Advertisement

               துருவங்கள் 21

 

”அந்த மருத்துவமனையில் ஆளுக்கு ஒரு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை…, பெரியவர்கள் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. எங்கு என்ன தவறு நடந்தது என யாருக்கு புரியவில்லை. பிரகாஷூம், தென்னவனும் அவர்களின் மனைவிமார்களுக்கு சமதானம் கூறிகொண்டிருக்க,.., மாறன், கார்த்திக், கீர்த்தி  மூவரும் அந்த ஐ.சி.யு வின் அறையின் முன் இருந்தனர்.”

“பாண்டியனோ பித்து பிடித்தார் போல் தரையை பார்த்துகொண்டிருந்தான். எங்கு தவறு நடந்தது. அத்தனை பாதுகாப்பு இருந்தும் எப்படி அவனால் அந்த செயலை செய்ய முடிந்தது.”

“ஒவ்வொருவரும் அழுகையை அடக்க பெரும் பாடுபட்டுகொண்டிருந்தனர்., ஆனால் அதையும் மீறி மீனாட்சிக்கு அழுகை வந்தது.”

“யாருக்கும் சிறு துன்பம் நினைக்காதாவளுக்கா இப்படி ஒரு சோதனை, கடவுளே கதியென்று நினைப்பவள். இன்று அந்த கடவுள் கூட அவளை காப்பாற்ற வருவாரா.”

“அவர்களின் அமைதியான அழுகையின் சத்ததில் கூட ஒருவனின் காலடி சத்தம் பெரிதாக தோன்றியது.. அந்த வருகைக்கு உரியவன், பாண்டியன் முன் நின்றான்.”

“பாண்டியன்” அவன் தோளை தொட்டவுடன், அவனை கட்டிபிடித்து அழுதான். ஆண்கள் அழுது ஒன்று அவர்களின் காதலுக்காக இல்லை, தாய்க்காக. ஆனால் பாண்டியன் அழுவது அவனது வள்ளிக்காக. அவனின் தாயை நினத்து கூட வருத்தம் கொள்வானே தவிர, அழுக மாட்டான். ஏன்னென்றால் மீனாட்சியின் தாயன்பு அவனை அன்னைக்காக ஏங்கவிட்டதில்லை. ஆனால் இன்று அவனின் சொர்க்கம், உலகம், காதலின் மொத்த உருவாமாய் அவனுடன் இருக்கும் வள்ளி இந்த கோர விபத்து நடந்துவிட்டதால் தான் இந்தனை துரம் அவனுள்.”

“எனக்கு என் வள்ளியம்மா வேணும்டா.. அவங்க இல்லாம நான் எப்படி உயிரோட இருப்பேன். என் வாழ்க்கையே அவங்க தாண்டா.. ஆனா அவங்களை இப்படி இந்த கோலத்துல பார்க்கதான் கடவுள் மிகபெரிய அடிய எனக்கு கொடுத்துருக்காரா.., ஏன் டா எனக்கு மட்டும் இப்படி நடக்குது.”

“டேய்… என் வள்ளியம்மா மட்டும் எனக்கு கிடைக்கல அப்புறம் நானும் உயிரோட இருக்க மாட்டேன்..,  நீ சொன்னா கேட்ப்பாங்க வாடா வள்ளியம்மாகிட்ட பேசு. அவங்களோட உயிர் தோழனே நீ தான நீ சொன்னா அவங்க மறுக்கமாட்டாங்க வாடா..” அவன் நிலைமையில் புலம்பிக்கொண்டிருக்க.

“எப்படி சமதானம் செய்வது எனத்தெரியாமல் அவனும் விழிக்க., வேறு வழியின்றி அவனின் கன்னத்தில் வேகமாக அறைந்தான்.”

“அவன் அறைந்தை பார்த்த அனைவரும், கொஞ்சம் அதிர்ந்தனர். ஆனால் கார்த்தி மட்டும் அவனருகில் வந்து, “அவர் நினைப்பு முழுசும் அண்ணிக்கிட்ட தான் இருக்கு அதான் ஓவர் எமோஸ்னல் ஆகிட்டாங்க” கார்த்தி சொன்ன பின்பு தான் பாண்டியனை பார்த்து பேச ஆரம்பித்தான்.

“உன் வள்ளியம்மாக்கு ஒன்னும் ஆகாது., யாரை காப்பாதிருக்காங்க உன் குடும்பத்தை காப்பாத்திருக்காங்க டா.. நீ தைரியமா இருந்தா தான் இதோ இங்க இருக்காங்களே இத்தனை பேருக்கு நீ ஆறுதல் சொல்ல முடியும், வீட்டுக்கு மூத்தவனா இருந்துகிட்டு நீயே  கலங்கி நின்னா என்னாகும்.”

“வள்ளி இன்னும் ஒருமணி நேரத்துல கண்ணு முழிச்சு உன்னை தான் முதல பார்க்கனும் சொல்லப்போறா. அப்போ நீ அழுதுகிட்டு இருந்தா அவளுக்கு தான் மனசு சங்கடம் ஆகும். அவளுக்கு நீ அழுதா பிடிக்குமா பாண்டியன்.” அவன் கேட்க.

“இல்லை, சின்ன தூசி கண்ணுல பட்டு என் கண் கலங்கினா அவங்க தாங்க மாட்டாங்க” அவன் சொல்ல.

“ம்ம்ம்… அப்படி நினக்குறவ, இப்போ நீ அழுதது தெரிஞ்சா அவங்களும் வருத்தப்படுவாங்க டா.., உன்னை அழுகவிட்டு எல்லோரும் வேடிக்கை பார்க்குறேங்களானு, வள்ளி எங்க எல்லாரையும் சத்தம் போடும். அவ நல்ல மனசுக்கு கடவுள் என்னைக்கு துணை இருப்பாங்க டா” அவனை தேற்ற.

“ஐ.சி.யு. அறையைவிட்டு மருத்துவ குழு வெளி வந்தது.. அங்கு இருந்தவர்களை பார்த்த மருத்துவர். பாண்டியனின் அருகில் சென்று.”

“அவங்க பிழைச்சுட்டாங்க பாண்டியன், இனி அவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனா.. அவர் தயங்குவதை பார்த்த பாண்டியன், என்னவென்று கேட்க்கும் முன், “அவன்” கேட்டான்.”

“என்னாச்சுப்பா…”

அடுத்த நாள் திருவிழா… முதல் இரவு கரகம் செய்ய கோவில் வீட்டில் இருந்து பெட்டி எடுத்துகொண்டு ஊர் தலைவர்களும், பெரியவர்களும், கோவில்லுக்கு உரிமை பட்டவர்களும், கரகம் செய்வதற்க்கு ஆற்றங்கரைக்கு மேளத்தாளத்துடன் சென்றனர்.”

“ நடு சாமத்தில் எழுந்த பாண்டியன், வள்ளியை பார்த்தான், நன்றாக உறங்கி இருந்தாள் வள்ளி. அவளின் அருகில் தலையனை வைத்துவிட்டு அவர்களின் அறையைவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு முன் தென்னவன், பிரகாஷ், மாறன், கார்த்தி எழுந்து வந்து அமர்ந்திருந்தனர்.”

“வாங்க போகலாம், அவர்களை அழைத்துகொண்டு, கரகம் செய்யும் இடத்திற்க்கு சென்றனர். அங்கு ஏற்கனவே, திருமூர்த்தியும், முத்தையாவும் மற்றும் பெரியவர்கள் இருந்தனர்.”

”விடியலின் கரகம் செய்து முடித்து அதை அங்கிருந்து கோவிலுக்கு எடுத்து வரும் போது அதே வானவேடிக்கையுடன் ஆரம்பித்தார்கள். வேட்டு சத்ததை கொண்டு கரகம் வருகிறது என புரிந்துகொண்ட மக்கள், சாமியை வரவேற்க வாசல் தெளித்து கோலம் இட்டு, கோவிலுக்கு வந்த காத்திருப்பார்கள்.”

“வானவேடிக்கயுடன், மேளதாளத்துடன், மயிலாட்டாம், கரகாட்டாம், என ஒலிபெருக்கியில் சாமியி வரவேற்க, சாமியின் பாடலை ஒலிக்கவிட்டு அந்த கரக்கத்தை காண மக்கள் திரண்டு இருப்பார்கள்.”

“சாமியின் கரகம், வந்துகொண்டிருப்பதை அறிந்த கீர்த்தி எழுந்து வேலைய ஆரம்பிக்க போனால் ஆனால் தெய்வாவின் அறையின் முன் யாரோ இருப்பதை அறிந்து கொண்டு சத்தம் போட ஆரம்பித்தால்”

“அண்ணி, அண்ணி இங்க வாங்க தெய்வா அறைக்கு முன்னாடி யாரோ நிக்குறாங்க அண்ணி.., வீடே அதிரும் படி கத்தி வள்ளியை அழைத்து கொண்டிருந்தால்.”

“அந்த சத்ததில் வள்ளியும் எழுந்து வந்து பார்த்தால், ஆனால் அதற்க்குள் அங்கு நின்றவன். எந்த பக்கம் ஓடினான் என்பதை யாரும் அறியவில்லை.”

“எங்க பார்த்த, எப்படி இருந்தான்,”

“அண்ணி, நான் மேல இருந்து கீழ வரும் போது பார்த்தேன், உங்களை சத்தம் போட்டு கூப்பிட்டதுல அவன் எந்த பக்கம் போனானு தெரியலை. தெய்வாக்கு என்னாச்சுனு தெரியலை வாங்க..” இருவரும் தெய்வாவின் அறையை தட்டினர்.

“அவளும் தூக்க கலகத்திலேயே எழுந்து வந்தாள். “என்ன கீர்த்தி, என்ன அக்கா, ஏன் உங்க முகம் இப்படி இருக்கு” அவள் சாதரணமாக கேட்க.

“வள்ளியோ, கீர்த்தியின் கையை அழுத்தி பிடித்துகொண்டு, “ஒன்னுமில்ல தெய்வா, விடிய போகுது அதான் எழுந்து குளிச்சுட்டு வா கரகம் வரும் போது தூங்க கூடாது அதை சொல்ல தான் வந்தேன். போம்மா, “

“சரிக்கா,” அவள் சென்றபின், கீர்த்தியிடம் திரும்பி, இதை பற்றி நான் அத்தான்கிட்ட சொல்லிகிறேன். நீ எதுவும் சொல்லாத கீர்த்தி சரியா..”

“சரிங்க அண்ணி”

”ஒரு நிமிசம் இரு கீர்த்தி, அவளை நிறுத்திவிட்டு, வீட்டை முழுவதும் சுற்றி யாராவது இருக்கார்களா என்று பார்த்த பின் அவளை வெளியில் அனுப்பினால்”

“தனது அறைக்கு வந்த பின் “அவனுக்கு போன் செய்தாள்”.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் நீ வர்ரதுக்கு.”

“……..”

“சீக்கிரம் வா.. எவ்வளவு தைரியம் இருந்தா.. எங்க வீட்டுக்குள்ள்யே வந்திருப்பான் அவன் அடியாள்”

“…………”

“ஆமாம் கீர்த்தி மட்டும் பார்க்கலைனா இன்னேரம் தெய்வாவ கடத்திட்டு போயிருப்பாங்க சீக்கிரம் உங்க ஆளுகலோட வா”

“……………”

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறை இல்லை.., என் வீட்டு ஆளுக மேல ஒரு கீறல் கூட விழுக கூடாது புரிஞ்சதா”

“……………..”

“என் மேல அடிபட்டா கூடா நான் தாங்கிப்பேன் ஆனா என் வீட்டுல உள்ளவங்களுக்கு அடிப்பட்டா.. அடுத்த நொடி உன் பேச்சை நான் மீறிடுவேன்”

“……………”

“சரி வா நான் காத்திருக்கேன்”

”கரகத்தை கோவிலில் வைத்துவிட்டு திருவிழாவின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு பூஜையும், வேண்டுதலும் ஆரம்பித்தது.”

“வீட்டின் மருமகளாக தெய்வா பொங்கல் எடுக்க ஆரம்பிக்க, கீர்த்தி முளைப்பாரி எடுக்க ஒவ்வொருவரும் அவர்களின் வேலையில் பிஸியாக இருந்தனர்.”

“தெய்வா கோவிலுக்கு பொங்கல பானை எடுத்துகொண்டு செல்லும் போது, வள்ளி தென்னவனையும் துணைக்கு போக சொன்னால்.”

“மாமா தெய்வாவ விட்டு ஒரு இஞ்சு நகரக்கூடாது. சரியா.”

“சரிம்மா”

“கீர்த்திக்கு மாறனை துணைக்கு அனுப்பினால்”

“இருந்தாலும் வள்ளியின் மனதில் நெருடலாகவே இருந்தது. அதனால் அவளால் வீட்டில் இருக்க முடியவில்லை.”

“திவாகரனின் திட்டப்படி தெய்வாவை கடத்த முற்படும் போது தென்னவனும் அவளுக்கருகில் இருப்பதை பார்த்த திவாகரன். கோபம் தலைகேறியது. இனியும் தாமதித்தால் இருப்பதும் போய்விடும் என்று எண்ணிக்கொண்டு, தெய்வாவை முடித்துவிட வேண்டும்”

“திவாகரனின் திட்டத்தில் மண் விழுவது போல் தெய்வாவின் தந்தை தென்னவனிடன் இங்கிருந்து போகும்படி சொல்லிக்கொண்டிருந்தார்..”

“ஆனால் அவர்களோ, அவரின் பேச்சில் இருந்த பதட்டதை அறிந்துகொண்டு என்னவென்று கேட்டார்கள்., ஆனால் அவரோ எதுவும் கூறாமல், முதலில் இங்கிருந்து போகச்சொல்லியே வற்புறுட்திகொண்டிருந்தார்.”

“இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திவாகரன், மேலும் கோபமாகி, அவர்களை நெருங்கி தெய்வாவின் தந்தையின் முதுகில் தான் கொண்டு வந்த கத்தியை கொண்டு ஒரே குத்தாக குத்தினான்”

“இதை எதிர்பார்க்காத தெய்வாவோ, “அப்பாபாபா… அவரை தாங்கி பிடிக்க,” தென்னவனோ, திவாகரனை தடுக்க முற்ப்பட்டான். ஆனால் திவாகரன் அடியாட்கள், தென்னவனை இரண்டு பேர் பிடித்துகொண்டனர்.”

“உன்னை கடத்த பிளான் போட்டா, உன் அப்பேன் என்னை போடுறதுக்கு பிளான் போட்டான் அதான் அவனை போட்டு தள்ளிட்டேன். அடுத்து நீ தான் அவளின் அருகில் செல்ல. அவள் ஓட எத்தனிக்க அவளையும் இரண்டு பேர் பிடித்துகொண்டனர்.”

“என்ன டி, என்கிட இருந்து தப்பிச்சுருவியா, உன்னை கொல்லாம் விடமாட்டேன், அவன் அவள் அருகில் வந்து கத்தியை அவளை குத்தும் போது, குறுக்கே வள்ளி வந்து அந்த கத்திக்குத்தை வாங்கிகொண்டால்.”

“ தெய்வாவின் வயிற்றில் கத்தியால் குத்த நினைத்தால், இடையில் வள்ளி வருவால் என்று திவாகரன் நினைக்கவில்லை. என்ன நடந்தது என அறியும் முன் திவாகரன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான்.”

“தென்னவனும், தெய்வாவும் பதறிக்கொண்டு  வள்ளியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். வள்ளியின் விசயத்தை கேள்விபட்டு ஊரே திமிலோகப்பட்டது. “

“பாண்டியன், மற்றும், அவனின் குடும்பத்தார்க்கு வள்ளிக்கு நேர்ந்ததை சொல்லிமுடிக்கும் முன் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றனர்..”

“அய்யோ வள்ளி, உனக்கா இப்படி நடக்கனும், என் வீட்டு குலவிளக்கை இப்படி அணைச்சுட்டேயே..” மீனாட்சி கதறிக்கொண்டு அழ.

“என்னால தான் அக்காவுக்கு அப்படியாச்சு, எல்லாம் என்னால தான், என் அம்மா இறந்ததும் என்னால தான், இப்போ என் அப்பா இறந்ததும் என்னால தான், வள்ளியக்காவுக்கு இப்படியானதும் என்னால தான்” தலையில் அடித்துகொண்டே தெய்வா அழ.

“திருமூர்த்திக்கூட கலங்கியிருந்தார். அவரது கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதை பார்த்த பிரகாஷ், அவரின் தோள் தொட்டு அவரை சமதானம் செய்தான்.”

“எல்லோரும் கலங்கி இருப்பதை பார்த பாண்டியன், மெதுவாக ஐ.சி.யு அறையை எட்டி பார்த்தான், அங்கு வள்ளியை சுற்றி நான்கு பெரிய மருத்துவரும், செவிலிப்பெண்களும், இருந்தனர். வள்ளி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாளா, இல்லை மயக்கத்தில் இருக்கிறாளா என அவனால் கணிக்க முடியவில்லை.”

“பாண்டியனை பார்த்ததும், வேகமாய் ஓடி வந்து அவனின் காலில் விழுத்தால் தெய்வா.”

“என்னால தான் மாமா, அக்கா குறுக்க வராம இருந்தா நான் கூட அந்த வலியை ஏத்துட்டு இருப்பேன். என்னை மன்னிச்சுருங்க என்னை காப்பாத்த போய் அக்கா இங்க படுத்துருக்காங்க,” அவள் அவனின் காலில் விழுந்து அழ, அவளை தடுக்காமல் தென்னவன் அவளின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான்.”

”தெய்வாவை தோல் தொட்டு தூக்கி, ”வள்ளிக்கு எதுவும் ஆகாது பிரியா. என் வள்ளியாம்மா என்னைவிட்டு எங்கயும் போகமாட்டாங்க. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கண்முழிச்சு என்னை பார்ப்பாங்க.” அனைவரும் சோகமாய், பாண்டியனை எப்படி எதிர்கொள்வது என நினைக்க. இவனோ, தெய்வாக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அவனின் மன தைரியத்தையும், அவனின் பேச்சையும் கேட்ட அனைவரும். அதே உறுதியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தினர். ஆனால் “அவன்” வரவில் பாண்டியனின் மனதைரியம் சுத்தமாக உடைந்து போனது.

“வாய்விட்டு அழுதே பாத்திராத குடும்பம், இன்று அவனின் அழுகையை பார்த்ததும் தான் அவனுள் இருக்கும் வருத்தம் வெளிப்பட்டது.”

“தெய்வாவின் தந்தையை, அதே மருத்துவமனையில் சேர்த்திருந்தனர் ஆனால் அவர் இன்னும் அபாய கட்டத்தில் இருப்பதால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது மருத்துவர் சொல்ல.” தெய்வாவின் அழுகை இன்னும் கூடியது.

“என்னாச்சுப்பா” அவன் கேட்க…

“பாண்டியன்… வள்ளிய மட்டும் தான் எங்களால காப்பாத்த முடிஞ்சது. உங்க குழ….”

“என்னாச்சு அங்கில்… அவன் உயிரை பிடித்துகொண்டு கேட்க.

“உங்க குழந்தையை எங்களால காப்பாத்த முடியல.., சாரி பாண்டியன்..” அவர் பாண்டியன் தோளை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூற.

“அவனின் இதயம் பத்திரமாக உள்ளது, ஆனால் சின்னஞ்சிறு இதயம் உயிரோடு இல்லையே, அவன் மொத்தமாக உடைய…. அங்கிருந்தவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருந்தனர்.”

“ப்பா.., எப்படி நடந்தது.. குழந்தையை உங்களால ஏன் காப்பாத்த முடியலை.. அவன் கேட்க.”

“கத்தி ஆழமா வள்ளியோட அடிவயித்துல குத்துனதுல முதல அடி படுற இடம் கருப்பை தான். அதோட தாக்கம் குழந்தையை பாதிச்சுருச்சு… எவ்வளவோ முயற்ச்சித்தும் குழந்தை காப்பாத்த முடியல.”

“ஆனா கர்ப்பபைக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை, அடிப்பட்ட இடத்துல தையல் போட்டு இருக்கோம், காயம் ஆறினா எல்லாம் சரியாகிடும். பாண்டியா… நீங்க குழந்தை உருவாகுறதுல எந்த பிரச்சனையும் இல்லைப்பா”

“ நீயே மனசு உடைஞ்சு நின்னா வள்ளிக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க.. எல்லாரும் அழுகுறதைவிட்டு வள்ளிக்கு தைரியம் சொல்லுங்க.. தயவு செஞ்சு வள்ளி முன்னாடி உங்க சோகத்தை காட்டாதீங்க, முத்தையா.”

“அங்கிருந்த அனைவருக்கு, வள்ளியின் நிலமையை சொல்லிமுடித்த பின் அவரின் அறைக்கு சென்றார்.”

“டேய் பாண்டியா.. எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியலை டா.., ஆனா உங்களுக்கான சந்தோஷம் சீக்கிரம் உங்களை தேடி வரும் டா.. வள்ளி முன்னாடி இப்படி நிக்காதா டா” அவன் பங்கிற்க்கு சொல்ல.

“அனைவரையும் காக்கவைத்துவிட்டு, “அவன்” சொன்ன மாதிரி ஒரு மணை நேரத்தில் கண்விழித்தாள் வள்ளி.

“சார்.. அவங்க கண்முழிச்சுட்டாங்க.. சார்” செவிலிபெண் சொல்ல.

“போடா போய் பாரு வள்ளியை, உன்னை தான் எதிர் பார்ப்பா.” அவன் சொல்ல.

“முகத்தை அழுந்த துடைத்துகொண்டு, கண்ணீரை உள்ளிழுத்துகொண்டு, அவளை காண சென்றான்.”

“அவன் வருகையை உணர்ந்து, அவளுக்கு மகிழ்ச்சி தான் ஆனால், அவனது குழந்தையை இழந்த என்னால் இனி அவனிடம் எப்படி பேசமுடியும்.. வள்ளி நினைத்துகொண்டிருக்க. அவனோ அவள் அருகில் வந்து அவளின் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தான்.”

“அவளுக்கு தெரியும், இந்த முத்தம் எதற்க்கு என்று, வள்ளிக்கு சிறு அடிப்பட்டாலும் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒருமுறை அவனின் சட்டை பட்டனை தைக்கும் போது அவளது விரலில் ஊசி குத்திவிட்டது. அது அவளுக்கு வலிக்கவில்லை, ஆனால் அதை பார்த்துவிட்ட பாண்டியன் தான் அவளைவிட பதறினான். அன்றில் இருந்து அவளுக்கு காயம் ஏற்படும் போதெல்லாம் இந்த முத்தமும் அவளுக்கு அவன் இருப்பதை உணர்த்தும்.”

“அதே போல் தான் இன்றும். ஆனால் அந்த முத்தம் தொடர்ந்து நீடித்துகொண்டிருந்தது.. அவன் தான் அவளை விட்டு முதலில் விலகி அவளின் கைக்குள் அவன் கையை வைத்துகொண்டு இருவரும் பேசாமல் அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.”

“அவளே ஆரம்பித்தால்.., “தெய்வாக்கு எதுவும் ஆகலையே அத்தான், குரு சித்தாப்பாக்கு எப்படி இருக்கு,” அவள் இருந்த நிலமையில் வேறொரு இருந்தார் இன்னேரம் வேறு நடந்திருக்கும் ஆனால் அவள் நிலையை மனதில் வத்துகொள்ளாமல், தெய்வாவையும், தெய்வாவின் தந்தையும் விசாரிக்கின்றாள்.”

“யாருக்கும் எதுவும் ஆகலை, தெய்வா பத்திரமா இருக்கா,”

“அத்தான், இன்னொன்னு சொல்லுவேன் ஆனா வருத்தப்படக்கூடாது, நம்ம குழந்தை… நம்ம குழந்தை… “ அவள் திக்கிகொண்டிருப்பதை பார்த்தவன்.

“கண்டிப்பா இன்னொரு குழந்தை பெத்துக்கலாம் வள்ளியம்மா.., இந்த குழந்தை இல்லைனா, என்ன.., உங்களை மாதிரி பத்து குழந்தை பெத்துக்கலாம் வருத்தப்படாதீங்க வள்ளியம்மா.. என்னால தாங்க முடியாது” அவளின் வருத்தை போக்கினான்.

“இவனுக்கு ஆறுதல் சொல்ல  நான், என்னை பார்த்து ஆறுதல் சொல்கிறான். குழந்தை பிறப்பில் எவ்வளவு ஆர்வமாய் எதிர் பார்த்தான், இப்போ பேசுவதென்ன… குழந்தை இழப்பில் உடைந்து அழுவான் என எதிர்பார்க்க. தைரியமாய் அவளுக்கு சமதானம் கூறினான்.”

“ஆமாம் அத்தான், பத்து குழந்தை நான் பெத்துகொடுக்கிறேன். உங்களை மாதிரி என இருவரும் மாற்றி மாற்றி சமதானம் சொல்லிக்கொண்டனர்.

”பின், ஒருவர் பின் ஒருவராக வந்து பார்த்துகொண்டிருந்தனர்., தெய்வா அவளிடன் உடைந்து அழுதே விட்டால். “ஏன் அக்கா, இடையில வந்தீங்க, என்னால உங்களுக்கு, முடியலை அக்கா,” தெய்வ அழ.

“அழக்கூடாது தெய்வா.., நீ யாரு என் சித்தி பொண்ணு, அப்படியிருக்க, உன்னை காவக்குடுக்க சொல்லிறையா.. ஐயாவுக்கு அவர் வீட்டு வாரிசு முக்கியம், ஏற்கனவே சித்திய இழந்தாச்சு, இனி உன்னையும் சித்தாப்பாவையும் இழக்க கூடாதுனு தான்..”அவளின் அழுகை நிறுத்தினால்.

“கடைசியாய் “அவன்” வந்தான்..”

“என்ன மேடம்.. வீர சாகசம் செஞ்சிருக்கேங்க.., நான் தான் மிஸ் பண்ணிட்டேன். எப்படி இருக்கு கத்திகுத்து. நான் கூட முன்ன பின்ன வாங்கினது இல்லை.., அனுபவம் எப்ப்டி இருக்கு வள்ளி.” அவளை பார்த்து கிண்டலாய் பேச்சை ஆரம்பித்தான்.

“வேணா, நட்டு அப்பாகிட்ட கத்திய வாங்கி நான் உன் வயித்துல குத்தி காட்டவ. என்னைவிட நீதான் நேருல பார்த்த மாதிரி அனுபவத்தை சரியா சொல்லுவ, அதை நான் பிரட்டிக்கலா செஞ்சு காட்டுறேன்.” அவனுடன் வாயாடிக்கொண்டிருந்தாள்.

“சரிதான்.. எங்க  எங்கனு வள்ளிய தேடிட்டு இருந்தேன் இதோ வந்துட்டாங்க எங்க வள்ளி..”

“சாரி வள்ளி.. என்னால தான், சரியான நேரத்துக்கு நாங்க வந்திருந்தா.. உனக்கு இது மாதிரி நடந்திருக்க விட்டுருக்க மாட்டேன்., நீ சொன்ன மாதிரியே உன் குடும்பத்து மேல விழ இருந்த அடிய நீயே வாங்கிட்ட.., உன்னை நினைச்சா பெருமையா இருக்கு, காதலிச்சவன விட அவன் குடும்பத்து மேலையும் நீ அதிகமா பாசம் வச்சுருக்கிறதை இன்னைக்கு தான் பார்க்குறேன்.. நீ கிடைக்க பாண்டியனும், அவன் குடும்பமும் தவம் செஞ்சுருக்கனும் வள்ளி..”

“கண்டிப்பா நீயும், பாண்டியனும் அடுத்த வருசத்துக்குள்ள இன்னொரு பாண்டியனோ, வள்ளியோ பிறக்கனும் அதுக்கான என் முதல வாழ்த்து.” அவளின் கை மேல் அவன் கை வைத்து அவளுக்கு ஆறுதல் கூறினான்.

“ம்ம்ம்… திவாகரன் என்ன ஆனான்”

“அவன் என் கஷ்டடியில் தான் இருக்கிறான். என் பாண்டியன் குடும்பத்தையும், வள்ளியையும் கதறவிட்டவனுக்கு, போலீஸ்காரன் அடியும், பலத்தையும் காட்ட வேணாம். இனி உங்க ஊருப்பக்கம் கூட அவன் தலைவச்சு படுக்க மாட்டான். நீ உடம்ப பார்த்துக்கோ.”

“அனு என்னா ஆனா” அவனின்  நடை நின்றது.

“என்னப்பா, இன்னுமா அவ மேல கோவம் போகலை”

“அடுத்த மாசம் கல்யாணம்,”

“அனு கண்டிப்பா ஒத்துட்டு இருக்கமாட்டா, நீ போய் கூப்பிடு அவ கண்டிப்பா உன் கூட வருவா”

“அவனின் புன்னகை விரிந்தது… “அடுத்த மாசம் எனக்கு அவளுக்கு தான் கல்யாணம்.. அதை சொல்லவருவதற்க்குள் நீ தான் முந்திகிட்ட.” அவன் மகிழ்ச்சியில் சிரிக்க.

“இவளோ… “இரு எப்படியும் நான் தான் அவளை உன் அறைக்கு அனுப்பனும் அப்போ பார்த்துகிறேன்.” அவனுக்கு மிரட்டல் விடுக்க.

“தெரியாம சொல்லிட்டேன்..  நான் கிளம்புறேன்., பாண்டியன்கிட்ட உண்மைய சொல்லிடு வள்ளி.. சரியா.”

“ம்ம் சரி..”

“வள்ளியின் உடல் தேறி வருவதற்க்குள் பாண்டியன் உடல் இளைத்திருந்தது.., இருவரையும், நன்றாக கவனித்துகொண்டார் மீனாட்சி..”

”இரவு மட்டுமே, பாண்டியன் கவனிப்பில் இருப்பவள், பகல் முழுவதும், ஒவ்வொருவரி கவனிப்பில் இருந்தாள் வள்ளி,”

“அனைவரையும், அழைத்து வந்து ஹாலில் அமரச்சொன்னால், எல்லாரும் என்ன என கேட்டதற்க்கு, அவளின் அமைதி தான் கிடைத்தது பதிலாக.”

“ நான் எல்லாரையும் கூப்பிட்டதுக்கு காரணம், உண்மைய சொல்ல தான், என ஆரம்பித்து, தென்னவன் தெய்வாவின் மீது வைத்துள்ள காதல்,தாமரை பற்றியும், அவரை நினைத்து கவலைப்பட்ட குடும்பத்தையும், அதனால் பாண்டியனின் சென்னை பயணம், ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தவள், ஊரில் நடந்த பஞ்சாயத்துக்கு காரணம் நான் தான் என்றும் போட்டு உடைத்தாள்.”

“என்ன வள்ளி சொல்லுற…”

“உங்களுக்கு தெரியுமே அத்தை, அகிலன் அவன் மூலமா தான் நான் பஞ்சாயத்தை கூட்டச்சொன்னேன், அந்த கடிதம் எழுதுனது வேற யாரும் இல்லை,அகிலன் தான், நான் தான் அப்படி எழுத சொன்னேன், என அதற்க்கான காரணம் சொல்லிவிட்டு, குருமூர்த்தியின் வருகையும், அவர் திவாகரனின் பிடியில் சிக்கி இருப்பதை அறிந்து கொள்ள காரணம் அகிலன் என சொல்லிகொண்டிருந்தாள்.”

“இப்போ திருவிழா நடக்கும் போது தெய்வாவ அவன் கடத்த போறாத சொன்னதும் அகிலனின் ஆள், ஆனால் அகிலன் எப்படியும் திவாகரனை பிடித்து விடுவான் என்ற எண்ணம் இருந்தாலும், தெய்வாவின் பாதுகாப்பு எனக்கு முக்கியமா இருந்துச்சு, அதான் திருவிழா அன்ன்னைக்கு அகிலன் எங்க வந்துட்டு இருக்கானும், சீக்கிரமா வரச்சொல்லியும் எல்லாம் கை மீறி போச்சு” வள்ளி குழந்தையின் இழப்பில் கண்கலங்க ஆரம்பித்தால்.

“அதை பார்த்த பாண்டியன், என்கிட்ட கூட சொல்லாம அகிலனோட உதவியை நாடி இருக்கீங்கல வள்ளியம்மா.. அப்போ நான்” பாண்டியன் வள்ளியை பார்த்து இந்த கேள்வியை கேட்க.

“அய்யோ அத்தான் நான் அந்த மாதிரி சொல்லலை, ஏற்கனவே தாமரை சித்தி இழப்பை தாங்க முடியாம ஐயா உங்களை எப்படி பார்த்தார்னு எனக்கு தான் தெரியும், அதான் அகிலன்கிட்ட சொன்னேன், ஆனா அவனா தான் உதவி செஞ்சான். நீங்க என்னை புரிஞ்சுக்குவீங்கனு நினைச்சேன்” அவளின் புரிதலை கண்டுகொண்டவன் முதல் முறையாக அவளிடம் கோபம் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றுவிட்டான்.”

“அத்தானை எப்படி சமதானம் செய்தாலும், இப்போ அவரி கோபம் போகாது, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துகொண்டு தெய்வாவின் பக்கம் திரும்பினால்.”

“சாரி தெய்வா, என்மேல கோபம் இருந்தா என்கிட்ட காட்டு, ஆனா தென்வன் மாமா எதுவும் செய்யலை, அவரோட காதலை சேர்த்து வைக்க தான் நான் அப்படி செஞ்சேன்.” தெய்வாவின் கை பிடித்து மன்னிப்பு கேட்டால்.

“என்னக்கா என்கிட்ட போய், நீங்க அப்படி செய்யலைனா நானே இந்த ஊரைவிட்டு போயிருப்பேன்க்கா, ஆனா அவரோட காதலை புரிஞ்சிகிட்டு சேர்த்து வச்சுருக்கீங்க நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்கலாமா” அவளும் சமதானம் சொன்னால்.

“அகிலன் யாரும்மா, அன்னைக்கு மருத்துவமனைக்கு வந்தாரே அவரா.. என திருமூர்த்தி கேட்க.”

“ஆமாம் ஐயா, அவரும், அத்தானும் தான் போலீஸ் ட்ரைனிங்கல நண்பர்கள் ஆன கதையும், அதற்க்கு பின் வள்ளியின் தோழனாக ஆனா கதையையும் சொன்னால்”

”ரொம்ப நல்ல தம்பிம்மா, பாண்டியன் மனசுல என்ன இருக்குனு, அவன் தோளை தொட்டதும், அந்த தம்பிகிட்ட மனசுல இருக்குறதை வெளிகொண்டு வந்துருச்சு அந்த தம்பி”

(ஆமாம் ப்ரண்ட்ஸ், அகிலன் வேற யாரும் இல்லை, பாண்டியன் சென்னையில ஒரு போலீஸ மீட் பண்ணானே, அவரோட மருமகன் தான் இந்த அகிலன், கொஞ்சம் பத்து எபிக்கு பின்னால் போனா தெரிஞ்சுக்குவீங்க,)

“என் மேல தப்பிருந்தா எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க” அனைவரின் முன் கைகூப்பி நின்றிருந்தாள். வள்ளி.”

“என்னம்மா, விடு இதுகெல்லாம் மன்னிப்பா, எங்கிட்ட சொல்லிட்டு செஞ்சுருக்கலாம், அதான் வருத்தம், போ போய் தம்பிய சமதானம் படுத்து” மீனாட்சி அனைவரின் சார்பாய் பேசினார்.

“இரவின் தனிமையில், ஜன்னல் ஓரமாய் நிலாவை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை என்பது போல் நிலாவை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டியன்,”

“அத்தான், இன்னும் என்மேல கோபம் போகலையா, அவனை பின்னிருந்து அணைத்துகொண்டே கேட்டால்.”

“கோபம் இருந்துச்சு ஆனா, உங்களுக்கு ஒன்னுனா என் உயிர் அடுத்த நிமிசம் உங்ககிட்ட தான் வந்திருக்கும் வள்ளியம்மா, இனிமே செய்யமாட்டீங்கனு எனக்கு சத்தியம் பண்ணுங்க” அவளின் கை பிடித்துக்கேட்க.

“சத்தியமா, உங்ககிட்ட சொல்லாம செய்ய மாட்டேன் அத்தான், அவனது நெஞ்சில் சாய்ந்துகொள்ள, இருவரின் மெளனம் மெல்லிய காற்று அவர்களின் மோன நிலையை கலைக்க, “தூங்கலாம், இரண்டு நாள் கழிச்சு அகிலன் கல்யாணம், நாம அங்க இருக்கனும், அகிலன் என்னை எதிர் பார்க்குறதை விட உங்களைத்தான் எதிர் பார்ப்பான்”

“ம்ம்ம்… ஆமா.. அவனுக்கு இருக்கு கச்சேரி..” முணுமுணுத்துக்கொண்டால்.

“என் காதலை சொல்லிருக்கனும் ப்ரியா, ஆனா எப்படி சொல்லுறதுன்னு தெரியாம தவிச்சேன்,” அவன் தெய்வாவிடம் சொல்லிக்கொண்டிருக்க.

“சரி இப்போ சொல்லுங்க கேட்க்குறேன்”

“என்ன”

“அதான் உங்க காதலை”

“திடிருனு எப்படி சொல்லுறது ப்ரியா..”

“இப்படி தான் ‘ நான் உன்னை காதலிக்குறேன்’ என அவன் எதிர்பார சமயத்தில் கன்னதில் முத்தமிட்டு அவளின் காதலை கூறினால்.

“அவனுக்கோ ஆச்சர்யம் தாங்க முடியவில்லை..,அவளை பார்த்தான், அவளோ,

“எப்படி இருக்கு என் ப்ரப்போஸல்,.. அதே மாதிரி நீங்களும் சொல்லுங்க பார்ப்போம், என அவனை வம்பிழுக்க, அவனும் கன்னத்துக்கு பதிலாக இதழில் முத்தமிட்டு காதலை கூறினான்.”

“இரு ஜோடிகளும், ஒருவரின் மீது உள்ள காதலை, அன்பாய் சொல்லிக்கொண்டும், சொல்லிக்கொடுத்தும் ஆனந்தமாய் இருந்தார்கள்.”

“அகிலன் வெட்ஸ் அனுராகவி”

“வாங்க, வாங்க, என்ன பாண்டியன் இப்போ தான் வரணுமா, அகிலன் கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடியே வரவேணமா, வள்ளிக்கு தான் உடம்பு முடியலை என் பொண்ண பார்த்துக்க எல்லாரும் இருக்காங்க ஆனா அகிலனுக்கு நீயும், வள்ளியும் தானேப்பா” அகிலனின் தந்தை நட்ராஜன் கேட்க.

“இல்லாப்பா, என்ன தான் வள்ளியம்மாவ எல்லாரும் பார்த்துகிட்டாலும் நான் அவங்க பக்கத்தில் இல்லைனா ஒழுங்க சாப்பிட மாட்டாங்க. அதான்ப்பா. இதோ வந்துட்டேன்ல இனி எல்லா வேளையும் நானே பார்த்துகிறேன் எங்க அகிலன்” அவன் கேட்க.

“உள்ள தான் இருக்கான் போப்பா, வள்ளி அனு உன்னை தான் கேட்டுட்டு இருந்தான் போம்மா” இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார்.

“வள்ளி கண்ணு எப்படிம்மா இருக்க,” அனுவின் அப்பா கேட்க.

“ நல்லா இருக்கேன்ப்பா, நீங்க எப்படி இருக்கீங்க”

“அனு கல்யாணம் முடிஞ்ச அடுத்து ரேனு கல்யாணம் மட்டும் தான்ம்மா, ஆனா அவளுக்கு கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்ட்டம் இல்லைனு இரண்டு நாளுக்கு முன்னாடி என்கிட்ட சண்டை போட்டு கிளம்பிட்டா, இதோ இன்னைக்கு காலையில தான் வந்தா, அனுவோட தான் இருக்காம்மா, போய் பாரு,  ஆமா பாண்டியன் எங்கம்மா” அனுவின் தந்தை ரவிக்குமார் கொஞ்சம் மகிழ்ச்சியாய், கொஞ்சம் வருத்தமாய் அவளிடம் புலம்பிகொண்டிருந்தார்.

“அத்தான், அகிலன பார்க்க போயிருந்தாங்கப்பா, வந்து உங்களை பார்க்க சொல்லுரேன்.”

“எல்லாம் கேள்விபட்டேன்ம்மா, இருந்தாலும் பாண்டியன் உன்கூட இருக்கும் போது எந்த துன்பம் வராது சரியா.”

“சரிங்கப்பா,”

“மணமகள் அறையில், கல்யாணக்கலையுடன் அமர்ந்திருந்த அனுவை பின்னிருந்து அணைத்து “ஹாப்பி மேரிடு லைப் அனு” வள்ளி வாழ்த்து கூற.

“வள்ளியம்மை, எப்போ வந்த, ரொம்ப வருசம் ஆச்சுல உன்னை பார்த்து. எப்படி இருக்க, எங்க செந்தூர் அண்ணாவ”

“ நான் நல்லா இருக்கேன், உன் அண்ணா, என் நண்பனை பார்க்க போயிருக்காரு”

“ம்க்கு… அவனை பார்க்கலை யாரு அழுதா, திமிரு பிடிச்சவன்” அனு எரிச்சலில் சொல்ல.

“என்ன டி இன்னும் கோபம் போகலையா அகிலன் மேல”

“ஆமா.. போகலை.. ஆனாலும் அவனை விட்டு என்னால வாழ முடியுமா. அதான்  மிரட்டி கல்யாணம் பண்ணவேண்டியாத இருக்கு, இப்போ கூட என்கிட்ட எதுவும் பேசாம தான் இருக்கான், வளந்த மாடு” அவள் பாட்டிற்க்கு அகிலனை திட்டிகொண்டிருக்க வள்ளி, அவளை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள்.

“முடிச்சுட்டியா, அகிலனை திட்டி முடிச்சுட்டியா, அவரு பக்கம் இருக்குற நியத்தை நீ பார்க்கவே மாட்டுற அனு”

“என்ன நியாயம் இருந்தாலும் அவனுக்கு நான் முக்கியமில்லையா வள்ளியம்மை,”

“ நீ முக்கியம் இல்லாமையா, உன் அப்பாகிட்ட போய் உன்னை காதலிக்குறேன், கல்யாணம் பண்ணா அனுவ தான் பண்ணுவேனு சண்டை போட்டு வருவாரா”

“ம்ம்ம்… சண்டை போட்டாலும் என்கிட்ட பேசுறதுக்கு என்ன வந்துச்சாம் உங்க பிரண்ட்க்கு”

“ஏதாவது ஒரு காரணம் இருக்கும்டி”

“வள்ளியக்கா, எப்போ வந்தீங்க,” ரேனுகா வர, அவளிடம் பேசிகொண்டு அனுவை தயார் செய்துவிட்டு மணமேடைக்கு அழைத்துகொண்டு சென்றால்.

“டேய் இன்னும் அனுமேல கோபமா தான் இருக்கியா, எல்லாம் சரியாகும் டா, இன்னைக்கு உனக்கு கல்யாணம் சிரிடா”

“ எப்படி போகும் பாண்டியா, அவ மட்டும், தற்கொலை பண்ணிருந்தா இன்னேரம் நானும் செத்து போயிருப்பேன் டா, ஆனா என்னை புரிஞ்சு காதலிச்சவ இந்த விசயத்துல ஏண்டா அப்படி முடிவு எடுக்கனும்” அகிலன் வேதனையுடன் கூற.

“சரி இப்போ ஒன்னும் ஆகலை அனுக்கு வா, ஐய்யர் அழைச்சுட்டு வரச்சொன்னாங்க” அவனை சமதான செய்து அழைத்து போனான்.

“அகிலனும், அனுவும், ஐந்து வருடமாய் காதலித்து வந்தார்கள், ஆனால் அனுவின் தந்தைக்கு, அனுவிர்க்கு வேறு மாப்பிளை தேடும் போது தான் பிரச்சனை ஆரம்ப்பித்தது. அந்த சமயம், டெல்லி சென்று இருந்த அகிலனுக்கு தெரியவில்லை, அவள் எவ்வளவு தடுத்து அனுவின் பிடிவாதமாக இருந்தார்.”

“இது தெரிந்துகொண்ட அகிலன் வேளையை விட அனு தான் முக்கியம் என அடுத்த விமானத்தில சென்னைக்கு பறந்து வந்தான், ஆனால் அவன் வருவதற்க்கு அனு வேறுமுடிவை தேடிக்கொண்டால், நல்ல வேலை அவள் அருந்தியது வீரியம் குறைவான மருந்து, அதனால் உடனே காப்பாற்றப்பட்டால் ஆனால் அகிலன் அவள் முழிப்பதற்க்காக காத்திருந்து, அவள் கண்விழித்தவுடன்”

“இனி நம்ம காதல் இல்லைனு நினைச்சுக்கோ கவி, இனி நீ யாரோ, நான் யாரோ.., என் வாழ்க்கையில  ஆனா, இனி உன்னை தவிர வேற யாருக்கும் இடம் இல்லை, குட் பாய்” அவளிடம் கோபமாய் சொல்லிவிட்டு சென்றவன் இன்று தான் அவளை மணமேடையில் அவனுக்கு அருகில் அனுவை பார்த்துகொண்டிருக்கிறான்.

“எவ்வளவு விலகி தூரம் போனாலும், இவள் என்னை விடமாட்டாள், ஆனால் இவளின் செயலில், கொஞ்சம் கவர்மாய் கூட உணர்ந்தான். தன்னை கரம் பிடிக்க அவளின் உயிரைவிட துணிந்தாளே, என்ன எண்ணிக்கொண்டே அவளுக்கு தாலிகட்டினான்.”

”அவளும் காதல் கணவன் கட்டிய தாலியை ஆசையுடன் தொட்டுப்பார்த்து, அவனையும் பார்த்தால்.”

”எந்த ஒரு காதலும், தோற்க்கு நேரத்திலும் வெற்றி பெறும், இருவரின் காதல் உள்ளங்களும், உண்மையாய் இருந்தால், எந்த இடத்திலும் அவர்களின் காதல் தோற்க்காது”

“ஒன்பது மாதத்திற்க்கு பிறகு”

“அத்தை, எல்லாருக்கும் நான் தான் காஃபி கொடுப்பேனு தெரியும்ல, அப்புறம் என்ன” வள்ளி, மீனாட்சியிடம் சண்டை போட.

“இங்க பாரு வள்ளி, தம்பி உன்னை ஒரு வேளையும் செய்யக்கூடாதுனு தான் சொல்லிட்டு போயிருக்கு, நீ மட்டும் இந்த காஃபி தட்டை எடுத்தது தெரிஞ்சா, தம்பி கோபம் என் மேல தான் திரும்பும், சொன்னா புரிஞ்சுக்கோம்மா,”

“அவரு தான் வீட்டுல இல்லையே, அப்புறம் என்ன, கொடுங்க, நான் எடுத்துட்டு போறேன், அவள் வம்படியாய், மீனாட்சியின் கையில் இருந்த ட்ரேயை வாங்க, சரியான நேரத்தில் அதை பாண்டியன் வாங்கினான்”

“அய்யோ அத்தான்,” வள்ளி மிரள.

“இதுக்கு தான் நான், உங்களை விட்டு எங்கயும் போகலைனு சொன்னேன், நான் அந்த பக்கம் போன சமயம் பார்த்து, உங்க வேளையை ஆரம்பிச்சுட்டேங்க வள்ளியம்மா,” வள்ளியிடம் கோபத்தை கட்டாமல், பேச.”

“அத்தான் எந்த வேலையும் செய்யாம இருந்த எனக்கு என்னவோ மாதிரி இருக்கும், இது ஒன்னும் அவ்வளவி வெயிட் இல்லை அத்தான்”

“பரவாயில்ல, வெயிட் இருக்கோ இல்லையோ,எந்த வேலையும் செய்யக்கூடாது நீங்க”என அவன் கறாரக கூற, அவளோ சினுங்கிகொண்டே சோபாவில் அமர்ந்தால்.

“இந்தாங்க ஜூஸ் குடிங்க, மாதுளை ஜூஸ் ரொம்ப நல்லது, உங்களுக்கு, பாப்பாவுக்கும்” அவள் கையில் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் குடித்தால்.

“வள்ளியின் அந்த விபத்திற்க்கு பின் காயம் ஆறா கொஞ்ச நாள் சென்றது, பின் மருத்துவரின் ஆலோசனையில், அடுத்த மூன்று மாதத்தில் தீராத காதலில் கிடைத்தது தான் இப்போது வள்ளியின் கரு உருவானது.”

“அதை தெரிந்துகொண்ட, பாண்டியன் இனி வள்ளியை ஒருவேலையும் செய்யவிடாமல், பக்கத்தில் இருந்தே பார்த்துகொண்டான். வள்ளி மீண்டும் கரு உருவானதை அறிந்த அனைவரும் வள்ளியை தாங்கினர்.”

“தெய்வாவோ, வள்ளியை பார்த்துகொள்ள, அங்கேயெ தங்கி இருந்தாள், அடுத்த ஒரு மாதம் மலரும், இருந்தால். கீர்த்தியும், மாறனும், வேலையின் காரணமாக வெளிநாடு சென்றுவிட்டான், ஆனால் வள்ளியின் விசயம் கேள்விப்பட்டது, குழந்தை பிறப்புக்கு கண்டிப்பாக அங்கு இருப்பேன் என உறுதியாக சொல்லிவிட்டான்.”

“தெய்வாவின், தந்தை உயிர் பிழைத்ததும் அனைவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, கோவில் கோவிலாக சென்றுவிட முடிவு எடுத்தார், திருமூர்த்தியும், முத்தையாவும் எவ்வளவு தடுத்தும், தான் செய்த பாவத்திற்க்கு அது சரி என்று சென்றுவிட்டார்.”

“அவர்களும், அவரின் மனநிலையை புரிந்துகொண்டு, சம்மதித்தனர்.”

“வள்ளி ஜூஸ் குடித்துகொண்டே, பாண்டியனிடம் பேசிகொண்டிருந்தாள், அப்பொழுது, வாசலில், கவர்மெண்ட் கார்கள் அணி வகுத்து நின்றது. அதில் இறங்கி வந்தார் ரவிகுமார், இதை பார்த்த வள்ளி, அவரை வரவேற்று, உபசரித்தாள்.”

“சொல்லுங்கப்பா, என்ன திடீர்னு வந்திருக்கீங்க,”

“ நான் போலீஸா வந்திருக்கேன்மா, அதனால பாண்டியன்கிட்ட பேசனும்,”

“சொல்லுங்க சார்,”

“ நீங்க போலீஸ் வேலையவிடுறதுக்கு முன்னாடி, நான் உங்கிட்ட ஒரு விசயம், சொன்னே ஞாயபகம் இருக்கா பாண்டியன்”

“இருக்கு சார், வேலைய தான் விட்டேன், ஆனா பொதுமக்களுக்கு ஒன்னுனா என் உதவி கண்டிப்பா நம்ம டிப்பார்ட்மெண்ட்க்கு கிடைக்கும்னு சொல்லிருந்தேன் சார், என்னைக்கும் மறக்கமாட்டேன்”

“இப்போ அதுக்கு தான் வந்திருக்கோம், உங்க உதவி தேவையா இருக்கு, அதனால நீங்க நாளைக்கே உங்க வேலையில சேரலாம் பாண்டியன்”

“ரவிகுமாரின் முகத்தில் தெரிந்த பாவனையில், புரிந்து கொண்ட பாண்டியன், “ஒகே சார், நான் நாளைக்கு டியுட்டில ஜாயின் பண்ணுறேன். அகிலனுக்கு சொல்லிடுங்க” எதையும் சிந்திக்காமல் ஒப்புகொண்டான்.

“ வெல்கம் பாண்டியன், நாங்க கிளம்புறோம்” வந்த வேலை முடிந்து சென்றுவிட்டார்.

“உங்களை கேட்காம முடிவு பண்ணிட்டேன் வள்ளியம்மா, சாரி”

“கொஞ்சம் நாள் போனதும் நானும் அங்க வந்திருவேன், சரியா அத்தான், உங்களைவிட்டு, நானும் பாப்பாவும் எப்படி இருப்போம்,”

“சரிங்க வள்ளியம்மா,”

“வள்ளிக்கு தெரியும், பாண்டியனின் கனவு, லட்சியம், அனைத்து அந்த போலீஸ் வேலை தான் என்று, ஆனால் இந்த வேலையால் வள்ளிக்கோ, குடும்பத்து ஆபத்து நேர்ந்துவிட்டால் என்று பயமும் இருந்தது, அதனால் தான், போலீஸ் வேலையில் ஒரு வருடம் மட்டுமே இருந்துவிட்டு, அவனது சொந்த ஊருக்கே திரும்பிவிட்டான், அகிலனும் அவனை ஒன்றும் சொல்லவில்லை,”

“வள்ளிக்கு தெரிந்திருந்து, அவளால் அதை பற்றி பேசவும் முடியவில்லை. இதனால் வள்ளிக்கு சிறு வருத்தம் கூட இருந்தது. ஆனால் இப்பொழுது அது இல்லை”

“இரண்டு மாதம் சென்றுவிட்டது, பாண்டியன் வள்ளி இல்லாத இடத்தில் இனியும் இருக்க முடியாதென்று,உடனே வள்ளியை அழைத்து வந்துவிட்டான், அவள் உடனிருப்பதாள், வேலையில் கவனத்தை செலுத்தினான்.”

“அவர்களின் காதலும், ஒவ்வொரு நாளும் கூடியதே தவிர ஒரு துளியும் குறையவில்லை,”

“இதற்கிடையில், கார்த்திக்கிற்க்கு வரன் பார்ப்பதாய் வள்ளியிடம் சொல்லிக்கொண்டிருந்த மீனாட்சி, ஒன்றும் சரியாக அமையவில்லை என புலம்பிக்கொண்டிருந்தார்.”

“இதை கேட்ட வள்ளி, அனுவிடம் புலம்ப, அவளோ ரேனுவிற்க்கு, கார்த்திக்கும், கல்யாணம் செய்தால் என்ன “ ஒரு குண்டை போடவும்.

“ஆளுக்கு முதலாய் சம்மதம் சொன்னாள் ரேனுகா” அவளின் தீடீர் சம்மத்தால், அனு சந்தேகமாய் பார்க்க.., வள்ளியோ சந்தோஷமாய் இருந்தால்.

“ஒரு வழியாக கார்த்திக்கும், ரேனுவுக்கு கல்யாணம் செய்து வைத்து அவன் வேலை பார்க்கும் மும்பைக்கே அனுப்பி வைத்தனர்.”

“அனுவின் சந்தேகத்தை, அகிலனிடம் சொல்ல, அவனோ, “பின்ன, இரண்டு வருசமா கார்த்திக் பின்னாடி சுத்துன உன் தங்கச்சி, வேற யாரை கல்யாணம் பண்ணுவா,”

“இது எப்படி உனக்கு தெரியும், அகில்”

“கண்டுபிடிச்சதே, நானும், பாண்டியனும் தான்”

“அடப்பாவிங்களா என்கிட்ட சொல்லலை”

”வள்ளிகிட்டயே சொல்லலை, இதுல உன்கிட்ட சொல்லனுமா”

“உன்னை, அவனை அடிக்க துரத்த, அவனோ, அவளை கட்டிபிடித்து காதல் பாடத்து சொல்லிக்கொடுத்தான்”

“உன்னை துரத்தி துரத்தி காதலிச்சேன்ல இன்னும் வேணும் டா எனக்கு” கோபமாய் ரேனுகா பேச

“உன்னை யாரும்மா என்னை காதலிக்க சொன்னா”கார்த்திக் எதிர் பாட்டு பாட”

“அவன் பேச்சில், கண்கலங்க, அவனுக்கோ, அதிகமாய் சீண்டிவிட்டோமோ, என நினைத்துகொண்டு, அவளை நெருங்கினான்.

“சாரி ரேனு, தெரியாம சொல்லிட்டேன்,”

“சரி விடு, உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு, இன்னைக்கு சமைக்குறேன்” அவள் சகஜமாக.

“வாயேன் வெளிய போகலாம், சாப்பிட.”

“உண்மையில என்னை காதலிச்சியா ரேனு” அவன் கேட்க.

“  சாப்பிட்டு முடித்துவிட்டு, இருவரும் நடந்து கொண்டிருந்தனர், அப்போது தான் அவளிடம் இந்த கேள்வியை கேட்டு வைத்தான்,”

“நடைபாதை கடையில் விற்றுக்கொண்டிருந்த ரோஜாவை வாங்கிகொண்டு அவன் முன் மண்டியிட்டு, “உலகத்துல உன்னை தவிர என் உயிரினும் மேலான என் காதல் கணவா, ஐ லவ் யு”  என கூறி அவன் முன் நீட்டினால்.

“அங்கிருந்த அனைவரும் அவளின் செயலில், கை தட்டி, பாராட்டினர். ஒருவரோ, “ரொம்ப லக்கி மேன் நீ, இப்படி எந்த பொண்ணு காதலை சொல்ல மாட்டா, உனக்கு கிடைச்சிருக்குற காதலி, ரொம்ப லக்கியா இருக்குறா” சொல்லிவிட்டு செல்ல.

“அவனோ, அவளை மாதிரி மண்டியிட்டு, அவளின் காதலை ஏற்றான்”

“வாழ்க்கையில், எந்த துன்பமும், நிரந்தரம் இல்லை, என்பது போல் வள்ளியின் காதல் இருக்க, தன்னையும் ஒரு பெண் உயிராய் காதலித்தால் என்பது போல், ரேனு, அனு காதல் இருக்க, தனக்கு தெரியாமல் காதலை மறைத்து வைத்த தென்னவனின் காதல், இன்னும் அவனை அதிகமாக காதலிக்கனும் என முடிவு செய்தவள் தெய்வா.”

“எதையும், காதலால் சரிபடுத்திவிடாலம் என்று காதலின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் மறு உருவம் தான் இந்த “காதலின் இருதுருவங்கள்”….

             

                              சுபம்

 

Advertisement