Advertisement

           என்னை தந்திடுவேன் 5

”வானம் இருட்டிக்கொண்டும், மேகம் கூடிக்கொண்டும், மின்னல்கள் கீற்றாய் அவ்வப்போது தோன்றி மறைவதும், சிறிது நேரம் கழித்து மழை சொட்டு சொட்டாய் விழ ஆரம்பிக்க, பின் ஜோவென மழை  நன்றாக பெய்ய ஆரம்பித்தது.”

“இதையெல்லாம் ரசித்துகொண்டே இருந்தாள் ஹீரா. அவள் மனதில் இப்பொழுது நிம்மதி மட்டுமே முக்கியம் அதுவும் எனக்கும், ரோஹித்துக்கும் தனிமையில் கிடைக்கும் அன்பும், அமைதியும் ரொம்ப முக்கியம்.”

”அவளை ரசித்துகொண்டே அவளுக்கு, தனக்குமான காஃபியை எடுத்து வந்தான். அவனுக்கு எப்பொழுது ஹீராவை ரசித்துகொண்டே இருக்கவேண்டும். அவள், என்னை ரசிக்கின்றாளோ இல்லையோ, ஆனால் நான் ரசிப்பேன் அவளை.”

“அவள் அருகில் சென்று அவளுக்கான காஃபியை கொடுத்துவிட்டு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டே அவன் அவளை ரசிக்கும் பணியை தொடர்ந்தான். அவள் அதை கண்டும் கானாமல் மழை மட்டுமே முக்கியம் என்பது போல் இருந்தால்.”

“போது டீ மழைய ரசிச்சது… உன்னையே ஒருத்தன் பார்த்துட்டு இருக்கேன். அதை கவனிக்கமாட்டேங்கற.”

“ரோஹித்… மழை பிடிக்குமா உனக்கு” அவன் கேட்டதற்க்கு பதில் சொல்லாமல் வேறு கேட்டால்.

“பிடிக்கும், ஆனா… உன்னை மாதிரி ரசிக்கமாட்டேன்.”

“ஏன்…”

“ம்ச்சு தெரியலை… உனக்கு பிடிக்குமா”

“ரொம்ப… ரொம்ப… பிடிக்கும் ரோஹி. சின்ன வயசுல அம்மாவுக்கு தெரியாம அப்பாவும், நானும் மழையில நனைவோம். ஒரு சில நேரத்துல அந்த மழையா நான் இருக்க கூடாதுனு தோணும்.”

“மழை என்றாலே கவிதையும் எனக்கு எழுத வரும்… சில நேரம் மழை பார்த்துகிட்டே கவிதை எழுதுவேன்.. ரோஹி. ஹும் அதெல்லாம் அந்த காலம் ரோஹி.. ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இப்போ தான் மழைய பார்க்குறேன்.” அவள் மனதில் இருப்பதை அவனிடம் கூறினால்.

“ நீ கவிதையெல்லாம் எழுதிவியா ஹீரா… எனக்கு தெரியாதே…”

“ஆமாம்… ஆனா இப்போ இல்லை.”

“சரி இப்போ நானும் உன்கூட இருக்கேன், அந்த மழையும் உன்கூட இருக்கு அதனால இப்போ ஒரு கவிதை சொல்லு.”

“அவனை பார்த்து முழித்தால்… ‘இப்போவா.. இப்படி டக்குனு கேட்டா எப்படி சொல்லமுடியும்.”

“உனக்கு தோனுறத சொல்லு டி”

“ம்ம்ம்… அவள் மழையை பார்த்துகொண்டே சிந்தித்தால்.”

“உன்னை ரசிக்கவே நான் வந்தேன் – மழையே

உன் ரசிகையாய் நான் மாறிவிட்டேன்.

என்னை மறந்து நான் உன்னை ரசிக்க – மழையே

எனக்கு தெரியாமல் என் காதல் கள்வன் – என்னை

கள்ளப்பார்வையுடன் என்னை ரசிக்கின்றான்.

அவனது ரசிகையாய் நான் இருக்கின்றேன்.”

அவள் ஒவ்வொரு வரியையும் அந்த மழையை பார்த்துகொண்டும், கடைசி வரியை மட்டும் அவனை பார்த்து சொல்லி முடித்தால்.

“அவளது உடனடி கவிதையில் அவனது கண்கள் அவளை  பிரம்மிப்பாய் பார்த்துகொண்டிருந்தான்.”

”கை தட்டிக்கொண்டே அவள் அருகில் சென்றான். ‘ சூப்பர் டி… எப்படி உனக்கு தோனுது அழகா இருந்துச்சு உன் கவிதை. மழையையும், என்னையும் சேர்த்து வைத்து சூப்பர் டி..” அவள் கூடவே அவனும் அந்த மழையை ரசிக்க ஆரம்பித்தான்.

” அவர்களின் மோன நிலையை கலைப்பதை போல் ரோஹித்தின் போன் அலறியது… அவளைவிட்டு விலகி சென்று போனை எடுத்து பார்த்தான். அழைத்தது ராஜ் ‘இவன் எதுக்கு இந்த நேரத்தில் அழைக்கிறான்’ யோசித்துகொண்டே அட்டென் செய்து காதில் வைத்தான்.”

“பாஸ்… பாஸ்…” பதற்மாய் பேச ஆரம்பித்தான்.

“டேய்… டேய்ய் என்ன”

“பாஸ்… தாத்தா உங்களுக்கு பெரிய ஆப்பா ரெடி பண்ணப்போறாங்க.”

“என்ன டா… ஆப்புனு சொல்லுற. என்ன நடந்தது”

“ரோஹித்தை பற்றி தாத்தா பேசியதும், அவன் வீட்டிர்க்கு வராமல் இருப்பதையும், ரோஹித் மீது சந்தோக பார்வையோட தாத்தா பேசியதும், இறுதியில் அவனுக்கு கல்யாணம் தான் சரியான முடிவையும் கூறியதை ரோஹித்திடம் சொல்லிமுடித்தான்.”

“ஓஓ… அவ்வளோ தானே டா… விடு தாத்தாகிட்ட நான் நேர்ல பேசிக்கிறேன் அதுவரை நான் இருக்குற இடம்”அவன் முடிக்கும் முன்.

” நான் சொல்லமாட்டேன் பாஸ்…” ரோஹித்துக்கு, முன் இவன் சொல்லிமுடித்தான்.

“வெரி குட்… தாத்தாவ கவனிச்சிட்டே இருடா..”

“ஒகே பாஸ்…” அவன் பேசிமுடித்தான்.

“தன்னை விட்டு அவன் விலகி சென்றதை கூட கவனிக்காமல் மழையை ரசித்துகொண்டிருப்பளின் இடையில் கைகொடுத்து கட்டியனைத்தான்.. அவளின் கழுத்தில் முகத்தை பதித்துகொண்டே அவனின் வேலை செய்துகொண்டிருந்தான்.”

“ஹீரா… ஹீரா…” என அழைத்துகொண்டே அவளை இறுக்கி கட்டிக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தான்.

“ம்ம்ம்… சொல்லு ரோஹி…”

“ கல்யாணம் பண்ணிக்கலாமா??” அவளிடம் கேட்க.

“அவளோ, திகைத்து நின்றால்.”

“ஸ்டாப்… ஸ்டாப்… ”

” அந்த காரின் முன் தன் காரை நிறுத்தியவன்… இறங்கி சென்று அந்த காரில் உள்ளே இருப்பவரை இறங்க சொன்னான்.”

”அந்த காரில் இருந்தவர்கள், யாரோ தங்களின் காரை வழி மறைப்பது நின்றுகொண்ட்டிருந்தான்.”

“அவர்கள் இறங்கியதும் தான்… இது அவள் அல்ல என எண்ணிக்கொண்டான்.”

“அந்த காரில் இருந்தவர்களோ… என்ன ஏது என்று விசாரிக்க…”

“அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு… எனக்கு தெரிந்தவர்கள் இதே காரில் செல்வதை பார்த்தேன் அதான் என” அவர்களிடம் சொல்லிவிட்டு அவன் காரை எடுத்துக்கொண்டு சென்றான்.

“எப்படி தவறவிட்டேன்… எப்படி… நான் தான் அவளை அந்த சிக்னல்ல பார்த்தேனே… என் கண்ணுல அவ இந்த முறை தப்பிச்சுட்டா. இன்னொரு முறை அவளை விடமாட்டேன்.”

“அவ எனக்கு முக்கியம்… ரொம்ப முக்கியம்… ” அவளை தவறவிட்ட உணர்வில் இருந்தான்.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. அவளை நினைச்சு நான் இப்படி தவிக்கிறேன் ஆனா அவ என் கண்ணு முன்னாடி இருந்து ஒவ்வொரு முறையும் கானாம போகுறா. அவ என்கிட்ட வருவாளா, இல்லை விலகி போயிட்டே இருப்பாளா.” அவன், அவளை நினைத்து உருக.

“ அவனின் நினைவை, கலைத்தது அவனது போன் அலைப்பு. எடுத்து பார்த்தவன் அட்டென் செய்து காதில் வைத்தான்.”

“என்னாச்சும்மா..”

“சாப்பிட்டாயா டா” மகனின் நிலையை எப்படி இருக்கிறது என அறிய அவர் போன் செய்தார்.

“இல்லைம்மா… இனிமே. நீங்க சாப்பிட்டீங்களா… “

“சாப்பிட்டேன் டா. இன்னும் சாப்பிடாம என்ன பண்ணுற.”

“அவளை தேடி…” என சொல்லவந்தவ, ‘ சாப்பிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்ம்மா..” என சொல்லி வைத்துவிட்டான்.

“ நான் அவளை தீவிரமாக தேடிக்கொண்டிருப்பதை அம்மாக்கு தெரியும், அவர் மனதில் சங்கடம் ஏதும் நேர்ந்துவிட்டால் அதை காணா சகிக்காது. அதனால் இப்பொழுது எதையும் அவரிடம் கூற வேண்டாம். அவள் கிடைத்த பின் அவரிடம் பேசிக்கொள்ளளாம்.” நினைத்துக்கொண்டான்.

“அவள் அதிர்ந்த முகத்தை பார்க்காமல் அவன் பேசிகொண்டிருந்தான். அவளோ, கல்யாணமா… அவன் என்னை திருமணம் செய்துகொண்டால் அவனுக்கு ஏதும் நேர்ந்துவிட்டால்.”

“அதுவுமில்லாமல், லக்‌ஷிடம் ரோஹித்தை பற்றி எதுவும் கூறாமல் இருப்பதே அவளுக்கு உறுத்தியது. இதில் திடீர்னு கல்யாணமா, இதற்க்கு முதலில் அவர் ஒத்துக்கொள்வாரா. அவருக்கு மட்டும் நான் இப்படி இவனுடன் இருப்பது தெரிந்தால் நாலைந்து குண்டர்களுடன் என்னை தூக்கி சென்றுவிடுவார்.”

“அவரின் முன் நான் வெறும் பெண் மட்டுமே, அவரின் குடும்பம் அடையாளத்தை கூட எனக்கு கொடுக்கமாட்டார். அப்படிருக்க நான் ரோஹித்தி குடும்பத்திர்க்கு ஏற்ற்வள் தானா.”

“ஏதோ ஒரு வேகத்தில் அவனுடன் நான் மனதளவிலும், உடளவிலும் வாழ ஆரம்பித்துவிட்டேன். இதுவே தொடர் கதை ஆகாதே, என்றாவது ஒரு நாள் அவனைவிட்டு விலக நேரிடும். அப்பொழுது அவனது நிலையை கண்ணால் கூட பார்க்கமுடியாது.”

“ரோஹித்தின் நிலையை எண்ணி, அவனிடம் இருந்து விரைவாக விலக வேண்டும், அவரிடமும், லக்‌ஷிடமும் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு ரோஹித்தை தேடி வரலாம். ஆனால் ரோஹித் எனக்காக காத்திருப்பானா??. என ஒரு மனது கேட்க.”

“என் உயிர் உள்ளவரை அவன் எனக்காக காத்திருப்பான். நானும், அவனுக்காக காத்திருப்பேன்.” அவளின் இன்னொரு மனது அவளுக்கு ஆதரவாய் சொல்லியது.” அவளின் நினவிலே இருந்தவள் அவன் சொன்னதை எதையும் கேட்கவில்லை.

“ஹீரா… ஹீராஆஆ… ஹீராஆ” அவளை உலுக்கிகொண்டிருந்தான்.

“ஹான்.. சொல்லு ரோஹி”

“ நான் பேசிட்டு இருக்கேன்… நீ நான் பேசுறதை கவனிக்காம என்ன நினைச்சுட்டு இருந்த.”

“ஒ.. ஒன்னு… ஒன்னுமில்ல ரோஹி”

“இல்லை நீ எதையோ நினைச்சுட்டு இருந்த என்னனு சொல்லு டி” அவன் தீவிரமாக கேட்க.

“அது… அது… என் குடும்பம் இருக்குற சூழ்நிலைக்கு என்னால கல்யாணத்தை பற்றி யோசிக்க முடியாது ரோஹி. என் தங்கச்சியோட படிப்பு இன்னும் முடியலை, அவளை நல்ல படியா படிக்க வச்சு, அவளுக்குனு ஒரு எதிர்காலத்தை நான் உருவாக்கி கொடுக்கனும். அவள் லைப்ல செட்டில் ஆன பின்னாடிதான் என் வாழ்க்கையை பற்றி யோசிக்க முடியும். என்னை புரிஞ்சுக ரோஹி நான் என்ன சொல்லவர்து.” அவள், அவன் முக்கத்தை பார்த்து இரைஞ்சினால்.

“இதை சொல்லுறதுக்கு ஏன் இப்படி தவிக்குற. நீ என்ன சொன்னாலும் எனக்கு ஒகே தான். ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்னு யோசிச்சேன் அவ்வளவு தான். உன் தங்கை வாழ்க்கையை முதல செட்டில் பண்ணலாம். அடுத்து நாம செட்டில் ஆகலாம் சரியா. இப்போ சந்தோஷமா,” என அவன் அவள் நிலையை சட்டென்று புரிந்துகொண்டு அவளுக்கு ஏற்ற படி பேசினான்.

“ரொம்ப… ரொம்ப சந்தோஷமா இருக்கு. தாங்க்ஸ் ரோஹி” அவனை கட்டிகொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினால்.

“ஆஹா… உன்னை சந்தோஷ படுத்தி பார்த்த, எனக்கு நிறைய கிடைக்கும் போல இருக்கு” அவள் செய்கையை சுட்டிகாட்டி கேலி செய்தான்.

“சார்… மே ஐ கமின்”

“எஸ்.. வாங்க”

“சர்… மீட்டிங்க்கு எல்லாம் அரேன்ஞ் பண்ணியாச்சு சர்.”

“ஒகே… எல்லாரையும் மீட்டிங்க் ஹால்க்கு வரச்சொல்லுங்க.. நான் இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.” கணினியில் பார்வையை பதித்தவாறு பேசிக்கொண்டிருந்தான் ரோஹன்.

“ஒகே சர்.”

” மீட்டிங்க் நேரமாவதை உணர்ந்து, சுழல் நாற்காலியில் இருந்து தனது கோர்ட்டை எடுத்து போட்டுகொண்டு கிளம்பும் நேரத்தில் அவனுக்கு போன் வந்தது.”

“இவரா… இவர் எதுக்கு எனக்கு கூப்பிடுறாரு… ” என சிந்த்தித்தான்.

“சிந்தனையுடனே போனை அட்டென் செய்தான். ‘சொல்லுங்க”

“…………..”

“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும். அது அவங்க அவங்க வாழ்க்கை”

“…………….”

“என்ன மிரட்டுறீங்களா.. அவங்க வாழ்க்கையில எல்லாம் என்னால தலையிட முடியாது.”

“…………..”

“போதும் நிறுத்துங்க…… உங்களுக்கு என்னைவிட அவங்க தானே முக்கியம்”

“………..”

“அப்போ அப்படியே இருங்க. எனக்கு உங்க பாசமும் வேண்டாம், அரவணைப்பும் வேண்டாம்”

“………….”

“ நீங்க எப்படி என்னை சமாதானம் செஞ்சாலும், அவங்களையும், என்னையும் சேர்த்து வைக்க முடியாது.”

“………”

“என்ன ப்ளாக்மெயிலா பண்ணுறீங்களா…”

“…………”

“சரி… வந்து தொலைக்கிறேன். ஆனா அங்க தங்கமாட்டேன். சரியா”

“……….”

“ஒகே.. எனக்கு மீட்டிங்க் இருக்கு வைக்குறேன்”

“இவரோட பெரிய தொல்லை… இதுல அவங்க வேற என்னை படுத்துறாங்க.” நினைத்துகொண்டு மீட்டிங்க்  சென்றான்.

“என்னது தாத்தா வராங்களா… எப்போ”

“என்ன வீட்டை விட்டு கிளம்பி அரைமணி நேரம் ஆச்சா… டேய் ஒழுங்க ஒரு டீட்டைல் சொல்லுடா…”

“பாஸ்… நீங்க எங்க இருந்தாலும், மெயின் ப்ராஞ்சுக்கு வந்திருங்க அதுவும் அரைமணி நேரத்துல வாங்க தாத்தா ஆல்வேஸ் கம்மிங் இன் யுவர் ஆபீஸ்” போனில் சொல்லிக்கொண்டிருந்தான் ராஜ்.

“இப்போ சொல்லுற… சரி நான்  வர எப்படியும் பதினைந்து நிமிஷம் லேட் ஆகும், அது வரை தாத்தாவ சமாளி”

“ஒகே பாஸ்”

“அருகில் படுத்திருக்கும் ஹீராவை பார்த்தான். முகத்தில் சிறு புன்னகையுடன் தூங்கிக்கொண்டிருந்தால். நான் இப்போவே கிளம்பனும் பாவம் அவளும் எனக்கு எவ்வளவு நேரம் தான் என்னை வழியனுப்பறதிலே சுத்திட்டுருப்பா. இன்னைக்கு அவளுக்கு எந்த வேலையும் வைக்காம நான் கிளம்பனும்.” என நினைத்தவனாய் அவளிடமிருந்து மெதுவாக தன்னை விடுவித்துகொண்டு ஆபீஸ்க்கு தயரானான்.

“தூங்க்கிகொண்டீருக்கும் அவளின் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டு மெதுவான குரலில் “ஆபிஸ்க்கு கிளம்பிட்டேன் டி… முக்கியமான வேலை… முடிஞ்சதும் வந்துருவேன்.” என சொல்லிக்கொண்டு. ட்ரெஸிங் டேபிளின் முன் சிறு குறிப்பை விட்டு சென்றான்.”

“பாவம் அவனுக்கு தெரியாது இன்று தான் ஹீராவை சந்தித்த கடைசி நாள், நிமிடம், நொடியும் கூட. அவன் திரும்ப வரும் போது அவள் இங்கு இருக்கமாட்டாள் என்பதை அறியாமல் கிளம்பி சென்றான்.”

“எங்க இருக்கானு உனக்கு தெரியாதா அக்‌ஷய்.”

“தெரியாது பாட்டி… தெரிஞ்சா நான் சொல்லமாட்டேனா”

“அப்போ உனக்கு தெரியாது…” என அவர் மறுபடியும் கேட்க.

“கிழவிக்கு எத்தன முறை சொன்னாலும் கேட்க்க மாட்டேங்குது.” மனதில் நினைத்துகொண்டு. ‘எப்படி தெரியும் பாட்டி, அவங்க எங்க இருக்காங்கனு சத்தியமா தெரியாது” மீண்டும் கூற.

“சரி… நீ கிளம்பலாம்… ஆபீஸ்ல இன்னைக்கு முக்கியமான வேலைனு சொன்னேல போ..” என அவனை ஒரு தென்வெட்டு பார்வையாய் அனுப்பி வைக்க.

“அவனோ, ‘என் பொண்டாட்டி சொல்லுற மாதிரி இந்த கிழவிக்கு மட்டும் நான் பேரனா இருந்தேன் நானே போட்டு தள்ளிருப்பேன். சரியான பிடிவாதம் இந்த அம்மாக்கு” புலம்பிக்கொண்டே கிளம்பினான்.

“அக்‌ஷய்க்கு தெரியாது, அவர் ஹீரா இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு தான் தன்னிடம் கேள்விக்கேட்டார் என்பது. ஆனால் அவனும் அவளுடன் சேர்ந்துகொண்டு உண்மையை மறைப்பது அவருக்கு பிடிக்கவில்லை.”

“அதனால் அவரே அவளை தேடி சொல்ல போகிறார். அவளை வார்த்தையால் சுழற்றி அடிக்க  ஹீராவின் இடத்திற்க்கு செல்ல தயரானார்.”

“ஹீரா யாரிடம் மாட்டப்போகிறாள், கபிலனிடமா??? இல்லை அவரிடமா???”….

                                                   தொடரும்………………

Advertisement