும் தான்.”

“என்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்திருப்பான் அவன், அவனை சும்மா விடமாட்டேன்” கண்களில் வெறியுடன் பேசினான்.

“அண்ணே, நாளைக்கு திருமூர்த்தி வீடுல மூனு ஜோடிக்கு விருந்து வச்சு இருக்காங்க…”

“ரொம்ப நல்லது… என் மாமானுக்கு வேலை வந்திருச்சு… எங்க இருக்கான் என் மாமான்”

“அவரு ரூம்லையே அடைஞ்சு கிடக்குறாங்கண்ணே… இன்னும் சாப்பிட கூட வரலை..”

“தட்டுல சாப்பாடு போட்டு எடுத்துட்டு வா.. இன்னைக்கு நான் பிழியுற சோகத்துல என் மாமா, அந்த திருமூர்த்தியையும், பாண்டியனையும், ஒருவழியாக்கனும்”

“அண்ணே.. அடுத்த வாரம் ஊர் திருவிழா நடக்கப்போகுது அன்னைக்கு நாம அவங்க மேல குறிவச்சுருலாம். அப்போ கடத்துனா யாருக்கும் தெரியாதுண்ணே…”

”அப்படியா சொல்லுற…. சரி பண்ணிடுவோம்.. எல்லா ஏற்பாட்டையும் நீயும், அவனும் பார்த்துக்கோங்க, யாருக்கும் சந்தேகம் வராம சரியா”

“சரிண்ணே”

”சொந்த மகளின் கல்யாணத்தை தான் முன்னின்று நடத்தாமல், வேறு யாரோ நடத்தியது அவருக்கு குருவுக்கு வருத்ததை அளித்தது. ஆனால் தன் மகள் தன்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று தெரியவில்லை. தான் அவர்களை  பிரிந்து போனது மிகப்பெரிய தவறோ, என குருமூர்த்திக்கு தோன்றியது. தாமரையைவிட்டும், தன் மகளை விட்டும் பிரிந்து போனது சூழ்நிலை அவரின் நினைவு பின்னோக்கி சென்றது”.

“திருமூர்த்தியின் பஞ்சாயத்தின் தீர்ப்பால் ஊரைவிட்டு வெளியே சென்றப்பின் எங்கு செல்வது, எப்படி மனைவி, மகளை காப்பாற்றுவது என யோசித்து கொண்டே திருச்சிக்கு சென்றார். அங்கோ ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டே குரு வேலை தேடினார். ஆனால் அவருக்கு வேலை கிடைத்தது ஆனால் அது வெளி மாநில வேலை தான் கிடைத்தது. அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும். அடுத்த வேலை உணவுக்காக என்ன செய்வது மனைவியின் தாலிக்கொடியை அடகு வைப்பதை தவிர வேற வழி எனத் தோன்றியது. ஆனால் அந்த தாலிக்கொடி அவரின் முதல் நெல் அறுவடை செய்த பணத்தில் தாமரைக்கு போட்டது அந்த தாலிக்கொடி, அதை அடகு வைக்க மனம் இல்லை அவருக்கு அதானல் வெளி மாநில வேலைக்கு செல்வது என முடிசெய்துகொண்டு தாமரையிடம் கூறிக்கொண்டு சென்றார்”

“அங்கு சென்றப்பின் அவருக்கு நல்ல வேலையும், நல்ல சம்பாத்தியமும் கிடைத்தது.அவரின் மனைவிக்கு அந்த முதல் சம்பளத்தை அனுபினார். இப்படியாக அவர்களின் வாழ்க்கை யாருக்கும் தெரியாமல் முக்கியமாக பழனிச்சாமிக்கு தெரியாமல் நன்றாக சென்றுகொண்டிருந்தது. ப்ரியாவுக்கு நினைவு தெரிந்த பின் அவள் அப்பாவை பற்றி கேட்க ஆரம்பித்தால். தாமரையோ அவரின் பயணத்தை கூறி சமாதானம் செய்தார்.”

“ பின் ஒரு நாள் குருமூர்த்தியை தேடி திருச்சிக்கு திவாகரன் தேடி வந்துவிட்டான். அது தெரிந்த தாமரை யாரிடமும் சொல்லாமல் அவர் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டார். அதற்க்குபின் குருமூர்த்திக்கு தகவல் சொல்லிவிட்டார். அவரும் தாமரைக்கு பாதுக்காப்பாக இருக்க சொல்லி அறிவுறுத்தினார்..”

“குருமூர்த்திக்கு, தாமரையின் எங்கு சென்றாலும் அவருக்கு தகவல் எப்படியாவது சென்று சேரவேண்டும். வேண்டாத தெய்வமில்லை. திருநெல்வேலியில் இருந்த தாமரைக்கு அங்கு இருந்த ஒரு பெரியவர் தான் அவர்கள் இருவரையும் பாதுக்காப்பாக பார்த்துகொண்டார். ப்ரியாவும் பெரிய பெண்ணாகி, பள்ளி முடித்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள். ஆனால் அங்கும் திவாகரன் தேடி வருவான் என்று அவர்கள் நினைக்கவில்லை.”

“ஒருவழியாக, திவாகரனின் கண்ணில் இருந்து தப்பி சென்னை வந்து சேர்ந்தார்கள். ப்ரியாவின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவளை சென்னையில் படிக்க வைத்தார் தாமரை. மொத்தம் இருபது வருஷம் மனைவியையும், மகளையும் பிரிந்திருந்த குருமூர்த்திக்கு தாமரையையும், பிரியாவையும் பார்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அவரின் சூழ்நிலை வரவிடாமல் செய்தது.”

“இறுதியாக, இப்போ வந்தபோது தாமரை குடியிருந்த வீட்டின் முகவரியை தேடி சென்றார். ஆனால் அங்கு தன் மனைவி இறந்ததை அறிந்து அவருக்கு துக்கம் இருந்தது. ஆனால் மகள் எங்கு சென்றால் என தெரியாமல் அவர் அலைந்தார். கடைசியாக திவாகரனை ஜெயிலில் சந்த்தித போது அவன் கூறிய விஷயங்கள் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.”

“பாண்டியனும்,திருமூர்த்தியும் சேர்ந்து தாமரையை கொல்ல சதித்திட்டம் தீட்டி, தெய்வாவை ஊர் ஊராக தேடி அலைந்து அவர்களை கண்டறிந்து பின் தெய்வாவை கடத்தினதும், அவளுக்கே தெரியாமல் அவளை திருமணம் செய்யததையும், அதுவும், தாமரையை கொன்று அவரின் முன்னிலையிலே பிரியாவை அழைத்து சென்றத்தையும், மாற்றி கூறினான் திவாகரன். தான் காப்பாற்றா வந்த போது தான் இது எல்லாம் நிகழ்ந்தது என பெரிய பொய்யை கூறினான்.”

“பின் பிரியா, சொந்த ஊரில் இருக்கிறால். அதுவும் முத்தையாவின் வீட்டில் இருப்பதும். கூறிமுடித்தான். இதை அனைத்தையும் நம்பிய குருமூர்த்தியின் கோவம் பாண்டியன் மீதும், திருமூர்த்தியின் மீது திரும்பியது. அவரின் கோவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட திவாகரன் ஜெயிலில் இருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிவிட்டான்.”

“குருமூர்த்தி ஊருக்கு சென்ற நேரம் தெய்வா, தென்னவனின் திருமணம் விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. மகளின் கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரம் சரியாக மண்டபத்தில் நுழைந்தார் குருமூர்த்தி. ஆனால் மகளின் வாழ்க்கையை கெடுக்க நினைக்காமல், தாமரையின் இறப்பையும், மகளின் இரண்டாவது திருமணத்தையும், மனதில் வைத்துகொண்டு, பாண்டியன், திருமூர்த்தியின் மீது கோவத்தை காட்டினார். ஆனால் இவரின் கோவம் பஞ்சாயத்தின் நடந்த உணமையை அந்த மூவருக்கும் தெரியப்படுத்திவிட்டார்”

”பழைய நினைவில் மூழ்கி இருந்த குருமூர்த்தியை ” மாமா “ திவாகரனின் குரல்.

“மாமா” “மாமா”

“சொல்லுப்பா..”

“என்ன மாமா பழைய ஞாயபகமா”

“ஆமாம் திவா”

“அந்த பாண்டியன சும்மா விடாக்கூடாது மாமா.. அவனையும் அந்த திருமூர்த்தியையும். சொல்லுங்க மாமா என்ன பண்ணலாம் அவங்களை”

“என் மனைவிய கொன்னவங்களுக்கு நான் தான் தண்டனை கொடுப்பேன் திவா..”

“என்ன செய்யப்போறீங்க மாமா”

“ என் மனைவிய கொன்னவனையும், இந்த ஊரை விட்டு அனுபுன என் அண்ணனையும், பழிவாங்குறேன். பஞ்சாயத்தை கூட்டி அவங்கமேல புகார் கொடுக்குறேன். இந்த ஊரைவிட்டு அனுப்புறேன். அவங்க ரெண்டு பேரையும்”

“புகார் கொடுத்து பழிவாங்கிறையா… யோவ் மாமா, இன்னும் ஒரு வாரத்துல உன்னையும், உன் மகளையும் கடத்தப்போறேன். இந்த நேரத்துல பஞ்சாயத்தை கூட்ட போறீயா… சரி எப்படியோ அவங்களை நீ பழிவாங்க போற.. நான் செய்யவேண்டியதை நீ செய்ய போற” திவாகரன் மனதுக்குள் பேசிகொண்டிருக்க.

“என்ன திவா நான் சொன்ன மாதிரி செய்யலாம் சரியா.. அப்போ தான் என் அண்ணவா பழிவாங்க முடியும்” குரு சொல்ல, திவாகரனோ முழித்துகொண்டிருந்தான்

“என்ன சொன்னாருனு தெரியலையே… சரி என்னனு அப்புறம் கேட்டுக்கலாம்.” அவன் நினைத்துகொண்டு அவருக்கு சாப்பாடு கொடுத்தான்.

“என்ன வள்ளி, தெய்வாவோட அப்பா இப்படி திடீர்னு வந்து நிக்குறாங்க. பாண்டியன் மேலையும், ஐயாமேலையும் பழி போடுறாங்க. நீயும் பார்த்துட்டு இருக்குற சொல்ல வேண்டியது தானே வள்ளி நீ எல்லா உண்மையும். அமைதியா இருக்குற மண்டபத்துல.”

“எனக்கு பயமா இருக்கு வள்ளி, குருமாமா இப்போ வந்து இருக்குறதை பார்த்தா யாரோ அவருக்கு பின்னால இருக்காங்க. அது யாருனு உனக்கு தெரியுமா.. சொல்லு வள்ளி. இப்போ என்ன பண்ணப்போற வள்ளி.”

“ நான் தான் பேசிட்டு இருக்கேன் அங்க அந்த புறாக்கூட கொஞ்சிட்டு இருக்குற… வள்ளி.” தென்னவன் வள்ளியின் முழங்கையை பிடித்து திருப்பினான்.

“ப்ச்.. என்ன தென்னவன் மாமா நானே இப்போ தான் இந்த புறாவை கொஞ்சிட்டு இருக்கேன். இங்க வருவதே இதை பார்க்க தான்.. நீங்க அதையும் தடுக்குறீங்க. இப்போ என்ன குரு சித்தப்பா எப்படி இங்க வந்தாங்கனு உங்களுக்கு தெரியனும், அப்புறம் அவருக்கு பின்னாடி யாரு இருக்குறானு தெரியனும். அவ்வளவு தானே.”

“என்ன ஈசியா சொல்லுற அவ்வளவு தானேனு. நான் தெய்வாக்கு எதுவும் ஆகிடுமேனு பயப்பட்டா. நீ சாதாரணமா சொல்லுற. அப்போ உனக்கு தெரியும். குருமாமா வர்ரது.”

“தெரியும்..”

“தெரியுமா எப்படி வள்ளி..”

“அவரு சென்னை வந்ததுல இருந்து, தாமரை சித்தி இறந்ததை கேள்வி பட்டு, தெய்வாவை தேடி அவரு நம்ம ஊருக்கு வரதுக்கு முன்ன திவாகரனை சந்திச்சு பேசுனதையும், அடுத்து அவரு இங்க வருவார்னு எனக்கு தெரியும். அவருக்கு இப்படியெல்லாம் பேச சொல்லிகொடுத்தது திவாகரனும் எனக்கு தெரியும், அடுத்து இப்போ அவரு திவாகரன் வீடுல இருக்காருனு, அவங்க பழிவாங்க போற அடுத்த ஆள், அத்தானும், ஐயாவும் தான்.”

“ஆனா அதுக்கு முன்னாடி, தெய்வாவையும், சித்தாப்பாவையும் கடத்தி சொத்தை எழுதி வாங்க போறாங்க. அதுக்கு பின்னாடி தெய்வாவை அவனுக்கு சொந்தமாக்க போறானும் எனக்கு தெரியும்” வள்ளி திணறல் இல்லாமல் தென்னவனின் முகத்தை பார்த்து சொல்ல.

“தென்னவனுக்கு வள்ளி கடைசியாய் சொன்ன வார்த்தையில் நின்றது. ”தெய்வாவை அவனுக்கு சொந்தமாய்” அதிலே அதிர்ச்சியாய் நின்ற தென்னவனை உலுக்கிய வள்ளி..”

“ஆனா தெய்வாமேல அவன் கை படாது. அதுக்கு முன்னாடி நாமா எச்சரிக்கையா இருக்கனும். அடுத்த வாரம் ஊர் திருவிழா அப்போ நாமா தெய்வாவையும், குரு சித்தாப்பாவையும் பாதுகாக்கனும். அதுக்கு  நீங்களும், எனக்கு உதவி செய்யனும் மாமா”

“என்ன வள்ளி, உதவினு சொல்லிகிட்டு, நம்ம குடும்பத்தை பாதுக்காப்பா நான் பார்த்துகிறேன். ஆனா உனக்கு எப்படி அவங்க இந்த திட்டத்தை போட்டு இருப்பாங்கனு சரியா சொல்லுற.”

“எனக்கு தகவல் வந்துச்சு சொல்லுறேன்.”

“அதான் எப்படி”

“அது எல்லாம் ரகசியம் மாமா”

“ஆனா பாண்டியன்கிட்ட மறைக்க முடியாதுல. அப்போ என்ன செய்வ வள்ளி”

“அத்தான்கிட்ட சொல்லனும், ஆனா இப்போ இல்லை இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும், அப்புறம் சொல்லிக்கலாம் மாமா”

“சரி.. வா உள்ள போகலாம் எல்லாரும் நம்மள தேடிட்டு இருப்பாங்க. விருந்துக்கு வந்துட்டு நாமா பேசிட்டு இருந்தா என்ன ஏதுனு ஐயா கேப்பாங்க வா வள்ளி” இருவரும் சாதாரணமாக பேசிகொண்டே உள்ளே சென்றனர். ஆனால் அவர்கள் பேசியதை கேட்டு சிலை என நின்றிருந்தார் ஒருவர்.”

“ஊர் திருவிழா”

“திருவிழாவை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. அவரவருக்கு ஒவ்வொரு வேலையை பகிர்ந்து கொடுத்து, அதன் வேலைகளை கண்காணித்துக்கொண்டிருந்தார் திருமூர்த்தி.”

“வள்ளிக்கு இது மூன்றாவது மாசம் ஆதலால், மசக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தது. காலையில் சீக்கிரம் எழுந்தாலும், அனைவருக்கும் காஃபி மட்டும் போட்டுகொடுத்துவிட்டு ஓய்வு எடுக்க ஆரம்பித்துவிடுவாள். பாண்டியனும் வயல், தோப்பு, என இருப்பக்கமும் அலைந்து கொண்டு இருப்பான் அவன் முயற்சியில் இது ஆறாவது நெல் அறுவடை அதனால் வேலையாக இருக்கிறான். கார்த்தியும் வாழைதோப்பை குத்தகைக்கு எடுத்து அவனது முயற்ச்சியில் இறங்கியுள்ளான்.”

“முத்தையாவிற்க்கு மகன்களின் உழைப்பை மகிழ்ச்சியுடன் பார்த்துகொண்டும், அவர்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்கிறார். கீர்த்திக்கு பிறந்த வீடு போலவே புகுந்தவீடும் என்று இல்லாமல் மாமியாரை அமர்த்தி விட்டு அனைத்து வேலைகளையும் அவளே பார்த்துகொண்டால்”

“மலரும், அது போலவே இருந்தால். ஆனால் திருமூர்த்தியின் உடல் நிலைக்கு ஏற்ப, அவருக்கு நேரா நேரத்திற்க்கு உணவும், மாத்திரையும் மறக்காமல் கொடுத்துவிடுவாள். பிரகாஷ் மலரின் கவனிப்பில் தந்தை நன்றாக இருப்பார் என்று எண்ணிக்கொண்டு. அவரின் வேலைகளை பார்த்துகொண்டான். மாந்தோப்பின் கணக்குகளை மட்டும் அவரிடமே கொடுத்துவிடுவான்.”

“தெய்வாவிற்க்கு தான் சமையல் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் வேளையில் தென்னவன் உதவிக்கு வந்தான் அதுவும் ஒரு நிபந்தனையுடன். ஒரு முறை மட்டுமே சமையல் என்னவென்று சொல்லிகொடுத்துவிட்டு மறுமுறை அவள் செய்யவேண்டும் என்று.  தெய்வாவிற்க்கு அவன் சமையல் செய்வதை பார்த்தவுடன் ஆச்சர்யம், அடுத்த முறை அவள் சமையலில் சொத்தப்பினாலும் அவனது அன்பு சொல்லில் அவள் மறுமுறை சரியாக செய்துவிடுவாள். தென்னவன் காதலோடு நெருங்கி வர, இவளோ தயக்கத்தோடு விலகி செல்வாள். சில சமயம் தென்னவனை அவளே நெருங்கும் போது அவன் அவள் “மனம் முழுக்க நான் இருக்கவேண்டும் என நினைத்துகொண்டு விலகிவிடுவான்” இதுவே இவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது போல் இருந்தது”.

“வள்ளிக்கு தெரியும், தென்னவனும், தெய்வாவும் விலகி இருப்பது, ஆனால் அவள் வெளிப்படையாக அவர்களிடம் கேட்கவில்லை.அவர்கள் இருவருக்குள் தான் நுழைந்தால் அது நல்லதாக இருக்காது என நினைத்து கொண்டு வள்ளி அமைதியாக இருந்தால்.”

“ஒவ்வொருவரும் திருவிழா வரும் வரை மிகவும் பிஸியாக இருந்தனர். திருவிழாவுக்கான நாளும் வந்தது. முதல் நாள் குத்துவிளக்கு பூஜை, மற்றும் இரவு பத்து மணிக்கு, கரகம் செய்ய ஆற்றங்கரைக்கு பெட்டியுடன் செல்லவேண்டும், அதற்க்கான வேளைகளும் நடந்துகொண்டிருந்தது.”

“திருவிழாவின் இரண்டாம் நாளில், காலையில் சூரியோதயத்திற்க்கு முன் ஆற்றங்கரையில் இருந்து மேளச்சத்ததுடனும், வானவேடிக்கையுடனும், கரகத்தை எடுத்துவருவார்கள்.”

“திருவிழாவின் எல்லா ஏற்பாடுகளும் பிரகாஷ், பாண்டியனும் பார்த்து கொண்டிருந்தனர். திருமூர்த்தி மேற்ப்பார்வை மட்டும் பார்த்தார். திருவிழாவுக்காக மாறன்,கீர்த்தியை குடும்பத்துடன் அழைத்தனர். தெய்வாவையும் தென்னவனையும் சேர்த்து அழைத்தனர் முத்தையாவின் குடும்பம்.”

“திவாகரனின் திட்டம் அறியாமல், குருமூர்த்தி அவனுடன் சேர்ந்து திருமூர்த்தியையும், பாண்டியனையும் பழிவாங்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இது அறியாமல் அனைவரும் திருவிழா நாளினை எதிர்பார்த்துகொண்டிருந்தனர்.”

”ஊரே மாவிலை தோரணமும், தென்னம் பாலை தோரணத்துடன் சேர்த்து அலங்கார விளக்குடன் அலங்கரிக்க பட்டு இருந்தது. தெருவுக்கு தெரு வேப்பில்லை தோரணமும் கட்டி இருந்தது. வேப்பில்லை தோரணம் கட்ட காரணம் உண்டு”

“கோவிலின் பெட்டியும், அம்மனின் கரகமும், ஒவ்வொரு தெரு வழியாக வரும். அடுத்து கோவில்லுக்கு நேர்த்திகடன் செலுத்தவரும் பக்கத்தர்களும் அவர்களின் நேர்த்திகடனை ஆற்றங்காரையில் இருந்து எடுத்துகொண்டு ஒவ்வொரு தெருவின் வழி எடுத்து சென்று கடைசியாக கோவிலுக்கு வருவார்கள். முளைப்பாரி, பொங்கல் பானை, தீச்சட்டி, கரும்பு தொட்டில், பால்குடம், என ஒவ்வொன்றும் நடக்கும்.”

“திருவிழாவின் முதல் நாள் மாலையில், குத்துவிளக்கு பூஜையுடன் ஆரம்பித்தது. வள்ளியை தவிர கீர்த்தி, மலர், தெய்வா மூவரும் குத்துவிளக்குடன் கோவிலுக்கு வந்தனர்.”

”இந்த குத்துவிளக்கு பூஜைக்காக இளம் வயது பெண்களும், ஆண்களும் காத்திருப்பார்கள். வெளியூரில் இருந்து வந்த அத்தை பெண், மாம பையன் என அனைவரும் திருவிழாவுக்கு வரும் பெண்களை சைட் அடிப்பதற்க்கும், இந்த திருவிழாவின் போது சொல்லாத காதலை சொல்லிவிட்டு அடுத்த வருடம் வரும் திருவிழாவுக்காக அவர்களின் பதிலுக்காக  காத்திருப்பார்கள்.”

“குத்துவிளக்கு பூஜை நடத்துவோர், குத்துவிளக்கு பூஜைக்கு வரும் பெண்களுக்கு, குங்குமம் சிமில், ஒரு சிறிய தட்டு போன்று பெண்களுக்கு வழங்குவர்.”

“திவாகரனின் அடியாள் ஒருவன், தெய்வாவின் பின்னயே சுற்றிக்கொண்டிருந்தான். அவள்  தனியாக மாட்டும் சமயத்தில் அவளை கடத்துவது திட்டமாக தீட்டப்பட்டிருந்தது. ஆனால் தெய்வாவோ, எங்கு சென்றாலும், கீர்த்தியின் துணையுடனே சென்றுகொண்டிருந்தால். அதனால் தெய்வாவை கடத்தும் திட்டம் மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது……”

“அண்ணே அந்த பொண்ணு எங்க போனாலும், பாண்டியன் தங்கச்சியோட போகுது, நானும் அப்போ தனியா போவா…, இப்போ தனியா மாட்டுவானு எதிர் பார்த்தேன். ஆனா ஒன்னும் நடக்கலை… நாளைக்குனா திருவிழாவோட முக்கியமான நாள் அண்ணே.”

“இப்போ என்ன பண்ணுறதுனு எனக்கு தெரியலை அண்ணே…” தெய்வா அவர்களிடம் மாட்டாமல் இருந்த எரிச்சலில் அவன் பேச..

“டேய் நாளைக்கு தான் தீச்சட்டி, பொங்கல் பானை, முளைப்பாரி, பால் குடமுனு எல்லாம் வரிசையா நடக்கும். பாண்டியனும், தென்னவனும், திருவிழா நிக்ழ்ச்சியை பார்க்க போயிடுவானுங்க.., அப்புறம் இரண்டும் பெரிசுங்களும், கோவில்ல தான் இருப்பாங்க. வள்ளி சொல்லவே தெவையில்லை இப்போ மாசமா இருக்கறதுனால, வெளியவிடமாட்டாங்க.”

“அந்த நேரத்துல தெய்வாவ நாம தூக்குறோம்”

“எப்படியண்ணே… எனக்கு புரியல.”

“டேய், பெரிய வீட்டுல இருந்து பொங்கல் பானை, முளைப்பாரி கண்டிப்பா எடுக்கனும், அது பரம்பரையா எடுத்தாக வேண்டிய கட்டாயம்.”

“இப்போ வள்ளி எடுக்க முடியாது, ஆனா தெய்வா எடுக்க முடியும். அதான்”

“அப்போ என திவாகரன் ஒவ்வொரு திட்டத்தையும் சொல்ல, அவனின் அடியாள், கவனமாக கேட்டுக்கொண்டான்.”

“அவர்களுடன் சேர்த்து வேறொருவரும் அவனின் திட்டத்தை அறிந்துகொண்டார்.”

”நாளைக்கு திருவிழா, தெய்வா நீ தான் நம்ம வீட்டு சார்பா பொங்கல் எடுக்கனும், கீர்த்தி நீ முளைப்பாரி எடுக்கனும், மலர் நீ  மாவிளக்கும், பொங்கலும் எடுக்கனும், சரியா” வள்ளி அவரவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொண்டிருந்தால்.

“சரிங்க அண்ணி, அப்போ நாங்க சீக்கிரமா எழுந்திரிக்கனும், நான் தூங்க போறேன்.” கீர்த்தி எழுந்து செல்ல.

“மலர், நீயும் கிளம்பு, நான் அத்தான வந்து விட சொல்லுறேன் வீட்டுக்கு”

“வேண்டாம் அண்ணி, அவர் வரேனு சொன்னாங்க, இப்போ வந்துருவாங்க அண்ணி,” மலர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிரகாஷ் வந்தான்.

“பார்த்து கூப்பிட்டு போங்க அண்ணா”

“சரிம்மா வள்ளி”

“ நீ தூங்க போகலையா தெய்வா “ அவளை பார்த்து கேட்க.

“இல்லை அக்கா அவருக்காக காத்திருக்குறேன், அவர் வந்த பின்னாடி சாப்பாடு வைக்கனும். அதான் வெயிட் பண்ணுரேன் அக்கா.”

“அத்தான், தென்னவன் மாமா எங்க உங்க கூட கோவில்லுகு தானே வந்தாங்க”

“வள்ளியம்மா அவன் அப்போவே கிளம்பிட்டான். இன்னேரம் வீட்டுக்கு வந்திருக்கனுமே”அவன் யோசனையுடன் சொல்ல.

“அந்த நேரம் சரியாக வந்தான் தென்னவன்”

“எங்க போனீங்க மாமா, தெய்வா உங்களுக்காக சாப்பிடாம வெயிட் பண்ணுரா.. போங்க சாப்பிடுங்க., போ தெய்வா சாப்பாடு எடுத்து வைச்சு நீயும் சாப்பிட்டு தூங்குங்க.., காலையில விடியலுக்கு எழுந்திரிக்கனும்..” அவளை அனுப்பி வைத்தாள்.

 

                                        துருவங்கள் தொடரும்…………

 

 

 

Advertisement