Advertisement

            என்னை தந்திடுவேன் 6

”தூக்கத்தில் இருந்து விழித்த ஹீரா பக்கத்தில் ரோஹித்தை கைகளால் தேடிக்கொண்டிருந்தால். அவள் கைகளில் அவன் சிக்கவில்லை என்றதும் கண் விழித்துப்பார்த்தால். அவன் அங்கு இல்லை, ‘எங்க போயிட்டான், இன்னேரம் என்னை தூங்கவிடம பண்ணறதுக்குனு பக்கத்துல இருப்பானே’ வாய்விட்டு பேசிகொண்டிருந்தால்.”

“மெதுவாக எழுந்து, குளியல் அறைக்கு சென்று அனைத்து வேலைகளையும் முடித்துகொண்டு வெளிவந்தால். அப்பொழுது தான் ட்ரெஸிங் டேபிளில் இருந்த சின்ன தாளில் குறிப்பு இருந்தது. அதை எடுத்து படித்துப்பார்த்தால்”

“சின்ன வேலை முடித்துகொண்டு விரைவில் வருகிறேன். உனக்கு பிடித்த உணவு செய்து வைத்திருக்கிறேன் மறக்காமல் சாப்பிடவும், முக்கியமாக என்னை நினைத்து சாப்பிடவும்” என இரண்டு ஸ்மைலிகளுடன் எழுதிருந்தான்.”

“அதை படித்தவிட்டு, ‘கேடி, அவனை நினைச்சுட்டு நான் சாப்பிடனுமா…. சரி அப்படி என்ன சமைச்சுருக்கானு பார்ப்போம்.” என அலங்காரம் செய்துகொண்டு உணவு மேஜைக்கு சென்றால்.”

“அவளுக்கு பிடித்த ப்ரைட் ரைஸ்,காளான் க்ரேவி, கோபி மஞ்சுரியன், ஆரஞ்சு ஜூஸ், என வகைகளை அடுக்கி வைத்திருந்தான்.”

“ம்ம்ம்…. எனக்கு பிடிச்சதை செஞ்சுவச்சுருக்கான், இன்னைக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான். என மகிழ்ச்சியுடன் சாப்பிட ஆரம்பித்தால் அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்தது.”

“அதுக்குள்ள வந்துட்டானா கேடி,” வாயின் அருகில் கொண்டு சென்ற உணவு தட்டிலே வைத்துவிட்டு எழுந்து வாசலுக்கு சென்றால்.

“ரோஹி.. அதுக்குள்ள வந்திட்டயா…” கேட்டுகொண்டே கதவை திறந்தால்.

“ஆனால் அங்கு ரோஹித் இல்லை, அவளின் பாட்டி ராஜலக்‌ஷ்மி நின்றுகொண்டிருந்தார்.”

“ரோஹித்தை எதிர்பார்த்து இருந்தவள், அதற்க்கு பதில் தன் பாட்டி நின்றுப்பதை கண்டதும் மொத்தமாக அதிர்ந்து நின்றால்.”

“பா…… பாட்… பாட்டி” அவள் வார்த்தை தந்தியடிக்க. அவரோ ‘என்னடியம்மா, நல்லா இருக்கியா’ ஒருவித நக்கலுடன் கேட்டார்.

“அவளோ எதுவும் பேசாமல், அதிர்ந்து நின்றிருந்தால்.”

“என்னை உள்ள வானு கூப்பிடமாட்டியா ஹீரா” அவர் கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தார்.

“ம்ம்… வீடெல்லாம் நல்லா இருக்கு, நீ தனியா வீடெல்லாம் வாங்கிருக்கேனு என்கிட்ட சொல்லவே இல்லை… நீயும் அழகாக இருக்க… உடம்பெல்லாம் கொஞ்சம் பூசானப்போல இருக்கு நல்லா சாப்பாடு சாப்பிடுறையோ..” அவர் கேட்க.

“பாட்டி… எப்படி இருக்கீங்க…”

“ஒ…. பாட்டினு இப்போ தான் உனக்கு தெரிஞ்சதா…”

“இல்ல… பாட்டி…” என அவள் அடுத்து பேச வருவதற்க்குள் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து, ‘எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட சொல்லாம கொல்லாம இரண்டு வாரம் இங்க வந்து தங்கி இருப்ப” அவளின் முடியை இறுக்கி பிடித்து கேட்க.

“அவளோ வலியில் , ‘ ஆ… இல்லை பாட்டி,  நான்… ‘ அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல்.

“என்ன டி… மலுப்பிறையா… உன்னை நான் எங்க போக சொன்னா, நீ எங்க வந்திருக்க… ம்ம்..” இன்னும் அழுத்தமாக அவளின் முடியை பிடித்து இழுத்தார்.

“வலிக்குது பாட்டி,” அவள் கண்ணில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

“ நல்லா வலிக்கட்டும் டீ…  அப்போ தான் அடுத்த முறை, நீ இந்த தப்ப பண்ணாம இருப்ப.”

“உன்னை எல்லாம் வளர்த்து, ஆளாக்கி சொந்த மகனு எல்லா சொத்தையும் உன் பேருல எழுதி வச்சுட்டு ஒரேடியா என் மகனும், என் மருமகளும் போய் சேர்ந்துட்டாங்க.”

“ஆனா நீ, எப்போ சொத்தை அமுக்கிட்டு போகலானு, உன் கூட கூட்டாளிய சேர்க்குற.”

“இல்லை பாட்டி… அவங்க என்…” சொல்ல வருவதற்க்குள்.

“என்ன உன் காதலனா, இல்லை புருஷனா, இல்லை…” அவர் என்ன கூறி இருப்பாரோ. அவளோ காதை பொத்திகொண்டால்.

“ஒழுங்கா, என்கூடவே இப்போவே கிளம்பி ஊருக்கு வா… இல்லை உன்னை எதுவும் பண்ணமாட்டேன். அவனை” அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டால்.

“வேணாம் பாட்டி… அவரை எதுவும் பண்ணாதீங்க நான் உங்ககூடவே நான் வரேன்.”

“அவள் கொஞ்சம் யோசித்திருக்கலாம், அவருக்கு எப்படி ரோஹித்தை தெரிய வாய்ப்பிருக்கும் என்றும், அவனின் பெயர் கூட இவள் சொல்லி தான் அவருக்கு தெரிந்தது அதை வைத்துகொண்டே ஹீராவை பயம்கொள்ள செய்தார்.

“டேய்… உள்ள வாங்க டா…”என அவர் அழைத்ததும் நாலு குண்டர்கள் உள்ளே நுழைந்தனர்.  ‘ உனக்கு இன்னும் பதினைஞ்சு நிமிஷம் தான், அதுக்குள்ள உன் எல்லா பொருளும் எடுத்துட்டு கிளம்பி வர்ர…’

“பதினாறாவது நிமிஷம் இவ வெளிய வரனும், அப்படி இவ வரலைனா நீங்க இவளை தூக்கிட்டு வாங்கடா.” அந்த குண்டர்களுக்கு கட்டளையிட்டார்.

“அவர்களோ, ‘சரிங்க மேம்… நீங்க சொல்லுற மாதிரி செய்யுறோம்’

“ம்ம்… போடி போய் உன் பொருளெல்லாம் எடுத்துட்டு வா.” என அவளிடம் சொல்லிட்டு வெளியேறினார்.

“என்ன ராஜ் தாத்தா வந்து எவ்வளவு நேரம் ஆச்சு…” கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்.

“பாஸ், தாத்தா வந்து அரை மணி நேரமாச்சு… உங்களை வந்தவுடனே கேட்டாரு… கேட்டவுடனே ஆபீஸ் ரவுண்ட் போயிருக்காரு பாஸ்.”

“ நல்ல வேளை ராஜ்… அவரு ஆபீஸ் ரவுண்ட் போயிருக்காரு. அவரு வர்ரதுக்குள்ள என் ரூம்க்குள்ள போயிடுறேன்.” என அவன் சொல்லிக்கொண்டே அவன் அறைக்கு செல்ல, சரியாக அவரும் அவன் பின்னாடியே உள்ளே நுழைந்தார்.”

” ஆபீஸ்க்கு வர்ர நேரமா ரோஹித்…” அவன் பின்னே குரல் கேட்க.

“தன் பின்னாடியே நுழைந்த தாத்தாவை அவன் கவனிக்கவில்லை, அவரின் குரலில் திடுகிட்டு…”

“அது தாத்தா… கொஞ்சம் முக்கியமான வேலை அதான் கே.பி.எம் கம்பெனிக்கு போயிட்டு வந்தேன் தாத்தா. அதான் லேட் ஆகிருச்சு.”

“பொய் சொல்லாத ரோஹித், நீ எங்க இவ்வளவு நாள் தங்கிருக்க. வீட்டுக்கும் வராம அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு. உன்னை இன்னைக்கு தான் பார்க்குறேன். இரண்டு வாரமா எங்க இருந்த ரோஹித் சொல்லு” என அவர் கேட்க.

“ என் ஃப்ரண்டோட ஹெஸ்ட் ஹவுஸ்ல தங்கிருந்தேன். அங்க இருந்தே கம்பெனிக்கு வந்திட்டு போனேன் தாத்தா.” முழு பொய்யை கூறினான்.

“மேலும் , மேலும் பொய் சொல்லாத ரோஹித். நீ அன்னைக்கு நடந்த மீட்டிங்க்கு மட்டும் தான் கம்பெனிக்கு வந்த, வந்தவுடனே நீ கிளம்பிட்ட . அடுத்து மூனு நாள் கழிச்சு தான் ஆபீஸ்க்கு வந்த, அப்பவும் பாதி நேரம் மட்டும் தான் ஆபீஸ்ல இருந்திருக்க. எனக்கு தெரியாது நீ நினைச்சிட்டு இருக்கியா ரோஹித்.”

“ கம்பெனி பொறுப்பை தான் உன்கிட்ட கொடுத்தேனே தவிர, இதோட சேர்மன் பொறுப்பையும் உனக்கு கொடுக்கலை. இரண்டறை வருஷமா நீ பார்த்திட்டு இருக்குற இந்த கம்பெனிய, நான் முப்பது வருஷமா நடத்திட்டு வரேன். கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாதனால உன்கிட்ட ஒப்படைச்சேன் ஆனா நீயும் ஒழுங்க பார்க்குற மாதிரி தெரியலை.”

“ஒன்னு ஆபீஸ்க்கு ஒழுங்க வந்திட்டு, வீட்டுக்கு வா… இல்லை இப்படியே நான் ஃப்ராண்டோட வீட்டில தங்கிட்டு, வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் ஆபீஸ்க்கு வருவேனா நீ கம்பெனி பொறுப்புல இருந்து விலகிடு”

“ நான் ரோஹன வச்சு கம்பெனிய பார்த்துகிறேன். நீ என்ன முடிவு எடுத்துருக்கேனு எனக்கு தெரிஞ்சாகனும். அதுவும் இன்னைக்கு ஈவ்னிங்குள்ள உன் முடிவு என்னனு சொல்லு.” என அவர் கோவத்துடன் பேசிவிட்டு சென்றார்.

“அவரின், பேச்சில் அவனோ தலைகுனிந்து போனான். அவனும் என்ன செய்வான், ஹீரா வந்ததிலிருந்து அவளுடன் நேரத்தி செலவழிக்கிறான். அவளைவிட்டு ஒரு நிமிடம் நீங்கினாலும், அவள் தன்னைவிட்டு சென்றுவிடுவாளோ என பயத்துடன் தான் அவளுடனே இருந்தான். ஆனால் தாத்தாவின் சொல்பேச்சு இதுவரை இப்படி கேட்டு வாங்கவில்லை.”

“தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்தவுடன் அவனும் கம்பெனியை முன்னுக்கு கொண்டு வந்தான். பங்கு சந்தையில் அவர்களின் கம்பெனியின் பங்கு அதிக லாபமும் அடைந்தது. இந்த வருடம் வரை அவன் கம்பெனியை முன்னனியில் தான் வைத்துகொண்டிருக்கிறான்.”

“ஆனால், இப்படி திடீரென்று வந்து தன்னிடம் கோவம் கொள்ளுவார். தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை, இனி ரோஹனிடம் ஒப்படைக்கவா நான் இவ்வளவு நாளாக உழைத்தேன்.”

“முடியாது… அவனிடம் ஒப்படைத்துவிட்டு  நான் சும்மா பார்த்துக்கொண்டிருப்பேன் என நினைத்தாரோ. முடியாது சிறிது காலம் நான் உழைத்தாலும் அதற்க்கு நான் தான் பொறுப்பாக முடியுமே, தவிர இடையில் வரும் அவனுக்கு விட்டுகொடுத்து செல்வேன் என நினைத்தாரோ. முடியாது இது என் உழைப்பில் உருவாகிய தொழில் ஒவ்வொரு நுனுக்கமும் என் மூளையில் உருவான சிந்தனை. இதை அவனிடம் ஒப்படைக்க முடியாது.”

“பார்க்கலாம், அவன் வந்து என்ன சொல்கிறான் என்று . ஆனால் ஹீராவை விட்டு நான் தனியாக இருப்பதால் அவளுக்கும், எனக்கு தானே கஷ்டம். இதை தாத்தாவிடம் நொடியும் தாமதிக்காமல் கூறிவிட வேண்டும். உடனே எனக்கும், ஹீராவுக்கும் திருமணம் நடத்தி வைக்குமாறு சொல்லவேண்டும் அப்போது தான் என்னுடனே என் ஹீரா இருப்பாள். எங்கும், செல்லமாட்டால்” என அவன் ஒரு தப்பு கணக்கை போட்டுகொண்டிருந்தான்.

“எல்லா பொருளையும் எடுத்து வைத்துக்கொண்டு, ரோஹித்தின் அறைக்கு சென்றால். அவனுடன் கழித்த ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் மகிழ்ந்த காட்சிகள் அவள் கண் முன் தோன்றி மறைந்தது.”

“அவனின் அறையில், அவர்களின் வாசம் மட்டுமே சூழ்ந்துகொண்டிருந்தது அதை எல்லாம் சுவாசித்துப்பார்த்தவள். அவனுடன் கூடி மகிழ்ந்த ஒவ்வொரு நாளையும் நினைத்துகொண்டால். இனி அவனை எப்பொழுது பார்ப்பேனோ, மீண்டும் சந்திப்போமா, இல்லை இப்படியே நான் இருந்திருவேனா.”

“அவள் நினைத்துக்கொண்டே ட்ரெஸிங்க் டேபிளில் அவன் வைத்துவிட்டு சென்ற குறிப்பை பார்த்ததும் அவளுள் ஒரு யோசனை, வேகமாக ஒரு தாளில் அவளது நிலைமையும், எங்கு செல்கிறால், இனி பார்ப்போமா மாட்டோமோ தெரியவில்லை. ஆனால் உன் வருகைகாக நான் காத்திருப்பேன்.” என முடிவில் எழுதிவிட்டு அதே ட்ரெஸிங் டேபிளில் வைத்துவிட்டு வெளியேறினால் ஒரு நிமிர்வுடன்.”

“வெளிய வந்தவளின் கையில் இருந்த பெட்டிகளை, அந்த குண்டர் வாங்கிகொண்டு அவளை முன்னே செல்லும் படி கூறினர்.”

“வெளிய வந்தவளின் கண்ணில், அவளின் பாட்டி விழுந்தார், யாரிடம் என்ன பேசிகொண்டிருந்தாரோ. அவரை ஒரு பார்வை பார்த்தவள் ‘ என் ரோஹித் என்னை அழைத்து செல்ல வருவான். இல்லை நான் அவனிடம் செல்வேன் ‘ என ஒரு உறுதி இருந்தது.”

“டிரைவர், வந்து வண்டி எடுங்க…” ஒரு இளவரசியின் தோரனையில் அவள் சொன்னால்.

“கம்பீரமாய், அவள் பாட்டியை கடந்து முன் சீட்டில் அமர்ந்தால். அவரோ,  ‘ம்ம்… இப்போ தான் பழைய ஹீரா வெளியே வருகிறால். பார்க்கலாம் இனி அவளின் செயலை.” அவர் நினைத்துகொண்டு பின்னிருக்கையில் அமர்ந்தார்.”

“அவளின் காரை தொடர்ந்து மற்ற மூன்று கார்களும், தொடர்ந்து சென்றது. கார் வீட்டின் எல்லையை தாண்டியவுடன், ஒரு நிமிடம் திரும்பி பார்த்தால். அவளின் நாயகன், அவளுக்கு கையசைத்து விடைகொடுப்பது போல் இருந்தது.”

“ஹீராவின் போராட்டாம் தொடங்கியது… கபிலனின் வெற்றி நெருங்கியது… ரோஹித்தின் காதலோ கொஞ்சம் கொஞ்சமாக தூளாகியது.”

“தாத்தா, கம்பெனிய நானே பார்த்துகிறேன்… வீட்டுக்கு வரேன் ஆனா ஒரு கண்டிஷன்…”

“என்ன…”

“என் காதலிய, எனக்கு திருமணம் செஞ்சு கொடுக்கனும்.”

“காதலியா… இது எப்போ இருந்து ரோஹித்” அதிர்ச்சியாக கேட்க.

“ஒன்றை வருஷமா, காதலிக்குறோம்…”

“சரி அந்த பொண்ணு பேரு, ஊரு, நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வருமா??” அவர் கேட்க.

“அது பத்தி இன்னும் எனக்கு தெரியாது… அவ ஒரு கம்பெனில வேலை பார்க்குறா… அவளுக்கு ஒரு தங்கை இருக்கா… இது மட்டும் தான் எனக்கு தெரியும் தாத்தா”

“சரி..  உன் காதலுக்கு நான் ஒத்துகிறேன்.. அந்த பொண்ணை கூப்பிட்டு வீட்டுக்கு வா… அடுத்து என்னனு பேசிக்கலாம்.” என பாதி சம்மதமும், பாதி ஆர்வமும் அவரிடம் இருந்தது.

“ஆனால் அவளின் நாயகி தான் ஊரைவிட்டே சென்றுகொண்டிருக்காளே, பின் யாரை அழைத்து வருவான் என விதி ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தது”

“அக்‌ஷய், லக்‌ஷ வீட்டுக்கு அழைச்சுட்டு வா… ஹீரா வீட்டுக்கு வர்ரா.. இனி லக்‌ஷ் எங்க வீட்டுல இருந்தே காலேஜ் போகட்டும். அப்புறம் அந்த ப்ரஜெக்ட் டீடைல்ஸ் பற்றி ஹீராவுக்கு நீ தான் எடுத்து சொல்லனும்.”

“அக்‌ஷயோ, அவர் சொல்லுவதை ஒரு வித அதிர்ச்சியுடன் கேட்டுகொண்டிருந்தான். மனதில் ‘ அப்போ ஹீராவின் ஜெயில் வாழ்க்கை ஆரம்பித்து விட்டதா?’. எப்படி இந்த கிழவிக்கு அவள் இருக்கும் இடம் தெரிந்தது.” என அவன் யோசனை செய்துகொண்டிருக்க.

“அவரோ, என்ன அக்‌ஷய் நான் சொல்லுறது உன் காதுல விழுந்துச்சா, இல்லையா…” அதட்டி கேட்க்கவும், ‘ஒகே பாட்டி நான் ஈவினிங்க் வீட்டுக்கு லக்‌ஷ அழைச்சுட்டு வரேன்.’ சொல்லிவிட்டு போனை வைத்தான்.”

”எங்க இருக்கீங்க”

“………”

“அப்போ ஹீரா உங்க கூட தான் இருக்காளா…”

“……….”

“என் கண்ணுக்கு சிக்காம உங்க கண்ணுக்கு சிக்கிருக்காளே அதான் கொஞ்சம் ஆச்சர்யாமா இருக்கு”

“………..”

“அப்போ எங்க கல்யாண தேதிய எப்போ குறிக்க போறீங்க..”

“…….”

“உங்க இஷ்டம், ஆனா சீக்கிரம் கல்யாணம் முடியனும்”

“………”

“ஒகே, நான் நாளைக்கு அங்க வரேன். அப்போ பார்க்கலாம்” என போனில் பேசிவிட்டு வைத்தவன் மனதில் ‘தான் தேடி போன பொருள் கிடைக்க போகிறது’ என ஆசையில் இருந்தான்.

“ஆனால், அவனுக்கு தெரியாது… ஹீராவின் இதயம் முழுவது அவனது வாசம் மட்டும் நிறைந்திருக்கும் என்றும். அவளின் இதயம் மட்டுமா?? உடலின் ஒவ்வொரு அணுவும், அவனின் நினைவுகளும் சேர்ந்து இருக்கிறது என்று”

“வா… ரோஹன், எப்படி இருக்க…”

“ நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க தா…” அவரின் உறவை கூட சொல்லப்பிடிக்காதவன் போல் பாதியிலே நிறுத்திவிட்டான்.

“என்னை தாத்தானு கூப்பிடக்கூட உனக்கு மனசு வரலையா ரோஹன்” அவர் ஏங்கியபடி கேட்க.

“எதுக்கு வரசொன்னீங்கனு தெரிஞ்சா நல்லா இருக்கும்.. தேவையில்லாத பேச்சு எதுக்கு சொல்லுங்க.”

“உனக்கும், உன் அண்ணாவுக்கு நான் கல்யாணம் பண்ண முடிவு செஞ்சிருக்கேன்… உன் அண்ணா, ஒரு பொண்ணை விரும்புறேனு சொன்னான், அந்த பொண்ணை கூப்பிட்டுட்டு வீட்டு வரானாம்.”

“அதனால உனக்கு ஏத்த மாதிரி நானும் பொண்ணு பார்க்கனும் அதான் உன்னை வரச்சொன்னேன்.” அவர் அவன் தலையில் பெரிய குண்டை தூக்கி அமைதியாக போட்டார்.

“அவனோ, ‘ ரோஹித் காதலிக்குறானா… எவ்வளவு பெரிய விஷயத்தை தாத்தா அசால்ட்டா சொல்லுறாரு. அவனுக்கு இருக்குற தைரியம் இப்போ எனக்கு இருக்கனும் கடவுளே நீ தான் காப்பாத்தனும் என்னை” வேண்டிக்கொண்டான்.

“அவன் காதலுக்கு மட்டும் தான் ஒத்துப்பேங்களா, அப்போ  என் காதலுக்கு ஒத்துக்க மாட்டீங்களா..”

“ நீயுமா காதலிக்குற… உன்னை அமைதினு நினைச்சா இப்படி காதலிக்கிறேனு வந்து சொல்லுற.”

“ஏன் எனக்கு காதல் வரக்கூடாதா…”

“அது சரி… அந்த பொண்ணு யாரு, பேரு” என அவர் சொல்லிமுடிக்கவில்லை அவனோ ஆரம்பித்துவிட்டான் அவளின் ஜாகத்தை சொல்ல,”

“அவ பேர், லக்‌ஷனாவடிவு, ஒரு அக்கா இருக்காங்க… நம்ம குடும்பம் மாதிரி அவங்களும், பணக்காரவங்க தான்… அதுவும் மூனு முறை பிஸ்னஸ் அவார்ட் வாங்கிருக்காங்க.. அவ இப்போ தான் ஃபைனல் இயர் படிக்குறா… அவங்க குடும்பத்தோட அடையாளம் ஜெ,எஸ் இண்டஸ்ட்ரீஸ்” என அவன் சொல்லியதும், அவரின் முகம் யோசனையில் சுருங்கியது.

“ஜெ.எஸ் இண்டஸ்ட்ரீஸ்னா, ஜெகதீஸ்வரன் சுபத்ரா கம்பெனிஸ் தான… “ அவர் கேட்க.

“ஆமாம்… அவங்க தான்… தி க்ரேட் ஹீராஜெகதீஸ்வரன் பிஸ்னஸ் மேக்னட் விமன்” அவன் சொல்லியதும் ஆனி அடித்தார் போல் எழுந்து நின்றார்.

“அவரின் அதிர்ச்சியை பார்த்தவன், அவரிடம் என்னவென்று கேட்க, அவரோ, பெரிய அதிர்ச்சியை அவனுக்கு வைத்தார்.”

                                                      தொடரும்……………

Advertisement