Advertisement

            என்னை தந்திடுவேன் 7

“கையில் இருந்த கடிதத்தையே வெறித்துப்பர்த்திருந்தான் ரோஹித். வாழ்நாள் முழுவதும் எவள் என்னைவிட்டு நீங்க கூடாது என நினைத்திருந்தானோ, அவள் மறுபடியும் அவனைவிட்டு எங்கோ சென்றுவிட்டால். நொடியும் அவளை விலகாது அடைகாத்த கோழி போல் அவளை என் நொஞ்சில் சுமந்தேன். ஆனால் என்னிடம் சொல்லாமல் என்னைவிட்டு சென்றுவிட்டால்.”

“மறுபடியும் கடிதத்தை ஒரு பார்வையிட்டான். அதில் இருந்த சாரம்சம் இது தான்.”

“மறுபடியும் உன்னைவிட்டு நீங்கும் நாள் வந்துவிட்டது. மீண்டும் வருவேன் ஆனால் எப்பொழுது வருவேன் என எனக்கு தெரியாது. நீ என்னகாக காத்திருப்பாயா??? இல்லை என்னை மறந்துவிடுவாயா. என்னுடைய பழையா இடத்திற்க்கு செல்கிறேன், நிலைமை கொஞ்சம் மோசம் தான். முடிந்தால் வேகமாக வந்து என்னை மீட்டு செல்வாயா” அன்புடன் உன் காதலி ஹீரா.

“தாத்தாவிடம் காதலை சொல்லிவிட்டாச்சு, இனி ஹீராவை அவரிடம் அழைத்து செல்லலாம், ஹீராவை பார்த்து அவர் கண்டிப்பாக ஒத்துகொள்வார் தங்களது திருமணத்திற்க்கு. அதனால் மகிழ்ச்சியாய் அவன் வீட்டிற்க்கு நுழைந்தான். அவளின் சத்தம் இல்லாத வீடு வெறிச்சோடி கிடந்தது.”

“கார்டன், பால்கனி, மாடி, பின்பக்கம் உள்ள அவளின் ரோஜா தோட்டம், என அனைத்து இடங்களில் அவளை தேடிவிட்டு வந்தான். எங்கும் அவளின் சுவடுகள் இல்லை. முடிவாக அவர்களின் அறைக்கு வந்தான், அவன் விட்டு சென்ற குறிப்பின் மீது இன்னொரு கடிதமும் இருந்தது. கொஞ்சம் நடுக்கத்துடன் அதை எடுத்தான்.”

“அப்பொழுது தான் உணர்ந்தான் அவள் உணவு மேஜையில் முழு உணவு சாப்பிடாமல் இருந்ததை. ’உணவு அப்படியே இருக்க இவள் எங்கு சென்றால் என யோசித்தான்.”

“கையில் இருந்த கடிதத்தை பிரித்து படிக்க படிக்க அவனின் நாயகி, அவனைவிட்டு தூரமாக சென்றுகொண்டிருந்தால். முழுதாக படித்ததும், தொப்பென்று மெத்தையில் அமர்ந்தான்.”

“அவனின், உயிரும், உடலுமாய் இரண்டறக் கலந்தவள், அவனைவிட்டு நீங்கி சென்றுவிட்டால் என்பதை. தாத்தாவிடம் மகிழ்ச்சியுடன் அவளை அழைத்து வருகிறேன் என கூறிவிட்டு இங்கு வந்து பார்த்தால் அவனைவிட்டு அவள் சென்றுவிட்டால்.”

“அவனுக்கு என்ன மாதிரி உணர்வு என சொல்ல முடியவில்லை. என்னைவிட்டு நீங்கும் அளவிற்க்கு அவளுக்கு அப்படி என்ன வேதனையோ, என்னிடமாது கூறியிருந்தால் நான் அதை சரிசெய்ய முயற்சிப்பேன். ஆனால் அவள் மனதில் இருப்பதை ஒரு நாளும் அவள் மனம்விட்டு பேசியதில்லை, அவளது காதலை தவிர.”

“இனி அவளை நான் எங்கு தேட??? தேடினால் எனக்கு கிடைப்பாளா??? இல்லை… என அவன் மூளை வேறு யோசிக்க. அதை நினைக்காதவனாய் ஹீராவை தேடி செல்ல முடிவெடுத்துவிட்டான்.”

“கார் நின்றதுகூட அறியாமல், அவளின் நாயகனின் நினைவில் இருந்தவளை கலைத்தார் பாட்டி.”

“வீடு வந்திருச்சு ஹீரா… இரங்கு”

“அவளோ, மொத்தம் சோகமும் இவளே வாடகைக்கு எடுத்தவள் போல் காரைவிட்டு இரங்கினால். அப்பொழுது தான் அவளின் தந்தை, தாய் வீட்டுக்கு வந்திருப்பது உறைத்தது. இங்கு எதற்க்கு அழைத்து வந்தார் என யோசனையுடன் அவரை கேட்டால்.”

”எதுக்கு இங்க வந்திருக்கோம், நான் என் ப்ளாட்டுக்கு போறேன்.”

“உன் ப்ளாட்டுக்கு நீ எப்போ போகனும், வரனும் சொல்லுறது நான் தான் நீ இல்லை. இப்போ ஒழுங்க வீட்டுகுள்ள போ, இன்னும் கொஞ்சம் நேரத்துல அக்‌ஷய் வந்திருவான்.”

“கிட்டதட்ட பத்து வருடம் கழித்து அவள் தாய், தந்தை வாழ்ந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறால். அப்பொழுது ஏற்ப்பட்ட சிலிர்ப்பு அவளுள் ஒருவித நம்பிக்கையை கொடுத்தது. இந்த வீட்டில் எல்லா இடமும் அவளுக்கு அத்துபடி. ஒவ்வொரு மூளையிலும், அவள் அன்னையுடன், ஓடிபிடித்து விளையாடின காட்சி அவள் கண்முன் தோன்றியது.”

“தந்தையுடன், கண்னாமூச்சி விளையாடிய பொழுது, அவள் ஒழிந்துகொண்ட இடம் தான் இந்த புத்தர் சிலை. கிட்டதட்ட ஆறடி மனிதனின் உயரம் கொண்டது அந்த சிலை.”

“உணவு ஊட்டும் போது அன்னையிடம் கதை கேட்டுகொண்டே சாப்பிட்ட காட்சி இன்னும் அவள் நினைவுகளில் நீங்கா இடம் கொண்டது. ஊஞ்சலில் தன் ஆறடி கூந்தலை விரித்துவிட்டு வேகமாக ஆடும் அவளை கண்டு மனம்கொள்ளா மகிழ்ச்சியில் இருந்த அவளின் தாய், தந்தையை இன்னமும் மறக்கமுடியவில்லை”

“இவ்வாறு ஒவ்வொரு இடத்தையும் பார்த்து, அதில் ஏற்ப்பட்ட பழைய நினைவுகளில் அவள் இருக்க. அவள் எதிரில் புன்னகை மாறா முகத்துடன் வந்தான் கபிலன்.”

“ நினைவுகளின் பிடியில் இருந்தவள், தன் முன் தோன்றிய, ஒரு உருவத்தின் முன் நடப்புக்கு திருப்பிய ஹீரா. அவனை பார்த்ததும் எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்தது என தெரியவில்லை. பக்கதில் உள்ள அழகான பூச்சாடியை கையில் எடுத்து நொடியும் தாமதிக்காமல் அவன் தலையில் போட்டு உடைத்தால்.”

“பூச்சாடி சத்தத்தில் அங்கு வேலை செய்த அனைவரும் வந்துவிட்டனர், அவளின் பாட்டியும் தான். காளி தேவியின் மறு உருவாமாய் நின்றுகொண்டிருக்கு ஹீராவை பார்த்து அங்கு இருந்தவர்கள் பயந்துகொண்டு பார்த்திருந்தனர்.”

“பாட்டி சுதாரித்துகொண்டு, அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். அவர் அறைந்ததில் சுவரில் மோதிகொண்டு கீழே விழுந்தால். அவள் கீழே விழுந்ததும், கபிலன் அவளை தாங்குவதற்க்காக அவள் அருகில் சென்று தூக்க முயன்றான். ஆனால் அவளோ,  ‘ உன் கை என்மேல பட்டுச்சுனா, அடுத்த நிமிசம் இந்த ஹீரா உயிரோடு இருக்கமாட்டா கபிலன்’ அவளின் வார்த்தயில் கொஞ்சம் திகைத்தவன். அடுத்த நொடியில் அவளைவிட்டு தள்ளி நின்றான்.”

“என்ன டி… என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… ம்ம்… அவன் என் பேரன் டி, அவன் தலையில பூச்சாடிய போட்டு உடைச்சிருக்க.  நீ வெறும் இந்த சொத்துக்கும், என் மனுக்கும் தான் வாரிசு தவிர. என் பரம்பரைக்கு இல்லை.”

“என் மகளே, அவனை அடிக்கமாட்டா… ஆனா நீ, அவன் தலையில இருந்து இப்படி ரத்தம் வருமளவுக்கு அவனை அடிச்சிருக்க. உன்னை…” என அவளை மீண்டும் அடிக்க பாய்ந்தார்.

“பாட்டி, விடு… அவளை அடிக்க வேண்டாம்… தேவையில்லாம அவளை அடிச்சு நீ டென்சன் ஆகாத… அவ இனி எங்கயும் போகமாட்டா… எல்லா பாதுக்காப்பும் பக்காவா இருக்கு.”

“இங்க பாரு ஹீரா, உனக்கும், கபிலனுக்கு நான் கல்யாண தேதி குறிக்க போறேன். அதுவரைக்கும் நீ நம்ம கம்பெனிய தவிர வேற் எங்கயும் போகக்கூடாது. அக்‌ஷய் கூட காலையில கம்பெனிக்கு போறீயா, அத்தோட ஈவ்னிங் கரெக்ட்டா ஆறு மணிக்கு வீட்டுல இருக்கனும். முக்கியமான மீட்டிங்க்  மட்டும் தான் நீ போகனும். தேவையில்லாம வெளிய இருந்த, உன்னை கம்பெனிக்கு கூட அனுப்ப மாட்டேன்.”

“பாட்டி அவளை அடித்ததை கூட பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால், தனக்கும், கபிலனுக்கு கல்யாணம் என சொல்லும் போது தான் அவளின் இதயம் நின்று துடித்தது. அதற்கடுத்து அவர் என்ன சொன்னார் என்பது, அவரிடமே திரும்பி கேட்டால் தான் அவளுக்கு தெரியும். ஏன்னென்றால் அவள் நினைவு மொத்தமும் அவளின் நாயகன் தான்.”

“பாட்டி, அவள் கம்பெனி விசயத்துல நீங்க தலையிட வேண்டாம். ஏன்னா, கம்பெனி மொத்தமும் அவள் பேருல தான் இருக்கு, அதனால அவள் விருப்பபடி இருக்க விடுங்க. இப்படி டைம் சடுல் போடாதீங்க. என்னை மீறி அவள் கண்ணுக்கூட அங்குட்டு அசையாது.”

“வீட்டிர்க்குள் நுழைந்த லக்‌ஷ், அக்கா கீழே  அமர்ந்தபடி இருக்க, அவள் எதிரில் பாட்டியும், கபிலனும் நின்று எதுவோ கூறுவது போல் இருந்ததை பார்த்தவள். வேகமாக தனது அக்காவின் அருகில் சென்றால்”.

“அக்கா, அக்கா… ஏன் கீழே அமர்ந்திருக்க… எழுந்திரிக்கா… அவளை தாங்கி எழுப்பினால்.”

“எப்போக்கா வந்தா… அய்யோ உன் கன்னத்துல ஏன் இப்படி செவந்திருக்கு… அவள் கேட்க.”

“தங்கையின் பாசத்தில் நினைவில் இருந்து வெளிவந்தவள், ‘ஒன்னுமில்லைமா, அக்கா கீழே விழுந்துட்டேன்… அதான் சிவந்திருக்கு… நீ பயப்பட வேண்டாம் லக்‌ஷ்…” தங்கையை சமாதானம் செய்தால்.

“அக்காவின் பதிலை கேட்டவள், சந்தேகமாக பார்க்க…, பாட்டியின் புறம் திரும்பி, ‘என் அக்காவ எதுக்கு அடிச்சீங்க பாட்டி… அவளை அடிக்கிற உரிமை உங்களுக்கு இல்லை. என் அம்மா, அப்பாக்கு தான் அந்த உரிமை இருக்கு.’  லக்‌ஷின் கேள்வியால் கபிலனும், பாட்டிம் அலட்சியமாக அவளை பார்த்தனர்.

“லக்‌ஷ்… பாட்டிகிட்ட இப்படி எதிர்த்து பேசக்கூடாதுனு நான் சொல்லிருக்கேன்ல. அப்புறம் ஏன் அப்படி பேசுற, நான் தான் கீழே விழுந்துட்டேனு சொல்லுறேன்ல… என்னை நம்பமாட்டியா.”

“இல்லைக்கா… உங்களை நம்பலைனா, நான் என்னையே நம்பாத மாதிரி்க்கா…” அவசரமாய் அக்காவிடம் கூறினால்.

“அப்போ வா… நாம போகலாம்…” தங்கையை அழைத்துகொண்டு அவளின் அறைக்கு சென்றால்.

“கபிலா… எவ்வளவு சீக்கிரம் இவளுக்கும், உனக்கும், கல்யாணாத்தை முடிக்கிறோமோ அப்போ தான் நமக்கு நிம்மதி.”

“ஆமா, அப்போ தான் எனக்கும் நிம்மதி… பாட்டி. இவளை தினமும், காயப்படுத்தனும், சித்ரவதை செய்யனும் தான் நானும் காத்திருக்கேன்.” அவன் மனதில் நினைத்துகொண்டான்.

“எப்போக்கா, வந்த… நீ வர இன்னும் ஒரு மாசம் இருக்குனு என்கிட்ட சொன்ன. இப்போ திடீர்னு வந்திருக்க, அதுவும் நம்ம வீட்டுக்கு.”

“வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சும்மா அதுனால அக்காவும் உன்னை பார்க்க வந்துட்டேன். பொய்யை கூறினால்.”

“ரொம்ப மிஸ் பண்ணேன்க்கா உன்னை… இனி இங்க தான இருப்ப.” லக்‌ஷ் ஒருவித தயக்கத்துடன் கேட்க.

“ஆமாம் இங்க தான் இருப்பேன். என் ப்ளாட்டுக்கு இனி போகமாட்டேன்.”

“ஐ.. ஜாலி… ரொம்ப ஹாப்பியா இருக்குக்கா…” அக்காவை கட்டிகொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தால்.

“ நீ ஃபைனல் இயர் படிக்குற பொண்ணு மாதிரி பிகேவ் பண்ணுமா. இப்படி குழந்தை மாதிரி இருக்க கூடாது, இந்த இயர் காலேஜ் முடிஞ்சா, அடுத்து நீ யூஎஸ் போகனும். அங்கயும் இது போல பிகேவ் பண்ண கூடாது.”

“ நம்ம ஜெ எஸ் இண்டஸ்ட்ரீஸ் பரம்பரையில, இப்படி வெகுளியா இருக்க கூடாது. இப்படி இருந்தா, எல்லாரும் நம்மள ஏம்மாத்திருவாங்க.”

“அக்கா, அதான் நீ இருக்கேல… அப்புறம் என்ன எனக்கு கவலை. நீ  இருக்கும் போது எந்த ஆபத்தும் என்னை நெருங்கவிடமாட்ட. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.” அக்காவின் கன்னத்தை பிடித்து கொஞ்சியபடி இருந்தால்.” அவர்களின் அன்னையும் இப்படி தான் ஹீராவின் கன்னத்தை கொஞ்சியபடியே இருப்பார்.

“ரோஹன், நீ சொல்லுறது ஜெ எஸ், இண்டஸ்ட்ரீஸ், ஜெகதீஸ்வரன் சுபத்ராவா…” அவர் திக்கி திக்கி கூற.

“ஆமாம் தாத்தா… ஏன்”

“சுபத்ரா… சுபத்ரா… என் பொண்ணு, நான் வரமா பெத்து எடுத்த பொண்ணு… என்னை அப்பானு உணரவச்சவ…” என அவர் பேசிகொண்டே தள்ளாடி கீழே விழுந்தார்.

“தாத்தா……. தாத்தா…… என்னாச்சு உங்களுக்கு… இங்க பாருங்க என்னை…” அவரின் கன்னத்தை தட்டினான்.

“ராஜ்… ராஜ்…” அவனை அழைக்க. ‘ பாஸ்… தாத்தாவுக்கு என்னாச்சு” அவனும் பதற

“உடனடியா… ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்க…”

“ஒகே பாஸ்”

“அடுத்த நிமிடம், நகரின் மிகபெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்… அருணாச்சலம்”

“ராஜ், அடுத்து ரோஹித்க்கு அழைக்க… அவனின் அழைப்பை ஏற்ற ரோஹி்த், தாத்தவின் நிலையை கேள்விப்பட்டதும் அடித்து பிடித்து ஓடிவந்தான்.”

“என்னாச்சு தாத்தாவுக்கு, எப்படியாச்சு… சொல்லு ராஜ்..” அவனை போட்டு உலுக்க.

“தெரியலை பாஸ்… ரோஹன் பாஸ்கிட்ட தான் தாத்தா கடைசி வரை பேசிட்டு இருந்தாங்க, அடுத்து அவர் சத்தம் போட்டு என்னை கூப்பிடவும் தான் தாத்தாவுக்கு இப்படியானது எனக்கு தெரியும்” அவன் நிலையை விளக்க.

“ஐ.சி.யு முன் நின்றிருந்த ரோஹனை கண்டதும், கோவம் கண்ணை மறைத்தது. ‘என்ன சொன்ன தாத்தாகிட்ட… சொல்லு, உன்னால தான் தாத்தாவுக்கு இப்படியாச்சு… சொல்லுடா…” என அவன் சட்டையை பிடித்து கேட்டுகொண்டிருந்தான்.

“தெரியலை, ரோஹித்… நான் தாத்தாகிட்ட என் காதலியை பத்தியும், அவங்க குடும்பத்தை பத்தியும் சொல்லிட்டு இருந்தேன்… அப்போ தாத்தா அவளோட குடும்பத்தோட பேர் கேட்டதும் அவருக்கு அதிர்ச்சியாகிருச்சு.”

“அப்புறம் சுபத்ரா… என் பொண்ணு… என்னை அப்பானு கூப்பிட்ட என் பொண்ணு… சொல்லிட்டே கீழே விழுந்தாரு. அதுகடுத்து தான் இப்படி எல்லாம் ஆனது.” சொல்லிமுடித்தான்.

“ நீ காதலிக்குற பொண்ணு குடும்பம் யாரு… ரோஹன்”

“ஜெ.எஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குடும்பத்தை சேர்ந்தவ…”

“இதில என்ன இருக்கு, அப்படி தாத்தா அதிர்ச்சி ஆகுற மாதிரி” அவன் யோசிக்க.

“ நான் அவளோட அக்கா, பேரும், அவளோட அம்மா, அப்பா பேரும் சொன்னேன்.”

“என்ன பேரு”

“ஹீராஜெகதீஸ்வரன், என் காதலியோட அக்கா… அவங்க அம்மா, பேரு சுபத்ரா, அப்பா பேரு ஜெகதீஸ்வரன்” என அவன் சொன்னதும். ரோஹித்க்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“உன் காதலியோட அக்கா பேரு என்ன??” திக்கிக்கொண்டே கேட்க.

“ஹீராஜெகதீஸ்வரன்…”

“ஹீரா… ஹீரா…” மெதுவாக முனுமுனுக்க.

“ரோஹனுக்கோ, ஏன் தாத்தாவும், ரோஹித்தும் இந்த பேரு கேட்டு ஏன் அதிர்ச்சியாகுறாங்க.” அவன் நினைக்க.

“ரோஹி்த்… ஏன் இப்படி திகைச்சு போய் நிக்குற”

“ஹீரா… எங்க இருக்கானு உனக்கு தெரியுமா… ரோஹன்”

“இல்லை… தெரியாது. ஆனா என் காதலியோட அக்கா தான் அவங்க”

”அப்போ உன் காதலிக்கிட்ட என்ன அழைச்சுட்டு போறீயா… ப்ளீஸ் ரோஹன்” ரோஹித் கெஞ்ச.

“சரி… கூப்பிட்டு போகுறேன்… ஆனா ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாம”

“சொல்லுறேன்… ஆனா இப்போ இல்லை”

“ஐ.சி.யு வில் இருந்து மருதுவர் வெளிவந்தார். ‘ தாத்தாவுக்கு எதுவும் இல்லை… சின்ன அதிர்ச்சி, பிபி குறைஞ்சுருச்சு… இனி கொஞ்சம் பாதுகாப்பா பார்த்துக்கோங்க.” என சொல்லிவிட்டு செல்ல.

“இருவரும், தாத்தாவை பார்க்க உள்ளே சென்றனர். இருவரும் அவரின் இருப்பக்கமும் நின்ற்கொண்டு அவரின் கைகளை ஆறுதலாக இருந்தது அவருக்கு.”

“யாரு தாத்தா சுபத்ரா” என ரோஹன் கேட்க.

” அவரோ, எ… எ… என் பொண்ணு.” என சொன்னவர் கடந்த காலத்தில் மூழ்கினார்.

“ஊரில் பெயர் போன குடும்பம், தணிகாச்சலம். அவருக்கு ஒரே மகனான அருணாச்சலம்பிள்ளை. பரம்பரையாக வசதி வாய்ந்த குடும்பம். தணிகாச்சலம், தன்னுடைய ஒரே மகனுக்கு குணவதியான பேச்சிய்யம்மாளை திருமணம் செய்து வைத்தார்.”

“அருணாச்சலமும், பேச்சியம்மாளும் திருமணம் முடிந்ததில் இருந்து மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்துகொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாய் அவர்களின் வீட்டுக்கு முதல் வாரிசாய், ராஜபாண்டியனும், அதற்கடுத்த இரண்டு வருடத்தில் சுபத்ராவும் பிறந்தனர்.”

“பெண்பிள்ளை இல்லாத அவர்களின் பரம்பரையில் சுபத்ரா பிறந்ததும் இன்னும் வசதி படைத்தவர்கள் ஆனார்கள். ராஜாவும் தன் கூடப்பிறந்த தங்கையை தாங்கினான்.”

“குறிப்பிட்ட வருடத்திலும், சுபத்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் அரங்கேறியது. அப்பொழுது தான் சுபத்ரா தான் ஒருவரை விரும்புவதை பெற்றோரிடத்தில் சொல்ல, அவர்கள் முதலில் கோவப்பட்டாலும், பெண்ணின் ஆசைக்கு இணங்க ஜெகதீஸ்வரனையே திருமணம் செய்து வைத்தனர்.”

“ஜெகதீஸ்வரனும், ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம் என்றதால் அருணாசலத்திர்க்கு சிறிது நிம்மதி. பெண்ணின் வாழ்க்கை அவள் விருப்பபடி அமைந்ததால் கொஞ்சம் வருத்தம் கொண்டார்.”

“திருமணம் முடித்த கையோடு, சென்னை சென்றவள். அதர்கடுத்து ஊரின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. தாய் இறந்தர்க்கு கூட வரவில்லை.”

“அவள் தான் வரவில்லை என்று, அருணாசலமும், ராஜபாண்டியனும் சென்னை சென்றார்கள். ஆனால் அவர்கள் இருந்த முகவரிக்கு சென்று பார்த்தால். அங்கு யாரும் இல்லை என அறிந்ததும் அவரின் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.”

“அந்த வேதனையுடனே, மகனின் திருமணத்தையும் நடத்தி வைத்தார். ராஜபாண்டியனுக்கும்,நிர்மலாதேவிக்கும், ஏற்ற ஜோடியாய் இருவரும் திகழ்ந்தனர். அடுத்த வருடமே அவர்களுக்கு இருமகன்கள் அழகாக பிறந்ததனர். அவர்கள் தான் ரோஹித், ரோஹன்.”

“புது கம்பெனி ஆரம்பிப்பதர்க்கு, வெளியூர் சென்று திரும்பிகொண்டிருந்த ராஜபாண்டியனு, அவனது மனைவியும் எதிர்பார விபத்தில் அங்கேயே உயிர்விட்டனர்.”

“இதனை கேள்விப்பட்ட, அருணாசலம் மிகவும் உடைந்து போனார். தான் உயிரோடு இருக்க, என் மகன் சாவதா… என அவர் மனம் உடைந்து போனது. எனக்கு கொல்லி போடுவான் என நான் நினைக்க, அவனுக்கு நான் கொல்லி போடும் நிலையை கடவுள் வைத்துவிட்டார்.” என வேதனையுடன் நின்றார்.

“இரு பேரன்களையும் அவரே வளர்த்து ஆளாக்கினார். ஒருப்பக்கம் கம்பெனி பொறுப்புகளையும், மறுப்பக்கம் பேரன்களின் வாழ்வையும் சரிசமமாக கையாண்டார்.”

“இன்றுளவிளும், சுபத்ராவை நினைக்காத நாள் இல்லை… என்றாவது ஒரு நாள் தன் மகள் தன்னை பார்க்க வருவாள் என அவரும் நினைத்துகொண்டே அவரின் வாழ்க்கையை கடந்த்து வந்தார்.”

“என் மககிட்ட கூட்டிட்டு போடா… என் பேரக்குழந்தைகளை நான் பார்க்கனும் ஆசையா இருக்கு ரோஹன்… என்னை அழைச்சுட்டு போறீயா… “ என சிறு குழந்தை போல் ரோஹனிடம் கேட்க.

“ நான் அழைச்சுட்டு போறேன் தாத்தா. நீங்க கவலைப்படாம இருங்க. உடம்பு குணமானதும் போகலாம்.” அவரை சமாதானம் செய்து தூங்கவைத்தான்.

“வெளியே வந்த இருவரும் ஒருவரின் ஒருவர் முகம் பார்த்து, ‘என்னாலும், சரி ரோஹன் தாத்தாவ அத்தைகிட்ட கூப்பிட்டு போகனும்.”

“ம்ம்ம்… ஆனா அவங்களை எப்படி மீட் பண்ணறதுனு எனக்கு தெரியலை.  லக்‌ஷ் படிக்குற காலேஜ் எனக்கு தெரியும், அதனால நான் அவங்க எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்குறேன்.”

“எதிலும் ஒட்டாத உணர்வுடன் கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தால் ஹீரா. அவளுக்கோ ஒரு நினைவு மட்டுமே இருந்தது அது ரோஹித். இன்னேரம் தனது கடிதம் அவன் கையில் கிடைத்திருக்குமா… இல்லை கோவத்தில் கிழித்துபோட்டு இருப்பானா… கோவம் இருக்க தான் செய்யும். ஆனால் என் நிலையை அவன் கண்டிப்பாக புரிந்துகொள்வான்.”

“அக்கா, இன்னை ஆபீஸ் போகிற வழியில என்னையும் காலேஜ்ல ட்ராப் பண்ணே. உன்கூட கார்ல ட்ராவெல் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. கூப்பிட்டு போறீயா அக்கா” ஆசையாக கேட்டால்.

“அவளின் ஆசையை நிறுவேற்றுவது தானே அவளது கடமையே… ‘சரி, கிளம்பு… உன்னை காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் கிளம்புறேன்.” அவள் சொல்ல.

“லக்‌ஷ்… இன்னைக்கு உன்னை டிரைவர் காலேஜ்ல ட்ராப் பண்ணுவாங்க. நானும், ஹீராவும் ஒன்னா ஆபீஸ் போகப் போறோம்.” கபிலன் சொல்ல.

“இங்க பாருங்க கபிலன் என் தங்கைய நான் தான் காலேஜ்ல விடுவேன். உங்க கூட ஆபீஸ் வர்ரதுக்கு எனக்கு விருப்பம் இல்லை.” அவனின் முகத்தில் அடித்தார் போல கூறினால்.

“இன்னைக்கு நீ என்கூட தான் ஆபீஸ் வர்ர… ஒகே” அவளின் முழங்கையை பிடித்து இது தான் என் முடிவு என்பது போல் அவன் சொல்லிவிட்டு சென்றான்.

                                                  தொடரும்…………………

Advertisement