Advertisement

                துருவங்கள் 19

 

”மல்லிகைப் பூவின் வாசமும்,ரோஜாவின் பூவின் வாசமும், அந்த அறையின் கட்டிலில் சூழ்ந்திருக்க, கட்டிலின் பக்கத்தில் பழம்,பலகாரம், மல்லிச்சரம் என டேபிளில் இருக்க, இதையெல்லாம் ரசித்துப்பார்க்கும் மனநிலையில் தென்னவன் இருந்தாலும், அவன் மூளையில் தெய்வா, குளக்கரையில் சொல்லிசென்றது அவனது நினைவைவிட்டு நீங்காத இடம் பிடித்தது…”

“வரச்சொன்னீங்களே…” அவனின் அமைதியை கலைத்தது, தெய்வாவின் குரல்.

“அன்னைக்கு, ராத்திரினு கூட பார்க்காம நான் உன் ரூம்க்கு வந்துட்டேன், சாரி..”

“ம்ம்ம்… சரி, வேற”

“என்னை பிடிச்சுருக்கானு கேட்டேனே, தேவி… பதில் சொல்லு”

“பிடிச்சிருக்கு… ஆனா”

“ஆனா,”

“என் மனசு முழுக்க நீங்க இருக்கீங்களானு கேட்டா எனக்கு சொல்ல தெரியலைங்க…, ஏதோ எதிர்ப்பார்க்கிறேன்…, ஆனா சொல்லத்தெரியலைங்க”

“மனசு குழப்பமா இருக்கா தெய்வா”

“அப்படியும் இருக்கு, ஆனா நீங்க என் வாழ்க்கையில வந்தா நான் உங்க கூட இயல்பா பேசவும், பழகவும் முடியுமானு கேட்டா.., அது தெரியலை..”

“இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமா தெய்வா”

“விருப்பம் தான், ஆனா ஏதோ ஒன்னும் நடக்கப்போகுதுனு எனக்கு தோனுது அது நல்லதா, கெட்டதானு எனக்கு தெரியலை..”

“அவளை, திருப்பி நேருக்கும் நேராய் நிற்க வைத்து, “ என்னை பார்த்து சொல்லு தெய்வா.., என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா, வாழ்க்கை முழுக்க நான் உன்னையும், நீ என்னையும் காதலிக்க தயரா..,

“அவனின் கண்களில் தொலைந்து போன காதல் இன்று அவன் கண் முன் இருப்பது போல் இருந்தது அவளுக்கு, ஆனால் அவளின் வார்த்தைக்காக ஒருவன் காத்திருப்பதும், இன்னும் ஏதோ ஒன்று அவளிடம் எதிர்பார்க்கிறான், அது அவளின் காதல் மட்டும் தான், ஆனால் இது அவளுக்கு தெரியாது.., அவனால் காதலை உணரவைக்க முடியுமே தவிர அவள் காதலை சொல்லவைக்க முடியாது”

“சம்மதம்” இந்த வார்த்தை மட்டும் போதும் என்று நினைத்தவன், அவளிடம் தனக்கான காதல் இருக்கிறதா என்று கேட்க மறந்துவிட்டான்…

“சரி நேரம் ஆச்சு, கிளம்புலாமா”

“ம்ம்ம்…”

“ நீ இங்க வந்தது யாருக்காவது தெரியுமா??? தேவி”

”வள்ளி அக்காகிட்ட மட்டும் சொல்லிட்டு தான் வந்தேன்”

“சரி.. நீ முன்னாடி போ, நான் பின்னாடி உனக்கு துணையா வரேன்”

“சரிங்க…”

“தேவி…” அவளை அழைத்தான்.

“என்னங்க”

“எது இருந்தாலும், மனசுல வச்சு மருகாத  எனகிட்ட சொல்லமுடியாததை, வள்ளிக்கிட்ட சொல்லு… சரியா.”

“ம்ம்ம்..சரிங்க”

“பார்த்துப் போம்மா”

“இதை நினைத்துகொண்டிருந்த வேளையில், அறையில் கதவு திறந்துகொண்டு, மெல்லிய கொலுசின் ஒலியை கேட்டுகொண்டிருந்தான் தென்னவன்… அவள் தென்னவனை நோக்கி வரும்போது, அவனும் எழுந்து நின்றுகொண்டான்”

“அவன் அருகில் வந்து நின்றவள், பால் சொம்பை பக்கதில் இருக்கும் டேபிளில் வைத்துவிட்டு, அவனின் பாதத்தில் விழுக.., அவனோ அவளின் தோள் தொட்டு தூக்கினான்..”

“இது கிரமாம்.., இப்படி சம்பிரதாயம் செய்யுறது வழக்கம் தான் ஆனா என்னைக்குமே மனைவி, கணவனுக்கு சரிசமம் தான் புரியுதா தேவி”

“ம்ம்ம்..,”

“என்னைக்குமே நீ தீர்க்கசுமங்கலியா இருக்கனும் தேவி” அவளை வாழ்த்தி கட்டிலில் அமர வைத்துவிட்டு அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தான்.. தென்னவன் அதை கவனித்தால் தெய்வா, அவனின் செய்கை  தன் மனதை புரிந்துகொண்டு நடக்கிறான் என அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.”

“ உங்க அப்பாகிட்ட ஏன் தேவி பேசல..” அவனே ஆரம்பித்து வைத்தான்.

“அவருகிட்ட பேசனும் ஆசையா இருந்தேன், ஆனா அவரு தேவையில்லாம ஏன் பாண்டியன் மாமா மேலையும், பெரியப்பா மேலையும் பழிப்போட்டார்னு தெரியலை, அவரு பேசுனதுக்கு பெரிப்பாக்கு உடம்பு சரியில்லாம போயிருச்சு, அது மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு, அப்பா இப்படி திடீர்னு வருவாங்கனு நான் நினைக்கலங்க.., வந்தவரு என்னை பார்க்காம அடுத்தவங்க மேல பழி போடுறதுக்கு தான் வந்துருக்காங்க, அப்புறம் எப்படி அவருகிட்ட பேசமுடியும்..”

“என்னையும், அம்மாவையும் விட்டுட்டு இத்தனை வருசமா எங்க இருந்தாரு, இப்போ வந்து என் மக வாழ்க்கை இப்படி பண்ணிட்டேங்களேனு அவங்கமேல கோபத்தை காட்டுருங்க.., இது என்ன நியாயம் சொல்லுங்க” மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினால்.

“என்னால தான், இன்னைக்கு, கார்த்திக்கும் கீத்திக்கும் அவங்க உண்மை தெரிஞ்சது இதுவே எனக்கு பெரிய வருத்தமா இருக்கு, இதையெல்லாம் நினைக்குறப்போ என் அப்பா ஏன் தான் இந்த ஊருக்கு வந்தாரோனு இருக்கு, அதுக்கு அவரு வரமலே இருந்துருக்கலாம், நானும் கடைசி வரை என் அப்பா முக்கத்தை பார்க்காமலே இருந்துருப்பேன்” கண்களில் கண்ணீருடன் அவனிடம் பேசினால்.

“அவளின் கண்ணீரைப்பார்த்ததும், அவனுள் இருக்கும் காதல், வெளிவந்தது அவளின் அருகில் சென்று அமர்ந்து, “ நான் ஒன்னு சொல்லட்டுமா தேவி”

“என்ன”

“உன் அப்பா இருந்த இடத்துல என் அப்பா இருந்தாருன்னா, அவருக்கு நான் புரியவைப்பேன், ஏன் என்னை விட்டு போனீங்கனு கேட்ப்பேன், எதுக்காக இத்தனை  வருசமா ஏன் என்னையும், என் அம்மாவையும் விட்டு பிரிஞ்சு இருந்தீங்கனு கேட்ப்பேன், என்னை குடும்பத்துல ஒருத்தியா பார்த்த என் வள்ளிக்காவும், பெரிய்யப்பாவும் பேசரதுக்கு உங்களுக்கென்ன உரிமை இருக்குனு கேட்டுருப்பேன், இப்போ என்னை பார்க்க வந்திருந்தா ஏன் அவங்ககிட்ட சண்டை போடுறீங்கனு கேட்டுருப்பேன் தேவி… அப்போ நீ”

“அவருகிட்ட இதெல்லாம் பேசுனா  பெரியாப்பா மேலையும், பாண்டியன் மாமா மேலையும் இருக்குற கோவம் போயிடுமா..”

“தெரியலை, ஆனா உனக்காக கொஞ்சம் கொஞ்சமா மாறலாம் தேவி”

“ அவரு இப்போ எங்க இருக்காங்கனு தெரியலையே”

“மாமா, திவாகரன் வீட்டுல தான் தங்கிருக்காங்க”

“அவன் வீட்டிலயா, என் அம்மாவ கொன்னவன் வீட்டுல எதுக்கு இவரு தங்கனும்”

“ஏன்னா.. அவனுக்கு நீ தாய்மாமா பொண்ணு..,உனக்கு அத்தை பையன்” அவர்களின் குடும்ப பின்னனியை கூறினான்..

“திருமூர்த்தி, குருமூர்த்தி இவர்களின் தங்கை நீலாவதி… நீலாவின் அழக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு பழனிச்சாமி அவளை விரும்பினான் இது தெரிந்த திருமூர்த்தி நீலாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க, பழனியோ நீலாவை அழைத்துகொண்டு, ஊரின் எல்லைச்சாமி முன் திருமணம் செய்துகொண்டனர்.., இது தெரிந்த திருமூர்த்தியும்,குருமூர்த்தியும் தங்கயை ஒதுக்கிவைத்தனர். திருமூர்த்தியின் கல்யாணத்துக்கு தங்கையின் குடும்பத்தை அழைக்கவில்லை, நீலாதான் கண்ணீருடன் திருமூர்த்தியின் கல்யாணத்தை ஒரமாய் பர்த்துவிட்டு சென்றார்.., குருமூர்த்தியின் கல்யாணம் தாமரையுடன் நடந்த போது, நீலாவுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான்.., இதற்கிடையில் கோவிலின் திருவிழாவின் போது, கலவரத்தை உண்டு செய்ய போட்டுருந்த திட்டதில் குருமூர்த்தியை பழி ஆடாக மாற்றினர்.., குருமூர்த்தி தான் ஊரின் திருவிழாவின் போது மக்களுக்குள் கலவரத்தை தூண்டிவிட்டது குருமூர்த்தி தான் என்பது, பழனிச்சாமி, குருமூர்த்தியின் மீது பழியை போட்டு அதற்க்கு ஆதரத்தை காட்டியதும், திருமூர்த்தி தீர விசாரிக்காமல் பிறந்த குழந்தையுடன் நின்றிருந்த தாமரையும், குருமூர்த்தியையும் ஊரைவிட்டு போகச்சொன்னார்.., இது தெரிந்த திருமூர்த்தியின் மனைவி, எவ்வளவு போராடியும் அவர்களின் மீது உள்ள பழியை போக்க முடியவில்லை.., ஒரு நாள், கோவிலில் நீலாவை சந்தித்தபோது அவர் தான், திருவிழாவின் நடந்த உண்மையை கூறினார். அதிலும் அன்று பஞ்சாயத்தின் போது,  என்னால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் பழனி தன்னை அறையில் பூட்டிவைத்து விட்டு வந்தார், என்பதையும் கூறினார்.”

“பழனியின் எல்லை மீற, அதை தாங்கிக்கொள்ள முடியாத நீலா, தற்கொலை செய்துகொண்டார். திருமூர்த்தியிடம் உண்மையை சொல்ல சென்றபோது அவரை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, அவரே தூக்குப்போட்டு இறந்துவிட்டார் என்று கதைகட்டிவிட்டார் பழனி.., மனைவியின் இறப்பு திருமூர்த்தியை பாதித்தது, இனி மகனிடமும் பாசம் காட்டினால் அவனும் தன்னை விட்டு புரிந்துவிடுவான் என்று தான், பிராகாஷிடம் தள்ளியே இருந்தார்.. ”

“சிறு இடத்தகராரில், சிவநாதன் மீது கோபம் ஏற்ப்பட்டாலும், அதை மறந்துவிட்டு இன்று பேசுவதற்க்கு காரணம் வள்ளி தான் என்பதையும், கூறினான் தென்னவன்”

“இப்போவும் என் அப்பா, உண்மை எதுனு தெரியாம அவங்க பக்கம் இருக்காரே, பெரியம்மாவ கொன்னது அவங்க தானு பெரியப்பாவுக்கு தெரியுமா??

“ம்ம்.. தெரியும், ஆனா பிரகாஷ்க்கு எதுவும் ஆகக்கூடாதுனு தான் அமைதியா இருக்காரு.”

“வள்ளிக்கா ரொம்ப கிரேட்… எல்லா உறவுகளையும் பிரிக்காம, பிரிந்திருந்த உறவுகளை சேர்க்குறாங்க அவங்க உண்மையில நல்லா இருக்கனும்”

“வள்ளிக்கு, பாண்டியன் தான் உலகமே, அப்படியிருக்க அவனோட உறவுகளையும், தன் உறவுகளா கொண்டாடுற வள்ளிக்கு எல்லாமே நல்லா இருக்கும்.” தென்னவன் கூறினான்.

”சரி நீ தூங்கலாம தேவி..” அவன் கேட்க.

“ம்ம் தூங்கலாம்..” இருவரும் மெத்தையில் கொஞ்சம் இடைவெளி விட்டு படுத்துகொண்டனர். படுத்ததும் தெய்வா உறங்கிவிட, தென்னவனோ அவளை பார்த்துகொண்டு படுத்திருந்தான், அவளின் குடும்பக்கதையை சொன்னவன் , தான் அவளை காதலித்த கதையை சொல்லவில்லை, சொல்லவும் அவனுக்கு காதலனுக்கு இருக்கும் தயக்கம் தான், அவள் என்ன செய்வாளோ. ஏன் என்னிடம் சொல்லிவில்லை என்று சண்டை போடுவாளா, இல்லை சொல்லிருந்தால் அவளும் தன்னை காதல் செய்திருப்பாளோ. எதுவாக இருந்தாலும் அவள் மனதில் தான் இருப்பது உண்மையா இருந்தால் என் காதல் சொல்வது வெகுதூரத்தில் இல்லை. அவன் நினைத்துகொண்டே தூங்கினான்“

”கண்விழித்து, பார்த்தார் திருமூர்த்தி காலையில் நடந்த அத்தனை சம்பமும் கண்முன் வந்து போனது, என்னவெல்லாம் நடந்துவிட்டது. கல்யாணம் முடிந்தாலாவது தெய்வா சந்தோஷமாக இருப்பால் என்று நினைத்தால், குருமூர்த்தியின் வருகை அவருக்கு மகிழ்ச்சி என்றாலும், அவன் யாருடைய பேச்சை கேட்டு இப்படி பாண்டியன் மீது பழி போடுகிறான் என்று அவருக்கு நன்றாக தெரியும், ஆனால் தெய்வாவின் கல்யாணம் நல்லா படியாக முடிந்தது அவருக்கு சந்தோஷம் தான்.” அவர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அவருக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் எடுக்க பக்கத்தில் இருக்கும் தண்ணீர் டம்பளரை எடுக்க போக, அவரின் அசைவில் விழித்த பிரகாஷ் “என்னப்பா, தண்ணீர் வேணுமா” அவன் எடுத்துகொடுக்க, அவரும் அதை வாங்கி பருகினார்.

“அப்பொழுது தான், அவனையும் பக்கத்தில் இருக்கும் மலரையும் பார்த்தார். பிரகாஷ் சேரில் அமர்ந்து அவரின் படுக்கையில் தலை வைத்து படுத்திருந்தான், மலரோ அவன் அருகில் இருந்த ஒற்றை சோபாவில் காலை முடுக்கி படுத்திருந்தாள். அவர்களுக்கு இப்பொழுது தான் கல்யாணம் ஆன நிலையில் இவன் தனக்காக இங்கிருந்து விழித்துகொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சி தான்.”

“என்ன பிரம்மா, உங்க அறையில படுக்காம நீயும், மலரும் இங்க எதுக்கு படுத்துருக்கீங்க.., எனக்கு உடம்புக்கு இப்போ பரவாயில்லைப்பா, மருமகளை அழைச்சுட்டு போய் உங்க ரூம்ல படுத்து தூங்குங்கப்பா..” அவனிடம் முதல் முறையாய் பேசினார்.

“இருக்கட்டும்ப்பா, உங்க பக்கத்துல முதல இருந்து நான் இல்லை, இப்போவாது நான் இருக்கேன்ப்பா.., நீங்க எதுவும் நினைக்காம தூங்குங்கப்பா”

“மலரையாச்சும், ரூம்ல படுக்க சொல்லுப்பா பாவம் அந்த பொண்ணு, உடம்ப குறுக்கி படுத்திருக்கு”

“அவளும், உங்களுக்கு துணையா இங்கயே இருக்கேனு சொல்லிட்டாப்பா, நான் சொன்னே, ஆனா அவ கேக்கல”

“ம்ம்.., சந்தோஷமா இருக்கியப்பா” அவன் தலையை கோதிகொடுத்து கொண்டே கேட்டார்.

“சந்தோஷமா இருக்கேன்ப்பா”

“அப்பா, மேல கோபமா பிரம்மா”

“முதல இருந்துச்சுப்பா, ஆனா இப்போ இல்லை.. உங்கமேல நான் தேவையில்லாம கோவப்பட்டதுக்கு, தெய்வா பற்றி எனக்கு தெரியாதப்போ இருந்த உண்மையெல்லாம், இப்போ தெரிஞ்சதுல இருந்து கோபம் இல்லைப்பா”

“அம்மா, போனதுக்கு பின்னாடி உன்னையும் வாழ்க்கையில இழக்ககூடாதுனு தான் நான் உன்னை விட்டு விலகி இருந்தேன் பிரம்மா. என் விலகல் உன்னை பாதிக்காம இருக்க தான் பாண்டியன் உன்கூட அளவுக்கு அதிகமா பார்த்துக்க ஆரம்பிச்சான். பாண்டியன் உன்கூட இருக்குறதுனால நான் நிம்மதியா இருந்தேன். உன் படிப்புல இருந்து, வேலை கிடைச்சதும் வரை எனக்கு சந்தோஷமாவும் பெருமையாவும் இருந்துச்சு.  நான் அதை வெளிய காட்டிகலை. உனக்கும், மலருக்கும் காதல் இருந்தது வரை பாண்டியனும், வள்ளியும் என்கிட்ட சொன்னாங்க. இதில நான் எதிர் பார்க்காதது. தெய்வாவுக்கும் பாண்டியனுக்கு நடந்த கல்யாணம் தான். வள்ளி உடைஞ்சு போயிருவாளேனு நினைச்சா தைரியமா இருந்தா. அவளோட தைரியம் யாருக்கும் வராது பிரம்மா.”

“ஆமாம்.. பாண்டியன்மேல வள்ளிக்கு அவ்ளோ காதல் இருக்கு”

“அது உண்மை தான்ப்பா… வள்ளியோட அன்புக்கும், பாசத்துக்கும் எல்லோரும் அடிமை தான்.”

“விடிய விடிய தந்தையும், மகனுமாய் பேசிகொண்டிருந்தனர்… கடந்து வந்த பாதையையும், காலங்களையும் இருவரும் பகிர்ந்துகொண்டனர். அவரின் பாசத்தால் பிரகாஷூம் தந்தையை விட்டு விலகி இருந்தது தவறோ என்று முதல் முறை வருந்தினான்.”

“காலையில் எழுந்து வந்த வள்ளி, அனைவருக்கும் காஃபி எடுத்துகொண்டு சென்றால். முத்தையாவின் அறையை தட்டினால், மஞ்சள் குங்குமத்துடன் காட்சி தந்தார் மீனாட்சி. அவரின் கையில் இருவருக்குமான காஃபியை கொடுத்துவிட்டு மேலே வந்தவள், கார்த்தியின் அறையை தட்டினால். கதவை திறந்த கார்த்தியோ, சோகத்தை மறைத்துகொண்டு அவளிடம் காஃபியை வாங்கிகொண்டான், கீர்த்தியின் அறைக்கு சென்றால், அங்கு மாறன் காஃபியை வாங்கிகொண்டான். இறுதியாக அவர்களது அறைக்கு சென்றால்.”

“காஃபியை, டீபாயில் வைத்துவிட்டு அவனுக்காக காத்திருந்தால். குளியல் அறையில் இருந்து வெளிவந்த பாண்டியனோ, வள்ளியின் அருகில் அமர்ந்து, காஃபி குடித்தனர்.”

“திருமூர்த்தி ஐயாவ பார்க்க போகனும் அத்தான்…”

“சரிங்க வள்ளியம்மா, போகலாம்.., கார்த்திகிட்ட நீங்க பேசுங்க அவன் நான் என்ன சொன்னாலும், அம்மா பேசுனதுல இருந்து அவ்ளோவா பழைய மாதிரி இருக்கமாட்டேங்கறான்.., அப்படியே கீர்த்திகிட்டயும் வள்ளியம்மா.. மாறன் மச்சான் புலம்புறாங்க என்கிட்ட.”

“பேசுறேன் அத்தான்.  அதை பற்றி நீங்க கவலைப்படாதீங்க நான் பேசுறேன். அத்தையும், மாமாவும் தென்னவன் மாமா வீட்டுக்கு போயிட்டு அப்படியே திருமூர்த்தி ஐயா வீட்டுக்கு வந்திருவாங்க, நானும் இவங்களை அழைச்சுட்டு வரேன்.”

“ நீங்க பார்த்து வாங்க… இல்லைனா நானே வந்து கூப்பிட்டு போறேங்க வள்ளியம்மா”

“ம்ம் சரிங்க அத்தான்”

“அத்தை சொன்னது உங்களுக்கு பெரிய வருத்தமா இருக்கும், எனக்கும் தெரியும், ஆனா இது நாள் வரைக்கும் உங்க மூனு பேருகிட்ட என்னைக்காவது ஒரு நாள் வித்தியாசம் பார்த்திருக்காங்களா.. சொல்லுங்க.”

“உங்களை பெத்தவங்களைவிட, உங்களை வளர்த்த அத்தையும், மாமாவும் இது நாள் வரைக்கும் வருத்ததை கொடுத்து இருக்காங்களா.., சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னுனா துடிச்சு போறது முதல் ஆள் அத்தையும், மாமாவும் தான்.”

“மாறன் அண்ணாவுக்கும், உங்களை பற்றி தெரியும் எப்போ தெரியுமா, கீர்த்திய, அண்ணா காதலிச்சு, வெளிநாடு போகும் போது தான் கீர்த்தி.”

“அப்போ அண்ணா என்ன சொன்னாங்க தெரியுமா, கீர்த்தி யாருக்கு பிறந்தாலும், அவ என் மாமா, அத்தை பொண்ணு தான். அடுத்து என் மனைவி இது என்னைக்கு மாறதுனு அத்தான்கிட்டையும், என்கிட்டையும் சொல்லிவிட்டு போனாங்க கீர்த்தி”

“கார்த்தி என்னைக்குமே என் பாண்டியன் மச்சானோட தம்பி தான், எனக்கு தம்பி மாதிரி தானு சொல்லிட்டு போனாங்க.”

“அத்தான் மேல எனக்கு நம்பிக்கை இருக்க போய் தான், அவருக்கும், தெய்வாவுக்கும் கல்யாணம் ஆனா போதும், அவரு மேல வச்ச நம்பிக்கை போகல. அதுக்கு காரணம் உங்களுக்கு தெரியும் தானே” வள்ளி கேட்க அவர்கள் இருவரும் தலையை அசைத்தனர்.

”இன்னும் உங்க மனசுல, அத்தை பேசுனது இருந்தா என்மேலையும், இந்த குடும்பத்துமேலையும் நீங்க வச்சுருக்க பாசம் உண்மையில்லைனு நான் நினைச்சுகிறேன்.” வள்ளி இதுக்கு மேலையும் இவருக்கு எடுத்து சொல்லுவதற்க்கு ஒன்றுமில்லை என அவள் நகரப்போக, கீர்த்தி, வள்ளியை கட்டியணைத்துகொண்டு அழுதால், கார்த்தியோ,  ”எங்க பாசமே நீங்களும், இந்த குடும்பமும் தான் அண்ணி” நான் அம்மாகிட்ட பேசுறேன் அண்ணி.” இருவரும் சொல்ல வள்ளிக்கு சந்தோஷம்.

”பாண்டியனிடம் சொன்ன மாதிரி வள்ளி அவர்களின் மனதில் இருந்த பாரத்தை விலக்கி, அவர்களை குடும்பத்துடன் சேர்த்தால்.”

”ஐயாவும், நடந்த விசயங்களை கேள்விபட்டு மீனாட்சியை திட்டிவிட்டார், திருமூர்த்திக்கு கார்த்தியின் மீது அவ்வளவு பாசம், கீர்த்தியும் அவருக்கு செல்ல மகள் போன்றவள். அதனால் தான் இந்த கோவம்.”

“கார்த்தியும், கீர்த்தியும் மனதில் உள்ள, பாரத்தை விலகி “ சாரிம்மா, தெரியாம பேசிட்டேன் என்னையும்,கீர்த்தியும் உங்க பிள்ளைகள் தானே இல்லைனு சொல்லாதீங்கம்மா…, நான் உங்களை என்னைக்குமே என் அம்மாவா தான் பார்க்குறேன் அது என்னைக்கும் மாறது அம்மா, அப்பா நீங்களும்,” கார்த்தி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.”

”பெற்றவள் யாரகா இருந்தாலும், வளர்ந்த பாசமும்,அன்பும் என்றும் இல்லை என நினைத்துவிட முடியுமா. அது மாதிரி தான் மீனாட்சிக்கு இருந்தது. கோபத்தை பிடித்து வைக்க முடியாமால் அவர் “ நான் தான் உங்க ரெண்டு பேருகிட்டையும் மன்னிப்பு கேட்க்கனும் கார்த்தி, என்னைக்குமே நான் தான் அம்மா, இவரு தான் அப்பா, எதுவும் மாறதுப்பா” அவர் கார்த்தியையும், கீர்த்தியையும் கட்டிகொண்டு அழுதார்.

 

            துருவங்கள் தொடரும்………..

 

Advertisement