Advertisement

                 துருவங்கள் 10

 

”நீ என்ன பெரிய தியாகியாடி….அந்த பொண்ணு உன் வாழ்க்கையில சொந்தம் கொண்டாட வந்திருக்கா….அவளை போய் இந்த வீட்டுல சேர்த்திருக்க…நீ பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை..இதுனால பாதிக்கபடுறது கீர்த்தி, மாறன் கல்யாணம் தான்….அது ஏன் உனக்கு புரியலை…இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் வள்ளி….பதில் பேசுடி..”..

‘அண்ணா,அண்ணி…நீங்களும் அமைதியா இருக்குறேங்க…என் மகள் வாழ்க்கையில் இப்படி நடந்துருக்கு..ஏதாவது சொல்லுங்க..அண்ணா…’..

“என்ன சொல்லச்சொல்லுற….செல்வி,..அந்த பொண்ண இந்த வீட்டுல இருக்க சொன்னது என் வீட்டு மருமக..அவளே சொல்லும் போது நாங்க என்ன பண்ணமுடியும்…,வள்ளி எது செஞ்சாலும் சரியா இருக்கும்,..அந்த பொண்ணு இன்னும் எத்தனை நாள் இந்த வீட்டுல இருக்க போகுது…எனகென்னமோ பாண்டியன் மேல எந்த தப்பும் இல்லனு தோனுது….பார்ப்போம்..அந்த கடவுள் நமக்கு துணையா இருக்கும் போது வள்ளி,பாண்டியன் வாழ்க்கையில யாரும் கெடுக்க முடியாது…”என முத்தையா சொல்லிவிட்டு போக..

‘என்ன அண்ணி இது, அண்ணா இப்படி சொல்லிட்டு போறாங்க….ஏங்க உங்க மகளுக்கு நீங்களாவது சொல்லுங்க…’செல்வி, கணவனை துணைக்கு அழைக்க..

“இங்க பாரு வள்ளி…நீயே உன் வாழ்க்கைய கெடுத்துக்காத…நீ எதுக்கு அந்த பொண்ண இந்த வீட்டுக்குள்ள சேர்த்தேனு தெரியாது..ஆனா,அந்த பொண்ணுனால, நம்ம உறவுகள் பாதிக்கப்படக்கூடாது….புரிஞ்க்கோ,…நாங்க கிளம்புறோம்…தங்கச்சி…வரேன் வள்ளி.. வா செல்வி போகலாம்” என்று மகளின் வாழ்க்கையில் இப்படி நேர்ந்துவிட்டதே என கண்ணீருடன் புறப்பட்டு சென்றனர்..

‘அத்தை நீங்க மட்டும் அமைதியா இருக்கீங்க உங்களுக்கு எதாவது சொல்லனுமுனா சொல்லுங்க…அத்தை..’அவ்வளவு நேரம் செல்வி பேசியதற்க்கு ஒரு பதிலும் பேசாமல் இருந்த வள்ளி…இப்போது..மீனாட்சியிடம் வாய் திறந்தால்… “நான் என்ன சொல்லனும் வள்ளி,தம்பி மேல நான் வைக்காத நம்பிக்கைய நீ வைச்சுயிருக்கியே அதுவே எனக்கு போதும்…ஒரு நொடி நமக்கு பிடிச்சவங்க மேல நம்பிக்கை இல்லாம போனா..அந்த  நம்பிக்கை வாழ்க்கை முழுவதும் இருக்காது.. அதுமாதிரி தான்….உன் வாழ்க்கையும்…. நீ தம்பிமேல நம்பிக்கை அளவுக்கு அதிகமா வைச்சிருக்க…. எனக்கு அது போது…வள்ளி..ஆனா நீ மாசமா இருக்குற விசயத்தை இன்னும் பாண்டியன்கிட்டயும்,யாருகிட்டையும் சொல்லவேயில்லையே வள்ளி…இப்போ என்ன செய்யபோற….எப்போ சொல்லப்போற…”

‘சொல்லுனு அத்தை….அதுக்குனு ஒரு நேரம் இருக்குறப்போ சொல்லனு…’ என இவர்கள் பேசிகொண்டிருக்கும் போது… “அக்…அக்கா..” ப்ரியா, வள்ளியை அழைத்தால்…, மீனாட்சியும்,வள்ளியும், அவளை திரும்பி பார்த்தானர்..  “என்னம்மா தெய்வா…உள்ளவா…ஏன் அங்கயே நிக்கிற…”ப்ரியாவை அழைத்தால். “என்ன வேணும் தெய்வா…”ப்ரியாவை, அவள் பக்கதில் அமரவைத்து பேசினால்.. “என…..எப்படி கேக்குறதுனு தயக்கமா இருக்கு..”.. ‘என்ன தயக்கம் உனக்கு…நான் தான் சொன்னேல..இது உனக்கும் வீடுதான்…சொல்லு என்ன வேணும்..”… ‘என..எனக்கு பசிக்குது…சாப்பாடு தர்றேங்களா…’..என்று தயக்கத்துடன் கேட்டால்… “ஊருக்கே சாப்பாடும் முத்தையாவின் குடும்பம்…, எந்த விஷேசம் என்றாலும்,மீனாட்சியும்,வள்ளியும் சாப்பாடு செய்து ஊருக்கே அன்னதானம் போடும் இவளிடம் ஒரு குழந்தை தன் தாயிடம் பசிக்குதும்மா எனக் கேட்கும் விதம்…போல இருந்தது ப்ரியாவின் செயல்….”..

‘இன்னுமா நீ சாப்பிடல…தெய்வா,…சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சுமா’

“அது..அது..இரண்டு நாள்…”

‘இரண்டு நாளா சாப்பிடாம என்ன பண்ண…..இரு…’ ‘வாணி…வாணி….இங்க வா…’

“சொல்லுங்க தாயி….”

‘தட்டுல….சுடச்சுட…சாப்படு போட்டு,சாம்பார்,காய் வச்சு எடுத்துட்டு வா…’ “சரிங்க தாயி…இதோ..” என்று வேகவேகமாக தட்டில்,சாதம் வைத்து,சாம்பார்,காய் வைத்து எடுத்து வந்தால்…வாணி.. “இந்தாங்க தாயி…” வள்ளியிடம் கொடுத்துவிட்டு…. ‘வாணி…தண்ணீர் எடுத்துட்டு வா..’.. “சரிங்க தாயி”…. ‘வள்ளி அந்த சாப்பாடு தட்டை வாங்கி…நன்கு பிசைந்து….ப்ரியாவுக்கு ஊட்ட…அவள் வாய் அருகே கொண்டு போனால்… “வேணாம் அக்கா…நானே சாப்பிடுறேன்…. கொடுங்க”என  வள்ளியிடம் இருந்த தட்டை வாங்க கை நீட்டினால் பிரியா… “உங்க அம்மா ஊட்டிவிட்டா சாப்பிடுவியா…” என்று வள்ளி, பிரியாவிடம் கேட்க… ‘ம்ம்ம்.. சாப்பிடுவேன்….’.. “அப்போ சாப்பிடு…என்னை உன் அம்மாவா நினைக்க வேண்டாம்…உன் அக்காவ நினைச்சுக்கோ….என மறுபடியும் கையில் உள்ள சாப்பாட்டை ப்ரியாவின் வாய் அருகே கொண்டுபோனால்…, இந்த முறை அவள் எந்த மறுப்பும் இல்லாமல் வாங்கிக்கொண்டால்… இதை எல்லாம் மீனாட்சி அமைதியாக பார்த்துகொண்டிருந்தார். ஒவ்வொரு  வாய் சாப்பாட்டிற்க்கு..ப்ரியாவுக்கு அழுகையா வந்தது….தாமரை ஒரு முறை அவளுக்கு ஊட்டிவிடும் போது.. “ஏன் தெய்வா சாப்பிட அடம் பிடிக்குற…. ஒழுங்க ஒரு இடத்துல நில்லு…சாப்பிட்டு அப்புறம் வேலைய பாரு..”… ம்மா.. இன்னைக்கு பிராஜெக்ட் வைவா ம்மா..அதுக்கு ப்ரிப்போர் பண்ணனும் நீங்க, சாப்பிடு,சாப்பிடுனு சொல்லுறேங்க….இந்த பிராஜெக்ட் மட்டும் நான் முடிச்சுகொடுத்தா…எல்லா சப்ஜெக்ட்லையும் நான் தான் ஃபர்ஸ்ட் ம்மா.. எனக்கு பெரிய கம்பெனில வேலை கிடைக்கும், “அதுக்கு முதல சாப்பிட்டாதான் இந்த வேலையெல்லாம் பண்ணமுடியும்…சாப்பிடு..” என அவளை அதட்டியும்,பாசமாகவும், ஊட்டிவிடும் தாமரையின் நினைவு அவளுக்கு வந்தது…..

‘என்னம்மா… தெய்வா… இப்போ எதுக்கு அழுகுற….சாப்பாடு பிடிக்கலையா…’ ப்ரியாவின் கண்ணீரை பார்த்து கேட்க..

“என் அம்மாவும், எனக்கு இப்படி தான் ஊட்டிவிடுவாங்க….ஆனா நான், சாப்பிடாம அடம்பிடிப்பேன்….அதான் இப்போ ஞாயபகம் வந்துச்சு……”

‘ச்சு…சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு….இங்க உனக்கு…அம்மாவ இருந்து கவனிச்சுக்க,…மீனாட்சி அத்தை,மாமா…என் அம்மா,அப்பா,நான்,அத்தான் எல்லாரும் இருக்காங்க….அப்புறம் எதுக்கு இந்த அழுகை……இப்படி நீ அழுதேனா…எனக்கு கவலையா இருக்கும்….அக்கா கவலைப்பட்டா உனக்கு பிடிக்குமா….சொல்லு…’ என ப்ரியாவை சமாதானம் செய்ய…. “வேணாம் அக்கா…இனி அழுக மாட்டேன்…..கவலைப்படாதேங்க…

“ம்ம்,…இது அழகு…போம்மா…போய் ரெஸ்ட் எடு….” ‘சரிக்கா..’ ப்ரியாவை சாப்பிட்டு அவளை அனுப்பி வைத்தால்…

‘நீங்க ஏன் அத்தை அவ வந்தபோது பேசல….அவளுக்கு வருத்தமா இருக்காதா. “என்ன இருந்தாலும்….உடனே அந்த பொண்ண ஏத்துக்க முடியல வள்ளி….. கொஞ்சம் நாள் போகட்டும் பார்க்குறேன்….’என மீனாட்சி, வள்ளியிடம் சொல்ல….

”யாரை கேட்டு…மலருக்கு மாப்பிள்ளை…பார்த்து…பரிசம் போட வரச்சொல்லிருக்கீங்க……. அவ என் பொண்டாட்டி….அவ புருஷன் நான் இருக்கும் போது யாருக்கு கட்டிகொடுக்க போறேங்க….”பிரகாஷ்…மலரின் அப்பாவிடம்…. சிவநாதனிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான்….

‘நான் யாரைக் கேக்கனும்…..நீ என்ன, என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுன மாதிரி பேசுற….அவ என் பொண்ணு…..அவள யாருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும் எனக்கு தெரியும்….உன் ஐயனுக்கு தான் எங்க குடும்பத்தையே பிடிக்காதே….அப்புறம் ஏன் என்கிட்ட சண்டை போடுற… “குடுப்பத்துக்குள்ள நீங்க சண்டை போட்டேங்கனா அதுக்கு நானும்,மலரு என்ன பண்ண முடியும்…..சண்டை போட்டது உங்க தப்பு, ஆனா காதலிச்சது எங்க தப்பு இல்லை….இங்க பாருங்க மாமானாரே….மலரு எனக்கு தான்…. என்னை மீறி மலர… யார் பரிசம் போட வராங்கனு பார்ப்போம்….,..”என்று சிவநாதனிடம் மல்லுக்கட்டிவிட்டு…..அங்கு ஓரமாய் அழுதுகொண்டிருந்த மலரை பார்த்து… “ஏய், எதுக்கு அழுகுற….சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்… நம்ம காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல…..எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்….கொஞ்சம் பொறுத்துக்கோ…என்னை…”.. ‘சரிங்க மாமா… உங்களுக்காக நான் காத்திருப்பேன்… மாமா…’…. மலரிடம் கூறிவிட்டு சென்றான்.

“அப்பா….மலரு தான், பிரகாஷ விரும்புரானு தெரியுதுல…..அப்புறம் எதுக்கு அவளுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்குறேங்க…..எப்படி இருந்தாலும்… மலரு பிரகாஷா தவிர யாரையும் கட்டிக்க மாட்டா….எதுக்கு இந்த சண்டை…… அவன்கூட….” என சிவநாதனின் மூத்த மகன்…தென்னவன் அவரை கேட்க….

“எனக்கு மட்டும்…, அவன்கிட்ட சண்டை போடனும் வேண்டுதலா…..என் மனைவி அவனுக்கு வாக்கு கொடுத்தது எனக்கும் தெரியும், ஆனா திருமூர்த்தி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாரு…அது தான்…. என் பொண்ணுக்கு, பிரகாஷுக்கும்… தெரியமாட்டேங்குது…..பார்க்கலாம் அவன், திருமூர்த்தி ஐயாவ சம்மதிக்க வைப்பானானு……இப்போ  சண்டை போட்டு போனதுக்கு பின்னாடி…அவன், ஐயாகிட்ட தைரியாமா பேசுவான்…..அதான்.. மலருக்கு மாப்பிள்ளை பார்க்குற மாதிரி நடிச்சேன்…..”

‘அப்பா….ஏன் திருமூர்த்தி ஐயா…உங்க்கிட்ட சண்டை போட்டாரு….ஏன் இத்தனை வருசம் பேசாம இருந்தேங்க…..முத்தையா பெரியப்பாக்கிட்ட மட்டும் பேசுறேங்க…..சொல்லுங்க அப்பா..’

“அது உறவுனு இருந்தா….சில..சண்டை,பிரச்சனைனு வரத்தான் செய்யும்…. இன்னைக்கு அடிச்சுகிட்டா… நாளைக்கு சேர்ந்துக்குவோம்….பார்ப்போம்…இந்த முறையாவது திருமூர்த்தி ஐயா சண்டையெல்லாம் மறந்து பேசுவாறானு…”..

‘எல்லாம்…நல்லாதாவே நடக்கும்…..கவலைப்படாதேங்க…..எனக்கு டவுன்ல வேலை இருக்கு….போயிட்டுவரேன்…’

“சரிப்பா…பார்த்து போயிட்டு வா…..உனக்கும் காலா காலத்துல பொண்ணு பார்க்கனும்டா……பொண்ணு ஜாதகம்  இருந்தா தரகர்கிட்ட சொல்லி வைக்கனும்…”அவர், அவனிடம் சொல்ல…. ‘ப்பா….முதல, மலரு கல்யாணம் முடியட்டு….இப்போவே ஆரம்பிக்காதேங்க…..

’ஏன் துரை…எந்த பொண்ணையும் பார்த்துட்டேங்களா…..”

‘ப்பா…எனக்கு நீங்க பார்க்குற பொண்ணதான் கட்டிப்பேன்….., வீட்டுல இருக்குற பொண்ண கரைசேர்த்துட்டு தான்…, பசங்க வாழ்க்கைய பார்க்கனும்… அப்போ தான் ….குடும்பமும் நல்லா இருக்கும்…..நான் வரேன்…’அவனின் பதிலில் சிவநாதன் மனதில் மகிழ்ச்சியாய் இருந்தது…..

“என்மேல உங்களுக்கு கோவம் இல்லையாக்கா…” என ப்ரியாவின் படுக்கயை விரித்துக்கொண்டிருந்த வள்ளியிடம் கேட்க….

‘உன்மேல எதுக்கு நான் கோவப்படனும்….எதுக்கு இந்த கேள்வி கேக்குற’

“உங்க வாழ்க்கையில…இடையா நான் இருக்குறேன்….எந்த பொண்ணு…இப்படி பட்ட சூழ்நிலையில இருந்தாலும்….அவளுக்கு கோவம் வரும்,சண்டை போடுவா….,அதுக்கும்மேல….என்னை மாதிரி பொண்ண வீட்டைவிட்டு அனுப்பிடுவா….ஆனா நீங்க ஏன், என்கிட்ட சண்டை போடல….,சொல்லுங்க அக்கா….எனக்கு கஷ்ட்டாமா இருக்கு….ஒரு நாள், நானே இந்த வீட்டைவிட்டு போயிடுவேன்…..அதுக்கு முன்னாடி உங்க மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியுனும் அக்கா…சொல்லுங்க..”வள்ளியிடம் வற்புறுத்திக் கேட்க…..

‘என் அத்தான், அவங்க மேல எனக்கு இருக்குற நம்பிக்கை,காதல்,பாசம், இதுதான், உன்மேல எனக்கு கோவம் வராததுக்கு காரணம்……அதைவிட முக்கியம்….ஐயாமேல இருக்குற மரியாதை……அவர் என்ன சொன்னலும்….நாங்க மட்டுமில்லை…., இந்த ஊரே…கேக்கும்….அது தன்… போதுமா…’

“சார்மேல அந்தளவு காதலா அக்கா….”

‘அத்தான் மேல மட்டும் இல்லை, இந்த குடும்பத்து மேலையும் அக்கரையும்,தான்….’

“எனக்கும் இந்த மாதிரி கூட்டுகுடும்பம் இல்லைக்கா….நான்,அம்மா,அப்பா மூனு பேர் இருந்தோம்….நான் டூவெல்த் படிக்கும் போது அப்பா…எங்க போனாருனு தெரியலை…..அதை பத்தி அம்மாக்கிட்ட கேட்டா….. சொல்லமாட்டாங்க…. நானும் விட்டுருவேன்…..இப்போ வரை அப்பா எங்க இருக்காங்கனு தெரியாதுக்கா….அடுத்து…காலேஜ்…படிப்பு,வேலைனு வாழ்க்கை போயிருச்சு….இப்போ அம்மா…இல்லை…”என அவள் தாமரையின் நினைவில் அழுக ஆரம்பித்தால்….

‘இன்னைக்கு தானே சொன்னேன்….அழுக கூடாதுனு….அதுவும் விளக்கு வைச்ச நேரத்துல வீட்டுல இருக்குற பொண்ணுங்க கண்ணீர்விடக் கூடாது….அப்படி அழுதா…வெளிய போனா ஆம்பளைங்களுக்கு ஆபத்துனு சொல்லுவாங்க….’என வள்ளி சொன்னதும்…வேகமாக கண்ணீரை துடைத்தால்….”இனிமே அழுக மாட்டேன் அக்கா…இங்க இருக்குற யாருக்கும் எதுவும் ஆகாக்கூடாது….”

“ம்ம்ம்….இதுதான் தெய்வா….. இங்க பாரும்மா…எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு….அது மாதிரி தான், இந்த வாழ்க்கையும், சரியா, எதுவும் நினைக்காம தூங்கு….நான் என் அறைக்கு போறேன்….தனியா தூங்குவேல…..இல்லை பயமா இருந்தா சொல்லு, நான் துணைக்கு உன்கூட தூங்குறேன்…..”என வள்ளி கேட்க…. ‘எனக்கு பயமெல்லாம் இல்லைக்கா….நீங்க போய் தூங்குங்க….குட் நைட்’.. “சரிம்மா….குட் நைட்”..வெளிய வந்து கதவை தாளிட்டுவிட்டு சென்றால்..

’என்னத்தான்….இன்னும் தூங்காமா என்ன பண்ணுறேங்க…..பால் குடிச்சேங்களா… அவர்கள் அறைக்குள் நுழைந்ததும்.. பாண்டியனிடன் கேட்டால்…. ஆனால் அவனோ எந்த பதிலும் சொல்லாமல்…அமைதியாக ஜன்னலில் இருந்து… வானத்தில் இருக்கும் நிலாவை பார்த்துக்கொண்டிருந்தான்…. வள்ளியோ எதுவும் பேசாமல் இருந்த பாண்டியனை…திரும்பி பார்த்தால்…. அவன் அருகில் சென்று… பின்னிருந்து அவனை இருக்கி அணைத்துக்கொண்டால்…… “என்ன அத்தான் எதுவும் பேசாமல் இருக்கேங்க……ஏன் அத்தான்…அமைதியா இருக்கேங்க….” …அவளே மீண்டும் பேச்சை ஆரம்பித்தால்…..அதற்க்கும் அவன் பேசாமல் அமைதியாக இருந்தான்… “என்னாச்சு அத்தான், எந்த விசயம் உங்க மனச சஞ்சலப்பட வைக்குது…..சொல்லுங்க..”

‘வள்ளியம்மா….உங்க காதலுக்கு நான் தகுதியானவனா…..’

“எதுக்கு இப்போ இந்த கேள்வி”

‘சொல்லுங்க வள்ளியம்மா….உங்க காதலுக்கும்,நம்பிக்கைக்கும்,நான் தகுதியானவனா…..’

“என் உயிரே நீங்கதானே அத்தான்…அப்படி இருக்கும் போதும்,..தகுதி ,அது,இதுனு பேசுறேங்க……உங்களுக்கு ஏன் அப்படி தோனுது…..’..அவனின் கன்னத்தில் கை வைத்து பாண்டியனை சமாதானம் செய்தால்….

‘எனக்கு மட்டும் ஏன் வள்ளியம்மா…கடவுள் சோதனைக்கு மேல சோதனையா கொடுக்குறாங்க….நேற்று உங்க எல்லோர் முன்னாடியும் என் பக்க நியத்தை சொல்லும் போது ஐயா தடுத்துட்டாங்கா…..இப்போ சொல்லுறேன் வள்ளியம்மா நான் சென்னை போனது எதுக்குனு இன்னைக்கு சொல்லுறேன் வள்ளியம்மா…. அங்க..’என அவன் சொல்லும் போது தன் கைகொண்டு வாய்யை மூடினால்.. “அத்தான்….அங்க நடந்ததை  சொன்னா…நான் உங்கமேல நம்பிக்கை வைக்கலனு அர்த்தம்…..அத்தான்… கடவுள் உங்களுக்கு சோத்னைக்கு மேல, சோதனை கொடுக்குறாங்கனா…உங்க பலத்தை அதிகப்படுத்துறாருனு அர்த்தம்… எந்த சூழ்நிலையிலும்…நீங்க துவண்டு போககூடாதுனு….கெட்டவங்களுக்கு எல்லாம் கொடுப்பாரு ஆனா கைவிட்டுருவாறு….நல்லவங்களை சோதிப்பாரு ஆனா என்னைக்கு கைவிடமாட்டாறு கடவுள்…. இப்போ உங்களுக்கு கொடுத்துருக்க சோதனையில நீங்க எப்படி வெற்றியோட வருவேங்கனு கடவுள் உங்களை சோதிக்குறாரு…..இதுக்கானா வழியை, நீங்க தான் கண்டுபிடிக்கனும்…அத்தான்…., அப்போ தான் அந்த பொண்ணுக்கு நாம நல்ல வாழ்க்கையை அமைச்சுகொடுக்க முடியும்….” ‘வள்ளியம்மா…..ரொம்ப குழம்பி போயிருந்தேன்…..நீங்க வந்து என் மனச தெளியவச்சுட்டேங்க….வள்ளியம்மா… என்றான்…

“சரி பால் சாப்பிட்டேங்களானு அப்போ இருந்து கேக்குரேன் ஒரு பதிலும் சொல்லல அத்தான் நீங்க….” ‘ம்ம்…சாப்பிட்டேன் வள்ளியம்மா….இல்லையினா என்னை நிம்மதியா தூங்கவிடுவேங்களா…’.. “சரி போய் தூங்குங்க….நான் ட்ரெஸ் மாத்திட்டுவரேன்….”…வள்ளி குளியல் அறைக்கு சென்று உடையை மாற்றிகொண்டு வெளியே வந்தாள்…. “பாண்டியன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான், அவனது உறக்கம் கலையாமல்…. அவளின் செல்போனை எடுத்துக்கொண்டு பால்கேனிக்கு சென்று அவளுக்கு வந்த குறுஞ்செய்தியை படிக்க ஆரம்பித்தால்……முழுதாக அந்த செய்தியை படித்துமுடித்ததும்…..எந்த எண்ணில் குறுஞ்செய்தி வந்ததோ….அதே எண்ணிற்க்கு வள்ளி…. “தேடிய விபரம் கிடைத்தவுடன்… குறிப்பிட்ட ஆட்களை வைத்து முதல் திட்டத்தை செய்யது முடிக்கவும்”….பதில் அனுப்பினால்..

‘அந்த குறுஞ்செய்தியை அனுப்பி முடித்ததும்….பாண்டியனின் அருகில் வந்து படுத்துக்கொண்டு அவனின் தலைகோசத்தை மெதுவாக வருடிக்கொடுத்தால்… “இன்னும் கொஞ்ச நாள் தான் அத்தான் அதுகடுத்து உங்களுக்கு எந்த பிரச்சனையும் அண்டவிடமாட்டேன்……கர்ணனுக்கு எப்படி கவசம்குண்டலம் பாதுகாப்பா இருக்குதோ, அதே மாதிரி….உங்களுக்கு நான் கவசமா இருப்பேன் அத்தான்…. இனி உங்களை பார்த்துக்க…நானும்,நம்ம மகளும் இருக்குறோம் அத்தான் எதையும் நினைக்காம நிம்மதியா தூங்குங்க……”மனதில் நினைத்துக் கொண்டால்…..அப்போது, ‘பாண்டியனோ…வள்ளியின் இடையை இறுக்கி கட்டிகொண்டு தூங்கினான்….’

“எப்பவும் போல வள்ளி…எழுந்து அவள் வேலையை பார்க்க……ப்ரியா…எழுந்து கீழே வந்தால்…….. முதலில் அங்கிருந்த முத்தையாவை பார்த்தும்… அவளுக்கு பயம் வந்துவிட்டது…..ஆனால் அவரோ….’என்ன வேணுமா….’…என கேட்க… “அக்கா…அக்கா தேடிவந்தேன் தாத்தா…”…. ‘அவரோ அவள் சொல்லிய தாத்தாவில் சிரிப்பு வந்தாலும்….அதை காட்டாமல்..’.. “உள்ள மீனாட்சியம்மா இருப்பாங்க..அவங்ககிட்ட கேளும்மா” அவளிடம் சொல்லிவிட்டு நாளிதழை படிக்க ஆரம்பித்தார்…. ப்ரியாவோ… ‘அங்கு எந்த இடத்தில் அவர் இருக்கிரார் என ஒவ்வொரு அறையையும் பார்த்துக்கொண்டு போனால்….கடைசியாக சமையல் அறையை அவரை பார்த்ததும்…… ‘என்கிட்ட பேசுவாங்களா..’ என்று சிந்திக்க….ப்ரியாவை பார்த்துவிட்ட வாணி….மீனாட்சியிடம் அவள் வந்திருப்பதை சொன்னால்…. “என்ன வேணும்….”..ப்ரியாவின் சிந்தனையை கலைத்தது…மீனாட்சியின் குரல்….. ‘ஹான்….அது…அது வந்து அக்கா…அக்காவ தேடி வந்தேன் பாட்டி…..’என ப்ரியா மீனாட்சியை பாட்டி என்றழைத்தும்…. அங்கிருந்த வாணி சிரித்துவிட….. “வாணி….என்ன சிரிப்பு….”..அவளை அடக்கிவிட்டு….. ‘கொள்ளப்பக்கம் இருப்பா…உன் அக்கா….வாணி இவளை அங்க கூட்டிட்டு போ.’…வாணியிடம் சொல்லி ப்ரியாவை அவளுடன் அனுப்பி வைத்தால்….. அவர்கள் போனபிறகு…அங்கு இருந்த வாஷ்பேசன் கண்ணாடியில் மீனாட்சி அவரின் முகத்தை பார்த்து “அதுக்குள்ளவா நான் பாட்டியானது இவளுக்கு தெரியுமோ….இல்லையே வள்ளி இன்னும் யாருக்கும் சொல்லலையே…..என் முகம் பாட்டியானா சந்தோஷத்தோட இருக்குதோ….” என முகத்தை திருப்பி, திருப்பி பார்த்தார்…. அதற்க்குள் யாரோ வரும் அரவம் கேட்டதும்…..விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தார்…”

‘ஏண்ணே….இன்னும் காரி மாட்டுக்கு தண்ணிக்காட்டாம என்ன செய்றேங்க…. மாடுக்கு…பசிக்கு போல…..சீக்கிரம் தண்ணி வையுங்க…..’.. ‘சின்னப்பொண்ணு… அந்த கோழியும்,சேவலும் ஒன்னா மேயவிடாதேங்க…அது சண்டை போடும்… அப்புறம் அது பறந்து வேலியை தாண்டி போகும்…..பார்த்துக்கோங்க…’… ‘பாட்டிம்மா…ஆடுக்கு கீரையை கொடுங்க…..முந்தாநேத்து….ஒரு ஆடு குட்டி போட்டுச்சுல…. அந்த குட்டிய எடுத்துட்டு போய் அங்க இருக்குற… அதோட தாய் ஆட்டுக்குட்டிகிட்ட விடுங்க…இன்னேரம் அதுக்கு உடம்பு சரியாகிருக்கும்…’ ‘நல்லத்தம்பியண்ணே….வாழைத்தோப்புல….ஒரு வாழைத்தாரு,ஒரு கட்டு வாழை இலையும், கொண்டுவாங்க….’…சரிங்க தாயி…. ‘என்ன அக்கா…உங்க வீட்டுக்காருக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு…..’… “உன் கையால இருந்து மருந்து வாங்கிட்டு போயிருக்கேன்ல தாயி…அப்போ எப்படி உடம்பு சரியாக போகும்….அவங்களுக்கு குணமாகி வேலைக்கு போயிட்டாங்க தாயி….எல்லாம் உன் கைராசி”…. ‘அக்கா….கடவுள் என்னைக்கு நல்லாவங்கள கைவிடமாட்டரு… போய்….செடிக்கு தண்ணீ ஊத்துங்க…’.. “சரிங்க தாயி”…. ‘முத்தண்ணே…..நீங்க கொண்டு வந்த…இரண்டு நாய்யும் என்ன பண்ணுது….’… “போங்க தாயி….அதை ஊருக்கு வெளியவே விட்டுருப்பேன் நீங்க தான், நான் வளர்க்குறேனு சொல்லி… அதுக்கு நான் சாப்படு வைக்குபோதெல்லம்…என்னை கடிக்க வருது…இனிமே அதுக்கு நான் சாப்படு வைக்கமாட்டேன் தாயி…பயமாயிருக்கு..” ‘அண்ணே…அதுகளுக்கு அஞ்சறிவு, அது குறைக்கவும்,கடிக்கவும், தான் செய்யும்,…..நாமா தான் அதுக்கு அடிப்பட்டுருக்கானு பார்க்கனும்….வாங்க…. இன்னைக்கு அதுக்கு நானே பால்சோறு வைக்குறேன்…என்னை கடிக்காதனு பார்க்கலாம்….’ “வேணாம் தாயி…உங்கள கடிச்சா….தம்பியும்,ஐயாவும் தான் என்னை திட்டுவாங்க….நானே அதுக்கு சோறு வைக்குறேன்..தாயி”… ‘அண்ணே நான் சொன்னதை கொண்டுவாங்க…’..என அவன் பால்சோறு கொண்டுவந்து வள்ளியிடம் கொடுத்தான்…..

”அந்த கம்பிக்கதவை திறங்க…..அது வெளியவரட்டும்…..”.. ‘சரிங்க தாயி’ என நாய்களை அடைத்து வைத்த கதவை திறந்துவிட்டான்…. “திறந்துவிட்டதும்…. அந்த இரண்டு நாய்களும்…முத்துவை பார்த்து குரைத்துவிட்டு…..வள்ளியின் அருகே சென்று….அவளின் காலில் முனங்கிகொண்டே படுத்துக்கொண்டது…… “என்ன ஆச்சு உங்களுக்கு…ஏன் அண்ணன பார்த்து குரைக்குறேங்க…..அவங்க உங்களை பார்த்துகுறவங்க, கடிக்ககூடாது…..சரியா….”என நாய்களின் பிடரியை தடவிக்கொடுத்தால்…..அந்த நாய்களுக்கு என்ன புரிந்ததோ…அதுவும்…. வள்ளியின் தன் நாவினால் நக்கிக்கொடுத்தது….. “உங்களுக்காக….அண்ணே பால்சோறு எடுத்து வந்திருக்காங்க…சாப்பிடலாமா…..” என கேட்க்கொண்டே அதன் கிண்ணத்தில் போட்டால்….. ஆனால் அந்த நாய்களோ….சாப்பாடு கிண்ணத்தை நுகர்ந்துவிட்டு…..முத்துவின்…காலில் வந்து படுத்துகொண்டது…. “பார்த்தேங்களா அண்ணே….அது உங்களை சாப்பாடு போடச்சொல்லுது…..இது தான் அதுகளோட பாசம்….இந்தாங்க…மீதி சாப்பாடு நீங்களே போடுங்க இந்தாங்க…..” முத்துவிடம் கொடுத்தால்….முத்துவும் அந்த கிண்ணத்தில் சாப்பாடு போட்டதும்…..வேகமாக சாப்பிட்டது….. “அண்ணே….எந்த ஜீவனா இருந்தாலும் அதோட பாசத்தை நாமா புரிஞ்சுகிட்டா, நம்ம பாசத்தையும் அதுக புரிஞ்சுக்கும்……இனிமே நீங்களே சாப்பாடு போடுங்க…. ‘சரிங்க தாயி’… இதையெல்லாம்….வந்தில்லிருந்து பார்த்துகொண்டிருந்தால் ப்ரியா….

“சரி வேலைய பாருங்க…..நான் உள்ள இருக்குற வேலைய பார்க்கபோறேன்…. என வள்ளி திரும்பி வரும் போது அங்கிருந்த ப்ரியாவை பார்த்ததும்…. ‘என்னமா குளிச்சுட்டீயா….காலையில என்ன சாப்பிடுவ…. காஃபியா, டீ யா’… வள்ளி கேட்க….. “எப்படிக்கா….உங்க பேச்ச…அந்த ரெண்டும் நாய்களும் கேக்குது” ‘நீ எப்போ வந்த இங்க…..’… “அதையேன் கேக்குறேங்க…..ஹால்லா தாத்தாகிட்ட, கேட்டேன்..அவரு…உள்ள இருந்த பாட்டிகிட்ட கேக்க சொன்னாங்க…அந்த பாட்டிம்மா சொல்லி தான்….இந்தா அக்கா என்னை, இங்க அழைச்சுட்டு வந்தாங்கா…..” என வாணியை கைக்காட்டினால்.

‘தாத்தா….பாட்டியா…..வாணி ஊருக்காரங்க யாரவது வந்தாங்களா….தெய்வா.. பாட்டி, தாத்தானு சொல்லுறா…’ “தாயி…..ப்ரியாம்மா சொன்னது….பெரியயாவும், பெரியம்மாவையும் சொல்லுறாங்க….தாயி”என வாணி விளக்கி கூறினால்…. வள்ளியோ…..’ஹாஹாஹா…தெய்வா…அவங்க…தாத்தா ,பாட்டி இல்லை….என் அத்தானோட, அம்மா, அப்பா….எனக்கு மாமா, அத்தை,….உனக்கும் தான் அவங்க மாமா,அத்தை…..சரியா’சிரித்துகொண்டே வள்ளி கூறினால், ப்ரியா… ‘எனக்கு தெரியாதுக்கா….இனிமே தாத்தா,பாட்டினு சொல்லமாட்டேன்…..’ “சரி குளிச்சுட்டீயா….வாணி தெய்வாக்கு…..நாட்டு சர்க்கரை போட்டு பால் எடுத்துட்டு வா….’…வாணியிடம் சொல்லிவிட்டால்…. ”இன்னும் குளிக்கலைக்கா…..” … ‘பால் சாப்பிட்டு குளிச்சுட்டு வா….காலை சாப்பாடு ரெடியா இருக்கும்…..என வள்ளி, ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது…..தண்டோரா சத்தம் கேட்டது…..

“நாளை மறுநாள்….பஞ்சாயத்து கூடுது….ஊர் மக்கள், தவறாமா கலந்துக்கொள்ள வேண்டும்…..”என முத்தையாவின் வீட்டு வாசல் முன் தண்டோர அடித்துகொண்டு சொல்லிச்சென்றான்…….ஒருவன்…..”

 

                துருவங்கள் தொடரும்…………………..

 

Advertisement