Advertisement

            என்னை தந்திடுவேன் 8

”ஏன் அமைதியா வர்ர ஹீரா…” கபிலன் கேட்க.

“அதற்க்கு பதில் சொல்லாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தால்.”

“ஹீரா, நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்…”

“அதற்க்கும் அவள் பதில் பேசாமல் அதிமுக்கியமாக வேடிக்கை பார்ப்பது தான் என்பது போல் இருந்தால்.”

“ஓரமாக காரை நிறுத்தியவன், அவள் புறம் திரும்பினான்.”

“கார் நின்றதுகூட அறியாமல் கண்ணை அசைக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பளை, கை பிடித்து அவனைப்பார்த்து திருப்பினான்.”

“அவனின் தொடுகையை உணர்ந்தவள், வேகமாக அவன் கையை தட்டிவிட்டு… மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால்.”

“உனக்கு என்ன பிரச்சனை ஹீரா…”

“ நீங்க தான்”

“ நான் என்ன பண்ணேன்… காதலிச்சவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறது தப்பா.”

“தப்பில்லை… ஆனா நீங்க காதலிச்ச பொண்ணு நான் இல்லை, அது தான் தப்பு.”

“ நீ என் ஹீரா… அப்புறம் எப்படி நான் காதலிக்கிற பொண்ணு நீ இல்லைனு சொல்லுற.” என அவன் கேட்க,

“அது… என சொல்ல போனவள், வேண்டாத நினைவுகள் அவள் மூளையில் வந்து சென்றது.”

“உண்மையை எப்போது சொல்லாத டீ… அவனுக்கு உண்மை தெரிஞ்சா முதல் ஆபத்து அவனுக்கு தான்… வாழ்க்கையில அவனுக்கு எந்த ஆபத்து வரக்கூடாதுனு தான் நான் இந்த வலையில வேணுமுனே சிக்கிட்டேன்.”

”என்ற குரல் இன்னும் அவள் நினைவில் மறக்க முடியாத நாளையும், நினைவையும் எப்படி அவள் வெளியில் சொல்லுவாள்.”

“தான் யாரின் மீது அன்பு வைத்தாளோ அவர் மீது அல்லவா சொல்லக்கூடாதென்று அவள்,  தன்னிடம் சத்தியம் வாங்கிவிட்டாளே.” ஹீரா இப்பொழுது அவளின் உயிராய் இருந்தவளை நினைத்து வருத்தம் கொண்டால்.

“என்ன பாதில நிறுத்திட்ட… சொல்ல வந்ததை சொல்லு ஹீரா…”

“ஒன்னுமில்லை… என்னை ஆபீஸ்ல விடுங்க… எனக்கு வேலை அதிகமா இருக்கு…” மெதுவான குரலில் அவனிடம் பேசினால்.

“அவளின் மெதுவான குரலில் தன்னை மறந்து மகிழ்ச்சியில் காரை எடுத்தான்.” முதல் முறையாக அவனிடம் தன்மையாக பேசியிருக்கிறால் இது போதாத அவனுக்கு அன்று முழுவது அதை நினைத்தே வாழ்வான். இவள் இப்படி தன்னிடம் பேச வேண்டும் என்று தானே அவனும் ஆசைப்பட்டான்.

“கம்பெனியில் இறக்கிவிட்டவன், அவள் அருகில் வந்தான். அவள் என்ன என்பது போல் பார்க்க.”

“இன்னைக்கு ஈவ்னிங் என்கூட வெளிய வருவியா… கொஞ்சம் ரிலாக்ஸா பேசனும் உன்கிட்ட.” அவன் கேட்க.

“அவளோ, முடியாது… உங்க கூட வெளிய வர்ரதுக்கு நான் ஒண்ணும் உங்க மனைவி இல்லை. என் கணவனோட தான் நான் வெளியே போவேன்…” மீண்டும் பழைய ஹீராவாய் கம்பீரமாய் பேசிவிட்டு சென்றால்.

“எங்கு போனாலும் நீ என்கிட்ட தான் வரணும் ஹீரா… ஏன்னா நான் தான் உன் முதல் விரோதி.” கொஞ்சமும் காதல் இல்லாத அவனின் பார்வை இன்னும் அவளை பார்த்துகொண்டிருந்தான்.

“தன்னை  குரோதத்துடன் பார்க்கும் ஒரே ஆள், அவன் மட்டுமே… ஆனால் அவனால் தன்னை சிறு வேதனை கூட கொடுக்க முடியாது. அப்படி இருந்தும் ஏன் அவன் என்னை வதைக்கிறான்.” அவனை திரும்பியும் பாராமல் அவள் வேகமாக அவளின் அறைக்கு சென்றால்.

“என்ன டீ இவ்வளவு சந்தோஷமா இருக்க… உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சா…” மேகவி அவளை வம்பிழுக்க.

“அப்படி இருந்தாலும் எனக்கு ஹாப்பி தான்… ஆனா அது இல்லையே…” அவளுக்கு புதிர் போட்டால்.

“அப்படி என்ன உனக்கு இன்னைக்கு ஹாப்பியான விஷயம் நடந்திருக்கும்… ம்ம்ம்… மேகவி தாடையில் கைவைத்து யோசிக்க…” தோழியின் யோசனையில் சிரித்துகொண்டவள்.

“அவள் தலையின் கொட்டிவிட்டு, ‘என் அக்கா, எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க… அது தான் எனக்கு சந்தோஷமான விஷயமே.”

“அப்போ, எனக்கு ட்ரீட் வேணுமே… அக்கா வந்துட்டாங்க இனி என்னை கண்டுக்கமாட்ட… அதுக்கு தான்.”

“கண்டிப்பா… இவ்வளவு நாள் என் அக்காவுக்காக தான் நான் காத்திருந்தேன். வாரம் ஒரு நாள் மட்டுமே என் அக்கா கூட இருக்கனும்னு பாட்டி ஆர்டர் போட்டுச்சு. ஆனா அவங்களே அக்காவ வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க.” என அக்கா வீட்டுக்கு வந்ததை சொல்லிமுடித்தால்.

“மேகவியும், அக்காவை பார்ப்பதற்க்கு ஒரு நாள் வீட்டுக்கு வருகிறேன் என சொல்லிகொண்டு. இருவரும் படிப்பில் மூழ்கும் நேரம் லக்‌ஷை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக என ஒரு மாணவன் அவளிடம் சொல்லிவிட்டு சென்றான்.”

“யாரு டி என்னை பார்க்க வந்திருப்பாங்க…”

“ஆமா டீ… நீ ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே…” அவள் தோழி, லக்‌ஷை கலாய்க்க. லக்‌ஷ் முறைத்தை முறைப்பில் அமைதியானால் மேகவி.

“தன்னை தேடி யார் வந்திருப்பார் என யோசித்துகொண்டே சென்றால்.”

“யார் நீங்க என்னை தேடியா வந்திருக்கீங்க.” தன் முன் முதுகு காட்டி நின்றவனை பார்த்து கேட்டால்.

“அவளின் நினைவில் மூழ்கி இருந்தவனை ஒரு குரல் கலைத்தது.”

“தன் முன், நின்றவளை ஒரு கணம் அசையாமல் பார்த்திருந்தான் ரோஹித். ஹீராவின் தங்கை என சொன்னாலும், அக்காவின் முக சாயல் கொஞ்சமும் அவளிடத்தில். ஆனால் அவள் தான் ஹீராவின் தங்கை லக்‌ஷனா.”

“இவனின் முகத்தை வேறு எங்கோ கண்டது போல், லக்‌ஷின் நினைவுகள் தோன்ற. அது உண்மை தான் என சொல்லாமல் சொன்னான் ரோஹனின் அண்ணன் ரோஹித்.”

“ ஹாய்… ஐம் ரோஹித்… ஏ.ஆர்.எம் இண்டஸ்ட்ரீஸோட எம்.டி. நான் உங்களை பார்க்க தான் வந்திருக்குறேன் லக்‌ஷனா.”

“என்னை பார்க்க எதுக்கு…” அவள் புரியாமல் பார்த்தால்.

“ஹீரா…” அவனின் ஒற்றை கேள்வியில் அவள் பதில்.

“என் அக்கா தான் அவங்க… அவங்களை பார்க்க நீங்க கம்பெனி போயிருக்கலாமே…”

“போயிருக்கலாம் தான்… ஆனா சில பல உண்மைகளை நான் தெரிஞ்சிக்கனும்.”

“ நீங்க யாருனு எனக்கு தெரியலை… என்ன உண்மை தெரியனும்.” அவள் புரியாமல் அவனை பார்த்தால்.

“ நான் ஹீராவோட காதலன்… ஹீரா என்னுடைய காதலி…” அவன் பாதி தான் சொல்லிருப்பான் அதற்க்குள் அவள்.

” ஐ….. அப்போ மாமானு சொல்லுங்க மாமா… அக்காவ காதலிக்கவும், கல்யாணம் பண்ணவும் நீங்க கொடுத்து வச்சுருக்கனும். என் அக்கா ரொம்ப நல்லவங்க, பாசமானவங்க… அன்புக்கு அன்னை தெரசானா… அடுத்து என் அக்கா தான்.” என துள்ளிக்குதித்துக்கொண்டு அவனின் கையை பிடித்து கை குலுக்கினால்.

“அவளின், மகிழ்ச்சியில் அவனுக்குமே சந்தோஷம் தான். ஆனால் அவள் அவனுக்கு கிடைத்தால் மட்டுமே முழு சந்தோஷம் அதுவரையில் அவன் சந்தோஷத்தை வெளியில் காட்டமாட்டான்.”

“ஆனா, உன் அக்காவுக்கு என்மேல ஒரு துளியாவது காதல் அவள் மனசுல இருக்கானு எனக்கு தெரியனும் லக்‌ஷ்…” அவனின் கேள்வியில் அவள் அதிர்ந்தால்.

“என்ன சொல்லுறீங்க மாமா…”

“ஆமா… உன் அக்கா மேல நான் மட்டும் தான் காதல் வச்சுருக்கேன். ஆனா அவ என் மேல உண்மையா காதல் வச்சுருந்தானா அவளை பற்றி உண்மைய ஏன் என்கிட்ட மறைக்கனும். என்கிட்ட அவள் சொல்லாம கொல்லாம ஏன் போகனும். முக்கியமா அவளுக்கு என்ன பிரச்சனை…” அவன் கேட்க.

“என் அக்காவுக்கு பிரச்சனையே அவள் ஜெகதீஸ்வரன் பொண்ணுன்றதைவிட, கோடீஸ்வரன் ஜெகதீஸ்வரன் பொண்ணு தான் அவளுக்கு முக்கிய பிரச்சனை.”

“என்ன சொல்லுற லக்‌ஷ்.”

“ஆமாம்… மாமா… என கடந்த காலத்தை கூற ஆரம்ப்பித்தால்.”

“ராஜேஷ்வரன் – ராஜலக்‌ஷ்மி தம்பத்திக்கு ஒரு மகன், ஒரு மகள்… நடுத்தர வசதி குடும்பம் அவர்களது. ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிலே கோடீஸ்வர் குடும்பம் என்றால் அது ஜெகதீஸ்வரன் குடும்பம் தான் அந்த அளவிற்க்கு உயர்த்தி கொண்டுவந்ததில் இருவருக்கு பங்கு உண்டு. முதல் ஜெகதீஸ்வரன், அடுத்து ஹீராஜெகதீஸ்வரன்.”

“ஜெகதீஸ்வரனும், சுப்த்ராவும் காதலித்து மணம்முடித்தவர்கள். திருமணத்திற்க்கு அடுத்து அவர்களின் குடும்பத் தொழில் கொஞ்சம் நலிவடைந்தாலும். சிறிது தளராத ஜெகதீஸ்வரன் அடுத்த வேலைகளில் மூழ்கினார். இதில் சுபத்ராவை கண்டுகொள்ளவில்லை.”

“முதலில் வாடிக்கையாளார் தயக்கம் காட்டினாலும். அவரின் உழைப்பை பார்த்து ஒவ்வொருவரும் அவர்களின் தொழிலின் வாடிக்கையாளார் அதிகமாகிவிட்டது.”

“குறுகிய காலத்தில் அவர்களின் தொழில் முன்னுக்கு வந்தது. தொழில் சாதித்த அவரால், வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை. ஆம், குழந்தை பிறப்பு அவர்களுக்கு தள்ளிப்போனது.”

“அவர்கள் வருத்த அடையவில்லை. ஆனால் ஜெகதீஸ்வரனின் தாய் மிகவும் வேதனை கொண்டார். கிட்டதட்ட பத்து வருடம் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு வரமாய் வந்தவள் தான் ஹீரா.”

“ நண்பரின் வீட்டு விஷேஷத்திற்க்கு சென்றுவிட்டு, திரும்பிகொண்டிருக்கு போது தான் அந்த விபத்து ஏற்ப்பட்டது. அவர்களின் காருக்கு முன்னால் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. எதிர்பாரமல் அந்த கார் மீது ஒரு லாரி மேதியதால் அந்த கார் சுக்கு நூறாக கிடந்தது. அந்த விபத்தை பார்த்துவிட்டு பதறி போய் அதன் அருகில் சென்று பார்த்தார் ஜெகா.

“ அதில் இளம் தம்பதியினர் உயிரற்ற நிலையில் இருந்தனர். அதை பார்த்த சுபத்ராவிற்க்கு மயக்க நிலை ஏற்ப்பட்டது. அந்த காரில் பின் பகுதியில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, அந்த மயக்க நிலையிலும் அவர் காரின் பின் பகுதிக்கு அருகில் சென்றார். அந்த குழந்தைக்கு கொஞ்சம் அதிகமாக அடிபட்டு இருந்தது. ஆனால் அந்த தம்பதிகள் என்ன புண்ணியம் செய்தார்களோ, அந்த குழந்தை உயிர்பிழைத்திருந்தது.”

“உடைந்த கண்ணாடி வழியே அந்த குழந்தையை, எடுக்கும் போது அவரின் கை கண்ணாடி கிழித்து ரத்தம் வந்தது. அதை பொருட்படுத்தாது அந்த வழியுடனே, குழந்தையை கையில் ஏந்தினார். ஏதோ, தான் பெற்றெடுத்த குழந்தையை ஏந்துவது போல உணர்வு.”

“ஆம்புலன்ஸ்க்கு, போன் செய்துவிட்டு மனைவியின் அருகில் வந்தவர். மனைவியின் கையில் ஒரு குழந்தை ரத்த கறையுடன், இருப்பதை பார்த்தவர் அவருக்கும், அதே போல உணர்வு.”

“ஆனால் என்ன இருந்தாலும் இது வேறு ஒருவரின் குழந்தை. இதை சொந்தம் கொண்டாட வேறு யாராவது வருவார்கள். தன் மனைவி தான் நினைப்பது போல் மனைவியும் நினைத்திருந்தால். அவளிடம் பேசி புரியும் படி சொன்னால் அவள் ஏற்றுக்கொள்வாள்.” என எண்ணியவர் குழந்தையுடம் மருத்துவமனைக்கு சென்றார்.

“மருத்துவர்களோ, அந்த தம்பதியின் உயிர் அங்கயே பிரிந்துவிட்டது. குழந்தைக்கு லேசான சிறாய்ப்பு, வலி மருந்தும் கொடுத்திருப்பதால் குழந்தை தூங்க்கிக்கொண்டிருப்பதாய் கூறிவிட்டு சென்றார்கள்.”

“தன் போலீஸ் நண்பன் உதவியும் இறந்தவர்களின் விலாசமும், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவகள் என்பதையும் விசாரித்தார்.”

“அந்த இளம் தம்பதியினரை பற்றி விசாரித்ததில் காதல் கல்யாணம் முடித்து யாரின் துணை இல்லாமல் தனியே வாழ்ந்தவர்கள். இப்பொழுது தான் குழந்தை பிறந்திருக்கிறது, எதிர்பாராமல் நடந்த விபத்துக்கு அவர்களின் குடும்பத்துக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது. ஆனல் இந்த குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என குழப்பம் ஏற்ப்பட்டது.”

“குழந்தையின் அருகிலேயே இருந்த சுபத்ராவை பார்த்த ஜெகதீஸ்வரன், குழந்தையை தாங்களே தத்தெடுப்பாதாகவும், இந்த குழந்தைக்கு தாய், தந்தையாய் நாங்கள் இருப்போம், என அவரின் போலீஸ் நண்பரிடம் கேட்டுக்கொண்டார்.

“அவருக்கு தெரியுமே, குழந்தை இல்லாமல் தவித்த தவிப்பு. அதும் ஒவ்வொரு கிழமையும் சுபத்ரா கோவில் கோவிலாக செல்வது அவருடைய மனைவியின் மூலம் நன்றாக தெரியும். அந்த வலியும் வேதனையும் இவரும் ஒரு காலத்தில் அனுபவித்தவர் தானே.” என நினைத்துகொண்டு அந்த மருத்துவமனையிலே தாங்கள் தான் அவர்களின் சொந்தம் என கூறி. அவர்களின் இறுதி காரியத்தை ஜெகதீஸ்வரனே முடித்து வைத்தார்.

“ தத்தெடுத்துகொண்டு வீட்டிற்க்கு சென்றனர் குழந்தை சகிதமாய்.”

“வீட்டிர்க்கு குழந்தையுடன் வந்தவர்களை, ஒருவித திகைப்புடன் பார்த்துகொண்டிருந்தனர், ராஜேஷ்வரனும்,ராஜலக்‌ஷ்மியும்.”

”அவர்கள் என்வென்று குழந்தையை பற்றி கேட்க. அவர்கள் முன் விபத்து நடந்தது முதல் குழந்தையை தத்தெடுத்து வரை ஜெகதீஸ்வரன் சொல்லிமுடித்தார்.”

“ராஜேஷ்வரனும், ராஜலக்‌ஷ்மியும் குழந்தைக்கு ஏற்ப்பட்ட பாதிப்பை கேட்டதும் முதலில் வருந்தியவர்கள். அடுத்து குழந்தையை தத்தெடுத்தை சொன்னதும் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் பரம்பரையின் வாரிசாய் அவர்கள் எதிர்ப்பார்த்தது ஆண் குழந்தை தான்.”

“ராஜேஷ்வரனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. குடும்பத்தில் முதல் வாரிசாய் அவர்களுக்கு கிடைத்த பரிசு. அதனால் ராஜலக்‌ஷ்மி வருத்ததை ஒதுக்கி வைத்துவிட்டு அவரும் சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.”

“குழந்தை வந்தது முதல் அவர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரித்தது. அடுத்தடுத்து தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.  ஒரு நல்ல நாளில் அந்த குழந்தைக்கு ஹீரா என பெயர் வைத்தனர் அடுத்த மூன்று வருடங்கள் கழித்து சுபத்ரா கருவுற்றார்.”

“எல்லாம் குழந்தை வந்தது முதல் அனைத்து நல்லதாக நடக்கிறது என ராஜேஷ்வரனும், ராஜலக்‌ஷ்மியும் மகிழ்ச்சி அடைந்தனர்.”

“தான் கருவுற்றதும் பொருட்படுத்தாது ஹீராவின் எல்லா தேவைகளையும் சுபத்ராவே பார்த்துகொண்டார். இதை பார்த்த ஜெக்தீஸ்வரன் வேலையை குறைத்துகொண்டு மனைவிக்கு துணையாய் ஹீராவை அவர் பாதி நேரம் பார்த்துகொண்டார்.”

“ஹீராவின் எல்லா செயலையும் கவனித்துகொண்டும், அவளின் மீது அன்பு வைக்கவும் தவறாத தந்தை என நிரூபித்தார். ஹீராவும் தந்தை மீது அதிகமாய் பாசத்துடன் இருந்தால்.”

”மழையில் நனைவது சுபத்ராவுக்கு பிடிக்காது. ஆனால் மகளின் சந்தோஷத்திர்க்கு மனைவிக்கு தெரியாமல் மகளும், தந்தையும் மழையில் நனைந்தது வேறு கதை.”

“மகளின் ஒவ்வொரு அசைவையும் ஜெகதீஸ்வரனும், சுபத்ராவும் பார்த்துகொண்டே வந்தனர். இந்த நிலையில் தான் சுபத்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது.”

“அடுத்த குழந்தையும் பெண் என்றதும், பெரியவர்களுக்கு வருத்தம் என்றாலும், அதையும் ஏற்க்க ஆரம்பித்தனர். தனக்கு தங்கை பிறந்ததில் அதிக மகிழ்ச்சியடைந்தால் ஹீரா.”

“ஐ… அப்பா, எனக்கு அழகான குட்டி தங்கை வந்துட்டா. என்கூட விளையாட இனி அவளும் இருக்கா இல்லையாப்பா.”

“ஆமாம் குட்டி… இனி நீயும், பாப்பாவும் நல்லா விளையாடனும். பாப்பாவ நல்லா பார்த்தகனும் சரியா குட்டி” மூத்த மகளுக்கு அன்று இருந்த தங்கையின் பாதுக்காப்பாய் அவளை நிறுத்தினார்.”

”சரிப்பா, இனி தங்கைய நானே பார்த்துகிறேன். அவளும், நானும் நல்லா விளையாடுவோம்… அவளை இனி நானே நல்லா பார்த்துகிறேன் நீங்க கவலைப்படாதீங்க.” அந்த சிறு வயதில் தங்கையின் பாதுக்காப்பை உணர்ந்து பேசினால்.

                                            தொடரும்……………

Advertisement