Advertisement

              என்னை தந்தி்டுவேன் 9

“மணி ஆறை நெருங்கும் நேரம் ஹீராவின் ஆபிஸிற்கு வந்தான் கபிலன்… இன்று எப்படியாவது அவளை வெளியில் அழைத்து சென்று அவளின் மனதை புண்படுத்த வேண்டும்.” என நினைத்துகொண்டே ஹீராவின் கேபினில் நுழைந்தான்.

“கபிலன் வருவதைகூட அறியாமல்… ஜன்னல் வழியில் தெரிந்த வானத்தை வெறித்துப்பார்த்து கொண்டிருந்தால்… அவள் சிந்தனையில் முழுவது ரோஹித்தின் நினைவை மட்டுமே.”

“சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து… நிலவு அதன் வேலையை சரியாக செய்வதையும் தன நினைவுகளும் அது போல் தானோ.” என அவள் நினைத்துகொண்டிருக்கும் வேளையில் கபிலன் ஹீராவின் அருகில் சென்றான்.

“ஹீராவின் தோலில் கை வைக்கும் போது சரியாக அவள், அவன் புறம் திரும்பினால். திடீரென்று தன் முன்னால் நிற்க்கும் கபிலனை பார்த்ததும் அவள் பயந்துவிட்டால்.”

“இப்படி தான் அனுமதி கேட்க்காம வர்ரதா…” கோவமாக பேச

“ நான் எதுக்கு அனுமதி கேட்க்கனும்… நீ என் வருங்கால மனைவி”

“அப்படினு நீங்க இன்னும் நினைச்சுட்டு இருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை…”

“எனக்கு உங்க மேல எந்த ஆசையும் இல்லை…”

“ஆனா எனக்கு இருக்குதே… உன் மேல”

“ நானே நொந்து போயிருக்கேன்… ஏன் இப்படி என்னை வதைக்கிறேங்க…”

“சரி இதெல்லாம் விடு… வா வெளிய போயிட்டு வரலாம்… நைட் டின்னர் என்கூட ஒகே வா”

“என்னால முடியாது… லக்‌ஷ் எனக்காக காத்திட்டு இருப்பா…”

“பரவாயில்ல… அவளுக்கு போன் பண்ணி சொல்லு என்கூட டின்னர்க்கு போகபோறேன்னு.”

“முடியாது…”

“ உன்னை இப்படியெல்லாம் கூப்பிட்டா வரமாட்ட…” அவன் போனை எடுத்து பாட்டிக்கு அழைத்து விபரத்தை சொன்னான்.

“ என்ன சொன்னாராரோ… அவன் கையில் இருந்த போன் ஹீராவின் புறம் நீட்டப்பட்டது.”

“பேசு… உன் பாட்டி தான் உன்கிட்ட பேசனுமா..”

“அவளோ, போனை வாங்கி காதில் வைத்தால்… ஒரு  நிமிடம் கூட ஆகிருக்காது… அவளோ “ நான் அவங்க கூட வெளியே போறேன்” என்ற வார்த்தை அவள் வாயில் இருந்து வந்துவிட்டது.

“இவனிடம் போனை கொடுத்துவிட்டு அவளின் பெர்சனல் அறைக்கு சென்று ரெடியாகி வந்தால்.”

“ இனி எல்லாத்துக்கு பாட்டி தான் … நான் சொல்லறதை நீ கேட்க்கலைனா.” அவளிடம் கிண்டலாக சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

“அவளோ, அமைதியாக பின்னே சென்றால்…”

“கேண்டில் லைட் டின்னர்… அழகாக இருந்த அந்த இடம் மெழுவர்த்தியின் வெளிச்சத்தில் இன்னும் அழகாக இருந்தது…”

”ஏற்கனவே புக செய்திருந்த டேபிளுக்கு அவளை அழைத்துச்சென்றான். எதிர் எதிர் பக்கமாக அமர்ந்தனர் இருவரும். அந்த மெழுவர்த்தியின் வெளிச்சத்தில் ஹீராவின் அழகு இன்னும் அதிகமாக இருந்தது.”

“அவனோ, அந்த இடத்தையும், அவளையும் ரசிக்க ஆரம்பித்தான். ஆனால் அவளின் கவனத்தில் இது எதுவும் இல்லை என்ற நினைவில் இருந்தால்.”

“அவளுக்கு இது போல் கேண்டில் லைட் டின்னர் மிகவும் பிடிக்கும். ஆனால் அது ரோஹித்துடன் இருக்கும் போது மட்டுமே. கடைசியாக அவனுடன் சென்ற கேண்டில் லைட் டின்னர் இப்பொழுது நினைவுக்கு வந்தது.”

“அவனுக்கும் பிடித்தையும், அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் சேர்த்தே ஆர்டர் செய்தான்.”

“அவளால் கொஞ்சமும் சகித்து கொள்ள முடியவில்லை… பிடித்த ஒருவனுடன் தான் சென்ற விருந்தை விட. பிடிக்காத ஒருவனுடன் இப்பொழுது வந்திருக்கும் விருந்து அவளுக்கு கசந்தது.”

“ஆர்டர் செய்த உணவுகளை அலந்துகொண்டே இருந்தாளே தவிர ருசிக்கவில்லை… அவனும் , அவள் சாப்பிடுவாள் என எதிர்ப்பர்க்க அவளோ ஒரு வாய்கூட சாப்பிடவில்லை. இதற்க்கா அவளை அழைத்து வந்தான்.”

“இப்போ நீ சாப்பிடுறையா… இல்லையா ஹீரா” அவனின் சத்ததில் கொஞ்சமாய் சாப்பிட ஆரம்பித்தால்.

“பிடிசிருக்கா…” என அவன் கேட்க.

“ஹான்… என்ன… பிடிச்சிருக்கா…” தன் நினைவில் இருந்து விடுபட்டவளாய் கேட்டால்.

“இந்த டின்னர் பிடிச்சிருக்கா…”

”பிடிக்கலை..”

“ஏன்…”

“எனக்கு பிடிச்சவங்ககூட சாப்பிட்டா தான் எனக்கு பிடிக்கும். உங்க கூட இல்லை”

“ஆனா எனக்கு பிடிச்சவ நீ தானே”

“அதுக்கு…”

“உனக்கும் பிடிக்கனும் ஹீரா..” அழுத்தமாக சொன்னான்.

“பிடிக்காததை பிடிக்கலைனு தான் சொல்லுவாங்க” என வெடுகென அவனிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றால்.

“அவள் எழுந்து சென்றதை அவமானமாக எண்ணிக்கொண்டான். விடமாட்டேன் ஹீரா… உன்னை எப்படி பழிவாங்கனும் எனக்கு தெரியும்” அவன் நினத்துகொண்டே கிளம்பினான்.

“ஹீராவை வீட்டில் இறக்கி விட்டதும் அவன் கிளம்பிவிட. அவளோ பயத்துடன் நடந்துகொண்டே அவளின் அறைக்கு சென்றால்.”

“அவளின் அறையில் இருந்த லக்‌ஷ், அக்காவின் வருகையை உணர்ந்து அவளின் அருகில் சென்றால்…”

“அக்கா… என்னாச்சு… நைட் எப்பவுமே நாம ஒன்னாதான சாப்பிடுவோம் இன்னைக்கு மட்டு ஏன் சீக்கிரமா வரலை..”

“தங்கை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் குளியல் அறைக்குள் புகுந்துகொண்டால்.”

“என்னாச்சு அக்காவுக்கு… ஏன் இப்படி இருக்காங்க…”

“அக்கா வீட்டுக்கு வந்தாச்சு… கொஞ்சம் அப்செட் அஹா இருக்கா…” என ரோஹித்துக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால்.

“அவனோ, “என்னாச்சுனு கேளு”

“ஒகே”

”ரோஹித்தின் மனநிலை கொஞ்சம் சமன் பட்டு இருந்தது. காரணம், லக்‌ஷிடம் அனைத்து உண்மையை தெரிந்துகொண்டது தான். சிறு வருத்தம் என்றால், ஹீராவே இந்த உண்மையை சொல்லிருந்தால் அவனே அதற்க்கான தீர்வையும் கண்டுபிடித்திருப்பான்.”

“இரவு பத்து மணி… ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு வானத்தில் இருந்த பௌர்ணமி நிலவை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.”

“ஹீராவிற்க்கு பௌர்ணமி நிலவு என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அந்த நிலவை ரசிக்க… அவனோ, அவளை ரசித்துகொண்டிருப்பான்.”

“ஏன் டி… காதலன் பக்கத்துல இருக்கேன். என்னை ரசிக்காம… தூரத்துல இருக்குற அந்த நிலாவ ரசிக்கிற…” அவளின் கேட்க.

“எனக்கு ரொம்ப பிடிக்கும் ரோஹி… அதுவுமில்லாம நிலா தூரத்துல இருக்கு, ஆனா நீங்க என் பக்கத்துல தானா இருக்கீங்க…”

“அப்போ நானும் தூரமா போறேன் போ…” என அவன்  கோவமாக எழுந்து சென்றுவிட.

“அவளோ, அவனின் கோவத்தை எப்படி போக்குவது என தெரியாமல் இருப்பாளா?… அவனின் காதலி.”

“ரோஹி… கோவமா…” அவன் அருகில் சென்று அமர.

“ஆமா… உன்னை ரசிக்க நான் இருக்கேன்… அப்போ ஏன் நீ நிலாவ ரசிக்குற…”

“இப்போ நீங்க இருக்கீங்க… ஆனா நான் விலகி போயிட்ட அந்த நிலா தான் என்கூட இருக்கும். நீங்க இருக்கமாட்டீங்க.”

“ நீ எதுக்கு விலகி போகனும்…” அவளின் பதிலில் இவன் கேள்வி வைக்க.

“ நான் தான் சொன்னேல.. நம்ம காதல் என் வீட்டுக்கு இன்னும் தெரியாது… அடுத்து எனக்கு ஒரு தங்கை இருக்கா அவளை நான் நல்லா பார்த்துகனு்ம் அதான் அப்படி சொன்னேன்”

“ நான் உங்ககூட இல்லாம போன இந்த நிலா தான் நான்… எப்போ எல்லாம் என்னை நினைக்குறேங்களோ அப்போ எல்லாம் இந்த நிலவா நினைச்சுக்கோங்க.” என்றோ ஒரு நாளின் சொன்னதை இப்பொழுது நினைவு கூர்ந்தான்.

“ நான் நிலாவ ரசிச்சா.. நீங்க என்னை எப்படியெல்லாம் ரசிப்பேங்கனு எனக்கு தெரியாதா என்ன.” 

“உண்மை தான்… உன்னை….” அவளை தன் கை சிறையில் அடைக்க… அவளோ அவனை இதயச்சிறையில் அடைத்துவிட்டால்.”

“இன்றளவிலும் அவளுடன், அவன் கழித்த பொழுதுகள் மறக்க முடியாதவை தான். ஒரு காதலனின் புரிதல் தான், அந்த காதலிக்கு தேவையாய் இருந்தது.”

“குளியல் அறையில் இருந்து வெளிப்பட்ட ஹீராவிடம், “அக்கா ஆர் யு ஒகே”

“ஒன்னுமில்ல லக்‌ஷ்… ஐம் பைன்… நீ சாப்பிட்டய..”

“ம்ம் சாப்பிட்டேன்க்கா.”

“சரி போய் தூங்கு…”

“ம்ம்ம் சரிக்கா…”

“படுத்தவுடன் உறங்கிவிட்ட ஹீராவை பார்த்துகொண்டே இருந்தால் லக்‌ஷ்.”

“இன்று காலையில், ரோஹித்தை சந்தித்தையும், அவனிடம் கூறிய உண்மைகளையும் நினைத்தால்.”

“கடைசியாக, ரோஹித் லக்‌ஷிடம் சொல்லி சென்றதையும் நினைத்துகொண்டால்.”

“ஒரு விலங்க்கு இருக்கும் அன்பு கூட சில மனிதர்கள் வியக்கும் வண்ணமாய் இருக்கும் அது போல தான் ஹீராவின் அன்பும், அவளின் செல்ல தங்கையும்.”

“பிறந்தது முதல் தங்கையை பாதுக்காப்பாக பார்த்துகொள்ளும் ஹீராவின் பாசத்தில் அவளின் குடும்பம் மெய் சிலிர்த்து தான் போனது.”

“லக்‌ஷின் பசி அழுகையை கூட துள்ளியமாக கவனிக்கும் அளவுக்கு ஹீராவின் பாசம் இருக்கும்.”

“ நாள் முழுவதும் தங்கையை பார்த்துகொள்ளும் ஹீரா. யாரிடமும் லக்‌ஷை கொடுக்க மாட்டாள். இதை கவனித்த சுப்த்ரா, ஜெகதீஸிடம் சொன்னார்.”

“அவரோ, நான் சொன்ன ஒரே காரணத்துக்காக  தான் ஹீரா. லக்‌ஷ் மேல ரொம்ப பாசமா இருக்கா… அவளோட பாசமும், தைரியமும் லக்‌ஷ இன்னும் அதிகமா பார்த்துக்கனும் தோணும். நீ ஏன் பொஸஸிவ்னஸ்னு நினைக்குற.”

“ஹீராவும், தந்தையின் வழிக்காட்டுதலில் பள்ளி முதல் கல்லூரி வரை அவளின் நாட்கள் அழகாக சென்றது. அந்த துயர சம்பவம் நடக்கும் வரை ஹீரா மகிழ்ச்சியாய் இருந்தால்.”

“யாரிந்த கபிலன்…”

“கபிலன்… யாரு அவன்…”

“ஹீராவ கல்யாணம் பண்ணிக்க போற்வன்.”

“என்ன ரோஹித் சொல்லுற…”

“ஆமா… லக்‌ஷ் தன்னிடம் சொன்னதை அவன் திருப்பி, தன் தம்பியிடம் சொன்னான்…”

“ரொம்ப கஷ்டமா இருக்கு, இவ்ளோ கஷ்ட்டத்தை ஒரு பொண்ணு தாங்கிருக்கா…”

“ஆமாம்…”

“இப்போ அந்த கபிலன் என்ன செய்ய போறோன்.”

“ஹீராவ கல்யாணம் செஞ்சு, அவளை பழிவாங்க போறான். அதுவுமில்லாம அவனோட பெர்சனல் ப்ரப்லத்து இவதான் காரணம்னு நினைச்சுட்டு இருக்கான்.”

“அது என்னனு எனக்கு தெரிஞ்சா போது ஹீராவ நான் காப்பாத்திருவேன்.”

“ நானும் அதுக்கு ஹெல்ப் பண்ணுறேன்…”

“ம்ம் சரி ரோஹன்… தாத்தா இப்போ எப்படி இருக்காரு… நான் ஹாஸ்பிட்டல் பக்கமே போகலை, இரண்டு நாளாச்சு…”

“இப்போ ஒகே, ஆனா அவரோ அத்தைய பார்க்கனும் ஆசைப்படுறாரு. அவருக்கு தெரியாதுல அத்தையும், மாமாவும் இப்போ உயிரோடு இல்லைனு”

“ம்ம் ஆமாம்… எல்லாம் நல்லபடியா முடியட்டும்… அதுகடுத்து எல்லாம் உண்மையும் அவருக்கு சொல்லலாம்.”

“ரோஹித் தனது அறைக்கு செல்ல முற்ப்படும் போது, ரோஹன் அவனை தடுத்தான்…”

“என்ன…” ரோஹித் கேட்க

“அது… அவ எப்படி இருக்க…”  ரோஹன் அவனின் காதலியை பற்றி கேட்டான்

“யாரு…”

“அதான் லக்‌ஷ்…”

“ம்ம் நல்லா இருக்கா, ஆனா நீ தான் என் தம்பினு தெரியாம இருக்கா”

“அவகிட்ட இன்னும் நான் என்னைப்பத்தி சொல்லலை.”

“தெரியுது…”

“எல்லாம் நல்லபடியா முடியட்டும் ரோஹன்… ஹீரா பேச்சை லக்‌ஷ் கேட்க்காம இருக்கமாட்டா…” ரோஹித் சொல்லிவிட்டு சென்றான்.

“ம்ம்ம் சரி…”

“என்ன, அவனை பத்தி எதுவும் தெரிஞ்சதா..”

“சார்… அவங்க ஒரு பையன்கூடஒரு வாரம் ஒன்னா இருந்திருக்காங்க… ஆனா அந்த பையனை பத்தி அவங்க இருந்த ஏரியாவுல கேட்டா… ஒன்னும் தெரியலைனு சொல்லுறாங்க.”

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க… நான் எல்லா டீடைல்ஸும் கலெக்ட் பண்ணிட்டு உங்ககிட்ட வரேன் சார்.”

”சீக்கிரம்… இல்லைனா உன்னை கொன்னுடுவேன்.” எரிச்சலில் கையில் இருந்த போனை ஹீராவின் போட்டோவில் எரிந்தான்.

“அந்த போட்டோவில், கபிலனை கழுத்தை கட்டியணைத்த படியிருந்த ஹீராவின் விழியில் காதல் அழகாக அவனை பார்த்தபடி இருந்தது.”

“என்னைவிட்டு எவன் கூட நீ இருந்த ஹீரா.” அந்த அறையில் உரக்க கத்தினான்.

                                                         தொடரும்………….

Advertisement